Jump to content

மே மாதம் கொரோனா உச்சம் பெறும், ஜெனரேஷன் சி. கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மே மாதம் கொரோனா உச்சம் பெறும், ஜெனரேஷன் சி. கொரோனாவால் வரும் நாட்களில் என்ன நடக்கும்?

ஒபாமா பகிர்ந்த ஆய்வுக் கட்டுரை!  தமிழில்: Shyamsundar நியூயார்க்.

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவி உள்ள நிலையில் இனி வரும் நாட்களில் உலகில் என்ன நடக்கும் என்று அமெரிக்க ஆய்வு கட்டுரை ஒன்று விளக்கி உள்ளது. மூன்று மாதத்திற்கு முன் அப்படி ஒரு வைரஸ் இருப்பது யாருக்குமே தெரியாது. 

சார்ஸ் குடும்பத்தை சேர்ந்த தொடக்க காலத்தில் SARS-CoV-2 என்று அழைக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க எல்லா நாடுகளையும் ஏறத்தாழ பாதித்து இருக்கிறது. உலகம் முழுக்க 471,820 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்க 155 நாடுகளின் பொருளாதாரம் இதனால் அதளபாதாளத்திற்கு சென்றுள்ளது. 

பல நாடுகளில் இருக்கும் மருத்துவமனைகள் இதன் காரணமாக நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. மக்களை வீட்டிற்குள் ஒடுக்கி வைத்து மொத்தமாக அவர்களின் வாழ்க்கையை முடக்கி உள்ளது இந்த வைரஸ் . 'சார்ஸ்' வந்த போதே சந்தேகம். சார்ஸ் நோய் உலகத்தை தாக்கியே போதே இந்த கொரோனா வைரசுக்கு நாம் தயார் ஆகி இருக்க வேண்டும். 

சார்ஸ் வைரஸ் கொரோனா குடும்பத்தை சேர்ந்தது. கொரோனா குடும்பத்தை சேர்ந்த 7 வைரஸ்களில் 6வது வைரஸ் மூலம் உருவானதுதான் சார்ஸ். தற்போது 7வது வைரஸ் மூலம் பரவி வருவதுதான் COVID -19. இதை சொன்னால் ஜீரணிக்க கடினமாக இருக்கும். 

ஆனால் சார்ஸ் வந்த போதே அமெரிக்க, சீன விஞ்ஞானிகள் பலர் கொரோனாவின் அடுத்த தாக்குதல் விரைவில் நடக்கலாம் என்று கூறி இருந்தனர். பெரிய அளவில் எச்சரிக்கை ஆகி இருக்க வேண்டும்.  ஆம், இந்த கொரோனா குடும்பத்தின் வேலையே இதுதான். கொரோனா வைரஸ் ஒவ்வொரு முறை உலகில் உருவாகும் போதும், அது புதிய சக்தியோடு உருவாகும். முன்பு இருந்ததை விட அதிக சக்தியோடு கொரோனா உருவாகும். கொரோனாவின் 4 மற்றும் 5ம் தலைமுறை வைரஸ்களை விட, சார்ஸை உருவாக்கிய 6ம் தலைமுறை வைரஸ் அதிக பலம் வாய்ந்தது. தற்போது 7ம் தலைமுறை வைரஸ் உருவாக்கி உள்ள COVID -19 இதற்கு முன்பு இருந்ததை விட அதிக பலம் கொண்டதாக உள்ளது. 

'ஸ்டெல்த் மோட்' என்றால் என்ன? இந்த வைரஸ் வேகமாக பரவவும், அதிக பலத்துடன் இருக்கவும், இத்தனை பேரை காவு வாங்கவும் ஒரே காரணம்தான். அது இந்த வைரஸின் 'ஸ்டெல்த் மோட்'. விமானப்படைகளில் 'ஸ்டெல்த் மோட்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படும். ரேடாருக்கு தெரியாத வகையில் பறந்து செல்வது அல்லது ரேடாரில் சிக்காத வகையில் வடிவம் கொண்ட விமானங்களை 'ஸ்டெல்த் மோட் விமானங்கள்' என்று கூறுவார்கள். 

கொரோனா வைரஸ் அப்படி ஒரு ஸ்டெல்த் மோட் வைரஸ் ஆகும். இதுதான் அதன் வெற்றிக்குக் காரணம். கொரோனாவின் வெற்றிக்கு காரணம், அதன் வேடமிடும் தன்மை. அந்த வைரஸ் மனித உடலுக்குள் புகுந்தால், அப்படியே தனது வேடத்தை மாற்றிக்கொள்ளும். அதாவது தன்னை வெளியில் இருந்து வந்த வைரஸ் போல இது காட்டிக் கொள்ளாது. இதனால் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி செல்கள் மூலம் இதை கண்டுபிடிக்க முடியாது. இதனால்தான் கொரோனாவை கண்டுபிடித்து அழிக்க முடியாமல் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி செல்கள் திணறுகிறது. இதற்கு முன் இருந்த சார்ஸ் வைரசுக்கு இந்த கூடுதல் பலம் இல்லை. அடையாளம் தெரியாமல் பரவும். இன்னொரு விஷயம், இந்த வைரஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு அறிகுறி இல்லாமலே பரவும். 

உதாரணமாக A என்ற நபர் ஆரோக்கியமாக இருக்கிறார். அவருக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் கூட, அவருக்கு கொரோனா தாக்கி இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் அவருக்கு அது தெரியாது. இதனால்தான் இதை ஸ்டெல்த் மோட் என்று கூறுகிறார்கள். இவர்களும் கூட மிகவும் அமைதியாக பிறருக்கு கொரோனவை பரப்ப முடியும். முழுமையாக வைரஸாக வளர்ச்சி அடையும் முன்பே இந்த கொரோனா கருவிலேயே பரவும் திறன் கொண்டது. 

என்ன செய்ய வேண்டும்?  ஆனால் எப்படி? இப்படி புதிய பலத்தோடு வந்து இருக்கும் கொரோனவை கட்டுப்படுத்த ஒரே வழிதான் இருக்கிறது. மக்களை தனிமைப்படுத்துவது. தற்போது கடைபிடிக்கும் இந்த வழியை தவிர வேறு வழியே இல்லை. மக்கள் எல்லோரையும் மொத்தமாக வீட்டிற்குள் அடைத்து வைக்க வேண்டும். அடுத்த சில நாட்களுக்கு இந்த வைரஸின் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் மக்கள் எல்லோரும் கண்டிப்பாக, வீட்டில் இருக்க வேண்டும். 

முடியவே முடியாது. வரும் நாட்களில் கொரோனா வைரஸால் உலகில் பின் வரும் விஷயங்களில் என்னென்ன நடக்கும் என்று அமெரிக்க மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். 

அதில் 
(1). மக்கள் எல்லோரையும் உலக நாடுகள் வீட்டில் இருக்க கட்டளை இடும். ஏற்கனவே சில நாடுகளில் அது நடந்துவிட்டது. 

(2). மக்கள் வீட்டிற்குள் இருந்தாலும் ஏற்கனவே கொரோனா பாதித்தவர்கள் மூலம் இந்த வைரஸ், எங்காவது, எப்படியாவது பரவிக் கொண்டே இருக்கும். 

(3).உலகம் முழுக்க மொத்தமாக விரைவில் அடைக்கப்படும் நாட்கள் வரும். மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. இதில் அவர்கள் கணித்து இருப்பது, மக்களை என்னதான் தனிமைப்படுத்தினாலும், உலகம் முழுக்க வரும் ஏப்ரல் மற்றும் மே மாத இறுதியில் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என்று கூறுகிறார்கள். 

இந்த மே மாதம்தான் கொரோனா வைரஸின் உச்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உலகம் முழுக்க மக்கள் பலர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார்கள். பல கோடி பேரை இந்த வைரஸ் பாதிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். 

மருத்துவமனையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும் உதாரணமாக இப்போதே இத்தாலியில் ஒரு மருத்துவமனை கட்டிலுக்கு 6 பேர் போட்டியிடும் நிலை உருவாகி உள்ளது. அமெரிக்காவில் ஒரு கட்டிலுக்கு 8 பேர் போட்டியிடும் நிலை அடுத்த மாதம் ஏற்படலாம் என்று கூறுகிறார்கள். ஜூன் மாத இறுதியில் அமெரிக்காவில் மட்டும் 22 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று லண்டன் இம்பீரியல் கல்லூரி கணித்துள்ளது. 

கொரோனா மருத்துவர்களையும் பாதிக்கும்: இந்த வைரஸின் தீவிரம் எப்போது தெரியும் என்றால், இதனால் மருத்துவர்கள் பாதிக்கப்படும் போதுதான். உலகம் முழுக்க மருத்துவர்கள் இந்த வைரஸை ஒழிக்க தீவிரமாக முயன்று வருகிறார்கள். ஆனால் இந்த வைரஸ் காரணமாக நாளுக்கு நாள் மருத்துவ உபகரணங்கள் தீர்ந்து கொண்டே வருகிறது. மாஸ்க்குகள் தீர்ந்து கொண்டே வருகிறது. இதே நிலை நீடித்தால் வரும் ஜூலை மாத இறுதியில் போதிய பாதுகாப்பு இல்லாமல் அதிக அளவில் மருத்துவ பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட வாப்புள்ளது என்று கூறுகிறார்கள். 

'End of  the game' ஆட்டம் அவெஞ்சர்ஸ் படத்தில் 'தானோஸ்' உலகத்தை அழிக்க வரும் போது, அதை 'எண்ட் கேம்' என்று அழைப்பார்கள். அதாவது இறுதி ஆட்டம். நாம் இப்போது அப்படி ஒரு இறுதி ஆட்டத்தில்தான் இருக்கிறோம். இந்த வைரசுக்கு எதிராக எதிர் வரும் நாட்களில் ஒரே சண்டைதான் நடக்க போகிறது. மனித குலம் Vs கொரோனா.(மனித குலமும் கொரோனாவும் மோதும் ஆட்டம்) மொத்த மனித இனமும் சேர்ந்து ஒரு 'எண்ட் கேம்' சண்டை போட்டால் மட்டுமே இந்த கொரோனாவை அழிக்க முடியும். 

'கொரோனா தொற்றிய' கடைசி ஒரு நபர் இருக்கும் வரை:  இந்த கொரோனா ஏன் ஆபத்தானது என்றால், கொரோனா இருக்கும் உலகின் கடைசி நபரை குணப்படுத்தும் வரையில் கொரோனாவை தடுக்க முடியாது. அதாவது சீனா முழுக்க கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும், வேறு ஒரு நாட்டில் எதோ ஒரு மூலையில் யாருக்காவது கொரோனா இருந்தாலும் அது உலகம் முழுக்க பரவ வாய்ப்புள்ளது. 

உலகம் முழுக்க எல்லோரையும் கொரோனாவில் இருந்து மீட்டு, மொத்தமாக உலகை சுத்தம் செய்ய வேண்டும். அடுத்த ஒரு வருடம் கஷ்டம். இந்த வைரசுக்கு எதிரான போராட்டம் கண்டிப்பாக அடுத்த ஒரு வருடத்திற்கு நீடிக்கும் என்று கூறுகிறார்கள். 

இன்னும் சில மாதங்களில் முடியக் கூடிய பிரச்சனை இல்லை இது. இப்போதுதான் கொரோனா தீவிரம் எடுத்துள்ளது. வரும் நாட்களில் இது இன்னும் அதிக வேகம் எடுக்கும். இந்த வைரஸை மொத்தமாக ஒடுக்க மருந்து மட்டுமே தீர்வாக இருக்கும். ஆனால் அதுவும் கூட சாத்தியம் இல்லை. மொத்தமாக மக்களின் வாழ்க்கை முறையை மாற்றும் இதற்கு இப்போதே மருந்து கண்டுபிடித்தாலும், அதை சோதனை செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர 7 மாதங்கள் வரை ஆகும். இதனால் அடுத்த ஒரு வருடம் மிகவும் மோசமாக இருக்க போகிறது. இந்த கொரோனா வைரஸ் மொத்தமாக நாம் உலகை பார்க்கும் விதத்தையே மாற்ற போகிறது. இது மொத்தமாக மக்களின் வாழ்க்கை முறையை மாற்றும். மக்கள் எப்படி எதிர்காலத்தில் இருக்க போகிறார்கள் என்பதை இதுதான் தீர்மானிக்கும். 

ஜெனரேஷன்_சி என்றால் என்ன? அமெரிக்கர்கள் கொரோனா வைரஸ் உருவான பின் உலகில் பிறக்கும் குழந்தைகளை 'ஜெனரேஷன் சி' என்று அழைக்கிறார்கள். அதாவது கடந்த ஜனவரிக்கு பின் பிறந்த குழந்தைகள் எல்லாம் ஜெனரேஷன் சி. அவர்கள்தான் பிறக்கும் போதே கொரோனா என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள முடியும். கொரோனாவிற்கு பழக்கப்பட்ட ஒரு உலகில் அவர்கள் பிறந்து இருக்கிறார்கள். அவர்களை கொரோனாவில் இருந்து மீட்க வேண்டிய பொறுப்பு நம்மிடம்தான் உள்ளது.. அவர்களுக்காக நாம் ஒரு கொரோனா இல்லாத பூமியை கண்டிப்பாக விட்டுச் செல்ல வேண்டும். இந்த அமெரிக்க ஆய்வு கட்டுரையை அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எதிர் வரும் நாட்களில் இதுதான் நடக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சபாரத்தினம் சபாகரன் அவர்களுடைய முகநூலில் இருந்து பிரதி செய்து எழுத்துப் பிழைகள் மற்றும் மொழிபெயர்ப்புத் தவறுகளைத் திருத்தி வெளியிடுபவர்: இரா_சொ_லிங்கதாசன்_டென்மார்க்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கவே  பயமாக, இருக்கு எங்கு போய் முடியப்போகின்றதோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.