Sign in to follow this  
உடையார்

பரவை முனியம்மா காலமானார்

Recommended Posts

மதுரை: தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று மதுரையில் முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 76.


 

latest tamil news


 


சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். தூள் படத்தில் வரும் சிங்கம் போல.. பாடல் இவருக்கு மிகவும் பிரபலமானது. மேலும் தனது நாட்டுப்புறப் பாடல்களாலும் தனது கிராமிய பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் பரவை முனியம்மா.


latest tamil news


 


தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார். . 2000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2511532

Share this post


Link to post
Share on other sites

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும். 

Share this post


Link to post
Share on other sites

மிகவும் வருந்துகிறேன். அவவின் ஆன்மா கடவுளுடன் சங்கமிக்கட்டும் 

Share this post


Link to post
Share on other sites

மிகச்சிறந்த கலைஞர். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..

 

நடிகையும், நாட்டுப்புற பாடகியுமான பரவை முனியம்மா காலமானார்!

18.jpg

 

பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா இன்று(மார்ச் 29) அதிகாலை மரணமடைந்தார்.

நாட்டுப்புற இசைக்கலைஞராக 30 வருடத்திற்கும் மேலாக தொடர்ந்து பாடல் பாடிவரும் பரவை முனியம்மா, விக்ரம் கதாநாயகனாக நடித்த ‘தூள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்தப்படத்தில் இவர் பாடிய ‘மதுரை வீரன் தானே’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவந்த அவர் இறுதியாக சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே’ படத்தில் நடித்திருந்தார். பல்வேறு வெளிநாடுகளிலும் நாட்டுப்புற இசைக்கச்சேரிகளை நடத்தி பிரபலம் அடைந்த இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது.

வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தனது சமையல் கலை மூலம் மின்னிய இவர், மண்பானை கிராமத்து சமையலால் ரசிகர்களைக் கவர்ந்தார். வயது முதிர்வின் காரணமாக வேலை செய்ய இயலாமல் வறுமையில் வாடிய இவருக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆறு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார். சில மாதங்களுக்கு முன்பாக இவர் மரணமடைந்துவிட்டதாக சில வதந்திகள் பரவின. அப்போது மருத்துவமனை சிகிச்சையில் இருந்த பரவை முனியம்மா வீடியோ மூலமாகத் தான் நலமாக இருக்கும் செய்தியை ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.

இவர் வறுமையில், மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவிப்பதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து திரைத்துறையை சேர்ந்த பலரும் அவருக்கு உதவி செய்தனர். மேலும், நடிகர் சங்கம் சார்பிலும் அவருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நலம் தேறி வந்ததாகத் தகவல்கள் வெளிவரத் துவங்கின.

ஆனால், கடும் மூச்சுத்திணறலால் இன்று அதிகாலை மூன்று மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவிற்குப் பல்வேறு திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது இறுதிச்சடங்குகள் இன்று (மார்ச் 29) மதியம் 3 மணியளவில் மதுரையிலுள்ள இவரது சொந்த ஊரில் நடைபெறவுள்ளது.

 

https://minnambalam.com/entertainment/2020/03/29/18/singer-actress-paravai-muniyamma-passes-away

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள் 

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த அனுதாபங்கள் .அத்துடன் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் .

பகிர்வுக்கு நன்றி ,,,

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

 

நல்லதொரு நடிகை. அன்னாரின் ஆத்மா  சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

Share this post


Link to post
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்......!  

Share this post


Link to post
Share on other sites

நல்ல கலை உணர்வுகொண்ட தாய்க்கு ஆழ்ந்த இரங்கல் 
 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • நெல்லியான் - இதுதான் எங்கள் ஊர், அப்பையா அண்ணையின் வீடும் அதில் ஒன்று, தலைவரை அவர் வீட்டில்தான் பார்த்தேன் சிறுவயதில். எங்கள் கிராமம் இப்ப இல்லை😪 சுழிபுரம் இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஒரு ஊர் ஆகும். இவ்வூர் ஏழு அரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது. இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும், மேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம், பொன்னாலை, நெல்லியான் முதலிய ஊர்களும் சூழ்ந்து உள்ளன. இவ்வூரில் பெரும்பான்மையானோர் சைவ சமயத்தவர்களே ஆவர். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்தபோதும் மாரிகாலத்து நீரை வீண்போகாவண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடைகாலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர். இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம். https://ta.wikipedia.org/wiki/சுழிபுரம்
    • என்னுடைய கருத்து தமிழகத்தில் உள்ள உதிரிக்கட்சிகளால் ஒன்றும் செய்யமுடியாது என்பதே. இறுதி யுத்த நேரத்தில் வைகோ, நெடுமாறன், திருமாவளவன் போன்ற உதிரிகள் எதையும் செய்யமுடியாமல் கையாலாகாது நின்றார்கள். தங்கள் குற்றவுணர்வை மறைக்க வைகோவும், நெடுமாறனும் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என்று தமக்குத்தாமே சொல்லி சமாதானம் அடைந்தனர்! எனவே தமிழகத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இரண்டினதும் ஆதரவு இன்றி ஈழத் தமிழர்களுக்கு ஒரு விடிவும் வராது. அது இப்போது அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கட்சிகள்தான்.  நாம் தமிழரை அரசு கட்டிலில் ஏற்றிப் பார்க்க புலம்பெயர் தமிழர்களில் ஒரு பகுதியினர் செய்யும் ‘புரஜெக்ட்’, செந்தமிழன் சீமானின்  “வாய்” இருக்குமட்டும் வெற்றியளிக்காது😁
    • மஞ்சள் போட்டு சமைத்தால் மணமே தெரியா. ஜப்பான் மீன் அந்த மாதிரி சுவை, பொரித்து சாப்பிட  இதெல்லாம் யாழ் மத்தியில்தான், நாங்கள் பெடியலா தூண்டில் போட்டு பிடிப்போம் எங்க ஊர் பெரிய குளத்தில். அப்படி பன்னாடை விறகு வைத்து சுட்டு சாப்பிடுவோம், சில வேளை கள்ளுக்கும் நல்ல சைட்டிஸ்😄 கடல் கெளிறு முள் குத்தினால், அதன் வலி சிலநாட்களுக்கு இருக்கும். அம்மா முன்னர் சமைத்தவா, எனக்கு செய்முறை தெரியா, ஆனா தலை சமைப்பதில்லை
    • மிகவும் உண்மை.  என்னுடைய அப்பம்மா வெளிப்படடையாக சொல்லுவார். குளம், ஆற்று மீன்கள் தாழ்ந்தவர்கள் (சாதியைச் சொல்லியும்) வாங்குவது என்று. ஆனால்  அப்பா, அம்மா சொல்லுவது கிடையாது, குளம், ஆற்று மீன்கள் வாங்குவதை விரும்புவது இல்லை. கடல் கெளிறு கூட வாங்குவது, ஊரில் ஓர் விதமாக பார்க்கப்படும். வேறு கடல் மீன்கள் கிடைக்கவில்லை என்றால் அருமையாக வாங்கப்படும், பொதுவாக தவிர்க்கப்படும். எனது வீட்டில் வியாழன், வெள்ளி, மற்றும் விரதங்கள், திருவிழாக்கள் தவிர, பொதுவாக மீன் தவிர்க்கப்பட முடியாத உணவு . எங்கிருந்து கருவாடாக வருகிறது.  கிழக்கில் உடனடி நன்னீர் மீன்கள் கிடைப்பது இல்லையா?   எப்படி சமைப்பது என்பது தெரியாது. உ.ம். கடல் கெளிறு. முழு மீனாக அதன் தோல் உரிக்கப்பட வேண்டும்.