Jump to content

வாழ்க்கையை மாற்றும் 5 முக்கிய படங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா தொற்றால் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

latest tamil news



21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது அவ்வளவு சுலபமானது அல்ல. இந்த சமயத்தில் மதிய உணவு சாப்பிட்ட உடனே குட்டி தூக்கம் போட தோன்றும். பலருக்கு உடல் எடை கூடும் என்ற அச்சம் உண்டு அவ்வாறு மதிய தூக்கத்தை விரும்பாதவர்கள் திரைப்படம், வெப் சீரிஸ் என எதையேனும் பார்த்தால் நேரம் போவது தெரியாது. வீட்டிலிருந்தபடியே இணையச் சேவையை பயன்படுத்தி எளிதாக படம் பார்க்க முடியும்.

வாழ்க்கையின் மீது புதிய உத்வேகம் பெற, சாதனையாளர்களின் வாழ்க்கை படங்களைப் பார்ப்பது நல்லது. இந்த 21 நாட்களில் நீங்கள் பார்க்க வேண்டிய ஐந்து முக்கிய படங்கள்.
 


latest tamil news


 


காந்தி


இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியின் வாழ்க்கை படமான 'காந்தி', பார்ப்பது வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதனை எதிர்த்துப் போராடும் மனவுறுதியைத் தரும் படமாக அமையும்.

போஹேமியன் ராப்சோடி (Bohemian Rhapsody)


இங்கிலாந்தில் 1970ல் துவங்கப்பட்ட ஒரு இசைக்குழுவின் வாழ்க்கை பயணம் தான் போஹோமியன் ராப்சோடி. 2019 ஆஸ்கர் விழாவில் 4 முக்கிய விருதுகளை வென்ற இப்படம் பலரின் கவனத்தை ஈர்த்தது.

அமெரிக்கன் ஸ்னைப்பர்


அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய கிரிஸ் எனும் வீரர். அமெரிக்க படைகளை காக்க 150 பேரை ஸ்னைப்பர் துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்தினார். அமெரிக்க வரலாற்றில் 150 எதிரிகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் கிரிஸ்.

பீலே


கால்பந்து ஜாம்பவான் பீலே, தன் வாழ்வில் நிகழந்ததை கூறும் இப்படம் பிரேசில் நாட்டை தாண்டி உலகம் முழுதும் பெரும் புகழ் பெற்றது. மேலும் இந்திய ரசிகர்களை ஈர்க்கும் விதமாக ஏ.ஆர் ரகுமான் இசை கூடுதல் பலமாக அமைந்தது.

தி தியரி ஆப் எவ்ரிதிங்


உலக புகழ்பெற்ற இயற்பியலாளர் மற்றும் ஆராய்ச்சியாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ன் வாழ்க்கை படமான தி தியரி ஆப் எவிதிங் 2014ம் ஆண்டு வெளியாகி இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு முக்கிய இடம் வகிக்கிறது.

இன்னும் பல சாதனையாளர்களின் படங்கள் பட்டியலில் இருந்தாலும். இந்த ஐந்து படங்கள் வாழ்க்கை போராட்டத்தை உணர்த்துவதால், மன உறுதியை அதிகமாக்க உதவும்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2511528

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் நல்ல இணைப்புகள் இணைக்கிறியள். அந்த கீரத்திரி இது. பயனுள்ள திரிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.