Sign in to follow this  
கிருபன்

கொரோனா வைரஸ் தொற்றுநோய், அதன் தாக்கங்கள் மற்றும் நீங்கள் என்ன உதவி செய்யலாம்?: சுருக்கமான வழிகாட்டுதல்கள்

Recommended Posts

கொரோனா வைரஸ் தொற்றுநோய், அதன் தாக்கங்கள் மற்றும் நீங்கள் என்ன உதவி செய்யலாம்?: சுருக்கமான வழிகாட்டுதல்கள்

on March 25, 2020

20200307_FBD001_0.jpg?resize=1200,550&ss

பட மூலம், THE ECONOMIST

(சஷிக்கா பண்டார), Shashika Bandara is an Associate in Research at the Duke Global Health Institute. He tweets at @shashikaLB.

புதிய கொரோனா வைரசினால் உருவாகியுள்ள உலகளாவிய நோய் தொற்று காரணமாக முன்னொருபோதும் ஏற்பட்டிராத அழிவுகள் குறித்து வெளிவரும் பிழையான தகவல்கள் மோசமான ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். இது தொற்றுநோய் கொள்கை முயற்சிகள் மற்றும் நாம் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதற்கான ஏழு வழிமுறைகள் அடங்கிய சுருக்கமான வழிக்காட்டுதலாகும்.

கொவிட் 19 என்றால் என்ன?

இது கொரோனா வைரஸின் ஒரு புதிய வடிவம் – பொதுவாக சளியையும் அதனை விட பாரதூரமான நோய்களையும் உருவாக்ககூடிய பாரிய வைரஸ் குழுவே இவ்வாறு அழைக்கப்படுகின்றது.

2003 இன் சார்ஸ் வைரஸும் (Severe Acute Respiratory Syndrome) 2012 இன் மேர்சும் (Middle East Respiratory Syndrome) கொரோனா வைரஸின் வெவ்வேறு வடிவங்களால் உருவானவையே.

இந்த வைரஸ் குறித்த அனைத்து தகவல்களும் தெரியவரவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டியது முக்கியமான விடயமாகும். எதிர்காலத்தில் புதிய தகவல்கள் தெரியவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது என்பதையும் நாங்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள 4 நிமிட வீடியோவில் வைரஸ் குறித்த பல அடிப்படை விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

 

கொரோனா வைரஸ், உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்ட COVID-19 முதன் முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டதுடன்  தற்போது உலகளாவிய நோய் தொற்றாக மாறியுள்ளது.

தொற்றுநோய் – உலகளாவிய தொற்று என்றால் என்ன?

குறிப்பிட்ட  சனத்தொகையினர் மத்தியில் எதிர்பார்த்த அளவினை விட திடீர் என அதிகளவு நோய் தாக்கம் காணப்படுவதே தொற்றுநோய் என அழைக்கப்படுகின்றது. உலகளாவிய தொற்று என்பது பல நாடுகளில் கண்டங்களில் பரவியுள்ள மிகப்பெருமளவானவர்களை தாக்கும் நோயை குறிக்கும்.

உதாரணத்திற்கு மேர்ஸ், சார்ஸ் ஆகிய இரண்டும் பிராந்திய அளவில் மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தினை ஏற்படுத்தியதால் தொற்றுநோய்கள் என அழைக்கப்படுகின்றன. அதேவேளை கொரோனா வைரஸ் அதன் உலகளாவிய தாக்கம் காரணமாக உலகளாவிய நோய் தொற்று என உலக சுகாதார ஸ்தாபனம் என அறிவித்துள்ளது.

தொற்றுநோய், உலகலாவிய தொற்றுநோய் மற்றும் நோய் பரவுவது குறித்த பல விடயங்களை இங்கே பார்க்கலாம்.

உங்களை எப்படி பாதுகாப்பது?

கொவிட் 19 சுவாத்சதுளிகள் மூலமாக பரவுகின்றது. கைகுலுக்குதல், கட்டித்தழுவுதல் போன்ற நெருக்கமான தொடர்புகள் மூலமும் – இருமல், தும்மல் போன்றவற்றின் மூலமும் இது பரவுகின்றது.

நாங்கள் பயன்படுத்தக்கூடிய இலகுவான நடைமுறைகளை உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ளது. அவை பின்வருமாறு:

 1. உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள் அல்லது கைகள் கழுவுவதற்காக உள்ள அல்கஹோல் கலந்த திரவத்தைப் பயன்படுத்தி கிருமிகளை கொல்லுங்கள். உங்கள் தனிப்பட்ட பொருட்களை (கையடக்கத் தொலைப்பேசி) அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். உங்கள் கைகளை எப்படி சுத்தம் செய்யவேண்டும் என்பதற்கான வீடியோ இது.

ஆங்கிலம்: https://www.youtube.com/watch?v=3PmVJQUCm4E&feature=youtu.be

சிங்களம்: https://www.facebook.com/hpbsrilanka/videos/123749012212887/

தமிழ்: hthttps://www.youtube.com/watch?v=Dzt30CuOP8E&feature=emb_title

 1. உங்கள் பழக்கவழக்கங்கள் குறித்து அவதானமாக இருங்கள். உங்கள் முகத்தினை கைகளினால் தொடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் (கண், மூக்கு, வாய்).
 2. இருமும்போது அல்லது தும்மும்போது உங்கள் முகத்தினையும் வாயையும் கையால் மூடிக்கொள்வதற்கு பழகிக்கொள்ளுங்கள். (அல்லது டிசுவினால் மூடிய பின்னர் அதனை உடனடியாக குப்பையில் போடுங்கள்.
 3. சமூக விலக்கல்களை (social distancing) பின்பற்றுங்கள், (உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு மீற்றர் அல்லது 3 அடியை பரிந்துரை செய்துள்ளது.) குறிப்பாக இருமும், தும்மும் நபரிடமிருந்து சமூக விலக்கல்களை மேற்கொள்ளுங்கள் .
 4. உங்களுக்கு இருமல் – சளி – சுவாசிப்பதில் பிரச்சினைகள் போன்றவை இருப்பதாக நீங்கள் நினைத்தால் இலங்கை சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றுங்கள். 1999 இலக்கத்தின் மூலம் இலங்கை சுகாதார மேம்பாட்டு பணியகத்தினை தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளமுடியும். எந்த வலையமைப்பிலிருந்தும் அதனை அணுகலாம்.
 5. இந்த நடவடிக்கைகளை நீங்கள் பின்பற்றினால் நோய் பரவுவதைத் தடுப்பதற்கு அல்லது நோயைக் குறைப்பதற்கு உதவுவீர்கள்.

நோய் பரவும் வேகத்தை குறைப்பது (flattening the curve) என்றால் என்ன?

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் பாதிக்கப்படாதவர்களிடமிருந்து தனிமைப்படுத்துல் சாத்தியமில்லை என்பதால் சமூக விலக்கல் மற்றும் சுகாதாரம் தொடர்பான எங்கள் நடவடிக்கைகள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமலிருப்பதற்கு அவசியமானவையாக உள்ளன.

நோய் தாக்கத்திற்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் எங்களால் சுகாதார துறை மற்றும் சுகாதார பணியாளர்கள் மீதான அழுத்தங்களை குறைக்க முடியும். மேலும் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செலவாகும் பணத்தை சேமிக்கும் நிலையை ஏற்படுத்த முடியும். கொவிட்-19 தற்போது எங்களையே அதிகம் தாக்கி வருகின்ற அதேவேளை ஏனைய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களை எங்களது சுகாதார துறையினரும் சுகாதார பணியாளர்களும் கவனம் செலுத்தவேண்டியுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் நோய் பரவும் வேகத்தை குறைப்பதற்கு நீங்கள் நிச்சயமாக உதவபோகின்றீர்கள்.

flattening-the-curve-V7-04.jpg?resize=66

நோயை துணிச்சலுடன் எதிர்கொள்வதாக கருதுவதன் மூலம் – Big Match சென்றால் எப்படி எனக்கு நோய் தொற்று வரும் என நினைப்பதன் மூலம் – அரசாங்க கட்டளைகளை குறைத்து மதிப்பிடுவதன் மூலம் அல்லது புறக்கணிப்பதன் மூலம் நீங்கள் ஏனைய பொதுமக்களை, சுகாதார பணியாளர்களை, படையினரை (இந்த முயற்சிக்கு உதவுபவர்கள்) நெருக்கடிக்கு உள்ளாக்குவதுடன் தேசிய வளங்களை வீணடிக்கின்றீர்கள். இவை நோயை கட்டுப்படுத்துவதற்கும் குறைப்பதற்கும் உதவக்கூடிய கூடிய வளங்கள் .

நோய் பரவும் வேகத்தை குறைப்பது குறித்து நீங்கள் மேலும் அறிந்துகொள்ள விரும்புகின்றீர்கள் என்றால் நோய் பரவுவது குறித்து மேலும் தெளிவாக அறிந்து கொள்ளவேண்டும் என்றால் இந்த கட்டுரையை படியுங்கள்.

சர்வதேச முயற்சிகள் – இடைவெளிகள் – இலங்கை

கொவிட்-19 னை எதிர்கொள்வதற்கு உலக வங்கி 12 பில்லியன் டொலர்களை வழங்குவதாக உறுதியளித்துள்ள போதிலும் சர்வதேச நடவடிக்கைகளுக்கு 8 மில்லியன் டொலர் பற்றாக்குறை உள்ளதாக சர்வதேச தயார்படுத்தல் மற்றும் கண்காணிப்பு சபை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனமும் உலக வங்கியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த சர்வதேச தயார்படுத்தல் மற்றும் கண்காணிப்பு சபை,  ஜி7 மற்றும் ஜி20 நாடுகள் இந்த இடைவெளியை நிரப்பவேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த நிதி இடைவெளியில் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தினை உருவாக்குவதற்கு அவசியமான 2 பில்லியன் டொலரும் காணப்படுகின்றது. இந்த நிதி இடைவெளி குறித்த மேலதிக விபரங்களை இங்கே பார்க்கலாம்.

கொவிட்-19ற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு நாடும் தங்கள் சுகாதார துறை மற்றும் அரசாங்கத்தின் பலம் பலவீனங்களை அடிப்படையாக வைத்து வெவ்வேறுவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன. சீனா கடுமையான நடவடிக்கைகள் மூலம் ஹுபெய் மாகாணத்தை முடக்கியுள்ளது. வாகனங்களில் பயணிக்கும் போது பரிசோதிக்கும் புதிய முறையிலான பரிசோதனையை தென்கொரியா ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தேசிய இடர் நிலையை அறிவித்துள்ளதுடன் சமூக தனிமைப்படுத்தலை முன்னிறுத்தி வருகின்றது. பிரிட்டன் தொற்றுநோய்களுக்கான மறைமுக பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட சமூகமொன்றை உருவாக்கும் சர்ச்சைக்குரிய முயற்சியை மேற்கொண்டது. எனினும், புதிய தரவுகளின் அடிப்படையில் அந்த நாடு சமூக தனிமைப்படுத்தலை ஊக்குவிக்க முயல்கின்றது. இலங்கை பாடசாலைகளையும் பல்கலைகழகங்களையும் மூடியுள்ளதுடன் 16ஆம் திகதி பொது விடுமுறையை அறிவித்தது. அதன் பின்னர் மூன்று நாட்களுக்கு அதனை நீடித்தது. கொவிட் 19 ற்கு எதிரான நிதியமொன்றை உருவாக்கும் சார்க் நாடுகளின் முயற்சியில் இலங்கை தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

நாங்கள் என்ன செய்யலாம்?

சர்வதேச மற்றும் உள்நாட்டு வழிகாட்டுதலின் அடிப்படையில் – கொரோன வைரஸினை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் பரிசிலீக்கக் கூடிய  ஏழு நடவடிக்கைகள் பின்வருமாறு:

 1. சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுதல் (#Followhealthguidelines)

நபர் என்ற அடிப்படையில் நீங்கள் சமூக தனிமைப்படுத்துதல், சுகாதார நடைமுறைகள், உங்களினதும் உங்களின் அன்புக்குரியவர்களினதும் உடல்நலத்தை கண்காணித்தல் குறித்த உள்நாட்டு வெளிநாட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றுங்கள்.

 1. தொலைவிலிருந்து பணிபுரிதல் (#workremotely)

நீங்கள் ஒரு நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றால், தொலைவிலிருந்து அதனை நிர்வகிக்க முடியுமென்றால் தயவுசெய்து அவர்கள் தொலைவிலிருந்து பணிபுரிவதற்கு அனுமதியுங்கள். இரண்டு வாரங்களுக்கு சம்பளத்துடன் விடுமுறையையை வழங்குங்கள்.

 1. பொதுநிகழ்வுகளை இரத்துச்செய்யுங்கள் (#cancelgatherings)

நீங்கள் Big Match, கூட்டம், பெருமளவானவர்கள் கூடும் நிகழ்வு ஆகியவற்றின் ஏற்பாட்டாளர்கள் என்றால் பொது மக்களின் சுகாதார நலனை அடிப்படையாகக் கொண்டு அவற்றினை இரத்துச்செய்யுங்கள். உங்களால் கொரோனா வைரஸுடன் மோத முடியாது, நீங்கள் ஏனையவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவீர்கள்.

 1. கொவிட்-19 குறித்த பிழையான செய்திகளுக்கு எதிராகப் போராடுங்கள் (#fightCOVIDmisinformation)

நீங்கள் சமூக ஊடங்களில் செல்வாக்கு செலுத்துபவர் என்றால், பத்திரிகையாளர் என்றால், நீங்கள் பகிர்ந்து கொள்பவைகள் மற்றும் உங்கள் தகவல்கள் குறித்து பொறுப்புணர்வுடன் இருங்கள். இதனை செய்வதற்கு நீங்கள் உத்தியோகபூர்வ செய்திகளை ஆராயலாம்,

உங்கள் டுவிட்கள், கட்டுரைகள், பதிவுகள் போன்றவற்றில் காணப்படும் தகவல் மூலங்கள் குறித்து ஆராயுங்கள். முன்னைய பதிவுகளின் மேலதிக தகவல்களை ஆராயுங்கள். ஆதாரமற்ற கொள்கைகளுக்காக குரல்கொடுக்காதீர்கள். அரசாங்க சுகாதார உத்தியோகத்தர்களுடன் முரண்படாதீர்கள். முரண்படவேண்டும் என்பதற்காக முரண்படாதீர்கள். சரியான விடயங்களை உள்ளடக்காத டுவிட் அல்லது கட்டுரைகளால் இடர் மிகுந்த தருணங்களில் நீங்கள் நினைப்பதை விட மிகுந்த பாதிப்பை ஏற்படுத்த முடியும்.

 1. கொவிட் கொள்கைகளை தெளிவுபடுத்துங்கள் (#explainCOVIDpolicies)

விடுமுறைகள், அலுவலகங்களை மூடுதல் போன்ற எங்களால் பொது சுகாதார கொள்கைள் குறித்து தெளிவுபடுத்துவது அவசியம். உதாரணத்திற்கு இலங்கையில் தேசிய விடுமுறைக்கான காரணத்தை வைத்தியர் பிரசன்ன குணசேனவும், போக்குவரத்து தடைகள் ஏன் பலனளிக்காதுஎன கனடாவின் சுகாதார அமைச்சர் படி ஹட்சுவும் தெளிவுபடுத்துவதை இங்கே பார்க்கலாம்.

 1. கொவிட் – உளநலம் (#COVIDmentalhealthcare)

இது பதற்றமான நிச்சயமற்ற நேரம். எங்களை சமூகரீதியில் தனிமைப்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளனர். பதற்றத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் மூலம் எங்களினதும் ஏனையவர்களினதும் உளநலம் குறித்து ஆராய்வது சிறந்த விடயமாகும். தனித்து வாழ்பவர்கள் அல்லது ஆதரவுள்ளவர்களை உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்களது உளநலத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி சிறந்ததாக அமையும். முதிய உறவினர்கள், உட்பட உங்கள் உறவினர்களை நண்பர்களை உங்களுக்கு தெரியும் என்றால் அவர்களுக்குப் பொருட்களை வாங்கிக்கொடுப்பதன் மூலம் உதவுங்கள்.

 1. கொவிட்டின் போது இரக்கத்துடன் காணப்படுங்கள்

இது சர்வதேச தரத்திலான நெருக்கடி. எங்களிடம் அனைத்து விடைகளும் இல்லை. இணைந்து செயற்படுவதன் மூலமும் ஒருவருக்கொருவர் இரக்கத்துடன இருப்பதன் மூலமும் இதனை வெற்றிகொள்ள முடியும். இரக்கமாகயிருப்பது என்பது – சிறந்த சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது, தவறான தகவல்களை உருவாக்காமலிருப்பது, நோயாளிகளாக இருக்கக்கூடியவர்களை தாக்காமலிருப்பது, ஒருக்கொருவர் பாரபட்சம் காட்டாமலிருப்பது, ஏனையவர்களை புறக்கணிக்காமலிருப்பது, ஏனையவர்களின் உளநலம் குறித்து அறிந்திருப்பதாகும்.

இந்த பட்டியல் முழுமையானது இல்லை, இது ஒரு ஆரம்பமே.

தொடர்ந்தும் அறிந்துகொள்ள விரும்புகின்றீர்களா (தவறாக வழிநடத்தப்படுவதை விரும்பவில்லையா)

கொவிட்-19 தொடர்பான சர்வதேச நடவடிக்கைகள், கொள்கைள் குறித்து தொடர்ந்தும் அறிந்துகொள்ள விரும்புகின்றீர்கள் என்றால் தவறாக வழிநடத்தப்படுவதை விரும்பவில்லை என்றால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில இணையத்தளங்களும், டுவிட்டரில் பின்பற்றக்கூடிய சில நபர்களும்.

இணையத்தளங்கள்

டுவிட்டர்

 • இலங்கையின் சுகாதாரா மேம்பாட்டு பணியகம் – @HPBSriLanka
 • உலக சுகாதார ஸ்தாபனம் – @WHO மற்றும் @WHOSriLanka
 • டெட்ரோஸ் அட்ஹனோம் ஜெப்ரெயோசெஸ் (இயக்குநர் உலக சுகாதார ஸ்தாபனம்) – @DrTedros
 • சௌம்யா சுவாமிநாதன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி – @doctorsoumya
 • லோரன்ஸ் கொஸ்டின், பொது சுகதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் இயக்குநர் – @LawrenceGostin
 • டேவி ஶ்ரீதர் (பேராசிரியர் எடின்பேர்க் பல்கலைகழகம், சர்வதேச பொது சுகாதாரம்) – @devisridhar
 • கெவின் யாம்னே – (பேராசிரியர் டியுக் பல்கலைகழகம், சர்வதேச பொது சுகாதாரம்) – @gyamey
 • அலெக்சான்டிரா பெலென் (பேராசிரியர் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழகம், சர்வதேச பொது சுகாதாரம்) – @alexandraphelan

A brief guide to the coronavirus pandemic, its implications and what you can do to help” என்ற தலைப்பில்  Groundviews வெளிவந்த கட்டுரையின் தமிழ் மொழியாக்கம்.

 

https://maatram.org/?p=8382

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this