Jump to content

கிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடியோர் இன்று கைது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 10 இற்கும் மேற்பட்டோர் வவுனியா செட்டிகுளத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 20 இற்கும் மேற்பட்டவர்கள் ஒரு வீட்டில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடி மத நடவடிக்கையில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்தப்பகுதி மக்களால் காவல் துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் மத போதகர் உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்டோரை கைது செய்திருப்பதாக அறிய முடிகிறது.

மேற்படி சம்பவம் வவுனியா செட்டிகுளம் முதலியார் குளம் ஐந்தாம் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது.

http://www.newjaffna.com/2020/03/29/13246/

Link to comment
Share on other sites

18 minutes ago, நிழலி said:

திருந்தாத கூட்டம்

இல்லை நிழலி. அறவே திருந்தாத கூட்டம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா அறுவடை பண்ணுகினமாக்கும் இப்படியான நேரம்தான் சனமும்  ரெண்டும் கெட்டான  இருக்கும்கள் அப்படியான அப்பாவி சனத்திடம்  "சாத்தான் வரப்போறான் சத்தி எடுக்கப்போறான் " என்று இடக்கு முடக்கா சொல்லி மதம்மாற்றி கும்மியடிக்கலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில்....  மசூதிக்குள் ஒன்று கூடியவர்களை அடித்து விரட்டும் காவல்துறை.

Link to comment
Share on other sites

இப்ப இப்பிடியான கோஷ்டிகள் தான் பரவலா வைரஸ் போல தொற்றிக்கொண்டு இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரசின் வரவு மத போதகர்களின் செயற்பாடுகளின் வேகத்தை வெளிக்கொண்டுவந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்கி தம் வீட்டிலிருந்து எதையும் எடுக்காது ஓடட்டும். வயலில் இருப்போர் தம் மேலுடையை எடுக்க திரும்பி வரவேண்டாம். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை. அப்பொழுது யாராவது  உங்களிடம், 'இதோ, மெசியா இங்கே இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார்' எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடக்கவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் குருக்கள் குசுவிட்டால் குற்றமில்லை என்பது போன்ற நினைப்பில் நாட்டின் அவசரகால நடைமுறைகளை பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தபப்படவேண்டிய இடம் தேவாலயம், கோயில், பள்ளிவாசல் அல்ல வெலிக்கட, மகர மற்றும் நாட்டில் உள்ள இதர சிறைச்சாலைகளே. 

ஊரடங்கு உத்தரவு தமக்கில்லை எனும் மமதை இவர்களிடம் இருந்து களையப்படுவதற்கு இவர்களுக்கு கடுமையான சிறைவாசமே சிறந்த வழி. தண்டனையை அனுபவித்தபின் வெளியில் வரும்போது இந்த தவறை மீண்டும் செய்ய அஞ்சுவார்கள். நாட்டில் வைரஸ் கிருமியின் தொற்று நீக்கும் ஆபத்தான துப்பரவு பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படவேண்டும். 

உலகமே பேயரைந்தாற்போல் ஆடிப்போயுள்ள நிலையில் அனைவரும் ஒருமித்து கொரோனா வியாதிக்கு எதிராக போரடவேண்டிய நிலையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் தான்தோன்றித்தனமான செயல்களில் ஈடுபடும் பொறுப்புவாய்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஐயா, 

இது மாதத்தின் கடைசி நாட்கள். சம்பளம் கொடுக்கும்  நாட்கள். இப்ப தவறவிட்டா எப்ப 10% கலக்ட் பண்ணுறதாம். 🤥

மேலே கருத்திட்டவர்கள்  தலையை விட்டு வாலைப் பிடிக்கிறார்கள். 😂😂😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.