Sign in to follow this  
colomban

கிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடியோர் இன்று கைது

Recommended Posts

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்பட்ட 10 இற்கும் மேற்பட்டோர் வவுனியா செட்டிகுளத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை 20 இற்கும் மேற்பட்டவர்கள் ஒரு வீட்டில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவரின் தலைமையில் ஒன்று கூடி மத நடவடிக்கையில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்தப்பகுதி மக்களால் காவல் துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற காவல்துறையினர் மத போதகர் உள்ளிட்ட 10 இற்கும் மேற்பட்டோரை கைது செய்திருப்பதாக அறிய முடிகிறது.

மேற்படி சம்பவம் வவுனியா செட்டிகுளம் முதலியார் குளம் ஐந்தாம் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது.

http://www.newjaffna.com/2020/03/29/13246/

Share this post


Link to post
Share on other sites

திருந்தாத கூட்டம்

Share this post


Link to post
Share on other sites
18 minutes ago, நிழலி said:

திருந்தாத கூட்டம்

இல்லை நிழலி. அறவே திருந்தாத கூட்டம்.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

நல்லா அறுவடை பண்ணுகினமாக்கும் இப்படியான நேரம்தான் சனமும்  ரெண்டும் கெட்டான  இருக்கும்கள் அப்படியான அப்பாவி சனத்திடம்  "சாத்தான் வரப்போறான் சத்தி எடுக்கப்போறான் " என்று இடக்கு முடக்கா சொல்லி மதம்மாற்றி கும்மியடிக்கலாம் .

Edited by பெருமாள்
 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

இந்தியாவில்....  மசூதிக்குள் ஒன்று கூடியவர்களை அடித்து விரட்டும் காவல்துறை.

Share this post


Link to post
Share on other sites

இப்ப இப்பிடியான கோஷ்டிகள் தான் பரவலா வைரஸ் போல தொற்றிக்கொண்டு இருக்குது.

Share this post


Link to post
Share on other sites

கொரோனா வைரசின் வரவு மத போதகர்களின் செயற்பாடுகளின் வேகத்தை வெளிக்கொண்டுவந்துள்ளது.

Share this post


Link to post
Share on other sites

வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்கி தம் வீட்டிலிருந்து எதையும் எடுக்காது ஓடட்டும். வயலில் இருப்போர் தம் மேலுடையை எடுக்க திரும்பி வரவேண்டாம். உலகத் தோற்றமுதல் இந்நாள்வரை இத்தகைய துன்பம் உண்டானதில்லை. அப்பொழுது யாராவது  உங்களிடம், 'இதோ, மெசியா இங்கே இருக்கிறார்! அதோ, அங்கே இருக்கிறார்' எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். 

Share this post


Link to post
Share on other sites

மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடக்கவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் குருக்கள் குசுவிட்டால் குற்றமில்லை என்பது போன்ற நினைப்பில் நாட்டின் அவசரகால நடைமுறைகளை பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தபப்படவேண்டிய இடம் தேவாலயம், கோயில், பள்ளிவாசல் அல்ல வெலிக்கட, மகர மற்றும் நாட்டில் உள்ள இதர சிறைச்சாலைகளே. 

ஊரடங்கு உத்தரவு தமக்கில்லை எனும் மமதை இவர்களிடம் இருந்து களையப்படுவதற்கு இவர்களுக்கு கடுமையான சிறைவாசமே சிறந்த வழி. தண்டனையை அனுபவித்தபின் வெளியில் வரும்போது இந்த தவறை மீண்டும் செய்ய அஞ்சுவார்கள். நாட்டில் வைரஸ் கிருமியின் தொற்று நீக்கும் ஆபத்தான துப்பரவு பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படவேண்டும். 

உலகமே பேயரைந்தாற்போல் ஆடிப்போயுள்ள நிலையில் அனைவரும் ஒருமித்து கொரோனா வியாதிக்கு எதிராக போரடவேண்டிய நிலையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் தான்தோன்றித்தனமான செயல்களில் ஈடுபடும் பொறுப்புவாய்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். 

 • Like 1

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

மற்றவர்களுக்கு முன்மாதிரியாக நடக்கவேண்டிய பொறுப்பில் உள்ளவர்கள் குருக்கள் குசுவிட்டால் குற்றமில்லை என்பது போன்ற நினைப்பில் நாட்டின் அவசரகால நடைமுறைகளை பின்பற்றாமல் தான்தோன்றித்தனமாக செயற்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தபப்படவேண்டிய இடம் தேவாலயம், கோயில், பள்ளிவாசல் அல்ல வெலிக்கட, மகர மற்றும் நாட்டில் உள்ள இதர சிறைச்சாலைகளே. 

ஊரடங்கு உத்தரவு தமக்கில்லை எனும் மமதை இவர்களிடம் இருந்து களையப்படுவதற்கு இவர்களுக்கு கடுமையான சிறைவாசமே சிறந்த வழி. தண்டனையை அனுபவித்தபின் வெளியில் வரும்போது இந்த தவறை மீண்டும் செய்ய அஞ்சுவார்கள். நாட்டில் வைரஸ் கிருமியின் தொற்று நீக்கும் ஆபத்தான துப்பரவு பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படவேண்டும். 

உலகமே பேயரைந்தாற்போல் ஆடிப்போயுள்ள நிலையில் அனைவரும் ஒருமித்து கொரோனா வியாதிக்கு எதிராக போரடவேண்டிய நிலையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் தான்தோன்றித்தனமான செயல்களில் ஈடுபடும் பொறுப்புவாய்ந்த ஸ்தானத்தில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவேண்டும். 

ஐயா, 

இது மாதத்தின் கடைசி நாட்கள். சம்பளம் கொடுக்கும்  நாட்கள். இப்ப தவறவிட்டா எப்ப 10% கலக்ட் பண்ணுறதாம். 🤥

மேலே கருத்திட்டவர்கள்  தலையை விட்டு வாலைப் பிடிக்கிறார்கள். 😂😂😂

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • வல்வை லிங்கம் (20 years old) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வல்வை லிங்கம்.......!  💐
  • உடையார், நேற்று ஒரு காணொளி பார்த்தேன். பராக் ஹுசேய்ன் ஒபாமா குறித்தது. அனுபவம் இல்லாத இளைஞன். அப்போது தான் இல்லியனய் மாநில கவனர் ஆகி இருக்கின்றார். ஜனநாயக கட்சி தேர்தல் நியமனத்தில் அவர் தனது மனுவை சமர்ப்பித்த போது, இவரா, தேறுவாரா என்று சந்தேகங்கள். காரணம், முதலாவதாக ஓட்டத்தில் இருந்தவர், மேல்தட்டு ஹிலாரி கிளின்டன். ஆனால், மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் அவரது வசீகரமான பேச்சு பிரபல்யமாகி இருந்தது. அவரது ஆட்டோகிராப் வாங்க மாணவர்கள் அலை மோதினார்கள். அவரது திறமை, பேச்சு மட்டும் அல்ல, பேச்சுடன் சேர்ந்த புத்திசாலித்தனமான கருத்துக்கள் (His powerful voice that coupled with clear mind). அந்த மாணவர்கள், இளையோர் ஆதரவு காரணமாக அவர் ஹிலாரியை மட்டுமல்ல, குடியரசு கட்சி வேட்ப்பாளரையே தோற்கடித்து, (முதலாவது அரை கறுப்பு) ஜனாதிபதியானார். இந்த கருத்தாழம் மிக்க பேச்சுவன்மை தமிழகத்தில் ஏனையவர்களுக்கு இல்லாத காரணத்தினால் தான், ஆமைக்கறி, கறி இட்லி, ak47 என்று யாருக்கும் பிரயோசனம் இல்லாத விசயங்களை எடுத்துக் கொண்டு வருகின்றனர்.  
  • 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதியை தீர்மானிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளனர். இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். மேலும் வேட்பாளர்களுக்கான விருப்ப எண் வழங்குவது குறித்தும் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதேவேளை பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக சுகாதார வழிகாட்டுதல்களைப் பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார். பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான சுகாதார வழிகாட்டுதல்கள் இன்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/தேர்தலுக்கான-திகதி-மற்று/
  • (இராஜதுரை ஹஷான் ) தமிழ் மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையில் பலமான அரசாங்கம் தோற்றம் பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியை தொடர்ந்து நம்புவதால் எவ்வித பயனும் கிடைக்கப்பெறாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். வியத்தக அமைப்பின் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் முறையான திட்டமிடல் ஊடாகவே இந்த வெற்றியை பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று இதுவரையில் சமூக தொற்றாக பரவலடையவில்லை. நாடு பாதுகாப்பான நிலையில் உள்ளது. பொதுத்தேர்தலை பிற்போட எதிர்தரப்பினர் முன்னெடுத்த அரசியல் சூழ்ச்சிகள் நீதிமன்றத்தின் ஊடாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்தலை விரைவாக நடத்த தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இடம்பெற்வுள்ள பொதுத்தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான வாக்கினை பெற்று பலமான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும். இந்த வெற்றியில் தமிழ், முஸ்லிம் மக்கள் பங்குதாரர்களாக வேண்டும் என்பதே எமது பிரதான எதிர்பார்ப்பு. ஐக்கிய தேசிய கட்சு தமிழ் மக்களுக்கு எவ்வித அபிவிருத்திகளையும் செயற்படுத்திக் கொடுக்கவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்திலேயள வடக்கு மற்றும் கிழக்கில் அபிவிருத்திகள் துரிதமாக முன்னைடுக்கப்பட்டது. கடந்த அரசாங்கம் போலியான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களக ஏமாற்றியது. ஆகவே தமிழ் ,முஸ்லிம் மக்கள் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியை நம்புவதால் எவ்வித பயனும் கிடைக்கப் பெறாது. என்றார்.   https://www.virakesari.lk/article/83303
  • யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவில் அமைந்துள்ள அடைக்கல மாதா தேவாலயத்தின் திருச்சொரூபம் இனந்தெரியாத நபரால் உடைக்கப்பட்டுள்ளது. கோவிலின் மூலையில் அமைக்கப்பட்டிருந்த குறித்த சொரூபம் மக்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலையில் உடைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் நாட்டிலிருந்து வருகை தந்த ஒருவராலேயே சிலை உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. தற்போது மாதாவின் சொரூபம் பாதுகாப்பு நலன் கருதி அடைக்கல மாதா ஆலயத்தின் உட்பகுதிக்குள் கொண்டுசென்று வைக்கப்பட்டுள்ளது. குறித்த நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.ibctamil.com/srilanka/80/144564