தமிழ் சிறி

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!

Recommended Posts

Hatton-Church-Religious-preacher-Isolation-Action-Corona-Virus-Alert.jpg

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!

ஹற்றன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா-தரவளைப் பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தின் மத போதகர் உட்பட ஒன்பது பேர் தேவாலயத்துக்குள்ளேயே நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த மதபோதகர் ஒருவருடன் இணைந்து ஆராதனைக் கூட்டம் நடத்தியமை, யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டமை ஆகியவற்றாலேயே குறித்த மதபோதகரும், அவருடன் நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, தமிழகம் திருநெல்வேலியிலிருந்து கடந்த 11ஆம் திகதி பாலசேகர் எனும் மதபோதகர் இலங்கை வந்துள்ளார். அதன் பின்னர் தரவளை தேவாலயத்திலுள்ள மதபோதகர் அவரை ஹற்றனுக்கு அழைத்துவந்துள்ளார்.

12, 13, 14, 15 ஆம் திகதிகளில் தரவளையில் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒருநாள் கூட்டத்தில் சுமார் 60 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர்.

அதன்பின்னர், திருநெல்வேலி போதகரும், இவரும் யாழ்ப்பாணத்துக்குச் சென்று அங்கு 16, 17ஆம் திகதிகளில் ஆராதனைக் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

கொழும்பு வந்து திருநெல்வேலி போதகரை அனுப்பிவிட்டு தரவளைப் பகுதி போதகர், தேவாலயத்துக்கு வந்துள்ளார். அதன்பின்னரும் ஆராதனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தொடர்பாக தகவல்கள் வழங்குமாறு கோரப்பட்டிருந்த போதிலும் அந்த நடைமுறையை குறித்த போதகர் பின்பற்றவில்லை. தன்னை தனிமைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையிலேயே நேற்று முதல் அவரும் அவருடன் தொடர்பைப் பேணிய 8 பேரும் தேவாலயத்திலேயே தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆராதனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

Hatton-Church-Religious-preacher-Isolation-Action-Corona-Virus-Alert-2.jpg

http://athavannews.com/வெளிநாட்டிலிருந்து-வந்-2/

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

கொரோனோ  வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .

Share this post

Link to post
Share on other sites
9 minutes ago, பெருமாள் said:

கொரோனோ  வைரஸை விட இந்த மதம் மாற்றும் கொள்ளைக்கார கூட்டத்திடம் இருந்து தமிழ்ச்சனம் தப்புவதுதான் பெரும்பாடாய் இருக்கப்போவுது .

நாங்கள் மதம் மாற்றாமல் கொள்ளையடிக்கிறோம் அவர்கள் மதம் மாற்றிக் கொள்ளையடிக்கிறார்கள். 

வேறுபாடு பெரிதாக இல்லை 😂

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Kapithan said:

நாங்கள் மதம் மாற்றாமல் கொள்ளையடிக்கிறோம்

எனக்கு விளங்கவில்லை ?

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, பெருமாள் said:

எனக்கு விளங்கவில்லை ?

தம்பி அந்த 10% கமிசனை சொல்லுது...

Share this post

Link to post
Share on other sites

எனக்கு புரிஞ்சுட்டுது. எனக்கும் உதவாமல், ஊருக்கும் உதவாமல் நடுவிலயிருந்து அல்லாடிக்கொண்டு இருக்கும் என்னால எதுவுமே பண்ணமுடியலை எண்டு பொருள்.

Share this post

Link to post
Share on other sites

 • Like 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, vanangaamudi said:

எனக்கு புரிஞ்சுட்டுது. எனக்கும் உதவாமல், ஊருக்கும் உதவாமல் நடுவிலயிருந்து அல்லாடிக்கொண்டு இருக்கும் என்னால எதுவுமே பண்ணமுடியலை எண்டு பொருள்.

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, MEERA said:

தம்பி அந்த 10% கமிசனை சொல்லுது...

சைவர்களும் இந்துக்களும் தட்டில் போடுகின்றனர். சைவ சமயத்திலிருந்தும் இந்து மதத்திலிருந்தி மதம் மாறியோர் கொமிசனாகக் கொடுக்கினம் என்று நினைக்கிறன். ஆனால் ஐயரும் போதகரும் தங்கள் பொக்கற்றில் போடுகின்றனர். இதில் ஒன்றும் வேறுபாடு இல்லையே ? 

10% தான் கண்ணுக்குக் குத்துதென்றால் நீங்களும்  போதகராக வேண்டியதுதானே. மதம் மாறுதல் உங்களுக்கென்ன புதுசா ? இல்லையே ? 😂😂😂😂

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, nunavilan said:

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதணல் தின்றுவிடும்..

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்..

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா..

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா..

கொரோனோ வைரசை விட அதிக உயிர்களை இந்த பூமியில் பறித்த கொடிய வைரஸ் மதவைரஸ்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி

Share this post

Link to post
Share on other sites
6 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதயம் என்பது சதைதான் என்றால் எரிதணல் தின்றுவிடும்..

அன்பின் கருவி இதயம் என்றால் சாவை வென்றுவிடும்..

அன்பின் பாதை சேர்ந்தவனுக்கு முடிவே இல்லையடா..

மனதின் நீளம் எதுவோ அதுவே வாழ்வின் நீளமடா..

கொரோனோ வைரசை விட அதிக உயிர்களை இந்த பூமியில் பறித்தது மதவைரஸ்.. 

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ?🤔

பாவம் புத்தனும் யேசுவும் காந்தியும். 

சக மனிதனை மதிப்பதற்கு மதம் எதற்கு ? 🤔

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
13 minutes ago, Kapithan said:

இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ?🤔

பாவம் புத்தனும் யேசுவும் காந்தியும். 

சக மனிதனை மதிப்பதற்கு மதம் எதற்கு ? 🤔

நான் ஒரு நீச்சல் தடாகத்தின் விளிம்பில் இருந்துகொண்டிருக்கின்றேன்

என் கால்கள் அந்த ஆழமான தொட்டி நீரை அடித்து விளையாடிக் கொண்டிருகின்றன

அங்கே வந்து யாரோ ஒருவர் - என்னைத் தண்ணீரில் தள்ளி விடுகிறார் !

எனக்கு நீச்சல் தெரியாது என்று அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான் !

நான் நீரில் அமிழ்ந்துகொண்டிருக்கின்றேன் . . . .

அப்படி அவருக்குத் தெரிந்திருந்தால்

சிலவேளை என்னைத் தள்ளியிருக்க மாட்டாரோ

மூழ்கும் நேரத்திலும் என் சிந்தனை பலமாய் வேலை செய்கிறது

என் கால்கள் அடி நிலத்தைத் தொட்ட பின் மேலெழுந்து மீண்டு வருகின்றேன்

எனக்குத் தெரியும் ,

என் தலை வெளிப்பட்டு மீண்டும்

நீரில் அமிழும் முன்

உதவி கோரிக்காப்பற்றுங்கள்

என்று கத்தவேண்டும்

ஆனாலும் அந்தக் கணத்தில் நான் மறந்தே போய்விட்டேன்

எந்தக்கடவுளிடம் மன்றாடவேண்டும் என்பதையும்

எந்தநாட்டில் இருக்கின்றேன் என்பதையும்

நான் எந்த மொழியில் உதவி குரல் கொடுக்க வேண்டும் என்பதையும்

Tal Nitzán(இஸ்ரேல்)

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, Maruthankerny said:

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

அது அல்ல விடயம் மருதர்.  கோபப்படுபவர் தனக்குத் தெரிந்த மகா பாரதத்தையும் இராமாயணத்தையும் சொல்கிறார். அதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 

போதகர் மதம் பரப்புவது அவருடைய உரிமை. ஆனால் அவர் தெரிந்தெடுத்த இடம் மிகவும் பிழையானது.. இதே விடயத்தை பள்ளிவாயலருகிலோ அல்லது விகாரைக்கருகிலோ செய்ய முனைவாரா ? நிச்சயமாக இல்லை. 

ஆனால் நல்ல விடயம் என்னவென்றால் இருபகுதியினரும் அமைதியாக இருக்கின்றனர். யாழ் களத்தில் வரும் பல கருத்துக்களைவிட இங்கே கோபம் கொள்பவர் எவ்வளவோ மேல்.😀

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, Kapithan said:

இந்தியாவில் வெள்ளையாகலாம் என்று எண்ணி 
கோடி கணக்கான பெண்கள் பெயர் அண்ட் லவ்ல்லி (Fair & Lovely ) பூசுகிறார்கள் 

ஆனால் வெள்ளைக்காரிகள் இந்தியாவுக்கு வர கூடாது என்று 
யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லையே? 

எனக்கு இதுதான் புரியவில்லை.
உங்கள் மதம்தான் உலகிலேயே சிறந்த மதம் என்றால் அது பெருமைக்கு உரிய விடயம்தானே 
ஏன் மதம் மாற்றுபவனை பார்த்து பதறுகிறீர்கள்? 
எனக்கு இந்த பதற்றத்துக்கான காரணம் புரியவில்லை.

Share this post

Link to post
Share on other sites
59 minutes ago, Maruthankerny said:

இது கேள்வி. 

எல்லாம் உளவியல்தான். நாங்கள் ஏற்கனவே ஒரு பாவப்பட்ட இனம். அழிந்துபோய் நிற்கிறோம். இருக்கிறதும் இல்லாமல் போய்விடுமோ என்கின்ற பதட்டத்தில் வாறவன் போறவன் கூட இருப்பவன் எல்லோருக்கும் ஏச்ச்சுதான். 

என்னைப் பொறுத்தவரை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.....

சைவ சமயத்திற்கு ச்ரியான வளிநடாத்தக்கூடிய தலமைத்துவம் இல்லை. சமயத்தில் காலவோட்டத்தில் ஒட்டிக் கொண்ட குறைபாடுகள் (சாதி, மூட பழக்க வழக்கம் போன்ற...) சமயத்தின் உண்மையான பக்கத்தை மறைத்து போலியான தோற்றத்தை கொடுக்கிறது. இவற்றை எல்லோரும் உணர்ந்து கொண்ட போதும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கின்ற பயத்தில் உள்ளனர். அதாவதுக் வெடித்த  மெல்லிய கண்ணாடிக் குவளையின் நிலையில் எம் மக்கள் உள்ளனர். யார் சிறிய தட்டுத் தட்டினாலும் சமய நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும். இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

சுருக்கமாகச் சொல்லப்போனால் சரியாக வழி நடாத்தக்கூடிய தலைமை இல்லை. அதன் விளைவுதான் இவர்களின் கோபம். 😕

(தேவையேற்படின் காத்திரமான விளக்கத்தை பின்னர் தருகிறேன்.)

Share this post

Link to post
Share on other sites
19 minutes ago, Kapithan said:

இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை என்று சொல்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்டவற்றை கூறி தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் எனில், அங்கு எந்த மாற்றமும் நிகழாது... நிகழ்த்தவும் முடியாது. தட்டிவிட்டு வெளியேறி விடவேண்டியதுதான்.

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, satan said:

சாத்தான்

குறைகூறுவதல்ல என் நோக்கம். பிரசிசனையை அடையாளம் காண்பதும் அதனைத் தீர்த்து வைத்தலும்தான் சரியான தலைமைத்துவம் செய்யும். அதனை தெடர்ச்சியாகச் செய்யுமிடத்து மக்கள் பதற்றப்டவேண்டிய தேவை ஏற்படாது. ஆறுமுக நாவலரின் பின்னர் (சர்ச்சைகளைத் தவிர்த்து), சரியான தலமைத்துவம் சைவர்களுக்கில்லை என்பது பெருங்குறைபாடு. எமது போராட்டத்தில் சைவ சமய ரீதியிதியிலான பங்களிப்பு இன்மையை பெருங் குறைபாடாகப் பார்க்கிறேன். 

சரியான தலைமை எப்போதும் மக்களை ஒன்று சேர்க்குமே தவிர பிரிக்காது. 

அந்தப் பெருங் குறைபாடுதான் எம்மவர்கள் சமய ரீதியாக சாதி அடிப்படையில் பிரதேச வாதமாக பிரிந்துனின்று அடிபடக்  காரணமாகிறது என்று நம்புகிறேன்.

வணங்காமுடியிடமும் மற்றைய கிறீத்துவ எதிர்ப்பாளர்களிடமும் ஏன் இந்த  கிறீத்துவ வெறுப்பு என்று கேட்டிருந்தேன் ?

இதய சுத்தியான பதிலை எதிர்ப்பார்க்கிறேன்.

ஐஆம் வெய்ரிங். 😀

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Kapithan said:

இது கேள்வி. 

எல்லாம் உளவியல்தான். நாங்கள் ஏற்கனவே ஒரு பாவப்பட்ட இனம். அழிந்துபோய் நிற்கிறோம். இருக்கிறதும் இல்லாமல் போய்விடுமோ என்கின்ற பதட்டத்தில் வாறவன் போறவன் கூட இருப்பவன் எல்லோருக்கும் ஏச்ச்சுதான். 

என்னைப் பொறுத்தவரை நான் இவ்வாறுதான் பார்க்கிறேன்.....

சைவ சமயத்திற்கு ச்ரியான வளிநடாத்தக்கூடிய தலமைத்துவம் இல்லை. சமயத்தில் காலவோட்டத்தில் ஒட்டிக் கொண்ட குறைபாடுகள் (சாதி, மூட பழக்க வழக்கம் போன்ற...) சமயத்தின் உண்மையான பக்கத்தை மறைத்து போலியான தோற்றத்தை கொடுக்கிறது. இவற்றை எல்லோரும் உணர்ந்து கொண்ட போதும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்கின்ற பயத்தில் உள்ளனர். அதாவதுக் வெடித்த  மெல்லிய கண்ணாடிக் குவளையின் நிலையில் எம் மக்கள் உள்ளனர். யார் சிறிய தட்டுத் தட்டினாலும் சமய நம்பிக்கைகள் கேள்விக்குள்ளாகும். இதனைத் தவிர்க்கவே நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் யாரும் அருகில் வந்தால் உடனே தற்காப்பு நிலையெடுத்து நீ மட்டும் சரியா? நீ இன்னாளின் மகன்தானே. உன்னைப்ப்ற்றி எங்களுக்குத் தெரியாதா ? உன்ர குலம் என்ன கோத்திரம் என்ன? என்னை கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதியிருக்கு ?  போன்ற ஆயுதங்களால் மல்ரி பரல் அடியடிச்சு கேள்வி கேட்க வந்தவனை அடிச்சுத் துரத்துகின்றனர். 

சுருக்கமாகச் சொல்லப்போனால் சரியாக வழி நடாத்தக்கூடிய தலைமை இல்லை. அதன் விளைவுதான் இவர்களின் கோபம். 😕

(தேவையேற்படின் காத்திரமான விளக்கத்தை பின்னர் தருகிறேன்.)

1 hour ago, satan said:

யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லை என்று சொல்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிட்டவற்றை கூறி தங்களை மறைத்துக் கொள்கிறார்கள் எனில், அங்கு எந்த மாற்றமும் நிகழாது... நிகழ்த்தவும் முடியாது. தட்டிவிட்டு வெளியேறி விடவேண்டியதுதான்.

பச்சை இல்லை குத்துவத்துக்கு ..........
என்னை பொறுத்தவரை சாக்கடை நாற தொடங்கி விட்டது 
இது நான் பல முறை இங்கே எழுதியது .... அடுத்த சந்ததி எம்மைவிட 
அறிவு மிகுந்தே இருக்கும் அவர்களிடம் கேள்விகள் இருக்கும் எம்மிடம் பதில் 
இல்லாதுபோனால் எமது மதம் மெல்ல மெல்ல அழிந்துபோகும் யாராலும் தடுக்க முடியாது என்று 

Share this post

Link to post
Share on other sites
24 minutes ago, Maruthankerny said:

பச்சை இல்லை குத்துவத்துக்கு ..........
என்னை பொறுத்தவரை சாக்கடை நாற தொடங்கி விட்டது 
இது நான் பல முறை இங்கே எழுதியது .... அடுத்த சந்ததி எம்மைவிட 
அறிவு மிகுந்தே இருக்கும் அவர்களிடம் கேள்விகள் இருக்கும் எம்மிடம் பதில் 
இல்லாதுபோனால் எமது மதம் மெல்ல மெல்ல அழிந்துபோகும் யாராலும் தடுக்க முடியாது என்று 

மேற்கில் கிறித்துவத்திற்கும் இதே நிலைதான். ஆனால் அவர்கள் புத்திசாலிகள். சமயத்தை ஒரு நிறுவனத்திற்குரிய ஒழுங்குகளுடன் நடாத்துவதால் ஆய்வுகளினூடாக கண்டறியப்படுபவற்றை நடைமுறைப்படுத்த ஆயத்தமாக உள்ளனர். 

மாற்றங்களுக்கு சமய நிறுவனங்கள் றெடி. அவர்களுக்குத் தெரியும் இல்லாவிட்டால் என்ன நடக்குமென்று.

நாம்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும்  முடியாமல் அல்லல்படுகிறோம்☹️

Share this post

Link to post
Share on other sites
15 hours ago, Kapithan said:

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

நீங்கள் ,மொட்டந்தலைக்கும்,முழந்தாளுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்...இங்கு கிறிஸ்தவர்களாகிய கத்தோலிக்கர்களை ஒருத்தரும் வெறுக்கவில்லை ...அவர்கள் தான் போராட்டத்தில் உதவியவர்கள் ...அதில் தனியாக பாராட்டுவதற்கு என்ன இருக்கு?...அவர்களும் தமிழர்கள் தானே ...ஐயர்மார் பிராமண இனம் சார்ந்து போராட்டத்திற்கு உதவாமல் விட்டு இருக்கலாம்( ...மேலும் இவர்கள்  சொன்னால் யார் கேட்க்கிறாற்கள் )...ஆனால் எத்தனையோ பிராமண இளைஞ்ர்கள் போராட்டத்தில் பங்கு பற்றி இருக்கிறார்கள் ...உயிரையும் கொடுத்து இருக்கிறார்கள் 
 
13 hours ago, Maruthankerny said:

மகாபாரத்திலும் ராமாயணத்திலும் இருப்பது என்ன பைபிளில் இருக்கிறது?
இவருடைய வாதம் மிகவும் தவறானது 
இவர் மூன்றில் ஒன்றைக்கூட வாசிக்கவில்லை 
மகாபாரதம் ராமாயணம் இரண்டிலும் பெண்களுக்குக்காக சண்டை போடுவதும் 
பெண்களுடன் பல ஆண்கள் படுப்பதும்  இன்னொருவன் மனைவியை இன்னொருவன் 
தூக்குவதும் என்ற தரம் கேட்ட விடயம்தான் இருக்கிறது.

மருதர் ,நான் உங்கள் அளவுக்கு இவைகளை கரைத்து குடிக்கவில்லை ...ஆனால் பாரதம்,ராமாயணம்  போன்றவற்றை எப்படி ஒரு மனிதன் /சமூகம் பின்பற்ற கூடாது அல்லது கடைப்பிடித்தால் ஏற்படும் தீமைகளை இந்த இரு இரிகாசங்கள் படிப்பதன்  மூலம் பாடம் படித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் 

12 hours ago, Maruthankerny said:

இந்தியாவில் வெள்ளையாகலாம் என்று எண்ணி 
கோடி கணக்கான பெண்கள் பெயர் அண்ட் லவ்ல்லி (Fair & Lovely ) பூசுகிறார்கள் 

ஆனால் வெள்ளைக்காரிகள் இந்தியாவுக்கு வர கூடாது என்று 
யாரும் ஆர்ப்பாட்டம் செய்வதில்லையே? 

எனக்கு இதுதான் புரியவில்லை.
உங்கள் மதம்தான் உலகிலேயே சிறந்த மதம் என்றால் அது பெருமைக்கு உரிய விடயம்தானே 
ஏன் மதம் மாற்றுபவனை பார்த்து பதறுகிறீர்கள்? 
எனக்கு இந்த பதற்றத்துக்கான காரணம் புரியவில்லை.

ஏன் அவர்களை பார்த்து பதறுகிறார்கள் என்றால் அந்த மக்களது இயலாமையை ,வறுமையை ,சூழ்நிலையை பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்பதால் தான் ...இது தான் என் மதம் ,இதில் இன்னன்ன நல்ல விடயங்கள் சொல்லி இருக்கு ...என்னுடைய மதத்திற்கு வாறீ யா என்றால் யார் போகப் போறார்கள் 

 • Like 2

Share this post

Link to post
Share on other sites
9 hours ago, Kapithan said:

மேற்கில் கிறித்துவத்திற்கும் இதே நிலைதான். ஆனால் அவர்கள் புத்திசாலிகள். சமயத்தை ஒரு நிறுவனத்திற்குரிய ஒழுங்குகளுடன் நடாத்துவதால் ஆய்வுகளினூடாக கண்டறியப்படுபவற்றை நடைமுறைப்படுத்த ஆயத்தமாக உள்ளனர். 

மாற்றங்களுக்கு சமய நிறுவனங்கள் றெடி. அவர்களுக்குத் தெரியும் இல்லாவிட்டால் என்ன நடக்குமென்று.

நாம்தான் மெல்லவும் முடியாமல் விழுங்கவும்  முடியாமல் அல்லல்படுகிறோம்☹️

இது தான் அந்த ஆய்வுகளின் ஊடாக

16 hours ago, Kapithan said:

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

முசுலிம்கள் மாதிரி போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இராமல்  அல்லது  போராட்டத்திற்கெதிராக இயங்காதபடியாலா ?🤥

போராட்டத்தின்போது தோளோடு தோள் நின்றபடியாலோ ? 🤔

ஈழப் போராட்டத்தின்போது சகல மக்களுக்கும் சாதி சமயம் பிரதேசம் பாராமல் உழைத்தபடியாலோ ? ☹️

போராட்டத்தில் சைவ சமய அமைப்புக்கள் எதுவுமே பங்கெடுக்காதபோது இவர்கள் சகலவிதமான துன்பங்களையும் மக்களோடு மக்களாக நின்று எதிர்கொண்ட காரணத்திற்காகவா இந்த வெறுப்பு ?🤧

போராட்டத்திற்காக சிறை சென்று, உயிர் கொடுத்து, காணாமல் போய் என போராளிகளுக்கு ஈடாக களத்தில் நின்றதனாலா இந்த வெறுப்பு ? 😂

சமயம் சாராது இனம் சார்ந்து நின்ற காரணத்தால் இந்த வெறுப்பு ஏற்பட்டதா ? 😂😂😂

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் சாமி .. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும்...😡

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

Share this post

Link to post
Share on other sites
23 minutes ago, MEERA said:

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

இலங்கையில் நீண்டகாலமாகவே முஸ்லிம்-தமிழர்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத தமிழர்கள் மதரீதியாக பிளவுபடுத்தப்பட்டுள்ள சூழலில் அண்மைக் காலமாக இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டது பலருக்கும் தெரிந்த விடயமே. 

அவை இயல்பாக நிகழ்ந்தனவா அல்லது திட்டமிடப்பட்டு தூண்டி விடப்பட்டனவா என்பது இலங்கைத் தமிழர்கள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டிய கேள்வியாக உள்ளது. 

இதன் பின்புலமாக வெளிச் சக்திகள் இருந்திருக்கலாம் அல்லது எமது மூடத்தனமான, உணர்ச்சிவசப்பட்ட செயற்பாடுகள் காரணமாக இருந்திருக்கலாம். காரணிகள் எதுவாக இருந்தாலும் இறுதியில் எமது அறியாமையே தமிழ் மக்களுக்கு கொரானா வைரஸை விட அதிக அழிவை எதிர் காலத்தில் ஏற்படுத்தலாம். 

அதேநேரத்தில் எந்த மதப்பிரிவினராக இருந்தாலும் ஒரு விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறும்போதும் உணர்ச்சிவசப்படாமல் மிக பண்பாடாகவும் ஒருவரை ஒருவர் தூற்றாமலும் தவறுகளை இனங்கண்டு திருத்த முற்படுவதே தமிழ் மக்களுக்கு  நன்மை தரும் செயலாக அமையும். 

தமிழ்ச் சமூகம் என்றும் நின்று நிதானித்து செய்திகளை ஆராய்ந்து தங்களுக்கிடையில் ஆரோக்கியமான சமூக ஊடாட்டங்களை முன்னெடுத்துச் செல்லவேண்டும். 

இதுபோன்ற ஒரு சூழ்நிலைதான் நம் தொப்புள் கொடி உறவாக நாம் கொண்டாடும் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. அங்கு மதப் பிரிவினை போதாதென்று சாதியென்ற மிகப் பெரும் அழிவு ஆயுதமும் பயன்படுத்தப்படுகிறது. வடமாநிலங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மதவெறியர்களால் முன்னெடுக்கப்பட்ட படுகொலைத் தாக்குதல்களும், தொடர்ச்சியாக இந்தியாவின் பல பாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மதவெறித் தாக்குதல்களையும் இங்கு குறிப்பிடலாம். 

அரசியல்வாதிகளும் அரசும் ஓரளவுக்குத்தான் இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான பிரச்சனையில் தலையிடுவார்கள். காரணம் இவ்வாறான பிரச்சனைகளில் தலையிடுவது தங்கள் தலைக்கே கத்தியாக வரும் என்பதை அவர்கள் அறிவார்கள் அதனால் அதில் தங்களுக்கு எதாவது அரசியல் இலாபம் வருமென்றால், அடுத்த தேர்தலில் அதனைத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிந்தால் அதற்கு ஏற்றவகையில் தலையிடுவார்கள். அவர்களுக்காகத்தான் நீங்களேயன்றி உங்களுக்காக அவர்கள் இல்லை என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். தனி மனிதர்களின் (அரசியல்வாதிகள், சுயநல மதத் தலைவர்கள்) இலாபங்களுக்காக  தமிழர்களிடையே மோதல் ஏற்பட நீங்களும் காரணமாக இருந்து விடாதீர்கள். 

தமிழ்ச் சமூகம் அழிவடைந்ததற்கு 1008 உதாரணங்கள் அனுபவங்களுடன் இருக்கும்போது அவற்றை சீர்தூக்கிப் பார்த்துப் பாடம் கற்றுக் கொள்ளாது,  எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையிலான செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் மிகையாக இருக்கும் சூழல் மாற்றப்பட வேண்டும். 

இது கடந்த காலங்களில் எமது சமூகத்துக்கு ஒரு நோயாக இருந்ததனால்தான்  நாம் பெரும் அழிவுகளைச் சந்தித்தோம், சந்தித்தும் வருகிறோம் என்பதை இந்த சூழலில் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இனியாவது கொஞ்சம் சிந்திப்போம். சரி செய்வோம்.

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, கிருபன் said:

நான் மேற்கோள் காட்டிய விடயம், குறித்த நபரால் பதிவு செய்யப்பட்டு 16 மணித்தியாலங்களையும் கடந்தபின்பும் மெளனமாக இருந்துவிட்டு இப்போது நான் எழுதியதை மட்டும் மேற்கோள் காட்டுவது சரியா??

Share this post

Link to post
Share on other sites
41 minutes ago, MEERA said:

இது தான் அந்த ஆய்வுகளின் ஊடாக

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

முடியாது.. போராட்டத்தில் அதிகமாக உயிரிழந்தது எங்க ஊர்க்காறனுங்கதான்.

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

 • Topics

 • Posts

  • லண்டனில் தவிக்கும் தமிழர்கள்: விமான சேவை எப்போது? மின்னம்பலம்   சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என லண்டன் வாழ் தமிழர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் உலக அளவில் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பமுடியாமல் தவித்தனர். இதைத் தொடர்ந்து, மத்திய அரசு அவர்களை மீட்பதற்காக 'வந்தேபாரத்' எனும் திட்டத்தின் கீழ் சிறப்பு மீட்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் தாயகம் திரும்ப வழிவகை செய்துள்ளது. அந்த வகையில் லண்டனில் உள்ள தமிழர்களை மீட்பதற்காக பேஸ் ஒன்றில் கடந்த மே 14ஆம் தேதி சென்னைக்குச் சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக சுமார் 300 பேர் வரை தாயகம் வந்தடைந்தனர்.   லண்டனில் இருந்து தமிழகம் திரும்ப இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் முறையாகப் பதிவு செய்துள்ள நிலையில், அவர்களை மீட்பதற்காக இரண்டாம் கட்டம் மற்றும் மூன்றாம் கட்டமாக இயக்கப்பட வேண்டிய விமானங்கள் இயக்கப்படவில்லை. திடீரென மீட்பு விமான சேவை நிறுத்தப்பட்டதால் அங்கு வசிக்கும் தமிழர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும், குறிப்பாக தமிழகத்தை அடுத்துள்ள அண்டை மாநிலங்களுக்கும் லண்டனில் இருந்து இயக்கப்படும் மீட்பு விமானங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பயணிக்க முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.   இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு லண்டனில் இருந்து மீட்பு விமானங்கள் இயக்கப்படுவதை போல் தமிழகத்துக்கும் இயக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு லண்டன் தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்தவண்ணமுள்ளனர். இங்கிலாந்தில் சிக்கித் தவிக்கும் 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் தாயகம் திரும்ப ஏராளமான மனுக்களை எழுதியுள்ளனர். மேலும் லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷன்(Indian High Commission) அலுவலகம் முன்பும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்தனர். ஆனால் எந்த பதிலும் வரவில்லை. சிக்கித் தவிப்பவர்களில் பெரும்பாலோர் சுற்றுலாப் பயணிகளைத் தவிர, மருத்துவ சிகிச்சைக்காகவோ அல்லது தொழில் ரீதியாகவோ அங்கு சென்ற மாணவர்கள் மற்றும் மக்கள். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுடன் தொலைபேசியில் பேசிய வார்விக் நகரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், "மதுரையில் வசிக்கும் எனது தந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு வாழ இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளன என்று மருத்துவர்கள் சொன்னார்கள். என் அம்மா உதவியற்றவராக இருக்கிறார். நான் இங்கே மாட்டிக்கொண்டேன். நாங்கள் திரும்பப் பெற நிறைய வழிகளை முயற்சி செய்தோம், ஆனால் எதுவும் செயல்படவில்லை" என வேதனை தெரிவித்துள்ளார். மேலும், இங்கிலாந்தில் உள்ள தங்கள் குடும்பத்தினரைப் பார்க்கச் சென்றவர்களால் தாங்கள் வழக்கமாக வாங்கும் மருந்துகளை வாங்க முடியவில்லை எனக் கூறுகின்றனர். தெற்கு ஹாம்ப்டனைச் சேர்ந்த 28 வயதான கசால், "என் தந்தையும் தாயும் என்னைப் பார்க்க வந்தார்கள். இருவரும் நீரிழிவு நோயாளிகள், இந்திய மருந்துகளின் அடிப்படையில் மருந்துகளைப் பெற முடியவில்லை. தற்காலிகமாக நாங்கள் இங்கு ஒரு மருத்துவரைச் சந்தித்தோம். ஆனால், அவர்கள் 14 நாட்களுக்கு மேல் மருந்துகள் கொடுக்க தயங்கினர். இருவரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் நாளின் ஒவ்வொரு நிமிடமும் நான் அச்சத்தில் இருக்கிறேன். தமிழக அரசு ஏதாவது செய்ய வேண்டும்" என்று கூறினார். அண்மையில் லண்டன் வாழ் தமிழர்கள் ஆன்லைன் மூலம் தங்கள் மனுக்களை தொடர்ச்சியாக அனுப்பியும், வீடியோ வடிவில் கோரிக்கை விடுத்தும் தாங்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். லண்டனைச் சேர்ந்த சியாமளா என்பவர் வெளியிட்ட வீடியோ பதிவில், "இங்கே இதய நோயாளிகள் இருக்கிறார்கள், சர்க்கரை நோயாளிகள் இருக்கிறார்கள். அதே போல ஊரிலும் அப்பா, அம்மா என ரத்த உறவுகளும் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்கள். எங்களுக்கு அவர்களை சென்று பார்க்க வேண்டும். இங்கே ஒரு மீட்பு விமானமும் இல்லை. ஆனால், கொச்சின், விஜயவாடா, டெல்லி, மும்பை என மற்ற நகரங்களுக்கு விமானம் இருக்கிறது. எங்களுக்கு மட்டுமில்லை. இங்கிலாந்தில் இருக்கும் இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு சென்று கொண்டிருக்கும்போது, தமிழர்கள் மட்டும் இங்கே மாட்டிக்கொண்டுள்ளோம். அது எந்த விதத்தில் சரி என்று எங்களுக்கு தெரியவில்லை. சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் என்பதை நாங்கள் உணர்கிறோம். எங்களுக்கும் பொறுப்புணர்வு இருக்கிறது. நாங்கள் யாரும் சென்னை வந்தவுடன் தனிமைப்படுத்தப்படாமல் வெளியே செல்வதற்கு தயாராக இல்லை. எங்களுக்கு ஒரே ஒரு மீட்பு விமானம் மட்டும் கொடுங்கள்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார். லண்டனைச் சேர்ந்த கிருஷ்ணா வெளியிட்ட பதிவில், "இந்திய தூதரகம் சென்னைக்கு விமான சேவை துவங்கினால் மட்டுமே எங்களை வெளியேற்றுவதைக் குறித்து ஆலோசிக்க முடியும் என கூறிவிட்டது. அண்டை மாநிலங்களுக்கு செல்வதற்கும் அனுமதியளிக்கவில்லை. எப்போது ஊர் திரும்புவோம் என தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம். எங்களை சீக்கிரம் இங்கிருந்து வெளியேற்ற உதவி செய்யுங்கள். நன்றி" எனக் கூறியுள்ளார்   https://minnambalam.com/public/2020/06/05/9/tamil-people-in-london-waiting-to-reach-their-home
  • தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.! Last updated Jun 4, 2020 தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் சிறிலங்கா காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி (சயனைட்) மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார். யாழ் மண்ணின் உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் அவர்கள் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவர்.மக்கள் மீதான சிங்கள ஆட்சியாயர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச்செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை. தியாகி பொன்.சிவகுமாரனின் போராட்டச் செயற்பாடுகள் சிலவற்றை மீட்டுப்பார்ப்பதன் மூலம், தமிழ் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விடுதலைக்கான பேரெழுச்சியை ஏற்படுத்திய அம்மாவீரனின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை வென்றெடுக்கப்பட்டு, அடிமைத் தழைகள் நீங்கிய வாழ்வமைய வேண்டுமென்பதற்காக போராடிய சிவகுமாரனின் இலட்சியத்தாகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும். புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வந்திருக்கின்றன. கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வந்திருக்கின்றன. (இன்றைய காலத்தில்கூட பல பாடசாலைகளும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளும் இராணுவ முகாம்களாக இருப்பதைக் கூற முடியும். தமிழ் மாணவர்களின் கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம் ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டதோடு நிகழ்ந்தது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு (செப் 1970). இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார். தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை புரிந்து வந்த யாழ்-நகரமேயர் அல்பிரட் துரையப்பா மீதும் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டார் (பெப் 1971). அம்முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. துரையப்பா மீதான தாக்குதல் காரணமாக கொலை முயற்சிக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டுகள் கொடுமையான துன்றுத்தல்களுடன்கூடிய சிறைவாழ்க்கையின் பின்னர், தனது 23வது வயதில் விடுதலையானார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மிகவும் உறுதியோடு போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தார். மூன்று ஆண்டுச் சிறை வாழ்க்கையின் பட்டறிவு மூலம் போராட்டம் தொடர்பான பல நடைமுறை யதார்த்தங்களை சிவகுமாரன் உணர்ந்து கொண்டார். போராட்டச் செயற்பாடுகள் தொடர்பான இரகசியங்களை வரவழைப்பதற்காக சிங்களப் படைகளும் சிறிலங்கா காவல்துறையும் போராளிகள் மீது கோரமான சித்திரவதைகளை மேற்கொள்ளும் போது உண்மைகள் வெளிப்பட நேர்ந்தால் போராட்டத்திற்கு உதவுகின்ற மக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும், போராட்டத்தின் இலக்கு பாதிக்கப்பட்டு பின்னடைவு ஏற்படும், அத்தோடு போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடும் ஆகியனவே சிறை வாழ்க்கை மூலம் சிவகுமாரன் பட்டறிந்த யதார்த்தம். எனவே, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடும் சூழல் ஏற்படின் சயனைற் உட்கொண்டு உயிரைப் போக்கிக்கொள்வதன் மூலமே போராட்டத்தை முன்னகர்த்த முடியுமென்ற முடிவை எடுத்தார். போராட்ட முறைமையென்பது கொள்கைகளை முன்னிறுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழியேயன்றி, போராட்ட முறைமையே கொள்கையாக வரித்துக்கொள்ள முடியாதென்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார். எனவே,போராட்ட முறைமைகள் காலத்திற்கும் சூழலுக்குமேற்ப மாற்றமடைய வேண்டுமென்பதில் ஆழமானதும் தெளிவானதுமான கருத்தைக் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களையும் பெரிதும் மதித்து ஏற்றுக்கொண்டார். சிறையில் இருந்த காலங்களில் உணவு மறுப்புப் போராட்டங்களை முன்னெடுத்தார். அத்தோடு தமிழ் மக்களுக்கெதிரான சிங்களத்தின் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்குமாக மட்டும் சிவகுமாரன் போராடவில்லை. தமிழ்ச் சமூகத்திற்குள் புதைந்திருந்த சமூக அடுக்குகளைப் பொசுக்கும் முயற்சிகளிலும் அவர் பின்நிற்கவில்லை. சாதியம், பெண் அடக்குமுறைப்போக்கு, மணக்கொடை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தார். சிறிமா அரசானது, 1974 ஜனவரியில் யாழப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட 4வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குழப்பும் கீழ்த்தனமான நோக்கில் பல இடையூறுகளை விளைவித்தது. ஆனாலும் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் உறுதியான செயற்பாட்டால் மாநாடு பெரும் மக்கள் எழுச்சியுடன் நடந்தேறியது. இவ் வெற்றியின் பின்னணியில் சிவகுமாரன் மிகவும் உத்வேகத்துடன் செயற்பட்டார் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. பின்னர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மீது சிங்களக் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சிறிலங்கா காவல்துறையின் இந்த மிலேச்சத்தனமான படுகொலையை நேரில் கண்ட சிவகுமாரன் கொதித்தெழுந்தார். அப்படுகொலைக்கு உடந்தையாகவிருந்த உதவிக் காவல் அதிகாரி சந்திரசேகராவைப் பழிவாங்குவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். சிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர். தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். வீரச்சாவால் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்ட அம்மாவீரனின் நாமம் தமிழீழத்திலும் தமிழர்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் விடியலின் பெயரை உச்சரித்தபடி நின்று நிலைக்கும். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”   https://www.thaarakam.com/news/135325
  • வடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க  நடவடிக்கை - ஆளுநர் வடமாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.  நேற்று முன்தினம் ஆளுநர் செயகத்தின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற சந்திப்பின் போதே வடமாகாண ஆளுநர் மேற்கண்ட வலியுறுத்தலைச் செய்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வட மாகாண பொலிஸார் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவற்காக அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த அளப்பரிய சேவைகளை பாராட்டுக்கின்றேன்.  தற்போது வடக்கு மாகாணத்தில் சட்டத்திற்கு விரோதமான முறையில் சமுதாயத்தைப் பாதிக்கின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.  குறிப்பாக,  சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை, களவுகள் மற்றும் வாள்வெட்டு, போதைப்பொருள் துஷ்பிரயோகம், வீதி விபத்துக்கள் ஆகியன தொடர்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. முக்கியமான மணல் அகழ்வை முறையான சட்டங்களுக்கு உட்படுத்தி அதற்கான  அனுமதிகளை வழங்கி தேவைப்படும் பட்சத்தில் மட்டும் மணல் அகழ்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது. மணல் அகழ்வு வியாபாரம் அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தை பாதிக்கின்ற வகையில் களவு, வாள் வெட்டு, போதைப்பொருள் விற்பனை போன்ற விடயங்களின் பின்னணிகள் உள்ளிட்ட அனைத்துக் காரணங்களையும் கண்டறிந்து அவற்றை தடைசெய்வதோடு நிலைமகளை முற்றாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.  வீதிவிபத்துக்கள் தொடரும் நிலையில் அதற்கான காரணற்களை முழுமையாக ஆராய்ந்து போக்குவரத்துச் சட்டங்களை இறுக்கமாக பின்பற்றுவதோடு  சட்டத்தை மீறுவோருக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும். இதுபோன்ற சட்டவிரோதமான விடங்களை தடுப்பதன் ஊடாகவே எமது மாணவர்களையும், இளம் சந்ததியினரையும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் நேரிய முன்னேற்றப்பாதையொன்றில் இட்டுச் செல்லமுடியும். அச்செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக கிராம அலுவலர்கள் முதல் மாவட்ட அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாருக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அதன் மூலமே எமது சமுதாயத்தை கண்ணியமுள்ள ஒழுக்கமான சமுதாயமாக முன்னேற்றம்மிக்கதாக மாற்றமுடியும் என்பதை கருத்திற்கொள்ள வேண்டிடும்.   மிக முக்கியமாக பாடசாலைகளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.  அத்துடன் பாடசாலை மாணவர்களுக்காக பாடசாலை கால அட்டவணையையும், அரச மற்றும் தனியார் பேருந்துக்களின் கால அட்டவணையையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய கால அட்டவணையை தயார் செய்து நடைமுறைப்படுத்த போக்குவரத்துத் அதிகாரசபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமுதாய நலனில் அக்கறை கொள்ளவேண்டிய மாணவர்களையும் இளைஞர் யுவதிகளையும் உருவாக்க திணைக்களங்கள் தங்களுக்கான அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தவேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது என்றார்,   வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், விசேட பொலிஸ் செயலணியின் உறுப்பினர்கள், மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபர்கள், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள், உள்ளுர் அதிகாரசபை ஆணையாளர், கல்வித்திணைக்கள செயலாளர், உள்ளுர் அதிகாரசபை செயலாளர், போக்குவரத்துத் அதிகாரசபை தலைவர் மற்றும் செயலாளர், ஆளுநரின் செயலாளர் மற்றும் உதவிச்செயலாளர், ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.   https://www.virakesari.lk/article/83407
  • இங்கு விற்கின்றார்கள், ஒரு வெடுக்கும் இல்லை; சிலைவேளை இதில் பலவகை இனங்கள் இருக்கலாம்