தமிழ் சிறி

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!

Recommended Posts

1 minute ago, MEERA said:

நான் மேற்கோள் காட்டிய விடயம், குறித்த நபரால் பதிவு செய்யப்பட்டு 16 மணித்தியாலங்களையும் கடந்தபின்பும் மெளனமாக இருந்துவிட்டு இப்போது நான் எழுதியதை மட்டும் மேற்கோள் காட்டுவது சரியா??

கபித்தான் கேள்வி மட்டும்தான் கேட்பார் என்பதால் அவர் என்ன எழுதுகின்றார் என்று தேடி வாசிப்பதில்லை😜

ஆனால் போராட்டத்தில் இணைந்து போராடியவர்கள் சாதி, பிரதேசம், மத என்று பிரிந்து போராடப்போகவில்லை. அதில் சைவர்கள்தான் அதிகம் உயிரிழந்தது என்பது சைவர்கள் தமிழர்களில் அதிகம் என்பதால்தானே. இதில் சுட்டிக்காட்ட என்ன அவசியம்? 

சமூக, சாதி, சமய, பிரதேச பிளவுகளை இயக்கத்திற்குள் இல்லாமல் செய்ய புலிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் கருணா தனது பிரிவுக்கு பிரதேச பாகுபாடு என்ற முத்திரை குத்தியதோடு ஒரு அடியை ஏற்படுத்தியது. அது போல இப்போது மத ரீதியாக அடிபடுவது தமது உயிர்களை போராட்டத்திற்குக் கொடுத்த பல போராளிகளின் வீர மரணங்களை கொச்சைப்படுத்தும் அல்லவா?

யாழில் செமியாக்குணம் பலருக்கு வந்துவிட்டது. உங்களுக்குமா மீரா?

 • Like 3

Share this post

Link to post
Share on other sites
24 minutes ago, கிருபன் said:

நன்றி கிருபன்.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ரதி said:

நீங்கள் ,மொட்டந்தலைக்கும்,முழந்தாளுக்கும் முடிச்சு போடுகிறீர்கள்...இங்கு கிறிஸ்தவர்களாகிய கத்தோலிக்கர்களை ஒருத்தரும் வெறுக்கவில்லை ...அவர்கள் தான் போராட்டத்தில் உதவியவர்கள் ...அதில் தனியாக பாராட்டுவதற்கு என்ன இருக்கு?...அவர்களும் தமிழர்கள் தானே ...ஐயர்மார் பிராமண இனம் சார்ந்து போராட்டத்திற்கு உதவாமல் விட்டு இருக்கலாம்( ...மேலும் இவர்கள்  சொன்னால் யார் கேட்க்கிறாற்கள் )...ஆனால் எத்தனையோ பிராமண இளைஞ்ர்கள் போராட்டத்தில் பங்கு பற்றி இருக்கிறார்கள் ...உயிரையும் கொடுத்து இருக்கிறார்கள் 
 
ஏன் அவர்களை பார்த்து பதறுகிறார்கள் என்றால் அந்த மக்களது இயலாமையை ,வறுமையை ,சூழ்நிலையை பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்பதால் தான் ...இது தான் என் மதம் ,இதில் இன்னன்ன நல்ல விடயங்கள் சொல்லி இருக்கு ...என்னுடைய மதத்திற்கு வாறீ யா என்றால் யார் போகப் போறார்கள் 

1) நான் வலது கையை வெறுக்கவில்லை இடதுகையைத்தான் வெறுக்கிறேன் 😂

அம்மா தாயே , போதும் உங்கள் விளக்கம். உடம்பு புல்லரிக்குது.🤥

பிராமணரைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். இன்ன சாதியில் இத்தனைபேர் போராட்டத்தில் பங்களிப்புச் செய்திருந்தனர் என புள்ளிவிபரமே தருவீர்கள் போல. 😀

என்னுடைய கேள்வி சோ சிம்பிள். ஏன் இத்தனை வெறுப்பு கிறீத்துவத்தின் மீது ?

நோ ஆண்ஸ்ச ? தற்ஸ் பைன். 🙂

நோ குளப்புறது 😅. ஓகே 👍

2) மக்கள் இயலாமையால், வறுமை சூழ்நிலையைப் பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்கிறீர்கள். கோடி புண்ணியம் கண்டுபிடித்துச் சொன்னதற்கு. 

இதுதான் பிரச்சனை என்றால் அந்தச் சூழலை மாற்றுங்கோ. இதைத்தானே திரும்பத் திரும்பத் திரும்ப கூ......றுகிறோம்.

அம்மக்களின் பலவீனத்தை பயன்படுத்துகின்றனர் என்றால் அந்த மக்களை பலப்படுத்துங்கோ. பிரச்சனை முடிந்தது.  👍 குட் லக். 👏

1 hour ago, MEERA said:

இது தான் அந்த ஆய்வுகளின் ஊடாக

போராட்டத்தில் அதிகம் உயிரிழந்தது சைவர்களே! 

எனது கேள்வி "ஏன் கிறீத்துவத்தின் மீது இத்துணை வெறுப்பு ?"

எந்த சாதியினர், எந்த ஊரவன் அதிகம் போராடினான் என்று பதில் தராதேயுங்கோ மீரா. ஓகே👍

Share this post

Link to post
Share on other sites
40 minutes ago, கிருபன் said:

கபித்தான் கேள்வி மட்டும்தான் கேட்பார் என்பதால் அவர் என்ன எழுதுகின்றார் என்று தேடி வாசிப்பதில்லை😜

ஆனால் போராட்டத்தில் இணைந்து போராடியவர்கள் சாதி, பிரதேசம், மத என்று பிரிந்து போராடப்போகவில்லை. அதில் சைவர்கள்தான் அதிகம் உயிரிழந்தது என்பது சைவர்கள் தமிழர்களில் அதிகம் என்பதால்தானே. இதில் சுட்டிக்காட்ட என்ன அவசியம்? 

சமூக, சாதி, சமய, பிரதேச பிளவுகளை இயக்கத்திற்குள் இல்லாமல் செய்ய புலிகள் எடுத்த முயற்சிகள் எல்லாம் கருணா தனது பிரிவுக்கு பிரதேச பாகுபாடு என்ற முத்திரை குத்தியதோடு ஒரு அடியை ஏற்படுத்தியது. அது போல இப்போது மத ரீதியாக அடிபடுவது தமது உயிர்களை போராட்டத்திற்குக் கொடுத்த பல போராளிகளின் வீர மரணங்களை கொச்சைப்படுத்தும் அல்லவா?

யாழில் செமியாக்குணம் பலருக்கு வந்துவிட்டது. உங்களுக்குமா மீரா?

கிருபன்,  என் கேள்விகள் மீது உங்களுக்கு இத்தனை கோபமா ?😀

கிறீத்துவத்தின் மீது ஏன் இத்துணை வெறுப்பு என்று நீங்கள்  கேட்டிருந்தால் நான் கேட்டிருக்கவேண்டிய தேவை வந்திராது . 

உங்களைமட்டும் ஏன் விட்டுவைப்பான். உங்களிடமும் ஒரு கேள்வி 😂

கிறீத்துவர்கள் சமயத்தின்பால் தங்களை இனம் காட்டாது இனத்தின்பால் இனங்காட்டும்போது ஏன் பலர் (யார் அவர்கள் என கேட்கப்படாது 😉) அவர்களை சமயத்தின்பால் இனம் காண்கின்றனர் ? 🤔

ஒருவன் தன்னை தமிழன் என்று கூறும்போது இல்லை நீ கிறீத்துவன் என பிரித்துக் கூறுவது ஏன் ? (மாட்டினீர்களா 😂)

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, Kapithan said:

முதலில் நான் மதங்களில் கடவுளில் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் மதநம்பிக்கை உள்ளவர்களை, அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் போதிலும்,  கேள்விக்குட்படுத்தினாலும் அவர்கள் தாங்களாகவே பகுத்துணர்ந்து எதையாவது விடாப்பிடியாகப் பின்பற்றுவதைத் தடுப்பதில்லை. எனது விளக்கத்தின் போதாமையை உணர்ந்து விட்டுவிடுவேன்.

கிறீஸ்த்தவத்தின் மீது வெறுப்பு என்று பொதுவாகச் சொல்லமுடியாது. இஸ்லாமில் ஷியா, ஸுனி, வஹாபி, சூபிஸம் என்று பிரிவுகள் இருப்பதுபோல கிறீஸ்த்தவத்திலும் பிரிவுகள் உள்ளன. கிறீஸ்தவர்கள் என்று பல நூறாண்டுகளாக கிறீஸ்த்துவை வணங்கும் கத்தோலிக்கர்களை, புரட்டஸ்தாந்தினரை அல்லது பெந்தேகோஸ்தினரை இங்கு கருத்து எழுதும் பலர் குறிக்கவில்லை என்றே கருதுகின்றேன். ஒரு சிலர் திருக்கேதீஸ்வர வளைவினால் உருவான சர்ச்சைகளின்போது முறுகியிருந்தாலும், மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் ஏற்படுத்த முனையும் விரிசல்களை பலர் ஆதரிக்கவில்லை என்பதே உண்மை.

யெகோவாவின் சாட்சி, தமிழ் சபை போன்ற ஆவிக்குரியவர்களின் சபைகள் கட்டாய மதமாற்றம் செய்வதையும், சைவக் கடவுளரை பிசாசுகள் என்று சொல்வதையும் வெறுக்கின்றனர். அந்தக் கோபத்தில் பொதுவாக வைக்கப்படும் கருத்துக்கள் கிறீஸ்த்தவ வெறுப்பாக அர்த்தப்படுத்தப்படுகின்றது. ஆனால் எம்மில் பலருக்கு கிறீஸ்த்தவத்தின் எல்லா பிரிவிலும் நண்பர்கள் இருப்பார்கள். மதம் பற்றிய உரையாடலே இல்லாமல் நண்பர்களாக காலம் காலமாக இருக்கின்றோம் அல்லவா! 

ஆகவே, தமிழர்கள் இன்னொரு சக தமிழனை மத ரீதியில் பிரித்துப் பார்ப்பபதில்லை. ஒரு சில புறநடைகளை வைத்து பேனைப் பெருச்சாளியாக்குவது உள்நோக்கம் கொண்டது என்றே சொல்வேன்.

தனிப்பட்ட ரீதியில் மதமாற்றப் பிரச்சாரத்திற்கு வரும் யெகோவாவின் சாட்சிகளை நான் விரும்புவதில்லை. இலண்டனில் இப்படி பிரச்சாரத்திற்கு வந்த சிலரை வீட்டினுள் உள்ளே அழைத்து வரிப்புலி உடையுடன் நின்ற தலைவர் பிரபாகரனின் படத்தைக்காட்டி (அவர் இருந்த காலத்தில்) இவர்தான் எனது கடவுள் என்று சொல்லி  வீட்டுப் பக்கம் வராமல் பண்ணியிருக்கின்றேன்😁 முன்னர் யாழிலும் சொன்னதாக நினைவு.

எனது உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் சிலர் மதம் மாறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். உடனேயே நான் முழுச் சைவனாக மாறி (சமயத்தைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கும் விளக்கம் கொடுக்கும் அளவுக்கும் அறிவு உள்ளது!), அவர் திக்குமுக்காடும்வரை  விவாதித்து வீடியோவை நிப்பாட்டச் செய்தேன். அதன் பின்னர் அவர் ஒருநாளும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கச் சொல்லிக் கேட்டதில்லை! அதைப் பற்றிக் கதைத்ததும் இல்லை.😃

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:

மருதர் ,நான் உங்கள் அளவுக்கு இவைகளை கரைத்து குடிக்கவில்லை ...ஆனால் பாரதம்,ராமாயணம்  போன்றவற்றை எப்படி ஒரு மனிதன் /சமூகம் பின்பற்ற கூடாது அல்லது கடைப்பிடித்தால் ஏற்படும் தீமைகளை இந்த இரு இரிகாசங்கள் படிப்பதன்  மூலம் பாடம் படித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் 

ஏன் அவர்களை பார்த்து பதறுகிறார்கள் என்றால் அந்த மக்களது இயலாமையை ,வறுமையை ,சூழ்நிலையை பயன்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் என்பதால் தான் ...இது தான் என் மதம் ,இதில் இன்னன்ன நல்ல விடயங்கள் சொல்லி இருக்கு ...என்னுடைய மதத்திற்கு வாறீ யா என்றால் யார் போகப் போறார்கள் 

மகாபாரத்தில் அர்ஜுனன் சொல்கிறான் 
எதிரில் எனது நண்பர்கள் வில்வித்தை கற்றுத்தந்த குரு முதல் எல்லோரும் நிற்கிறார்கள் 
என்னால் இந்த போரை தொடங்க முடியாது என்று 
கிருஷ்ணர் சொல்கிறார் பழி பாவங்களை என்மீது சுமத்திவிட்டு அம்பை எய் என்று.

இதையே சிங்களவன் கிருஷ்ணர் சொல்படி செய்தான் என்று உங்கள் எத்தணைப்பேரால் 
ஏற்றுக்கொள்ள முடியும்? 

ராமாயணத்தில் 
எவ்ளவோ துயரை கடந்துவந்த ஒரு பெண்ணை (மனைவியை)
அற்ப கற்பு இருக்கிறதா என்று சந்தேகித்து 
தன்னம் தனியாக வனவாசம் அனுப்புகிறானே ஒரு மோடன் 
அவள் தன்னுடைய முழுவாழ்வையும் காட்டில் வாழ்வதில் கற்றுக்கொள்ள என்ன இருக்கு?

நீங்கள் வேலைக்கு போய்வரும்போது உங்கள் கணவர் 
உங்களை சந்தேகித்துவிட்டு காட்டுக்கு அனுப்பினால் 
எத்தனை பேர் உடனேயே கிளம்பி போவீர்கள்? 

மக்கள் வறுமையிலும் இயலாமையில் இருப்பது 
கண்ணுக்கு தெரியாமல்தானே தங்கத்திலேயே தேர் செய்து இழுக்கிறீர்கள் 
மக்கள் எப்பாடு பட்டாலும் உங்களுக்கு கவலை இல்லை 
ஆனால் ஆள்தொகைக்கு உங்கள் சாக்கடையில் வந்து அவர்களும் படுக்க வேண்டும்?

நல்ல விடயம் பாடியிருக்கு  சொல்லி இருக்கு எழுதி இருக்கு 
இதிலும்விட மேலான விடயங்களை உள்ளடக்கி வாசிகசாலைகள் 
நூல்நிலையங்களில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உண்டு 
யாருக்கு என்ன பயன்?
நடைமுறையில் என்ன இருக்கு? இதுதான் நிஜம் நிகழ்காலம். 

ஒன்றில் நீங்கள் செய்யுங்கள் 
அல்லது செய்பவனை செய்ய விடுங்கள். 

இன்று எல்லா சாமியும் ஆஸ்பத்திரி கதவை திறந்தால்தான் ஆசீர்வதிக்கும் 
கோவிலும் சேர்ச்சும் கதவுகளை மூடி கொண்டன 
மனிதாபிமானத்தையே சாதியின் பெயரால் கொல்வதுக்கு பெயர் மதமில்லை 
இன்று எனக்கு இன்ன சாதி டாக்ட்டர்தான் வேண்டும் என்று எந்த நாயாவது கேட்க்கிறதா? 
போய் காப்பாற்று என்று படுக்க தெரியுதில்லே? 

Share this post

Link to post
Share on other sites
41 minutes ago, கிருபன் said:

முதலில் நான் மதங்களில் கடவுளில் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் மதநம்பிக்கை உள்ளவர்களை, அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் போதிலும்,  கேள்விக்குட்படுத்தினாலும் அவர்கள் தாங்களாகவே பகுத்துணர்ந்து எதையாவது விடாப்பிடியாகப் பின்பற்றுவதைத் தடுப்பதில்லை. எனது விளக்கத்தின் போதாமையை உணர்ந்து விட்டுவிடுவேன்.

1) கிறீஸ்த்தவத்தின் மீது வெறுப்பு என்று பொதுவாகச் சொல்லமுடியாது. இஸ்லாமில் ஷியா, ஸுனி, வஹாபி, சூபிஸம் என்று பிரிவுகள் இருப்பதுபோல கிறீஸ்த்தவத்திலும் பிரிவுகள் உள்ளன. கிறீஸ்தவர்கள் என்று பல நூறாண்டுகளாக கிறீஸ்த்துவை வணங்கும் கத்தோலிக்கர்களை, புரட்டஸ்தாந்தினரை அல்லது பெந்தேகோஸ்தினரை இங்கு கருத்து எழுதும் பலர் குறிக்கவில்லை என்றே கருதுகின்றேன். ஒரு சிலர் திருக்கேதீஸ்வர வளைவினால் உருவான சர்ச்சைகளின்போது முறுகியிருந்தாலும், மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் ஏற்படுத்த முனையும் விரிசல்களை பலர் ஆதரிக்கவில்லை என்பதே உண்மை.

2)யெகோவாவின் சாட்சி, தமிழ் சபை போன்ற ஆவிக்குரியவர்களின் சபைகள் கட்டாய மதமாற்றம் செய்வதையும், சைவக் கடவுளரை பிசாசுகள் என்று சொல்வதையும் வெறுக்கின்றனர். அந்தக் கோபத்தில் பொதுவாக வைக்கப்படும் கருத்துக்கள் கிறீஸ்த்தவ வெறுப்பாக அர்த்தப்படுத்தப்படுகின்றது. 3) ஆனால் எம்மில் பலருக்கு கிறீஸ்த்தவத்தின் எல்லா பிரிவிலும் நண்பர்கள் இருப்பார்கள். மதம் பற்றிய உரையாடலே இல்லாமல் நண்பர்களாக காலம் காலமாக இருக்கின்றோம் அல்லவா! 

4) ஆகவே, தமிழர்கள் இன்னொரு சக தமிழனை மத ரீதியில் பிரித்துப் பார்ப்பபதில்லை. ஒரு சில புறநடைகளை வைத்து பேனைப் பெருச்சாளியாக்குவது உள்நோக்கம் கொண்டது என்றே சொல்வேன்.

தனிப்பட்ட ரீதியில் மதமாற்றப் பிரச்சாரத்திற்கு வரும் யெகோவாவின் சாட்சிகளை நான் விரும்புவதில்லை. இலண்டனில் இப்படி பிரச்சாரத்திற்கு வந்த சிலரை வீட்டினுள் உள்ளே அழைத்து வரிப்புலி உடையுடன் நின்ற தலைவர் பிரபாகரனின் படத்தைக்காட்டி (அவர் இருந்த காலத்தில்) இவர்தான் எனது கடவுள் என்று சொல்லி  வீட்டுப் பக்கம் வராமல் பண்ணியிருக்கின்றேன்😁 முன்னர் யாழிலும் சொன்னதாக நினைவு.

எனது உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் சிலர் மதம் மாறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். உடனேயே நான் முழுச் சைவனாக மாறி (சமயத்தைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கும் விளக்கம் கொடுக்கும் அளவுக்கும் அறிவு உள்ளது!), அவர் திக்குமுக்காடும்வரை  விவாதித்து வீடியோவை நிப்பாட்டச் செய்தேன். அதன் பின்னர் அவர் ஒருநாளும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கச் சொல்லிக் கேட்டதில்லை! அதைப் பற்றிக் கதைத்ததும் இல்லை.😃

1) இந்த உண்மை எனக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் அதற்கான விளக்கத்தை தரவேண்டியதும் தெளிவாக எழுதவேண்டியதும் நீங்களல்லவே ?🙂

2) தமிழர்களிடையே கட்டாய மதமாற்றம் என்பது இல்லை (அந்தக்காலம் முடிந்துவிட்டது) . பொதுவாக அர்த்தப்படுத்துவது என்று கூறியுள்ளீர்கள் - கருத்துக் கூறுவோர் எப்படியும் கூறலாம் ஆனால் அதை வாசிப்போர்தான் மென்மையாக நோகாமல் விளங்கிக்கொள்ள வேண்டுமா? (இதென்ன ஞாயம் இது அக்கிரமம் 😂)

3) என்து கருத்துக்களுடன் முரண்படும் (என்னைத் திட்டும்) மீரா ரதி பெருமாள் போன்றோர் எனக்கெதிராக  கருத்துரைக்கும்போது கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே எழுதுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்😂

4) உள்நோக்கம் கொண்டது என்று யாரைக் கூறுகிறீர்கள். என்னைத்தானே 😜

யாரும் எவரும் வெறுப்பைக் கொட்டலாம் ஆனால் நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா ? 🤔 போங்கய்யா நீங்களும் உங்கள் ஞாயமும் 😡

Share this post

Link to post
Share on other sites

ஒரு, ஆமத்துறு (புத்த பிக்கு)... பர்மா, சீனா, ஜப்பான், நேபாளம்... 
போன்ற நாடுகளில் இருந்து வந்து...
ஸ்ரீலங்காவில் உள்ள.. புத்த விகாரையில்... பிரித் ஓதியிருந்தால்...
அதே...  விகாரையில் வைத்து, அந்த வெளிநாட்டு புத்த பிக்குவை....
தனிமைப் படுத்த, சிங்கள அரசாங்கம் முன் வருமா?

இதுவரை... அப்படி, ஒரு பிக்குவும்... வரவில்லை என.... 
சிங்களம்... சிறு பான்மையினருக்கு, சொல்லாமல் சொல்கிறதா?

பிக்குமார் திருந்தி இருப்பார்கள் என... நான் கனவிலும் நினைக்க வில்லை.

Share this post

Link to post
Share on other sites

யாழ்.களம்  இன்றி 22ஆவது  அகவையில் ❤️

சாதனைகள் பல 👏
போதனைகளும் சில 😅

திறமைகளை வெளிக்கொண்டுவர உதவியது தளம் 👍
பலருக்கு பல பட்டங்களை தரலாம் 🙏

சிலகுக்கு பட்டமளிப்பு விழாவும் எடுக்கலாம் 🤩
மதத்தில் அவ்வளவு ஆழம் தெளிவு 😛
 
Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Kapithan said:

இந்த உண்மை எனக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் அதற்கான விளக்கத்தை தரவேண்டியதும் தெளிவாக எழுதவேண்டியதும் நீங்களல்லவே ?🙂

தெரிந்தால் தெரியாதவர்களுக்கு விளக்கத்தை நீங்கள் அல்லவா கொடுக்கவேண்டும். அதை விட்டுவிட்டு கேள்வி கேட்டு ஏன் குடைந்துகொண்டு இருக்கிறீர்கள்?

1 hour ago, Kapithan said:

கட்டாய மதமாற்றம்

வார்த்தை பிழையாக வந்துவிட்டது. வீடு வீடாகச் சென்று போரால், வறுமையால் பாதிக்கப்பட்டவர்களை  மூளைச்சலவை செய்வதைத்தான் சொல்லவந்தேன்.

1 hour ago, Kapithan said:

உள்நோக்கம் கொண்டது என்று யாரைக் கூறுகிறீர்கள். என்னைத்தானே 😜

வேறு யாரை? யாழ் களத்தில் பத்தவைத்தால் எப்படியான விடயங்கள் கப்பென்று பிடித்து எரியும் என்று உங்களுக்கும் தெரியும். பதினாறு வருஷம் குப்பைகொட்டும் எனக்கும் தெரியும்😜

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Kapithan said:

யாரும் எவரும் வெறுப்பைக் கொட்டலாம் ஆனால் நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா ? 🤔 போங்கய்யா நீங்களும் உங்கள் ஞாயமும் 😡

“வெறுப்பு,” “வெறுப்புணர்வு” ஆகியவை “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” என்று வரையறுக்கப்படுகின்றன. சந்தேகமின்றி, தீங்கு விளைவிக்கும், அல்லது தனிப்பட்ட உறவுகளுக்குக் கேடு விளைவிக்கும் விஷயங்களினிடமாக “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” காட்டுவது நன்மையானதே. ஒவ்வொருவரும் இந்த வகையான வெறுப்புணர்வைக் காட்டியிருந்தால், இந்த உலகம் உண்மையிலேயே வாழ்வதற்கு ஒரு மேம்பட்ட இடமாய் இருந்திருக்கும். என்றாலும், விசனகரமாக, அபூரண மனிதர்கள் தவறான விஷயங்களைத் தவறான காரணங்களுக்காக வெறுக்க முற்படுகின்றனர்.

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது; மேலும் “பயம், கோபம், அல்லது புண்பட்ட உணர்வு” ஆகியவற்றால் பொதுவாக வெடித்தெழுகிறது என்பதாக ஒரு வரையறை கூறுகிறது. சரியான அடிப்படையின்றி, இந்த வெறுப்புணர்வு தீங்கில் விளைவடைகிறது; மேலும், ‘ஏன்?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறது.

நமக்குத் தெரிந்தவர்களில் சிலரோடு பழகுவது ரொம்பவும் கஷ்டம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்; அவர்களுடைய பண்புகள் அல்லது பழக்கவழக்கங்கள் சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டுவதாய் இருக்கலாம். ஆனால் எரிச்சல் என்பது ஒரு விஷயம்; உடல் ரீதியில் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பது என்பது வேறு விஷயம். ஆகவே, ஒரு நபர், ஒரு முழு மக்கள் தொகுதியின் பேரிலும், பெரும்பாலும் தனக்குத் தெரியாத மக்களின் பேரிலும் வெறுப்புணர்வை மனதில் வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்குச் சிரமமாக இருக்கலாம். அவருடைய அரசியல் கருத்துக்களை அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்; வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; அல்லது மற்றொரு இனத்தவராய் இருக்கலாம்; ஆனால், அவர்களை வெறுக்க அது ஒரு காரணமாய் இருக்கிறதா?

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது”

https://wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/101997641

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)

அரசு தடை போட்டும் யாழில கொரோனா வைரஸை பரப்பிய சுவிஸ் பாதிரியின் நற்செய்தி கூட்டங்களுக்கு சொறிலங்கா போலீஸ் ஆதரவா இருந்ததா ஆளுநரே குற்றம் சாட்டியுள்ளார்.

அது போல சிலரது பித்தலாட்டங்களுக்கு பின்னால சிலர் இருக்கிறதால சிலரது கொட்டம் யாழில தலைவிரிச்சு ஆடுது.

அது போல வாள்வெட்டு கும்பலும் ஊரடங்கு நேரத்துல கைவரிசையை காட்டுது.

Edited by Rajesh

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, Maruthankerny said:

மகாபாரத்தில் அர்ஜுனன் சொல்கிறான் 
எதிரில் எனது நண்பர்கள் வில்வித்தை கற்றுத்தந்த குரு முதல் எல்லோரும் நிற்கிறார்கள் 
என்னால் இந்த போரை தொடங்க முடியாது என்று 
கிருஷ்ணர் சொல்கிறார் பழி பாவங்களை என்மீது சுமத்திவிட்டு அம்பை எய் என்று.

இதையே சிங்களவன் கிருஷ்ணர் சொல்படி செய்தான் என்று உங்கள் எத்தணைப்பேரால் 
ஏற்றுக்கொள்ள முடியும்? 

ராமாயணத்தில் 
எவ்ளவோ துயரை கடந்துவந்த ஒரு பெண்ணை (மனைவியை)
அற்ப கற்பு இருக்கிறதா என்று சந்தேகித்து 
தன்னம் தனியாக வனவாசம் அனுப்புகிறானே ஒரு மோடன் 
அவள் தன்னுடைய முழுவாழ்வையும் காட்டில் வாழ்வதில் கற்றுக்கொள்ள என்ன இருக்கு?

நீங்கள் வேலைக்கு போய்வரும்போது உங்கள் கணவர் 
உங்களை சந்தேகித்துவிட்டு காட்டுக்கு அனுப்பினால் 
எத்தனை பேர் உடனேயே கிளம்பி போவீர்கள்? 

மக்கள் வறுமையிலும் இயலாமையில் இருப்பது 
கண்ணுக்கு தெரியாமல்தானே தங்கத்திலேயே தேர் செய்து இழுக்கிறீர்கள் 
மக்கள் எப்பாடு பட்டாலும் உங்களுக்கு கவலை இல்லை 
ஆனால் ஆள்தொகைக்கு உங்கள் சாக்கடையில் வந்து அவர்களும் படுக்க வேண்டும்?

நல்ல விடயம் பாடியிருக்கு  சொல்லி இருக்கு எழுதி இருக்கு 
இதிலும்விட மேலான விடயங்களை உள்ளடக்கி வாசிகசாலைகள் 
நூல்நிலையங்களில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உண்டு 
யாருக்கு என்ன பயன்?
நடைமுறையில் என்ன இருக்கு? இதுதான் நிஜம் நிகழ்காலம். 

ஒன்றில் நீங்கள் செய்யுங்கள் 
அல்லது செய்பவனை செய்ய விடுங்கள். 

இன்று எல்லா சாமியும் ஆஸ்பத்திரி கதவை திறந்தால்தான் ஆசீர்வதிக்கும் 
கோவிலும் சேர்ச்சும் கதவுகளை மூடி கொண்டன 
மனிதாபிமானத்தையே சாதியின் பெயரால் கொல்வதுக்கு பெயர் மதமில்லை 
இன்று எனக்கு இன்ன சாதி டாக்ட்டர்தான் வேண்டும் என்று எந்த நாயாவது கேட்க்கிறதா? 
போய் காப்பாற்று என்று படுக்க தெரியுதில்லே? 

மருதர், நான் எழுதினதை நீங்கள் வடிவாய் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன்...ஒருவர் வாழ்க்கையை எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமாய் அந்த இரு இரிகாசங்களில் இருந்து பாடம் படிக்கலாம் இல்லையா 🙂

2 hours ago, Kapithan said:

1) இந்த உண்மை எனக்கும் மிகத் தெளிவாகத் தெரியும். ஆனால் அதற்கான விளக்கத்தை தரவேண்டியதும் தெளிவாக எழுதவேண்டியதும் நீங்களல்லவே ?🙂

2) தமிழர்களிடையே கட்டாய மதமாற்றம் என்பது இல்லை (அந்தக்காலம் முடிந்துவிட்டது) . பொதுவாக அர்த்தப்படுத்துவது என்று கூறியுள்ளீர்கள் - கருத்துக் கூறுவோர் எப்படியும் கூறலாம் ஆனால் அதை வாசிப்போர்தான் மென்மையாக நோகாமல் விளங்கிக்கொள்ள வேண்டுமா? (இதென்ன ஞாயம் இது அக்கிரமம் 😂)

3) என்து கருத்துக்களுடன் முரண்படும் (என்னைத் திட்டும்) மீரா ரதி பெருமாள் போன்றோர் எனக்கெதிராக  கருத்துரைக்கும்போது கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே எழுதுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்😂

4) உள்நோக்கம் கொண்டது என்று யாரைக் கூறுகிறீர்கள். என்னைத்தானே 😜

யாரும் எவரும் வெறுப்பைக் கொட்டலாம் ஆனால் நான் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா ? 🤔 போங்கய்யா நீங்களும் உங்கள் ஞாயமும் 😡

தமிழரிடையே கட்டாய மத மாற்றம் தற்போது இல்லையா ?... பைபிளை தூக்கிக் கொண்டு என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த நேரத்திலும் படையெடுக்கினம்..விதண்டாவாதத்திற்கு எழுத வேணாம் 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
53 minutes ago, கிருபன் said:

1) தெரிந்தால் தெரியாதவர்களுக்கு விளக்கத்தை நீங்கள் அல்லவா கொடுக்கவேண்டும். அதை விட்டுவிட்டு கேள்வி கேட்டு ஏன் குடைந்துகொண்டு இருக்கிறீர்கள்?

வார்த்தை பிழையாக வந்துவிட்டது. வீடு வீடாகச் சென்று போரால், வறுமையால் பாதிக்கப்பட்டவர்களை  மூளைச்சலவை செய்வதைத்தான் சொல்லவந்தேன்.

2) வேறு யாரை? யாழ் களத்தில் பத்தவைத்தால் எப்படியான விடயங்கள் கப்பென்று பிடித்து எரியும் என்று உங்களுக்கும் தெரியும். பதினாறு வருஷம் குப்பைகொட்டும் எனக்கும் தெரியும்😜

1) பதினாறு வருடங்கள் குப்பை கொட்டும் உங்களுக்கு அல்லவா தெரிய வேண்டும் யாருக்கு வகுப்பெடுக்க வேண்டுமென்று. நான் இங்கு யாருடைய மதத்தையும் இழிவுபடுத்தினேனா ? இழிவுபடுத்துபவர்களுக்கு வகுபெடுக்காமல் ஏன் எனக்கு வகுப்பெடுக்கிறீர்கள். 

அவர்கள் எந்த பிரிவினரை எந்த வகுப்பினரை திட்டுகின்றனர் என்று மூக்குச் சாத்திரம் பார்க்கவா முடியும். 

சோற்றுக்கு மதம் மாறியோர் என கூறுவது நானல்ல. தெரியாதென நடிக்காதீர்கள். இவ்வாறு கூறுபவர்களை இழிவுபடுத்த மற்றவர்களுக்கு எவ்வளவு நேரமெடுக்கும் என எண்ணுகிறீர்கள் ? 😡

2) பற்றவைத்தவர்களை விட்டுவிட்டு, ஏன் எனக் கேட்கும் என்னிடம் குறை பிடிப்பது சரியா ?🤔

42 minutes ago, ரதி said:

மருதர், நான் எழுதினதை நீங்கள் வடிவாய் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன்...ஒருவர் வாழ்க்கையை எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமாய் அந்த இரு இரிகாசங்களில் இருந்து பாடம் படிக்கலாம் இல்லையா 🙂

தமிழரிடையே கட்டாய மத மாற்றம் தற்போது இல்லையா ?... பைபிளை தூக்கிக் கொண்டு என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த நேரத்திலும் படையெடுக்கினம்..விதண்டாவாதத்திற்கு எழுத வேணாம் 

ரதி அக்கோய்...🙂

பிரச்சாரத்திற்கும் கட்டாய மத மாற்றத்திற்கும் இடையே வேறுபாடு தெரியாத ஆளா நீங்கள். 😜

Share this post

Link to post
Share on other sites
59 minutes ago, கிருபன் said:

“வெறுப்பு,” “வெறுப்புணர்வு” ஆகியவை “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” என்று வரையறுக்கப்படுகின்றன. சந்தேகமின்றி, தீங்கு விளைவிக்கும், அல்லது தனிப்பட்ட உறவுகளுக்குக் கேடு விளைவிக்கும் விஷயங்களினிடமாக “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” காட்டுவது நன்மையானதே. ஒவ்வொருவரும் இந்த வகையான வெறுப்புணர்வைக் காட்டியிருந்தால், இந்த உலகம் உண்மையிலேயே வாழ்வதற்கு ஒரு மேம்பட்ட இடமாய் இருந்திருக்கும். என்றாலும், விசனகரமாக, அபூரண மனிதர்கள் தவறான விஷயங்களைத் தவறான காரணங்களுக்காக வெறுக்க முற்படுகின்றனர்.

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது; மேலும் “பயம், கோபம், அல்லது புண்பட்ட உணர்வு” ஆகியவற்றால் பொதுவாக வெடித்தெழுகிறது என்பதாக ஒரு வரையறை கூறுகிறது. சரியான அடிப்படையின்றி, இந்த வெறுப்புணர்வு தீங்கில் விளைவடைகிறது; மேலும், ‘ஏன்?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறது.

நமக்குத் தெரிந்தவர்களில் சிலரோடு பழகுவது ரொம்பவும் கஷ்டம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்; அவர்களுடைய பண்புகள் அல்லது பழக்கவழக்கங்கள் சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டுவதாய் இருக்கலாம். ஆனால் எரிச்சல் என்பது ஒரு விஷயம்; உடல் ரீதியில் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பது என்பது வேறு விஷயம். ஆகவே, ஒரு நபர், ஒரு முழு மக்கள் தொகுதியின் பேரிலும், பெரும்பாலும் தனக்குத் தெரியாத மக்களின் பேரிலும் வெறுப்புணர்வை மனதில் வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்குச் சிரமமாக இருக்கலாம். அவருடைய அரசியல் கருத்துக்களை அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்; வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; அல்லது மற்றொரு இனத்தவராய் இருக்கலாம்; ஆனால், அவர்களை வெறுக்க அது ஒரு காரணமாய் இருக்கிறதா?

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது”

https://wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/101997641

இவற்றை வெறுப்புணர்வை விதப்போருக்கெல்லா சொல்ல வேண்டும். யான் எந்த சமயத்தவர் மத்தியில் வெறுப்புணர்வை விதைக்கிறேன். காட்டுங்கள் பார்க்கலாம் 👍

Share this post

Link to post
Share on other sites
54 minutes ago, ரதி said:

மருதர், நான் எழுதினதை நீங்கள் வடிவாய் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன்...ஒருவர் வாழ்க்கையை எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணமாய் அந்த இரு இரிகாசங்களில் இருந்து பாடம் படிக்கலாம் இல்லையா 🙂

ஆம் எனது வாசிப்பில் தவறு உள்ளது

நீங்கள் சொல்ல வருவது புரிகிறது ... அதுக்காக அந்த இழிவுகளை எமது மதத்தின் புனிதம் என்பது 
எவ்ளவு தரக்குறைவான செயல்பாடு. என்னுடைய வாதங்களின் அடிப்படையே ... நாம் மதம் இல்லாமல் இருப்பதுதான் இன்னொருவன் வந்து தனது மதத்தை பரப்ப வழிவகுக்கிறது.
முதலில் பகவத்கீதை எமது மத நூல் இல்லை என்பது தெளிவாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இல்லாதவனுக்குதான்  பிரச்சனை ........பைபிள் குரானை விட எவ்ளவோ மேன்மையான வழிமுறைகளை 
தமிழர்கள் தமிழில் கொண்டிருக்கிறார்கள்  அவற்றை முன்கொண்டுவந்து 
மஹாபாரதம் இராமாயணம் போன்ற கற்பனை புரட்டுக்களை தூக்கி எறியவேண்டும். எறியவேண்டியதில்லை அவற்றை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் தமிழ் மொழியை கவிதை நடையில் வாசிக்க கம்பராமாயணம் ஒரு சிறந்த புத்தகம். 

இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக பொய்களை புரட்டுகளை நாம் கைவிட தொடங்கினால்தான் 
அடுத்த்துவரும் சந்ததிக்கு அதில் ஒரு நாட்டம் வரும். 

1 hour ago, கிருபன் said:

“வெறுப்பு,” “வெறுப்புணர்வு” ஆகியவை “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” என்று வரையறுக்கப்படுகின்றன. சந்தேகமின்றி, தீங்கு விளைவிக்கும், அல்லது தனிப்பட்ட உறவுகளுக்குக் கேடு விளைவிக்கும் விஷயங்களினிடமாக “மிகுந்த பகைமையும் அருவருப்பும்” காட்டுவது நன்மையானதே. ஒவ்வொருவரும் இந்த வகையான வெறுப்புணர்வைக் காட்டியிருந்தால், இந்த உலகம் உண்மையிலேயே வாழ்வதற்கு ஒரு மேம்பட்ட இடமாய் இருந்திருக்கும். என்றாலும், விசனகரமாக, அபூரண மனிதர்கள் தவறான விஷயங்களைத் தவறான காரணங்களுக்காக வெறுக்க முற்படுகின்றனர். தவறான விஷயம் என்றால் என்ன கரணுத்துக்கு ஆக என்றாலும் அதி வெறுப்பது தகும்தானே? 

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது; மேலும் “பயம், கோபம், அல்லது புண்பட்ட உணர்வு” ஆகியவற்றால் பொதுவாக வெடித்தெழுகிறது என்பதாக ஒரு வரையறை கூறுகிறது. சரியான அடிப்படையின்றி, இந்த வெறுப்புணர்வு தீங்கில் விளைவடைகிறது; மேலும், ‘ஏன்?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்ப எழுப்புகிறது.

நமக்குத் தெரிந்தவர்களில் சிலரோடு பழகுவது ரொம்பவும் கஷ்டம் என்பது நம் எல்லாருக்கும் தெரியும்; அவர்களுடைய பண்புகள் அல்லது பழக்கவழக்கங்கள் சில சமயங்களில் நமக்கு எரிச்சலூட்டுவதாய் இருக்கலாம். ஆனால் எரிச்சல் என்பது ஒரு விஷயம்; உடல் ரீதியில் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பது என்பது வேறு விஷயம். ஆகவே, ஒரு நபர், ஒரு முழு மக்கள் தொகுதியின் பேரிலும், பெரும்பாலும் தனக்குத் தெரியாத மக்களின் பேரிலும் வெறுப்புணர்வை மனதில் வைத்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நமக்குச் சிரமமாக இருக்கலாம். அவருடைய அரசியல் கருத்துக்களை அவர்கள் ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்; வேறொரு மதத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம்; அல்லது மற்றொரு இனத்தவராய் இருக்கலாம்; ஆனால், அவர்களை வெறுக்க அது ஒரு காரணமாய் இருக்கிறதா?

தப்பெண்ணம், அறியாமை, அல்லது தவறான தகவல் ஆகியவற்றால் அழிவுக்கேதுவான வெறுப்புணர்வு ஏற்படுகிறது”

https://wol.jw.org/ta/wol/d/r122/lp-tl/101997641

Share this post

Link to post
Share on other sites
21 hours ago, Kapithan said:

ஏன் இந்த  கிறீத்துவ வெறுப்பு என்று கேட்டிருந்தேன் ?

நம்மால் கிறிஸ்தவர்களைப்போல் சக மனிதனின் தேவையில் உதவி,  நம் மதத்தை காப்பாற்ற முடியவில்லையே.  என்கிற  இயலாமையால் வரும் ஆதங்கமாய் இருக்குமோ?

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, Maruthankerny said:

பைபிள் குரானை விட எவ்ளவோ மேன்மையான வழிமுறைகளை 
தமிழர்கள் தமிழில் கொண்டிருக்கிறார்கள்  அவற்றை முன்கொண்டுவந்து 
மஹாபாரதம் இராமாயணம் போன்ற கற்பனை புரட்டுக்களை தூக்கி எறியவேண்டும்.

தமிழர்கள் தமிழில் உள்ள நல்ல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து பைபிள்/விவிலியம் போன்ற கற்பனை புரட்டுக்களை, மூடநம்பிக்கைளின் தொகுப்புக்களை, சாக்கடைகள் நிரப்பியவற்றை தூக்கி எறியவேண்டும்.

6 hours ago, ரதி said:

தமிழரிடையே கட்டாய மத மாற்றம் தற்போது இல்லையா ?... பைபிளை தூக்கிக் கொண்டு என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த நேரத்திலும் படையெடுக்கினம்..விதண்டாவாதத்திற்கு எழுத வேணாம் 

அருமையான கேள்வியும் கருத்தும்!

9 hours ago, கிருபன் said:

தனிப்பட்ட ரீதியில் மதமாற்றப் பிரச்சாரத்திற்கு வரும் யெகோவாவின் சாட்சிகளை நான் விரும்புவதில்லை. இலண்டனில் இப்படி பிரச்சாரத்திற்கு வந்த சிலரை வீட்டினுள் உள்ளே அழைத்து வரிப்புலி உடையுடன் நின்ற தலைவர் பிரபாகரனின் படத்தைக்காட்டி (அவர் இருந்த காலத்தில்) இவர்தான் எனது கடவுள் என்று சொல்லி  வீட்டுப் பக்கம் வராமல் பண்ணியிருக்கின்றேன்😁 முன்னர் யாழிலும் சொன்னதாக நினைவு.

எனது உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் சிலர் மதம் மாறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். உடனேயே நான் முழுச் சைவனாக மாறி (சமயத்தைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கும் விளக்கம் கொடுக்கும் அளவுக்கும் அறிவு உள்ளது!), அவர் திக்குமுக்காடும்வரை  விவாதித்து வீடியோவை நிப்பாட்டச் செய்தேன். அதன் பின்னர் அவர் ஒருநாளும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கச் சொல்லிக் கேட்டதில்லை! அதைப் பற்றிக் கதைத்ததும் இல்லை.

அருமையான பதிவு!

Share this post

Link to post
Share on other sites
11 hours ago, Kapithan said:

கிருபன்,  என் கேள்விகள் மீது உங்களுக்கு இத்தனை கோபமா ?😀

கிறீத்துவத்தின் மீது ஏன் இத்துணை வெறுப்பு என்று நீங்கள்  கேட்டிருந்தால் நான் கேட்டிருக்கவேண்டிய தேவை வந்திராது . 

உங்களைமட்டும் ஏன் விட்டுவைப்பான். உங்களிடமும் ஒரு கேள்வி 😂

கிறீத்துவர்கள் சமயத்தின்பால் தங்களை இனம் காட்டாது இனத்தின்பால் இனங்காட்டும்போது ஏன் பலர் (யார் அவர்கள் என கேட்கப்படாது 😉) அவர்களை சமயத்தின்பால் இனம் காண்கின்றனர் ? 🤔

ஒருவன் தன்னை தமிழன் என்று கூறும்போது இல்லை நீ கிறீத்துவன் என பிரித்துக் கூறுவது ஏன் ? (மாட்டினீர்களா 😂)

காப்பிதான் , இங்கு நிறையபேர் கிறிஸ்தவத்தை வெறுக்கிறதையும் அவர்களது துவேஷமான கருத்துக்களையும் இங்கு காண்கிறோம்।  இவர்கள் வேறு யாருமல்ல , தங்கள் சுதந்திரத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் தமிழ் இந்துக்கள்।

இருந்தாலும் இந்த போராட்டத்தில் முக்கிய பங்கெடுத்தவர்கள் தமிழ் கிறிஸ்தவர்கள்। சிலருக்கு இது மறந்து போயிருக்கலாம்।

இப்படியான இந்துத்துவ மேலாதிக்கத்தால்தான் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தாங்கள் தமிழர்கள் இல்லையென்றும் , வடக்கு கிழக்கில் அதிகாரம் வழங்கும்போது தங்களுக்கு தனி அலகு வேண்டுமென்று நிட்கிறார்கள்।

தமிழனுக்கு உரிமை கிடைக்குமா இல்லையா என்பது வேறு விடயம்। அப்படி இருக்கும்போது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு , இந்து தமிழர்கள் எப்படியான நீதியை வழங்கப்போகிறார்கள்। நிச்சயமாக இங்கு ஒரு பெரிய பாதிப்பு கிறிஸ்தவர்களுக்கு உருவாகும்।

இவர்கள் கிறிஸ்தவத்தில் , கிறிஸ்தவ மக்களிடத்தில் உள்ள வெறுப்பை இப்போதே வெளிப்படுத்தியது நல்லதாகிவிட்ட்து। இல்லாவிடடாள் கிறிஸ்தவர்கள் உரிமைகள் பெற இந்துக்களுக்கு எதிராக போராட வேண்டி ஏட்பட்டிருக்கும்। இப்போதே இது வெளிப்பட்டிருப்பதால் நாமும் காயை அதட்கு ஏற்ற விதமாக நகர்த்த வேண்டும்।

இங்கு இந்த அரசு உரிமை வழங்கப்போவதில்லை। அப்படி வழங்கினாலும் அதில் கிறிஸ்தவர்களுக்குரிய உரிமைகள் அதிகாரங்கள் நிச்சயமாக பிரதிபலிக்க வேண்டும்। இல்லாவிடடாள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு போவது மேல்।

சிலர் இதுக்கு விளக்கம் கொடுக்க முட்படலாம்। இருந்தாலும் அவர்கள் உள்ளத்தில் உள்ள , கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு இங்கு சரியாக பிரதிபலித்துள்ளது। இதைப்பற்றிய சிறிய விளக்கத்தை சிங்கள இன வாதிகளுக்கு கொடுத்து விடடாள் மிகுதியை அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள்।

வடக்கு கிழக்கில் நான்கு பிஷப்மார் இருக்கிறார்கள், கிறிஸ்தவ தலைவர்கள் இருக்கிறார்கள்। அவர்கள் இது சம்பந்தமான தீர்மானத்தை எடுப்பதட்கு நாங்கள் முன்னிற்போம்।

 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Rajesh said:

தமிழர்கள் தமிழில் உள்ள நல்ல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதை விடுத்து பைபிள்/விவிலியம் போன்ற கற்பனை புரட்டுக்களை, மூடநம்பிக்கைளின் தொகுப்புக்களை, சாக்கடைகள் நிரப்பியவற்றை தூக்கி எறியவேண்டும்.

.ராஜேஸ் குறிப்பிட்டபடி தமிழர்கள் தமிழில் உள்ள நல்ல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக திருக்குறள்.👏

பைபிளை பின்பற்ற வேண்டுமென்கின்ற கட்டாயம் யாருக்கும்  இல்லை. யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது.👍

பைபிள்/விவிலியம் என்பன கற்பனை புரட்டு, மூடநம்பிக்கைளின் தொகுப்பு என நம்பும் யாரும் அதனை பின்பற்றவேண்டிய கட்டாயம் இல்லை. அவர்கள் தங்களிடம் திணிக்கப்படும் விவிலியத்தை தூக்கி சாக்கடைக்குள் தாராளமாக எறியலாம். அது அவரவர் விருப்பம். 🙂

ஆனால் சமயம் மாறுபவர்களது உரிமையை மறுக்கவும் அவர்களை இழிவுபடுத்துவதற்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.!😡 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, Vankalayan said:

காப்பிதான் , இங்கு நிறையபேர் கிறிஸ்தவத்தை வெறுக்கிறதையும் அவர்களது துவேஷமான கருத்துக்களையும் இங்கு காண்கிறோம்।  இவர்கள் வேறு யாருமல்ல , தங்கள் சுதந்திரத்துக்காகவும் உரிமைக்காகவும் போராடும் தமிழ் இந்துக்கள்।

1) இருந்தாலும் இந்த போராட்டத்தில் முக்கிய பங்கெடுத்தவர்கள் தமிழ் கிறிஸ்தவர்கள்। சிலருக்கு இது மறந்து போயிருக்கலாம்।

2) இப்படியான இந்துத்துவ மேலாதிக்கத்தால்தான் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தாங்கள் தமிழர்கள் இல்லையென்றும் , வடக்கு கிழக்கில் அதிகாரம் வழங்கும்போது தங்களுக்கு தனி அலகு வேண்டுமென்று நிட்கிறார்கள்।

3)தமிழனுக்கு உரிமை கிடைக்குமா இல்லையா என்பது வேறு விடயம்। அப்படி இருக்கும்போது தமிழ் கிறிஸ்தவர்களுக்கு , இந்து தமிழர்கள் எப்படியான நீதியை வழங்கப்போகிறார்கள்। நிச்சயமாக இங்கு ஒரு பெரிய பாதிப்பு கிறிஸ்தவர்களுக்கு உருவாகும்।

இவர்கள் கிறிஸ்தவத்தில் , கிறிஸ்தவ மக்களிடத்தில் உள்ள வெறுப்பை இப்போதே வெளிப்படுத்தியது நல்லதாகிவிட்ட்து। இல்லாவிடடாள் கிறிஸ்தவர்கள் உரிமைகள் பெற இந்துக்களுக்கு எதிராக போராட வேண்டி ஏட்பட்டிருக்கும்। இப்போதே இது வெளிப்பட்டிருப்பதால் நாமும் காயை அதட்கு ஏற்ற விதமாக நகர்த்த வேண்டும்।

4) இங்கு இந்த அரசு உரிமை வழங்கப்போவதில்லை। அப்படி வழங்கினாலும் அதில் கிறிஸ்தவர்களுக்குரிய உரிமைகள் அதிகாரங்கள் நிச்சயமாக பிரதிபலிக்க வேண்டும்। இல்லாவிடடாள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு போவது மேல்।

சிலர் இதுக்கு விளக்கம் கொடுக்க முட்படலாம்। இருந்தாலும் அவர்கள் உள்ளத்தில் உள்ள , கிறிஸ்தவர்களுக்கு எதிரான வெறுப்பு இங்கு சரியாக பிரதிபலித்துள்ளது। இதைப்பற்றிய சிறிய விளக்கத்தை சிங்கள இன வாதிகளுக்கு கொடுத்து விடடாள் மிகுதியை அவர்கள் பார்த்துக்கொள்ளுவார்கள்।

வடக்கு கிழக்கில் நான்கு பிஷப்மார் இருக்கிறார்கள், கிறிஸ்தவ தலைவர்கள் இருக்கிறார்கள்। அவர்கள் இது சம்பந்தமான தீர்மானத்தை எடுப்பதட்கு நாங்கள் முன்னிற்போம்।

1) பிரபாகரனையும் அவனின் பிள்ளைகளையும் மறந்த தமிழர்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்.☹️

2) உண்மைதான். இவர்களுக்கு இதெல்லாம் எங்கே புரியப் போகிறது.

3) உங்கள் பயம் நியாயமானது. 

4) இல்லாவிடடாள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு போவது மேல்।

உண்மைதான். சுதந்திர தமிழீழத்தில் (  அப்படி அமைந்தால்) இரண்டாம்தர பிரசையாக இருக்க யார்தான் விரும்புவர் ?

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, satan said:

நம்மால் கிறிஸ்தவர்களைப்போல் சக மனிதனின் தேவையில் உதவி,  நம் மதத்தை காப்பாற்ற முடியவில்லையே.  என்கிற  இயலாமையால் வரும் ஆதங்கமாய் இருக்குமோ?

க்கிறீத்துவர்கள் மட்டும்தான் உதவ வேண்டும் என்கின்ற கட்டாயமில்லையே. தமிழர் புனர்வாழ்வுக்  கழகம் போன்று நம்பிக்கையான அமைப்பொன்றை உருவாக்கினால் புலம்பெயர் தமிழர் தாராளமாக உதவுவர்.🙂

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, கிருபன் said:

முதலில் நான் மதங்களில் கடவுளில் நம்பிக்கை இல்லாதவன். ஆனால் மதநம்பிக்கை உள்ளவர்களை, அவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருக்கும் போதிலும்,  கேள்விக்குட்படுத்தினாலும் அவர்கள் தாங்களாகவே பகுத்துணர்ந்து எதையாவது விடாப்பிடியாகப் பின்பற்றுவதைத் தடுப்பதில்லை. எனது விளக்கத்தின் போதாமையை உணர்ந்து விட்டுவிடுவேன்.

கிறீஸ்த்தவத்தின் மீது வெறுப்பு என்று பொதுவாகச் சொல்லமுடியாது. இஸ்லாமில் ஷியா, ஸுனி, வஹாபி, சூபிஸம் என்று பிரிவுகள் இருப்பதுபோல கிறீஸ்த்தவத்திலும் பிரிவுகள் உள்ளன. கிறீஸ்தவர்கள் என்று பல நூறாண்டுகளாக கிறீஸ்த்துவை வணங்கும் கத்தோலிக்கர்களை, புரட்டஸ்தாந்தினரை அல்லது பெந்தேகோஸ்தினரை இங்கு கருத்து எழுதும் பலர் குறிக்கவில்லை என்றே கருதுகின்றேன். ஒரு சிலர் திருக்கேதீஸ்வர வளைவினால் உருவான சர்ச்சைகளின்போது முறுகியிருந்தாலும், மறவன்புலவு சச்சிதானந்தன் போன்றவர்கள் ஏற்படுத்த முனையும் விரிசல்களை பலர் ஆதரிக்கவில்லை என்பதே உண்மை.

யெகோவாவின் சாட்சி, தமிழ் சபை போன்ற ஆவிக்குரியவர்களின் சபைகள் கட்டாய மதமாற்றம் செய்வதையும், சைவக் கடவுளரை பிசாசுகள் என்று சொல்வதையும் வெறுக்கின்றனர். அந்தக் கோபத்தில் பொதுவாக வைக்கப்படும் கருத்துக்கள் கிறீஸ்த்தவ வெறுப்பாக அர்த்தப்படுத்தப்படுகின்றது. ஆனால் எம்மில் பலருக்கு கிறீஸ்த்தவத்தின் எல்லா பிரிவிலும் நண்பர்கள் இருப்பார்கள். மதம் பற்றிய உரையாடலே இல்லாமல் நண்பர்களாக காலம் காலமாக இருக்கின்றோம் அல்லவா! 

ஆகவே, தமிழர்கள் இன்னொரு சக தமிழனை மத ரீதியில் பிரித்துப் பார்ப்பபதில்லை. ஒரு சில புறநடைகளை வைத்து பேனைப் பெருச்சாளியாக்குவது உள்நோக்கம் கொண்டது என்றே சொல்வேன்.

தனிப்பட்ட ரீதியில் மதமாற்றப் பிரச்சாரத்திற்கு வரும் யெகோவாவின் சாட்சிகளை நான் விரும்புவதில்லை. இலண்டனில் இப்படி பிரச்சாரத்திற்கு வந்த சிலரை வீட்டினுள் உள்ளே அழைத்து வரிப்புலி உடையுடன் நின்ற தலைவர் பிரபாகரனின் படத்தைக்காட்டி (அவர் இருந்த காலத்தில்) இவர்தான் எனது கடவுள் என்று சொல்லி  வீட்டுப் பக்கம் வராமல் பண்ணியிருக்கின்றேன்😁 முன்னர் யாழிலும் சொன்னதாக நினைவு.

எனது உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்தில் சிலர் மதம் மாறியிருக்கின்றனர். அவர்களில் ஒருவரின் கணவர் ஒரு போதகர். 90களின் நடுப்பகுதியில் அவர்களுக்குக் குழந்தை பிறந்தபோது பார்க்கப்போயிருந்தேன். கதைத்துக்கொண்டிருக்கும்போதே  இயேசு உயிர்ப்பிக்கும் அற்புதங்களை வீடியோவில் ஓடவிட்டு எனக்கு போதிக்க ஆரம்பித்தார். உடனேயே நான் முழுச் சைவனாக மாறி (சமயத்தைப் பற்றி விவாதிக்கும் அளவுக்கும் விளக்கம் கொடுக்கும் அளவுக்கும் அறிவு உள்ளது!), அவர் திக்குமுக்காடும்வரை  விவாதித்து வீடியோவை நிப்பாட்டச் செய்தேன். அதன் பின்னர் அவர் ஒருநாளும் பரிசுத்த ஆவியை விசுவாசிக்கச் சொல்லிக் கேட்டதில்லை! அதைப் பற்றிக் கதைத்ததும் இல்லை.😃

இதுதான் சனநாயகம். அவர் உங்கெளுக்கு வகுப்பெடுத்தார், நீங்களும் அவருக்கு வகுப்பெடுத்தீர்கள். அவரால் உங்கள் வாதத்திற்கு மறுப்புக் கூற முடியவில்லை. அமைதியாகிவிட்டா.  இதுதான் நாகரீகமடைந்தவர்கள் கல்வி அறிவுள்ளவர்கள் செய்வது.👍

நீங்கள் எந்த இடத்திலும் அவரை இழிவுபடுத்தவில்லையே ? 

ஆனால் மதம் மாறுகின்றனர் என்கின்ற காரணத்திற்காக அவர்களை  இழிவுபடுத்துபவர்களை அவர்கள் நாகரீகமடையவில்லை அல்லது கல்வி அறிவில்லை என்று சொல்லி அப்படியே விடலாமா ? 🤔

Share this post

Link to post
Share on other sites

Image may contain: text

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
On 3/30/2020 at 3:54 AM, Maruthankerny said:

பச்சை இல்லை குத்துவத்துக்கு ..........
என்னை பொறுத்தவரை சாக்கடை நாற தொடங்கி விட்டது 
இது நான் பல முறை இங்கே எழுதியது .... அடுத்த சந்ததி எம்மைவிட 
அறிவு மிகுந்தே இருக்கும் அவர்களிடம் கேள்விகள் இருக்கும் எம்மிடம் பதில் 
இல்லாதுபோனால் எமது மதம் மெல்ல மெல்ல அழிந்துபோகும் யாராலும் தடுக்க முடியாது என்று 

அது நாம்  அடுத்தடுத்த சந்ததிகளுக்கு என்னென்ன சொல்லி வளர்க்கிறோம் என்பதை பொறுத்தது.

On 3/29/2020 at 9:43 PM, Kapithan said:

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகோணும் சாமி..🤔

கிறீத்தவ சமயத்தின் மீது ஏன் உங்கள் எல்லோருக்கும் இவ்வளவு வெறுப்பு ? 

எமக்கு கிறீஸ்தவ மதத்தின்மீதோ கிறீஸ்தவர்களின்மீதோ எந்தவித கோபதாபங்களும் இல்லை. மக்களின் இயலாமையை பயன்படுத்தி அவர்களை மதம்மாற்றும் நாதாரிகளிடம்தான் கோபம்.

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

 • Topics

 • Posts

  • ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன் கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். மனைவி மற்றும் மகளுடன் மோகன்.   மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.   மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.இந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார்.  மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.  தனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   https://www.maalaimalar.com/news/topnews/2020/06/05100212/1575981/Madurai-Saloon-Shop-man-daughter-select-UN-goodwill.vpf படித்து நல்ல நிலைக்கு வந்து இன்னும் பலருக்கு உதவி செய்யம்மா
  • கடத்தப்பட்ட மகனை தேடிய தந்தை மரணம் வவுனியாவில் வைத்து கடத்தப்பட்ட தனது மகனை தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தந்தையொருவர் இன்று காலை மரணமடைந்துள்ளார். வவுனியா கூமாங்குளத்தில் வசிக்கும் சின்னச்சாமி நல்லதம்பி (வயது71) என்ற தந்தையே இன்றைய தினம் அவரது வீட்டில் உள்ள மரமொன்றில் ஏறியபோது கீழே வீழ்ந்து இறந்துள்ளார். வவுனியாவில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக 1204 ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த இவரது மகனை 2008 ஆம் ஆண்டு வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக வைத்து இனந்தெரியாதோர் கடத்திச்சென்றிருந்தனர். இந்நிலையில், தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இவர் 1200 ஆவது நாளன்று காணாமல்  ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் கலந்துகொண்டு காணாமல் போன உறவுகளுக்காக குரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   https://www.virakesari.lk/article/83418
  • சிங்கள மக்களின் உதவியை நாடும் இலங்கைத் தமிழ் தாய்மார்கள்... எதாற்காக ? - சிவா பரமேஸ்வரன் (முன்னாள் மூத்த செய்தியாளர் பி.பி.சி. ) இலங்கையில் பதினோரு ஆண்டுகளுக்கு முன்னர் கொடூரமாக முடிவடைந்த யுத்தத்தின் கடைசி நாட்களில் காணாமல்போன மற்றும் கையளிக்கப்பட்ட உறவுகளைக் கண்டுபிடிக்க சிங்கள மக்களின் உதவியை இப்போது தமிழ்த் தாய்மார்கள் கோரியுள்ளனர். தமது உறவுகளை கண்டுபிடித்துக்கொடுக்குமாறு கோரி கடந்த 1200 நாட்களாக அவர்கள் சுழற்சி முறையின் உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடி வருகின்றனர். எண்ணற்றவர்களை உயிர்ப்பலி கொண்ட கொடூரமான அந்த யுத்தம்  18 மே 2009  அன்று முடிவடைந்துவிட்டதாக அரசு அறிவித்த நிலையில், ஏராளமானவர்கள் அதற்கு முன்னரும் பின்னரும் அரச படைகளிடம் `சரணடைந்தனர்` அல்லது `கையளிக்கப்பட்டனர். உறவினர்களும் தெரிந்தவர்களும் அவர்களைக் கடைசியாகப் பார்த்த தருணம் அதுவே. அதன் பிறகு அவர்கள் குறித்து எந்தத் தகவலும் இல்லை. இறுதிப் போர் முடிவடைவதற்கு ஒரு வாரம் முன்னர் இலங்கை இராணுவம், கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில் போர் வலையத்தில் சிக்கியுள்ள மக்கள் அரசு முன்னெடுக்கும் `மனிதாபிமான நடவடிக்கையின்` மூலம் தமது உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள `பாதுகாப்பான பகுதிக்கு` வந்துவிடுமாறு தொடர்ந்து அறிவித்தல் விடுத்தனர். சாட்சியங்கள் இன்றி நடைபெற்ற அந்தக் `கையளிப்பு` நிகழ்வின் போது, கையளித்தவர்களும் அவர்களைப் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால் வட்டுவாகல் பாலம் போன்ற இடங்கள் உறவுகள் ஒருவரையொருவர் பார்த்த கடைசித் தருணத்துக்கு மௌனமான சாட்சியாக உள்ளது. தமது உறவுகள் காணாமல் போய், அவர்களைத் தேடும் முயற்சிகளை இன்னும் கைவிட தாய் ஒருவர், மிதவாத சிங்கள மக்கள், முற்போக்குவாதிகள், சிங்கள ஊடகங்கள் ஆகியோரிடம்- தமது முயற்சிகளுக்கு உதவி உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்ட- உதவுமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். பாதுகப்புக் காரணங்களுக்காக அவரது பெயரை வெளியிடவில்லை. வெறுப்புணர்வுக் கொள்கை காணாமல் போனவர்களை கண்டறிய தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும் நிலையில், கடிதத்தை எழுதிய அந்தத் தாய் ஆயிரம் நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற வீதிப் போராட்டங்களின் முன்னணியில் இருந்தவர். இப்போதும் அதிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. அவர் விடுத்துள்ள வேண்டுகோளில் முன்னரும் இப்போதும் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் சிங்கள ஊடகங்கள் மூலமாக சிங்கள மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு அவர்களின் மனசாட்சிகள் தட்டியெழுப்பப்பட வேண்டும். அதன் மூலம் அவர்கள் உண்மையை உணர்ந்து தொடர்ச்சியாக வந்த ஆட்சிகள் முன்னெடுத்த `வெறுப்புணர்வுக் கொள்கைக்கு` எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்று வேண்டியுள்ளார். ``அப்படியான மனமாற்றத்தின் மூலம் அவர்கள் எம்மை உடன்பிறந்தோராகப் பாவித்து, எமக்காகப் போராட முன்வரும் சூழலொன்று ஏற்பட வேண்டும் என்று`` சிங்கள மக்களுக்கு விடுத்துள்ள உருக்கமான அந்த வேண்டுகோளில் கோரியுள்ளார். இலங்கை அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ நா மனித உரிமைகள் ஆணையத்தில் இணைந்து முன்மொழிந்த தீர்மானத்தை விலக்கிக் கொள்வதாக அறிவித்து சில மாதங்கள் ஆகியுள்ள நிலையிலும், போர் முடிந்து அரச படைகளிடம் தமது உறவுகளை கையளித்து பதினோரு ஆண்டுகளாகும் ஆகும் நிலையிலும் அவரது உருக்கமான அந்த வேண்டுகோள் வந்துள்ளது. ``தேசிய நல்லாட்சி அரசாங்கம்`` தம்மைக் கூறிக்கொண்ட முந்தைய அரசு நம்பகத்தன்மை வாய்ந்ததொரு விசாரணையை சர்வதேச பங்களிப்புடன் முன்னெடுத்து, அதன் மூலம் இறுதிகட்டப் போரில் இடம்பெற்றவகைகளுக்கு பொறுப்புக்கூற வழிசெய்யும் தீர்மானமொன்றை ஐ நாவின் இணைந்து முன்மொழிந்தது. தற்போது வெளிநாட்டு உறவுகள் அமைச்சராக இருக்கும் தினேஷ் குணவர்தன முந்தைய அரசாங்கம், ``அப்போது உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இணக்கப்பாட்டு வழிமுறைகளைப் புறந்தள்ளி, அதுவரை இல்லாத வகையில், நாடுகளுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் இலங்கையின் வெளியுறவுக் கொள்கைக்கு முரணாக, நாட்டில் நிலவும் சூழல் தொடர்பில், ஐ நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் 30/1 ஐ இணைந்து முன்மொழிந்தது`` என்று விமர்சித்துள்ளார். எனினும் கடந்த ஒரு தசாப்தமாக, எந்த அரசும், `சரணடைந்த, காணாமல் போன அல்லது கையளிக்கப்பட்ட நபர்கள்` அல்லது வேறு எந்தப் பெயரில் அதை அழைத்தாலும், பாதிக்கப்பட்டோர்களுக்கு அவர்கள் குறித்து எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. போராட்டங்களில் உயிரிழந்த எழுபது பேர் இலங்கை படையினரிடம் கையளிக்கப்பட்ட தமது உறவுகளை, கடந்த பத்தாண்டுகளாக உறவுகளைத் தேடும் போராட்டங்களில் குறைந்தது 70 பெற்றோர் உயிரிழந்துள்ளனர். அந்தத் தாயின் வேண்டுகோள் கடிதத்தின், நகலை நாம் கண்டோம். அதில் தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசுகள் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான அலுவலகம்-ஓ எம் பி- எனும் அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உள்ளூர் விசாரணைகளை முன்னெடுப்பதாக ``சர்வதே சமூகத்தை ஏமாற்றியுள்ளன`` என்று சாடியுள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமொன்றின் மூலம் உருவாக்கப்பட்ட அந்த ஓ எம் பி அமைப்பு, காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி, அவர்களைக் கண்டுபிடித்து, குடும்பத்தாருக்குத் தகவல்களை தெரிவித்து, இழப்பீடுகளை வழங்குவதற்கான ஆணையைக் கொண்டிருந்தது. எனினும் இதுவரை அந்த அலுவலகத்தின் மூலம் காத்திரமான முடிவுகள் ஏதும் ஏற்படவில்லை. கடந்த பத்தாண்டுகளாக, இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்று காணாமல் போனவர்களில் ஐந்து பேரைக் கூட இதுவரை கண்டுபிடிக்காத ஓ எம் பி அமைப்பின் மீது நம்பிக்கையிழந்து விட்டதாகக் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர். ``தற்போது ஆட்சியில் உள்ளவர்களுக்கு எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியும். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை சர்வதேசச் சமூகம் கூற வைக்க வேண்டும் அல்லது அவர்களே தாமாக வந்து உண்மையை வெளியிட வேண்டும்`` ஆனால் இலங்கை அரசோ, ஐ நா தீர்மானம் 30/1 `தேசிய நலனை குறைத்து மதிப்பிட்டு, தேசியப் பாதுகாப்பை விட்டுக் கொடுத்து, தேசியப் புலனாய்வு நடவடிக்கைகளைப் பலவீனப்படுத்தி, நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களை உதாசீனப்படுத்தியது`` என்று கூறுகிறது. ``நாட்டில் 30 ஆண்டுகள் நடைபெற்ற யுத்தம் மற்றும் உயிரிழப்புகள் ஆகிய இரண்டு குறித்தும் தவறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன`` காணாமல் போன தமது உறவுகள் குறித்து அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை மட்டுமே அளித்தன, காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்து மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தத் தாயின் உருக்கமான கடிதம் கூறுகிறது. போரினால் பாதிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறும் அரசியல் கட்சிகள், காணாமல் போன உறவுகளை மீட்கவோ அவர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுத்தரவோ போதிய அளவுக்குச் செய்யவில்லை என்றும் அந்தக் கடிதம் கூறுகிறது. ஐ நா மற்றும் இதர அமைப்புகளுடன் தாங்கள் தொடர்ந்து செயல்பட விரும்புவதாக இலங்கை அரசு ஐ நா மனித உரிமைகள் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது. இதில் மனித உரிமைகள் கடப்பாடுகளும் அடங்கும். எனினும் கடந்தகால அனுபவங்களை வைத்துப் பார்க்கும் போது, காணாமல் போனவர்கள் குறித்த உண்மைகளைத் தெரிவிப்பதற்கு இலங்கை அரசுக்கு அரசியல் உறுதிப்பாடோ அல்லது முன்னுரிமையோ இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி வலிந்து காணாமல் ஆக்கப்படுவது குற்றமாக்கப்பட்டுள்ளது. ஊடகச் சுதந்திர அட்டவணையில் இலங்கை மிகவும் கீழேயுள்ள நிலையில், சிங்கள ஊடகங்கள் போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களின் வேதனை மற்றும் நிலையைச் தென்னிலங்கை மக்களுக்கு காழ்ப்புணர்ச்சியின்றி எடுத்துக் கூற சிங்கள ஊடகங்கள் முன்வருமா? அதன் மூலம் சிங்கள மக்களின் மனசாட்சியை தட்டியெழுப்பி, தங்கள் வாக்குகள் மூலம் வெற்றி பெற்று இன்று நாட்டையும் அரசையும் ஆளும் ஆட்சியாளர்களிடமிருந்து- போரினால் பாதிக்கப்பட்டு தமது உறவுகளை தேடி அலைந்து-சொல்லொனாத் துன்பங்களையும் துயரங்களையும் எதிர்கொண்டு-தமது உறவுகள் குறித்து எந்தவொரு தகவலும் தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு நீதி கிடைக்க உதவுவதற்கு அவர்கள் முன்வருவார்களா?   https://www.virakesari.lk/article/83415
  • மூன்று கிலோ கிராம் வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது துசித குமார  தர்காநகர் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், மூன்று கிலோ கிராம் நிறையுடைய வல்லப்படைகளை, மோட்டார் சைக்கிளில் கொண்டுச்சென்றவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  வித்தியாலய பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பின்னர் சந்தேக நபரின் வீட்டைச் சோதனை செய்தபோது, ஒரு தொகை சட்டவிரோத சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.  இவ்வாறு 200 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வீட்டை சோதனையிட்டபோது, கலகம் ஏற்படுத்திய மேலும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.  http://www.tamilmirror.lk/மேல்-மாகாணம்/மனற-கல-கரம-வலலபபடடயடன-ஒரவர-கத/95-251401   http://srilankamuslims.lk/வல்லப்பட்டை-என்றால்-என்ன/