• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
தமிழ் சிறி

வெளிநாட்டிலிருந்து வந்த மத போதகர் உட்பட 9 பேர் தேவாலயத்துக்குள்ளேயே தனிமைப்படுத்தல்!

Recommended Posts

1 hour ago, ரதி said:

சரி இந்துமதம் சாக்கடை அதை ஒழித்த பின் தாயகத்தில் என்ன செய்வதாக உத்தேசம்?

சாக்கடை அழிந்த பின்பு 
சுத்தமாகவும் சுகாதாரமாகவும் 
ஒரு சாதாரண ஆறாறிவு மனிதனாக வாழ்வதுதான்.
இது என்ன கேள்வி? 

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
45 minutes ago, Maruthankerny said:

இல்லாத மாயை அழிந்தால்தான் 
நாம் என்ன என்ன அருமைகளை இழந்தோம் என்ற உண்மை தமிழனுக்கு புரியும். 
இந்த சாக்கடைக்குள் அழிந்த தமிழனின் உழைப்புகள் உங்கள் கண்களுக்கு தெரியவில்லை 
அதனால்தான் இப்படி ஒரு மாயையை நம்புகிறீர்கள். 
உங்களுக்கு இந்த நிலைமை எனும்போது ... அப்பாவிகளின் நிலையை யோசித்துப்பாருங்கள்.?

😍 நான் மதத்தை முழுதாக நம்பவும் இல்லை மறுக்கவும் இல்லை.  🤩

ஆனால், எனது கருத்தாடல் என்னைப்பற்றியது அல்ல. எம்மைப்பற்றியது.  

மனிதன் இருக்குவரை மதமும் இருக்கும். ஆனால், அதன் தாக்கம் சமூகத்தில் குறைவடைய பல காரணிகள் உண்டு, 

1. இலங்கை போன்ற மதம் பிடித்த நாட்டில் மாற்றம் முதன்மை மதத்தின் மத்தியில் இருந்து வரவேண்டும். 
2. மாயை எல்லா மதத்திலும் மாறும்பொழுதே உங்கள் கனவு பலிக்கும் 

3. சமூகத்தில் அறிவு , பொருளுதாராம் வளர மதத்தின் தாக்கம் குறையும் 
4. ஆனால், அதனால் முழுமையாக மறைக்க முடியாது ( ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் உதாரணம்)    

Edited by ampanai

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, Rajesh said:

நீங்க (அதான் மதமாற்ற கோஷ்டி) முதல்ல சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடு இல்லை என்டு பச்சைப் பொய்ச் சொல்லிக்கொண்டு சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடு பார்க்கிற உங்க ஆட்களை திருந்ததுங்கோ பாப்பம். நீங்க திருந்தினா உங்க மதமாற்ற வியாபாரம் செய்ற உங்க ஆட்களால புகுத்தப்பட்ட சாதி, பிரிவு, பிரதேச வேறுபாடுகள் தானா காணாம போய்டும். 

கொஞ்ச நாளுக்கு  முந்தி எனக்கு நல்ல பழக்கமான ஒரு லோயற சந்திக்க அவரட ஒப்பீசுக்கு  போயிருந்தன். கதச்சுக் கொண்டிருக்கேக்க அவற்ர ஸ்ராப் ஒராள் வந்து லோயறட்ட, ஒரு கிளயன்ற்ருக்கு எப்படிச் சொன்னாலும் புரிஞ்சு கொள்ளுரார் இல்லயயெண்டு சொன்னா. லோயரரும் ஆள வரச் சொல்லி திரும்பத்திரும்ப விளங்கப்படுத்திப் பார்த்தார். கிளயன்ருக்கு ஒரு ......... விளங்கயில்ல. கடசியா லோயர் கேட்டார் " தம்பி நீ என்ன படிச்சனீ " 

கிளயன்ரும்  தான் படிச்சத சொன்னார். லோயர் சொன்னார் " நீ கொஞ்சம் கூடப் படிச்சிருக்க வேணும் . அப்பத்தான் நான் சொல்லுறது உனக்கு விளங்கும்."

(உண்மையில் இது நடந்த சம்பவம். லோயர் கதச்ச முறையில கிளயன்ற் அவருக்கு  ஏற்கனவே தெரிஞ்சவர் போல இருந்தது)

எனக்கு ஏனென்று தெரியவில்லை. இந்தக் சம்பவத்த இப்ப  சொல்லவேணும் போல இருந்தது. சொல்லிப்போட்டன். பெரியவா குற கிற நினைக்கப் படாது. 

Share this post

Link to post
Share on other sites
55 minutes ago, ampanai said:

😍 நான் மதத்தை முழுதாக நம்பவும் இல்லை மறுக்கவும் இல்லை.  🤩

ஆனால், எனது கருத்தாடல் என்னைப்பற்றியது அல்ல. எம்மைப்பற்றியது.  

மனிதன் இருக்குவரை மதமும் இருக்கும். ஆனால், அதன் தாக்கம் சமூகத்தில் குறைவடைய பல காரணிகள் உண்டு, 

1. இலங்கை போன்ற மதம் பிடித்த நாட்டில் மாற்றம் முதன்மை மதத்தின் மத்தியில் இருந்து வரவேண்டும். 
2. மாயை எல்லா மதத்திலும் மாறும்பொழுதே உங்கள் கனவு பலிக்கும் 

3. சமூகத்தில் அறிவு , பொருளுதாராம் வளர மதத்தின் தாக்கம் குறையும் 
4. ஆனால், அதனால் முழுமையாக மறைக்க முடியாது ( ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் உதாரணம்)    

மனிதனின் அறிவு என்பது லாஜிக் ரீதியாகவே சிந்திப்பது 
லாஜிக் அல்லாத விடயங்கள் ஒரு முழுமையான எண்ண வடிவை 
மனிதனின் அறிவில் பெறுவதில்லை.
ஏன்? எப்படி? எவ்வாறு? எதுக்காக? என்ற வினாக்களுடனும் 
அதற்காகன விடைகளுடனும் பயணிப்பதே மனித அறிவு 

ஏன் பிரபஞ்சம்? ஏன் பிறப்பு? ஏன் இறப்பு?
எனும்போது கடவுள் இலகுவான விடையாக மனித அறிவுக்கு கிட்டுகிறது 
ஏன் கடவுள்?  எனும்போதுதான்  மதங்கள் பிறக்கின்றன 
ஒவ்வொரு மதமும் ஒரு விளக்கத்துடன் வருகிறது.

இந்து என்று ஒரு மதமே இல்லை 
வெள்ளைக்காரன் இந்தியா வந்தபோது பொவுத்தம் இஸ்லாம் கிறிஸ்தவம் கடந்த எல்லாம் 
இந்து என்று அவன்தான் பெயர் சூட்டினான். பிரிஸ்ட்டிஸ் ஆளுமைக்கு உட்படாத பஞ்சாப் சீக்கியர்கள் 
தமது சிக் மதத்தை அதனால்தான் இந்த இந்து என்ற இல்லாத மதத்துக்குள் கொண்டுவரது பாதுக்காக்க முடிந்தது  அவர்கள்மதம் இன்றும் தனித்துவமாக இருக்கிறது. 

தமிழர்களின் சைவம் 1000-1500 வருடங்கள் முன்பே பிழைப்புக்காக வந்த பார்ப்பானின் 
சதியால் அழிய தொடங்கி விட்டது குழுமம் குழுமமாக பாரிய தொடர்புகள் இல்லாமல் மக்கள் வாழ்ந்தது 
அவனுக்கும் வசதியாகி போனது. 
மதங்கள் இருப்பதால் ஏதும் தீமை இருப்பதாக தெரியவில்லை .மதம் பிடித்த மனிதர்களளால்தான் மனிதம் அழிகிறது. இந்து என்று ஒரு மதம் இருந்தால் அதில் தப்பு இல்லை எல்லா மதங்கள்போலவும் சில குறைகள் தவறுகள் இருக்கும் அதை திருத்திக்கொண்டு தொடர முடியும். இங்கு அப்படி ஒன்று இல்லாததுதான் பிரச்சனையே. சைவர்களின் சிவனின் தத்துவம் வேறு .... வைஷ்ணவர்களின் கிருஷ்ண தத்துவத்தின் அடிப்படையே வேறு.இரண்டும் வேறு வேறு என்பதை தென் இந்தியா கடந்தால் தெளிவாக காணலாம்.
தமிழர்கள் எல்லையை கடந்தால் ........பிள்ளையாரின் சொந்த தம்பி முருகனே செத்துவிடுவார் அவரை காண முடியாது. இந்த அரைகுறைகளை மதம் என்று ஒரு அறிவார்ந்த மக்கள் மத்தியில் வாழவைக்க முடியாது.
இதை தொடர்வதென்றால் ஒரே ஒரு வழிதான் உண்டு மக்களை பைத்தியங்களாக கேள்விகள் இல்லாத மூன்று  அறிவு நாலறிவு  நிலையில் வைத்திருக்க வேண்டும். அதைத்தான் பார்ப்பான் தெளிவாக சிந்தித்தது செய்கிறான். தமிழர்களுக்கு ஒரு தன்னார்வ அரசு அமைவதை ஏன் பார்ப்பான் வெறுக்கிறான்? அந்த அரசு மக்களை சிந்தனை நோக்கி தள்ளலாம் எனும் அச்சம்தான். அதனால் சாதாரண மனித அறிவின் லொஜிக் ரீதியான சிந்தனை கூட இல்லாமல் செய்து வைத்திருப்பதால்தான்  ... இலகுவாக  அல்லேலூயா  போன்ற கோஸ்ட்டிகளால் கூட கூட்டி செல்ல முடிகிறது. எத்தனை கத்தோலிக்கர்கள்  முஸ்லிம்கள்  மதம் மாறுகிறார்கள்? அவர்களுக்கு லாஜிக் ரீதியான ஓர் விளக்கம் ஏற்கனவே உண்டு 
எமக்கு கடவுள் இல்லை ... வழிபாட்டு முறைமை இல்லை ........ எதுவித கடமையும் இல்லை 
ஆகவே ஒருவன் ஒரு ஒரு துன்பத்தில் இருக்கும்போது ... இன்னொருவன் வந்து கடவுளை பார் உனக்கு துணையாக இருக்கிறார் எனும்போது அவனுக்கு தன்னம்பிக்கை வருகிறது.
எமக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? பிராமணன் வந்து மணி அடித்து சம்ஸ்கிருதத்தில்  கூப்பிட்டால்தான் எமது பாம்பு கடவுள் பசு கடவுள்களுக்கு கேட்க்கும். 

தமிழ் முருகனுக்கு தமிழ் புரியாது என்ற பைத்தியக்காரத்தனம் 
எவ்வாறு வடிமைக்கப்பட்டு வழிநடத்த படுகிறது?

இன்றைய தொழிநுட்ப உலகில் சோசியல் மீடியாவின் தாக்கம் இருப்பதால்தான் 
பல விடயங்களை நான் நீங்கள் கூட தெளிவாக பார்க்கிறோம்.
ஏன் சீமான் செபஸ்டிடியூனாகவும்  திருமுருகன் காந்தி டேனியல் ஆகவும் சித்தரிக்க படுகிறார்கள் 
அவர்கள் அவ்வாறுதான் இருந்தால் கூட அவர்கள் அரசியலுக்கும் தத்துவத்துக்கு என்ன பிரச்சனை? 
இன்றைய சோசலிமீடியா இல்லாது இருந்து இருப்பின் எனக்கும் உங்களுக்கும் கூட அவர்கள் செபஸ்டியனாகவும்  டானியல் ஆகாவும்தான் தெரிந்திருக்கும். இந்த சாதி கோட்ப்பாடு எங்கிருந்து உருவாகிறது ? 

மதம் ஒன்று இருந்தால் அதை சீர்படுத்தி தொடர்வதை பற்றி சிந்திக்கலாம் 
இல்லாத மாயைகளை கடந்து போவதுதான் சிறப்பு 

 • Like 2
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
36 minutes ago, Maruthankerny said:

மதம் ஒன்று இருந்தால் அதை சீர்படுத்தி தொடர்வதை பற்றி சிந்திக்கலாம் 
இல்லாத மாயைகளை கடந்து போவதுதான் சிறப்பு 

என் பார்வையில் மதமும் ஒரு நிறுவனத்தின் விற்பனைப்பொருளே. திருப்பதியில் மட்டுமல்லாது வத்திக்கானிலும் புத்தகாயக்களிலும் மக்காவிலும் ஜெரூசலத்திலும் ..... 

தான் மட்டுமே மாறுவதால் உலகம் மாறிவிடும் என்பதும்; நான் இவனை மாற்றிவிட்டால் அவனும் மாறிவிடுவான் என்பதும்; நடக்காது.😞

அப்படி இருந்தால் நீங்களும் நானும் இதை இன்று கதைக்கும் தேவை இருந்திருக்காது.
எங்கள் பாட்டன் காலத்திலேயே தீர்வு கிடைத்திருக்கும். எங்கள் பேரன்மாரும் இதையே விவாதிக்கும் நிலை  🙄

ஆனால், மூட நம்பிக்கைகைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியதில் மாற்றுக்கருத்து இல்லை. 

 • Like 1

Share this post

Link to post
Share on other sites

இந்த‌ திரியில் எழுதினா உற‌வுக‌ளுக்குள் விரிச‌ல் ஏற்ப‌டும் , பிற‌க்கு அது தேவை இல்லா ச‌ண்டையில் போய் முடியும் / இது நூற்றுக்கு நூறு உண்மை 😉

நேற்று ந‌ட‌ந்த‌ காயத்தை எண்ணி
ஞாயத்தை விடலாமா ஞாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ
விட்டுச் செல் 🤞🙏

என்ற‌ சொல்லுக்கு ம‌திப்பு குடுத்து இந்த‌ திரியில் எழுதாம‌ விட்ட‌ ( குசா தாத்தாவுக்கு கோடான‌ கோடி ந‌ன்றிக‌ள் 🙏

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, Maruthankerny said:

ஒருவன் ஒரு ஒரு துன்பத்தில் இருக்கும்போது ... இன்னொருவன் வந்து கடவுளை பார் உனக்கு துணையாக இருக்கிறார் எனும்போது அவனுக்கு தன்னம்பிக்கை வருகிற

புண்ணுள்ளவன், தனக்கு மருந்து போட்டு வலியை தீர்க்கக்கூடிய மருத்துவனை தேடிப்போவது தவிர்க்க இயலாதது. அது அவனுடைய அடிப்படை உரிமை. அதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.தடுக்க வேண்டுமெனில் நாம் அவன் வலியைப்போக்கி, ஆறுதற்படுத்த வேண்டும். அதில்லாமல் நானும் மருந்திட மாட்டேன், மற்றவர்களும் போடக்கூடாது. என்பதன் அர்த்தம் என்ன? அவன் வலியோடும், வேதனையோடும் அழியவேண்டும் என்கிற குரூர புத்தியா? மருந்திடுபவன்  அவனது வலியை குறைக்காமல், நோயாளியிடம் வேறொன்றை எதிர்பார்த்தால் வலியுள்ளவன்  அங்கில்லாமல் திரும்பி விடுவான். இல்லை அங்கே தன் வலி நீங்கி ஆறுதல் அடைவானாயின் அவன் அங்கே இருப்பதால் யாருக்கு என்ன நட்டம்?  அதை தடுப்பது அநாகரீகம்என்று கூட நமக்கு புரியாமல் வாதாட்டம் செய்கிறோம்.  தொடர்ந்து இருப்பதும்,  வெளியேறுவதும் மருந்து தேடுபவனதும், போடுபவனதும் பிரச்சனை. இதில் நமக்கென்ன லாபம் நட்டம் வந்துவிடப்போகுது? எங்களுக்கு சவாலாய் எழுந்துவிடப் போகிறார்கள் என்கிற அச்சமா? 

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ampanai said:

என் பார்வையில் மதமும் ஒரு நிறுவனத்தின் விற்பனைப்பொருளே. திருப்பதியில் மட்டுமல்லாது வத்திக்கானிலும் புத்தகாயக்களிலும் மக்காவிலும் ஜெரூசலத்திலும் ..... 

தான் மட்டுமே மாறுவதால் உலகம் மாறிவிடும் என்பதும்; நான் இவனை மாற்றிவிட்டால் அவனும் மாறிவிடுவான் என்பதும்; நடக்காது.😞

அப்படி இருந்தால் நீங்களும் நானும் இதை இன்று கதைக்கும் தேவை இருந்திருக்காது.
எங்கள் பாட்டன் காலத்திலேயே தீர்வு கிடைத்திருக்கும். எங்கள் பேரன்மாரும் இதையே விவாதிக்கும் நிலை  🙄

ஆனால், மூட நம்பிக்கைகைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டியதில் மாற்றுக்கருத்து இல்லை. 

இப்போது நான் இந்து என்ற போலி மதம் பற்றியே இங்கு எழுதுகிறேன் 
முதலில் நான் கூறியதுபோல மற்றவை எனக்கு இப்போ தேவை இல்லை.

ஆனால் மதம் என்று வரும்போது ... இப்போது உலகில் எங்கேனும் ஒரு மதமும் இல்லை 
மத நிறுவனங்கள்தான் உண்டு இவை நன்கு திட்டமிட்டு குறித்த சாரார் மட்டும் கொழுத்த 
லாபம் காணும்  வகையில் நடைமுறை படுத்த படுகிறது.
எல்லா இடமும் கீழ் நிலை மக்கள் முட்டாள்களாக இருந்து 
ராணிக்கு உணவு  சேகரித்து இறக்கும் எறும்பு போலத்தான் இருக்கிறார்கள்.
சில மாதங்கள் நேரிடையான துஸ்பிரயோகங்களை பெண்கள் மீதும் 
கீழ் தட்டு மக்கள் மீதும் திணிக்கிறார்கள். 

மற்ற மதங்கள் எல்லாம் வெட்டி கிழிக்கின்றன என்று நான் எழுத முன்வரவில்லை.
அடி மட்ட மக்களை மூளை சலவை செய்வதில் இருந்து பணம் பறிப்பது வரை எல்லா 
மதமும் செய்துகொண்டுதான் இருக்கிறது.

திபெத் தாலை லாமா கூட பச்சை பொறுக்கிதான் 
சீனா ஆக்கிரமித்த பின்பு லாமக்க்ளின் பிடியில் இருந்து விடுபட்ட திபெத்தியர்கள் லட்ஷ கணக்கில் உண்டு. 
இப்போது இந்த கொரோன வைரஸ் நேரம் வத்திக்கான் இத்தாலியில் என்ன கிழிக்கிறது?

எங்கள் வீட்டுக்குள்ளேயே சாக்கடை ஓடும் லட்ஷணத்தில் 
அடுத்தவன் முதுகை சொறிந்தால் .... அவன் ஒரு கேள்வி கேட்டால் அது நிஜாஜம் தானே?
முதலில் இந்த சாக்கடையை கழுவுவோம் 

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, Maruthankerny said:

எங்கள் வீட்டுக்குள்ளேயே சாக்கடை ஓடும் லட்ஷணத்தில் 
அடுத்தவன் முதுகை சொறிந்தால் .... அவன் ஒரு கேள்வி கேட்டால் அது நிஜாஜம் தானே?
முதலில் இந்த சாக்கடையை கழுவுவோம் 

நாம் ஒரு பலமான நிலையில் இருந்தால் இல்லை எமக்கென ஒரு ஆளக்கோட்டிய தேசம் இருந்தால் நிச்சயம் கழுவலாம்., கழுவ வேண்டும். சட்டங்களை உருவாக்கி, மக்கள் ஆதரவுடன் அமுல்படுத்த வேண்டும் 

சொந்தமாக ஒரு நாடு இல்லை  சட்ட அமுலாக்கல் வலிமை இல்லாமல் கழுவ ஆரம்பித்தால், நாம் அடையாளம் இல்லாமல் போய்விடும் சாத்தியங்களும் உண்டு. மதம் மாறி. மொழி மாறி ... இனமாய் மாறிவிடுவோம். அது நூறுவீதம் நடக்காது என்ற வாக்குறுதி தந்தால் நிச்சயம் எங்கள் சாக்கடையை கழுவலாம்.  

Share this post

Link to post
Share on other sites
2 minutes ago, ampanai said:

தொடர்ந்து பதில் எழுதுவதால் உங்களுக்கு எதிராக எழுதுகிறேன் என்றில்லை 
எனது நிலைப்பாடு பற்றி விவரிக்கிறேன் 
இவை ஒன்றும் எமக்கு இல்லாமல் போனதுக்கு காரணம் இந்த ஏமாற்று மதம்தானே?
இத்தனை போலி இந்து அமைப்புகள் இந்தியாவில் இருந்தும் 
ஈழத்தில் இவ்வளவு போலி இந்து கோவில்கள் அழிந்த போதும் ஒருவன் கூட வாய் திறக்கவில்லையே?
என்ன காரணம்?

1280px-Secretary_Kerry_Shakes_Hands_With_Indian_Ambassador_Dr._S._Jaishankar.jpg
இந்த நச்சு பாம்பு இவ்வளவு காலமும் எங்கு எங்கு எல்லாம் நஞ்சை கக்கிக்கொண்டு 
திரிந்தது என்று எத்த்தனை எல்லா தமிழருக்கு தெரியும்?
இவளவு நஞ்சையும் ஏன் இவர்கள் கக்கிறார்கள்? 

Share this post

Link to post
Share on other sites
27 minutes ago, Maruthankerny said:

தொடர்ந்து பதில் எழுதுவதால் உங்களுக்கு எதிராக எழுதுகிறேன் என்றில்லை 
எனது நிலைப்பாடு பற்றி விவரிக்கிறேன் 
இவை ஒன்றும் எமக்கு இல்லாமல் போனதுக்கு காரணம் இந்த ஏமாற்று மதம்தானே?
இத்தனை போலி இந்து அமைப்புகள் இந்தியாவில் இருந்தும் 
ஈழத்தில் இவ்வளவு போலி இந்து கோவில்கள் அழிந்த போதும் ஒருவன் கூட வாய் திறக்கவில்லையே?
என்ன காரணம்?

நாம் இழந்ததும் கேட்பதும் அதிகார பரவலாக்கல் ( காணி, நீதி பொருளாதாரம் உட்பட்ட அரசியல் பரவலாக்கல்),  ஒரு நீண்ட வரலாற்றை கொண்ட இனம் சார்ந்தது. 

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, ampanai said:

நாம் ஒரு பலமான நிலையில் இருந்தால் இல்லை எமக்கென ஒரு ஆளக்கோட்டிய தேசம் இருந்தால் நிச்சயம் கழுவலாம்., கழுவ வேண்டும். சட்டங்களை உருவாக்கி, மக்கள் ஆதரவுடன் அமுல்படுத்த வேண்டும் 

சொந்தமாக ஒரு நாடு இல்லை  சட்ட அமுலாக்கல் வலிமை இல்லாமல் கழுவ ஆரம்பித்தால், நாம் அடையாளம் இல்லாமல் போய்விடும் சாத்தியங்களும் உண்டு. மதம் மாறி. மொழி மாறி ... இனமாய் மாறிவிடுவோம். அது நூறுவீதம் நடக்காது என்ற வாக்குறுதி தந்தால் நிச்சயம் எங்கள் சாக்கடையை கழுவலாம்.  

இந்த பதிவில் நீங்கள்  கூறியிருப்பது சஎகடையை கழுவினால் அடையாளம. இல்லாமல் போய்விடுவோம் என்று. அப்படியானால் எமது அடையாளம் அந்த சாக்கடை என்று கூறுகின்றீர்களா?

 எமது மொழி அந்த சாக்கடையை  விட எவ்வளவு உயர்ந்தது என்பதை மறந்து எமது உயரிய மொழியை அந்த சாக்கடை மதத்துடன் கலக்கின்றீர்களே! அந்த சாக்கடையுடன. சேர்ந்தால்  எமது மொழி காட்டுமிராண்டி  மொழியாகி விடும். அது அறிவியல்  மொழியாக தனது பரிணமிக்க வேண்டும். 

12 hours ago, Maruthankerny said:

சாக்கடை அழிந்த பின்பு 
சுத்தமாகவும் சுகாதாரமாகவும் 
ஒரு சாதாரண ஆறாறிவு மனிதனாக வாழ்வதுதான்.
இது என்ன கேள்வி? 

இந்த பதிலுக்கு ஆயிரம் நன்றிகள். இதை விட சுருக்கமாக கூற முடியாது. 

Share this post

Link to post
Share on other sites
12 hours ago, ampanai said:

3. சமூகத்தில் அறிவு , பொருளுதாராம் வளர மதத்தின் தாக்கம் குறையும் 
4. ஆனால், அதனால் முழுமையாக மறைக்க முடியாது ( ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீன நாடுகள் உதாரணம்)    

நன்றி  அம்பனை. நீங்கள் கூறிய இந்த  நிலை தமிழருக்கு வந்தாலே போதும்  தமிழரின் வெற்றி ஆரம்பிக்கிறது என்று அர்ததம். மதத்தின தாக்கம் குறைந்து அறிவுக்கும் அதனுடன் இணைந்த சமூக வாழ்விற்கு  தமிழர்  முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினால் வியக்கத்தக்க பல சாதனைகளை புரிய முடியும். 

Share this post

Link to post
Share on other sites
On 3/30/2020 at 1:00 PM, ரதி said:

மருதர் ,நான் உங்கள் அளவுக்கு இவைகளை கரைத்து குடிக்கவில்லை ...ஆனால் பாரதம்,ராமாயணம்  போன்றவற்றை எப்படி ஒரு மனிதன் /சமூகம் பின்பற்ற கூடாது அல்லது கடைப்பிடித்தால் ஏற்படும் தீமைகளை இந்த இரு இரிகாசங்கள் படிப்பதன்  மூலம் பாடம் படித்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் 

 ரதி  நீங்கள் கூறுவது உண்மையானால் செய்யக்கூடாத‍த்தை செய்த பலர்  இந்த இரண்டு இதிகாசங்களிலும் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றபடுவது ஏன்.  அவர்கள் உயர் சாதி என்பதை தவிர வேறு என்ன உண்டு?  அதன் மூலம் அந்த இதிகாசங்கள் மக்களுக்கு கூறவரும் செய்தி என்ன?

உதாரணமாக துரோணாச்சாரியார் மகாபாரத‍த்தில் உயர்ந்த இடத்தில் வைத்து போற்றபடும் ஒரு கதாபாத்திரம். இன்றும் இந்திய விளையாட்டு துறையில் சிறந்த பயிற்சியாளருக்கான விருதாக துரோணாச்சாரியார் விருது கொடுக்கப்படுகிறது. இத்த‍னைக்கும் துரோணாச்சாரியார் செய்த‍து என்ன?  கீழ் சாதி என தன்னால் துர‍த்தபட்ட ஏகலைவன் சிறந்த வில்வித்தையாளனாகியதை பொறுக்க மாட்டாமல் அவனது கட்டை விரலை கேட்டு அவனது திறமையை மழுங்கடித்த‍த்துதான். இவ்வானான கீழ்தரமான செயலை செய்த துரோணாசாரியார் என்ற கதாபாதிரத்திற்கு மகாபாரத‍த்தில் உயர்ந்த மரியாதையான இடம் வழங்கபட்டுள்ளது. இதன் மூலம் சொல்ல வந்த செய்தி எம்மால் தாழ்த்த‍ப்பட்ட எவரும் படிக்க‍கூடாது. அவ்வாறு படிப்பது தர்ம‍ம் அல்ல என்பதே. 

உண்மையில் சிறந்த பயிற்சியாளர் என்றால் திறமையானவர்களை ஊக்குவிப்பது தான். ஆனால் துரோணாச்சாரியார் போன்ற கீழ்தரமானவர்களின் பெயரில் சிறந்த பயிசியாளர் விருது. அதனால் தான் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு குறிப்பிட்ட அவாள்கள் மட்டுமே அதிக எண்ணிக்கை. மகாபாரதம் காட்டிய தர்ம்ம் இது தான். 

Share this post

Link to post
Share on other sites
5 hours ago, tulpen said:

இதற்கு நான் ஏற்கனவே மருதருக்கு வடிவாய் விளக்கம் கொடுத்துட்டேன் 

16 hours ago, பையன்26 said:

இந்த‌ திரியில் எழுதினா உற‌வுக‌ளுக்குள் விரிச‌ல் ஏற்ப‌டும் , பிற‌க்கு அது தேவை இல்லா ச‌ண்டையில் போய் முடியும் / இது நூற்றுக்கு நூறு உண்மை 😉

நேற்று ந‌ட‌ந்த‌ காயத்தை எண்ணி
ஞாயத்தை விடலாமா ஞாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ
விட்டுச் செல் 🤞🙏

என்ற‌ சொல்லுக்கு ம‌திப்பு குடுத்து இந்த‌ திரியில் எழுதாம‌ விட்ட‌ ( குசா தாத்தாவுக்கு கோடான‌ கோடி ந‌ன்றிக‌ள் 🙏

பையா இப்படி எல்லோரும் விலகிப் போவதால் தான் இவர்களது கொட்டம் கூடிக் கொண்டு போகின்றது 

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, tulpen said:

நன்றி  அம்பனை. நீங்கள் கூறிய இந்த  நிலை தமிழருக்கு வந்தாலே போதும்  தமிழரின் வெற்றி ஆரம்பிக்கிறது என்று அர்ததம். மதத்தின தாக்கம் குறைந்து அறிவுக்கும் அதனுடன் இணைந்த சமூக வாழ்விற்கு  தமிழர்  முக்கியத்துவம் கொடுக்க தொடங்கினால் வியக்கத்தக்க பல சாதனைகளை புரிய முடியும். 

இவை ஒன்றும் வராமலேயே தமிழ் இனம்  உலகில் அழிந்துவிடும் சந்தர்ப்பங்களே அதிகம் உண்டு. 

 • Haha 1

Share this post

Link to post
Share on other sites
19 hours ago, Maruthankerny said:

சாக்கடை அழிந்த பின்பு 
சுத்தமாகவும் சுகாதாரமாகவும் 
ஒரு சாதாரண ஆறாறிவு மனிதனாக வாழ்வதுதான்.
இது என்ன கேள்வி? 

இலங்கையை எடுத்து கொண்டால் இந்துக்கள்[சைவர்கள்] ,பெளத்தர்கள்,கிறிஸ்தவர்கள் ,முஸ்லீம்கள் போன்ற மத குழுமத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள் .
நீங்கள் இந்துமதம் அதனால் அந்த சாக்கடையை நீங்கள் ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ....சரி ... அடுத்து எப்படி உங்களை அடையாளப்படுத்துவீர்கள் என்று சொல்லுங்கள்?
தற்போதைய சூழ்நிலையில் எப்படி மதம் மாற்றும் குழுக்களில் இருந்து எப்படி எமது இனத்தை காப்பாற்றுவீர்கள்?
எமது இனத்தின் அடையாளம் என்ன?
ஆக்க பூர்வமான பதிலை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் .

Share this post

Link to post
Share on other sites
7 hours ago, tulpen said:

இந்த பதிவில் நீங்கள்  கூறியிருப்பது சஎகடையை கழுவினால் அடையாளம. இல்லாமல் போய்விடுவோம் என்று. அப்படியானால் எமது அடையாளம் அந்த சாக்கடை என்று கூறுகின்றீர்களா?

 எமது மொழி அந்த சாக்கடையை  விட எவ்வளவு உயர்ந்தது என்பதை மறந்து எமது உயரிய மொழியை அந்த சாக்கடை மதத்துடன் கலக்கின்றீர்களே! அந்த சாக்கடையுடன. சேர்ந்தால்  எமது மொழி காட்டுமிராண்டி  மொழியாகி விடும். அது அறிவியல்  மொழியாக தனது பரிணமிக்க வேண்டும். 

இந்த பதிலுக்கு ஆயிரம் நன்றிகள். இதை விட சுருக்கமாக கூற முடியாது. 

இன்று தாயகத்தில் ஊரடங்கு உள்ளது. அதனால் பல வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் பட்டினிச்சாவிற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஒரு 15வயது சிறுவன் மீன்பிடிக்க சென்று முதலையால் இறந்துள்ளான்.

இங்கே, மதம் சாராமல் மக்களுக்கு ஆலயங்கள் உதவவேண்டும். ஆனால், அந்தளவிற்கு அங்கில்லை மனிதாபிமானம்.  

தமிழர்களை சில சைவ கோவில்கள் உணவு கொடுத்து காப்பாற்றுகின்றன. இதை உங்களால் பாராட்ட முடியுமா? 

Share this post

Link to post
Share on other sites
16 minutes ago, ரதி said:

இலங்கையை எடுத்து கொண்டால் இந்துக்கள்[சைவர்கள்] ,பெளத்தர்கள்,கிறிஸ்தவர்கள் ,முஸ்லீம்கள் போன்ற மத குழுமத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள் .
நீங்கள் இந்துமதம் அதனால் அந்த சாக்கடையை நீங்கள் ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் ....சரி ... அடுத்து எப்படி உங்களை அடையாளப்படுத்துவீர்கள் என்று சொல்லுங்கள்?
தற்போதைய சூழ்நிலையில் எப்படி மதம் மாற்றும் குழுக்களில் இருந்து எப்படி எமது இனத்தை காப்பாற்றுவீர்கள்?
எமது இனத்தின் அடையாளம் என்ன?
ஆக்க பூர்வமான பதிலை தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் .

இலங்கையை எடுத்துக் கொண்டால் சிங்களவர்கள்,  தமிழர்கள், சோனகர்கள், பறங்கியர் ஆகிய இனத்தவர் வாழ்கின்றார்கள். இதில் 2000 ஆண்டுக்கு முன்பு திருக்குறளைத் தந்த திருவள்ளுவரின் இனமான தமிழர் என்ற அடையாளத்தவர் நாம். அந்த பெருமையான அடையாளத்துடன் கால மாற்றத்தை  ஏற்றுக் கொண்டு எம்மை update செயது வாழ்வதே மகிழ்வான வாழ்வு.

( மருதரை கேட்ட கேள்விக்கு முந்திக்கொண்டு நான் பதில் தந்ததற்கு நீங்கள் என்னை கடிந்து கொள்வது தெரிகிறது. இருப்பினும் மருதர் சிறந்த பதிலை வழங்குவார் என்று எதிர்பார்கிறேன்) 

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, tulpen said:

பதிலுக்கு நன்றி ...மருதரின் பதிலுக்கு பின் எழுதுகிறேன் 

Share this post

Link to post
Share on other sites
20 hours ago, Maruthankerny said:

சாக்கடை அழிந்த பின்பு 
சுத்தமாகவும் சுகாதாரமாகவும் 
ஒரு சாதாரண ஆறாறிவு மனிதனாக வாழ்வதுதான்.
இது என்ன கேள்வி? 

ஓம் ஓம் அதுதான் உங்கள் நாட்டின் சுத்தத்தையும் சுகாதாரத்தையும் அறிவியலையும் கொரோன விடயத்தில் நானென்ன உலகமே பார்த்து மெச்சிக்கொண்டிருக்கிறதே !

நீங்கள் உங்கள் வீட்டு சாக்கடையை மட்டும் கழுவுங்கள். அதுபோதும். மறவர்களுக்கு அவரவர் சாக்கடைகளை சுத்தம் செய்ய சுய அறிவு உள்ளது. அதை அவர்களே செய்துகொள்வார்கள்.

Share this post

Link to post
Share on other sites
17 hours ago, satan said:

புண்ணுள்ளவன், தனக்கு மருந்து போட்டு வலியை தீர்க்கக்கூடிய மருத்துவனை தேடிப்போவது தவிர்க்க இயலாதது. அது அவனுடைய அடிப்படை உரிமை. அதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.தடுக்க வேண்டுமெனில் நாம் அவன் வலியைப்போக்கி, ஆறுதற்படுத்த வேண்டும். அதில்லாமல் நானும் மருந்திட மாட்டேன், மற்றவர்களும் போடக்கூடாது. என்பதன் அர்த்தம் என்ன? அவன் வலியோடும், வேதனையோடும் அழியவேண்டும் என்கிற குரூர புத்தியா? மருந்திடுபவன்  அவனது வலியை குறைக்காமல், நோயாளியிடம் வேறொன்றை எதிர்பார்த்தால் வலியுள்ளவன்  அங்கில்லாமல் திரும்பி விடுவான். இல்லை அங்கே தன் வலி நீங்கி ஆறுதல் அடைவானாயின் அவன் அங்கே இருப்பதால் யாருக்கு என்ன நட்டம்?  அதை தடுப்பது அநாகரீகம்என்று கூட நமக்கு புரியாமல் வாதாட்டம் செய்கிறோம்.  தொடர்ந்து இருப்பதும்,  வெளியேறுவதும் மருந்து தேடுபவனதும், போடுபவனதும் பிரச்சனை. இதில் நமக்கென்ன லாபம் நட்டம் வந்துவிடப்போகுது? எங்களுக்கு சவாலாய் எழுந்துவிடப் போகிறார்கள் என்கிற அச்சமா? 

நானும் எனக்கு புண்ணிருந்தால் நானிருக்கும் நாட்டின் மருத்துவரிடம் சென்று மருந்தெடுக்கிறேன் ஆனால் அவர் ஒரு நாளும் என்னை அவரது மதத்துக்கு மாறச்சொல்லவில்லையே. ஏனென்றால் நான் அவரது சேவைக்கு பணம் கொடுக்கிறேன். 

பணமில்லாதவனை எனது மதத்திற்கு வந்தால்தான் நோயை மாற்றுவேன் என்று ஒரு மருத்துவர் சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான தெரியவில்லையா உங்களுக்கு. உங்களுக்கு அது தெரியாது ஏன்னென்றால் அதன்பின் நீங்கள் உங்களை அடையாளப்படுத்த முடியாதே!! 

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, ampanai said:

இன்று தாயகத்தில் ஊரடங்கு உள்ளது. அதனால் பல வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் பட்டினிச்சாவிற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஒரு 15வயது சிறுவன் மீன்பிடிக்க சென்று முதலையால் இறந்துள்ளான்.

இங்கே, மதம் சாராமல் மக்களுக்கு ஆலயங்கள் உதவவேண்டும். ஆனால், அந்தளவிற்கு அங்கில்லை மனிதாபிமானம்.  

தமிழர்களை சில சைவ கோவில்கள் உணவு கொடுத்து காப்பாற்றுகின்றன. இதை உங்களால் பாராட்ட முடியுமா? 

நிச்சயமாக இதைச் செய்த அந்த ஆலயங்களின் நிர்வாகப்பொறுப்பில்  உள்ள மனிதர்களைப் பாராட்டுகின்றேன். ஆலயத் திருப்பணி என்று பணத்தை வீண் விரயம் செய்யாமல் இவ்வாறான நல்ல காரியங்களுக்கு கொடுத்த அந்த மனிதர்களின் செயல் பாராட்டப்பட வேண்டியது. யுத்தம் நடைபெற்றபோது  இங்கு பல ஆலய நிர்வாகிகளுடன் இதே காரணத்திற்காக  முரண் பட்டிருக்கிறேன்.  

தற்போது பல இளைஞர்கள்  தன்னிச்சையாக மக்களுக்கு உதவி வருவதாக கேள்விப்பட்டேன. அவர்களுக்கும் வாழ்ததுக்கள்.  உலகெங்கு எங்கு பேரிடர் நடந்தாலும்  சுவிஸ்  மக்களிடம்  பல பில்லியன் பிராங்குகளைத் திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பும் சுவிஸ்.  Glückskette தற்போதய நிலைமையால் பாதிக்கப்பட்ட சுவிஸ் மக்களுக்குகாக 9 மில்லியன் நிதி திரட்டி  கொடுத்துள்ளது. அவர்களுக்கும் பாராட்டுக்கள். 

Edited by tulpen

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, பையன்26 said:

இந்த‌ திரியில் எழுதினா உற‌வுக‌ளுக்குள் விரிச‌ல் ஏற்ப‌டும் , பிற‌க்கு அது தேவை இல்லா ச‌ண்டையில் போய் முடியும் / இது நூற்றுக்கு நூறு உண்மை 😉

நேற்று ந‌ட‌ந்த‌ காயத்தை எண்ணி
ஞாயத்தை விடலாமா ஞாயம் காயம் அவனே அறிவான்
அவனிடம் அதை நீ
விட்டுச் செல் 🤞🙏

என்ற‌ சொல்லுக்கு ம‌திப்பு குடுத்து இந்த‌ திரியில் எழுதாம‌ விட்ட‌ ( குசா தாத்தாவுக்கு கோடான‌ கோடி ந‌ன்றிக‌ள் 🙏

சண்டையில் போய் முடிந்தாலும் ஒருவரும் உங்களுடன் கோவிக்கப் போவதில்லை என்கின்ற நம்பிக்கை எனக்குண்டு. பயப்படாமல் நீங்களும் கோதாவில் இறங்கி  ரெண்டு குத்து விடுங்கோ. 😂

1 hour ago, ampanai said:

இன்று தாயகத்தில் ஊரடங்கு உள்ளது. அதனால் பல வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் பட்டினிச்சாவிற்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஒரு 15வயது சிறுவன் மீன்பிடிக்க சென்று முதலையால் இறந்துள்ளான்.

இங்கே, மதம் சாராமல் மக்களுக்கு ஆலயங்கள் உதவவேண்டும். ஆனால், அந்தளவிற்கு அங்கில்லை மனிதாபிமானம்.  

தமிழர்களை சில சைவ கோவில்கள் உணவு கொடுத்து காப்பாற்றுகின்றன. இதை உங்களால் பாராட்ட முடியுமா? 

காலத்தால் செய்த உதவி

ஞாலத்தில்  மாளப் பெரிது.  👍

Share this post

Link to post
Share on other sites
11 minutes ago, tulpen said:

நிச்சயமாக இதைச் செய்த அந்த ஆலயங்களின் நிர்வாகப்பொறுப்பில்  உள்ள மனிதர்களைப் பாராட்டுகின்றேன். ஆலயத் திருப்பணி என்று பணத்தை வீண் விரயம் செய்யாமல் இவ்வாறான நல்ல காரியங்களுக்கு கொடுத்த அந்த மனிதர்களின் செயல் பாராட்டப்பட வேண்டியது. யுத்தம் நடைபெற்றபோது  இங்கு பல ஆலய நிர்வாகிகளுடன் இதே காரணத்திற்காக  முரண் பட்டிருக்கிறேன்.  

தற்போது பல இளைஞர்கள்  தன்னிச்சையாக மக்களுக்கு உதவி வருவதாக கேள்விப்பட்டேன. அவர்களுக்கும் வாழ்ததுக்கள்.  உலகெங்கு எங்கு பேரிடர் நடந்தாலும்  சுவிஸ்  மக்களிடம்  பல பில்லியன் பிராங்குகளைத் திரட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பும் சுவிஸ்.  Glückskette தற்போதய நிலைமையால் பாதிக்கப்பட்ட சுவிஸ் மக்களுக்குகாக 9 மில்லியன் நிதி திரட்டி  கொடுத்துள்ளது. அவர்களுக்கும் பாராட்டுக்கள். 

நன்றி. இருந்தாலும், சுவிசுடன் இலங்கையை ஒப்பிடுவதும், தன்னார்வ உதவியாளர்களையும் குறிப்பிட்டுள்ளீர்கள். இதன் மூலம், நீங்கள் ஆலயங்கள் மக்களுக்கு உதவுவதை முழு மனத்துடன் ஏற்கவில்லை என்பதை காட்டுகின்றது. அதில் பிழையும் இல்லை. 

Share this post

Link to post
Share on other sites
Guest
This topic is now closed to further replies.

 • Topics

 • Posts

  • மனிதர்கள் அழிந்த பிறகு புவியில் என்னவெல்லாம் நிகழும்? - ஒரு டைம் ட்ராவல் டுன்கன் க்ரே பிபிசி சயின்ஸ் ஃபோகஸ் மேகசின் Getty Images இந்த புவியின் மானுட வரலாறு ஒரு புதிய விடியலை எதிர்நோக்கி இருக்கிறது. மனிதர்கள் எப்போதும் தங்களுக்கு ஏற்றவாறு இந்த புவியை தகவமைத்து இருக்கிறார்கள். அது நெருப்பின் கண்டுபிடிப்பாகட்டும் அல்லது விவசாயம் ஆகட்டும். ஆனால், ஹோமோ சேபியன்ஸின் தாக்கம் இப்போது ஒரு முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. வளிமண்டலத்தில் நிறைந்துள்ள காற்று மாசாகட்டும் அல்லது பெருங்கடலில் குவிந்துள்ள குப்பைகள் ஆகட்டும் எங்கும் எதிலும் மனித இனத்தின் தடயங்கள் பதிந்திருக்கிறது. ஆனால், இப்போது இந்த திசையில் கரு மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த பூமியிலிருந்த 99 சதவீத உயிரினங்கள் பேரழிவுகளில் அழிந்துவிட்டன. இந்த பூமியில் பெரும் விலங்காகக் கருதப்பட்ட டைனோசர் இப்போது இல்லை. எல்லா பேரழிவுகளிலிருந்தும் இதுவரை தப்பிவந்த மனிதக்குலத்தின் எதிர்காலம் அவ்வளவு ஒளிமயமானதாக இல்லை. ஆம், காலப்போக்கில் மனித இனமும் இல்லாமல் போகலாம்.  மனிதகுலத்தின் அழிவு தவிர்க்க முடியாதது மனிதகுலம் அழியும் என்பதில் வல்லுநர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், எப்போது என்பதுதான் கேள்வி. ஆனால், பலர் அந்த அழிவு மிக அருகில் இருப்பதாகவே கருதுகிறார்கள். அடுத்த நூற்றாண்டுக்கு முன்பே இந்த அழிவு நிகழலாம் என கூறுகிறார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல வைராலஜிஸ்ட் ஃப்ரான்க் ஃபென்னர். மக்கள் தொகை பெருக்கம், சூழலியல் அழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கும் என்பது அவர் வாதம். Getty Images புவி அழியாது. மனித இனம் அழியும் மனித இனம் இல்லாமலே இந்த புவி ஜீவிக்கும். நம் இருப்பின் சாட்சியாக நாம் இந்த புவியில் விட்டுச் சென்ற தடயங்கள் அனைத்தும், நாம் கணிக்கும் காலத்திற்கு முன்பே இல்லாமல் போகும். நம் நகரங்கள் அழியும், பாலங்கள் சரியும்.  இறுதியில் இயற்கையானது நாம் உருவாக்கிய அனைத்தையும் இல்லாமல் செய்துவிடும் என மனிதர்கள் அற்ற உலகம் என்ற புத்தகத்தில் அலன் வைஸ்மேன் குறிப்பிடுகிறார். 2007ஆம் ஆண்டு வெளியான இந்த புத்தகம், மனிதர்களற்ற இந்த புவி எப்படி இருக்கும் என்பதை விவரிக்கிறது. Getty Images நெகிழி துகள்கள், கதிரியக்கம் மற்றும் பிராய்லர் கோழியின் எலும்புகள் இவைதான் மனித இனம் விட்டு செல்லப் போகும் புதைபடிவ தடயங்கள். கோழியின் எலும்பு இந்த பட்டியலில் எப்படி வந்தது என பார்க்கிறீர்களா? ஆண்டுக்கு குறைந்தது 60 பில்லியன் கோழிகளை இந்த புவியில் கொல்லப்படுகின்றன. அப்போது நிச்சயம் அதன் தடயங்கள் இருக்கத்தானே செய்யும்.  நாம் இந்த புவியில் சில இடங்களுக்குச் செல்லாமல் இருக்கிறோம் அல்லது வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு இருக்கிறோம். அங்கெல்லாம் என்ன இருக்கிறது என பார்ப்போம். இயற்கை திரும்ப எடுத்துக் கொள்ளும் செர்னோபில் அணு உலை விபத்து உங்களுக்கு நினைவிருக்கும். உக்ரைனில் 1986ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தின் காரணமாக, அந்த அணு உலையைச் சுற்றி உள்ள 30 கி.மீ பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக இருக்கிறது.  மனிதர்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ள அந்த பகுதியில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குச் செடி கொடிகளும், விலங்குகளும் பெருகி வருகின்றன. Getty Images இயற்கை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மன்ற நிதி உதவியில், 2015ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஆய்வு ஒன்று, அந்த அணு உலை இருந்த பகுதியில் இப்போது ஏராளமான வனவிலங்குகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டியது. அதாவது அணு கதிர் வீச்சைவிட உள்ளூர் தாவரம் மற்றும் விலங்கினத்துக்கு மனித இனமே மிகப்பெரிய ஆபத்தாக இருக்கிறது என விவரித்தது. இயற்கை ஒரு நிலப்பரப்பை மீட்பதற்கு முக்கிய காரணியாக அந்த பகுதியின் தட்பவெப்பமும் இருக்கிறது.  உதாரணத்துக்கு மத்திய கிழக்கில் உள்ள பாலைவனங்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய இடிபாடுகளின் எச்சங்களைக் காண முடிகிறது. ஆனால், வெப்ப மண்டல காடுகள் உள்ள பகுதியில் நூற்றாண்டுக்கு முந்தைய இடிபாடுகளின் எச்சங்களைக் கூட காண முடியாது. ஐரோப்பியர்கள் 1542ஆம் ஆண்டு பிரேசில் மழைக் காடுகளைப் பார்த்த போது, அங்கு ஓடிய நதிக்கரையில் நகரங்களை அமைத்தனர். ஆனால், ஒரு நோயால் அந்த மக்கள் தொகை முற்றும் முழுவதுமாக அழிந்த போது, அந்த நகரங்களை மீண்டு காடுகள் எடுத்துக் கொண்டன. அதாவது அந்த நகரங்கள் காடாக மாறியது. யார் துயரடைவார்? மனித இனம் அழியும் போது, மனித இனத்துடன் நெருங்கிய தொடர்பிலிருந்த விலங்கினமும், செடி கொடிகளும்தான் அதிக துயர் அடையும். உரத்தையும், பூச்சி கொல்லிகளையும் அதிகம் சார்ந்து இருந்த பயிர் வகைகளின் இடத்தை அந்த பயிர் வகைகளின் காட்டுச் செடி வகைகள் பிடிக்கும். கேரட் வகை அதன் முந்தைய வடிவத்துக்கு மாறும், அது போல சோளமும்தான் என்கிறார் அலன் வைஸ்மேன்.  Getty Images உதாரணத்துக்குத் தமிழ்நாட்டுப் பின்னணியில் சொல்ல வேண்டுமானால்,இப்போது நம் தேவைக்காக மாற்றியமைக்கப்பட்ட பல் நெல் வகைகள், அதன் முந்தைய வடிவத்துக்கு மாறும். பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்ட உடன், பூச்சிகள் பல்கி பெருகும்.  பூச்சிகளைக் கட்டுப்படுத்த மனிதன் அனைத்து வகைகளிலும் முயலும் போதே, அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. அவை பெரியளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டுவிட்டால் என் நேரும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். பூச்சிகள் பெருக பெருக அதனை உண்டு வாழும் பிற உயிரினங்களும் பெருகும். அதாவது பறவைகள், கொறித்துண்ணிகள்ம் ஊர்வன என அனைத்தும் பல்கிப் பெருகும். உணவு சங்கிலியில் உள்ள அனைத்து கண்ணிகளும் பெருகும். ஆனால், எவை உச்சம் தொட்டாலும், அவை கீழே இறங்கியே ஆக வேண்டும். இப்படி பல்கிப் பெருகிய உயிரினங்கள் அதிக காலம் இருக்காது.அந்த உணவு சங்கிலியில் மனித இனம் இல்லாத காரணத்தினால், அது ஏற்படுத்தும் தாக்கமும் அழுத்தமானதாக இருக்கும். ஆம். மனித இனத்தின் அழிவு குறைந்தது 100 ஆண்டுகளுக்கு, ஒரு புதிய இயல்பு உருவாகும் வரை, உணவு சங்கிலியில் தாக்கம் செலுத்தும்.  மனித இனம் அழிந்த பின்னரும் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட சில விலங்குகள் உயிர்பிழைத்து வாழ அதிகம் வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் வைஸ்மேன். ஆடு, மாடுகள் மெல்ல இல்லாமல் போகலாம். ஆனால், பூனை தப்பிப்பதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக அவர் கூறுகிறார். நாயைவிடப் பூனை அனைத்து சூழலுக்கும் ஏற்ப தம்மைத் தகவமைத்துக் கொள்கிறது என்கிறார். பல்கி பெருகும் வன விலங்குகளால் ஆடு, மாடுகள் கொல்லப்படலாம் என்கிறார் வைஸ்மேன். மனித இனம் அழிந்த பிறகு புத்திசாலித்தனம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது? பதில் கூறுவதற்குக் கடினமான கேள்விதான். புத்திசாலித்தனம் தொடர்பாக மூன்று கோட்பாடுகள் உள்ளன. சூழலியல் சார்ந்த தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளப் புத்திசாலித்தனம் தேவைப்பட்டது, அதன் காரணமாகப் புத்திசாலித்தனம் பரிணமித்தது என்பது ஒரு கோட்பாடு. மனிதன் குழுக்களாக வாழப் புத்திசாலித்தனம் உதவியது என்பது அடுத்த கோட்பாடு. இறுதியாக, ஆரோக்கியமான ஜீன்தானா என்பதை அளவிடும் கருவியாகப் புத்திசாலித்தனத்தைக் கருதலாம். மனித அழிவுக்கு பிறகும் இந்த மூன்று விஷயங்களும் மீண்டும் நிகழலாம். மனித இனத்திற்கு அடுத்தபடியாக, மூளை அளவு அதிகம் கொண்டது பாபூன் குரங்கு வகை. “காடுகளில் வாழும் இனம் அது. ஆனால், காடுகளைக் கடந்தும் அவை வாழப் பழகி இருக்கிறது. நாம் செய்ததை பாபூன் செய்யக்கூடும். ஆனால், அவை நம்மை போல செயல்படாது என்றே தோன்றுகிறது. அது வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்கிறது,” என குறிப்பிடுகிறார் வைஸ்மேன். மனித இனம் அழிந்த பிறது தனது செளகர்யமான எல்லையை விட்டு பாபூன் அல்லது பிற உயிரினங்கள் வெளியே வரக்கூடும். இந்த புவியின் எதிர்காலம் நாளையே அழிந்தால் கூட, தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தில் இந்த புவி எப்படி இருந்ததோ, அந்த நிலைக்கு திரும்ப பல்லாயிரம் ஆண்டுகள் ஆகலாம். Getty Images முன்னமே கரியமில வெளியேற்ற விஷயத்தில் ஆபத்து கட்டத்தைக் கடந்துவிட்டோம். அதுமட்டுமல்லாமல், அணு உலை சார்ந்து நமக்கு வேறொரு பிரச்சனை இருக்கிறது. கதிர்வீச்சு வெளியேற்றத்திலிருந்து இந்த சூழல் மீளும் என்பதை செர்னோபில் உணர்த்துகிறது. ஆனால், இந்த உலகம் முழுவதிலும் உள்ள 450க்கும் அதிகமான அணு உலைகள் மனிதன் அழிந்த பிறகு இயக்க ஆள் இல்லாமல் வெடித்தால் என்ன ஆகும்? அவை எவ்வளவு கதிர்வீச்சை வெளியேற்றும். அவை பூமியில் என்ன மாதிரியான தாக்கத்தைச் செலுத்தும்? இவை மட்டுமல்ல, எண்ணெய் கசிவு, ரசாயன கசிவு, வெடி விபத்து என மனிதர்கள் விட்டுச் செல்லப் போகும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. இதில் பல சூழலியல் கேடுகள் பல நூற்றாண்டுகளுக்குக் கொழுந்துவிட்டு எரியலாம். பென்சில்வேனியா நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்து பல பத்தாண்டுகளுக்குப் பற்றி எரிந்ததை நினைவில் கொள்ள வேண்டும். மனித இனத்தின் தடயம் மனித இனம் விட்டு செல்ல போகும் தடயம் அழியப் பல மில்லியன் ஆண்டுகள் கூட ஆகலாம். நாம் விட்டு செல்லும் நெகிழிக் கழிவுகளை உண்ணும் அளவுக்கு மைக்ரோப்ஸ்கள் பரிணமிக்கப் பல காலம் ஆகும்.  நாம் அழிந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் கான்கிரீட் கழிவுகளின் எச்சங்கள் இருக்கும். ஆனால், நிச்சயம் ஒரு கட்டத்தில் அவை முழுமையாக அழியும். நாம் நம் சில செயல்பாடுகளை மின்காந்த அலைகளாக மாற்றி இந்த வளிமண்டலத்தில் கடந்த நூறு ஆண்டுகளாக அனுப்பி வருகிறோம். அவை பல ஒளி ஆண்டுகள் தள்ளி இருக்கும். அந்த மின்காந்த அலைகளின் தாக்கம் தான் இறுதியாக அழியும்.   https://www.bbc.com/tamil/science-53326369      
  • இலங்கையின் இறையாண்மைக்கு ஐ.நா சபை மதிப்பளிக்கவேண்டும் - அரசாங்கம் அறிக்கை.!   "இலங்கையின் மீது நிரூபிக்கப்படாத மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அமைதிகாக்கும் படையின் அதன் பங்களிப்புக்குக் குந்தகத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு தனிமனிதனினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் பொறுப்புடைய மிகவும் விரிவான ஒரு கட்டமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை விளங்குவதுடன், அதன் உறுப்புரிமை நாடுகளுடனான தொடர்புகளின்போது அவற்றின் இறையாண்மைக்கு முழுவதுமாக மதிப்பளித்துச் செயலாற்ற வேண்டிய கடப்பாட்டையும் கொண்டிருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்." - இவ்வாறு இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஜேர்மனியினால் 'அமைதி நடவடிக்கைகளும் மனித உரிமைகளும்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திறந்த விவாதத்துக்கென இலங்கையின் வெளிவிவகார அமைச்சால் அனுப்பிவைக்கப்பட்ட நீண்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "நாடுகளுக்குள்ளே காணப்படும் முரண்பாடுகள், நாடுகளுக்கு இடையே உள்ள பிரச்சினைகள் ஆகியவற்றினால் மனிதாபிமானத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதும் அரசு சார்பற்ற கட்டமைப்புக்களால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்கள், இயற்கை அனர்த்தங்கள், சுகாதார நெருக்கடிகள் உள்ளிட்ட மேலும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டுள்ளதுமான தற்போதைய சூழ்நிலைக்குப் பொருத்தமாக இத்தகையதொரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருக்கும் ஜேர்மனியின் முயற்சியை வரவேற்கின்றோம். அத்தோடு பல தசாப்தங்களாக பல்வேறு நெருக்கடி நிலைகளுக்கு மத்தியிலும் அமைதியை ஏற்படுத்துவதையும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும் நோக்காகக்கொண்டு செயற்பட்ட ஆயிரக்கணக்கான ஆண், பெண் உத்தியோகத்தர்களுக்கு எமது கௌரவத்தையும் வெளிப்படுத்துகின்றோம். அதேவேளை ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் இலங்கையும் தொடர்ச்சியாக அதன் பங்களிப்பை வழங்கிவருவதையிட்டுப் பெருமையடைகின்றோம். ஐ.நா அமைதிப்படையின் நடவடிக்கைகளின் போது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது மிகமுக்கிய அம்சமாகக் காணப்படுகின்றது. அந்தவகையில் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அமைதி காத்தல் என்பவற்றில் இலங்கை முழு உறுதியுடன் இருப்பதுடன், இலங்கையின் சார்பில் அமைதிகாக்கும் படையில் பணிபுரியும் வீரர்களுக்கு இவ்விடயங்களில் முழுமையான கோட்பாட்டு அறிவும் செயன்முறைப்பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி இலங்கையில் பொலிஸாருக்கும், பாதுகாப்புப் பிரிவினருக்குமான பயிற்சி வழங்கலில் மனித உரிமைகளும் ஓரங்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தால் மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் என்பன தொடர்பில் இராணுவம், பொலிஸாருக்கு விசேட பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. தற்போது ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல், குறிப்பாக மோதல் நெருக்கடிகள் காணப்படும் பகுதிகளில் மனித உரிமைகள் மீது வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பயணங்களுக்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக பாதிப்புக்களை எதிர்கொள்ளும் நிலையிலுள்ள சமூகங்களைக் கொண்ட நாடுகளுக்கு அவசியமான மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இலங்கையின் மீது நிரூபிக்கப்படாத மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அமைதிகாக்கும் படையின் அதன் பங்களிப்புக்குக் குந்தகத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு தனிமனிதனினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் பொறுப்புடைய மிகவும் விரிவான ஒரு கட்டமைப்பாக ஐக்கிய நாடுகள் சபை விளங்குவதுடன், அதன் உறுப்புரிமை நாடுகளுடனான தொடர்புகளின் போது அவற்றின் இறையாண்மைக்கு முழுவதுமாக மதிப்பளித்துச் செயலாற்ற வேண்டிய கடப்பாட்டையும் கொண்டிருக்கின்றது என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்" - என்றுள்ளது. http://aruvi.com/article/tam/2020/07/09/14254/ 
  • மின் வணிகத்தின் அடிப்படைகள் அனுதினன் சுதந்திரநாதன்   / 2020 ஜூலை 06  கடந்த சில வருடங்களுக்குள், அதீத முக்கியத்துவம் வாய்ந்த துறையாக மின் வணிகம் வளர்ச்சியடைந்து வருகிறது.   குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவுகை காலப்பகுதி, மின் வணிக வாய்ப்புகளுக்கு, எப்போதுமில்லாத சந்தை வாய்ப்புகளைத் திறந்து விட்டதுடன், ஏராளமான புதிய வாடிக்கையாளர்களையும் மின் வணிகத்துக்கு அறிமுகம் செய்து வைத்திருந்தது.   இதுவரை காலமும், மின்வணிகத்தின் மீது சந்தேகக் கண்ணோடிருந்தவர்கள் கூட, தவிர்க்க முடியாமல் மின்வணிகத்தின் செயற்பாடுகளுக்குள் உள்வாங்கப்பட்டு, தற்போது அதன் ஓர் அங்கமாக மாறிப்போயிருக்கிறார்கள்.   ஆடம்பரப் பொருள்களிலிருந்து, அத்தியாவசிய பொருள்கள் வரை அனைத்துமே மின்வணிகத்தில் கிடைக்கக் கூடியதாகி விட்டன. இந்தச் சூழ்நிலையும் மின் வணிகத்துக்கு ஏதுவாக அமைந்திருக்கிறது.   வாடிக்கையாளர்களின் நேரமின்மை என்கிற ஒரு கருவை மூலதனமாகக் கொண்டு இயங்கும் இவ்வகை மின் வணிகங்கள், தனித்து மனிதர்களின் தேவைகளுக்கான பொருள்களை மாத்திரம் வழங்குவதில்லை. அவர்களது தேவைகளையும் விருப்பங்களையும் உருவாக்கக்கூடிய பொருள்கள், சேவைகளையும் வழங்குவதிலும் வெற்றி காண்பவையாக இருக்கின்றன.    இதனால்தான், கொரோனா வைரஸ் பரவுகைக் காலத்தில் மிகப்பெருமளவிலான புதிய வாடிக்கையாளர்களை, மின்வணிகத்தால் தன் பக்கம் ஈர்க்க முடிந்திருக்கிறது    இன்றைய நிலையில், இலத்திரனியல் வணிகச் சந்தையானது தன்னகத்தே எவ்விதமான தடைகளையும் கொண்டிராத முற்றிலும் ஒரு திறந்த சந்தையாகவே (Open Market) இருக்கிறது. இந்தச் சந்தையில் வாடிக்கையாளர்களைத் தம்வசபடுத்திக்கொள்ளும் சந்தைப்படுத்தல் திறன் கொண்ட எவருமே இங்கு ராஜாதான்.    இவ்வாறு தொழிற்படும் மின் வணிகத்தில், ஒரு தனிநபராகவும் நிறுவனமாகவும் வெற்றிக்கொள்வதற்கு, அடிப்படையாக உள்ள விதிகள் தொடர்பிலும் அறிந்திருக்க வேண்டியது அவசியமல்லவா?    கொள்வனவாளர்கள் சந்தையை உருவாக்குபவர்கள் அல்ல   மின் வணிகத்தைப் பொறுத்தவரையில், கொள்வனவாளர்கள் சந்தையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. சந்தை வாய்ப்பைக் கொண்டிராத பொருள்களையும் சந்தை வாய்ப்பைக் கொண்ட பொருள்களை மிக எளிமையாகக் கொள்வனவாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையையே, மின் வணிகச் சந்தை செய்கிறது.   பாரம்பரிய வணிக முறையில், கொள்வனவாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது விநியோகச் சங்கிலியாகும் (supply chain). அதாவது, உற்பத்தியாளரிடமிருந்து பொருள்களை, வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்க்கும் வரையில், உற்பத்திப் பொருள்கள் மீது சேர்க்கப்படும் மேலதிக செலவுகள், உற்பத்தி பொருள்களினதும் சேவைகளினதும் விலைகளை அதிகபடுத்துவதாகும்.    ஆனால், இணையச் சந்தையில் உற்பத்தியாளர் கூட, விற்பனையாளராக இருக்கலாம். வாடிக்கையாளரை நேரடியாகச் சந்தித்துக் கொள்ளக்கூடிய மின்சந்தையில், உற்பத்தியாளரே விற்பனையாளராக இருக்கலாம். இதன் விளைவாக, செலவினங்கள் குறைக்கப்பட்டு, சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்படுகிறது. இதுவே, கொள்வனவாளர்களையும் உருவாக்கும்.    எனவே, மின் வணிகத்தில் தனியே கொள்வனவாளர்கள் மாத்திரமே சந்தையை உருவாக்குபவர்களாக இருப்பதில்லை. மாறாக, முதலீட்டுக்கு வருமான மதிப்பீட்டைக் கொண்ட எந்தவொரு பொருள்களுக்கும் சேவைகளுக்கும் கூட, வணிக வாய்ப்பை உருவாக்குபவையாக அமையும்.   மின் வணிகத்தின் செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளுதல்   மின் வணிகம் என்பது, உங்களது இணையத் தளத்துக்கான பார்வையாளர்களை அதிகபடுத்துவதோ, அது சார்ந்த விளம்பரங்கள் மூலம் இணையத்தின் பார்வையிடலை (Webssite Traffic) அதிகப்படுத்தி, அதன் நிலையை உயர்த்துவதோ அல்ல.    மாறாக, உங்கள் இணையத் தளத்தில் பார்வையாளர்கள், வாடிக்கையாளர்கள் செலவிடும் நேரத்துக்கேற்ப, அவர்கள் வர்த்தகப் பரிமாற்றத்தில் ஈடுபட வைப்பதும், அதன் தொடர்ச்சியாக அவர்களை மீளவும் இணையத்தளத்துக்கு வருகைதர வைத்தலும் அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளுவதுமே ஆகும்.   பெரும்பாலான சந்தர்ப்பங்களில், பாரம்பரிய வணிகமுறையிலும் பார்க்க, இணைய வர்த்தகத்தில் உள்ள நன்மையே, நீங்கள் விளம்பரம் என்கிற பெயரில் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்குமான பெறுபேற்றை அறிந்துக்கொள்ள முடிவதாகும்.    எனவே, மின் வணிகத்தில் பார்வையாளர் அதிகரிப்புக்கு நீங்கள் செலவு செய்வதைப் பார்க்கிலும், வாடிக்கையாளர்களை எப்படி உருவாக்கிகொள்ள முடியும் என்பதுடன், வாடிக்கையாளர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதன் அடிப்படையில் செயற்படுவது அவசியமாகும். இதுவே, கட்டற்ற திறந்த சந்தையில், இலாபகரமான வணிக முயற்சியாளராக உங்களை நிலைநிறுத்திக்கொள்ள உதவும்.   வாடிக்கையாளர் உறவே முக்கியமானது   எத்தகைய வணிகமுறையாக இருந்தாலும் சரி, வாடிக்கையாளர்களுடன் மிகச்சிறந்த உறவைப் பராமரித்தல் என்பது முக்கியமானது. ஆனால், மின் வணிகத்தில் இது மேலும் ஒருபடி முக்கியமானதாக இருக்கிறது. குறிப்பாக, மின் வணிகத்தில் பெரும்பாலும் விற்பனையாளர்களும் கொள்வனவாளர்களும் சந்தித்துக்கொள்ளுவதே இல்லை. எனவே, ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமலே இடம்பெறும் வர்த்தகத்தில், ஒருவரின் உணர்வுகளையும் கருத்துகளையும் புரிந்துக்கொண்டு, வர்த்தக உறவைப் பலப்படுத்துவது என்பது சாதாரண காரியமல்ல.    பெரும்பாலான மின் வணிகங்கள் அடிவாங்கும் இடமாகவும் இதுதான் இருக்கிறது. காரணம், சேவைக்கு முந்தியதும் சேவைக்குப் பிந்திய வாடிக்கையாளர் உறவைப் பலப்படுத்தத் தவறுவதன் விளைவாகவே, பெரும்பாலான மின் வணிகங்கள் போட்டித்தன்மைமிக்க சந்தையிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.    சந்தையில் எவ்வளவு பெரிய நிறுவனமாக வளர்ந்தாலும், வாடிக்கையாளர் உறவு என்பதை மிக உயர்ந்தளவில் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், அதுவே உங்களது வணிகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் காரணியாக மாறிவிடும்.   வெளிநாடுகளில் இணைய வர்த்தகம் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள நிலையில், வாடிக்கையாளர் உறவைத் திறமையாகக் கையாள மட்டும் ஆண்டொன்றுக்கு 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை இணைய நிறுவனங்கள் செலவு செய்வதாக Forbes இணையத்தளம் குறிப்பிடுகிறது. இது ஒன்றே, வாடிக்கையாளர் உறவு இந்நவீனமயப்படுத்தப்பட்ட வணிகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதற்கு உதாரணமாக உள்ளது.   இணைய இடைத்தரகர்கள் தொடர்பில் அவதானமாக இருத்தல்   இணையப்பரப்பில் வர்த்தகத்தின் வெற்றியே, இடைத்தரகர்கள் (Cybermediary) அல்லது விநியோக சங்கிலியின் பயன்பாடு குறைவாக இருப்பதே ஆகும். எனவே, வணிக செயற்பாடுகளை இலகுவாக்குகிறோம் என்பதன் பெயரில், மீண்டும் பாரம்பரிய வணிகம்போல, இடைத்தரகர்களை அதிகப்படுத்திக் கொள்ளக்கூடாது. மின்வணிகத்தில் இடைத்தரகர்களின் செயல்பாடுகளும் பொறிமுறைகளும் சற்றே வித்தியாசமானதாக இருக்கும்.    உதாரணமாக, இணையத்தில் கொள்வனவாளரும் விற்பனையாளரும் வர்த்தகத்தைத் தனித்து முடித்துக்கொள்ள முடியாது. வாடிக்கையாளர் குறித்த விற்பனையாளரிடம் பொருளை வாங்க விரும்பின், அதற்கான பணத்தைச் செலுத்த வேண்டும். அதை நேரடிப் பணமாகச் செலுத்த முடியாது.   எனவே, அதற்காக இணையப் பணத்தை (அட்டைகள் அல்லது பணவைப்புக் கணக்குகள்) பயன்படுத்த முடியும். இதன்போது, தவிர்க்க முடியாத வகையில் இணையப் பணம் என்கிற போர்வையில், இடைத்தரகர்கள் உருவாகுகிறார்கள். அதுபோல, வாடிக்கையாளர்கள் பணத்தை எடுத்த எடுப்பில் செலுத்துவதில்லை.   அதைச் செலுத்துவதற்கு, விற்பனையாளர்கள் பாதுகாப்பான கொடுப்பனவு முறையைக் கொண்டிருக்க வேண்டும். இதையும் வேறு தரப்பினரிடமிருந்து பெற்று, வழங்குவார்களாயின், அவ்வாறும் இடைத் தரகர்கள் உருவாகுவார்கள்.    இவ்வாறாக, பாரம்பரிய வணிகத்திலிருந்து வேறுபட்ட முறையில் இடைத்தரகர்கள் மின்வணிகத்தை ஆக்கிரமித்து இருக்கிறார்கள். இவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்கவேண்டும்.    இவர்களால் மோசடிகள் இடம்பெறக்கூடும் என்பதுமட்டுமல்லாது,  இவர்களுக்குச் செலுத்தும் அனைத்துக் கட்டணங்களுமே பொருள்கள், சேவைகளின் பெறுதியுடன் சேர்க்கப்பட்டு, இறுதியில் வாடிக்கையாளர்களையே வந்தடையும்.   மேலே கூறிய அனைத்துமே, மின் வணிகத்தில் இன்றியமையாத வகையில் கவனிக்க வேண்டிய அல்லது கவனிக்கப்பட வேண்டிய விதிகளாகும். கால மாற்றத்துக்கு ஏற்ப, வணிகத்தில் ஏற்படும் மாற்றங்களைத் தவிர்க்கமுடியாமல் ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழலில், அத்தகைய மாற்றங்களில் நம்மைத் தொலைத்துக்கொள்ளாமல் எப்படி நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்திருப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அவசியமாகிறது.       http://www.tamilmirror.lk/வணிகம்/மின்-வணிகத்தின்-அடிப்படைகள்/47-252854
  • கல்வி தந்தைகளின் அலப்பறைகள்   இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் கல்வித் தந்தைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளார்கள்.    அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி என்பதுபோல, கல்வித் தந்தைகளின் கடைசிப் புகலிடம் நாடாளுமன்ற அரசியல். இன்று இலங்கையின் கல்வித்துறை எதிர்நோக்குகின்ற சவால்கள் பல. தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதும் தனியார் கல்வியை ஊக்குவிப்பதும் அதற்கான தீர்வுகள் அல்ல.    இலங்கையில் இலவசக் கல்வி, ஆசியாவின் நாடுகள் பலவற்றுக்கும் முன்னரே பல்கலைக்கழகம் வரை விரிவுபடுத்தப்பட்டு விட்டது. அத்துடன், தாய் மொழிக் கல்வியும் சேர, கிராமப்புறத்து நடுத்தர வர்க்கத்தினருக்கும், கீழ் நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினருக்கும், தொழிலாளர் வர்க்கத்தினரில் சிறிய, ஆனால் புறக்கணிக்க இயலாத, ஒரு தொகையினருக்கும் உயர் கல்வி வாய்ப்புகள் கிட்டின. இலங்கையின் பொருளாதார விருத்தி எவ்வளவு குறைபாடானதாக இருந்த போதும், அரசாங்கத் தொழிற்றுறை தொடர்ச்சியாகவே வளர்ந்து கொண்டு வந்தது. எனவே, அவ்வாறான வேலை வாய்ப்புகள் பெருகின. அதேவேளை, கல்வி கற்றோர் தொகையும் பெருகி வந்தது.   இந்தப் பின்னணியில், உயர் கல்விக்கான போட்டி, மேலும் வலுவடைந்தது. மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற துறைகளில் பல்கலைக்கழக அனுமதியின் எண்ணிக்கை மட்டுப்பட்டு இருந்தது. இது அரசாங்கக் கொள்கையால் என்று இல்லாமல், அவற்றுக்கான தகுதி வாய்ந்த ஆசிரியர் பற்றாக்குறையாலும் பயற்றுவிப்புக்கு அவசியமான ஆய்வுகூட உபகரண வசதிகளின் போதாமையாலும் பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கல்வியிலும் உயர்கல்வியிலும் மேலதிக அரசாங்க முதலீடு இல்லாமையாலும் ஏற்பட்ட ஒரு நிலைமை ஆகும்.    இந்த நிலைமையில் உயர்கல்விக்கும் குறிப்பிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகளுக்குமான போட்டி தீவிரமானது. அதன் விளைவாகப் பல்கலைக்கழக அனுமதி, ஓர் அரசியல் பிரச்சினையாகி, 1970 அளவில் பேரினவாத அரசியலின் விளைவான தரப்படுத்தலுக்கும் தேசிய இனப் பிரச்சினையின் தீவிரப்படுத்தலுக்கும் இட்டுச் சென்றது.    நீண்ட காலமாகவே, உயர்கல்வி பற்றியும் நாட்டின் பொருளாதார விருத்தி பற்றியும் திட்டவட்டமான அரசாங்கக் கொள்கை ஒன்று இல்லை என்பதை நாம் விளங்கிக் கொண்டால், உயர்கல்வி இன்று எத்தகைய முட்டுச் சந்தில் கொண்டு வந்து விடப்பட்டுள்ளது என விளங்கும். பாடசாலைக் கல்வியைத் தனியார் மயமாக்கும் நோக்கத்துடனும் வசதி படைத்தவர்களின் குழந்தைகள் அயல் நாடுகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ள வசதியாக ஆங்கிலம் மூலம் தனியார் வழங்கும் விதமாகச் சர்வதேசப் பாடசாலைகள் 1978க்குப் பிறகு நிறுவப்பட்டு வந்து, இன்று, கொஞ்சம் வசதியான நடுத்தர வர்க்கத்தின் ஒரு பகுதியினர் கூடத் தங்கள் பிள்ளைகளை அங்கு அனுப்புகின்ற அளவுக்கு அவற்றின் எண்ணிக்கை பெருகிவிட்டன.   அதன் அடுத்த கட்டமாக, அந்நியப் பல்கலைக்கழகங்களின் ஊடுருவல் தொடங்கியது. இலங்கையின் பல்கலைக்கழகங்களில் படிக்கக் குறைந்த பட்சத் தகுதி பெற்ற மாணவர்களில் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்கிறது. பிறர் வெளிவாரிப் பட்டங்களை நாடுகின்றனர். பல்கலைக்கழகங்கள் அவற்றை ஒழுங்கு முறையாக நடத்துவதாகக் கூற இயலாது. அதைவிட, இவ்வாய்ப்புகள் மாணவர்கள் அதிகம் விரும்புகிற துறைகளில் கிட்டுவது குறைவு. எனவே, உயர்கல்வி பல விதங்களில் வணிக மயமாக்கப்பட்டு ‘சந்தையால்’ வழிநடத்தப்படுகிறது.   இன்றைய கல்வியும் உயர்கல்வியும் திருப்திகரமானவையல்ல. அவை நாட்டை முன்னேற்றக் கூடிய திறமை கொண்ட பட்டதாரிகளை உருவாக்கத் தவறுகின்றன என்றால் அது பட்டதாரிகளின் தவறு மட்டுமல்ல. கல்விக் கொள்கையும் பொருளாதாரக் கொள்கையும் குழறுபடியானவை. உயர்கல்விக்கான மூலதனத்தைச் சமூகத்துக்கு உள்ளிருந்தே திரட்ட இயலும். சமூகத்திடமிருந்து பெறுகிற கல்வியைச் சமூகப் பயனுடையதாக்க முடியும். தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த நோக்கங்கட்கு எதிர்மாறான இலக்கையுடையவை. தனியார் கல்வியை ஆதரிக்கிற பலர் பரிந்துரைக்கும் கல்வித்துறைகளும் புதிய நிபுணத்துவமும் எவை?  உலகமயமாதல், அந்நிய நாடுகளில் வேலை வாய்ப்பு, அந்நிய முதலீட்டின் தேவைகளைச் சந்திப்பதற்கான திறமைகள் போன்று, தேசியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு முரணான கருத்துகளையே வலியுறுத்துகின்றனர். தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்ப்பது அவசியம். ஆனால் அது போதாது. பாடசாலைக் கல்விக்கு ஒரு தேசிய அடிப்படை அவசியம். கல்வித் துறைக்கு ஒரு தெளிவான தூரநோக்கு அவசியம். எனவே, இவ் விவாதம் தனியார் பல்கலைக்கழகத்துடன் நின்றுவிடாது நாட்டின் கல்விக் கொள்கை முழுவதையும் மறுபரிசீலனை செய்து, கடந்த முப்பதாண்டு காலத்தில் ஏற்பட்ட பெருங் சீரழிவிலிருந்து கல்வியை மீட்டெடுப்பது பற்றியதாகவும் இருக்க வேண்டும்.  இதைக் கல்வித் தந்தைகளால் செய்ய இயலாது. தேசிய கல்விமுறையையும் அரசாங்கப் பல்கலைக்கழகங்களையும் செழுமைப்படுத்தி வளமுடையதாக்குவது காசுக்கு பட்டங்களை விற்கும் கல்வித் தந்தைகளால் செய்யக் கூடியதல்ல. அது அவர்கள் நலனுக்கு எதிரானது.    இது தேர்தல் காலம், ஆதலால், ஒன்லைன் கல்வி, தரமான தனியார் பல்கலைக்கழகங்கள் எனப் பல ‘எருமை மாட்டு’க் கதைகளை, இன்னும் கொஞ்சக் காலத்துக்கு கேட்க நேரும்.    http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கல்வி-தந்தைகளின்-அலப்பறைகள்/91-252977  
  • Tholar Balan 6 ம  ·    அரசு ஆயுதம் கொண்டு வன்முறையை பாவிக்கும்போது அதற்கு ஆயுதரீதியாக பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதுவே ஆயுதப் போராட்டத்தின் பின்னால் உள்ள அரசியல். இதுவே எளிமையாக “ அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல . அது தற்காப்பு” என்று கூறப்படுகிறது. இது சுமந்திரனுக்கு புரியவில்லை அல்லது புரிந்தும் வேண்டுமென்றே “ ஆயுதப் போராட்டம் வன்முறை என்றும் நான் அகிம்சை வழியில் தீர்வு பெற்று தருவேன்” என்று கூறுகிறார். சரி அப்படியென்றால் கடந்த 11 வருடங்களாக சுமந்திரன் செய்த அகிம்சைப் போராட்டம் என்ன? அதன்மூலம் பெற்ற தீர்வு என்ன? என்று கேட்டால் அதற்குரிய பதிலை தரவேண்டும். ஆனால் மாறாக “நீங்கள் என்ன செய்தீர்கள?;” என்று திருப்பி கேட்கிறார்கள் சுமந்திரன் தம்பிகள். கேள்வி கேட்டால் முதலில் அதற்குரிய பதிலை அளிக்க வேண்டும். அதைவிடுத்து திருப்பி கேள்வி கேட்பது உரிய பதில் இல்லை என்பதை சுமந்திரன் தம்பிகள் முதலில் உணர வேண்டும். இதுவரையில் பதவியில் இருந்தது சுமந்திரன்தான். இப்போது வந்து மீண்டும் பதவி தாருங்கள் என்று கேட்பதும் சுமந்திரன்தான். எனவே சுமந்திரனிடம் கேள்வி கேட்பதற்கு ஒவ்வொரு தமிழனுக்கும் உரிமையும் தகுதியும் உண்டு என்பதையும் சுமந்திரன் தம்பிகள் உணர வேண்டும். மாறாக ஒருவர் ஏதாவது சாதித்த பின்புதான் வந்து சுமந்திரனிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று கருதுவது ஆக்கபூர்வமான உரையாடலுக்கு வழி சமைக்காது என்பதை சுமந்திரன் தம்பிகள் உணர வேண்டும். எப்படித்தான் சுட்டிக்காட்டினாலும் சில தம்பிகள் புரிந்து கொள்ளப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் அற்ப சுயநல சலுகைகளுக்காக சுமந்திரனை ஆதரிக்கிறார்கள். சுமந்திரன் தோல்வியுற்றதும் செத்த மாட்டில் இருந்து உண்ணிகள் கழருவதுபோல் இவர்கள் கழன்று சென்று விடுவார்கள். இது சுமந்திரனுக்கும் நன்கு தெரியும்.