Sign in to follow this  
ampanai

கொரோனா தொற்று பரவல் உள்ளதா என வீடுதோறும் சென்று ஆய்வு செய்யப்படும்

Recommended Posts

சென்னை: கொரோனா தொற்று பரவல் உள்ளதா என வீடுதோறும் சென்று ஆய்வு செய்யப்படும் என சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பீலா ராஜேஷ் கூறியதாவது:கொரோனாவால் பாதித்தவர்களின் அருகில் அதாவது 5 லிருந்து 7 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள 50 வீடுகளில் பரிசோதனை செய்ய இருக்கிறோம்.

இதற்காக, ஒரு டாக்டர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று, வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருமல் பிரச்சனையுடன் யாரும் இருக்கிறார்களா என்றும் அந்த வீட்டில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இருந்தால் அவர்களுக்கு சர்ஜரி, டயாலிசஸ் செய்பவர்கள் இருக்கிறார்களா என்பது கண்டறியப்பட்டு உடனடியாக மாஸ்க் வழங்குவோம். கொரோனா தொற்று ஏதும் இருப்பது அறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்படுவார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2511701

Share this post


Link to post
Share on other sites

இது சற்று வித்தியாசமான அணுகுமுறையாகவும், தற்போதுள்ள அணுகுமுறையை விட சிறந்ததாக அமையும் என நம்புவோம். 

தமிழகம் போன்ற நாட்டில், மேற்குலக அணுகுமுறை வெற்றியை  தராது.  

Share this post


Link to post
Share on other sites
9 minutes ago, ampanai said:

இது சற்று வித்தியாசமான அணுகுமுறையாகவும், தற்போதுள்ள அணுகுமுறையை விட சிறந்ததாக அமையும் என நம்புவோம். 

தமிழகம் போன்ற நாட்டில், மேற்குலக அணுகுமுறை வெற்றியை  தராது.  

Applicability-of-sampling-techniques-in-

இதெல்லாம் நடக்குற வேலையா.? நல்ல புள்ளியல் பார்முலா ஒன்று எடுத்து விடுங்கள் தோழர்..👍

Share this post


Link to post
Share on other sites
17 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Applicability-of-sampling-techniques-in-

இதெல்லாம் நடக்குற வேலையா.? நல்ல புள்ளியல் பார்முலா ஒன்று எடுத்து விடுங்கள் தோழர்..👍

 

இது பொதுவாக காவல்துறை புலனய்வுத்துறை செய்யும் அணுகுமுறை. 

குற்றம் நடந்து காவல்நிலையத்திற்கு வரும்பொழுது அவரக்ளுக்கு தெரியும் எங்கே அதிகம் குற்றச்செயல்கள் நடக்கின்றது. எனவே, அங்கே தமது செயல்பாடுகளை அதிகரிப்பார்கள். 

rcmp-717x420.png

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதெல்லாம் நடக்குற வேலையா.? நல்ல புள்ளியல் பார்முலா ஒன்று எடுத்து விடுங்கள் தோழர்..👍

தோழர்,

சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் முதல்வர் ஆளும்கட்சிக்காக பீலாவிட்டதை அம்பனை உண்மை என்று நம்பிவிட்டார்.
இப்படியான வசதிகள் முன்றேற்றம் அடைந்த நாடுகளிலேயே கொரேனாவுக்கு இல்லை.

4 hours ago, ampanai said:

ஒரு டாக்டர் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று, வீட்டில் யாருக்காவது காய்ச்சல் இருமல் பிரச்சனையுடன் யாரும் இருக்கிறார்களா என்றும் அந்த வீட்டில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இருந்தால் அவர்களுக்கு சர்ஜரி, டயாலிசஸ் செய்பவர்கள் இருக்கிறார்களா என்பது கண்டறியப்பட்டு உடனடியாக மாஸ்க் வழங்குவோம். கொரோனா தொற்று ஏதும் இருப்பது அறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்படுவார்கள் இவ்வாறு அவர் கூறினார்.

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • செம்மண்ணோடு ஒன்றித்த பெருவாழ்வு: தற்சார்பு பொருளாதாரம் குறித்து விளக்குகிறார் செம்புலம் மூர்த்தி ஊரில இயற்கையாகவே கிடைக்கின்ற மூலிகை செடிகளையும், பாரம்பரியமாக எங்கள் ஊரில் விளைந்த மரக்கறிகளையும் தானியங்களையும் மீண்டும் மக்களிடம் கொண்டு செல்வது தான் எங்களின் நோக்கம்.  தான் சார்ந்த பிரதேச மக்களின் நலன் கருதி "செம்புலம் கிராமிய பொருளாதார அபிவிருத்தி நிறுவனம்" ஊடாக பயன்தரு மூலிகை, காய்கறி, மரக்கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கி வருவதோடு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார் செம்புலம் மூர்த்தி. (ஞானமூர்த்தி விக்னேஸ்வரமூர்த்தி -ரகு).செம்மண் கிராமமான யாழ்ப்பாணம் - குப்பிளானை சேர்ந்த இவர் இயற்கை வழி இயக்கத்திலும் செயற்பாட்டாளராக விளங்கி வருகிறார்.  எமது பிரதேசத்தில் சுண்டங்கத்தரியின் அடையாளமாக விளங்கும் இவர் 2018 இல் வெறும் 500 சுண்டங் கத்தரிகளை நாட்டி ஒரு வருடத்தில் 6 இலட்சம் ரூபாக்களுக்கு மேல் இலாபமீட்டி இருக்கிறார். பெரிதாக நோய்த்தாக்கமில்லாத, வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய  எம்மண்ணின் பயிரான சுண்டங் கத்தரியை நடுமாறு விவசாயிகளை ஊக்குவித்து வருவதோடு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.பாகற்காய், முருங்கையிலை, பனங்கிழங்கு போன்ற பல்வேறு உணவுப்பொருள்களையும் பாதுகாப்பான முறையில் சூரிய ஒளியில் உலர்த்தி தனது செம்புலம் நிறுவனமூடாக விற்பனை செய்தும் வருகின்றார். இன்று எமது பிரதேசங்களில் மரக்கறிகளை விற்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். ஆனால், அவற்றை உலர்த்தி மாதக்கணக்கில் பேணி வைக்க முடியும் என்பதனை கடந்த சில வருடங்களாக செயற்படுத்தி வருகிறார்.கடந்த வருடம் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பனம் சொக்லேட்க்கு யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் நல்ல கிராக்கி இருந்தது. சிங்களவர்கள், வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாது எம்மவர்களும் போட்டி போட்டு வாங்கினர்.      எங்களுடைய சாப்பாட்டு முறைகள் என்றைக்கு மாறியதோ அன்றைக்கே எங்களின் சந்ததிகளை வருத்தக்காரர் ஆக்கி வைத்திருக்கிறோம். இளைய சமுதாயத்தினர் விவசாயம் செய்வதனை தரக்குறைவாக நினைக்கிற நிலை உள்ளது. ஊரில இருந்த பாரம்பரிய இனங்களை அழித்து விட்டோம்.   எங்களின் ஊருக்கு ஒவ்வாத மாங்கன்றையும், வாழைக்குட்டியையும், தென்னங்கன்றையும் நடுவதால் எந்தப் பயனும்  இல்லை.   என தனது இயற்கை வாழ்வியல் சார்ந்த உரையாடலை ஆரம்பிக்கின்றார்.நாங்கள் உள்ளூரில் கிடைக்கின்ற மூலிகை தாவரங்களை சாப்பிட்டு வந்தாலே மருத்துவரை தேடிப் போக வேண்டிய தேவை இல்லை.கறிமுருங்கையில் ஆரம்பித்து மணத்தக்காளி, குறிஞ்சா, முசுட்டை,  தவசி முருங்கை, வாத நிவாரணி, தூதுவளை, மொசுமொசுக்கை என பல்வேறு மூலிகைத் தாவரங்களையும் வளர்த்து ஒரு நாளைக்கு ஒரு இலைவகை தாவரத்தை சாப்பிட்டு வந்தாலே எங்களது ஆரோக்கியம் மேம்படும்.   இன்று இவ்வளவு மூலிகை தாவரங்கள் இருந்தும் கிராமப்புறங்களில் வளரும் குழந்தைகள், சிறார்கள் ஆரோக்கியம் இல்லாத நிலையில் தான் வளர்க்கின்றனர். ஆரோக்கியமில்லாத வருங்கால தலைமுறையை உருவாக்கி என்ன செய்யப் போகிறோம்? இது மிகவும் ஆபத்தானது.எமது பிரதேசங்களில் கைவிடப்பட்ட இன்னொரு பாரிய வளம் பனை. அதிலிருந்து எவ்வளவோ ஆரோக்கியமான உணவுப்பொருள்களை செய்யக் கூடியதாக இருந்தாலும், அதனை நாங்கள் யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை.ஒவ்வொரு வீடுகளிலும் கோழிகள், ஆடு, மாடுகள் என்று இருக்குமானால் முட்டை பாலால் எமது குழந்தைகளின் ஆரோக்கியத்தை இன்னும் சிறப்பாக பேண முடியும்.தற்சார்பு வாழ்க்கையை நாம் வாழுவோமாக இருந்தால் கொரோனா இல்லை இன்னும் வரப்போகும் எந்த நெருக்கடிகளையும் நாம் எதிர்கொள்ள முடியும்.தொடர்புக்கு: 0772281820 http://www.nimirvu.org/2020/04/blog-post_28.html  
  • இன்றைய கீழடி நிலவரம் பற்றி பதிவுகளை புதுப்பித்து பதிவிடவும் தோழா/தோழி  நன்றி 🙏
  • மலையக மக்களின் வாக்குப்பலத்தை கொண்டு கிடைத்த அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு தமிழினப் படுகொலைகாரர்களில் ஒருவரான ஹிந்தியாவுக்கு விசுவாசமான அடிமையாக காலத்தை ஓட்டிய ஆறுமுகன் தொண்டமான் வாக்களித்த மலையக மக்களுக்கு விசுவாசமாக நடந்தது இல்லை.     இந்த கொரோனா தொற்று காலத்திலும் அவரது மகனும் கட்சியும் அவரது பிரேதத்தை வைத்து 5 நாட்கள் அரசியல் செய்ய முடிவெடுத்து மிகவும் மோசமான குணத்தை வெளிப்படுத்துகிறது, அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியது.
  • நிர்வாகம் ??? கறுப்பு ?? மனிதன் ??/          கர்த்தாவே இவர்களை மன்னித்தருளும் ( என்ன எழுதுகிறார்கள் என அவர்கள் அறியாதிருக்கிறார்கள் !!!)    
  • வெட்டுக்கிளிகளின் வெறியாட்டம், தப்பிக்குமா தமிழ்நாடு.