Jump to content

அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி தம்பதி.. உங்களை பாதுகாப்பதற்கான கட்டணத்தை நீங்களே செலுத்துங்கள்- டிரம்ப்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Donald Trump says that Pay for your Own Protection to Prince Harry

அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி தம்பதி.. உங்களை பாதுகாப்பதற்கான கட்டணத்தை நீங்களே செலுத்துங்கள்- டிரம்ப்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் குடிபெயர்ந்துள்ள இளவரசர் ஹாரி மற்றும் மெகன் தம்பதிக்கான பாதுகாப்பு கட்டணத்தை அவர்கள்தான் செலுத்த வேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு இளவரசர் ஹாரி அமெரிக்க நடிகையான மெகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஹாரியும் மெகனும் சுதந்திரமாக இருக்க விரும்பியதால் அவர்கள் அரச குடும்பத்தை விட்டு விலகுவதாக அறிவித்தனர்.

இதற்கு நீண்ட ஆலோசனைக்கு பிறகு 2-ஆம் எலிசபெத் ராணி அனுமதி அளித்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அரச பட்டம், பதவிகளை துறக்கவும் முடிவு செய்தனர். இதையடுத்து ஹாரியும் மெகனும் கனடாவில் குடியேறினர்.

இங்கு கடந்த சில மாதங்களாக கனடாவில் இருந்து வந்த நிலையில் மெகன் படவாய்ப்புகளை தேடி வந்தார். இந்த நிலையில் மெகனின் நண்பர்கள், உடன் பணிபுரிந்தோர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ளனர். அதனால் அமெரிக்காவில் குடிபெயர்ந்தால் தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என மெகன் விரும்பினார். மேலும் லாஸ் ஏஞ்சல்ஸில் மெகனின் தாய் டோரியா ராக்லாந்து வசிக்கிறார்.

இதனிடையே ஆப்பிரிக்கா யானைகளின் குடும்பத்தை பற்றிய ஒரு புதிய படத்திற்கான கதையை வரும் வியாழக்கிழமை மெகனிடம் டிஸ்னி கூறவுள்ளது. இதற்காக ஹாரியும் மெகனும் கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.

இந்த நிலையில் ஹாரி தம்பதியின் பாதுகாப்பிற்காக அமெரிக்கா செலவிடாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நான் இங்கிலாந்து ராணியின் சிறந்த நண்பராவேன். ஹாரியும், மெகனும் அரச குடும்பத்தைவிட்டுவிட்டு கனடாவில் நிரந்தரமாக வசிப்பார்கள் என கேள்விப்பட்டேன்.

தற்போது கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபயெர்ந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு கட்டணத்தை அவர்கள்தான் செலுத்த வேண்டும். அமெரிக்க அரசு செலுத்தாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றம் குறித்து டிரம்பிற்கு எதிராக ஹாரி டெலிபோனில் பேசியதாக அண்மையில் ஒரு வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/washington/donald-trump-says-that-pay-for-your-own-protection-to-prince-harry-381266.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.