Sign in to follow this  
ampanai

தன்னார்வலர்களை முடக்குவது, பட்டினிச்சாவு சூழலையே ஏற்படுத்தும்

Recommended Posts

-நிதர்ஷன்

தன்னார்வலர்களை முடக்குவது, பட்டினிச்சாவு சூழலையே ஏற்படுத்தும் என, யாழ். ஊடக அமையம் அறிக்கையொன்று வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கை முழுவதும் கெரோனோ வைரஸ் தாக்கம் தொடர்பிலான எச்சரிக்கையும் விழிப்புணர்வும் முடுக்கிவிடப்பட்டுள்ள அதேவேளை அரசினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு மக்களை முற்றாக வீடுகளுக்குள் முடக்கிவிட்டுள்ளது.

அரசினது இத்தகைய அறிவிப்புக்கு வடக்கு மாகாணமும் விதிவிலக்கல்ல. ஆனாலும் மக்களை வீடுகளுள் இருக்குமாறு அரசு அறிவித்துவருகின்ற போதும் வீடுகளுள் அகப்பட்டிருக்கும் மக்களில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற அன்றாடங்காய்ச்சி குடும்பங்களது நிலை நாளுக்கு நாள் மோசமான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

அரசினது அறிவிப்புக்களும் அரச அதிகாரிகளது அறிவிப்புக்களும் வெறுமனே அறிக்கைகளாகவும் புள்ளிவிவரங்களாகவும் இருக்கின்ற போதிலும் யதார்த்தத்தில் மக்களுக்கு இன்று வரை நிவாரணங்கள் எதுவுமே கிட்டியிருக்கவில்லையென்பதே உண்மையாக இருந்து வருகின்றது.

மக்களை வீடுகளினுள் முடங்கியிருக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்ட நாள் முதலே அன்றாடங்காய்ச்சிக்குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றிய அறிவிப்புக்களும் வெளியிடப்பட்டே வருகின்றது.

ஆனாலும், அவையெல்லாம் வெறும் ஊடகங்களுக்கான அறிக்கைகளாக அரசினாலும் அதிகாரிகளாலும் வெளியிடப்படும் தகவலாக உள்ளதேயன்றி யதார்த்தத்தில் ஏதும் கிட்டாதேயுள்ளது.

குறிப்பாக சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு ஆகக்குறைந்தது கடன் முற்பணத்தை வழங்க போவதாக சொன்ன அதிகாரிகளது உறுதி மொழி  கூட பெரும்பாலான இடங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் தமது அன்றாட ஒருவேளை உணவுக்காக போராடும் மக்களது தேவைகளை நிறைவேற்ற பாடுபடும் தன்னார்வ உதவி அமைப்புக்கள் மற்றும் இளம் சமூகத்தின் பணிகளட வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத ஒன்றாக தற்போதைய சூழலில் உள்ளது.

உதவி கோரப்படுகின்ற சந்தர்ப்பங்களில் எல்லாம் தேடிச்சென்று மக்களது வீடுகள் தோறும்; இத்தகைய தரப்புக்கள் தமது அர்ப்பணிப்பு மிக்க சேவையினை வழங்கிவருகின்றன.

இத்தகைய உதவிகள் மக்களது மனதில் நம்பிக்கையினையும் தமது வீடுகளுள் தங்கியிருக்க வேண்டிய சூழலின் நியாயத்தை வலியுறுத்துவதாகவும் இருந்து வருகின்றது.

யாழ்.ஊடக அமையமும் தன்னிடம் வருகின்ற உதவிக்கோரிக்கைகளை இத்தகைய தன்னார்வ உதவி அமைப்புக்கள் ஊடாகவே மக்களுக்கு பெற்று வழங்கிவருகின்றது.

ஆனாலும் இத்தகைய உதவிகளை வழங்கும் தரப்புக்களை இலக்கு வைத்து கடந்த சில நாட்களாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் அத்தகைய உதவிகள் கூட அன்றாடங்காய்ச்சி குடும்பங்களை சென்றடைய முடியாத சூழலை தோற்றுவித்துள்ளது.

நேற்றைய தினம் கொடிகாமத்தில் இவ்வாறான தன்னார்வ உதவியாளர்கள் நால்வர் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதே போன்று இன்று ஞாயிற்றுக்கிழமை தீவுப்பகுதிகளுக்கு உதவிகளை வழங்கிய பின்னர் யாழ்.நகரப்பகுதிக்கு திரும்பியவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.

ஆயினும் அவர்களிடம் படை சிவில் நிர்வாக அலுவலகம் வழங்கிய அனுமதி  இருந்த போதும் சோதனை சாவடியில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. பலத்த சிரமங்களின் பின்னராகவே அவர்களால் இரவு வீடு திரும்ப முடிந்திருந்தது. 

மக்களை வீடுகளுள் முடங்கியிருக்குமாறு கோரப்படுவதன் நியாயம் எவ்வளவு மறுக்கப்படமுடியாததொன்றோ அதே போன்று அவர்களை பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றுவதுமாகும்.

அரசு ஏற்கெனவே வாக்குறுதி அளித்தது போன்று நிவாரணப்பொருட்களை வீடு தேடி சென்று விநியோகிக்கும் வரையிலேனும் பட்டினி சாவிலிருந்து மக்களை காப்பாற்ற இத்தகைய தன்னார்வ தரப்புக்களது சேவை தேவையாகவுள்ளது.

யதார்த்த நிலையினை புரிந்து இத்தகைய தன்னார்வ தரப்புக்கள் சேவையினை தடங்கலின்றி வழங்க உரிய நடவடிக்கைகளை எடுத்துதவுமாறு அரசினையும் அரச பிரதிநிதிகளான வடமாகாண ஆளுநர், மாவட்ட செயலர் மற்றும் பிரதேச செயலர்களையும் காவல்துறை மற்றும் முப்படைகளையும் யாழ்.ஊடக அமையம் கேட்டுக்கொள்கின்றது.

மக்களை வீடுகளுள் முடக்கி வைத்தல் என்ற வகைப்படுத்தலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தன்னார்வ தொண்டமைப்புக்களை முடக்குவது, பட்டினிச்சாவு சூழலையே ஏற்படுத்துமென்பதை சுட்டிக்காட்டவும் யாழ்.ஊடக அமையம் விரும்புகின்றது.” என்றுள்ளது. 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தனனரவலரகள-மடககவத-படடனசசவ-சழலய-ஏறபடததம/71-247625

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ampanai said:

அரசினது அறிவிப்புக்களும் அரச அதிகாரிகளது அறிவிப்புக்களும் வெறுமனே அறிக்கைகளாகவும் புள்ளிவிவரங்களாகவும் இருக்கின்ற போதிலும் யதார்த்தத்தில் மக்களுக்கு இன்று வரை நிவாரணங்கள் எதுவுமே கிட்டியிருக்கவில்லையென்பதே உண்மையாக இருந்து வருகின்றது.

இது தான் உண்மையான கள நிலவரம்.

வடமாகாண ஆளுநரும், அரச அதிபரும் அவ்வப்போது விடும் நிவாரணம் பற்றிய அறிவிப்புக்களில் 10% கூட நிறைவேற்றப்படவில்லை. அதிலும் 5% ஆனவர்களுக்கு கூட முறையான நிவாரணம் எதுவும் வழங்கப்படவில்லை. பெரும்பாலான மக்கள் தங்கள் சுய முயற்சியிலேயே பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

கைகளில் பணமில்லாதவர்கள் நகை, உந்துருளி புத்தகம் போன்றவற்றை அடகுவைத்து பொருட்களை கூடிய விலைகளில் வாங்குகின்றனர்.

சதோச போன்ற அரச நிறுவனங்கள் தமிழர் பகுதிக்கு போதியளவு உணவுப் பொருட்களை விநியோகிக்கவில்லை. கட்டுப்பாட்டு விலையிலுள்ள பொருட்கள் வடபகுதியில் கிடைப்பதில்லை. அவை அனைத்தும் தென்பகுதிகளிலேயே தாராளமாக விநியோகிக்கப்படுகின்றன.  

சில கடை உரிமையாளர்கள், சில செல்வந்தர்கள் மட்டுமே தன்னார்வ இளைஞர்கள் சிலரின் உதவியுடன் கிராமப் பகுதிகளுக்கு முடிந்தளவு சிறுசிறு உதவிகளை செய்துவருகின்றனர்.

சிங்கள-பௌத்த கொலைகார அரச நிர்வாகம் வட பகுதிகளில் ஓரிரு அரிசியாலைகளுக்கு மட்டுமே விநியோகிக்கும் அனுமதியை வழங்கியுள்ளது. நூற்றுக் கணக்கான அரிசியாலைகளுக்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது. இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண காலத்தில் (1 மாதத்துக்கு முன்னர்) கடைகளில் ரூ100/- க்கு கிடைத்த அரிசியின் விலையை தற்போது குறித்த ஓரிரு அரிசியாலை முதலைகள் ரூ130/- க்கு விற்று கொள்ளை இலாபம் ஈட்டுவதாக தெரிகிறது. இதற்கு சிங்கள-பௌத்த கொலைகார அரசின் முகவர்களாக இருக்கும் வடமாகாண ஆளுநரும், அரச அதிபரும் உடந்தையா என்பது தெரியவில்லை.

போர்க்காலத்தில் தமிழர்களிடம் கொள்ளையடித்த ராஜபக்ச பயங்கரவாதக் கும்பல் இப்போதும் தமிழர்களிடம் அப்படியொரு கொள்ளையில் ஈடுபட்டிருக்கிறதாகவே தெரிகிறது.

அரசுடன் ஒட்டி உறவாடிய, இனியும் உறவாடத்துடிக்கும் கூத்தமைப்போ, தம்மை மாற்றுத் தலைமை எனக் கனவு காணும் விக்கினேஸ்வரனோ, கஜேந்திரகுமார் பொன்னம்பலமோ நடக்கும் அக்கிரமங்களை கண்டும் காணாமல் உள்ளனர்.

சுரேஷ் பிரேமச்சந்திரன், விநோதரலிங்கம் போன்ற ஓரிருவரே இதுவரை குரல் கொடுத்துள்ளனர்.

 • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
22 hours ago, ampanai said:

மக்களை வீடுகளுள் முடக்கி வைத்தல் என்ற வகைப்படுத்தலில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தன்னார்வ தொண்டமைப்புக்களை முடக்குவது, பட்டினிச்சாவு சூழலையே ஏற்படுத்துமென்பதை சுட்டிக்காட்டவும் யாழ்.ஊடக அமையம் விரும்புகின்றது.” என்றுள்ளது

தமிழர் தாயகத்தில் உள்ள சமய, சமூக மற்றும் சேவை உள்ளம் கொண்ட அனைவரும் முன்மாதிரியாக உதவ வேண்டும். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • அட இலகுவான சொல், இதை யோசிக்கவில்லை 
  • நளினி, முருகன் விடயத்தில் மனிதாபிமானத்துடன் நடவுங்கள் -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தெரிவிப்பு நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்கள் நளினி, முருகன். அண்மையில் இலங்கையில் வசித்து வந்த முருகனின் தந்தை மரணமடைந்தார். அவரது இறுதிசடங்கை ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கோலில் பார்க்க அனுமதி கேட்ட முருகனின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இந்தநிலையில் இலங்கையில் உள்ள முருகனின் தாயாரிடமும், லண்டனில் உள்ள முருகனின் சகோதரியிடமும், நளினியும், முருகனும் ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கோலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றில் நளினியின் தாயார் பத்மா(வயது 80) ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜனிடம், ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கோலில் பேச இவர்களை அனுமதிப்பதில் அரசுக்கு என்ன சிரமம் உள்ளது?‘ என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தலைமை குற்றவியல் வக்கீல், ‘கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் உறவினர்களுடன் வீடியோ கோலில் பேச கைதிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், இவர்கள் விவகாரத்தில் வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் பேச அனுமதி கேட்கின்றனர். வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேச அனுமதிக்க வேண்டும் என்றால், மத்திய அரசின் ஒப்புதலை பெற வேண்டி உள்ளது. வேண்டுமென்றால், தொலைபேசியில் பேச அனுமதி அளிக்கலாம். வீடியோ காலில் பேச அனுமதிக்க முடியாது‘ என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன், ‘வீடியோ கோலில் பேச சிறை விதிகளின் படி முருகனுக்கும், நளினிக்கும் உரிமை உள்ளது. அந்த உரிமையை பறிக்கக்கூடாது‘ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது என்று தமிழக அரசு தீர்மானம் இயற்றியுள்ளது. விடுதலை செய்ய முடிவு எடுத்து விட்டு, தற்போது உறவினர்களுடன் பேச அனுமதிக்க முடியாது என்ற அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு உள்ளது. ஏற்கனவே முருகனின் தந்தையின் இறுதிசடங்கை வீடியோ கோலில் பார்க்க அனுமதி வழங்க அரசு மறுத்துள்ளது. நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்‘ என்று கருத்து கூறினர். பின்னர், விசாரணையை நாளை(வியாழக்கிழமை) தள்ளிவைப்பதாகவும், அதற்குள் விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். https://www.ibctamil.com/india/80/144536?ref=home-imp-parsely  
  • விலையுயர்ந்த விவாகரத்து - உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த பெண்   உலகில் மிகவும் விலையுயர்ந்த விவாகரத்து அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் மற்றும் மெக்கென்சி பெசோஸ் விவாகரத்து ஆகும். தனது பங்குகளில்  4 சதவீத பங்குகளை மெக்கன்சிக்கு வழங்கினார். அதன்மூலம் மெக்கென்சி இப்போது 48 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டு, உலகின் 4-வது பணக்கார பெண்மணி ஆக உள்ளார்.   இதேபோல், சீனாவிலும் ஒரு விலை உயர்ந்த விவகாரத்து சமீபத்தில் நடைபெற்று உள்ளது. அதன் விவரம் வருமாறு: சீனாவின் காங்டாய் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனத்தின் தலைவர் டு வீமின். இவரது மனைவி யுவான். இருவரும் பிரிந்து விட்டனர். தற்போது டு வீமின் தனது தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் 161.3 மில்லியன் பங்குகளை தனது முன்னாள் மனைவி யுவானுக்கு மாற்றியுள்ளார். இதன் மதிப்பு 320 கோடி அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார். ரூ.24 ஆயிரம் கோடி)  இருக்கும் என கூறப்படுகிறது. இதையடுத்து, மே 29 அன்று தாக்கல் செய்யப்பட்ட தகவலின்படி, யுவான் உலகின் பணக்காரர்களின் வரிசையில் சேர்ந்து உள்ளார். யுவான் சீனாவின் சர்வதேச வணிக மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர் ஆவார். 49 வயதான யுவான் தற்போது நேரடியாக பங்குகளை வைத்திருக்கிறார். ஷென்சென் நகரில் வசிக்கும் டு வீமின் மே 2011 மற்றும் ஆகஸ்ட் 2018 க்கு இடையில் காங்டாயின் இயக்குநராக பணியாற்றினார். அவர் இப்போது துணை பெய்ஜிங் மின்ஹாய் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் துணை பொது மேலாளராக உள்ளார். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு தடுப்பூசியை உருவாக்கும் திட்டத்தை நிறுவனம் அறிவித்தபோது, காங்டாய் பங்குகள் கடந்த ஆண்டில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன. டுவின் நிகர சொத்து மதிப்பு முன்னாள் மனைவிக்கு பங்குகளை கொடுப்பதற்கு முன்பு 650 கோடி டாலர்களாக இருந்தது. தற்போது அது சுமார் 301 கோடி டாலராக குறைந்துள்ளது. 56 வயதான டு வீமின் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தார். கல்லூரியில் வேதியியல் படித்த பிறகு, 1987-ம் ஆண்டில் ஒரு கிளினிக்கில் பணிபுரியத் தொடங்கினார். 1995-ம் ஆண்டில் ஒரு பயோடெக் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக ஆனார். காங்டாய் 2004-ம் ஆண்டில் நிறுவப்பட்டு, அதன்பின்   மின்ஹாய் நிறுவனத்தை வாங்கியது, மேலும் அதன் ஒருங்கிணைந்த நிறுவனத்தின் தலைவராக டு வீமின் உள்ளார்.   https://www.maalaimalar.com/news/topnews/2020/06/03032607/1575534/New-Female-Billionaire-Emerges-From-Expensive-Divorce.vpf
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: பலி எண்ணிக்கை 5,598 ஆக உயர்வு   புதுடெல்லி,  இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 4-கட்டங்களாக தொடர்ந்து 68 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் 5-வது கட்டமாக நோய் கட்டுபாட்டு பகுதியில் இந்த மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தொடர்ந்து 98 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அந்த வகையில் இந்தியாவில் மெதுவாக பரவ தொடங்கிய கொரோனா, கடந்த ஒரு மாதமாக அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவிட்டது. இந்தியாவில் நேற்று முன்தினம் காலை முதல் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிதாக 204 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,98,706 ஆகவும், பலி எண்ணிக்கை 5,598 ஆகவும் உயர்ந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து 95,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 97,581 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஒரே நாளில் பலியான 204 பேரில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 76 பேர். டெல்லியில் 50, குஜராத்தில் 25, தமிழகத்தில் 11, மேற்குவங்காளம் மற்றும் மத்தியபிரதேசத்தில் தலா 8, தெலுங்கானாவில் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 4, பீகார் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 3, ஆந்திராவில் 2, அரியானா, கர்நாடகா, கேரளா மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,98,706 பேரில், 70,013 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிப்பு 24,586 ஆக உள்ளது. டெல்லியில் 20,834, குஜராத்தில் 17,200, ராஜஸ்தானில் 8,980, மத்திய பிரதேசத்தில் 8,283, உத்தரபிரதேசத்தில் 8,075, மேற்குவங்காளத்தில் 5,772 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆந்திராவில் 3,783, கர்நாடகாவில் 3,408, தெலுங்கானாவில் 2,792, ஜம்மு காஷ்மீரில் 2,601, அரியானாவில் 2,356, பஞ்சாபில் 2,301, ஒடிசாவில் 2,104, அசாமில் 1,390, கேரளாவில் 1,326 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. உத்தரகாண்டில் 958, ஜார்கண்டில் 659, சத்தீஸ்கார் 547, திரிபுரா 420, இமாசலபிரதேசம் 340, சண்டிகார் 294, மணிப்பூர் 83, லடாக் 77, புதுச்சேரி 74, கோவா 71, நாகாலாந்து 43, அந்தமான் நிகோபர் தீவு 33, மேகாலயா 27, அருணாசலபிரதேசம் 22, தாதர்நகர் ஹவேலி 3, மிசோரம் மற்றும் சிக்கிமில் தலா ஒருவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா பாதிப்பில் முதல் இடம் வகிக்கும் மராட்டிய மாநிலத்திலேயே உயிரிழப்பும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு 2,362 பேர் பலியாகி இருக்கிறார்கள். குஜராத்தில் 1,063, டெல்லியில் 523, மத்தியபிரதேசத்தில் 358, மேற்குவங்காளத்தில் 335, உத்தரபிரதேசத்தில் 217, ராஜஸ்தானில் 198, தமிழகத்தில் 197 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் 88, ஆந்திராவில் 64, கர்நாடகாவில் 52, பஞ்சாபில் 45, ஜம்மு காஷ்மீரில் 31, பீகாரில் 24, அரியானாவில் 21, கேரளாவில் 10, ஒடிசாவில் 7, உத்தரகாண்டில் 6, ஜார்கண்ட் மற்றும் இமாசலபிரதேத்தில் தலா 5, சண்டிகாரில் 4, சத்தீஸ்கார் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/03035310/Coronal-impact-in-India-is-close-to-2-lakhs-The-death.vpf