Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழிணையம் 22 ஆவது அகவை


Recommended Posts

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 21ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2020) 22ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது.

இன்று முழு உலகமுமே ஒரு நெருக்கடியான காலத்திலும் பதட்டத்திலும் இருக்கின்ற இவ்வேளையில் எம் ஒவ்வொருவருக்கும் முன்னுள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். இவ்வேளையில் யாழ் கள உறுப்பினர்களும் தம்முன் உள்ள சமூகப் பொறுப்பினை உணர்ந்து முன்மாதிரியாக செயற்பட வேண்டிக் கொள்கின்றோம். குறிப்பாக இணைக்கப்படும் மருத்துவக் குறிப்புகளினைக் கவனத்தில் கொண்டு அவைகள் இணைக்கப்பட வேண்டும். பெரும்பாலான செய்திகள் பணம் உழைக்கும் நோக்கில் பரபரப்பிலேயே வைத்திருக்கும் நோக்கில் வெளியிடப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  அத்துடன் போலிச் செய்திகள் அதிகம் உலவும் சமூக வலைத்தளங்களில் இருந்து இணைக்க முன்னர் அவை நம்பகத்தன்மையானதா என்று சரிபார்த்துவிட்டு இணைக்கப்படவேண்டும்.

மேலும் மத ரீதியான கருத்துக்களை வைக்கும் போது மத நம்பிக்கையுள்ளவர்களை புண்படுத்தாது கருத்துக்களை வையுங்கள்.  மதங்கள் ஆன்மீகம் சார்ந்து மக்களை அறநெறிப்படுத்தும் நோக்கம் கொண்டவையாயினும் சில மதப் பிரிவுகள் மக்களின் பலவீனத்தையும் அறியாமையையும் வைத்து பணம் சம்பாதிப்பதையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதே நோக்கமாகக் கொண்டுள்ளன என்பதில் எமக்கு மாற்றுக் கருத்தில்லை.  எனினும் மத நம்பிக்கையுள்ளவர்களை காயப்படுத்தாது அவர்களது உணர்வுகளையும் மதித்து நடப்போம்.

யாழ் இணையம் 22 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக முன்னைய வருடங்கள் போன்று யாழ் இணைய உறவுகள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர்.  எல்லோருக்கும் பாராட்டுக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும்  நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம்.

"நாமார்க்கும் குடியல்லோம்"

நன்றி

யாழ் இணைய நிர்வாகம்

  • Like 6
Link to post
Share on other sites
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.