Jump to content

தாயகத்தில் தன்னெழுச்சியாக இளைஞர்கள் நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்


Recommended Posts

கொரோணா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்கள் ஏற்கனவே கொடூர யுத்தம் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய சூழ்நிலை மிகவும் அவர்களை வறுமையில் வாட்டுகிறது இதனை கருத்தில்கொண்டு தன்னெழுச்சியாக பல இளைஞர்கள் நிவாரணப் பணிகளை மேற்கொள்கின்றனர் அந்த வகையில்  முன்னாள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவரும் சமூக செயற்பாட்டாளரும் ஆகிய  கிருஷ்ணமீனன்  அவர்கள் இளைஞர்களை இணைத்து   மனிதாபிமானப் பணியில் மக்களோடு மக்களாக ஈடுபட்டுள்ளார்.

"தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" -
என்னும் சுப்பிரமணிய பாரதியாரின் கவி வரிகளை முன்நிறுத்தி தமது நிவாரண பணியை முழு வீச்சாக வடக்கு கிழக்கு எங்கும் மேற்கொண்டு வருகின்றனர் மேலும் மக்களுக்கான உதவிகள் தேவைப்படுகிறது என்று இளைஞர்கள் அவா கொள்கின்றனர்.

அன்றாட கூலி வேலை செய்து தமது வாழ்வாதாரத்தை நடத்திய மக்களின் பட்டினியை போக்க ஒருவாய் கஞ்சி குடிக்க ஆவது ஒருபிடி அரிசி கொடுப்போம். என்று இராணுவ பொலீஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் ஊடகவியலாளர்கள் துணையோடு இந்த நிவாரண பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினமும் இன்றைய தினமும்  இளையோரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான பணிகளின் பதிவுகள் இவை.

ஒருவேளை உணவு கூட உண்ண முடியாமல் தவித்த இந்த தினக்கூலி செய்யும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை கிராமபுற மக்களுக்குஉதவி வழங்கப்பட்டது அந்த வகையில்....

யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 15 குடும்பத்தினருக்கும் நாவற்குழியில் புதிய குடியேற்ற திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட்ட 100 குடும்பங்களுக்கும் பொருட்கள் வழங்கப்பட்டது .

பயனாளிகள் அனைவரும் அன்றாடம் கூலி வேலைக்கு சென்று தமது ஜீவனோபாயம் மேற்பட்டவர்கள் இவ்வாறு பலர் பட்டினியால் தவிக்கின்றனர் உங்களால் முடிந்தால் நீங்களும் பங்காளிகளாக மாறுங்கள்.

தொடர்புகளுக்கு
Krishnameenan   +94 770706691
மயூரதன் +94 717108412

IMG-20200330-WA0021.jpg
IMG-20200330-WA0014.jpg
IMG-20200330-WA0015.jpg
IMG-20200330-WA0016.jpg
IMG-20200330-WA0017.jpg
IMG-20200330-WA0018.jpg
IMG-20200330-WA0019.jpg
IMG-20200330-WA0020.jpg
IMG-20200330-WA0022.jpg
Link to comment
Share on other sites

நெருக்கடி நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் இளைஞன்!

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வடக்கு மாகாணம் உள்ளிட்ட நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது.

இதனால் தினமும் நாள் கூலிக்கு வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்துபவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக வடக்கு - கிழக்கில் இந்த பிரச்சினை தலைதூக்கியுள்ளது.

இந்நிலையில், அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் பூநகரி வடக்கு பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மூன்றாவது நாளாகவும் இந்த மனிதாபிமான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர் ஜெயகாந்தனால் இந்த உதவிப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் ஒரு அங்கவீனமுடையவர் என்பதுடன், தனக்கு முடியாத நிலையிலும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான இந்த சூழலில் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.ibctamil.com/srilanka/80/140171

Link to comment
Share on other sites

ஒரு இக்கட்டான நிலையில் இவ்வாறான இளையவர்கள் மற்றைய இளையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கட்டும். 

போதைப்பொருள் என பல சமூக சிதைவுகளை இனவழிப்பாளர்களுடன் இணைந்து நடாத்தும் காலத்திலும் இவ்வாறான இளையவர்களின் செயல்பாடுகள் நம்பிக்கை தருவதாய் உள்ளது.    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதை செய்கிறார்கள், ஆனால் கொஞ்சம் அவதானத்துடன் செய்யவேண்டும். ஊரடங்கு வேளையில் நடமாடுவதால் உரிய அனுமதிப்பத்திரத்துடன் செயல்படுவது நல்லது. கடந்த சனிக்கிழமை சாவகச்சேரியில் இந்த பணியில் ஈடுபட்டிருந்தவர்களை பொலீசார் விசாரித்து பின்பு விடுவிக்கப்பட்டார்கள். அனுமதிப்பத்திரத்தின் காலாவதி திகதியை சரியாக கவனித்து பணிகளில் ஈடுபடவும். 

Link to comment
Share on other sites

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நல்லதை செய்கிறார்கள், ஆனால் கொஞ்சம் அவதானத்துடன் செய்யவேண்டும். ஊரடங்கு வேளையில் நடமாடுவதால் உரிய அனுமதிப்பத்திரத்துடன் செயல்படுவது நல்லது. கடந்த சனிக்கிழமை சாவகச்சேரியில் இந்த பணியில் ஈடுபட்டிருந்தவர்களை பொலீசார் விசாரித்து பின்பு விடுவிக்கப்பட்டார்கள். அனுமதிப்பத்திரத்தின் காலாவதி திகதியை சரியாக கவனித்து பணிகளில் ஈடுபடவும். 

நல்லதொரு புத்திமதி!

Link to comment
Share on other sites

22 hours ago, Rajesh said:

தொடர்புகளுக்கு
Krishnameenan   +94 770706691
மயூரதன் +94 717108412

இந்த இளைஞர்கள் யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள்.

பல சமூக விழிப்புணர்வுத் திட்டங்களை செய்து வருபவர்கள்.

இவர்களுக்கு உதவ ஆர்வமுள்ளவர்கள் இவர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு கதைத்து உதவலாமே!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதி சிறப்பான பணி , பாராட்டுக்கள்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பாராட்டத்தக்கது. God bless him.

Link to comment
Share on other sites

கொரோனா வைரஸ் தாக்கம்! வடக்கு - கிழக்கு மக்களுக்கு உதவ முன்வருமாறு அழைப்பு

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்நாட்டு போரானது மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது.

இதில் வடக்கு, கிழக்கில் வாழும் பெரும்பாலான குடும்பங்கள் குறைந்தது ஒரு உயிரையாவது காவு கொடுத்திருந்தன.

இதனால் மனதளவிலும் பொருளாதார நிலையிலும் இந்த குடும்பங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

என்றபோதும் கூட இன்றும் அதன் தாக்கம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றானது சமூக தொலைவு, முடக்கம், ஊரடங்கு உத்தரவு என்பவற்றை ஏற்படுத்தி இன்னும் இன்னல்களை எதிர்கொள்ள செய்துள்ளது.

அதிலும் குறிப்பாக நாள் கூலிக்காக வேலை செய்து ஒரு நேர உணவிற்காக பாடுபட்டு வந்த குடும்பங்கள் அதுவும் இல்லாத நிலையில் நிர்க்கதி நிலையை அடைந்துள்ளன.

இது குறித்து அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும் கூட இலங்கையர்களாகிய நாமும், எமது உறவுகளாகிய புலம்பெயர்ந்த மக்களும் தம்மால் முடிந்த உதவிகளை செய்ய முன் வருவது அவசியமாகும்.

அந்த வகையில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத இந்த குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கப்படுவது கட்டாயமாகும்.

https://www.ibctamil.com/srilanka/80/140341?ref=home-imp-flag

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2020 at 11:27 AM, Rajesh said:

நல்லதொரு புத்திமதி!

என்னுடன் பல்கலைகழகத்தில் படித்தவர்கள்தான் இந்த சாவகச்சேரி சம்பவத்தில் தொடர்புடையவர்கள், அவர்கள் இதனை பகிர்ந்துகொண்டதால்தான் எனக்கும் இதைப்பற்றி தெரிந்தது. முன்னெச்சரிக்கையுடன் செயற்படுவது நல்லது என்பதால் இதனை பகிர்ந்து கொண்டேன்

Link to comment
Share on other sites

இன்று எதிர்கொள்ளும் கோவிட்-19 பேரனத்திலும் வழமைபோல் முக்கியமான சுகாதாரத்துறைiயையும் இனப்பாகுபாட்டின் ஆயுதமாகவே சிறீலங்கா கோத்தா ஆட்சி கைக்கொள்ளுகிறது என்பதை வெளிப்படுத்தும் சிறீலங்காவில் வெளியான கருத்துப்பட வரைபுகள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

On 3/30/2020 at 6:26 PM, பிரபா சிதம்பரநாதன் said:

நல்லதை செய்கிறார்கள், ஆனால் கொஞ்சம் அவதானத்துடன் செய்யவேண்டும். ஊரடங்கு வேளையில் நடமாடுவதால் உரிய அனுமதிப்பத்திரத்துடன் செயல்படுவது நல்லது. கடந்த சனிக்கிழமை சாவகச்சேரியில் இந்த பணியில் ஈடுபட்டிருந்தவர்களை பொலீசார் விசாரித்து பின்பு விடுவிக்கப்பட்டார்கள். அனுமதிப்பத்திரத்தின் காலாவதி திகதியை சரியாக கவனித்து பணிகளில் ஈடுபடவும். 

நிச்சயம். இனவாத இராணுவ மற்றும் காவல்துறையினர் எமது இளையவரக்ளை கொல்லவும் தயங்கமாட்டார்கள்.

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

இன்று எதிர்கொள்ளும் கோவிட்-19 பேரனத்திலும் வழமைபோல் முக்கியமான சுகாதாரத்துறைiயையும் இனப்பாகுபாட்டின் ஆயுதமாகவே சிறீலங்கா கோத்தா ஆட்சி கைக்கொள்ளுகிறது என்பதை வெளிப்படுத்தும் சிறீலங்காவில் வெளியான கருத்துப்பட வரைபுகள்

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

ம்ம் மிக அருமையான சித்திரம்!

உண்மைல சொறிலங்கா அரசு வடகிழக்குக்கு எந்தவொரு நிவாரப்பொருளையுமோ, நிவாரண நிதியையோ இதுவரை உருப்படியா அனுப்பவில்லை.

கட்சிக் கூட்டம் என்டு இந்த அரச கொலைகாரக் கோஷ்டியை சந்திக்கப்போற தமிழ் கட்சி பிரதிநிதிகளும் குடுக்குறதை மிச்சம் விடாம சாப்பிட்டுடு சைலன்ட்டா இருக்கினமாம்.

Link to comment
Share on other sites

வறிய நிலையில் உள்ள மக்களுக்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு நிவாரணப்பணி!

In இலங்கை     April 4, 2020 4:12 am GMT     0 Comments     1081     by : Benitlas

IMG_4637.jpg

ஊரடங்கு சட்டம் காரணமாக மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு சமூக அமைப்புகள் பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் பல்வேறு நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாநகருக்குட்பட்ட பனிச்சையடி கிராம மட்ட விழிப்பு குழுவின் வேண்டுகோளுக்கு அமைய ஒரு தொகுதி நிவாரணப்பொருட்கள் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை வழங்கிவைக்கப்பட்டன.

இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியனிடம் பனிச்சையடி கிராம மட்ட விழிப்பு குழுவின் தலைவி ரஜனி ஜெயப்பிரகாஸின் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

திராய்மடு, பனிச்சையடி, சத்துருக்கொண்டான் உள்ளிட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த 130 குடும்பங்களுக்கு இந்த நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கொரோனாவின் தாக்கம் காரணமாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் ஊரங்கு காரணமாக தொழில் வாய்ப்பினை இழந்து மிகவும் கஷ்ட நிலையினை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

இதேபோன்று மட்டக்களப்பு மாநகருக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியிலும் தொழில் வாய்ப்பினை இழந்து மிகவும் கஸ்ட நிலையினை எதிர்கொள்ளும் நூறு குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

 

IMG_4662.jpg

IMG_4624.jpg

Link to comment
Share on other sites

உறவுகளை வீடுகளுக்குள் முடக்கிய கொரோனா! களமிறங்கிய இளைஞர்கள்

நமது நாட்டில் ஒவ்வொரு முறையும் நெருக்கடியான கால கட்டங்களில் இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து உதவிக்கரம் நீட்டுவது இன்று நேற்று நடப்பது அல்ல. நாம் பல காலமாக இடம்பெயர்ந்து உணவின்றி தவித்த போது ஏற்பட்ட பண்பாடு.

அதன் தொடர்ச்சியாக எல்லா காலகட்டத்திலும் நமது இளைஞர்கள் களத்தில் இறங்கி வேலை செய்வதற்குப் பின்நின்றது இல்லை என்பது வரலாறு. இடப்பெயர்வுகள், வெள்ள அனர்த்தங்கள், மண் சரிவுகள் என்று எத்தனை இடர்கள் வந்தாலும் உறவுகளை வீழ்ந்துவிடாது கைகோர்த்து தாங்கி நிற்கும் மகத்தான சேவையை செய்கிறார்கள் எமது இளைஞர்கள்.

இன்று கொரோனா வைரஸ் உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பல நாடுகள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன. வல்லரசு தேசங்களே பொருளாதாரத்தில் சரிந்து கொண்டிருக்கிறது. நமது தேசமும் அதற்கு விதிவிலக்கல்ல.

தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியில், பொது மக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை உடனடியாக கொண்டு சேர்ப்பதும், அவர்களின் வயிற்றுப் பசியாறுவதும் அவசரத் தேவையாக இருக்கிறது.

நமது இளைஞர்கள் அதற்காக முழு மூச்சோடு உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலும் பல பகுதிகளில் அன்றாடத் தேவைகளுக்காக பொது மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெளியே போக முடியாத சூழ்நிலை.

இந்நிலையில், உஷாந்தன் தலைமையிலான இளைஞர்கள் குழுவும் தாங்களாகவே ஒன்றிணைந்து இச்சேவையினை செய்திருக்கிறார்கள். பொது மக்களுக்காக இணைந்த இளைஞர்களின் இந்த முயற்சிகளை நமது இணையத்தளம் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140534

Link to comment
Share on other sites

யாழில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கலட்டி அம்மன் இளைஞர் கழகம் உதவி!

Jaffna-Kalatti-Amman-Youth-Club-help-for-people.jpg

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து யாழில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள 135 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் கலட்டி அம்மன் இளைஞர் கழக இளைஞர்களால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கலட்டி அம்மன் ஆலய மணிமண்டபத்தில் வைத்து இன்று (சனிக்கிழமை) குறித்த உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

ஜே/100 கிராம சேவகரினால் குறித்த இளைஞர் கழகத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அடுத்து நல்லூர் பிரதேச செயலரினால் பரிந்துரைக்கப்பட்ட குடும்பங்களுக்கே இவ்வாறு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

Jaffna-Kalatti-Amman-Youth-Club-help-for

Jaffna-Kalatti-Amman-Youth-Club-help-for

Jaffna-Kalatti-Amman-Youth-Club-help-for

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள். உங்கள் செயற்பாடு ஒருவித நம்பிக்கையை அளிக்கிறது. இளையோரே சரியான நேரத்தில் சரியான பணி. நன்றி. நலமோடு வாழ்க.

Link to comment
Share on other sites

யாழில் வறிய மக்களுக்கு உதவிய கண்ணகி விளையாட்டுக் கழகம்

In இலங்கை     April 6, 2020 11:26 am GMT     0 Comments     1122     by : Litharsan

Jaffna-Kannaki-Sports-Club-People-Help.jpg

கொரோனா வைரஸ் பரவலையடுத்து யாழில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் தெரிவு செய்யப்பட்ட நாளாந்த கூலி தொழிலாளிகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கண்ணகி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், ஏழாலையூர் நண்பர்களின் அனுசரணையில் இவ்வாறு உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

குறித்த உணவுப் பொதியில் அரிசி 3 கிலோ, மா 5 கிலோ, ஒரு கிலோ சீனி, பருப்பு ஒரு கிலோ மற்றும் கடலை 1/2 கிலோ என்பன உள்ளிட்ட உணவு பொதியே வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த உதவித் திட்டமானது முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அடுத்தடுத்த கட்டங்களாக புலம்பெயர் நாட்டு நண்பர்களின் அனுசரணையுடன் உதவித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

Jaffna-Kannaki-Sports-Club-People-Help-1

Jaffna-Kannaki-Sports-Club-People-Help-2

Link to comment
Share on other sites

மக்களால் மக்களுக்கு உதவி! இன்றும் உயிர்ப்புடன் மனிதம்!

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழல் காரணமாக மூன்று வாரங்களாக ஊரடங்கு அமுலில் உள்ளது. இதன் காரணமாக நாளாந்தம் கூலி வேலை செய்து வாழும் சாதாரண குடிமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

அந்த வகையில், மன்னார் மாவட்டம் மடு பிரதேச சபைக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் கிராமத்தின் கிழக்கு பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி இன்றைய தினம் வழங்கப்பட்டது.

இந்த வாழ்வாதார உதவி அபிவிருத்தி சங்க தலைவர் கி.பிரான்சிஸ் பெரேரா மற்றும் செயலாளர் கிங்ஸ்லி சில்வா தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

பெரியபண்டிவிரிச்சான் கிராம மக்களுக்கு அபிவிருத்தி சங்கத்தினரால் அத்தியாவசிய தேவையின் அடிப்படையில் இன்றைய தினம் அரிசி வழங்கி வைக்கப்பட்டது.

இந்த உதவியை கடந்த போகத்தில் நெற்செய்கை மேற்கொண்ட பெரியபண்டிவிரிச்சான் மக்கள் அனைவரும் சேகரித்த நெல்லினை குற்றி அரிசியாக்கி நெற்செய்கை மேற்கொள்ளாத வறிய மக்களுக்கு கிராம சேவகரின் உதவியுடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140753

Link to comment
Share on other sites

கரைதுறைப்பற்றில் தமிழரசு வாலிபர் முன்னணியால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக "அன்ரனி ஜெயநாதன்" அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் அன்ரனி ஜெயநாதன் பீற்றற் இளஞ்செழியன் தலைமையில் தொடர்ந்து உலர் உணவு பொதிகள் வழங்கி வருகின்றனர்.

தற்போது covid 19 வைரஸ் தொற்று நோயினால் மக்கள் பெரும் பிரச்சனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் நிலையில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக "அன்ரனி ஜெயநாதன்" அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் 28,31.03.2020 ம் திகதியில் இரண்டு இலட்ஷத்தி எழுவதாயிரம் ரூபாய் (270000.00) பெறுமதியான உலர் உணவு பொதிகளை 225 குடும்பங்களுக்கு வழங்கி வைத்திருந்தனர்.

தற்போது தொடர்ந்து நாட்டில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து அமுலில் உள்ளதினால் பல பகுதியில் அன்றாடம் உழைத்து வாழ்க்கையை போக்கும் 2,3 வயது சிறுவர்கள் அடங்கிய குடும்பத்திற்கும் விசேட தேவையுடையோருக்குக்கும் அவர்களது நலன் கருதி நான்கு இலட்ஷத்தி பதினேட்டு ஆயிரம் ரூபாய் (418000.00) பெறுமதியான 380 உலர் உணவு (பிஸ்கட்) பொதிகளை 02,03,04,05.04.2020 "அன்ரனி ஜெயநாதன்" அறக்கட்டளையின் நிதி பங்களிப்பில் முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.

இவ் உலர் உணவு பொதிகள் கொக்கு தொடுவாய் மேற்கு, கொக்கு தொடுவாய் மத்தி, கொக்கு தொடுவாய் வடக்கு, செம்மலை, நாயறு (செம்மலை கிழக்கு), உப்புமாவெளி, அளம்பில் வடக்கு, அளம்பில் தெற்கு, சிலாவத்தை, சிலாவத்தை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, முல்லைத்தீவு தெற்கு, வண்ணாங்குளம், மணற்குடியிருப்பு, கோவில்குடியிருப்பு, முல்லைத்தீவு நகரம், செல்வபுரம், முள்ளிவாய்க்கால் கிழக்கு, வலைஞர்மடம், அம்பலவன் பொக்கனை , மாத்தளன், செம்மண்குன்று, நீராவிப்பிட்டி கிழக்கு ஆகிய கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

ஏனைய பிரதேசங்களிலும் தொடர்ந்து உலர்உணவு பொருட்கள் வழங்கிவக்கப்பட உள்ளதாக அறக்கட்டளையின் இஸ்தாபகர் பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்தார்.

மேற்படி பொதிகளை மாவட்ட மேலதிக செயலாளரின் அனுமதியுடன் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர், கிராம சேவகர்களின் ஒத்துழைப்புடன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140741

 
Link to comment
Share on other sites

தமிழரசுக் கட்சியால் மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

In இலங்கை     April 8, 2020 11:13 am GMT     0 Comments     1149     by : Litharsan

இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையினரால் மாற்றுத் திறனாளிகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

உலகம் பூராகவும் கொரோனா நோயின் தாக்கத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், தாயகப் பகுதியில் அவசரகால நிலைமையில் வறுமையை மக்கள் அன்றாடம் எதிர்கொண்டுவரும் நிலையில், தமிழரசு கட்சியினரால், மாற்றுத் திறனாளிகளிக் தேனீ அமைப்பினரிடம் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான 500 பேருக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று (புதன்கிழமை) வழங்கப்பட்டுள்ளன.

இந்த உணவுப் பொதிகள் மன்னார் மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

Mannar-People-Help-Ilankai-Tamil-Arasu-KMannar-People-Help-Ilankai-Tamil-Arasu-K

Link to comment
Share on other sites

ஊரடங்கால் அவதிப்படும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டு்ம் ஐபிசி தமிழ்!

அன்றாடம் உழைத்து ஜீவனோபாயத்தை நடத்திக் கொண்டிருந்த பொது மக்களை தற்போது பொருளாதார ரீதியில் முடக்கியிருக்கிறது கொரோனா வைரஸ்.

பொருளாதாரத்தில் நிமிர்ந்து நின்ற பலர் தற்போது, அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்வதிலும் பல இடர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதுமாத்திரமன்றி, அன்றாடம் உழைத்து தினக்கூலிகளாக இருக்கும் பல மக்கள் உணவுக்காக ஏங்கும் நிலைக்கும், பொருளாதாரத்தில் சரிவு நிலையினையும் சந்தித்துள்ளார்கள்.

அவர்களின் தேவைகளை நிறைவு செய்ய பல இளைஞர்கள் தன்னார்வமாக இணைந்துள்ளதுடன், எமது ஐபிசி வலையமைப்பினரும் பொது மக்களை தேடிச் சென்று உதவிக்கரம் நீட்டிவருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினமும் மூளாயில் உள்ள J/165 கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு 204 பொதிகள் எமது ஐபிசி தமிழ் குழுமத்தால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த கிராம சேவகர் பிரிவில் 400 குடும்பங்கள் வசிக்கும் நிலையில் இன்றை தினம் 204 பொதிகள் கையளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் எமது ஐபிசி தமிழ் குழுமம் எமது மக்களுக்காக இந்த நிவாரண பணியை முன்னெடுத்துவருகின்றது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140820

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • இந்தியாவுக்கு பிற‌க்கு சுத‌ந்திர‌ம் கிடைச்ச‌ நாடு Slovenia அந்த‌ நாட்டின் முன்னேற்ற‌ம் வாழ்த்தும் ப‌டி இருக்கு..................ப‌ல‌ விளையாட்டில் அவ‌ங்க‌ள் திற‌மைசாலிக‌ள்.................ப‌ல‌ நோய்க‌ளுக்கான‌ ம‌ருந்து க‌ண்டு பிடிப்ப‌தில் Slovenia திற‌மையான‌ நாடு................ ம‌னித‌க் க‌ழிவை ம‌னித‌னே அள்ளுவ‌து உண்மையில் அருவ‌ருக்க‌ த‌க்க‌து இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ம‌னித‌க் க‌ழிவை சுத்த‌ம் செய்ய‌ எவ‌ள‌வோ வ‌ச‌திய‌ க‌ண்டு பிடித்து விட்டார்க‌ள்..............2018க‌ளில் தாயிலாந்தில் ம‌னித‌க் க‌ழிவு  வெளியில் வ‌ர‌ அந்த‌ அர‌சாங்க‌ள் ஒரு நாளில் இய‌ந்திர‌த்தை வைத்து எல்லாத்தையும் ச‌ரி செய்து விட்டார்க‌ள்................ஆனால் இந்தியாவில்? ஆம் நினைவு இருக்கு க‌ட‌லில் கொட்டிய‌ எண்ணைய‌ வாளி வைச்சு அள்ளினார்க‌ள் இது தான் மோடியின் டியிட்ட‌ல் இந்தியா கிலின் இந்தியா.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.