Sign in to follow this  
உடையார்

பனங்கிழங்கு புட்டு மற்றும் கூல் செய்முறை

Recommended Posts

ஒடியல் புட்டு

செய்முறை

தேவையான பொருட்கள் :

  • ஒடியல் மா
  • தேங்காய்ப் பூ
  • தண்ணீர்
  • உப்பு (சிறிதளவு )

விரும்பினால்

  • கத்தரிக்காய்
  • கீரை
  • பச்சை மிளகாய்
  • நெத்தலி

செய்முறை

  • ஒடியல் மாவை ஒன்றுக்கு மூன்று என்ற அளவு தண்ணீரில் கரைத்து பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும்.
  • மா கீழே அடைந்ததும் மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்படி இரண்டு மூன்று தடவைகள் செய்யவும். இதனால் மாவின் காறல் தன்மை குறையும்.
  • பின்னர் மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து, பிழிந்தெடுக்கவும்.
  • இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போல சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அவிப்பதற்குத் தேவைப் படும் தண்ணீரை விட மிகக் குறைந்த அளவு தண்ணீரே இதைக் குழைப்பதற்குத் தேவைப்படும்.
  • குழைத்த மாவுள் நிறையத் தேங்காய்ப்பூ போட்டு ஆவியில் அவிக்கவும். தேங்காய்ப்பூவை ஒரு தரம் தண்ணீர் விட்டுப் பிழிந்து பாலை எடுத்த பின்னரே ஒடியல் பிட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். தேங்காய்ப்பூ பாலுடன் ஈரலிப்பாக இருந்தால் பிட்டு நீர்த்து விடும்.
  • இந்தப் பிட்டு மாவுக்குள் கத்தரிக்காய், கீரை.. போன்ற காய்கறிகள், சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பச்சை மிளகாய், தாராளமான தேங்காய்ப் பூ... போன்றவைகளைப் போட்டு அவித்தால் மிகவும் சுவையாக இருக்கும். காய்கள் போட்டு இப்படி அவிக்கும் பிட்டுக்கு தேங்காய்ப்பூவிலிருந்து பாலைப் பிழிந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • பச்சை மிளகாய், நெத்தலி போட்டும் அவிக்கலாம்.
  • பிட்டை அவித்து இறக்கியதும் உடனேயே பிரித்து, உதிர்த்து விட வேண்டும். இல்லாவிடில் பிட்டு கட்டியாக இறுகி விடும்.
 
ஒடியல் கூழ் குடிப்போமா?

தேவையான பொருட்கள் :-

பொதுவானவை :
  1. ஒடியல் மா - 1 சுண்டு ( நிரப்பி )
  2. பயிற்றங் காய் - 100 கிராம் 
  3. மரவள்ளி கிழங்கு - 100 கிராம்
  4. பலா கொட்டை - 100 கிராம்
  5. செத்தல் மிளகாய் - 20
  6. மிளகு - 1 தே .  .( நிரப்பி )
  7. மஞ்சள் - 1 துண்டு ( 2" நீளம் )
  8. உள்ளி - 5 பெரிய பல்லு
  9. பழப்புளி - பாக்களவு
  10. புழுங்கல் அரிசி - 1 பிடி
  11. முசுட்டை இல்லை / முருங்கை இல்லை -  10 நெட்டு
  12. பல்லுபோல் வெட்டப்பட தேங்காய் சொட்டு - 1/2 சுண்டு
  13. உப்பு - அளவிற்கு 

சைவ கூழ்  :
  • கத்தரிக்காய் - 100 கிராம்
  • கடலை - 100 கிராம்
  • வாழை காய் - 1 ( பெரிது )

அசைவ கூழ் :-
  • முள் இல்லாத மீன்வகை ( ரால் நெத்தலி ) - 500 கிராம்
  • நண்டு - 2
  • பாரை / கூழ் மீன் தலை - 1
  • சிறிய மீன் கருவாடு - 50 கிராம்

செய்முறை :-
  • செத்தல் மிளகாய் , மிளகு , உள்ளி , மஞ்சள் என்பவற்றிட்கு ஓரளவு நேர் சேர்த்து பசுந்தையாக அரைத்து வைத்து கொள்க .
 
  • மீன் வகைகள் , கருவாடு என்பவற்றை கழுவி துப்புரவு செய்து வைத்துக் கொள்க .
 
  • மரவள்ளி கிழங்கு , பயிற்ரங்காய்  , ப்ளாக் கொட்டை என்பவற்றை துப்புரவாக்கி சிறு துண்டுகளாக வெட்டி கழுவி வைத்து கொள்க .
 
  • பாத்திரத்தில் பழப் புளியை இட்டு   ஒரு தம்ளர் விட்டுகரைத்து வைத்துக் கொள்க 
 
  • ஒடியல் மாவை பிறிதொரு பாத்திரத்தில் இட்டு அளவிற்கு நீர் சேர்த்து கூழ் பதமாக கரைத்து அரை மணிநேரம் ஊற வைத்து எடுத்து ஒரு துணியில் இட்டு பிழிந்தெடுத்து பிறிதொரு பாத்திரத்தில் போட்டு , அரைத்த கூட்டையும் சேர்த்து வைத்துள்ள 1 தம்ளர் பழப் புளியையும் விட்டு அளவிற்கு தண்ணீரும் விட்டு நீர்ப் பதமாக  கரைத்து வைக்குக .
 
  • ஒரு பானை ( ஒரு கொத்து அரிசி அவிய கூடிய பாத்திரம் ) அதன் அரைவாசிக்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துக் கொதித்தபின் கழுவி வைத்துள்ள மரக்கறி , முசுட்டை இல்லை / முருங்கை இலை  கழுவிய அரிசி என்பவற்றை இட்டு அவிய விடவும் . இவை முக்கல்பதமாக அவிந்த பின்பு மீன் வகை , கருவாடு என்பவற்றையும் போட்டு அவியவிடவும்.
 
  • மரக்கறி வகை நன்றாக அவிந்ததும் , ஒடியல் மா கரைசலை ஊற்றி  நன்றாக கரண்டியால் கலக்கி அளவிற்கு உப்பும் சேர்த்து தேங்காய் சொட்டும் கலந்து இறக்கி சூட்டுடன் பரிமாறலாம் .

குறிப்பு :-
  • சைவக் கூழ் எனில் அசைவ பொருட்களை தவிர்த்து கடலை , கத்தரிக்காய் , வாழைக்காய் என்பவற்றை சேர்த்து மற்றைய மரக் கறி  வகைகளுடன் சேர்த்து அவிய விடவும் .
 
  • கடலையை 3 மணி நேரம் ஊறவிட வேண்டும்

http://panaimaramusage.blogspot.com/2016/06/blog-post_23.html

Edited by உடையார்
  • Like 2
  • Thanks 2

Share this post

Link to post
Share on other sites

உடையார் இது நீங்கள் செய்ததா அல்லது சுட்டு போடுவதா?

Share this post

Link to post
Share on other sites
34 minutes ago, ஈழப்பிரியன் said:

உடையார் இது நீங்கள் செய்ததா அல்லது சுட்டு போடுவதா?

இல்லை, சுட்டதுதான். இன்றைக்கு அவிக்கப்போகின்றேன்

Share this post

Link to post
Share on other sites
42 minutes ago, உடையார் said:

இல்லை, சுட்டதுதான். இன்றைக்கு அவிக்கப்போகின்றேன்

அதையும் படமெடுத்து போடுங்கள் பார்க்கலாம்.
சாப்பிட்ட பின் சுவையையும் எழுதுங்கள்.

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, ஈழப்பிரியன் said:

அதையும் படமெடுத்து போடுங்கள் பார்க்கலாம்.
சாப்பிட்ட பின் சுவையையும் எழுதுங்கள்.

என்னால் படம் இணைக்கமுடியவில்லை, நன்றாக வந்திச்சு, மெல்லிய கயர்ப்புத்தனமையிருந்தது, நான் ஊறவிட்ட நேரம் 1-1/2 மணித்தியாலங்கள், இன்னும கொடுதல் நேரம் ஊறவிட்டால் நல்லது.

அத்துடன் முதல் அவிக்கும் போது குழைந்து வரும், அதை ஆறவிட்டு சிறு துண்டுகளாக பிரித்து திரும்பவும் அவிக்கனும். பின் Food Processor இல் அடிக்கனும் மேலே உள்ள விடியோவில் உள்ள மாதிரி.

நாங்கள் சம்பலுடன்தான் சப்பிடோம், நல்லசுவை. தேங்காய் பூவை பிழிய தேவையில்லை, நான் மேலே உள்ள Youtube சமையல் முறைப்படிதான் செய்தானான்; மீன் சேர்க்கவில்லை.

இதுதான் முதல் தடவை இங்கு செய்தோம்.  ஊரில் பல வருடங்களுக்கு முன் பனங்கட்டியுடன் சாப்பிட்ட ஞாபகம்.

  • Haha 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
26 minutes ago, உடையார் said:

மெல்லிய கயர்ப்புத்தனமையிருந்தது,

சுடுதண்ணியில் கழுவி எடுக்க கயர்ப்பு  தன்மை இல்லாமல் போகும் .உபயம்  கொரனோ பயத்தினால்  வந்த   வீட்டு சிறை 😄

Edited by பெருமாள்

Share this post

Link to post
Share on other sites

ஒடியல் மாவிலை மரக்கறி புட்டு அவிச்சால் நல்லாயிருக்கும். ஊரிலை எங்கடை குடும்பங்களிலை கூடுதலாய் இரவுச்சாப்பாடாய் இருக்கும்.கயர்ப்பு ஒண்டும் இருக்காது.பயித்தங்காய் பயித்தம் கொட்டை கீரை கத்தரிக்காய் பச்சை மிளகாய் எல்லாத்தையும் குறுணியாய் நறிக்கிப்போட்டு அவிப்பினம். அதோடை முட்டுக்காய் தேங்காய் திருவலையும் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கம் தெரியும்.:cool:

அதுசரி ஆரும் பனங்கிழங்கு துவையல் சாப்பிட்டு இருக்கிறியளோ?
அவிச்ச கிழங்கை உள்ளி மிளகு கல்லு உப்பும் சேர்த்து உரல்லை போட்டு இடிக்கேக்கையே ஒரு வாசம் வரும் பாருங்கோ சொல்லி வேலையில்லை.துவையலை அப்பிடியே உருட்டி பிரட்டி.....ஐயோ வேண்டாம் இப்பவே வாயூறுது
அதெல்லாம் ஒரு காலமப்பா!!! இனி திரும்பி வராது.😟

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, குமாரசாமி said:

எங்கட அம்மம்மா கீரைப்புட்டு பனங்கட்டி போட்டு செய்து சாப்பிட்டிருக்கிறேன். இந்த புட்டு செய்முறை நல்லா இருக்கு. ஒடியல் மாவும் கைவசம் இருக்கு. செய்து விட்டு படங்களையும் பகிர்கிறேன். சின்ன வயசிலிருந்தே பனங்கிழங்கு துவையல் நாங்கள் சிறுவர் கூட்டம் எல்லாம் சேர்ந்து சம்பல் இடிக்கும் மர உரலில் இடிப்போம். இடைக்கிடை அம்மம்மா வந்து சரிபிழை பார்த்து சொல்லுவா. உள்ளி போட்டதா ஞாபகம் இல்ல . மிளகாய்த்தூள் போட்டதாக ஞாபகம் . நல்ல ருசி . எனது சிறுபிராய காலங்களை நினைவு படுத்துகிறது. 

Edited by nilmini

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, உடையார் said:

என்னால் படம் இணைக்கமுடியவில்லை, நன்றாக வந்திச்சு, மெல்லிய கயர்ப்புத்தனமையிருந்தது, நான் ஊறவிட்ட நேரம் 1-1/2 மணித்தியாலங்கள், இன்னும கொடுதல் நேரம் ஊறவிட்டால் நல்லது.

உடையார் கீழுழ்ழ சுட்டியை அழுத்தி படத்தை போட முயற்சி செய்யுங்கள்.

https://postimage.org/

Share this post

Link to post
Share on other sites

Odiyal-Puddu1.jpg

Odiyal-Puddu2.jpg

1 hour ago, ஈழப்பிரியன் said:

உடையார் கீழுழ்ழ சுட்டியை அழுத்தி படத்தை போட முயற்சி செய்யுங்கள்.

https://postimage.org/

நன்றி ஈழப்பிரியன் அறிய தந்திற்கு இலகுவாக இருக்கு 

1 hour ago, nilmini said:

எங்கட அம்மம்மா கீரைப்புட்டு பனங்கட்டி போட்டு செய்து சாப்பிட்டிருக்கிறேன். இந்த புட்டு செய்முறை நல்லா இருக்கு. ஒடியல் மாவும் கைவசம் இருக்கு. செய்து விட்டு படங்களையும் பகிர்கிறேன். சின்ன வயசிலிருந்தே பனங்கிழங்கு துவையல் நாங்கள் சிறுவர் கூட்டம் எல்லாம் சேர்ந்து சம்பல் இடிக்கும் மர உரலில் இடிப்போம். இடைக்கிடை அம்மம்மா வந்து சரிபிழை பார்த்து சொல்லுவா. உள்ளி போட்டதா ஞாபகம் இல்ல . மிளகாய்த்தூள் போட்டதாக ஞாபகம் . நல்ல ருசி . எனது சிறுபிராய காலங்களை நினைவு படுத்துகிறது. 

மதியம் செய்து சாப்பிட்டால் நல்லது, இரவு சமிபாடு அடைய நேரம் எடுக்கும்

2 hours ago, குமாரசாமி said:

ஒடியல் மாவிலை மரக்கறி புட்டு அவிச்சால் நல்லாயிருக்கும். ஊரிலை எங்கடை குடும்பங்களிலை கூடுதலாய் இரவுச்சாப்பாடாய் இருக்கும்.கயர்ப்பு ஒண்டும் இருக்காது.பயித்தங்காய் பயித்தம் கொட்டை கீரை கத்தரிக்காய் பச்சை மிளகாய் எல்லாத்தையும் குறுணியாய் நறிக்கிப்போட்டு அவிப்பினம். அதோடை முட்டுக்காய் தேங்காய் திருவலையும் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கம் தெரியும்.:cool:

அதுசரி ஆரும் பனங்கிழங்கு துவையல் சாப்பிட்டு இருக்கிறியளோ?
அவிச்ச கிழங்கை உள்ளி மிளகு கல்லு உப்பும் சேர்த்து உரல்லை போட்டு இடிக்கேக்கையே ஒரு வாசம் வரும் பாருங்கோ சொல்லி வேலையில்லை.துவையலை அப்பிடியே உருட்டி பிரட்டி.....ஐயோ வேண்டாம் இப்பவே வாயூறுது
அதெல்லாம் ஒரு காலமப்பா!!! இனி திரும்பி வராது.😟

ஆ..ஆஆ. அதை ஏன் இப்ப ஞாபகப்படுத்திறியல், என்ன சுவை, அது ஒரு காலம் இனி வருமா...

மொட்டு பூரான், சீத்தை பூரான்........

  • Like 1

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, பெருமாள் said:

சுடுதண்ணியில் கழுவி எடுக்க கயர்ப்பு  தன்மை இல்லாமல் போகும் .உபயம்  கொரனோ பயத்தினால்  வந்த   வீட்டு சிறை 😄

நன்றி அறிய தந்திற்கு, அப்படியா... நாளை இன்னும் மா வாங்கப்போகின்றேன், அடுத்த முறை சுடு தண்ணியில் கழவிப்பார்ப்போம், குழைந்து வராதா? 

Share this post

Link to post
Share on other sites
7 minutes ago, உடையார் said:

Odiyal-Puddu1.jpg

Odiyal-Puddu2.jpg

வாவ்... படத்திலுள்ள ஒடியல் மா புட்டை  பார்க்க... வாயூறுது.
இங்குள்ள... தமிழ்க் கடைகளில் ஒடியல் மா இருக்குமோ தெரியவில்லை. 
அங்கு சென்றால்... விசாரித்து பார்க்க வேணும்.
படத்துக்கும், செய்முறைக்கும்... நன்றி உடையார்.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, குமாரசாமி said:

ஒடியல் மாவிலை மரக்கறி புட்டு அவிச்சால் நல்லாயிருக்கும். ஊரிலை எங்கடை குடும்பங்களிலை கூடுதலாய் இரவுச்சாப்பாடாய் இருக்கும்.கயர்ப்பு ஒண்டும் இருக்காது.பயித்தங்காய் பயித்தம் கொட்டை கீரை கத்தரிக்காய் பச்சை மிளகாய் எல்லாத்தையும் குறுணியாய் நறிக்கிப்போட்டு அவிப்பினம். அதோடை முட்டுக்காய் தேங்காய் திருவலையும் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கம் தெரியும்.:cool:

அதுசரி ஆரும் பனங்கிழங்கு துவையல் சாப்பிட்டு இருக்கிறியளோ?
அவிச்ச கிழங்கை உள்ளி மிளகு கல்லு உப்பும் சேர்த்து உரல்லை போட்டு இடிக்கேக்கையே ஒரு வாசம் வரும் பாருங்கோ சொல்லி வேலையில்லை.துவையலை அப்பிடியே உருட்டி பிரட்டி.....ஐயோ வேண்டாம் இப்பவே வாயூறுது
அதெல்லாம் ஒரு காலமப்பா!!! இனி திரும்பி வராது.😟

எமது வீடுகளில் ஒடியல் புட்டை நீத்துப்பெட்டியில் அவித்து அப்படியே வெப்பார்கள்.சோறு சாப்பிடும் போது இதை எடுத்து துருவுவலையில் துருவ தேங்காய்பூ மாதிரி வரும் சோற்றுடன் சிறிது சேர்த்து சாப்பிடுவார்கள்.

34 minutes ago, உடையார் said:

நன்றி ஈழப்பிரியன் அறிய தந்திற்கு இலகுவாக இருக்கு 

என்ன உடையார் இந்த வருடம் சிட்னி முருகனும் கொடியேறவில்லை.வேலையும் இல்லை.வீட்டில் இருந்து சைவம் மச்சம் என்று எல்லாம் செய்து சாப்பிட வேண்டியது தானே.

Share this post

Link to post
Share on other sites
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன உடையார் இந்த வருடம் சிட்னி முருகனும் கொடியேறவில்லை.வேலையும் இல்லை.வீட்டில் இருந்து சைவம் மச்சம் என்று எல்லாம் செய்து சாப்பிட வேண்டியது தானே.

நான் Perth இல், கடந்த 2-1/2 வருடங்கள் வீட்டிலிருந்தான் on-line இல் வேலை, இடைக்கிடை Project Site க்கு போய் வருவது , எனக்கு பெரிதாக தெரியவில்லை வீட்டிலிருப்பது தற்போதைய சூழ்நிலையில்,

பிள்ளைகள் பாடசாலைக்கு போகமல் இருப்பதால் நானும் மனைவியும் வித்தியாசமாக செய்து கொடுக்கிறோம், அல்லது அவர்களுக்கு அலுப்படிக்கும் 

நன்றி தமிழ்சிறி 

Share this post

Link to post
Share on other sites

நல்ல செய்முறைகளுடன் விரிவான விளக்கமும் அசத்திட்டீங்கள் உடையார்.....அந்த கூழில் சைவ கூழுக்கும் சேர்த்து செய்முறையும் போட்டீர்களே அந்த மனசுதான் சார் கடவுள்.....!  😁

பிட்டு நீத்து பெட்டியில் அல்லது மூங்கி குழலில் அவிக்கும்போது தனி ருசி உண்டு.....!  👍

Share this post

Link to post
Share on other sites
14 hours ago, suvy said:

நன்றி சுவி, அது என்னுடைய செய்முறையல்ல, சுட்டது 😀

http://panaimaramusage.blogspot.com/2016/06/blog-post_23.html

நீத்துப்பொட்டியில் அவிக்கும் புட்டிற்கு தனி சுவை 👌

Share this post

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தம்பதியை கட்டிவைத்து துணிகரக் கொள்ளை! யாழ்ப்பாணம் – கந்தரோடை ஆலடியில் வயோதிபத் தம்பதியைக் கட்டிவைத்து விட்டு 7 அரைப் பவுண் நகைகள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்றிரவு (23) இடம்பெற்றுள்ளது. வீட்டில் வயோதிபத் தம்பதி ஒன்று வசித்து வரும் நிலையில் கூரிய ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்த கும்பல் அவர்கள் இருவரையும் மிரட்டி கட்டிவைத்துவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. https://newuthayan.com/தம்பதியை-கட்டிவைத்து-துண/
    • வடக்கு ஆளுநராக மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய திட்டம்? வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஓய்வுபெற்ற யாழ். மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்க வுள்ளார் என ஊடகத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. வடக்கு மாகாண ஆளுநராக தற்போது திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் இருக்கின்றார். தேர்தல் காலம் வரைதான் அவர் பதவியில் இருப்பார். அவர் சுயவிருப்பின் பெயரில் ஓய்வுபெறவுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல் வருமாறு; அடுத்து யார் என்பதில் குழப்பம் சிறிது இருந்தாலும், அவர் இராணுவ முகமே என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பதவிக்கு வந்த புதிதில் சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அழுத்தத்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனக்கு நம்பகமான சிவில் அதிகாரிகளை தேடிப் பிடித்து பதவிகளில் அமர்த்தினார். இப்போது எந்தத் தலையீடும் இல்லாமல் இராணுவத்தினரைப் பதவிகளில் அமர்த்தி வருகின்றார். அவரின் 6 மாத ஆட்சிக் காலத்துக்குள் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் 26 பேரை சிவில் நிர்வாக உயரதிகாரிகளாக நியமித்துள்ளார். இதனையே அவர் தொடரவுள்ளார். தேர்தல் முடிவடைந்ததும் அவரின் முதல் வேலையாக இருக்கப் போவது வடக்கு மாகாணத்துக்கு ஆளுநரை நியமிப்பதுதான். இந்தப் பதவிக்குப் பலர் முந்தியடித்தாலும், இருவர் தேர்வில் இருக்கிறார்கள். ஒருவர், இறுதிப் போர்க் காலத்தில் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் சந்திரசிறி. பீல்ட் மார்ல் சரத் பொன்சேகாவின் வலது கையாக இருந்த இவர் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் மிக வேண்டியவரானார். போர் முடிவடைந்தபின் ராஜபக்ச சகோதரர்களுக்கு விசுவாச மாக நடந்து கொண்டமையால் வடக்கு ஆளுநர் பதவி இலகுவாகக் கிடைத்தது. ஆட்சி மாற்றத்தின் பின்னர், ஆஸ்திரேலியாவுக்குச் சென்றவர் கிட்டத்தட்ட அந்த ஆட்சி ஆட்டம் கண்ட தருணத்தில்நாடு திரும்பினார். ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவுக்கு ஆதரவாக நின்றவர். இவர் இப்போது வடக்கு ஆளுநர் பதவியைக் குறி வைத்துக்காய்களை நகர்த்தியுள்ளார். ஆனால், இதே பதவிக்கு மற்றொரு மேஜர் ஜெனரலும் யாழ். மாவட்ட முன்னாள் தளபதியுமான ஹத்துருசிங்க போட்டியிடுகிறார். 1980 களில் இராணுவத்தில் சேர்ந்த இவர், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அதிக காலம் சேவையிலிருந்தார். 65 ஆவது படைப்பிரிவின் 652 ஆவது பிரிவான பீரங்கிப் படைக்குப் பொறுப்பாகவும் பின்னர் அந்தப் படைக்கு கட்டளையிடும் தளபதியாகவும் செயற் பட்டவர். இறுதியுத்தத்தில் முல்லைத்தீவில் படை நடத்தியவர். தமிழ் அதிகாரிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்ட இவரின் காலத்தில்தான் – போர் முடிந்த பின்னர் யாழ்ப்பாணம் மாவட்டம் முழுமையாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குள் கொண்டுவரப்பட்டது. இராணுவப் புலனாய்வை யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக செயற்படுத்தியதில் வெற்றிகண்ட இவரையே, இப்போது அரசஉயர் மட்டம் அதிகம் விரும்புகின்றது. காரணம் வடக்கு முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் நினைவேந்தல்களை தடுக்கவும் பொருத்தமான ஒருவர் ஹத்துருசிங்க என்று அரச உயர்மட்டம் கருதுவதால் தேர்தல் முடிவடைந்ததும் வடக்கு ஆளுநராக அவர் நியமிக்கப்படும் அறிவிப்பு வெளியாகலாம் எனத் தெரியவருகின்றது. http://thinakkural.lk/article/43249
    • இந்த பரம்பரையிலை ஒன்று பட்டம் வேண்டாம் என்று விட்டு குறுக்காலை  வந்து கண்டியிலை  கூத்தடிசது ஆங்கிலம் படிக்கிறேன்  என்று . உன்மையில் ஜமீன்தார் மன்னர் உடமைகளை ஹிந்திய  கள்வர்களால் 1952ல் சூறையாடப்பட்டது காரணம் இந்தியா உடைய கூடாது என்பதற்காக . இரண்டாவது மாநில  எல்லைகள் பிரிக்கும்போது இவர்களின் சமஸ்தானம்களின்  எல்லைகள் பாரிய இடையூறாக அமைந்தன.
    • எதற்கும் வெளிநாடு ஒன்றுக்கு, தாங்கள் விசா எடுத்து வைத்திருப்பது  நல்லது. ஜனாதிபதி என்கிற பிசாசு வெகு விரைவில் தன் கோர முகத்தை காட்டப்போகுது. 
    • தகழி              தகழி (பெ). அகல், விளக்கின் குழிவு · சாப்பிடும் தட்டு; உண்கலம்.   கழி .......உணவு