Jump to content

பனங்கிழங்கு புட்டு மற்றும் கூல் செய்முறை

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியல் புட்டு

செய்முறை

தேவையான பொருட்கள் :

  • ஒடியல் மா
  • தேங்காய்ப் பூ
  • தண்ணீர்
  • உப்பு (சிறிதளவு )

விரும்பினால்

  • கத்தரிக்காய்
  • கீரை
  • பச்சை மிளகாய்
  • நெத்தலி

செய்முறை

  • ஒடியல் மாவை ஒன்றுக்கு மூன்று என்ற அளவு தண்ணீரில் கரைத்து பத்து நிமிடங்களுக்கு ஊற விடவும்.
  • மா கீழே அடைந்ததும் மேலால் உள்ள தண்ணீரை ஊற்றி விடவும். இப்படி இரண்டு மூன்று தடவைகள் செய்யவும். இதனால் மாவின் காறல் தன்மை குறையும்.
  • பின்னர் மாவை ஒரு சுத்தமான துணியில் போட்டு தண்ணீர் இல்லாமல் வடித்து, பிழிந்தெடுக்கவும்.
  • இந்த மாவை வழமையாக பிட்டுக் குழைப்பது போல சிறிதளவு உப்புப் போட்டு, தண்ணீர் விட்டுக் குழைக்கவும். அரிசிமாவிலோ, கோதுமைமாவிலோ பிட்டு அவிப்பதற்குத் தேவைப் படும் தண்ணீரை விட மிகக் குறைந்த அளவு தண்ணீரே இதைக் குழைப்பதற்குத் தேவைப்படும்.
  • குழைத்த மாவுள் நிறையத் தேங்காய்ப்பூ போட்டு ஆவியில் அவிக்கவும். தேங்காய்ப்பூவை ஒரு தரம் தண்ணீர் விட்டுப் பிழிந்து பாலை எடுத்த பின்னரே ஒடியல் பிட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். தேங்காய்ப்பூ பாலுடன் ஈரலிப்பாக இருந்தால் பிட்டு நீர்த்து விடும்.
  • இந்தப் பிட்டு மாவுக்குள் கத்தரிக்காய், கீரை.. போன்ற காய்கறிகள், சிறு துண்டுகளாக வெட்டப்பட்ட பச்சை மிளகாய், தாராளமான தேங்காய்ப் பூ... போன்றவைகளைப் போட்டு அவித்தால் மிகவும் சுவையாக இருக்கும். காய்கள் போட்டு இப்படி அவிக்கும் பிட்டுக்கு தேங்காய்ப்பூவிலிருந்து பாலைப் பிழிந்து எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • பச்சை மிளகாய், நெத்தலி போட்டும் அவிக்கலாம்.
  • பிட்டை அவித்து இறக்கியதும் உடனேயே பிரித்து, உதிர்த்து விட வேண்டும். இல்லாவிடில் பிட்டு கட்டியாக இறுகி விடும்.
 
ஒடியல் கூழ் குடிப்போமா?

தேவையான பொருட்கள் :-

பொதுவானவை :
  1. ஒடியல் மா - 1 சுண்டு ( நிரப்பி )
  2. பயிற்றங் காய் - 100 கிராம் 
  3. மரவள்ளி கிழங்கு - 100 கிராம்
  4. பலா கொட்டை - 100 கிராம்
  5. செத்தல் மிளகாய் - 20
  6. மிளகு - 1 தே .  .( நிரப்பி )
  7. மஞ்சள் - 1 துண்டு ( 2" நீளம் )
  8. உள்ளி - 5 பெரிய பல்லு
  9. பழப்புளி - பாக்களவு
  10. புழுங்கல் அரிசி - 1 பிடி
  11. முசுட்டை இல்லை / முருங்கை இல்லை -  10 நெட்டு
  12. பல்லுபோல் வெட்டப்பட தேங்காய் சொட்டு - 1/2 சுண்டு
  13. உப்பு - அளவிற்கு 

சைவ கூழ்  :
  • கத்தரிக்காய் - 100 கிராம்
  • கடலை - 100 கிராம்
  • வாழை காய் - 1 ( பெரிது )

அசைவ கூழ் :-
  • முள் இல்லாத மீன்வகை ( ரால் நெத்தலி ) - 500 கிராம்
  • நண்டு - 2
  • பாரை / கூழ் மீன் தலை - 1
  • சிறிய மீன் கருவாடு - 50 கிராம்

செய்முறை :-
  • செத்தல் மிளகாய் , மிளகு , உள்ளி , மஞ்சள் என்பவற்றிட்கு ஓரளவு நேர் சேர்த்து பசுந்தையாக அரைத்து வைத்து கொள்க .
 
  • மீன் வகைகள் , கருவாடு என்பவற்றை கழுவி துப்புரவு செய்து வைத்துக் கொள்க .
 
  • மரவள்ளி கிழங்கு , பயிற்ரங்காய்  , ப்ளாக் கொட்டை என்பவற்றை துப்புரவாக்கி சிறு துண்டுகளாக வெட்டி கழுவி வைத்து கொள்க .
 
  • பாத்திரத்தில் பழப் புளியை இட்டு   ஒரு தம்ளர் விட்டுகரைத்து வைத்துக் கொள்க 
 
  • ஒடியல் மாவை பிறிதொரு பாத்திரத்தில் இட்டு அளவிற்கு நீர் சேர்த்து கூழ் பதமாக கரைத்து அரை மணிநேரம் ஊற வைத்து எடுத்து ஒரு துணியில் இட்டு பிழிந்தெடுத்து பிறிதொரு பாத்திரத்தில் போட்டு , அரைத்த கூட்டையும் சேர்த்து வைத்துள்ள 1 தம்ளர் பழப் புளியையும் விட்டு அளவிற்கு தண்ணீரும் விட்டு நீர்ப் பதமாக  கரைத்து வைக்குக .
 
  • ஒரு பானை ( ஒரு கொத்து அரிசி அவிய கூடிய பாத்திரம் ) அதன் அரைவாசிக்கு தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்துக் கொதித்தபின் கழுவி வைத்துள்ள மரக்கறி , முசுட்டை இல்லை / முருங்கை இலை  கழுவிய அரிசி என்பவற்றை இட்டு அவிய விடவும் . இவை முக்கல்பதமாக அவிந்த பின்பு மீன் வகை , கருவாடு என்பவற்றையும் போட்டு அவியவிடவும்.
 
  • மரக்கறி வகை நன்றாக அவிந்ததும் , ஒடியல் மா கரைசலை ஊற்றி  நன்றாக கரண்டியால் கலக்கி அளவிற்கு உப்பும் சேர்த்து தேங்காய் சொட்டும் கலந்து இறக்கி சூட்டுடன் பரிமாறலாம் .

குறிப்பு :-
  • சைவக் கூழ் எனில் அசைவ பொருட்களை தவிர்த்து கடலை , கத்தரிக்காய் , வாழைக்காய் என்பவற்றை சேர்த்து மற்றைய மரக் கறி  வகைகளுடன் சேர்த்து அவிய விடவும் .
 
  • கடலையை 3 மணி நேரம் ஊறவிட வேண்டும்

http://panaimaramusage.blogspot.com/2016/06/blog-post_23.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் இது நீங்கள் செய்ததா அல்லது சுட்டு போடுவதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

உடையார் இது நீங்கள் செய்ததா அல்லது சுட்டு போடுவதா?

இல்லை, சுட்டதுதான். இன்றைக்கு அவிக்கப்போகின்றேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, உடையார் said:

இல்லை, சுட்டதுதான். இன்றைக்கு அவிக்கப்போகின்றேன்

அதையும் படமெடுத்து போடுங்கள் பார்க்கலாம்.
சாப்பிட்ட பின் சுவையையும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ஈழப்பிரியன் said:

அதையும் படமெடுத்து போடுங்கள் பார்க்கலாம்.
சாப்பிட்ட பின் சுவையையும் எழுதுங்கள்.

என்னால் படம் இணைக்கமுடியவில்லை, நன்றாக வந்திச்சு, மெல்லிய கயர்ப்புத்தனமையிருந்தது, நான் ஊறவிட்ட நேரம் 1-1/2 மணித்தியாலங்கள், இன்னும கொடுதல் நேரம் ஊறவிட்டால் நல்லது.

அத்துடன் முதல் அவிக்கும் போது குழைந்து வரும், அதை ஆறவிட்டு சிறு துண்டுகளாக பிரித்து திரும்பவும் அவிக்கனும். பின் Food Processor இல் அடிக்கனும் மேலே உள்ள விடியோவில் உள்ள மாதிரி.

நாங்கள் சம்பலுடன்தான் சப்பிடோம், நல்லசுவை. தேங்காய் பூவை பிழிய தேவையில்லை, நான் மேலே உள்ள Youtube சமையல் முறைப்படிதான் செய்தானான்; மீன் சேர்க்கவில்லை.

இதுதான் முதல் தடவை இங்கு செய்தோம்.  ஊரில் பல வருடங்களுக்கு முன் பனங்கட்டியுடன் சாப்பிட்ட ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, உடையார் said:

மெல்லிய கயர்ப்புத்தனமையிருந்தது,

சுடுதண்ணியில் கழுவி எடுக்க கயர்ப்பு  தன்மை இல்லாமல் போகும் .உபயம்  கொரனோ பயத்தினால்  வந்த   வீட்டு சிறை 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒடியல் மாவிலை மரக்கறி புட்டு அவிச்சால் நல்லாயிருக்கும். ஊரிலை எங்கடை குடும்பங்களிலை கூடுதலாய் இரவுச்சாப்பாடாய் இருக்கும்.கயர்ப்பு ஒண்டும் இருக்காது.பயித்தங்காய் பயித்தம் கொட்டை கீரை கத்தரிக்காய் பச்சை மிளகாய் எல்லாத்தையும் குறுணியாய் நறிக்கிப்போட்டு அவிப்பினம். அதோடை முட்டுக்காய் தேங்காய் திருவலையும் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கம் தெரியும்.:cool:

அதுசரி ஆரும் பனங்கிழங்கு துவையல் சாப்பிட்டு இருக்கிறியளோ?
அவிச்ச கிழங்கை உள்ளி மிளகு கல்லு உப்பும் சேர்த்து உரல்லை போட்டு இடிக்கேக்கையே ஒரு வாசம் வரும் பாருங்கோ சொல்லி வேலையில்லை.துவையலை அப்பிடியே உருட்டி பிரட்டி.....ஐயோ வேண்டாம் இப்பவே வாயூறுது
அதெல்லாம் ஒரு காலமப்பா!!! இனி திரும்பி வராது.😟

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எங்கட அம்மம்மா கீரைப்புட்டு பனங்கட்டி போட்டு செய்து சாப்பிட்டிருக்கிறேன். இந்த புட்டு செய்முறை நல்லா இருக்கு. ஒடியல் மாவும் கைவசம் இருக்கு. செய்து விட்டு படங்களையும் பகிர்கிறேன். சின்ன வயசிலிருந்தே பனங்கிழங்கு துவையல் நாங்கள் சிறுவர் கூட்டம் எல்லாம் சேர்ந்து சம்பல் இடிக்கும் மர உரலில் இடிப்போம். இடைக்கிடை அம்மம்மா வந்து சரிபிழை பார்த்து சொல்லுவா. உள்ளி போட்டதா ஞாபகம் இல்ல . மிளகாய்த்தூள் போட்டதாக ஞாபகம் . நல்ல ருசி . எனது சிறுபிராய காலங்களை நினைவு படுத்துகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

என்னால் படம் இணைக்கமுடியவில்லை, நன்றாக வந்திச்சு, மெல்லிய கயர்ப்புத்தனமையிருந்தது, நான் ஊறவிட்ட நேரம் 1-1/2 மணித்தியாலங்கள், இன்னும கொடுதல் நேரம் ஊறவிட்டால் நல்லது.

உடையார் கீழுழ்ழ சுட்டியை அழுத்தி படத்தை போட முயற்சி செய்யுங்கள்.

https://postimage.org/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Odiyal-Puddu1.jpg

Odiyal-Puddu2.jpg

1 hour ago, ஈழப்பிரியன் said:

உடையார் கீழுழ்ழ சுட்டியை அழுத்தி படத்தை போட முயற்சி செய்யுங்கள்.

https://postimage.org/

நன்றி ஈழப்பிரியன் அறிய தந்திற்கு இலகுவாக இருக்கு 

1 hour ago, nilmini said:

எங்கட அம்மம்மா கீரைப்புட்டு பனங்கட்டி போட்டு செய்து சாப்பிட்டிருக்கிறேன். இந்த புட்டு செய்முறை நல்லா இருக்கு. ஒடியல் மாவும் கைவசம் இருக்கு. செய்து விட்டு படங்களையும் பகிர்கிறேன். சின்ன வயசிலிருந்தே பனங்கிழங்கு துவையல் நாங்கள் சிறுவர் கூட்டம் எல்லாம் சேர்ந்து சம்பல் இடிக்கும் மர உரலில் இடிப்போம். இடைக்கிடை அம்மம்மா வந்து சரிபிழை பார்த்து சொல்லுவா. உள்ளி போட்டதா ஞாபகம் இல்ல . மிளகாய்த்தூள் போட்டதாக ஞாபகம் . நல்ல ருசி . எனது சிறுபிராய காலங்களை நினைவு படுத்துகிறது. 

மதியம் செய்து சாப்பிட்டால் நல்லது, இரவு சமிபாடு அடைய நேரம் எடுக்கும்

2 hours ago, குமாரசாமி said:

ஒடியல் மாவிலை மரக்கறி புட்டு அவிச்சால் நல்லாயிருக்கும். ஊரிலை எங்கடை குடும்பங்களிலை கூடுதலாய் இரவுச்சாப்பாடாய் இருக்கும்.கயர்ப்பு ஒண்டும் இருக்காது.பயித்தங்காய் பயித்தம் கொட்டை கீரை கத்தரிக்காய் பச்சை மிளகாய் எல்லாத்தையும் குறுணியாய் நறிக்கிப்போட்டு அவிப்பினம். அதோடை முட்டுக்காய் தேங்காய் திருவலையும் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கம் தெரியும்.:cool:

அதுசரி ஆரும் பனங்கிழங்கு துவையல் சாப்பிட்டு இருக்கிறியளோ?
அவிச்ச கிழங்கை உள்ளி மிளகு கல்லு உப்பும் சேர்த்து உரல்லை போட்டு இடிக்கேக்கையே ஒரு வாசம் வரும் பாருங்கோ சொல்லி வேலையில்லை.துவையலை அப்பிடியே உருட்டி பிரட்டி.....ஐயோ வேண்டாம் இப்பவே வாயூறுது
அதெல்லாம் ஒரு காலமப்பா!!! இனி திரும்பி வராது.😟

ஆ..ஆஆ. அதை ஏன் இப்ப ஞாபகப்படுத்திறியல், என்ன சுவை, அது ஒரு காலம் இனி வருமா...

மொட்டு பூரான், சீத்தை பூரான்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சுடுதண்ணியில் கழுவி எடுக்க கயர்ப்பு  தன்மை இல்லாமல் போகும் .உபயம்  கொரனோ பயத்தினால்  வந்த   வீட்டு சிறை 😄

நன்றி அறிய தந்திற்கு, அப்படியா... நாளை இன்னும் மா வாங்கப்போகின்றேன், அடுத்த முறை சுடு தண்ணியில் கழவிப்பார்ப்போம், குழைந்து வராதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, உடையார் said:

Odiyal-Puddu1.jpg

Odiyal-Puddu2.jpg

வாவ்... படத்திலுள்ள ஒடியல் மா புட்டை  பார்க்க... வாயூறுது.
இங்குள்ள... தமிழ்க் கடைகளில் ஒடியல் மா இருக்குமோ தெரியவில்லை. 
அங்கு சென்றால்... விசாரித்து பார்க்க வேணும்.
படத்துக்கும், செய்முறைக்கும்... நன்றி உடையார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஒடியல் மாவிலை மரக்கறி புட்டு அவிச்சால் நல்லாயிருக்கும். ஊரிலை எங்கடை குடும்பங்களிலை கூடுதலாய் இரவுச்சாப்பாடாய் இருக்கும்.கயர்ப்பு ஒண்டும் இருக்காது.பயித்தங்காய் பயித்தம் கொட்டை கீரை கத்தரிக்காய் பச்சை மிளகாய் எல்லாத்தையும் குறுணியாய் நறிக்கிப்போட்டு அவிப்பினம். அதோடை முட்டுக்காய் தேங்காய் திருவலையும் சேர்த்து சாப்பிட்டால் சொர்க்கம் தெரியும்.:cool:

அதுசரி ஆரும் பனங்கிழங்கு துவையல் சாப்பிட்டு இருக்கிறியளோ?
அவிச்ச கிழங்கை உள்ளி மிளகு கல்லு உப்பும் சேர்த்து உரல்லை போட்டு இடிக்கேக்கையே ஒரு வாசம் வரும் பாருங்கோ சொல்லி வேலையில்லை.துவையலை அப்பிடியே உருட்டி பிரட்டி.....ஐயோ வேண்டாம் இப்பவே வாயூறுது
அதெல்லாம் ஒரு காலமப்பா!!! இனி திரும்பி வராது.😟

எமது வீடுகளில் ஒடியல் புட்டை நீத்துப்பெட்டியில் அவித்து அப்படியே வெப்பார்கள்.சோறு சாப்பிடும் போது இதை எடுத்து துருவுவலையில் துருவ தேங்காய்பூ மாதிரி வரும் சோற்றுடன் சிறிது சேர்த்து சாப்பிடுவார்கள்.

34 minutes ago, உடையார் said:

நன்றி ஈழப்பிரியன் அறிய தந்திற்கு இலகுவாக இருக்கு 

என்ன உடையார் இந்த வருடம் சிட்னி முருகனும் கொடியேறவில்லை.வேலையும் இல்லை.வீட்டில் இருந்து சைவம் மச்சம் என்று எல்லாம் செய்து சாப்பிட வேண்டியது தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன உடையார் இந்த வருடம் சிட்னி முருகனும் கொடியேறவில்லை.வேலையும் இல்லை.வீட்டில் இருந்து சைவம் மச்சம் என்று எல்லாம் செய்து சாப்பிட வேண்டியது தானே.

நான் Perth இல், கடந்த 2-1/2 வருடங்கள் வீட்டிலிருந்தான் on-line இல் வேலை, இடைக்கிடை Project Site க்கு போய் வருவது , எனக்கு பெரிதாக தெரியவில்லை வீட்டிலிருப்பது தற்போதைய சூழ்நிலையில்,

பிள்ளைகள் பாடசாலைக்கு போகமல் இருப்பதால் நானும் மனைவியும் வித்தியாசமாக செய்து கொடுக்கிறோம், அல்லது அவர்களுக்கு அலுப்படிக்கும் 

நன்றி தமிழ்சிறி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்முறைகளுடன் விரிவான விளக்கமும் அசத்திட்டீங்கள் உடையார்.....அந்த கூழில் சைவ கூழுக்கும் சேர்த்து செய்முறையும் போட்டீர்களே அந்த மனசுதான் சார் கடவுள்.....!  😁

பிட்டு நீத்து பெட்டியில் அல்லது மூங்கி குழலில் அவிக்கும்போது தனி ருசி உண்டு.....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

நல்ல செய்முறைகளுடன் விரிவான விளக்கமும் அசத்திட்டீங்கள் உடையார்.....அந்த கூழில் சைவ கூழுக்கும் சேர்த்து செய்முறையும் போட்டீர்களே அந்த மனசுதான் சார் கடவுள்.....!  😁

பிட்டு நீத்து பெட்டியில் அல்லது மூங்கி குழலில் அவிக்கும்போது தனி ருசி உண்டு.....!  👍

நன்றி சுவி, அது என்னுடைய செய்முறையல்ல, சுட்டது 😀

http://panaimaramusage.blogspot.com/2016/06/blog-post_23.html

நீத்துப்பொட்டியில் அவிக்கும் புட்டிற்கு தனி சுவை 👌

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.