Jump to content

முடங்கிய உலகமும் முள்ளிவாய்க்காலும்


Recommended Posts

வாழ்க்கை மட்டுமல்ல,
இந்த உலக இயங்கியலும் ஒரு வட்டமாகத் தான் சுழல்கிறது.

சிறீலங்கா என உங்களால் அழைக்கப்பட்ட தேசமொன்றில் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, ஈழம் எனும் தனிநாட்டு அவாவுடன், நாங்கள் முற்பது ஆண்டுகளாக போரிட்டுக் கொண்டிருந்தோம். அந்தப் போர்க்காலத்தில் நாம் செய்த தியாகங்கள் / அர்ப்பணிப்புகள் / உறுதிகள் / நம்பிக்கைகள் / துரோகங்கள் எல்லாம், இன்றுவரை உலகறியா ஏராளம் ஏராளம்.

இன்று இந்த உலகம் சந்திக்கின்ற அத்தனையும், இதனையும் விட அதிகமாக நாம் எதிர்கொண்டோம்.

ஆம்...!

எம்மீது நீண்ட பொருளாதார தடை போட்டார்கள். வாயை கட்டி வயித்தைக்கட்டி உள்ளூர் உற்பத்திகளை நம்பித் தாக்குப் பிடித்தோம்.

நிலத்திலும் கடலிலும் பாதைகளை துண்டித்து, எல்லைகளை கைப்பற்றி எம்மை குறுகிய நிலப்பரப்புக்குள் தனிமைப் படுத்தினார்கள். ஆனாலும் மீண்டெழுந்தோம்.

இறுதியாக உலக நாடுகள் கைகோர்த்து ஓர் உத்தியை கையாண்டீர்கள்..!

ஓய்வின்றி ஓர் தொடர் போர்..!!

இறந்தவரை புதைக்க இடமுமில்லை நேரமும் இல்லை. காயம்பட்டவரை சிகிச்சை கொடுக்க மருந்துமில்லை மருத்துவமனையில் இடமும் இல்லை, மருத்துவர்களும் பற்றாக்குறை.

உண்ண உணவுத் தட்டுப்பாடு, கிடைப்பதையேனும் தேடிவர வெளியே போய் வர முடியாது குண்டு மழை.

போராடும் போராளிகளிடம் ஆயுத தளபாட வெடிபொருட்கள் எனக் கையிருப்பு கையறு நிலை.

பதுங்கு குழிக்குள் நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் முடங்கிய மக்களின் மன அழுத்தம், போராட்டத்தின் மீதே நம்பிக்கையீனம்.

எல்லாமே திட்டமிட்டே செய்து முடித்தீர்கள். நினைத்தவாறே எல்லாமும் நிறைவேறிற்று. இயற்கையின் மீது பாரத்தைப் போட்டு நாம் நடை பிணமானோம்.

ஒரு பத்து ஆண்டு தான் கடந்திருக்கிறது..!

உலகின் வல்லரசுகள் எனத் தம்மைச் சொல்லிக் கொண்டவர்களின் இன்றைய நாட்கள் இதே பாடத்தை தான் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறது.

நாட்டுக்கு நாடு எல்லையை மூடுகிறார்கள். உணவுக்கு / மருந்துக்கு / மருத்துவருக்கு அல்லாடுகிறார்கள்.

நாம் பதுங்கு குழிக்குள் முடங்கியது போன்று இன்று இவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி தனிமையில் மன அழுத்தம் கொள்கிறார்கள்.

இன்று களப் பணியாற்றுவோருக்கு நாளாந்தம் கைதட்டி நன்றி தெரிவிக்கிறார்கள். அதை ஊடகங்கள் கொண்டாடுகின்றன.

அன்று ஒரு சிறு நிலப்பரப்பில், எந்த நிமிடமும் நம் உடலும் சிதறலாம் எனத் தெரிந்தும், நமது மக்களை காப்பாறும் மருத்துவப் பணியில் இருந்த / இறந்த எமது மருத்துவர்கள், களப் பணியாளர்களே எம் கண்முன் வந்து போகிறார்கள்.

அன்று நாம் உங்கள் முற்றமெங்கும் / வீதிகளெங்கும் ஒப்பாரி வைத்தோம், எந்த ஊடகங்களும் கண்டு கொள்ளவில்லை.

ஆனாலும்..,

நாம் ஈழத்தவர்கள்; மனித நேயத்துடன் எங்கள் கண்களும் உங்களுக்காக கண்ணிரைக் கசிந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த உலகப் பேரவலம் முடிந்து புன்னகையுடன் நீங்கள் வெளியே வரும் நாட்களில், நாடற்றவர்களாகிய நாங்களும் உங்களுடன் கை குலுக்கிக்கொள்வோம்.

அப்போதாவது அன்பிலும் சமத்துவத்திலும் நிறையட்டும் இந்த உலகு.

 

rajah.varatha.9?__tn__=,dC-R-R&eid=ARAil

Link to comment
Share on other sites

 

கொரோனா விற்கு பிறகு இந்த உலக ஒழுங்கு/ கூட்டணி/ கொள்கை மாற்றம் உலகளாவிய அளவில் நாம் நினைத்துப் பார்க்காத அளவிற்கு பெரும் வடிவ மாறுதலைச் சந்திக்கப்போவதை நடக்கும் நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன.

ஆனால் எமக்குள் இது குறித்த எந்த பார்வையோ/ தூரநோக்குச் சிந்தனையோ/ உரையாடலோ எதுவுமில்லை.

தமக்கென்று ஒரு அரசில்லாத
போராடும் தேசிய இனங்கள் வெளித்தரப்பை அணுகக் – கையாள தற்காலிகமாகவேனும் தமக்கான ஒரு வெளியுறவுக் கொள்கையை வகுத்துக் கொள்ள வேண்டும் என்கிறது ‘நந்திக்கடல்’.

தண்ணீர் கோட்பாட்டின் அடிப்படையில் அரசியல் சூழமைவுக்கு ஏற்ப
அப்போதுதான் தம்மை நிலை நிறுத்திக் கொள்வதுடன் சாத்தியமான போராட்ட வடிவத்துடன் தம்மை நிரப்பிக் கொள்ளவும் முடியும் என்கிறது ‘நந்திக்கடல்’.

எத்தகைய வீழ்ச்சியையும் அழிவையும் சந்தித்த எந்த இனத்திற்கும் ஏதோவொரு பலம் அதைச் சூழ இயங்கிக் கொண்டிருக்கும் என்கிறது ‘நந்திக்கடல்’.

இந்த அடிப்படையில் நமது பலம் தமிழகம் மற்றும் புலம்.

இந்த அடிப்படையில் 'தமிழ் வெளியுறவுக் கொள்கை’ அல்லது “தமிழ் லொபி” ஒன்றை தாயகம்/ தமிழகம்/ புலம் என்ற மூன்று நிலங்களும் இணைந்து உருவாக்குவதனூடாக அப்படியான ஒரு சிந்தனைப் பள்ளியை உருவாக்கி நாம் நமது அரசியலை தீர்மானிக்காவிட்டால் கிடைக்கும் சந்தர்ப்பங்களை ஒவ்வொரு தடவையும் தவறவிட்டு இப்படி பிராந்திய – புவிசார் அரசியலுக்குள் சிக்கி சின்னாபின்னமாக வேண்டியதுதான் என்று எச்சரிக்கிறது ‘நந்திக்கடல்'.

கொரொனாவிற்குப் பிறகும் இதுதான் நடக்கும்.

இன அழிப்புக்கு முகம் கொடுத்துக் கொண்டு நிற்கும் ஒரு இனமாக கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மட்டுமல்ல அதற்குப் பின்னரான புவிசார் அரசியலை எதிர்கொண்டு தேச விடுதலையை நோக்கி நகரவும் ஒருங்கிணைந்த தமிழ் வெளியுறவு கொள்கை / தமிழ்த் தேசிய சிந்தனைப் பள்ளியின் உருவாக்கம் அவசியம்.

(முகநூல்) 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.