Sign in to follow this  
கிருபன்

கொரோனா – சுயதனிமைப்படுத்தலும் விவசாயப் பொருட்களும் !

Recommended Posts

கொரோனா – சுயதனிமைப்படுத்தலும் விவசாயப் பொருட்களும் !

கடந்த வாரம் ஊரடங்குஉத்தரவுபற்றி அறியாத நெடுங்கேணியை சேர்ந்த விவசாயி 800 கிலோ கத்தரிக்காயை பிடுங்கிவைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாதிருந்ததாக செய்தியொன்றைக் காணக் கிடைத்தது. அதேபோல யாழ்ப்பாணம் சித்தங்கேணியை சேர்ந்த விவசாயி ஒருவர் அறுவடைக்குத் தயாரான தக்காளி பழங்களை மரத்திலும் விடமுடியாமல் பிடுங்கி வீட்டில் வைத்திருந்ததாகவும் ஒரு செய்தியை வாசிக்கக் கிடைத்தது. 

இவ்வாறான அவசரநிலைக்காலத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை இது. இதேநிலைதான் நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நிலையாகவும் இருக்கக்கூடும். நாட்டின் பல பகுதியிலும்  மரக்கறியின் அறுவடை ஆரம்பித்துவிட்டது. ஆனால் சந்தைப்படுத்தல் இப்போது இலகுவானதல்ல. 

அரசு அவ்வப்போது மக்கள் பொருட்களை வாங்குவதற்கு ஊரடங்கு தளர்த்தினாலும், சில இடங்களில் விவசாயிகள் தம் விளைபொருட்களை விற்றுக்கொள்ள வசதி ஏற்படுத்திக் கொடுத்தபோதும் சில முட்டாள்கள் தேவையற்ற வகையில் கூட்டம் கூடி அதனைக் கெடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. 

தக்காளி போன்ற சில விவசாய விளைபொருட்கள் ஒரு சில நாட்களுக்குள் சந்தைப்படுத்தி விடவேண்டும். வெங்காயம் போன்ற சில பொருட்களைத்தான் நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியும். 

ஏற்கனவே பல்வேறு சிரமங்களின் மத்தியில்தான் விவசாயிகள் பலரும் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் பொருட்களை விற்கமுடியாமல் போனால் அது அவர்களுக்குப் பெரும் நட்டமாகிவிடும். மறுபுறம் மக்களுக்கும் தமக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாது போய்விடும்.

இதற்கான தீர்வு என்ன? அரசை மட்டும் நம்பிக் கொண்டிருந்தால் உரிய தீர்வு உரிய நேரத்தில் கிடைக்குமா? உங்கள் பதில் “இல்லை”யென்றால் உடனடித் தீர்வுதான் என்ன?

பலரும் பின்வரும் இரண்டு தீர்வுகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

தெரிவு 1: அரசு மானிய விலை அடிப்படையில் இப்பொருட்களை கிராமமட்ட அமைப்புக்கள் ஊடாக கொள்வனவு செய்து சதொசா போன்ற அரச வணிக கடைகள் ஊடாக விற்பனை செய்யலாம்.

தெரிவு 2: தனியார் பல்பொருள் அங்காடிகளைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு விற்பனை செய்தல். 

ஆனால் இந்த இரண்டு தெரிவுகளும் தற்போதய சூழலில் உடனடித் தீர்வை தரக் கூடியவை அல்ல. 

அப்படியானால் எமக்கு உள்ள உடனடித் தீர்வு என்ன?

இலங்கையின் கிராமங்களில் கிராம மட்ட அமைப்புகள் பல உள்ளன. கிராம அபிவிருத்திச் சங்கம், பெண்கள் கிராம அபிவிருத்திச் சங்கம், கூட்டுறவுச் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள், இளைஞர் கழகங்கள் போன்ற பல அமைப்புக்கள் உள்ளன. இதுதவிர மதத் தளங்களின் நிர்வாக சபை மற்றும் தொண்டர்களும் ஒவ்வொரு ஊரிலும் உள்ளனர். 

இந்த அமைப்புக்கள் இந்த சூழ்நிலையில் மிக முக்கிய பங்காற்ற முடியும். அவர்களோடு இதனை நடைமுறைப்படுத்த ஒவ்வொரு ஊரில் உள்ள இளைஞர்களும் ஆர்வமுள்ள ஏனையவர்களும் இணைந்து கொள்ளலாம்.

உங்கள் பிரதேசத்தில் விவசாயப் பொருட்களை வாங்கி விற்க கூட்டுறவுச் சங்கங்கள் அல்லது வேறு அமைப்புகள் முன்வராத இடத்து, ஒவ்வொரு கிராமத்திலும் பத்திலிருந்து பதினைந்து பேர் இணைந்து இதற்காக WhatsApp group ஒன்றை உருவாக்கலாம். Facebook இனையும் இந்தத் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.  (அல்லது வேறு பொருத்தமான சமூக ஊடகத்தை தெரிவு செய்யலாம்). 

அடுத்ததாக அந்த ஊரில் உள்ள விவசாயிகளை தொடர்புகொண்டு அவர்களையும் இந்த குழுவில் இணைத்துக் கொள்ளலாம். அல்லது, விசாயிகளுக்கான சங்கம் இருக்குமாயின் அதன் நிர்வாகிகளை இணைத்துக் கொள்ளலாம்.

இதன்மூலம் யாரிடம் என்ன விளைபொருள்கள் உண்டென்பதை பகிர்ந்து கொள்ளலாம். இளைஞர்கள் வேறு Whatsapp குழுக்களின் ஊடாக ஊரில் யார் யாருக்கு பொருட்கள் தேவை என்பதை அறிந்து கொள்ளலாம். இதன்மூலம் எந்த விவசாயியிடம் என்ன விலைபொருள் உள்ளது, அதன் தொகை, என்பதையும் எந்த குடுமபத்துக்கு என்னென்ன விளைபொருட்கள் தேவை என்ற ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொள்ள முடியும். 

அடுத்ததாக இளைஞர்கள் அந்த பட்டியலுக்கு ஏற்ப தங்களுக்குள் சுழற்சிமுறையில் சிறு குழுக்களாக விவசாயிகளிடம் பொருட்களைப் பெற்றுக்கொண்டு பொதி செய்துகொண்டு தேவைப்படுபவர்களின் வீட்டிற்கே சென்று பொருட்களை வழங்கிப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். உள்ளூரில் பொருட்கள் விற்று மிகுதியாக இருந்தால் அயல் கிராமத்தினைத் தொடர்பு கொண்டு அந்த ஊர் குழுவின் ஊடாக அங்கு விற்பனை செய்யலாம். 

இதற்கு அந்தந்த கிராமசேவகர்களையும் இணைத்துக் கொள்ளமுடியும். இவ்வாறு கிராமசேவகர்களையும் கிராமமட்ட சங்கங்களையும் இணைத்துக் கொள்வது இதில் ஈடுபடும் ஒவ்வொருவரின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும்.

இவ்வாறான ஒரு பொறிமுறை தயாரானதும் உங்கள் பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாருடன் கலந்துரையாடி அவர்கள் அனுமதியுடன் ஊரடங்குவேளையிலும் விவசாயப் பொருட்களை வாங்கி விற்பனை செய்யக்கூடிய ஒழுங்குகளை செய்யமுடியும்.  

சமூக ஊடகங்களை பயன்படுத்துவதால் ஆள் நடமாட்டத்தை பெருமளவு குறைத்து அதேநேரத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் விவசாய விளைபொருட்களைச் சந்தைப்படுத்த முடியும். ஒரு நேரத்தில் கிராமத்தில் மக்கள் நடமாடித் திரியவேண்டிய தேவையும் குறைக்கப்படும். 

எதிர்காலத்தில் இதே ஒழுங்குமுறையை விவசாயிகளும் கிராமமட்ட அமைப்புகளும் தொடர்ந்தும் பயன்படுத்த முடியும். அல்லது வேறு ஒரு பொருத்தமான முறையையும் பயன்படுத்த முடியும்.  இதன்மூலம் விவசாயிகள் தங்களுக்கு நியாயமான வருமானத்தைப் பெற்றுக்கொள்ளவும் முடியும். 

இது ஒரு வழிமுறை மட்டுமே. ஒவ்வொரு கிராமத்திலும் தத்தமக்கு ஏற்றமாதிரியான ஒரு பொறிமுறையை அவர்கள் தெரிவு செய்துகொள்ள முடியும். எப்போதுமே வேறு யாரோ வந்து உதவவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். நெருக்கடியான நேரத்தில் நம் கையே நமக்குதவி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
 


 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.! Last updated Jun 4, 2020 தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் சிறிலங்கா காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி (சயனைட்) மரணமடைந்தார். ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே. சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார். யாழ் மண்ணின் உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் அவர்கள் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவர்.மக்கள் மீதான சிங்கள ஆட்சியாயர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச்செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை. தியாகி பொன்.சிவகுமாரனின் போராட்டச் செயற்பாடுகள் சிலவற்றை மீட்டுப்பார்ப்பதன் மூலம், தமிழ் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விடுதலைக்கான பேரெழுச்சியை ஏற்படுத்திய அம்மாவீரனின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை வென்றெடுக்கப்பட்டு, அடிமைத் தழைகள் நீங்கிய வாழ்வமைய வேண்டுமென்பதற்காக போராடிய சிவகுமாரனின் இலட்சியத்தாகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும். புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வந்திருக்கின்றன. கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வந்திருக்கின்றன. (இன்றைய காலத்தில்கூட பல பாடசாலைகளும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளும் இராணுவ முகாம்களாக இருப்பதைக் கூற முடியும். தமிழ் மாணவர்களின் கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம் ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டதோடு நிகழ்ந்தது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார். கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு (செப் 1970). இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார். தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை புரிந்து வந்த யாழ்-நகரமேயர் அல்பிரட் துரையப்பா மீதும் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டார் (பெப் 1971). அம்முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. துரையப்பா மீதான தாக்குதல் காரணமாக கொலை முயற்சிக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டுகள் கொடுமையான துன்றுத்தல்களுடன்கூடிய சிறைவாழ்க்கையின் பின்னர், தனது 23வது வயதில் விடுதலையானார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மிகவும் உறுதியோடு போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தார். மூன்று ஆண்டுச் சிறை வாழ்க்கையின் பட்டறிவு மூலம் போராட்டம் தொடர்பான பல நடைமுறை யதார்த்தங்களை சிவகுமாரன் உணர்ந்து கொண்டார். போராட்டச் செயற்பாடுகள் தொடர்பான இரகசியங்களை வரவழைப்பதற்காக சிங்களப் படைகளும் சிறிலங்கா காவல்துறையும் போராளிகள் மீது கோரமான சித்திரவதைகளை மேற்கொள்ளும் போது உண்மைகள் வெளிப்பட நேர்ந்தால் போராட்டத்திற்கு உதவுகின்ற மக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும், போராட்டத்தின் இலக்கு பாதிக்கப்பட்டு பின்னடைவு ஏற்படும், அத்தோடு போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடும் ஆகியனவே சிறை வாழ்க்கை மூலம் சிவகுமாரன் பட்டறிந்த யதார்த்தம். எனவே, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடும் சூழல் ஏற்படின் சயனைற் உட்கொண்டு உயிரைப் போக்கிக்கொள்வதன் மூலமே போராட்டத்தை முன்னகர்த்த முடியுமென்ற முடிவை எடுத்தார். போராட்ட முறைமையென்பது கொள்கைகளை முன்னிறுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழியேயன்றி, போராட்ட முறைமையே கொள்கையாக வரித்துக்கொள்ள முடியாதென்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார். எனவே,போராட்ட முறைமைகள் காலத்திற்கும் சூழலுக்குமேற்ப மாற்றமடைய வேண்டுமென்பதில் ஆழமானதும் தெளிவானதுமான கருத்தைக் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களையும் பெரிதும் மதித்து ஏற்றுக்கொண்டார். சிறையில் இருந்த காலங்களில் உணவு மறுப்புப் போராட்டங்களை முன்னெடுத்தார். அத்தோடு தமிழ் மக்களுக்கெதிரான சிங்களத்தின் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்குமாக மட்டும் சிவகுமாரன் போராடவில்லை. தமிழ்ச் சமூகத்திற்குள் புதைந்திருந்த சமூக அடுக்குகளைப் பொசுக்கும் முயற்சிகளிலும் அவர் பின்நிற்கவில்லை. சாதியம், பெண் அடக்குமுறைப்போக்கு, மணக்கொடை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தார். சிறிமா அரசானது, 1974 ஜனவரியில் யாழப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட 4வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குழப்பும் கீழ்த்தனமான நோக்கில் பல இடையூறுகளை விளைவித்தது. ஆனாலும் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் உறுதியான செயற்பாட்டால் மாநாடு பெரும் மக்கள் எழுச்சியுடன் நடந்தேறியது. இவ் வெற்றியின் பின்னணியில் சிவகுமாரன் மிகவும் உத்வேகத்துடன் செயற்பட்டார் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று. பின்னர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மீது சிங்களக் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சிறிலங்கா காவல்துறையின் இந்த மிலேச்சத்தனமான படுகொலையை நேரில் கண்ட சிவகுமாரன் கொதித்தெழுந்தார். அப்படுகொலைக்கு உடந்தையாகவிருந்த உதவிக் காவல் அதிகாரி சந்திரசேகராவைப் பழிவாங்குவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார். சிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர். தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். வீரச்சாவால் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்ட அம்மாவீரனின் நாமம் தமிழீழத்திலும் தமிழர்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் விடியலின் பெயரை உச்சரித்தபடி நின்று நிலைக்கும். “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”   https://www.thaarakam.com/news/135325
    • வடமாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க  நடவடிக்கை - ஆளுநர் வடமாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார்.  நேற்று முன்தினம் ஆளுநர் செயகத்தின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற சந்திப்பின் போதே வடமாகாண ஆளுநர் மேற்கண்ட வலியுறுத்தலைச் செய்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வட மாகாண பொலிஸார் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவற்காக அர்ப்பணிப்புடன் முன்னெடுத்த அளப்பரிய சேவைகளை பாராட்டுக்கின்றேன்.  தற்போது வடக்கு மாகாணத்தில் சட்டத்திற்கு விரோதமான முறையில் சமுதாயத்தைப் பாதிக்கின்ற நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.  குறிப்பாக,  சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை, களவுகள் மற்றும் வாள்வெட்டு, போதைப்பொருள் துஷ்பிரயோகம், வீதி விபத்துக்கள் ஆகியன தொடர்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. முக்கியமான மணல் அகழ்வை முறையான சட்டங்களுக்கு உட்படுத்தி அதற்கான  அனுமதிகளை வழங்கி தேவைப்படும் பட்சத்தில் மட்டும் மணல் அகழ்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகின்றது. மணல் அகழ்வு வியாபாரம் அல்ல என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். மாணவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தை பாதிக்கின்ற வகையில் களவு, வாள் வெட்டு, போதைப்பொருள் விற்பனை போன்ற விடயங்களின் பின்னணிகள் உள்ளிட்ட அனைத்துக் காரணங்களையும் கண்டறிந்து அவற்றை தடைசெய்வதோடு நிலைமகளை முற்றாக கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.  வீதிவிபத்துக்கள் தொடரும் நிலையில் அதற்கான காரணற்களை முழுமையாக ஆராய்ந்து போக்குவரத்துச் சட்டங்களை இறுக்கமாக பின்பற்றுவதோடு  சட்டத்தை மீறுவோருக்கு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும். இதுபோன்ற சட்டவிரோதமான விடங்களை தடுப்பதன் ஊடாகவே எமது மாணவர்களையும், இளம் சந்ததியினரையும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் நேரிய முன்னேற்றப்பாதையொன்றில் இட்டுச் செல்லமுடியும். அச்செயற்பாட்டினை முன்னெடுப்பதற்காக கிராம அலுவலர்கள் முதல் மாவட்ட அரசாங்க அதிபர்கள், மேலதிக அரசாங்க அதிபர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாருக்கு பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். அதன் மூலமே எமது சமுதாயத்தை கண்ணியமுள்ள ஒழுக்கமான சமுதாயமாக முன்னேற்றம்மிக்கதாக மாற்றமுடியும் என்பதை கருத்திற்கொள்ள வேண்டிடும்.   மிக முக்கியமாக பாடசாலைகளில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.  அத்துடன் பாடசாலை மாணவர்களுக்காக பாடசாலை கால அட்டவணையையும், அரச மற்றும் தனியார் பேருந்துக்களின் கால அட்டவணையையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய கால அட்டவணையை தயார் செய்து நடைமுறைப்படுத்த போக்குவரத்துத் அதிகாரசபை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சமுதாய நலனில் அக்கறை கொள்ளவேண்டிய மாணவர்களையும் இளைஞர் யுவதிகளையும் உருவாக்க திணைக்களங்கள் தங்களுக்கான அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தவேண்டியது மிகவும் முக்கியமானதாகின்றது என்றார்,   வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், விசேட பொலிஸ் செயலணியின் உறுப்பினர்கள், மாவட்டங்களின் பிரதி பொலிஸ் மா அதிபர்கள், மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள், உள்ளுர் அதிகாரசபை ஆணையாளர், கல்வித்திணைக்கள செயலாளர், உள்ளுர் அதிகாரசபை செயலாளர், போக்குவரத்துத் அதிகாரசபை தலைவர் மற்றும் செயலாளர், ஆளுநரின் செயலாளர் மற்றும் உதவிச்செயலாளர், ஆகியோர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.   https://www.virakesari.lk/article/83407
    • இங்கு விற்கின்றார்கள், ஒரு வெடுக்கும் இல்லை; சிலைவேளை இதில் பலவகை இனங்கள் இருக்கலாம்
    • கர்ப்பிணிப் பெண் குண்டினை வெடிக்கச் செய்தது எப்படி?: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சாட்சியத்தில் வெளியான தகவல்கள் இதோ..! (எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் ஒரு சம்பவமான, தெமட்டகொடை - மஹவில கார்டன்  வீட்டில், மேல் மாடியில் இருந்த அறையில், மாபிள் தரை மீது குண்டினை வைத்து அதன் அருகே அமர்ந்தவாறு தனது பிள்ளைகளையும் அனைத்துக்கொண்டு, கர்ப்பிணிப் பெண்ணான தற்கொலை குண்டுதாரி குண்டினை வெடிக்கச் செய்திருக்க வேண்டும் என பிரதான பொலிஸ் பரிசோதகர்  அஜித் பிரியந்த பேதுரு ஆராச்சி ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.   தற்போது டாம் வீதி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக இருக்கும் அவர், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்ற சமயம் கொழும்பு வடக்கு பொலிஸ் வலய ஸ்தல தடயஆய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்தார். கொச்சிக்கடை தேவாலயம் மற்றும் தெமட்டகொடை - மஹவில கார்டன்  தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து  அவ்விடங்களில் ஸ்தல ஆய்வினை முன்னெடுத்து சாட்சிகளை சேகரித்த பிரதான குழுவுக்கு அவரே தலைமை தாங்கிய நிலையிலேயே அவரது சாட்சியம்  பதிவு செய்யப்பட்டது. 21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்கள்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் நேற்று முன்தினம்  பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்றது. இதன்போது  407 ஆது சாட்சியாளராக ஆணைக் குழு முன்னிலையில் சட்ட மா அதிபர் திணைக்கள சட்டவாதியின்  நெறிப்படுத்தலில் பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பீர்யந்த பேதுரு ஆராச்சி சாட்சியமளித்தார். அதன்போதே அவர் மேற்படி விடயத்தை வெளிப்படுத்தினார். .   ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில்  நேற்று  முன் தினம் மாலை குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன. இந்த சாட்சியத்தை பிரதான பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரியந்த பேதுரு ஆராச்சி வழங்கிய போது, தெமட்டகொடை தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஆணைக் குழுவுக்கு கையளித்ததுடன் அவற்றை ஆணைக் குழு ஊடகங்களுக்கும் வழங்கியது. அந்த புகைப்படங்கள் இதுவரை வெளியிடப்படாத புகைப்படங்களாகும்.  அவரது சாட்சியத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் சுருக்கமாக வருமாறு 'குண்டு வெடிப்பு இடம்பெற்ற வீடு இரு மாடிகளைக் கொண்டிருந்தது. இந் நிலையில் முதலாவது மாடியில் உள்ள அறையொன்றிலேயே முதல் குண்டு வெடித்துள்ளது.  அந்த மாடியின் மேல் தரையில் குண்டுவெடிப்பால் பாரிய ஓட்டை ஒன்று ஏற்பட்டிருந்தது.  அதன் காரணமாக மேல் மாடி உடைந்து விழும் அளவில் இருந்தது.  அந்த பாதிப்புக்களைப் பார்க்கும் போது எனது கணிப்பின் பிரகாரம்,  குறித்த தற்கொலை குண்டுதாரி பெண்,  மாபிள் பதிக்கப்பட்ட தரை மீது, குண்டினை வைத்து  நிலத்தில் அமர்ந்து, தமது பிள்ளைகளை அருகே அழைத்துக்கொண்டு இந்த குண்டினை வெடிக்கச் செய்திருக்க வேண்டும். அவ்வீட்டில் இடம்பெற்ற 2 ஆம் குண்டு வெடிப்பு சம்பவம், அந்த அறையில் இடம்பெறவில்லை. அது வேறு ஒரு இடத்தில் இடம்பெற்றுள்ளது. அந்த வெடிப்பு இடம்பெற்ற அறை, ஒருவர் மட்டும் இருக்க முடியுமான சிறிய  இடமாகும்.  எவ்வாறாயினும் இந்த வெடிப்பு இடம்பெர்ற  மஹவில கார்டன் வீட்டிலிருந்து  உப பொலிஸ் பரிசோதகர் ரோஹன பண்டார உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் சடலங்களை மீட்ட போது, தற்கொலை குண்டுதரியான பெண், அவரது பிள்ளைகள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதறிக் கிடந்துள்ளனர்.' என சாட்சியமளித்தார்.   https://www.virakesari.lk/article/83413
    • ஐ.நா.நல்லெண்ண தூதராக தேர்வானார் மதுரை சலூன் கடைக்காரரின் மகள் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன் கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார். மனைவி மற்றும் மகளுடன் மோகன்.   மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில் இருந்து பலர் உதவி செய்து வருகின்றனர்.   மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். 47 வயதான மோகன், சலூன் நடத்தி வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 லட்சம் ரூபாயை செலவிட்டுள்ளார்.மோகனின் மகள் நேத்ரா, தற்போது ஒன்பதாவது வகுப்பு படித்து வருகிறார். ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருவதாக அவர் தெரிவித்திருந்தார்.இக்கட்டான நிலையில் மக்களுக்கு மோகன் உதவிய சம்பவம் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சியின்போது மகள் படிப்புக்காக வைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் பணத்தில் மக்களுக்கு உதவிய மோகனுக்கு பாராட்டு தெரிவித்தார்.இந்நிலையில் ஐ.நா.நல்லெண்ண தூதராக மதுரை சலூன்கடைக்காரரின் மகளான மாணவி நேத்ரா தேர்வாகியுள்ளார்.  மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் நேத்ராவுக்கு ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது.  தனது எதிர்கால கல்விக்காக சேமித்து வைத்திருந்த 5 லட்ச ரூபாயை ஏழைகளுக்காக நேத்ரா வழங்கியதை பாராட்டி கவுரவிக்கும் வகையில் இந்த சிறப்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   https://www.maalaimalar.com/news/topnews/2020/06/05100212/1575981/Madurai-Saloon-Shop-man-daughter-select-UN-goodwill.vpf படித்து நல்ல நிலைக்கு வந்து இன்னும் பலருக்கு உதவி செய்யம்மா