Jump to content

''உலகப்பொருளாதாரம் மீட்சியடையாமல் இலங்கைப் பொருளாதாரத்திற்கு மீட்சியில்லை"


Recommended Posts

கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் உலகப் பொருளாதாரத்தைப் பழைய நிலைக்கு மீட்டுக்கொண்டு வருவதற்கு உலக சமூகங்களும், நிதிநிறுவனங்களும் ஐக்கியப்பட வேண்டுமென்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகருமான அஜித் நிவாட் கப்ரால் கூறியிருக்கிறார்.

இலங்கை போன்ற வளர்முக நாடுகள் கொவிட் - 19 தொற்றுநோயின் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரத்தில் மந்தமான வளர்ச்சி மற்றும் கடன் பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும். தமது எல்லைகளுக்கு அப்பால் தோன்றிய சூழ்நிலைகளினால் உருவாக்கப்பட்ட பொருளாதார நிலைவரமொன்றுக்கு இலங்கை முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

எனவே உலகப் பொருளாதாரத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்து, தீர்வொன்றை வழங்க உலக சமூகம் ஒன்றிணைய வேண்டும்.

நாட்டில் கொவிட் - 19 பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியில் வணிக மற்றும் தொழிற்துறையைக் காப்பாற்றுவதற்கும், பொருளாதாரத்தை நிலையுறுதியாக வைத்திருப்பதற்கும் இலங்கை முயற்சிகளை மேற்கொள்ளும் என்று கப்ரால் சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹவிற்குக் கூறியிருக்கிறார்.

இலங்கைக்கு அந்நியச்செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளாக உல்லாசப்பயணத்துறை மற்றும் ஆடை உற்பத்தித்துறை என்பன விளங்குகின்றன. வெளிநாட்டுக் கேள்வியில் தங்கியிருக்கும் இவ்விரு துறைகளும் கொவிட் - 19 மேற்குலகில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தினால் குன்றிப்போயுள்ளன.

உலக நிலைவரம் சீராகாமல் எவ்வளவு பெரிய தொகையில் ஊக்குவிக்குக் கொடுப்பனவுகளை வழங்கினாலும் இலங்கையினால் இத்துறைகளுக்குப் புத்துயிர் அளிக்கமுடியாது என்றும் கப்ரால் கூறியிருக்கிறார்.

எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்திருப்பது இலங்கையின் எண்ணெய் இறக்குமதிக்கு இலாபகரமானதாக இருப்பிலும் கூட, மேற்காசியாவில் இலங்கையர்கள் தொழில்வாய்ப்புக்களை இழக்கக்கூடும். வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களால் அனுப்பப்படும் அந்நிய செலாவணியில் வீழ்ச்சியேற்படும் பட்சத்தில் எண்ணெய் விலை குறைவினால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

இரண்டாவது உலக மகாயுத்தத்திற்குப் பின்னர் பொருளாதார மீட்சியையும், புனர்நிர்மாணத்தையும் ஊக்குவிப்பதற்காக அமைக்கப்பட்ட பிரிட்டன் வூட்ஸ் ஏற்பாட்டை ஒத்த சர்வதேச நடவடிக்கையொன்றைத் தற்போதைய நெருக்கடி வேண்டிநிற்கிறது.

இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு உலகலாவிய கொள்கைகளை வகுக்குமாறு நாம் ஜி - 20, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புக்களிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமரின் ஆலோசகர் சின்ஹவாவிற்குத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/79032

 

Link to comment
Share on other sites

கோவிட்-19: சீறீலங்காவும் எதிர்காலமும்

எப்போதும் ஒரு நாட்டிலான கோவிட்-19 வைரஸ் தொற்றின் போது முதலில் நாட்டிற்கு வெளியில் இருந்து வந்தவர்களே நோய்த் தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்படுவார்கள். பின்னர் அவர்களுடன் ஏதோவிதத்தில் தொடர்புபட்டவர்கள் நோய்த் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படுவர்.

இவர்களை கடந்து நோய்த் தொற்று இடம்பெறுகிறதா? என்பது தொடர்ந்தும் அதீத கவனத்தில் கொள்ளப்படும். பொதுவாக மூன்றாம் நாலாம் வாரங்களில், அவ்வாறான தொற்றுடையவர்கள் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்படுவது சாத்தியமாகும். அதன் பின்னர் அது எவ்வளவு தூரம் அந்நாட்டின் மக்களிடையே பரவ ஆரம்பித்துள்ளது என்பதை, அறிந்து கொள்ள எங்கெல்லாம் நோய்த்தொற்று அதிகம் அடையாளம் காணப்படுகிறதோ, அங்கெல்லாம் அதிக சோதனைகளை செய்வதினூடாக சாத்தியமாகும்.

அவ்வாறு செய்யப்படுமானால், அவ்வாறான இடங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, ஏனைய பகுதிகளில் இருந்து அவற்றை தனிமைப்படுத்துவதினூடாக பரவலான நோய்த்தொற்று பரம்பலைத் தடுத்துவிடமுடியும். இல்லையேல், நோய்த் தொற்று அந்நாட்டின் பல பகுதிகளுக்கும் ஓரிரிவர் மூலம் சென்றுவிட்டாலே, அது பெரும் பரம்பலுக்கு பின்னர் வழிகோலிவிடும். இது தான் இன்று பல நாடுகள் எதிர்கொள்ளும் சவால் நிலையாகும்.

இதையே முதலில் ஒருவர் மூலம், இருவர் அல்லது மூவருக்கு வைரஸ் தொற்று ஏற்ப்பட்டால், அவ்வாறு பரப்ப்படும் நோய்த்தொற்று முதல் மாத முடிவில் 244 பேரையும், அதுவே இரண்டாம் மாத முடிவில் 59604 பேரையும் தொற்றும் வாய்பிருக்கு. இவ்வாறான பரம்பல் அதிகரிப்பை அதீத கவனத்தில் கொண்டியங்கும் அரசுகள், அந்த பரம்பல் வேகத்தை கட்டுக்குள் வைத்து நகர முடியும். ஆனால் தனது மூன்றாவது வாரத்தில் உள்ள சிறீலங்கா, தற்போதே சமூகப் பரம்பலை அதிகரித்த எண்ணிக்கையில் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ள நிலையில், அது பரந்த சோதனைகளை செய்ய வேண்டும் என இத்துறைசார் வல்லுனர்கள் சிறீலங்கா அரசை வலியுறுத்துகின்றனர்.

ஆனால் சிறீலங்கா அம்முன்னெடுப்பை இதுவரை செய்யவில்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

கீழே உள்ள வரைபின் (நன்றி: டெய்லி மிரர்) மூலம், ஏனைய நாடுகள் சீறீலங்காவிற்கு தரும் பாடம் என்ன என்பதை அவர்கள் கோடிட்டுக் காட்டுகின்றனர். இதில் குறிப்பிட்டுள்ள ஏனைய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி, இங்கிலாந்து என்பன தமது எட்டாவது வாரத்தின் பல்வேறு நாட்களிலும், தென்கொரியா தனது 9ஆவது வாரத்திலும், தற்போது உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது மூன்றாவது வாரத்திற்குள் பயணிக்கும் சிறீலங்காவின் பயணம், கொவிட்-19 விடயத்தில் எவ்வாறு அமையப்போகிறது என்பதே, வருகின்ற நாட்கள் வாரங்கள் சொல்லப்போகும் செய்தியாகும். வெறும் ஊரடங்கு மாத்திரம் சாதித்துவிடுமா? இல்லையேல், அதையும் கடந்து வல்லுனர்கள் வலியுறுத்துவது போல் பல நடவடிக்கைகள் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டேயாக வேண்டுமா? சமூகப்பரம்பல் ஏற்கனவே வெளிப்பட்டுள்ள நிலையில், அவ்அவ்ப்போது ஊரடங்கை தளர்த்தி, மக்களை வெளியில் கொண்டு வந்து, நெருக்கமாக கூடலுக்கு அனுமதித்து, நோய்த் தொற்று பரம்பலுக்கு வழியமைத்துவிட்டு, பின்னர் அடைத்துவிடுவது சரியான முறைமையா? என்பதெல்லாம் வரும் வாரங்கள் வெளிப்படும் விடயங்கள் என்றாலும், அவ்விடயங்கள் கூட வெளிப்படைத்தன்மையுடன் அணுகப்படுமா? என்பதும் பெரும் கேள்வியே?

இரு வல்லுனர்களின் கருத்து வருமாறு:
“If we do not expand testing and identify those with the virus the curfews would be useless” - Prof. H. W. Dissanayake
“If we do not actively detect Covid-19 infected, the iceberg would become a volcano” - Prof. Harendra de Silva

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
 
 
(முகநூல்) 
Link to comment
Share on other sites

கையேந்தி பிழைப்பு நடத்திக்கொண்டு மகாபொய்வாம்ச வீராப்பு கதைக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் மேலும் மேலும் கடனில் மூழ்கும் சூழ்நிலையை கோவிட் 19 வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. குள்ளநரி ரணில் இந்தச் சிக்கல்களில் இருந்து தப்பிய அதிஷ்டக்காரனாக உள்ளார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.