Jump to content

கொரோனா பரவலுக்கு காரணமான டில்லி நிஜாமுதீன் மசூதி: 10 முக்கிய அம்சம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டில்லி,நிஜாமுதீன், கொரோனா, கொரோனாவைரஸ், Nizamuddin mosque, coronavirus, covid 19 india, india fights corona, coronavirus, corona crisis, Nizamuddin Panganawali mosque, Delhi

 

புதுடில்லி: டில்லி நிஜாமுதீன் பங்கனாவாலி மசூதியில் நடந்த மதவழிபாடு தொடர்பான மாநாட்டில் பங்கேற்றவர்கள் மூலம், கொரோனா பெருமளவில் பரவியது. இதனையடுத்து, அந்த பகுதி, கொரோனா பரவலின், மையப்பகுதியாக மாறியுள்ளது.
 

 

இது குறித்த முக்கிய அம்சங்கள்


1. தப்லீகி ஜமாத் என்ற இஸ்லாமிய பிரசார குழு சார்பில், மார்ச் 1 முதல் 15 வரை நடந்த மதரீதியிலான மாநாட்டில், இந்தோனேஷியா, மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

2.தபிலீகி ஜமாத் தலைமையகத்தில் இருந்த 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 24 பேருக்கு கொரோனா இருந்தது கடந்த ஞாயிறு அன்றே தெரியவந்தது.
3.இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என திங்கள் இரவு அன்று சோதனை செய்யப்பட்டது. சுமார் 100 பேரிடம் நடந்த சோதனை முடிவுகள், இன்று(மார்ச் 31) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4.இந்த மாநாட்டில் பங்கேற்ற 7 பேர், கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உயிரிழந்தனர். மற்றொருவர் ஸ்ரீநகரில் உயிரிழந்தார்.


latest tamil news


 


5.மாநாட்டில் பங்கேற்ற 2 ஆயிரம் பேரும், 6 மாடிகள் கொண்ட மையத்தில் தங்கியிருந்தனர். அதில்,250க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டினர். அனைவரும், ஒரே உணவருந்தும் அறையை பயன்படுத்தினர். உணவும் ஒரே அறையில் தயாரிக்கப்பட்டது.
6.இதனையடுத்து, நிகழ்ச்சி நடந்த டில்லி தெற்கு சுற்றுவட்டார பகுதிகளுக்கு போலீசார் சீல் வைக்கப்பட்டது. டில்லி போலீஸ், சி.ஆர்.பி.எப்., போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் அங்கு விரைந்தனர்.
7.இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள், பீஹார், தெலுங்கானா, ஒடிசா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக காஷ்மீரில் முதலில் உயிரிழந்தவர், இந்த மாநாட்டில் பங்கேற்றவர்.
8. இந்த மசூதியின் ஒரு சுவர் நிஜாமுதின் போலீஸ் ஸ்டேசனுடன் இணைந்துள்ளது. 25 ஆயிரம் பேர் வசிக்கும் பஸ்டி நிஜாமுதீன் பகுதியுடன் இணைந்து இந்த மசூதி உள்ளது.
9.கடந்த 2 முதல், மசூதி வாசலில் பணியில் உள்ள போலீசார், அந்த பகுதியில் மக்கள் கூடுவதை தடுத்துள்ளனர். மார்ச் 22 வரை வெளிநாட்டினர் மற்றும் வெளி மாநிலத்தவர் இந்த மசூதிக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், 22க்கு பிறகு யாரையும் அனுமதிக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
10. டில்லி கூடுதல் கமிஷனர் தேவேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில், நிஜாமுதீன் பகுதி மக்களையும், மசூதிக்குள் இருந்தவர்களையும் பரிசோதனை செய்து, தனிமைபடுத்தப்பட்ட வார்டுக்கு அனுப்பி வைக்கும் பணியில் சுகாதார அமைப்புக்கு போலீசார் உதவி வருவதாக தெரிவித்தார்

https://www.dinamalar.com/news_detail.asp?id=2512797

 

தப்லிக் ஜமாத்' கூட்டத்தில் பங்கேற்றோருக்கு கொரோனா: ஆயிரக்கணக்கானோரை தேடி நாடு முழுதும் வேட்டை

தடை உத்தரவு அமலில் இருக்கும்போதே, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மத பிரசங்க கூட்டத்தை நடத்தி, கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருந்ததாக, டில்லி நிஜாமுதீன் பகுதி ஜமாத் நிர்வாகம் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற ஏழு பேர், கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர். இதில் பங்கேற்ற பலர், விமானம், ரயில், பஸ் போக்குவரத்தின் மூலம், தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட, தங்கள் சொந்த மாநிலங்களுக்கு ஏற்கனவே திரும்பியுள்ளதை அடுத்து, அவர்களை கண்டறியும் முயற்சியை தீவிரப் படுத்தும்படி, மாநில அரசுகளை, மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது.

 

 

பிரசங்க கூட்டம்

 


டில்லியில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும், நிஜாமுதீன் என்ற இடத்தில், கடந்த, 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில், பிரசங்க கூட்டம் நடந்தது. இதில், 280 வெளிநாட்டவர் உட்பட, 8,000 பேர், வெவ்வேறு நாட்களில் பங்கேற்றுள்ளனர். தப்லிக் ஜமாத் என்ற அமைப்பின் சார்பில் இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 'கொரானா அபாயம் இருப்பதால், அதிக எண்ணிக்கையில் கூடும் அளவுக்கு, யாரும் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது' என, டில்லி போலீசார், ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர்.
அதை பொருட்படுத்தாமல் இந்த கூட்டம் நடந்துள்ளது. தப்லிக் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகம், டில்லி, நிஜாமுதீன் போலீஸ் ஸ்டேஷன் அருகேயுள்ள, 'மார்கஸ் நிஜாமுதீன்' என்ற, ஆறு மாடி கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தான், இந்த பிரசங்க கூட்டம் நடந்துள்ளது.

 


latest tamil news


 



கூட்டத்தில் பங்கேற்ற பலர், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட தங்கள் சொந்த மாநிலங்களுக்கு விமானம், ரயில் மூலம் திரும்பி விட்டனர். அந்தமானுக்கும் சிலர் சென்றுள்ளனர். மீதமுள்ள, 1,000க்கும் அதிகமானோர் அந்த கட்டடத்தில் தங்கியிருந்தனர்.அப்போது தான், கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, திடீரென, நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


 

 

 

அதிர்ச்சி


இதனால், இந்த கட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முயற்சித்துள்ளனர். விமானம், ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டதால், அவர்கள் அனைவரும், மீண்டும் மார்கஸ் நிஜாமுதீன் கட்டடத்திற்கே திரும்ப வந்து தங்கினர். வெளியுலகத்திற்கு இந்த விஷயம் பெரிதாக தெரியாமல் இருந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்று தெலுங்கானா மாநிலத்துக்கு திரும்பியவர்களில் ஆறு பேரும், ஸ்ரீநகர் திரும்பிய ஒருவரும், கொரோனா வைரஸ் தாக்கி இறந்துள்ளது, அந்த மாநில மற்றும் நிர்வாக அரசுகளுக்கு தெரியவந்தது.
உடனடியாக இது குறித்து மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின் தான், கூட்டம் நடந்த இடத்தில், டில்லி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஏராளமானோர் அந்த கட்டடத்தில் தங்கியிருந்தது தெரிய வந்தது. உடனடியாக, டில்லியின் பல்வேறு மருத்துவமனைகளுக்கு, அவர்கள் பல குழுக்களாக பிரித்து அனுப்பப்பட்டனர்.



இந்த விவகாரம் குறித்து, தப்லிக் ஜமாத் குழு செய்தி தொடர்பாளர் முகமது சோயப் அலி கூறியதாவது:திட்டமிட்டபடி, நாட்டின் பல பகுதிகளில் இருந்து, ஏராளமானோர் ஏற்கனவே வந்து கூடிவிட்டனர். அதன்பின் தான், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால், அனைவரும் இங்கு தங்கி விட்டனர். 'வெளியில் நடமாடக்கூடாது; அவரவர் இடங்களில் இருக்க வேண்டும்' என்ற உத்தரவை எல்லாரும் பின்பற்ற வேண்டிய தாகிவிட்டது. அதனால்தான், அலுவலகத்திலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.இவ்வாறு, அவர் கூறினார்.
இந்நிலையில், இங்கு கூடியிருந்தவர்களில், 300க்கும் அதிகமானோரிடம் நேற்று முன்தினம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சோதனை முடிவுகள் அனைத்தும் வெளிவந்த பின், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.



இந்நிலையில்தான், நேற்று அந்த கட்டத்தில் தங்கியிருந்த அனைவரையும் வெளியேற்றிய போலீசார், அந்த கட்டடத்துக்கு, 'சீல்' வைத்தனர். கட்டடத்தில் இருந்தவர்கள் மற்றும் கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் என, 800 பேர் அடையாளம் காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 334 பேர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இது குறித்து, டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியதாவது:மசூதி நிர்வாகம், மிகப்பெரிய தவறை செய்துஉள்ளது; இது, மன்னிக்க முடியாத குற்றம். மசூதி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடும் நடவடிக்கை எடுப்பது குறித்து, டில்லி துணைநிலை கவர்னருக்கு பரிந்துரை செய்துள்ளோம். நிஜாமுதீன் உட்பட அந்த பகுதி முழுதும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, சுகாதாரப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், இங்கு வராமல் இருப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுஉள்ளது.
இதற்கிடையே, இந்த கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் அனைவரது முகவரிகளும் பெறப்பட்டு, அந்தந்த மாநில அரசுகளை தொடர்பு கொண்டு, மத்திய உள்துறை அமைச்சகம் உஷார் படுத்தியுள்ளது. கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள், விமானம், பஸ், ரயில் உள்ளிட்டவற்றில், தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்திருக்கலாம் என்பதால், அவர்களுடன் யார் யார் பயணம் செய்தனர், அவர்கள் யார் யாரை சந்தித்தனர் என்ற விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்படலாம் என்பதால், டில்லி மத கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்களை, உள்ளாட்சி மற்றும் வருவாய் நிர்வாகத்தினருடன் சேர்ந்து, நாடு முழுதும், அந்தந்த மாநில போலீசார், சல்லடை போட்டு தேடிக் கண்டுபிடிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2513095

 

உ.பி., மசூதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள்

லக்னோ: டில்லி முஸ்லீம்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளிநாட்டவர்கள், உபி.,யில் உள்ள மசூதிகளில் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் நடந்த, தப்லிக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த வெளிநாட்டவர் சிலர், உத்தர பிரதேச மாநிலம், லக்னோ, மீரட் ஆகிய மாவட்டங்களில் உள்ள மசூதிகளில் தங்கியிருந்ததை, அம்மாநில போலீசார் கண்டுபிடித்தனர்.


latest tamil news


 


''இவர்கள், இந்தோனேஷியா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், சூடான், கென்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள்,'' என, மீரட் மாவட்ட - ரூரல் - எஸ்.பி., அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார். முறையான அனுமதியின்றி, வெளிநாட்டவர்களை தங்க வைத்ததாக, சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2513195

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லியில் தப்லிகி ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 16 மசூதிகளில் தங்கிய நபர்கள் - அதிர்ச்சி தகவல்

நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத் இஸ்லாமிய நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அதில் கலந்து கொண்டவர்களில் 157 பேர் டெல்லியில் உள்ள 16 மசூதிகளில் தங்கி இருந்த தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் தப்லிகி ஜமாத் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 16 மசூதிகளில் தங்கிய நபர்கள் - அதிர்ச்சி தகவல்
நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்
 
புது டெல்லி:
 
இந்தியா முழுவதும் இதுவரை ஆயிரத்து 238 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 123 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. 
 
இந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மத குருக்கள் கலந்து கொண்டுள்ளனர். 
 
அந்த மதக்கூட்டத்தில் பங்கேற்ற நபர்கள் பலருக்கு தற்போது கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மதக்கூட்டம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
 
இந்நிலையில், நிஜாமுதீன் பகுதியில் தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 157 பேர் நிகழ்ச்சி முடிந்த பின்னர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் உள்ள 16 மசூதிகளுக்கு சென்று அங்கு தங்கி இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்
 
நிஜாமுதீன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் 157 பேர் டெல்லியின் தென்கிழக்கு, வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 16 மசூதிகளில் தங்கியுள்ளனர். 
 
அவ்வாறு தங்கியவர்களில் 94 பேர் இந்தோனேசியா, 13 பேர் கஜகஸ்தான், 9 பேர் பங்களாதேஷ், 8 பேர் மலேசியா, 7 பேர் அல்ஜீரியா மற்றும் இத்தாலி, துனிசியா,  பெல்ஜியம் தலா ஒருவர் என மொத்தம் 138 பேர் வெளிநாட்டினரும் எஞ்சிய 19 பேர் இந்தியர்கள் ஆவர்.
 
இதையடுத்து, டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருகிறது. 
 
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மசூதிகளுக்கு சென்று அங்கு தங்கியுள்ள வெளிநாட்டினரை உடனடியாக தனிமைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு சிறப்பு போலீஸ் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி நிஜாமுதீன் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு: கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறி.....டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த கெஜ்ரிவால் தெரிவித்து உள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவில் 27 மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1041 ஆக அதிகரித்துள்ளது.

102 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து குணம் அடைந்து இருப்பதாகவும்,  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது; கொரோனா வைரஸின் சமூக பரவல் கட்டத்தில் டெல்லி நுழையவில்லை. உள்ளூர் பரிமாற்றங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன. டெல்லி நிஜாமுதீன் விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி அரசு துணை நிலை ஆளுநருக்கு கடிதம் எழுதி உள்ளது, அவர் விரைவில் உத்தரவு பிறப்பிப்பார் என்று நான் நம்புகிறேன்.

எந்தவொரு அதிகாரிகளிடமும் ஏதேனும் அலட்சியம் காணப்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்தம் 1,548 பேர் மார்க்கஸிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர், அவர்களில் 441 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருக்கிறது. நாங்கள் அவர்களை மருத்துவமனைகளுக்கு மாற்றியுள்ளோம், அவர்களுக்கு சோதனைகள் நடத்தப்படுகின்றன. அறிகுறிகளைக் காட்டாத 1,107 பேர் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தமிழர்கள் தான் அதிகம்

டெல்லியின் நிஜாமுதீனில் உள்ள தப்லிகி ஜமாத் சபையில் பங்கேற்றவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாடு மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு தமிழ்நாடு-510, அசாம் -281, உத்தரபிரதேசம் -156, மராட்டியம்-109, மத்தியபிரதேசம்-107, பீகார்-86, மேற்குவங்காளம்-73, தெலுங்கானா-55, ஜார்கண்ட்-46, உத்தரகாண்ட்-34, அரியானா-22, அந்தமான் நிகோபார்-21, ராஜஸ்தாந்19, இமாசலப்பிரதேசம், கேரளா, ஓடிசாவில் தலா 15, பஞ்சாப்-9 மேகலயா-5.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=575796

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டில்லி மாநாடு:போலீசாரிடம் சிக்கிய 275 வெளிநாட்டினர்

புதுடில்லி:டில்லி மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 275 பேரை போலீசார் இன்று அதிகாலை பிடித்து தனிமைபடுத்தியுள்ளனர்.


 

latest tamil news


 



டில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிகி ஜமாத் என்ற முஸ்லிம் மத அமைப்பு சார்பில் முஸ்லிம் மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம் பங்கேற்றனர்.
இதற்கிடையே, கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தெலுங்கானா திரும்பிய 6 பேர் கொரோனா வைரஸ் காரணமாக பலியானார்கள். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த ஒருவரும் பலியானார். இதனால், நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், டில்லி சிறப்பு போலீசார், அரசுடன் இணைந்து இன்று அதிகாலை டில்லி முழுவதும் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையின்போது டில்லி மாநாட்டு கூட்டத்தில் பங்கேற்று பதுங்கியிருந்த 275 வெளிநாட்டினரை போலீசார் அதிடியாக கைது செய்தனர்.
பிடிபட்டவர்கள் அனைவரும் இந்தோனேசியாவை சேர்ந்த 172 பேர், கஜகஸ்தானை சேர்ந்த 36 பேர், வங்காளதேசத்தை சேர்ந்த 21பேர் என தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


latest tamil news

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2513804

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினமலர் யாருடைய பத்திரிகை என்று உடையாருக்கு தெரியாதா?

 

முஸ்லிம்கள்தான் கொரோனாவை பரப்புகிறார்களா? எங்கே போயிற்று இதழியல் அறம்? – மாயா

Nizamuddin_coronavirus_covid19_PTI_6.jpg

தில்லி நிஸாமுதீனில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை வைத்து நடத்தப்பட்ட தப்லீகி ஜமாத் மதக் கூட்டம் ஒட்டுமொத்த கொரோனா விவாதத்தையே திசை மாற்றிவிட்டது. ’தப்லீகி ஜமாத் செய்தது கொடிய குற்றம், அவர்கள் தாலிபான்கள் போன்றவர்கள்’ என திட்டுகிறார் பி.ஜே.பியின் மத அரவணைப்பு முகமூடியான முக்தார் அப்பாஸ் நக்வி. கடந்த பல நாட்களாக அனைத்து நாளிதழ்களின் பேனர் நியூஸ் இதுதான். டிவிக்களின் தலைப்புச் செய்தி இதுதான். அவர்கள் செய்தது தவறு, அதை எந்த வகையிலும் ஆதரிக்காதீர்கள் என்று சில நடுநிலையாளர்கள் ஆவேசப்படுகிறார்கள். எல்லா நடுநிலையாளர்களும் அதைக் கண்டிக்க வேண்டும் என அவர் அழைக்கிறார். உண்மைகளின் அடிப்படையில் அல்லாமல் உணர்வுகள், நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒரு பிரச்சனையை புரிந்துகொள்ள முயலும் பின்மெய்யியல் (post-truth) காலத்தின் கோலம் இது.

SAVE_20200331_192200-300x161.jpeg

தப்லீகி ஜமாத் ஒரு அடிப்படைவாத அமைப்பு என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்தியாவை ஆளும் பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ்-பஜ்ரங் தள் சங் பரிவார அமைப்புகள் போல அது வெறுப்பு அரசியலை பரப்பும் இயக்கம் அல்ல.  தப்லீகி ஜமாத்திற்கு இருப்பது அமைப்புரீதியான பலம், உலகின் பிற பகுதிகளிலிருந்து கிடைக்கும் நிதி பலம். ஆனால் பி.ஜே.பி நேரடியாகக ஆட்சியில் அமர்ந்திருக்கிருக்கிறது. இந்தியாவின் பல லட்சம் ராணு வீரர்களும் போலீஸ்காரர்களும் அரசு இயந்திரமும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அந்த பி.ஜே.பியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரு பக்கம் தப்லீகி ஜமாத் செய்த இப்படி ஒரு தவறையும் மறு பக்கம் அந்த அமைப்பின் மத அடிப்படைவாதத்திற்கு நேர் எதிர் நிற்கும் இந்து வலதுசாரி கட்சியின் நிர்வாகத்திற்குமான முரண்பாட்டில் நீங்கள் எதன் பக்கம் நிற்பீர்கள்.

வேறு சாட்சியங்கள் வேண்டாம். ஊடகங்களே சாட்சி. தப்லீகி ஜமாத் கூட்டம் மார்ச் 15 வாக்கில் நடக்கிறது. அப்போது ஊரடங்கு அறிவிக்கப்படவில்லை. தில்லியில் பெரிய மதக் கூட்டங்கள் நடத்த வேண்டாம் என்று ஒரு வழிகாட்டுதல் மட்டும் விடுக்கப்பட்டிருந்தது. அதையும் தப்லீகி ஜமாத் மதித்திருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் மார்ச் 25ஆம் தேதி, அதாவது தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பல நாட்களுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ராமர் சிலையை வேறு இடத்திற்கு நடத்தும் அரசு விழா நடத்தப்படுகிறது.

ஊரடங்கு விதிக்கப்பட்ட 21ஆம் தேதிக்கிப் பிறகு ஒரு பி.ஜே.பி முதல்வரே அதை மீறுகிறார். அதைப் பற்றிய தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியில் ஒரு சில மூத்த தலைவர்கள் பங்கேற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் மொத்தம் 50 பேர் அதில் கலந்துகொண்டதாக மற்ற ஊடகங்களின் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. மக்கள் கூடுகையும் கூடாது என்றும் குறிப்பாக மதக் கூட்டங்கள் நடத்தக்கூடாது என்றும் கூறிய பிறகும் இது நடந்தது என்பது பற்றிய சிறு தகவலோ, குறிப்போ அந்தக் கட்டுரையில் இல்லை. ஆனால் அதே குழுமத்திலிருந்து வரும் எகனாமிக் டைம்ஸ் சமூக இடைவெளி சார்ந்த பல அரசின் விதிகள் மீறப்பட்டதாக விமர்சித்து செய்தி வெளியிட்டது. அதன் தொனி சற்று கடுமையாக இருந்தது என்றாலும் இந்த விதிமீறல் பேனர் செய்தியாக வெளியிடப்படவில்லை. ஒரு சிறு ஆறுதலாக தி இந்து நாளிதழ் தப்லீகி ஜமாத் கூட்டத்தை வைத்து இந்தக் கொடிய கிருமியின் தாக்குதலை வகுப்புவாத பார்வையில் திருப்பக்கூடாது என தலையங்கம் எழுதியது.

தப்லீகி ஜமாத் மட்டுமல்ல, மத அடிப்படைவாதத்தில் ஊறிய அனைவரும் ஏதோ ஒரு வகையில் கொரோனோ எதிர்வினைவில் சொதப்புகிறார்கள். அயோத்தியில் காவி உடை அணிந்த இந்துத்துவ முதல்வரே தடையை மீறுகிறார். அந்த விழாவில் தங்களுக்கு இடமில்லை என காங்கிரஸ், ஆம் ஆத்மி மிதவாத இந்துத்துவாளர்கள்  கவலைப்படும் அளவுக்கு அது ஒரு அரசியல் கூட்டமாக நடத்தப்படுகிறது. ராம நவமியை நடத்தியே தீர்வோம் என அடம் பிடித்து பிறகு அடங்குகிறார்கள் ஞாயிறு பூசை வைக்க வேண்டும் என அடம் பிடிக்கும் கிறிஸ்தவர்களைப் பற்றி கேள்விப்படுகிறோம். “கடவுள் காப்பாற்றுவார்” என்ற அடிப்படைவாத நம்பிக்கையிலிருந்து உருவாகும் நிலை இது. எந்த மதமும் விதிவிலக்கல்ல. ஆனால் மார்ச் 21 ஊரடங்கிற்கு ஒரு வாரம் முன்பே துவங்கிவிட்ட தப்லீகி ஜமாத் கூட்டத்தை வைத்து, “கொரோனா பரவுவதற்கே முஸ்லிம்கள்தான் காரணம்” என்று உருவாக்க நினைக்கும் சித்திரத்திற்கு எதிராகப் போராடுவதுதான் நமது இன்றைய கடமை.

tablighi-jamaat-300x200.jpg

தப்லீகி ஜமாத் ஜமாத் செய்தியை முதல் பக்க பேனர் செய்தியாக வெளியிட்ட தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்கள், அது பற்றிய வரலாற்று அறிஞர்கள், மிதவாத சூஃபி அறிஞர்கள் கூறியதை எல்லாம் ஒரு மூலையில் சிறிய செய்தியாக வெளியிடுகிறது. தப்லீகி ஜமாத் போல பல நாடுகளிலிருந்து வந்து, பல நாள் ஒரே இடத்தில் இருந்த எந்த பெரிய கூட்டத்தை தீவிரமாக ஆய்வு செய்தாலும் இவ்வாறு அதிக கொரோனா பாஸிட்டிவ் கிடைக்கும் என அவர்கள் தர்க்கபூர்வமாக கத்துவதெல்லாம் முதல் பக்க பேனர் செய்தி அல்ல. மாறாக, ஒரு உடல்நல, சுகாதார பிரச்சனையை தேசிய பாதுகாப்பு ஆலோசகரை வைத்து சமரசம் (!!!) செய்து முடிப்பது முதல் பக்கத்தில் வெறும் நேரடி செய்தியாக இடம் பெறும்.

கொரோனா பரவத் தொடங்கியது முதல் உண்மைக்கு நாங்களே சொந்தக்காரர்கள், டிஜிட்டல் ஊடகங்கள் வெறுமனே பொய்களையும் அரை உண்மைகளையுமெ சொல்லுகின்றன என பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமம் அதில் முன்னணியில் உள்ளது. முழுத்த உறுதி செய்யப்பட்ட செய்திகள் மட்டுமே வழங்கப்படும் என தங்களது கிடைச் சொந்த ஊடகங்களான (cross media ownership) மூவிஸ் நவ் போன்ற சேனல்களில் அறநெறியற்று விளம்பரம் செய்கிறார்கள்.

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு தப்லீகி ஜமாத் (அதாவது முஸ்லிம்கள்) காரணம் என்ற சித்திரத்தை உருவாக்கிய தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்களின் முதல் பக்க பேனர் செய்திகள் ஒரு பக்கம். உள்ளே அதே நாளிதழ்களின் தலையங்கத்தில் சுற்றி வளைத்து கடைசி பத்தியில் சொல்கிறார்கள்: டாக்டர்களுக்கு போதுமான மருத்துவ உபகரணங்கள் கிடைக்கவில்லை, பெருமளவில் கொரோனா தொற்று பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அது தலையங்கம் அல்ல. விமர்சனம் அல்ல. மயிலிறகால் வறுடிக் கொடுக்கும் செல்லம் கொஞ்சல்கள். இந்த அழகில் அவர்கள் டிஜிட்டல் ஊடகங்களையும் சமூக ஊடகங்களையும் பொய் மூட்டை என கிண்டல் செய்கிறார்கள். எனக்கு பொய் மூட்டைகளே தேவலாம் போலிருக்கிறது.

இன்றைய பின் மெய்யியல் உலகில் எனக்கு வெறும் செய்திகள் தேவையில்லை. அதன் பல்வேறு கோணங்களை வழங்கும் கட்டுரைகளே தேவை. அதை நான் thewire.in, theprint.in, scroll.in, quint.com போன்ற இணைய தளங்களில் காண்கிறேன், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்களில் அல்ல. தில்லி, மும்பை போன்ற மையங்களில் தலைமையைக் கொண்ட ஊடகங்கள் மத்திய பி.ஜே.பி அரசின் ஊதுகுழலாக மாறி பல காலமாகிறது. தி இந்து போன்ற நாளிதழ்கள் அத்தகைய மைய நீரோட்டத்தில் விலகி இருப்பதாலும் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்றவற்றின் சவால்களை சமாளிப்பதற்கு தாங்கள் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக ஆட்சியமைப்பின் விமர்சகர்கள் (anti-establishment) என்ற பத்திரிகை நெறியை பின்பற்றுகிறார்களோ என தோன்றுகிறது. தினத் தந்தி போன்ற நாளிதழ்கள்கூட தில்லி, மும்பையை தலைமையிடமாகக் கொண்ட ஊடகங்களைவிட கூடுதல் இதழியல் தர்மத்துடன் இயங்குவது போல் தெரிகிறது. பி.ஜே.பியின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக மாறிவிட்ட மற்ற இரு நாளிதழ்கள் பற்றியோ, கிடைச் சொந்த ஊடக உரிமையைக் கொண்ட மற்றொரு நாளிதழ் பற்றியோ பேச ஒன்றுமில்லை.

tablighi-jamaat-controversy-corona-01-30

சமூக ஊடகங்களில் துல்லியமற்ற செய்திகளும் பொய்களும் பரவுகின்றன என்பது உண்மையே. ஆனால் அதே சமூக ஊடகங்களில் நமது சமூகத்தின் சிறந்த ஆளுமைகள், விஷயம் தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய பல்வேறு கோணங்களிலான பார்வைகள் மூலம் நமக்கான தனித்துவமான பார்வையை உருவாக்கிக்கொள்வதுதான் இந்த டிஜிட்டல் யுகத்தில் தேவை. அந்த வகையில், மதவாத அரசின் ஊதுகுழலாக மாறி, ஒரு மதப் பிரிவினரை வில்லனாக மாற்ற நினைக்கும் மைய நீரோட்ட ஊடகங்களைவிட டிஜிட்டல் ஊடகங்களையே நான் தேர்ந்தெடுக்கிறேன். குறைந்தட்சம் பொய்களின் நதியில் நீந்தி, உண்மையைக் கண்டடைய முடியும் என்ற நம்பிக்கை டிஜிட்டல் ஊடகங்களில்தான் காண முடிகிறது.

 

https://uyirmmai.com/செய்திகள்/அரசியல்/முஸ்லிம்கள்தான்-கொரோனா/

Link to comment
Share on other sites

கூடிய வரைக்கும் தினமலரின் செய்திகள் கட்டுரைகள் என்பனவற்றை தவிர்ப்பது யாழுக்கு நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

எங்கே போயிற்று இதழியல் அறம்? – மாயா

நடந்தது தமிழ் ஆராய்ச்சி மகாநாடு இல்லை தப்லீகி ஜமாத்தின் மதவாத கூட்டத்தை வெளிநாடுகளில் இருந்தும் முஸ்லிம்கள் கலந்து கொண்ட  கூட்டத்தை தமிழக பத்திரிக்கைகள் டெல்லி மாநாட்டில் கலந்த கொண்டவர்கள் என்று உண்மையை மறைத்து எழுதுகிறார்கள். மாயா என்பவர் முஸ்லிம் மதவாத செயற்பாடுகளை மறைப்பது போதாது என்கிறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தில்லியில் கரோனா பாதிப்பு 293 ஆக உயா்வு: இருவா் பலி

 

புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை கரோனாவால் 141 போ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தில்லியின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 293ஆக அதிகரித்தது. இதில் 182 போ் தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவா்கள்.

இதனிடையே, நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ற கரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா் என தில்லி சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இத்துடன் சோ்த்து தில்லியில் இதுவரை 4 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். 8 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனா். வெளிநாட்டைச் சோ்ந்த ஒருவா் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா்.

கரோனா தொற்று சந்தேகத்தால் 31,307 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கக்கூடாத குற்றம்!  தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு குறித்த தலையங்கம்

உலகம் தீநுண்மி (கரோனா) நோய்த்தொற்று பரவுவதைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் போர்க்கால அடிப்படையில் போராடிக் கொண்டிருக்கும்போது,  கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் தில்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத் அமைப்பின் இஸ்லாமிய மாநாடு கூட்டப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது.  தவறு செய்தது போதாது என்று தாங்கள் செய்த தவறை அவர்களில் பலர் நியாயப்படுத்த முயல்வதும், அந்த அமைப்பினருக்குச் சிலர் ஆதரவுக் குரல் கொடுப்பதும்,  இதை மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று கூறி அடக்கி வாசிக்க முயல்வதும், ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம்.

தில்லி நிஜாமுதீனில் செயல்படும் தப்லீக் ஜமாத்தின் தலைமையகம்,  அலமி மர்கஸ் பங்களேவாலி மசூதியில் அமைந்திருக்கிறது. இப்போது வெளிவரும் செய்திகளிலிருந்து, மதத் தீவிரவாதத்தின் நாற்றங்காலாக இந்த அமைப்பு செயல்பட்டு வந்திருக்கிறது என்று தெரிகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

 

கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15-ஆம் தேதிவரை தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான பங்களேவாலி மசூதியில் நடந்த மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல், உலகின் ஏனைய இஸ்லாமிய நாடுகளிலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.  

200 பேர்களுக்கும் அதிகமானவர்கள் கூடும் எல்லா விளையாட்டுப் போட்டிகள், மாநாடுகள், மதச் சடங்குகள் ஆகியவற்றையும் தடை செய்து தில்லி அரசு பொதுத்தடை அறிவித்த அன்றுதான் தப்லீக் ஜமாத்தின் மூன்று நாள் மாநாடு தொடங்கியது. உடனேயே  அந்த மாநாட்டை ரத்து செய்து முடிவுக்குக் கொண்டுவந்திருந்தால்,  எல்லோரும் அவரவர் ஊருக்குத் திரும்பி இருப்பார்கள்.

மார்ச் 16-ஆம் தேதி, 50 பேருக்கும் அதிகமானோர் கூடும் எல்லாக் கூட்டங்களையும் மார்ச் 31 வரை தடை செய்வதாக தில்லி அரசு அறிவித்தபோதாவது, உடனடியாக அனைவரையும் அவரவர் ஊருக்கு அனுப்புவதில் மசூதி  நிர்வாகம் முனைப்புக் காட்டியதா என்றால் அதுவும் இல்லை. இந்த மாநாடு கூடுவது முன்கூட்டியே தெரிந்திருந்தும் தில்லி அரசும், தில்லி காவல்துறையும் உடனடியாக அதைத் தடுக்கவும் முடக்கவும் செய்யாமல் இருந்தது மிகப்பெரிய தவறு.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல் துறையினர் தப்லீக் ஜமாத் அமைப்பாளர்களிடம், மசூதியிலிருந்து அனைவரும் கலைந்து போகும்படி ஐந்து நாள்கள் கெஞ்சி இருக்கிறார்கள். அவர்கள்  ஏற்றுக் கொள்ளவில்லை. தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் இரவு நேரத்தில் நேரில் சென்று, நிலைமையை விளக்கி வேண்டிக்கொண்ட பிறகுதான், கூடியிருந்தவர்களைத் தனிமைப்படுத்தவும்,  மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் அனுமதித்திருக்கிறார்கள். ஜனநாயக இந்தியா இதை சகித்துக் கொண்டிருக்கிறது.

9,000-க்கும் அதிகமான தப்லீக் ஜமாத்தின் தொண்டர்களும் அவர்களது நெருக்கமான தொடர்புகளும் தீநுண்மி நோய்த்தொற்றுக்காகத் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் இதுவரை நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களில் 500}க்கும்  அதிகமானவர்கள் தில்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கு பெற்றவர்கள். தமிழகத்திலிருந்து மாநாட்டில் கலந்துகொண்ட 1,500 பேர்களில் 1200 பேர்தான் திரும்பியிருக்கிறார்கள்.  திரும்பியவர்களில் 364 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இந்தியா முழுவதும் பல்வேறு  மாநிலங்களுக்குத் தீநுண்மி நோய்த்தொற்றைக் கொண்டு சேர்த்த புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் தப்லீக் ஜமாத் தொண்டர்கள்.  அது குறித்து அவர்களுக்குக் கொஞ்சம்கூட வருத்தமோ, குற்ற உணர்வோ இல்லை என்பதுதான் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது.

தில்லி லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 188 பேரில் பலர் தங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யக்கூடாது என்று முரண்டு பிடிக்கிறார்கள். மருத்துவர்களையும்  செவிலியர்களையும் சிலர் தாக்கியிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் மாநாட்டிலிருந்து திரும்பியவர்களைப் பரிசோதிக்கச் சென்ற மருத்துவக் குழுவினரைக் கல் எறிந்து விரட்டி அடித்திருக்கிறார்கள்.  இதுபோன்ற சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நடந்திருக்கின்றன. 

தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொள்ள வெளிநாடுகளிலிருந்து 960 பேர்  வந்திருக்கிறார்கள். மதப்பிரசாரம் செய்ய வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அதற்கான நுழைவு அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால், சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவு அனுமதி பெற்று  தில்லி மாநாட்டுக்கு வந்தவர்கள் இந்தியா முழுவதும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களது நுழைவு அனுமதி இப்போது  ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 

ஊரடங்கு  வேண்டுகோளை மீறும்படியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தேவையற்றது என்றும்  தப்லீக் ஜமாத்தின் தலைவர் மௌலானா சாத் கந்தால்வியின் குரல் பதிவு வேண்டுகோள் இப்போது வெளியாகியிருக்கிறது. மௌலானா சாத் கந்தால்வி தலைமறைவாகியிருக்கிறார்.

தப்லீக் ஜமாத்தின் பொறுப்பற்றதனத்தையும், அவர்களால் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஏற்பட இருக்கும் ஆபத்தையும் கண்டிப்பதை விட்டுவிட்டு, மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று அறிக்கை விடுகிறார்களே, அவர்களது பொறுப்பற்றதனத்தை என்னவென்று சொல்ல?

 

https://www.dinamani.com/editorial/2020/apr/04/unforgivable-crime-3394253.html

 

Link to comment
Share on other sites

கொரோனா தொற்று உருவான நாளில் இருந்து தினமலர் பல புனைவு செய்திகளையும் பித்தலாட்ட காணோளிகளையும் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளது. அறியாத அப்பாவிகளான ஈழத்தமிழரும் அந்த காணோளிகளை  சமூக வலைத்தளங்களில்  வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். 

 இறைவனின் கோபம் தான் கொரோனாவுக்கு காரணம்  என்று  இந்துகளிடையே பய பீதியைக்  கிளப்பிவிட்டிள்ள தினமலர் அதேவேளை  முஸ்லீம்கள்  கடவுளை தொழுததால்  தான் கொரோனா பரவுவதாக பிரச்சாரம்  செய்து வருகிறது . 

பாமர  மக்களுக்கு கடவுள் பீதியையும் மூட நம்பிக்கைகளையும் சகட்டு மேனிக்கு பரப்பிவரும் பாப்பனர்கள் தாம்  அவற்றை நம்புவதில்லை  என பது பாமர மக்களுக்கு தெரிவதில்லை.  

Link to comment
Share on other sites

On 2/4/2020 at 20:42, கிருபன் said:

தினமலர் யாருடைய பத்திரிகை என்று உடையாருக்கு தெரியாதா?

ஊயிர்மை யாருடையது கிருபன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, மலையான் said:

ஊயிர்மை யாருடையது கிருபன்?

உயிர்மை கவிஞர் மனுஷ்யபுத்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இலக்கிய இதழ். மாத இதழ்களில் பேராசிரியர் ராஜன் குறை போன்ற ஆளுமைகள் கட்டுரைகள் எழுதிவருகின்றார்கள்.

பார்ப்பனப் பத்திரிகைகளான தினமலர், துக்ளக் போன்று நடுநிலை தவறிய எழுத்துக்களை உயிர்மையில் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, கிருபன் said:

உயிர்மை கவிஞர் மனுஷ்யபுத்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இலக்கிய இதழ். மாத இதழ்களில் பேராசிரியர் ராஜன் குறை போன்ற ஆளுமைகள் கட்டுரைகள் எழுதிவருகின்றார்கள்.

பார்ப்பனப் பத்திரிகைகளான தினமலர், துக்ளக் போன்று நடுநிலை தவறிய எழுத்துக்களை உயிர்மையில் காணவில்லை.

கிருபன் பத்திரிகை யாருடைது என்று ஆரய்த்துதான் செய்திகள் இணைக்க வேண்டுமா? 

இப்பதான் சிலது விளங்குது போட்டு கொடுப்பது யாரென்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

கிருபன் பத்திரிகை யாருடைது என்று ஆரய்த்துதான் செய்திகள் இணைக்க வேண்டுமா? 

இப்பதான் சிலது விளங்குது போட்டு கொடுப்பது யாரென்று

Report button இருக்கும்போது அதையும் இடைக்கிடை பாவிக்கத்தானே வேண்டும்😄

யாழ் மட்டுக்கள்தான் ஆராய்ந்து இணைக்கவேணுமா இல்லையா என்று சொல்லலாம்!

நான் சில குறிப்பிட்ட தளங்களை மட்டும்தான் எனது favourite இல் வைத்திருக்கின்றேன். யாழில் செய்திகள் ஒட்டப்படாது வெறுமையாக இருக்கும்போது நான் படித்தவற்றில் சிலவற்றை ஒட்டுவேன். பலதை ஒட்டுவதேயில்லை! இந்தியத் தளங்களில் நான் அதிகம் இலக்கியம், சமூகம் சம்பந்தமான தளங்களைத்தான் படிப்பதுண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

Report button இருக்கும்போது அதையும் இடைக்கிடை பாவிக்கத்தானே வேண்டும்😄

யாழ் மட்டுக்கள்தான் ஆராய்ந்து இணைக்கவேணுமா இல்லையா என்று சொல்லலாம்!

நான் சில குறிப்பிட்ட தளங்களை மட்டும்தான் எனது favourite இல் வைத்திருக்கின்றேன். யாழில் செய்திகள் ஒட்டப்படாது வெறுமையாக இருக்கும்போது நான் படித்தவற்றில் சிலவற்றை ஒட்டுவேன். பலதை ஒட்டுவதேயில்லை! இந்தியத் தளங்களில் நான் அதிகம் இலக்கியம், சமூகம் சம்பந்தமான தளங்களைத்தான் படிப்பதுண்டு.

🤣🤣 அடுத்த முறை பாவிப்பம்

Link to comment
Share on other sites

 

1 hour ago, கிருபன் said:

உயிர்மை கவிஞர் மனுஷ்யபுத்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் இலக்கிய இதழ்

மற்ற பத்திரிகை ஆசிரியரிகளின் சாதி வரை தெரியுது,  ஆனால் உயிர்மை ஆசிரியரின் புனைப்பெயரை மட்டும்தான் சொல்ல வருகுது.......;-)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மலையான் said:

 

மற்ற பத்திரிகை ஆசிரியரிகளின் சாதி வரை தெரியுது,  ஆனால் உயிர்மை ஆசிரியரின் புனைப்பெயரை மட்டும்தான் சொல்ல வருகுது.......;-)

 

 

பார்ப்பனியம் என்பது சாதி இல்லை. சிந்தனைமுறை. 😄

பார்ப்பனர்கள் இல்லாதவர்களுக்கும் பார்ப்பனியச் சிந்தனை இருக்கும். அது ஈழத்தமிழரில் சிலரிடம் இருக்கு.

சமூக முன்னேற்றத்திற்கு எதிரானவற்றை பரப்பும் ஊடகங்களை நான் பொதுவாகப் படிப்பதில்லை. அதனை சாதி பார்ப்பதாக நீங்கள் நினைப்பது தவறு

Link to comment
Share on other sites

இப்பவும் மானுஷபுத்திரனின் பெயரை சொல்ல முடியல்ல பாருக்க.....

போலி நடுநிலைவாதிகள், செக்குலர்வாதிகளின் அமைப்பு அப்படி......😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, மலையான் said:

இப்பவும் மானுஷபுத்திரனின் பெயரை சொல்ல முடியல்ல பாருக்க.....

போலி நடுநிலைவாதிகள், செக்குலர்வாதிகளின் அமைப்பு அப்படி......😉

மனுஷ்யபுத்திரனின் சொந்தப் பெயரை அறிந்து அவரின் சாதி என்னவென்று தெரிந்துதான் நடுநிலைமை என்றால் என்னவென்று அறியவேண்டும் என்பது, இங்கு யாழில் என்ன கருத்து வருகின்றது என்பதைப் பாராமல் யார் வைக்கின்றார்கள் என்பதும் ஒன்றுதான்.

நீங்கள் தொடர்ந்து கேட்பதால் (அதனால் உங்களுக்கு முன்னே தெரிந்திருக்கும் என்று ஊகிக்கிறேன்) தேடிப்பார்த்தேன். இப்போது சொல்வீர்கள் அவர் முஸ்லிம் என்பதால் முண்டுகொடுக்கின்றார் என்று. 

 

மனுஷ்ய புத்திரன் (பிறப்பு:மார்ச் 15, 1968) என்ற பெயரில் எழுதிவரும் எஸ். அப்துல் ஹமீது திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தார். எண்பதுகளின் ஆரம்பத்தில் எழுதத் துவங்கிய இவர் கடந்த 20 ஆண்டுகளாக பத்திரிகை ஆசிரியர், தமிழின் மிக முக்கிய கவிஞர் , இலக்கியவாதி என பல்வேறு இலக்கியப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது சென்னையில் வசிக்கும் இவர் உயிர்மை பதிப்பகம், உயிர்மை இதழ் போன்றவற்றை நடத்தி வருகிறார்.

Link to comment
Share on other sites

5 minutes ago, கிருபன் said:

நீங்கள் தொடர்ந்து கேட்பதால் (அதனால் உங்களுக்கு முன்னே தெரிந்திருக்கும் என்று ஊகிக்கிறேன்) தேடிப்பார்த்தேன்.

இனி உயிர்மை வாசிக்கும் போது உங்களுக்கு வேறு "சிந்தனை முறை" தெரிந்தாலும் தெரியல்லாம்........😀😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மலையான் said:

இனி உயிர்மை வாசிக்கும் போது உங்களுக்கு வேறு "சிந்தனை முறை" தெரிந்தாலும் தெரியல்லாம்........😀😀

அந்தளவுக்கு எனது வாசிப்புத்திறன் தாழ்ந்துபோகாது😜

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

அந்தளவுக்கு எனது வாசிப்புத்திறன் தாழ்ந்துபோகாது

பார்ப்பனிய சிந்தனைகளை இலகுவாக கண்டுகொள்ள முடியும் உங்களால், மற்றய சிந்தனை முறைகளை கண்டுகொள்ள முடியேல்லயே. ...?😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, மலையான் said:

பார்ப்பனிய சிந்தனைகளை இலகுவாக கண்டுகொள்ள முடியும் உங்களால், மற்றய சிந்தனை முறைகளை கண்டுகொள்ள முடியேல்லயே. ...?😀

மற்றைய சிந்தனை முறைகளை நான் கண்டுகொள்ள முடியவில்லை என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு  உங்களுக்கு அறிவார்ந்த சிந்தனை இருப்பது பெருமையாக இருக்கின்றது நண்பரே! யாழில் உங்களுடன் உரையாடக் கிடைத்ததும் பெரும் பாக்கியம்தான்😃 டொட்.

Link to comment
Share on other sites

2 hours ago, கிருபன் said:

யாழில் உங்களுடன் உரையாடக் கிடைத்ததும் பெரும் பாக்கியம்தான்😃

நன்றி😀😀

உங்களின் நடுநிலமையை குழப்ப வேண்டாம்.

👋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கரோனாவின் ஊடாகப் பரவும் வெறுப்பை எப்படி எதிர்கொள்வது?

கரோனா ஒவ்வொரு நாட்டிலும் குடிமக்களிடையே இருக்கும் பிளவுகளை வலுப்படுத்துகிறது. இனமத வெறுப்புகளைப் பீறிடவைக்கிறது. வெவ்வேறு நாடுகளில் மக்கள் தமது நம்பிக்கைகளை முன்னிறுத்திக் குழுமிட மதம் முக்கியக் காரணியாக உள்ளது. கரோனா பரவிட இது உகந்த சூழலாகிறது. இக்காலத்தில், மனிதர்கள் சரீர விலகலைப் பேணாமல் அறிவியலை மறுத்து ஓரிடத்தில் குழும மதம் மட்டுமே காரணமில்லை எனினும் முக்கியக் காரணம் மதம். எல்லா மதங்களிலும் பெரும்பான்மையினர் அறிவியலைப் புறந்தள்ளுபவர்கள் அல்ல எனினும் புறந்தள்ளுவோருக்கு மத நம்பிக்கைகளே முக்கியத் தூண்டுகோலாக உள்ளன.

இந்தியாவில் வெளிப்படையாகவும் நுட்பமாகவும் முஸ்லிம்களை இலக்காக்க கரோனா பயன்படுகிறது. டெல்லி நிஜாமுதீன் கூடுகை கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை கரோனா பரவுவதற்கான அதீதச் சம்பவமாக உருப்பெற்றிருக்கிறது. இதில் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்தான் எனினும் ‘கரோனா ஜிகாத்’ போன்ற விஷத்தொடர்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன. இத்தனையும் நடந்த பின்னர் மசூதியில் கூடித் தொழுவோம் என அடம்பிடிக்கும் முஸ்லிம்களில் சிறுபான்மையினர் தமது சமூகத்துக்கும் துரோகம் செய்கின்றனர்.

யாரும் விதிவிலக்கல்ல

கரோனா ஒழிப்புக்காகச் செயல்படும் சுகாதார ஊழியர்களை முழு மனதோடு வரவேற்று ஒத்துழைப்பு வழங்காமல் தடையாக நிற்பவர்கள் தமது சமூகத்தையும் ஒட்டுமொத்த சமூகத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்குகின்றனர். இக்காலகட்டத்தில் மக்கள் குழுமுவதைத் தடுக்கும் அரசின் சட்டத்துக்கு எந்த மதமும் கட்சியும் குழுவும் விதிவிலக்கு வேண்டாமல் முழுவதுமாகக் கடைப்பிடிப்பதே சரி. தனிப்பட்ட நம்பிக்கைகளை, சாதி மதச் சடங்குகளை, பொதுநலத்துக்கு ஆபத்தாக இல்லாத அளவில் மட்டுமே பேண முடியும்.

சட்டத்தையும் எச்சரிக்கைகளையும் மலேசிய முன்னனுபவத்தையும் புறக்கணித்து தப்லிஹி ஜமாத்தின் தலைமை கண்மூடித்தனமாக நடந்துகொண்டதால் ஒரு மதத்தினர் அனைவரையும் சந்தேகக் கண்களோடு பார்க்கும் நிலைமை உருவாகியுள்ளது. எந்த ஒன்றிலும் தூய்மைவாதத்தை நோக்கிய பயணமானது மூடநம்பிக்கைகளுக்கும் அடிப்படைவாதத்துக்கும் இட்டுச்செல்லும் என்பதற்கு இந்த ஜமாத் இன்னொரு உதாரணம்.

கரோனாவின் தாக்கம் சீனாவிலிருந்து தொடங்கியதால் சீனர்கள் மீது சந்தேகத்தையும் இன வெறுப்பையும் பலரும் வெளிப்படுத்தக் காரணமாக அமைந்தது. பல முஸ்லிம் நாடுகளில் பெரும்பான்மையினர் வெறுக்கும் ஷியா முஸ்லிம்களுக்கு எதிரான அணுகுமுறை கரோனா வழி வெளிப்படுகிறது. சீன வைரஸ், ஷியா வைரஸ், ஜிகாதி வைரஸ் ஆகியன இதற்குச் சூட்டப்பட்டுள்ள வெறுப்புப் பெயர்களில் சில. பிற நாடுகளில் நடப்பவை நம் நாட்டினரின் இழிசெயல்பாடுகளை இயல்பானதாக்கிவிடாது. இவை மனிதரின் பொதுவான சிறுமை குணம் என்பதை உணர்ந்து அதில் இணையாமல் உயர் பண்புகளோடு செயல்படும் விழிப்புணர்வு நம் அனைவருக்கும் ஏற்பட வேண்டும்.

அமெரிக்கா இழைத்திருக்கும் அநீதி

இப்படி நடக்கும் பற்பல சிறுமைகளுக்கு கிரீடமாக இருப்பது அமெரிக்காவில் ட்ரம்ப்பும் அவரை ஆதரிக்கும் இன வெறுப்பையும் மத வெறுப்பையும் உமிழும் தீவிர வலதுசாரி அரசியல் குழுக்களும் கிறிஸ்துவ அடிப்படைவாதக் குழுக்களும். அமெரிக்க அதிபர் கரோனா விஷயத்தில் அந்நாட்டுக்கு இழைத்திருக்கும் அநீதி அளவிட முடியாதது. ஆனால், இக்காலத்திலும் ஒரு விஷயத்தில் சிறப்பாகச் செயல்படுகிறார். இனவாதியான அவர் இன வெறுப்பைப் பரப்ப இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடவில்லை. கிருமிக்கு ‘சீனரின் வைரஸ்’ என்று பெயரிட்டு சீன இனத்தவர்கள் அனைவரையும் குற்றவாளிகள் ஆக்கியிருக்கிறார். இது ஏற்கெனவே கனன்றுகொண்டிருந்த சீன இன வெறுப்பில் பெட்ரோல் ஊற்றியதுபோல பற்றி எரிகிறது.

இப்பிரச்சினையில் சீன அரசின் அணுகுமுறை விமர்சனத்துக்கு உரியதுதான். ஆனால், இதற்கு சீன இனத்தவரை எப்படிப் பழிக்க முடியும்? சீன நாட்டு மக்கள் வழி பிற நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியிருந்தாலும் அது அறியாமல் நேர்ந்ததுதான். சீன இனத்தாரில் ஒரு பகுதியினர்தான் சீனாவில் வாழ்கிறார்கள். பல கோடி மக்கள் உலகின் பற்பல நாடுகளில் அந்தந்த தேச அடையாளங்களை ஏற்று வாழ்கின்றனர். இவர்கள் அனைவரும் பெரும் பிரச்சார வலுவுள்ள அமெரிக்க அதிபர், அவருடைய வானரப் படையின் தாக்குதலில் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு இனவாத அரசியல் மட்டும் காரணம் அல்ல. அமெரிக்காவின் உலக ஆதிக்கத்துக்குச் சவாலாக உருவாகிவரும் ஆசிய நாடொன்றின் வளர்ச்சி பற்றிய அச்சமும், அவர்கள் செல்வாக்கை மட்டுப்படுத்த கரோனாவைப் பயன்படுத்தும் குயுக்தியும்கூட இதில் உண்டு.

வெறுப்பரசியலை எதிர்கொள்ளும் வழி

இந்த இனவாத முன்னெடுப்பால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட அன்ட்ரூ யாங் எனும் சீன இன அமெரிக்கர்; இவர்கள் ஆசிய அமெரிக்கர் என அழைக்கப்படுகின்றனர். இவர் ட்ரம்ப் படையின் இனவாதப் பிரச்சாரத்துக்குப் பின்னர் அமெரிக்காவில் வாழும் சீன வம்சாவளியினர் பிற அமெரிக்கர்களின் சந்தேகத்துக்கும் வெறுப்புக்கும் எப்படி ஆளாகியுள்ளனர் என்பதைப் பற்றி எழுதியுள்ளார். அதிலும் முக்கியமாக, இதை எதிர்கொள்வது எப்படி என்பதையும் பகிர்ந்துகொண்டுள்ளார். அவருடைய பார்வையின்படி இத்தகைய வெறுப்பரசியலுக்குப் பதிலடி கொடுப்பதில் பயனில்லை. சீன இன அமெரிக்கர்கள் கரோனா ஒழிப்பில் முன்னின்று பணியாற்றிதான் இந்த வெறுப்பை முறிக்க வேண்டும் என்கிறார். இந்தியாவுக்கும் இது பொருந்தும்.

வெறுப்பு அரசியலைத் திருப்பி அடிப்பதன் வழி எதிர்கொள்வதைக் காட்டிலும் இது பயனுள்ளது. நிதானமான சொற்களின் வழியும் செயல்பாடுகளின் வழியும் வெறுப்பரசியலை எதிர்கொள்வதே ஆக்கபூர்வமானது. எதிர்த்தரப்பில் மன மாற்றத்தை ஏற்படுத்துவது சாத்தியமே என்ற ‘மூடநம்பிக்கை’ நம் செயல்பாடுகளுக்கு அடித்தளமாக இருக்க வேண்டும். வேறு மார்க்கமில்லை. சக மனிதரில் நம்பிக்கை இழந்தால் முட்டி மோதி அழித்துக்கொள்வதைத் தவிர வேறு பாதை திறக்காது.

- கண்ணன், ‘காலச்சுவடு’ இதழின் ஆசிரியர்.

 

https://www.hindutamil.in/news/opinion/columns/548781-diversity-by-corona-1.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.