Jump to content

இறுதிக் கிரியையின் போது மத சம்பிரதாயங்களை பின்பற்றவில்லை என்பது பாரதூரத்தன்மையை அறியாமையின் வெளிப்பாடு - சுதந்திரக் கட்சி


Recommended Posts

நாட்டை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கொண்டு சிலர் அரசியல் செய்ய முற்படுவது கவலைக்குரிய விடயமாகும். வைரஸ் பரவலின் பாரதூரத்தன்மையை விளங்கிக் கொள்ளாமையின் காரணமாகவே இஸ்லாமிய மத சம்பிரதாயங்களை பின்பற்றி உயிரிழந்த கொரோனா வைரஸ் நோயாளி அடக்கம் செய்யப்பட வேண்டும் போன்ற கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன என்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த இஸ்லாமிய நபர் மத கோட்பாடுகளை மீறி தகனம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறித்த சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டை வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

இஸ்லாம் மதத்தில் கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள், கலாசாரங்கள் என்பவற்றுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். எனினும் தற்போது நாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மத ரீதியான வழிமுறைகளை விட மருத்துவத்துறையினரின் ஆலோசனைகளே பின்பற்றப்பட வேண்டும்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பதிவாகிய முதலாவது மரணம் ஒரு கத்தோலிக்க சகோதரருடையதாகும். அவருடைய சடலமும் இதே போன்று மருத்துவ ஆலோசனைகளின் பிரகாரமே தகனம் செய்யப்பட்டது. எனினும் கத்தோலிக்க மதத்தில் இறப்பு ஏற்பட்டால் சடலத்தை தேவாலயத்திற்கு எடுத்துச் சென்று பிரார்த்தனைகளின் பின்னரே அடக்கம் செய்யப்படும். அவ்வாறு எந்த சம்பிரதாய முறைமையும் அதில் பின்பற்றப்படவில்லை.

இதே போன்று பௌத்த மதம் அல்லது பிரிதொரு மதத்தை சார்ந்த மரணங்கள் பதிவானாலும் மருத்துவ ஆலோசனைகளே பின்பற்றப்படும். தகனம் செய்யப்படும் இடத்தில் இருப்பவர்கள் தமது பாதுகாப்பு ஆடைகளையும் எரிப்பதையும் செய்திகளில் காணக் கூடியதாக உள்ளது. எனவே நடைமுறையைப் புரிந்து அனைவரும் செயற்பட வேண்டும். இவற்றைக் கொண்டு அரசியல் இலாபம் தேட முற்படக் கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/79085

Link to comment
Share on other sites

கொரோனாவால் இறப்பவர்களின் இறுதிக் கிரியைகளில் மத கோட்பாடுகளைவிட மருத்துவ ஆலோசனையே அவசியம் - ஜே.வி.பி.

கொரோனா வைரஸ் பரவலானது தேசிய பிரச்சினையாகும். எனவே இதனை அரசியல் நோக்கமாகக் கொண்டு பயன்படுத்திக் கொள்வது அரசாங்கத்தின் ஒழுக்க விதிமுறைகளுக்கு இழுக்காகும் எனத் தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் மரண சடங்குகளில் மத கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்பதை விட மருத்துவ ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்பதே தற்போது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார்.

ஜே.வி.பி. தலைமை அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கொரோனா வைரஸ் பரவலினால் முழு உலகமும் அச்சுறுத்தலுக்கு முகங் கொடுத்துள்ளது. இதனை முற்றாக அழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

தற்போதுள்ள நிலைவரத்தின் படி ஏனைய நாடுகளை விடவும் இலங்கையில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவே எண்ணுகின்றோம். இது வரையில் இலங்கையில் புதன்கிழமை மாத்திரமே ஒரே தினத்தில் அதிகளவான நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர்.

எனினும் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இது மிகக் குறைந்தவொரு எண்ணிக்கையாகும். எனவே வைரஸானது முழு நாட்டிலும் தீவிரமாக பரவுமளவுக்கு பாரதூரத்தன்மையை அடையவில்லை. ஒரு பிரதேசங்களிலில் மாத்திரமே தொற்றுக்குள்ளானோர் இணங்காணப்பட்டுள்ளனர். எனவே இந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் ஒன்றிணைவதன் மூலம் இதனை முற்றாக ஒழிக்க முடியும் என்று நம்புகின்றோம்.

சுகாதாரத்துறை மற்றும் பாதுகாப்புதுறையினருடன் பொது மக்கள் கைகோர்க்க வேண்டும். ஆரம்ப கட்டத்திலேயே அரசாங்கத்தின் சில குறைபாடுகள் தீர்க்கப்பட்டிருந்தால் தற்போதைய நிலைமையைக் கூட கட்டுப்படுத்தியிருக்க முடியும். உதாரணமாக இலங்கையில் துறைமுகம் மற்றும் விமான நிலையம் என்பனவே வைரஸ் தொற்று பரவுவதற்கான பிரதான காரணிகளாகக் காணப்பட்டன. எனினும் ஆரம்பத்தில் விமான நிலையத்தை மூடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருந்தது. பின்னர் சுகாதாரத்துறையினரின் அழுத்தங்களுக்கமையவே விமான நிலையங்கள் மூடப்பட்டன.

விமான நிலையங்கள் மூடப்பட்ட பின்னர் வெளிநாடுகளிலிருந்து தாய் நாட்டுக்கு திரும்புபவர்கள் அனைவரும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்ட போதிலும் பெரும்பாலானவர்கள் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. எனவே தான் தற்போது பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்படுகிறது. இதனை ஆரம்பகட்டத்திலேயே அரசாங்கம் செயற்படுத்தியிருக்கலாம். இவ்வாறான சில பொறுப்பற்ற செயற்பாடுகளாலேயே தற்போது இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இதனைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை பிரதானமாகக் காணப்படுவதோடு சமூக இடைவெளியைப் பேணுவதும் அத்தியாவசியமாகிறது. இதற்கு ஊரடங்கு சட்டம் மிக அத்தியாவசியமானதாகக் காணப்படுகிறது. எனவே அதனைத் தொடர வேண்டியுள்ளது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வீட்டுக்குள்ளேயே இருப்பதாலும் பலர் அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுத்துள்ள ஒரு செயற்திட்டத்தால் பிரிதொரு விடயம் பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. அதாவது கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்படும் அதே வேலை நீண்டகால மருந்துகள் எடுக்கும் நோயாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இவ்விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

வைரஸ் கட்டுப்படுத்தலுக்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களால் பாதிக்கப்படும் ஏனைய விடயங்களுக்கான தீர்வு துரிதமாக முன்வைக்கப்பட வேண்டும். இதனை வெறும் சுற்று நிரூபத்திற்குள் மாத்திரம் உள்ளடக்கிவிடாது கீழ் மட்டத்திலிருந்து நேரடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டிய அனைவருக்கும் அவற்றை கிடைக்கச் செய்ய வேண்டும். இதற்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் திறனற்றவை என்றே கூற வேண்டும். ஊரடங்கு சட்டம் பல நாட்கள் அமுல்படுத்தப்படுகின்ற போதிலும் அது தற்காலிகமாக நீக்கப்படும் போது மக்கள் ஒன்று கூடுகின்றனர். இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதன் பயன் அற்றுப் போகின்றது. இதற்கான ஸ்திரமான தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும்.

மரண சடங்குகள்
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரரிழப்பவர்களின் மரண சடங்குகள் தொடர்பில் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. முழு உலகமும் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் மத கோட்பாடுகளின் படி செயற்பட வேண்டும் என்பதை விட மருத்துவ ஆலோசனைகளின் படி செயற்பட வேண்டும் என்பதே முக்கியமானதாகும்.

அரசியலாக்க வேண்டாம்
தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை தேசிய பிரச்சினையாகும். எனவே இது எவ்வித பேதமும் இன்றி அனைவரும் பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றுபட வேண்டிய தருணமாகும். இந்த சந்தர்ப்பத்தில் இதனை ஒரு அரசியல் குழு மாத்திரம் கையிலெடுத்துக் கொண்டு செயற்படுவது அரசாங்கத்தின் ஒழுக்க நெறிகளுக்கு இழுக்காகும். புசில் ராஜபக்ச என்பவர் அமைச்சரோ இ பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது ஒரு அரச அதிகாரியோ அல்ல. ஒரு அரசியல் கட்சியின் ஸ்தாபகராவார்.

ஆதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவின் கட்சியின் தேசிய அமைப்பாளராக செயற்பட்டுள்ளார். எனவே அவர் தலைமையில் ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை எந்த அடிப்படையில் என்று எமக்கு விளங்கவில்லை. இவ்வாறானதொரு நெருக்கடியாக சூழலை தேர்தலை நோக்காகக் கொண்டு பயன்படுத்திக் கொள்வது பெரும் தவறாகும்.

பாராளுமன்றத்தைக் கலைத்தல்
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் நோக்கம் பாராளுமன்றத்தை முடக்கி அனைத்து நடவடிக்கைகளையும் தானே முன்னெடுக்க வேண்டும் என்பதாகும். அவ்வாறில்லை என்றால் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னரே அவர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கலாம். பாராளுமன்றத்தைக் கலைக்காமல் அடுத்தகம்ம நடவடிக்கைகளுக்குச் சென்றிருக்கலாம். எவ்வாறிருப்பினும் இது ஒரு தேசிய பிரச்சினை என்பதால் தேசிய தீர்வு அவசியமாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/79072

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.