Sign in to follow this  
ampanai

சடலத்தை புதைப்பதற்கு அனுமதியிருந்தும் தகனம் செய்யப்பட்டமை கவலையளிக்கிறது - அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

Recommended Posts

(எம்.ஆர்.எம்.வஸீம்)

முஸ்லிம் சகோதரரின் சடலத்தை புதைப்பதற்கு அனுமதியிருந்தும் அதற்கு மாற்றமாக அந்த சடலத்தை தகனம் செய்யப்பட்டதானது மிகவும் கவலை அளிக்கும் செயலாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகம் அதிகாரிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த கொரோனா வைரஸினால் மரணித்த சகோதரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளை கையாளுதல் பற்றிய மருத்துவ நடைமுறை வழிகாட்டல்கள் அண்மையில் வெளியிடப்பட்டதை நாம் அறிவோம். இதில் இவ்வைரஸ் காரணமாக மரணித்தவர்களின் பிரேதங்கள் தகனம் செய்ய வேண்டுமென்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், ஏனைய சிவில் அமைப்புகள், வைத்தியர்கள் மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் என பலரும் இதுதொடர்பில் செயற்பட்டனர். இதன் விளைவாக குறித்த விடயம் ஜனாதிபதி மற்றும் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸினால் இறந்தவர்களின் பிரேதங்களை எரிக்கவும் புதைக்கவும் அனுமதித்துள்ளதை மேற்கோள் காட்டி, இலங்கைவாழ் முஸ்லிம்களின் சடலம் புதைக்கப்பட நடவடிக்கை எடுக்கும் படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் கடந்த 2020.03.24ஆம் திகதி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர்  மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கொரோனா தடுப்பு குழுவின் தலைவரும் ராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட்டோருக்கு கடிதங்கள் மூலம் வேண்டிக்கொண்டது.

இம்முயற்சிகளின் விளைவாக கொரோனா வைரஸினால் இறந்தவர்களின் பிரேதங்களை நிபந்தனைகளுடன் புதைக்கவும் முடியும் என்ற மருத்துவ நடைமுறை வழிகாட்டல் கடந்த 2020.03.27ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டது.

எனினும் மேற்குறிப்பிட்ட புதிய வழிகாட்டலின் அடிப்படையில் குறித்த முஸ்லிம் சகோதரரின் சடலத்தை புதைப்பதற்கு அனுமதியிருந்தும் அதற்கு மாற்றமாக அந்த சடலம் தகனம் செய்யப்பட்டதானது மிகவும் கவலை அளிக்கும் செயலாகும். இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகம் அதிகாரிகள் மீதுவைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும்.

அத்துடன் இவ்விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டல்கள் உரிய முறையில் ஒவ்வொரு வைத்தியசாலைக்கும் உரிய அதிகாரிகளுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என்பதை ஞாபகமூட்டுகின்றோம்.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் மற்றும் கொரோனா தடுப்பு குழுவின் தலைவர் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உள்ளடங்கிய ஒரு குழு நேற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது. அத்துடன் இவ்விடயம் மீண்டும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

எனவே எதிர்காலத்தில் எல்லா விடயங்களும் நல்ல முறையில் நடப்பதற்கு அனைத்து முஸ்லிம்களும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் கேட்டுக் கொள்கின்றது.

https://www.virakesari.lk/article/79056

Share this post


Link to post
Share on other sites
44 minutes ago, ampanai said:

இம்முயற்சிகளின் விளைவாக கொரோனா வைரஸினால் இறந்தவர்களின் பிரேதங்களை நிபந்தனைகளுடன் புதைக்கவும் முடியும் என்ற மருத்துவ நடைமுறை வழிகாட்டல் கடந்த 2020.03.27ஆம் திகதி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டது

தவறான முடிவை எடுத்தது அமைச்சு. 

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

இந்த லூஸு கூட்டம்  சொல்வழி கேக்காதுகள் அவர்களின்கொர்னோ வைரஸால் மடிந்த  உடம்பை எரித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்று கொரனோ  தொத்து  பரவியவர்கள் தங்களின் சொந்தகார வீடுகளுக்குள் ஒளித்து விளையாடுதுகள் .

Edited by பெருமாள்

Share this post


Link to post
Share on other sites

உந்த சபைகள் மதவாத கூப்பாடுகள் போடுறதை விட்டுட்டு வெளிநாடுகளுக்கு ஆன்மீக (வியாபார/குருவி) பயணம் போய் திரும்பிவந்து புத்தளத்துல இருந்து மன்னாருக்கும் மன்னாரில இருந்து கிளிநொச்சி/யாழ்ப்பாண கிராமங்களுக்கும் தப்பியோடிய முசுலீம் ஆட்களை பிடிச்சு குடுக்கவேண்டியது தானே!

Share this post


Link to post
Share on other sites

இலங்கை நாட்டில் பல மதங்கள் இருந்தும், அதில் ஒரு மதம் மட்டும் முதன்மை மதமாக உள்ளதும், அதற்கு முதலிடம் தருவதும் கண்கூடு. 

அதனால், அந்த மத வாதிகள் சிறுபான்மை மதங்களை அழிக்க முனைப்பாக செயல்படுவதும் உண்டு.  

எனவே, பல சிறுபான்மை மதங்கள் பயந்து நிற்கும் நிலையில், இந்த ஒரு சிறுபான்மை மதம் மட்டும் தனது உரிமைகளுக்கு சட்டத்திற்கு அமைவாக நியாயம் கேட்பதில் தவறில்லை.  

  • Like 1
  • Confused 1

Share this post


Link to post
Share on other sites

சமூக சூழ்நிலைகளுக்கேற்ப  சார்ந்து வாழத்தெரியாத மதவாத அரசியல்வாதிகள்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

ஒவ்வொருவருக்கு ஒவ்வொருவிதமான கவலை.

இன்று சில வீடியோக்கள் பார்த்தேன். போலிசார் சைனாவில் கொரோனா நோய்த்தொற்று உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களை வீடுகளுக்கு சென்று பலாத்காரமாக கதறக்கதற தனிமைப்படுத்தல் மையங்களுக்கு இழுத்து செல்கின்றார்கள். நோய் பீடிக்காதவர்களும் நோயாளிகளுடன் சேர்க்கப்பட்டு சாகடிக்கப்படும் நிலமை. 

நோயினால் பீடிக்கப்பட்டு நிலமை மோசமாகி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பவர்கள் உயிருடனேயே பிளாஸ்ரிக் பையில் கட்டப்பட்டு தகனம் செய்யப்படுவதற்கு அனுப்பப்படுகின்றார்கள். 

இடவசதி இல்லாதபடியால் நியூயோர்க்கில் பிரேதங்களை சரக்குகளை காவும் reefer trailerல் (குளிரூட்டப்பட்ட 53அடி நீளமான கொள்கலன்) எரிப்பதற்காக சேமிக்கின்றார்கள்.

இலங்கையில் இதுவரை இப்படி ஒரு நிலமை இல்லை என்பதை நினைத்து நிம்மதி அடையுங்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பெரியோரே.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
11 hours ago, குமாரசாமி said:

சமூக சூழ்நிலைகளுக்கேற்ப  சார்ந்து வாழத்தெரியாத மதவாத அரசியல்வாதிகள்.

அவர் ஒருவர் மட்டும் தானா இல்லை ஒட்டு மொத்த சமுகம் மதவாதிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள் அந்த அரசியல் வாதிகளால் 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

 

நோயினால் பீடிக்கப்பட்டு நிலமை மோசமாகி உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பவர்கள் உயிருடனேயே பிளாஸ்ரிக் பையில் கட்டப்பட்டு தகனம் செய்யப்படுவதற்கு அனுப்பப்படுகின்றார்கள். 

உதென்ன நியாயம்?

எங்கப்பா நடக்குது? 

8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அவர் ஒருவர் மட்டும் தானா இல்லை ஒட்டு மொத்த சமுகம் மதவாதிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள் அந்த அரசியல் வாதிகளால் 

முனிவர், எப்படி?

கனகாலத்துக்கு பிறகு? ஒரு ஹலோ சொல்லக் கூடாதோ?
 

Share this post


Link to post
Share on other sites

கொரானா என்றால் என்னவென்று வெளாங்குதா ..தம்பி...அந்தச் சடங்கு மாதிரி இது இல்ல...

Share this post


Link to post
Share on other sites

ரணில் ஆட்சி இப்ப இருந்தால் ..இந்த பூவுடலை..கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் புதைத்துவிட்டு...அதில் தொழுகையும் நடத்தி இருப்பார்கள்..

Share this post


Link to post
Share on other sites
41 minutes ago, alvayan said:

கொரானா என்றால் என்னவென்று வெளாங்குதா ..தம்பி...அந்தச் சடங்கு மாதிரி இது இல்ல...

அல்வாயன்...  எந்தச்  சடங்கை... சொல்கிறார் ❓ :grin:

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, தமிழ் சிறி said:

அல்வாயன்...  எந்தச்  சடங்கை... சொல்கிறார் ❓ :grin:

லவுட்ஸ்பீக்கர் கட்டி,பெண்கள் ஊளையிட்டு ....வெட்டும் சடங்கைத்தான்..

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, Nathamuni said:

உதென்ன நியாயம்?

எங்கப்பா நடக்குது? 

சீன அரசாங்கம் பல தகவல்களை மூடி மறைத்து உள்ளது. அது வெளிவிடும் புள்ளிவிபரங்கள் முழுமையாக நம்புவதற்கு இல்லை. இப்போது ஏறத்தாள அனைவர் கைகளிலும் சிமார்ட்போன் உள்ளதால் விடயங்களை மூடிமறைப்பது கடினம். சீனாவில் நடைபெற்ற சம்பவங்கள் படம் பிடிக்கப்பட்டு பல வீடியோக்கள் கசியவிடப்பட்டுள்ளன.

நிலமை கட்டுக்கு அடங்காமல் சென்றால் மனிதன் படிப்படியாக காட்டு விலங்குகளின் குணங்களை வெளிப்படுத்துவான். சீனாவில் மட்டும் அல்ல எங்கும் என்னவும் நடக்கலாம் நிலமை கைமீறி செல்லும்போது.

ஒருவர் இறந்தால்  அறிக்கைவிட்டு தர்க்கம் செய்யலாம் உடலை புதைக்கவேண்டும் எரிக்கவேண்டும் எப்படி கையாளவேண்டும் என்று. ஒன்று ஆயிரமாக பத்தாயிரமாக மாறும்போது உடலங்களை அப்புறப்படுத்துவதே போதும் போதும் என்றாகிவிடும். இத்தாலி நிலமை இலங்கைக்கு வராது என்பதற்கு எதுவித உத்தரவாதமும் இல்லை.

Share this post


Link to post
Share on other sites

சில நாடுகளில் புதைக்கிறார்கள் ...ஆனால் புதைப்பதற்கு நிறைய போமாலிட்டிஸ் இருக்கு ... ...கிருமிகள் பரவாமல் புதைப்பதற்கு நிறைய செலவாகும்... எரிப்பதே இலங்கை போன்ற நாடுகளில் இலகுவான வழி 

Share this post


Link to post
Share on other sites
12 minutes ago, ரதி said:

சில நாடுகளில் புதைக்கிறார்கள் ...ஆனால் புதைப்பதற்கு நிறைய போமாலிட்டிஸ் இருக்கு ... ...கிருமிகள் பரவாமல் புதைப்பதற்கு நிறைய செலவாகும்... எரிப்பதே இலங்கை போன்ற நாடுகளில் இலகுவான வழி 

இப்ப வெள்ளைக்காரர்களும் எரிப்பதையே விரும்புகின்றார்கள்.அதுவும் இப்போது ஜேர்மனியில் எரிப்பது அதிகமாகிவிட்டது.எரிப்பதை சடங்காக கொண்ட எம்மவர்களுக்கே சில வேளைகளில் 2கிழமைக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளதாம்.

முஸ்லீம் மதத்தில் இருப்பவர் பலர் ஏற்கனவே முட்டையில் மயிர் புடுங்குபவர்கள்.அதுவும் இப்படியான பிரச்சனைகள் வந்தால் சொல்லவா வேண்டும்?எத்தனையோ நல்ல முஸ்லீம் இனத்தவரை சந்தித்திருக்கின்றேன். காலில் பூ போட்டு கும்பிட வேணும் போலிருக்கும்.

Share this post


Link to post
Share on other sites

புத்த மத்திலும் புதைக்கவேண்டும் என இருந்திருந்தால், அந்த மததீவிரவாதிகளும் அதை வைத்து பிழைப்பை நடாத்தும் அரசியல்வாதிகளும் நிச்சயம் மவுனமாக இருந்திருக்க மாட்டார்கள்.  

Share this post


Link to post
Share on other sites
On 4/2/2020 at 6:45 AM, Nathamuni said:

முனிவர், எப்படி?

கனகாலத்துக்கு பிறகு? ஒரு ஹலோ சொல்லக் கூடாதோ?
 

ஹலோ , ஹாய் , வணக்கம் நலம் நீங்கள் எப்படி ?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஹலோ , ஹாய் , வணக்கம் நலம் நீங்கள் எப்படி ?

சிறப்பு. 
கவனம் எடுக்கவும்.

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

கொரோனாவினால் ம‌ர‌ணித்த‌வ‌ரை அட‌க்குவ‌தா எரிப்ப‌தா என்று சரியான தீர்வெடுக்காமல் வாதம் செய்து கொண்டிருந்தால், அடுத்த‌ உட‌லை த‌க‌ன‌ம் செய்வ‌த‌ற்கு கூட‌ ஆள் இன்றி முழு நாட்டு ம‌க்க‌ளும் இற‌க்க‌ வேண்டிய‌ நிலைதான் வ‌ரும்.

IMG_0219.JPG

 

கொரோனா வைர‌ஸைக்க‌ண்டு அச்ச‌ப்ப‌ட்டுக்கொண்டு அத‌ற்கு ம‌ருந்தை தேடி த‌வித்துக்கொண்டிருக்கும் ம‌னித‌ர்க‌ள்
இப்போது கொரோனாவினால் ம‌ர‌ணித்த‌வ‌ரை அட‌க்குவ‌தா எரிப்ப‌தா என்ற‌ பிரச்சினைக்கு ம‌ருந்து தேட‌ வேண்டியுள்ள‌து.

ஒரு ம‌னித‌ன் ம‌ர‌ணித்தால் அவ‌ன் உட‌லை எரிப்ப‌தா அட‌க்குவ‌தா என்ப‌து ம‌னித‌ன் உல‌கில் கால‌டி வைத்த‌ கால‌ம் முத‌ல் இருந்து வ‌ந்த‌ வ‌ழி முறைக‌ளாகும்.

முத‌ல் ம‌னித‌ன் ஆத‌மின் ச‌கோத‌ர‌ர்க‌ள் ச‌ண்டையிட்டுக்கொண்டு ஒருவ‌ரை ம‌ற்ற‌வ‌ரை கொலை செய்த‌ போது இற‌ந்த‌ உட‌லை என்ன‌ செய்வ‌து அவ‌ன் த‌வித்த‌து முத‌ல் இப்பிர‌ச்சினை ஆர‌ம்பிக்கிற‌து.

இற‌ந்த‌ த‌ன‌து ச‌கோத‌ர‌ன் உட‌லை என்ன‌ செய்வ‌து என்று தெரியாத‌ ம‌னித‌னுக்கு காக‌ம் த‌ன‌து இற‌ந்த‌ இன்னொரு காக‌த்தை ம‌ண்ணில் புதைப்ப‌தை க‌ண்ட‌ ஆற‌றிவுள்ள‌ ம‌னித‌ன் அதே போல் ம‌னித‌னின் ச‌ட‌ல‌த்தை அட‌க்கம் செய்தான்.


பின்ன‌ர் ம‌னித‌ வ‌ர்க்க‌ம் ப‌ல்கிப்பெருகிய‌ போது இற‌ந்த‌வ‌னை எரிப்ப‌து, அட‌க்குவ‌து, க‌ட‌லில் க‌ட்டி விடுவ‌து போன்ற‌ ந‌டைமுறைக‌ளை ம‌னித‌ க‌லாசார‌ங்க‌ள் க‌டைப்பிடித்த‌ன‌.

இற‌ந்த‌ ச‌ட‌ல‌த்தை எரிப்ப‌து மோச‌மான‌ சூழ‌ல் தாக்க‌த்தை ஏற்ப‌டுத்தும் என்ற‌ க‌ருத்துக்க‌ளும் உண்டு.

இஸ்லாத்தை பொறுத்த‌ வ‌ரை முத‌ல் ம‌னித‌ன் ஆத‌ம் முத‌ல் இற‌ந்த‌ ச‌ட‌ல‌த்தை  ம‌ண்ணுள் புதைக்கும் ந‌டைமுறையையே க‌டைப்பிடித்து வ‌ருகிற‌து. இற‌ந்த‌ உட‌லை எரிப்ப‌தற்கு இஸ்லாத்தில் வ‌ழி காட்ட‌ப்ப‌ட‌வில்லை.

 கார‌ண‌ம் எறும்பைக்கூட‌ நெருப்பால் சுட்டு கொல்ல‌ வேண்டாம் என‌ இஸ்லாம் க‌ட்ட‌ளையிடுவ‌தாலும்  உயிருட‌ன் உள்ள‌ ம‌னித‌னுக்கு கொடுக்கும் ம‌ரியாதையை இற‌ந்த‌ ம‌னித‌னின் உட‌லுக்கும் கொடுக்க‌ வேண்டுமென‌வும் இஸ்லாம் சொல்கிற‌து.

இத‌ன் கார‌ணமாக‌த்தான் யூத‌னின் இற‌ந்த‌ உட‌ல் கொண்டு செல்ல‌ப்ப‌ட்ட‌ போது ம‌தீனா ஆட்சியாள‌ர் முஹ‌ம்ம‌து ந‌பி (ச‌ல்) எழுந்து நின்று ம‌ரியாதை செய்த‌ன‌ர். இவ‌ன் யூத‌ன் அல்ல‌வா என‌ சொன்ன‌ போது அவ‌னும் ம‌னித‌ன் என்றார்க‌ள். இந்த‌ ச‌ம்ப‌வ‌ம் ஆயிர‌த்தி நானூறு வ‌ருட‌ங்க‌ளாக‌ முஸ்லிம்க‌ளின் வ‌ர‌லாற்று நூல்க‌ளில் உள்ள‌து.

இஸ்லாமிய‌ ச‌ட்ட‌ங்க‌ள் பெரும்பாலும் பொதுவான‌வை, விசேச‌மான‌வை என‌ இருவ‌கைப்ப‌டும். ம‌னித‌ உட‌லை சிதைக்க‌ கூடாது என்ப‌து பொது ச‌ட்ட‌ம். ஆனாலும் சீனி நோயால் அல்ல‌து விப‌த்தால் அவ‌திப்ப‌டும் கை, கால்க‌ளை அக‌ற்ற‌த்தான் வேண்டும் என‌ வைத்திய‌ர் சொன்னால் அத‌ற்கும் இஸ்லாம் அனும‌திக்கிற‌து.

எந்த‌ உயிரையும் நெருப்பால் சுட‌ வேண்டாம் என்ப‌து பொது ச‌ட்ட‌ம். ஆனாலும் எதிரி துப்பாக்கியால், குண்டுக‌ளால் சுட்டால் நாமும் எதிரியை துப்பாக்கியால் சுட‌லாம் என்ற‌ அனும‌தி உண்டு. துப்பாக்கி, குண்டு என்ப‌வை எரியூட்டி கொல்வ‌தாகும். துப்பாக்கியால் சுடுவ‌தை அத‌னை க‌ண்டு பிடித்த‌ ஐரோப்பிய‌ர் அதை இய‌க்குவ‌தை Fair சுடு என்றே சொல்கின்ற‌ன‌ர்.

ஆனாலும் கொரோனா வைர‌ஸ் கார‌ண‌மாக‌ இற‌ந்த‌ ம‌னித‌னின் உட‌லை வைர‌ஸ் ப‌ர‌வாம‌ல் இருக்க‌ எரிப்ப‌தா அட‌க்குவ‌தா என்ப‌தை பார்க்கும் போது இர‌ண்டும் செய்ய‌லாம் என‌ உல‌க‌ சுகாதார‌ ஸ்தாப‌ன‌ம் சொல்கிற‌து.
எரிப்ப‌தால் கிருமி ப‌ர‌வுவ‌தை த‌டுக்க‌ முடியுமா அட‌க்குவ‌தால் த‌டுக்க‌ முடியுமா?

இத‌ற்கு ம‌ருத்துவ‌ர்க‌ளிடையே ஒத்த‌ க‌ருத்தை காண‌ முடிய‌வில்லை. எரிப்ப‌தால் அதிக‌ வெப்ப‌ம் கார‌ண‌மாக‌  கிருமி ப‌ர‌வுவ‌தை த‌டுக்க‌லாம் என‌ ஒரு சாராரும் கொரோனா கிருமி அதி ச‌க்தி வாய்ந்த‌து என்ப‌து புகை ஊடாக‌ காற்றில் ப‌ர‌வு ம‌னித‌ர்க‌ளுள் புக‌லாம் என்றும் சொல்லப்ப‌டுகிற‌து.


புதைப்ப‌தால் அதுவும் பெட்டியில் உட‌ல் வைக்க‌ப்ப‌ட்டு ஆழ‌மாக‌ புதைக்க‌ப்ப‌ட்டால் வைர‌ஸ் சூழ‌லை பாதிக்காது என்போரும் உண்டு. உட‌லிலிருந்து வெளியாகும் வைர‌ஸ் நீரில் க‌ல‌க்க‌லாம் என்றும் சொல்ல‌ப்ப‌டுகிற‌து. ஆனாலும் உட‌லில் உள்ள‌ கொரோனா மூன்று நாட்க‌ளுக்கே வாழும் என்ப‌தால் பெட்டிக்குள் வைத்து ஆழ‌த்தில் புதைக்க‌ப்ப‌ட்ட‌ உட‌லின் ச‌வ‌ப்பெட்டி இற‌ப்ப‌த‌ற்கு ப‌ல‌ வார‌ங்க‌ள் எடுக்கும் என்ப‌தால் கிருமி நீரில் க‌ல‌க்கும் சாத்திய‌ம் இல்லை என‌வும் சொல்ல‌ப்ப‌டுகிற‌து.

இந்த‌ நிலையில் இவ‌ற்றில் எத‌ன் மூல‌ம் வைர‌சை க‌ட்டுப்ப‌டுத்த‌லாம் என்ப‌தை இத்தாலியில் அட‌க்க‌ப்ப‌ட்ட‌, எரிக்க‌ப்ப‌ட்ட‌ சூழ‌லின் முடிவை வைத்தே சொல்ல‌ முடியும். ஆனாலும் இன்று வ‌ரையான‌ த‌க‌வ‌லின் ப‌டி எரித்தாலும் புதைத்தாலும் வைர‌ஸ் வெளியே ப‌ர‌வ‌வில்லை என்றே தெரிகிற‌து.

ந‌ம‌து நாட்டை பொறுத்த‌வ‌ரை இய‌ந்திர‌த்தின் மூல‌ம் உட‌லை எரிக்கும் சாத‌ன‌ம் எல்லா இட‌ங்க‌ளிலும் இல்லை. கொழும்பு, க‌ண்டி போன்ற‌ சில‌ இட‌ங்க‌ளில் ம‌ட்டுமே உண்டு. இந்நிலையில் எரிக்க‌த்தான் வேண்டும் என்றால் ஒரு மாவ‌ட்ட‌த்தில் இற‌ந்த‌ உட‌லை இன்னொரு மாவ‌ட்ட‌த்துக்கு கொண்டு செல்ல‌ வேண்டும். இது மேலும் வைர‌ஸ் ப‌ர‌வ‌ கார‌ண‌மாகும். விற‌கால் எரிக்க‌ முணைந்தால் அது கொரோனா வைர‌சை ச‌ந்தோச‌மாக‌ சூழ‌லுக்கு ப‌ர‌வ‌ச்செய்வ‌தாகும். விற‌கால் ஓரிரு நிமிட‌த்தில் உட‌லை த‌க‌ன‌ம் செய்ய‌ முடியாது.

ஆக‌வே இவ‌ற்றுக்கு என்ன‌ தீர்வு.

ஒரேயொரு தீர்வுதான் உண்டு. இற‌ந்த‌வ‌ரின் உட‌லை என்ன‌ செய்ய‌ வேண்டும் என்ப‌தை தீர்மானிக்கும் உரிமையை அந்த‌ இற‌ந்த‌வ‌ரின் உற‌வின‌ருக்கு அர‌சாங்க‌ம் வ‌ழ‌ங்க‌ வேண்டும். தக‌ப்ப‌னுக்கு ம‌க‌ன், க‌ண‌வ‌னுக்கு ம‌னைவி போன்ற‌ நெருக்க‌மான‌ உற‌வுக்கு இந்த‌ உரிமையை வ‌ழ‌ங்கினால் இத‌னை பிர‌ச்சினை இல்லாம‌ல் முடிக்க‌லாம். அவ்வாறின்றி இத‌னை வாத‌ விவாத‌மாக்கினால் இத‌ற்குத்தான் தீர்வு தேடுவ‌தில் நேர‌ கால‌ம் செல்லுமே த‌விர‌ கொரோனாவுக்கு தீர்வு கிடைக்காம‌ல் போய் இற‌ந்த‌ அடுத்த‌ உட‌லை த‌க‌ன‌ம் செய்வ‌த‌ற்கு  கூட‌ ஆள் இன்றி முழு நாட்டு ம‌க்க‌ளும் இற‌க்க‌ வேண்டிய‌ நிலைதான் வ‌ரும்.

இது விட‌ய‌த்தில் நிர்வாக‌த்திற‌மையும், சாதுர்ய‌மும், திட்ட‌மிட்டு காரிய‌மாற்றும் ஆற்ற‌லும் கொண்ட‌ ஜ‌னாதிப‌தி அவ‌ர்க‌ள் மேலே சொன்ன‌ தீர்வை அறிவிக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
- முபாற‌க் அப்துல் ம‌ஜீத‌

https://www.madawalaenews.com/2020/04/blog-post_33.html

 

Share this post


Link to post
Share on other sites
On 4/1/2020 at 5:47 PM, ampanai said:

முஸ்லிம் சகோதரரின் சடலத்தை புதைப்பதற்கு அனுமதியிருந்தும் அதற்கு மாற்றமாக அந்த சடலத்தை தகனம் செய்யப்பட்டதானது மிகவும் கவலை அளிக்கும் செயலாகும்.

இவ்வாறான செயற்பாடுகள் முஸ்லிம் சமூகம் அதிகாரிகள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.

சிங்கள-பௌத்த கொலைகாரக் கும்பல்களுடன் சேர்ந்து கொலைவெறிக் கூத்தாடிய முஸ்லிம் சந்தர்பவாதக் கும்பல் இப்போது ஒப்பாரி வைப்பது வேடிக்கையாக உள்ளது. இதற்கே இப்படி என்றால்? இன்னமும் நிறைய அனுபவிக்க இருக்கிறது.

  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this