Sign in to follow this  
உடையார்

இங்கிலாந்தில் ஒரே நாளில் 500 பேர் கொரோனாவால் பலி

Recommended Posts

லண்டன்: இங்கிலாந்து நாட்டில் ஒரே நாளில் 500 பேர் வரையில்பலியாகி உள்ளனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
 


 

latest tamil news


 


இது குறித்து இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத்துறை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: கடந்த மார்ச் 31 வரையில் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 2,352 பேர் பலியாகி உள்ளனர். தற்போது வரையில் 29,474 பேர் தங்களை பரிசோதித்துள்ளனர். இது கடந்த முந்தைய நாளைவிட 4, 324 பேர் அதிகமாகும்.நாட்டில் முதன் முறையாக ஒரேநாளில் பலியானோர் எண்ணிக்கை 563ஆக ஆனது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
 


latest tamil news


 



முன்னதாக கொரோனா வைரஸ் அரச குடும்பத்தையும் தாக்கிய. தாக்குதலுக்கு உள்ளான இளவரசர் சாரலஸ் இது குறித்துவீடியோவில் கூறி இருப்பதாவது: இந்த வைரஸ் தாக்குதல் எப்போது முடிவடையும் என்று யாராலும் கூற முடியாது. ஆனாலும் அது முடிவடையும். அது வரையில் நாம் அனைவரும் நம்பிக்கையுடன் வாழ்வோம். ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் வரவிருக்கும் சிறந்த நேரங்களை எதிர்நோக்குவோம் என கூறி உள்ளார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2513387

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • அப்பத்துக்கு கொஞ்ச கள்ளு போதும். நிறைய வாங்கி யாரோவொரு குடிமகனின் வயிற்றிலடிக்க விருப்பமில்லை.😀 நன்றி 
    • கடவுளே.. சிங்களவனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். முதலில் இவங்களட்ட இருந்து எங்களைக் காப்பாற்று. -PKR- தேர்தல் காய்ச்சல் முத்தி சுமந்திரனை விட புத்திசாலி இந்த இனத்திலேயே இல்லை/ அவருக்கு மூன்று மொழி தெரியும் என்று எல்லாம் பீத்தத் தொடங்கியிட்டாங்கள். கடவுளே.. சிங்களவனை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். முதலில் இவங்களட்ட இருந்து எங்களைக் காப்பாற்று. இன்று உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் நிரம்பி வழிகிறது தமிழீழ அறிவுசார் சமூகம். வேறு துறைகளை விடுவோம். அரசியலுக்கு,விடுதலைக்கு, நீதி நோக்கிய பயணத்திற்குத் தேவையான Political Science/ international Relations/ international criminal law/ National security/ Peace and War conflicts/ International human rights போன்ற துறைகளில் ஒன்றுக்கு இரண்டாக கலாநிதி(PhD) பட்டங்களை வைத்திருப்பவர்களே எக்கசக்கமாக வந்து விட்டது. இந்தக் கற்கைகளுக்காக புதிய தலைமுறை இன்னும் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் தலைவரால் தூரநோக்குடன் வெளியே அனுப்பப்பட்ட போராளிகளும் அடக்கம். மூன்று மொழியென்ன, ஐந்தாறு ஐரோப்பிய மொழிகளை சரளமாகக் கையாளக்கூடியவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வந்து நாட்டில இறங்கினால் சிங்களவனே துண்டைக்காணோம்/ துணியைக் காணோம் என்று ஓடியிடுவான். நிலைமை இப்படியிருக்க ஒரு அப்புக்காத்துக்கு இவ்வளவு பில்டப்பா? போங்கடா போய் புள்ள குட்டிகளை படிக்க வைக்கிற வேலையைப் பாருங்கள். ‘போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் இலட்சியம் மாறாது’ என்பதற்கமைய ஒரு நாள் பிரபாகரனின் இந்தப் பிள்ளைகள் வருவார்கள். அதுவரை துரோகிகளுக்கு செம்படிக்காமல் காத்திருங்கள். WWW.VELICHAVEEDU.COM
    • தோட்டத்து செடிகள் Part 1 & 2 போய்க்கிட்டிருக்கு ; இன்னும் யாழில் காணவில்லை 🤔. கள்ள வேலையலும் செய்திருக்கின்றீர்கள், பிடிபட்டால் எங்கட மானம் போயிருக்கும் ,😂  
    • Tholar Balan 17 மணி நேரம்  ·    •அடிப்பதுதான் வன்முறை திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. தற்காப்பு. தமிழ் போராளிகள் ஆயுதம் ஏந்திப் போராடியது வன்முறை என்றும் அதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று சுமந்திரன் அடிக்கடி சொல்லிக் கொண்டு திரிகிறார். தயவு செய்து யாராவது அவரிடம் கூறுங்கள், அடிப்பதுதான் வன்முறை. திருப்பி அடிப்பது வன்முறை அல்ல. அது தற்காப்பு என்று. அதனால்தான் டெலோ தலைவர் தஙகத்துரை அவர்கள் நீதிமன்றத்தில் “நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர்” என்று கூறினார். அதுமட்டுமல்ல, ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்காவே “ பிரபாகரன்கள் ஆயுதம் ஏந்த இலங்கை அரசு செய்த தவறுகளே காரணம்” என்று கூறினார். ஆனால், முஸ்லிம்கள் தம்மை தற்காத்துக்கொள்ள ஆயுதம் ஏந்தியது நியாயம் என்று கூறும் சுமந்திரன் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தியது வன்முறை என்றும் அதனை தன்னால் எற்றுக்கொள்ள முடியாது என்கிறார். அதுமட்டுமல்ல இப்போது ஆயுதம் ஏந்துவதாக இருந்தால் வாள் வெட்டுக் கோஸ்டியுடன்தான் சேரவேண்டும் என்று கிண்டல் செய்கிறார். ஆயுதம் ஏந்தியவர்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் இருந்துகொண்டு அதன் மூலம் பதவியும் பெற்றுக்கொண்டு நன்றி மறந்து ஆயுதப் போராட்டத்தை நக்கல் அடிக்க சுமந்திரன் ஒருவரால்தான் முடியும். 1983 கலவரத்தில் தானும் கப்பலில் அகதியாக வந்து யாழ்ப்பாணம் இறங்கியவன் என்கிறார். அப்படியென்றால் 5 வயது முதல் கொழும்பில் வாழ்ந்தது தனது பாக்கியம் என்று எப்படி இவரால் கூற முடிகிறது? லூசுப் பயல்!