Jump to content
  • 2

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?


குமாரசாமி

Question

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

நாங்கள் எல்லோரும் இலங்கையில் இருக்கும் போது பல அனுபவங்களை சந்தித்திருப்போம். தற்போது நாம் வெவ்வேறு  நாடுகளில் வேவ்வேறு காலநிலைகளில் வாழ்ந்தாலும்  ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு நொடியில் பழைய நினைவலைகள் மின்னலாய் பளிச்சிட்டு செல்லும். 

உதாரணத்திற்கு முகம் தெரியாத ஒருவரை வீதியில் சந்தித்தால் கூட ஊரில் இருப்பவரை ஞாபகப்படுத்தும்.கடையில் ஒரு பொருளை பார்த்தால் பழைய ஞாபகங்கள் ஏதாவது தட்டுப்படும்.திருமண விழாக்களுக்கு போனால் சகோதர சகோதரிகளின் திருமண நினைவுகளும் வந்து போகலாம். ஏன் மரணச்சடங்குகளுக்கு சென்றாலும் பல நினைவுகள் குத்தி குதறியெடுக்கும்.

அதேபோல் எமக்கு ஊரில் இருக்கும் போது வானொலி இன்றியமையாதது.காலை எழுந்தவுடன் சமய நற்சிந்தனைகளுடன் ஆரம்பித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்  பொங்கும் பூம்புனல் என்று இரவின் மடியில் வரைக்கும் ஒரே பாட்டு அமர்க்களமாக இருக்கும். பல வீடுகளில் வானொலி இல்லாவிட்டாலும் பக்கத்து வீட்டு வானொலி தொடக்கம் தேநீர் கடை வானொலி வரைக்கும் காதில் கணீர் என ஒலிக்கும்.

ஒரே பாடல் மயமான அந்தக்காலத்தில் பாடசாலை, வேலைக்கு செல்பவர்கள் என எல்லோர் மனதிலும் அநேகமான பாடல்கள் இடம் பிடித்துவிடும்.காதல் வசப்படல்,கடித பரிமாற்றம்,காதலியின் அண்ணரிடம் அடி வாங்குதல்,வேலை இடத்தில் பிரச்சனைப்படுதல், ஸ்கூல்பஸ்சில் நெரிபட்டு.......இது போல் பல.இப்படியான சம்பவங்களில் வானொலியில் ஏதாவது ஒரு பாடல் ஒலிக்கும். அப்போது அந்தப்பாடல் மனதில் நீங்கா இடம் பிடித்து விடும்.அந்த பாடலை நாம் எங்கு எந்த வயதில் காலங்கள் கடந்து கேட்டாலும் அந்த சம்பவங்கள் மீண்டும் நினைவலையாக மனதில் வீசும்.அது கவலைகளாகவும் இருக்கும் சந்தோசம் நிறைந்தவையாகவும் இருக்கும் ஏன் கிளுகிளுப்புகளாகவும் இருக்கும்.

எனது பல நினைவலைகளை பாடலுடன் பகிரவிருக்கின்றேன். நீங்களும் உங்களுக்கு விருப்பமிருந்தால் சேர்ந்து கொள்ளுங்கள்.

****************************************************************************************************************************************************************************************************

எனக்கு இந்த பாட்டை கேட்டவுடனை ஊரிலை எனக்கு தெரிஞ்ச ஆக்கள் கோயில் கிணத்தடியிலை கல கலவெண்டு சிரிச்சு கும்மாளமடிச்சு குளிச்ச ஞாபகமெல்லாம் வரும்.😍

இந்த பாடலின் மிச்ச ஞாபங்கள் நாளை......😁

 

Link to comment
Share on other sites

  • Answers 101
  • Created
  • Last Reply

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

aayiram.png

விடலை பருவத்தில், எனக்கு வயதில் மூத்த மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது வீதியிலும், பள்ளி மைதானத்திலும் சக மாணவிகளை சீண்டி வழிவதை பார்த்திருக்கிறேன்.  அரசல் புரசலாக புரிந்தாலும், 'ஏன் இப்படி..?' என மனதில் அப்பொழுது தெளிவிருக்காது.

விவரம் புரியாத வயது... ஹார்மோன்களின் வேலையால் மனம் தடுமாறும்பொழுது பள்ளியில் ஆண்டுவிழா நிகழ்ச்சி வந்தது.

அதில் இந்த பாடலுக்கு மேடையேறி நடித்தவர்கள் மொக்கையாக நடித்தாலும், இந்த பாடலின் வரிகள் என் மனதில், அந்த பால்ய வயதில் ஆழமாக பதிந்து ஒருவழியில் நெறிப்படுத்தியது என்றால் மிகையாகாது.

அன்று என்னுடன் பள்ளியில் படித்தவர்கள், இன்று தாத்தாவும், பாட்டிகளாவும் எங்கோ வாழ்வர்..ஆனால் இந்த பாடலைக் கேட்கும்போது மனம் இன்னும் அந்த விடலை பருவ நிகழ்வுகளால் சில நேரம் அலைக்கழிக்கப்படும்.. புன்முறுவலும் தோன்றும்.

இன்றளவும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Eppothum Thamizhan said:

ஏன் நீங்கள் பாடலை கேட்கவில்லையோ ??

எந்தப்பாடல் இதுவா? 😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் விக்னா ரியூட்டரிலை படிக்கிறதுக்கு வசுவிலைதான் போய் வாறனான். அப்ப போற வழியிலை ஒரு கிளி வசுவிலை ஏறி வருவா. கிளி விக்னாவிலை தான் ரியூசன் எடுக்கிறவ....ஆனால் அவ என்ரை கிளாஸ் இல்லை....

இப்பிடியே காலம் போய்க்கொண்டிருக்கேக்கை கிளி என்னை பார்த்து புன்னைகைக்கிறதும் பதிலுக்கு நானும் அப்பிடியே பல்லு தெரியாமல் புன்னகையை பூக்க விடுறதுமாய் வசு ஓடிக்கொண்டேயிருக்கும். ஒரு நாள் வசுவிலை இட வசதியில்லாதாலை கிளி எனக்கு பக்கத்திலை இருக்க வேண்டி வந்திட்டுது.

அதுக்கு பிறகு கலோ சொல்ல வெளிக்கிட்டு...கதைக்க வெளிக்கிட்டு....ஊர் விசாரிச்சு...அப்பிடியே அவரை தெரியுமோ இவரை தெரியுமோ எண்டு கதையள் பெரிசாகி கடைசியிலை  ஒரு நாள் காணாட்டில் கண்ணுக்கு பாக்கிறதெல்லாம் பாலைவனம் மாதிரி தெரிய வெளிக்கிட்டுது.

இப்பிடியே மாதங்கள் ஓடிக்கொண்டிருக்கேக்கை படிப்பும் முடிவுக்கு வந்து வந்திட்டுது. அதுக்கு பிறகு எப்ப சந்திப்பம் எண்டு நான் கேட்க அடுத்த கிழமை சுபாஸ் கூல்பாரிலை சந்திப்பம் அதுவும் ரியூசனுக்கு வாற மாதிரியே வந்து சந்திப்பம் எண்டு முடிவெடுத்தம்.😄

அதே மாதிரி அடுத்த கிழமையும் வந்தது. அதே வசு அதே நேரம் ஆனால் நாங்கள் போற இடம் விக்னா இல்லை சுபாஸ் கூல்பார்.... சரி உள்ளுக்கு போட்டம் என்ன ஓடர் பண்ணுவம் எண்டால் நான் கோலா எண்டன்.. கிளி ஐஸ் ஓடர் பண்ணப்போறன் எண்டா.அப்ப நானும் ஐஸ்தான் எண்டு பல்லை காட்டிக்கொண்டு ஓடர் பண்ணினம்..கன கதையள் கதைச்சுக்கொண்டே ஐஸ்சை காலி பண்ணீட்டம் நிறைய கதைக்க வேணும் போல இருந்துது. நேரமும் இருந்தது.படத்துக்கு போவமோ எண்டன்.மறு வார்த்தையே இல்லாமல் ஓம் போவம் எண்டு பதில் வர பக்கத்து தியேட்டருக்கை மட்டு மட்டு நேரத்துக்கை ஓடிப் போய் ஒளிஞ்சு கொண்டோம்.சிறு நிமிடங்களிலேயே படம் ஓடத்தொடங்கியதால் அடிக்கடி முகத்தை பார்த்துக்கொண்டோமே தவிர பேச சந்தர்ப்பமே வரவில்லை. சுபாஸ் கூல்பாரிலையே இருந்திருக்கலாம் போல் இருந்தது.ஆனால் இரண்டு பேரின்ரை கை விரல்களும் அடிக்கடி சுகம் விசாரித்து கொண்டே இருந்தது.படமும் ஓரிரு இடத்தில் கொஞ்சம் கிளுகிளுப்பாக இருந்ததாலை எங்களுக்கும்....😍
படமும் ஒருவாறு முடிந்தது.நேரமும் பிந்தி விட்டது.

வீட்டில் தேடுவினம் எண்ட பயம் இருவருக்கும் வர இருவரும் பிரிந்தே சென்று ஒரே வசுவில் ஏறினம். கனக்க கதைக்கேல்லை. இனி எப்ப சந்திப்பம் எண்டு நான் கேட்க......ஒரு மாதம் கழித்து ஒரு திகதி குறிச்சம்.

ஆனால் அந்த திகதிக்கு அந்த கிளி வரவேயில்லை.குறிப்பிட்ட ஊருக்கு போய் பார்த்தேன்.வீட்டை கண்டு பிடிக்க முடியவில்லை.விசாரிக்க பயமாக இருந்தது. அப்படியே என்ரை நிலைமையும் தலைகிழாகிட்டுது.....கிளி எங்கிருந்தாலும் வாழ்க.

மனதுக்கு கவலையாக இருந்தாலும் வாழ்க்கை எனும் பாதையில் இதுவும் ஒரு சம்பவம் என கடந்து போகின்றேன்.அந்த படத்தில் எந்த பாடலைக்கேட்டாலும் இன்னொரு வாழ்க்கை வாழ்ந்த  உணர்சிகள் வரும்.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

mark.jpg

70 களில் கல்லூரியில் படிக்கும்பொழுது "ஸ்டெப் கட்" என தலை அலங்காரம் மிகப் பிரபலம்.. நானும் அப்பொழுது காதை பாதி மூடும்படி ஸ்டெப் கட் வைத்திருந்தேன். (இப்பொழுது பின்பக்கம் லேசா வழுக்கை விழுந்துவிட்டது என்பது எனக்கு கவலையான விசயம்..! vil-triste2.gif )

சலூனுக்கு சென்று இருக்கையில் உட்கார்ந்து முதன்முதலாக "ஸ்டெப் கட் வெட்டிவிடுங்கள்.." என சொல்லும்போது உள்ளே இந்தப்பாடல் மெல்லிதாக ஒலித்தது..!

அந்த நிகழ்ச்சி, வாழ்க்கையில் சிறு துளியாக இருக்கலாம், ஆனால் இன்னமும் மறக்க முடியாத வண்ண நினைவுகளில் ஒன்று.. vil-rainbow.gif

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

எந்தப்பாடல் இதுவா? 😁

 

 நான் சொன்னது  'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது ' பாடலை !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

 நான் சொன்னது  'உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது ' பாடலை !!!

அந்த பாடல் என் கண்ணுக்கு தெரியவே இல்லை......அல்லது எனக்கு மட்டும் தான் தெரியவில்லையா? 🙃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

 

இந்த இரண்டு பேரும் ஏதோ பிளானோடைதான் வந்திருக்கினம் போலை......
ஒராள் பாலச்சந்தர் எண்டுது மற்றாள் சீர்காழி எண்டுது.....😎

இது ஒரு சாரின் குணாஅம்சங்கள் 
திரிக்கு திரி வன்மம் வளர்ப்பது ..... வாதம் செய்ய வக்கு இல்லையென்றால் 
இப்படித்தான் எங்காவது சொறிந்து தமக்கு தாமே இன்பம் காண்பது.

அவர் எனது பதிவை அவமதித்து இருக்கிறாராம் 
நாங்கள் அப்படியே சோகத்தில் சோர்ந்துபோகணுமாம்.
ஆக கடவது 

(அது பாலசந்தரின் டைரக்ஷனில் வெளியான முதல் ஹிந்தி படம் கமல் ரதி மாதவி மூவரும்  இந்த படத்தில்தான் முதன் முதலில் ஹிந்தியில் அறிமுகம். ரதிக்கு நஷனல் விருது கிடைத்த படம். இந்த பாடலை பாடியது லதா மங்சகேஸ்கார் இதே பாடல் ஸ் பி யின் குரலிலும் உண்டு. படத்தில் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாது பக்கத்து பக்கத்துக்கு அறையில் இருந்து கோட்டல் ஒன்றில் கமல் பாடும் சோக பாடல். இந்த பாடல் இருவருக்கும் காதல் இப்போதான் தொடங்குகிறது) 

Link to comment
Share on other sites

On 2/4/2020 at 11:48, குமாரசாமி said:

உங்களுக்கு எந்த பாடலை கேட்டவுடன்  ஒரு குறிப்பிட்ட நினைவு வருகின்றது?

அருமையான திரி அண்ணை. இன்று தான் நான் கவனித்தேன். 

இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்கு 80களின் நிறைவுப்பகுதிகளிலும், 90களிலும் நம்மூரில் நிகழ்ந்த திருமணக் கொண்டாட்டங்கள் நினைவுக்கு வருகின்றன. அன்றிருந்த அளவு குதூகலம் இன்றைய கொண்டாட்டங்களில் இருக்கிறதா என்பது ஐயமே.

பாடல்வரிகள் தாமாகவே அந்த இனிய உணர்வுகளைப் பேசுவதால் விரிவாக எழுதவேண்டிய அவசியமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2020 at 6:11 AM, தமிழ் சிறி said:

ராஜ வன்னியன்....
அண்ணையின்.. பின் பக்கம், பச்சை மிளகாய்....  செருகி விடவா? :grin:

ஏங்க இந்த மாதிரி..? பெரியவர், விட்டுவிடலாம்.. sgentil.gif

திரியை கொழுத்திப்போட்டுவிட்டு ஆள் ஓய்வெடுக்கப் போய்விட்டார்..fati1.gif

உடல்நிலை சரியில்லையோ, என்னவோ..!  dubitatif.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அந்த பாடல் என் கண்ணுக்கு தெரியவே இல்லை......அல்லது எனக்கு மட்டும் தான் தெரியவில்லையா? 🙃

 

என்னுடைய கண்ணுக்கும் தெரியவில்லை....மேலும் மருதரின் இணைப்பில் சத்யம் சிவம் சுந்தரம் வீடியோ இருக்கு ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை.....உங்களுக்கும் அப்படியா.....!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

என்னுடைய கண்ணுக்கும் தெரியவில்லை....மேலும் மருதரின் இணைப்பில் சத்யம் சிவம் சுந்தரம் வீடியோ இருக்கு ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை.....உங்களுக்கும் அப்படியா.....!  🤔

 

இப்போ அருமையான சிட்சுவேசன் சாங்..! 😎

 

..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் படித்து முடித்து வேலையில் சேர்ந்தபொழுது, தமிழகத்தில் உணர்வுபூர்வமாக ஈழத் தமிழர்களின் வரலாற்றையும், அவர்களின் துயரத்தையும் அறியத் தூண்டி, அதிக ஈர்ப்பை ஏற்படுத்திய பாடல்.

விருப்பமான பாடல்களில், இதுவும் ஒன்று..!

Link to comment
Share on other sites

 ஒவ்வொரு தடவையும் இந்த பாடலை கேட்கும் போது எனது அக்காவும் அத்தானும் என்னை முதன் முதலாக யாழில் இருக்கும் ஒரு திரையரங்குகிற்கு கூட்டிப்போன ஞாபகம் வரும். நாலோ ஐந்தோ வயதில் பார்த்திருந்தாலும் இன்னும் என் நினைவில் பசுமையாக நிறைந்திருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/3/2020 at 11:05 PM, குமாரசாமி said:

இலங்கை வானொலியிலும் நான்கு மத நற்சிந்தனைகளும்,நிகழ்சிகளும் சிறப்பாக நடைபெறும்.அதிலும் சைவ,கிறிஸ்தவ,இஸ்லாம் நிகழ்சிகள் இன்னும் சிறப்பாக நடைபெறும். 
அதில் தினசரி இரவு நேரத்தில் நடக்கும் இஸ்லாம் சமய நிகழ்ச்சியும் முக்கியமானது. அந்த நிகழ்சியில் நாகூர் ஹனிபாவின் பாடல்கள் இடம்பெறாத நாட்களே இல்லை எனலாம். 

இலங்கை  தமிழ் வர்த்தக ஒலிபரப்பில் காலையில் சமய நிகழ்சசியில் அடிக்கடி ஹனிபாவின் பாடலைக் கேட்கலாம். ‘ஈச்சை மரத்தின் இன்பச் சோலையிலே...’, ‘பாத்திமா வாழ்ந்த கதை உனக்குத் தெரியுமா’ என்ற பாடல்களும் அடிக்கடி ஒலிபரப்பப் பட்ட பாடல்கள் 

அவரின் குரலில் எனக்கும் மயக்கம் உண்டு. ‘

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு பள்ளிக் கால நினைவு ....ஏ எல் தரத்தில் இருக்கும் பொது கல்லூரி ஒன்று கூடல் . ஆண்களும் பெண்களுமான கூடடம் . சுவையான சிற்றுண்டிகளை  உண்டு முடித்த பின்  பார்சல்  பாசிங் ( Parcelpassing ) எனவும் விளையாட்டு . எனது முறை ..வருவதற்கு முன் அயலில் உள்ள மாணவனால் என் கையில் திணிக்க பட்டு விட்ட்து . பாடும் படியான  நிர்பந்தம் ..அப்போது அன்றாட  பொழுது  போக்கான வானொலியில்  அப்போது  பிரபலமான பாடல் .................. .நடுக்கமுடனும் வெட்கத்துடனும் பாடிய பாடல் ...... வான் நிலா நிலா அல்ல ...பல வருடங்களிக்கு ...பின் கனடாவில் எனது  பெளதீகவியல் ...மாஸ்டர்  , தூரத்து உறவினரை ,  சுகம் விசாரிக்க  சென்ற    போது ... அவரின்  தள்ளாடும் வயது..   என்னை அறிமுகம் செய்த போது  .. நிலா ..நிலாப் பா ட்டு படித்த  பிள்ளையா என   இது வரை நினைவில்  இருந்திருக்கிறது . 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாட்டை கேட்கும் போது ஊரில் சிறுவயதில் குடும்பத்துடன்,  ஊரார், நண்பர்களுடன் விதம் விதமாக சாப்பிட்ட நினைவுதான் வரும் .   இந்த பாட்டிற்கே இந்த படத்தை தமிழ் & மழையாளத்தில் பல தடவை பார்த்துவிட்டேன்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

இது ஒரு சாரின் குணாஅம்சங்கள் 
திரிக்கு திரி வன்மம் வளர்ப்பது ..... வாதம் செய்ய வக்கு இல்லையென்றால் 
இப்படித்தான் எங்காவது சொறிந்து தமக்கு தாமே இன்பம் காண்பது.

அவர் எனது பதிவை அவமதித்து இருக்கிறாராம் 
நாங்கள் அப்படியே சோகத்தில் சோர்ந்துபோகணுமாம்.
ஆக கடவது 

(அது பாலசந்தரின் டைரக்ஷனில் வெளியான முதல் ஹிந்தி படம் கமல் ரதி மாதவி மூவரும்  இந்த படத்தில்தான் முதன் முதலில் ஹிந்தியில் அறிமுகம். ரதிக்கு நஷனல் விருது கிடைத்த படம். இந்த பாடலை பாடியது லதா மங்சகேஸ்கார் இதே பாடல் ஸ் பி யின் குரலிலும் உண்டு. படத்தில் ஒருவரை ஒருவர் பார்க்க முடியாது பக்கத்து பக்கத்துக்கு அறையில் இருந்து கோட்டல் ஒன்றில் கமல் பாடும் சோக பாடல். இந்த பாடல் இருவருக்கும் காதல் இப்போதான் தொடங்குகிறது) 

அவரை நான் பிறகு பார்த்துக்கொள்கின்றேன்.

நீங்கள் இணைத்தது சலங்கை ஒலி திரைப்பட பாடல். அதன் டைரக்டர் வேறொருவர்.
நீங்கள் நினைத்தபாடல் இதுவெல்லோ 😁

 

13 minutes ago, suvy said:

என்னுடைய கண்ணுக்கும் தெரியவில்லை....மேலும் மருதரின் இணைப்பில் சத்யம் சிவம் சுந்தரம் வீடியோ இருக்கு ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை.....உங்களுக்கும் அப்படியா.....!  🤔

சத்தியம் சிவம் சுந்தரம் பாட்டு இந்த திரியிலை இருக்கா? எங்கை ஐயா????? 😲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பாடல் மிக அழகான வரிகள் கொண்ட அருமையான பாடல். ஆனால் நான் இதை ஒருநாளும் கேட்க விரும்புவதும் இல்லை.கேட்பதும் இல்லை...... 1960 ல் வந்த படம் புதியபாதை.ஜெமினி  சாவித்திரி நடித்தது.மிக மிக சோகமான படம்.பழைய வின்ட்சர் (பின்பு அது லிடோ)தியேட்டரில் வந்தது....!

எனது சின்னம்மாவுக்கு திருமணம் நடந்து முதன்முதலாக இந்தப் படத்துக்குத்தான் என்னையும் கூட்டிக்கொண்டு  போனார்கள்.சரியாக இந்தப்பாட்டும் படமும் போலவே அவருடைய வாழ்க்கை அழிந்து போய் விட்டது.அப்போது நான் சிறுவன் என்றாலும் என்னால் இந்தப் படத்தையும் பாட்டையும் மறக்கவே முடியவில்லை.நினைத்தாலே கண்கலங்கும்.பின் அவ திருமணமும் செய்யவில்லை.அம்மாம்மாவுடன் இருந்து என்னைத்தான் வளர்த்து வந்தா.சென்ற ஆண்டு சென்று பார்த்து விட்டு வந்தேன்......!

இந்தப் பக்கத்தைப் பார்த்ததும் ஏனோ உடனே இதுதான் நினைவுக்கு வந்தது.....!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அவரை நான் பிறகு பார்த்துக்கொள்கின்றேன்.

நீங்கள் இணைத்தது சலங்கை ஒலி திரைப்பட பாடல். அதன் டைரக்டர் வேறொருவர்.
நீங்கள் நினைத்தபாடல் இதுவெல்லோ 😁

 

இல்லை சலங்கைஒலி அது வேறு படம் அதில் ரதி இல்லை 
அது கமல் ஜெயப்பிரதா அது பாரத நாட்டியத்தை மையமாக கொண்ட காதல் கதை.

இது ஒரு தெலுங்கு ஹிட் ஆன பட சாயல் 
ஹிந்தியில் பாலசந்தர் கொஞ்சம் மாற்றி டைரக்ட் செய்திருந்தார் 

படத்தின் பெயர் Ek Duuje Ke Liye

இதுக்கு வேறு பெயர் இருந்து 
இந்த பெயரை பின்பு மாற்றியதாக எங்கோ வாசித்த நினைவு 
முந்திய பெயர் தெரியவில்லை 

நான் இணைத்தது இந்த பாடல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ இப்பொழுதும் மருதரின் இணைப்பில் சத்யம் சிவம் சுந்தரம் வீடியோ இருக்கு.....!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, suvy said:

என்னுடைய கண்ணுக்கும் தெரியவில்லை....மேலும் மருதரின் இணைப்பில் சத்யம் சிவம் சுந்தரம் வீடியோ இருக்கு ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை.....உங்களுக்கும் அப்படியா.....!  🤔

நான் இணைத்த பாடல் தெரியவில்லையா?
எனக்கு தெரிகிறதே .....அதுதான் குழப்பமா?
மீண்டும் இணைத்து இருக்கிறேன் பாருங்கள் தெரிகிறதா என்று 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

இல்லை சலங்கைஒலி அது வேறு படம் அதில் ரதி இல்லை 
அது கமல் ஜெயப்பிரதா அது பாரத நாட்டியத்தை மையமாக கொண்ட காதல் கதை.

இது ஒரு தெலுங்கு ஹிட் ஆன பட சாயல் 
ஹிந்தியில் பாலசந்தர் கொஞ்சம் மாற்றி டைரக்ட் செய்திருந்தார் 

படத்தின் பெயர் Ek Duuje Ke Liye

இதுக்கு வேறு பெயர் இருந்து 
இந்த பெயரை பின்பு மாற்றியதாக எங்கோ வாசித்த நினைவு 
முந்திய பெயர் தெரியவில்லை 

நான் இணைத்தது இந்த பாடல் 

இப்பொழுது உங்களின் இணைப்பை கோட் பண்ணியுள்ளேன் பாருங்கள்.....!

மறுத்தார் நான் கோட் பண்ணும்போது சத்யம் பாடல்.  அதில் பதிவாகும்போது chura liya hai  பாடல் இருக்கு.....!

இப்ப நான் இணைக்க வாசமில்லா மலரிது இருக்கு.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/4/2020 at 23:59, ராசவன்னியன் said:

 

?width=580&version=1566315

என்ன 'ரெகார்ட் ப்ளேயர்' திடீர்ன்னு தடக்கு பட்டு நின்னு போச்சி..? :shocked:

 

ராஜவன்னியன்,

ரெக்கார்ட் டான்ஸ் என்றால் என்ன? நான் யூரிபில் பார்த்த்போது அணும் பொண்ணும் பாடலுக்கு ஆடுகின்றார்கள்
ஆனால் இவை மிகவும் ஆபாசமாக/அசிங்கமாக  இருகின்ற‌தே.இவற்றை சுற்றி மக்கள் இருந்து பார்த்து இந்த ஆபாசத்தை கைத்தட்டி ரசிக்கினறார்கள்.   உண்மையில் தமிழ் நாட்டில் இப்படியெல்லாம் நடக்கின்றதா? இது அரசினால் அங்கிகரிக்கப்பட்டதா? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


இது ஒரு பொன்மாலை பொழுது என்று ஒரு பாடல் உண்டு. மறக்க முடியாத பாடல்
இலங்கையில் மாலை 5 மணிக்கு சிறுவனாக அந்தி சாயும் பொழுதில் கேட்பதில் என்ன் ஒரு ஆனந்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, suvy said:

இப்பொழுது உங்களின் இணைப்பை கோட் பண்ணியுள்ளேன் பாருங்கள்.....!

ஆம் நான் இணைத்து இந்த பாடல் இல்லை மாறி வருகிறது ... குறைந்த பட்ஷம் படம் என்றாலும் 
அதுவாக இருக்கிறது.

யூடுப் காரர்கள்தான் எதோ கோல்மால் செய்கிறார்களா?
உண்ணுமே புரியவில்லை ...

நீங்கள் இணைக்கும் சில பாடல்களும் இங்கு பார்க்க முடிவதில்லை 
இவங்கள் அமெரிக்க காரங்கள்தான் எதோ தில்லு முல்லு செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.