Jump to content

போதுமான ரொயிலற் ரிசுக்கள் எங்களிடம் இருக்கின்றன

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

3-B2-F89-A7-742-A-47-C2-832-F-9-A8-B04-D

நாட்டில் எங்காவது ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்து ஊரடங்குச் சட்டம் வரப் போகிறது என்று கதை அடிபட்டால் போதும். ஊரில் இருக்கும் சங்கக்கடைகள் பலசரக்குக் கடைகளில் மா,சீனி, மண்ணெண்ணெய் எல்லாம் காணாமல் போய்விடும். அப்படியான காலங்களில் பலசரக்குக் கடை உரிமையாளர்தான் ஊரில் கதாநாயகனாக இருப்பார். வந்த பிரச்சினைகள் நீங்கிய பின்னர் பார்த்தால் முதலாளிகள் என்னவோ செழிப்பாகத்தான் இருப்பார்கள். அந்த நிகழ்வுகள் எல்லாம் மறந்து நீண்ட காலங்களாகிப் போயிற்று. இப்பொழுது கொரோனா வந்து அவைகளை மீண்டும் மீட்டிப் பார்க்க வைக்கிறது.

கொரோனாத் தொற்றுநோயின் அலை வீசத் தொடங்க யேர்மனியிலும் மா, சீனி, அரிசி, நூடில்ஸ் என்பவையோடு ரொயிலற் ரிசுவும் கடைகளில் காணாமல் போகத் தொடங்கியது. இங்கே அவைகளைப் பதுக்கி வைப்பவர்கள் வியாபாரிகள் அல்ல மாறாக நுகர்வோரே அவைகளை அதிகமாக வாங்கி வீட்டில் வைப்பில் வைத்துக் கொள்கிறார்கள்.

பதுக்கி வைத்துப் பொருட்களை அதிக விலைக்கு விற்று இலாபம் பார்ககலாம் என்று சிலர் எண்ணக் கூடும் ஆனால் நிலைமையைப் பயன்படுத்தியும் இலாபம் பார்க்கலாம் என்றும் சிலர் செய்து காட்டுவார்கள்.

ரொயிலற் ரிசு வாங்குவதற்கு யேர்மனியில் சனங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது Dortmund நகரில் உள்ள Schuerener Backparadies பேக்கரி உரிமையாளர் Timo Kortuemக்கு ஒரு யோசனை தோன்றியது.

தனது பேக்கரியில் செய்யப்படும் கேக்குகளை ரொயிலற் ரிசு வடிவத்தில் உருவாக்கி கண்ணாடிப் பெட்டிக்குள் அடுக்கி வைத்தார். அந்தக் கேக்குகளைப் பார்த்த வாடிக்கையாளர்கள்இதென்ன பேக்கரிக்குள் ரொயிலற் ரிசு?” என்று வியந்து போனார்கள். அந்தளவுக்கு அவை அச்சு அசலாக ரொயிலற் ரிசு போலவே இருந்தன.

Timo Kortuem முதலில் மாதிரிக்கு எட்டு கேக்குகளைத்தான் செய்து பேக்கரியில் விற்பனைக்கு வைத்தார். அவை உடனடியாக விற்றுவிட இப்பொழுது நாளொன்றுக்கு எண்பது கேக்குகளைச் செய்கிறார். அத்தனையும் விற்றுவிடுகின்றன.

“ஒரு நாளில் எண்பது கேக்குகளை வடிவமைப்பதற்கே அதிக நேரம் எடுக்கிறது. எங்களிடம் மா, மற்றும் தேவையான பொருட்கள் போதியளவில் இருக்கின்றன. வாரத்தில் ஏழு நாட்களும் எங்கள் பேக்கரி மக்களுக்காகத் திறந்திருக்கும்என்று Timo Kortuem சிரித்தபடி தொலைக்காட்சியின் நேர்காணலில் சொல்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Kavi arunasalam said:

3-B2-F89-A7-742-A-47-C2-832-F-9-A8-B04-D

கொரோனாத் தொற்றுநோயின் அலை வீசத் தொடங்க யேர்மனியிலும் மா, சீனி, அரிசி, நூடில்ஸ் என்பவையோடு ரொயிலற் ரிசுவும் கடைகளில் காணாமல் போகத் தொடங்கியது. இங்கே அவைகளைப் பதுக்கி வைப்பவர்கள் வியாபாரிகள் அல்ல மாறாக நுகர்வோரே அவைகளை அதிகமாக வாங்கி வீட்டில் வைப்பில் வைத்துக் கொள்கிறார்கள்.

இப்ப.. அடுத்த ஆறு மாசத்துக்கெண்டு... வாங்கின,
ரொயிலட் பேப்பரை... கடையில் திருப்பி, கொடுக்கலாமா?  கவி அருணாசலம்.  :grin:  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இப்ப.. அடுத்த ஆறு மாசத்துக்கெண்டு... வாங்கின,
ரொயிலட் பேப்பரை... கடையில் திருப்பி, கொடுக்கலாமா?  கவி அருணாசலம்.  :grin:  🤣

தமிழ் சிறி அதிகம் அலையாதீர்கள். என் முகவரிக்கு பார்சலில் அனுப்பி விடுங்கள்

ரொயிலற் ரிசு கேக் செய்யும் செய்தி இதில் இருக்கிறது. கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் நம்மவர் ஒருவர் இருப்பது தெரியும்

https://youtu.be/fnUM2DvaKeY

Link to comment
Share on other sites

இந்த நெருக்கடியிலும்  கேக் வாங்கி உண்கிறார்களா ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

இப்ப.. அடுத்த ஆறு மாசத்துக்கெண்டு... வாங்கின,
ரொயிலட் பேப்பரை... கடையில் திருப்பி, கொடுக்கலாமா?  கவி அருணாசலம்.  :grin:  🤣

4 hours ago, Kavi arunasalam said:

தமிழ் சிறி அதிகம் அலையாதீர்கள். என் முகவரிக்கு பார்சலில் அனுப்பி விடுங்கள்

ரொயிலற் ரிசு கேக் செய்யும் செய்தி இதில் இருக்கிறது. கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் நம்மவர் ஒருவர் இருப்பது தெரியும்

https://youtu.be/fnUM2DvaKeY

அதை அவருக்கு அனுப்பி விட்டு இவர் செய்ததைப் பாவியுங்கள்.இவர்கள் வரிசையாய் வருவார்கள்......!  😂

Ants GIFs | Tenor

Link to comment
Share on other sites

4 hours ago, Kavi arunasalam said:

இந்த வீடியோவில் ஒரு தமிழ் ஆள் முழுசிக் கொண்டு நிற்கிரார். அது நீங்களோ 😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

இந்த வீடியோவில் ஒரு தமிழ் ஆள் முழுசிக் கொண்டு நிற்கிரார். அது நீங்களோ

இணையவன் அது நான் இல்லை. யேர்மனியில்  தென்மேற்குப் பகுதியிலேயே நான் வசிக்கிறேன். இந்த பேக்கரி (யேர்மனியில்) இருக்கும் பக்கம்  வடக்கு. அந்தப் பகுதியில்தான் குமாரசாமி, பரிமளம் வசிக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு அவரைத் தெரிந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

இணையவன் அது நான் இல்லை. யேர்மனியில்  தென்மேற்குப் பகுதியிலேயே நான் வசிக்கிறேன். இந்த பேக்கரி (யேர்மனியில்) இருக்கும் பக்கம்  வடக்கு. அந்தப் பகுதியில்தான் குமாரசாமி, பரிமளம் வசிக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு அவரைத் தெரிந்திருக்கலாம்.

வேறை ஆருமில்லை..அது நான் தான் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kavi arunasalam said:

ரொயிலற் ரிசு வாங்குவதற்கு யேர்மனியில் சனங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது Dortmund நகரில் உள்ள Schuerener Backparadies பேக்கரி உரிமையாளர் Timo Kortuemக்கு ஒரு யோசனை தோன்றியது.

ரொய்லற் ரிசுவில் ரீசேட்டிலிருந்து பலவகை வரும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.