Sign in to follow this  
கிருபன்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

Recommended Posts

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 முக்கிய வழிகள்Getty Images

உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் அதிகரிக்கிறது.

ஏராளமான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமலில் உள்ள நிலையில், பல நாடுகளிலும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தற்போது இந்த தொற்றின் கடும் பாதிப்பை, ஐரோப்பிய நாடுகள் பலவும் சந்தித்து வரும் நிலையில், லத்தீன் அமெரிக்கா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது. 

அதேவேளையில் இந்த வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை சில நாடுகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன.

மார்ச் 23 வரையிலான காலகட்டத்தில் ஏறத்தாழ 15,000 பேர் இறந்துள்ள நிலையில், உலக அளவில் 4 லட்சம் பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவுக்கு அருகே தங்கள் நாடு இருந்தபோதிலும், பல ஆசிய நாடுகள் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகின்றன.

இது குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்று நோய்கள் தொடர்பான ஆராய்ச்சி பிரிவைச் சேர்ந்த பேராசிரியர் டால்பர்ட் யென்ஸ்வா கூறுகையில், ''இந்த நாடுகளில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தீவிரமானவை. மற்றவர்கள் இதனை கற்றுக் கொள்ளவேண்டும்'' என்று தெரிவித்தார். 

''இந்த தொற்று ஆரம்பமான சீனாவை மட்டுமே நான் உதாரணமாகக் கூறவில்லை.மற்ற சில நாடுகளும் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்துள்ளன'' என்று அவர் மேலும் கூறினார். 

தைவான், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஹாங்காங் பிராந்தியத்தில் எடுக்கப்பட்ட தொற்று பரவல் நடவடிக்கைகள் மற்றும் அதன் விளைவுகள் உதாரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.

இந்த நாடுகள் கடைப்பிடித்த 5 முக்கிய தடுப்பு நடவடிக்கைகளை யென்ஸ்வா பட்டியலிட்டுள்ளார். 

கொரோனா வைரஸ்

1. பரிசோதனை, பரிசோதனை, மீண்டும் பரிசோதனை 

ஆரம்பத்திலேயே கண்டறிவது இந்த தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒரு முக்கிய காரணியாக விளங்கும் என்று உலக சுகாதார நிறுவனமும், பிபிசியிடம் பேசிய நிபுணர்களும் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர்.

''எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியாமல், இந்த வைரஸின் முழு தாக்கம் குறித்தோ, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தோ எந்த முடிவுக்கும் வர முடியாது'' என்று யென்ஸ்வா கூறினார்.

அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்று நோய்கள் ஆராய்ச்சி பிரிவு பேராசிரியரான ஜான்சன் கூறுகையில், ''தினமும் 10,000க்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் தென் கொரியா, இரண்டு நாட்களில் சில நாடுகள் ஒரு மாதத்தில் மேற்கொள்ளும் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் விஞ்சி விடுகிறது என்று குறிப்பிட்டார்.

இதேபோல் அதிக அளவில் பரிசோதனை செய்வதே கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஒரு முக்கிய வழி என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் பலமுறைகள் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

''அனைத்து நாடுகளுக்கும் ஒரு முக்கிய செய்தி, பரிசோதனை, பரிசோதனை, பரிசோதனை செய்யுங்கள் என்பதே'' என மார்ச் மாத தொடக்கத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

லேசான அறிகுறிகள் உள்ளவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை பலனைத் தரும் என அவர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் Presentational grey line

2. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தல் 

'கொரோனா தொற்று பாதிப்பு இருப்பவர்களைச் சரியாக இனம் காணுதல், , பரிசோதனைக்கு உட்படுத்துதல், மேலும் பரவாமல் கட்டுப்படுத்துவது எனப் பல அம்சங்களிலும் சீனா மற்றும் தென் கொரியா ஆகிய இரு நாடுகளும் சிறப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன'' என்று ஜான்சன் குறிப்பிட்டார். 

பரிசோதனை செய்வது பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தவும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் மட்டுமல்ல, புதிதாகப் பாதிக்கப்படுபவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும் பயன்படுகிறது.

கொரோனா வைரஸ்: சர்வதேச நிலை என்ன? மரணங்கள் எவ்வளவு? - எளிய விளக்கம்

சரியாக இனம்கண்டு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி, அதனால் அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு அளிப்பது என கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைச் சிறப்பாகவும், மிகுந்த எச்சரிக்கையுடனும் செயல்பட்டு வரும் சீனாவால் தங்கள் நாட்டில் பெருமளவு பாதிப்புகளைக் குறைக்க முடிந்ததாக ஜான்சன் தெரிவித்தார்.

அதேவேளையில் தைவான், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகியவை வேறு முறைகளைக் கடைப்பிடிக்கின்றன.

கொரோனா தொற்று இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை அவர்களின் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் இந்நாடுகள், யாரேனும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறினால் அவர்களுக்கு 3000 அமெரிக்க டாலர்கள் அளவுக்கு அபராதமும் விதிக்கின்றன.

''ஒரு சிறந்த உதாரணம் கூற வேண்டுமானால், கடந்த மார்ச் 12-ஆம் தேதியன்று, ஹாங்காங்கில் 445 பேருக்கு கொரோனா தொற்று இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், அங்கு சுமார் 14,900 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்த அளவு அதிக நபர்களுக்குப் பரிசோதனை செய்ததற்குக் காரணம் எந்த வாய்ப்பையும் அவர்கள் புறக்கணிக்கவில்லை என்பதுதான். இதில் 19 பேருக்கும் மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது'' என்று யென்ஸ்வா குறிப்பிட்டார்.

Banner image reading 'more about coronavirus' Banner

3. தயார் நிலை மற்றும் விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது 

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 முக்கிய வழிகள்Getty Images

அண்மையில் மேற்கு ஆப்ரிக்காவில் இபோலா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளின்போது அங்கு பணிபுரிந்த யென்ஸ்வா, வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மிகவும் முக்கியம் விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது. மக்களை அது தாக்கும் முன், நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைவுகூர்ந்தார்.

''தைவான் மற்றும் சிங்கப்பூரில் எடுக்கப்பட்ட அதிவிரைவு நடவடிக்கைகள் அந்நாடுகளில் வைரஸ் பரவலைப் பெரிதளவு கட்டுப்படுத்த உதவியது'' என்று அவர் மேலும் கூறினார். 

இது போன்ற ஒரு தொற்று பிரச்சினையைக் கடந்த 2003-இல் தைவான் சந்தித்துள்ளது, அங்கு விரைவான நடவடிக்கைகள் எடுப்பதற்கும், வைரஸ் தொற்று தொடர்பான கட்டுப்பாட்டு மையம் அமைக்கவும் காரணமாக அமைந்தது.

''தொற்று பரவலின் ஆரம்பக் கட்டங்களில் விரைந்து நடவடிக்கைகள் எடுப்பது மட்டுமே பயன் தரும். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இது போன்ற அதிவிரைவு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. காரணம் இதனைச் சந்திக்க அந்த நாடுகள் தயார் நிலையில் இல்லை'' என்றார் அவர்.

''நடவடிக்கைகள் எடுக்கும் நேரம், விரைந்து செயல்படுதல் ஆகியவை மிகவும் அவசியம்'' என யென்ஸ்வா மேலும் கூறினார்.

Presentational grey line

4. சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் 

''ஒரு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்கனவே இருக்கும் பட்சத்தில், வழக்கமான கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மட்டும் போதாது'' என யென்ஸ்வா கூறுகிறார்.

ஏன் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அனைவருக்கும் உதவாது ?Getty Images

இப்படிப்பட்ட சமயத்தில் தைவான், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கடைப்பிடிக்கப்பட்டது போல சமூக இடைவெளியைப் பராமரிப்பது மட்டுமே சிறந்த பயனைத் தரும். 

ஹாங்காங்கில் வீட்டிலிருந்தே பணியாற்ற மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.மேலும் அங்குப் பள்ளிகள் மூடப்பட்டன. பொது நிகழ்வுகள் பலவும் ரத்து செய்யப்பட்டன.

சிங்கப்பூரில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு இருந்த போதிலும், சமூக இடைவெளி சிறப்பான முறையில் கடைப்பிடிக்கப்பட்டது.

Presentational grey line

5. சுகாதாரம் பேணுவது 

கொரோனா வைரஸ் பாதிப்பைத் தவிர்க்க அடிக்கடி கைகளைக் கழுவுவது மற்றும் தூய்மையாக இருத்தல் அவசியம் என உலக சுகாதார மையம் கூறுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 முக்கிய வழிகள்Getty Images

''2003 சார்ஸ் வைரஸ் பாதிப்பிலிருந்து பல ஆசிய நாடுகளும் அனுபவம் பெற்றுள்ளன. சிறந்த முறையில் சுகாதாரத்தைப் பராமரிப்பது மக்களைப் பிணியிலிருந்து காக்கும். மற்றவர்களுக்கும் இது பரவுவதைத் தடுக்கும்'' என யென்ஸ்வா தெரிவித்தார்.

சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் தைவானில் சாலைகளில் பாக்டீரியாக்களை ஒடுக்கும் திரவங்கள் அடங்கிய மையங்களைக் காணலாம். அதேபோல் முக கவசம் அணிவதும் இங்கு இயல்பான ஒன்றாக உள்ளது.

முக கவசம் அணிந்திருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதை முக கவசங்கள் தடுக்க இயலாது என்றபோதிலும் அவர்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவுவதைத் தடுக்க இயலும்.

 

https://www.bbc.com/tamil/science-52106805

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

 • Topics

 • Posts

  • ஊட்டியை மிரட்ட வந்த கொடூர வெட்டுக்கிளிகள் ஊட்டி:கிழக்கு ஆப்ரிக்காவின் பாலைவனப்பகுதியிலிருந்து கிளம்பி கண்டம் விட்டு கண்டம் தாக்கும் கொடூர வெட்டுக்கிளிகள் தற்போது ஊட்டி காந்தள் பகுதியில் காணப்பட்டதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.     ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளைத் தாக்கிய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தாண்டு இந்திய மாநிலங்கள் சிலவற்றிலும் கடும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வடமேற்கு மாநிலங்களைத் தாக்கிய இந்த வெட்டுக்கிளிகள் தமிழகத்தைத் தாக்காது என்று தமிழக வேளாண் துறை சொல்லியிருந்த நிலையில், கேரளா மாநிலம் வயநாடு பகுதிவழியாக வந்து ஊட்டியில் காணப்பட்டதால் அதை பாட்டிலில் அடைத்து அதை காட்டிய ஒருவர் அது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அவர்களிடம் தெரிவித்ததை அடுத்து அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.   ஆப்ரிக்க நாடுகளான, கென்யா, எத்தியோப்பியா, சோமாலியாவிலிருந்து வந்த இந்த வெட்டுக்கிளியின் பெயர்' ஹீலிபேரா 'என அழைக்கப்படுகின்றன. அங்கிருந்து புறப்பட்டு வந்த வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் சென்று அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து மத்தியபிரதேசம், ராஜஸ்தான், உ.பி., என படையெடுத்து விவசாயிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தின. இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகள் கேரளாவின் வயநாட்டிலும் தமிழ்நாட்டின் ஊட்டி காந்தள் பகுதியில் காணப்படுகிறது. இந்த வெட்டுக்கிளிகள் ஒரு சதுர கி.மீட்டருக்கு 8 கோடி வரை படையெடுக்கும் தன்மை கொண்டதால் நீலகிரி மாவட்ட விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. https://www.dinamalar.com/news_detail.asp?id=2547304  
  • டிரம்ப் ஒரு வடிகட்டிய முட்டாள்': ஜோ பிடன் கடும் தாக்கு வாஷிங்டன்: ''அமெரிக்க அதிபர் டிரம்ப், வடிகட்டிய முட்டாள்,'' என, முன்னாள் துணை அதிபரும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆக வாய்ப்புள்ள, ஜோ பிடன், கடுமையாக தாக்கியுள்ளார்.     நேற்று முன்தினம், அமெரிக்காவில், போர் வீரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஜோ பிடன், தன் மனைவியுடன், போர் வீரர்களின் நினைவிடத்தில், மலரஞ்சலி செலுத்தினார். அப்போது, அவர் கறுப்பு கண்ணாடியும், கறுப்பு முக கவசமும் அணிந்திருந்தார். அந்த தோற்றம், அவரை சுலபமாக அடையாளம் காண முடியாதபடி இருந்தது. இந்தப் படத்தை 'டுவிட்டரில்' வெளியிட்ட ஒரு பத்திரிகை நிருபர், 'இந்த படத்தைப் பார்த்த பின், பொது இடத்தில், டிரம்ப் ஏன் முக கவசம் அணிய மறுக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்' என கிண்டல் செய்ததை, டிரம்ப், 'டுவிட்டரில்' தன்னை பின்தொடரும், எட்டு கோடி பேருக்கு, 'ரீ டுவிட்' செய்தார். இது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, '' ஜோ பிடன் முக கவசம் அணியலாம். ஆனால், அவர் வெளியிடத்தில், நல்லதொரு சூழலில், இதமான தட்பவெப்பத்தில், தன் மனைவியின் அருகில் இருக்கும் போது, முக கவசம் அணிந்தது, எனக்கு அசாதாரணமாக தெரிந்தது,'' என, டிரம்ப் தெரிவித்தார்.   இதற்கு, 'சி.என்.என்., டிவி'யில், ஜோ பிடன் பதில் அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:உலகம் முழுதும், கொரோனா பரவலை தடுக்க, பலரும் முக கவசம் அணிகின்றனர். ஆனால் டிரம்ப், முக கவசம் அணிய மறுக்கிறார். மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டிய அவர், கொரோனாவை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்காமல், தன் முனைப்புடன் நடந்து கொண்டதால், கொரோனா பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. அவர் ஒரு முட்டாள்; வடிகட்டிய முட்டாள்.இவ்வாறு, அவர் கூறினார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2547719
  • இந்து மதத்தை இழிவுப்படுத்தும் வெப்சீரிஸ் - சர்ச்சையை கிளப்பிய 'காட்மேன்' டீசர் சென்னை : ஓடிடி தளமான ஜீ 5ல் வெளியாகி உள்ள 'காட்மேன்' டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகளும், வசனங்களும் இந்து மதத்தையும், பிராமண சமூகத்தை அவமதிக்கும் வகையில் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்தை அவமதிக்கும் காட்சிகள் சினிமாவிற்கு அடுத்து இப்போது வெப்சீரிஸிலும் தலைதூக்க தொடங்கி உள்ளது. சினிமாவின் அடுத்த தளம் வெப்சீரிஸ். இதற்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. முன்னணி திரைப்பிரபலங்களும் இதில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் டிவி நிறுவனமான ஜீ டியின் ஓடிடி தளமான ஜீ5யில் 'காட்மேன்' என்ற வெப்சீரிஸ் வெளியாக உள்ளது. ஜெயப்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இதை பாபு யோகேஸ்வரன் இயக்கியுள்ளார். இந்த சீரிஸின் டீசர் நேற்று(மே 26) வெளியானது. அதில் இந்து மதத்தை அவமதிக்கும் விதமான காட்சிகளும், பிராமணர் சமூகத்தை இழிவுப்படுத்தும் வசனங்களும், உச்சக்கட்ட ஆபாச காட்சிகளும் இடம் பெற்றுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.     சினிமாவிற்கு தணிக்கை உள்ளது. ஆனால் இந்த வெப்தொடர்களுக்கு தணிக்கை இல்லாததால் படைப்பாளிகள் தங்களின் படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் ஆபாச காட்சிகளையும், வன்முறை காட்சிகளையும் வலிய புகுத்தி வந்தனர். இப்போது மத ரீதியான சர்ச்சைகளையும் கையில் எடுக்க தொடங்கிவிட்டனர். அதிலும் சமீபகாலமாக இந்து மதம் தொடர்பாக இழிவு பேசுவதையும், இந்து மத கடவுள்களை அவமதிக்கும் விதமான காட்சிகளையும் சினிமாக்களில் அதிகம் பார்க்க முடிந்தது. வேண்டுமென்றே சிலர் திரைப்பிரபலங்கள் தங்கள் படங்களின் பப்ளிசிட்டிக்காக இதை திட்டமிட்டு செய்து வருகின்றனர். அந்த வகையில் இப்போது வெப்சீரிஸிலும் இந்து மதத்தை அவமதிக்கும் வகையிலான காட்சிகளையும், வசனங்களையும், குறிப்பிட்ட சமூகத்தை இழிவுப்படுத்தும் விதமான காட்சிகளையும் வைக்க தொடங்கி உள்ளனர். அதற்கு அச்சாரம் அமைத்து கொடுத்துள்ளது காட்மேன் டீசர். 1.12 நிமிட டீசரிலேயே இதுபோன்ற சர்ச்சைகள் என்றால் இன்னும் முழு சீரிஸும் வெளியானால் தேவையில்லாத சர்ச்சையை கிளப்பும்.           கிளம்பியது எதிர்ப்பு இப்போது வெளியாகி உள்ள டீசருக்கே எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. ஆன்மிக இந்துக்கட்சியை சேர்ந்த ஜெயம் எஸ்.கே.கோபி கூறுகையில், கடந்த முன்று நாட்களுக்கு முன்பு இந்த வெப்சீரிஸ் குறித்து நான் ஒரு கண்டன பதிவு செய்து இருந்தேன். அப்போது அதை யாரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இப்போது இந்த டீசரை பார்த்து நிறைய இந்து உணர்வாளர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். பல தரப்பட்ட கருத்துகளும் கண்டனங்களையும் தெரிவித்து இருந்தார்கள்..நாங்கள் தனித்தனியே இது குறித்து புகார் அளிக்க போகிறோம் என்று சொன்னார்கள். இந்து மதத்திற்கும், இந்து மத சடங்குகள் மற்றும் இந்து மத வழிபாட்டு முறைகளையும், இந்து தெய்வங்களையும் ஏதாவது வகையில் இழிவுபடுத்தி இருந்தால் நாம் எதிர்வினையை சட்ட ரீதியாக காட்ட வேண்டும். இந்நிகழ்ச்சியை வெளியிட்ட ஜீ தமிழ் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம இத பத்தி பேசுனா இந்த நிகழ்ச்சி பிரபலமாகிவிடும். பிறகு இதை நிறைய பேர் பாப்பாங்கனு முட்டாள்தனமாக யாரும் யோசிக்காமல் இந்துக்கள் ஒன்று சேர வேண்டும். அப்போ தான் இனி யாரும் இந்து மதத்தை பத்தி தப்பா காட்ட பயப்படுவாங்க என தெரிவித்துள்ளார். https://www.dinamalar.com/news_detail.asp?id=2547264    
  • இதுக்கெல்லாமா? நான் பலதடவை இணைத்துள்ளேன் மீண்டும் மீண்டும் நிர்வாகத்திற்கு நல்ல மனமென்றபடியால் நீக்கிவிட்டார்கள். ஒரு செய்தி தொடருக்காகதான் மேலே இணைத்தேன் மீண்டும். நல்ல நடிகை, இன்னும் வளரனும் 
  • நல்ல தலைமையுள்ளவர்களை மலையக மக்கள்தான் தெரிவு செய்யனும், இந்த தொண்டமான் வாரிசுகளை புறம்தள்ளி