Jump to content

கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?

கிறிஸ்டி ப்ரூவர் பிபிசி
கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?MStudioImages / getty images சித்தரிக்கும் படம்

கொரோனா வைரஸ் உலகையே நிச்சயமற்ற நிலைக்கு தள்ளியுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவும் செய்திகள் நம்மிடம் இடைவெளி இல்லாமல் வந்து சேர்கிறது. 

இதனால் இயல்பாகவே பதற்றம் அடைபவர்கள் மற்றும் ஒரே செயலை பலமுறை செய்ய தூண்டும் ஓ.சி.டி (Obsessive-compulsive disorder) எனப்படும் மனநோய் உள்ளவர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

செய்திகள் மற்றும் கொரோனா குறித்து படிப்பதை கட்டுப்படுத்துங்கள்

கொரோனா வைரஸ் குறித்து தினமும் கேட்கும் செய்திகள் நமக்கு கவலை அளிப்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்டவர்களை இந்த செய்திகள் இன்னும் அதிகம் பாதிப்படைய செய்யும்.

கொரோனா வைரஸ் தாக்கம் பரவ தொடங்கியபோது உலக சுகாதார நிறுவனம் மன நிலையை பாதுகாப்பது குறித்த ஆலோசனைகளை வழங்கியது. இந்த ஆலோசனைகள் சமூக வலைதளத்தில் அதிகம் வரவேற்கப்பட்டன.

Coronavirus: How to protect your mental healthEMMA RUSSELL

பதற்றம் அடைபவர்கள் குறித்து பிரிட்டனின் நிக்கி லிட்பெட்டர் கூறுகையில், ''கட்டுப்பாட்டை மீறி நிலைமை மோசமடையும்போது ஏற்படும் அச்சம், நிச்சயமற்ற தன்மையை பொறுத்துக்கொள்ளமுடியாமல் ஏற்படும் கவலை, இவை இரண்டும்தான் நாம் பதற்றம் அடைய காரணமாக உள்ளது'' என்கிறார். எனவே இயல்பாகவே பதற்றத்துடன் இருக்கும் நபர்களுக்கு இந்த சூழ்நிலையை எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது,'' என்கிறார்.

''நாம் அறியாத பல விஷயங்கள் குறித்துதான் பொதுவாகப் பதற்றம் ஏற்படும். ஏதாவது நடந்து விடுமோ என்ற உணர்வில்தான் பதற்றம் வேரூன்றி இருக்கிறது,'' என்கிறார் மனநிலைக்கான அறக்கட்டளை ஒன்றின் செயற்பாட்டாளர் ரோஸி.

செய்திகளைப் படிக்கும்போது கவனம் தேவை. கேண்டில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நிக், கொரோனா வைரஸ் குறித்து அதிக செய்திகளைப் படிப்பதே கவலை அளிக்கிறது என்கிறார். ''நான் கவலை அடையும்போது, என் எண்ணங்கள் கட்டுப்பாட்டை மீறி, பேரழிவின் விளைவுகள் மீது செல்லத் தொடங்கியது,'' என கூறுகிறார். மேலும் தனது பெற்றோர்கள் மற்றும் தனக்குத் தெரிந்த முதியவர்களின் நிலை குறித்தும் கவலையாக இருக்கிறது என்கிறார்.

''பொதுவாக கவலையில் இருந்தால், அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்வேன். ஆனால் தற்போது அப்படி செய்ய முடியவில்லை,'' என்கிறார்.

Banner image reading 'more about coronavirus' Banner

இணையத்தில் செய்திகளைப் படிப்பது மற்றும் சமூக ஊடகம் ஆகியவற்றில் இருந்து விலகி இருப்பது உள்ளிட்ட சில அறிவுரைகளை நிக் கடைபிடித்ததால், தான் தற்போது நல்ல மனநிலையில் இருப்பதாக தெரிவிக்கிறார்.

  • உங்களை பாதிக்கக்கூடிய செய்திகளை காண்பதையும் படிப்பதையும் தவிருங்கள். மாறாக அடிப்படை செய்திகளை அறிய குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த நேரத்தில் மட்டும் செய்திகளை கவனியுங்கள்.
  • நிறைய தவறான தகவல்கள் மற்றும் வதந்திகள் பரவிவருகின்றன. எனவே சரியான செய்திகளை ஒளிப்பரப்பும் ஊடகம் அல்லது அரசாங்கம் வெளியிடும் தகவல்களை மட்டும் நம்புங்கள்.
  • சமூக ஊடகத்தில் இருந்து விலகி இருங்கள்.

சமூக வலைத்தளம் அதிகம் வேண்டாம்

மான்செஸ்டரில் வசிக்கும் அலிசன், ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் குறித்த அனைத்து செய்திகளையும் படித்து தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக இருந்த எல்லா ஹாஷ்டேகுகளையும் பின் தொடர்ந்துள்ளார். ஆனால் நாளடைவில் இதனால் மனம் வருந்தி பல முறை அழுததாக கூறுகிறார்.

எனவே தற்போது சமூக ஊடகத்தில் அதிக நேரம் செலவிடாமல், விலகி இருப்பதாகவும், தமக்கு கவலை அளிக்கும் எந்த செய்திகளையும் பார்ப்பதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

  • கொரோனா வைரஸ் குறித்து அடிக்கடி தகவல்களை வெளியிடும் வாட்ஸ் ஆப் குருப்புகளை மியூட் செய்யவும்.
  • பேஸ்புக்கில் உங்கள் மனதை காயப்படுத்தும் பதிவுகளை ஹைட் செய்யுங்கள். 
  • கை கழுவுங்கள் - ஆனால் அடிக்கடி வேண்டாம்.

கைகளை கழுவுங்கள், ஆனால் அதீதமாக அல்ல

ஓ.சி.டி எனப்படும் ஒரு செயலை பலமுறை செய்ய தூண்டும் மனநோய்க்கு ஆளாகி, தேவையான ஆலோசனைகள் பெற்று தங்களை மாற்றிக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தவர்களுக்கு தற்போது குழப்பம் நிலவுகிறது.

Coronavirus: How to protect your mental healthEMMA RUSSELL

குறிப்பாக ஓ.சி.டி யால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவகையினர் அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை மேற்கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள் அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை தவிர்க்கும் முயற்சியில் டுபட்டிருப்பார்கள். ஆனால் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால் அவர்களுக்குள் தற்போது குழப்பம் நிலவும்.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க தற்போது அவர்கள் மீண்டும் சோப் மற்றும் சானிடைசர் பயன்படுத்த ஆரம்பித்தால், பிறகு மீண்டும் அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவது சவாலாக இருக்கும்.

எந்த வகையான ஓ.சி.டி யால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் தங்களை திசைத்திருப்பி கொள்ள வெளியில் செல்வார்கள். ஆனால் தற்போது அவர்களை திசைத்திருப்பிக்கொள்ளவும் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

p086d47x.jpg
கொரோனா வைரஸ்: முறையாக கை கழுவுதல் எவ்வாறு?

நண்பர்களுடன் பேசுங்கள்

கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வரும் இந்த சூழலில் பலர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் நேரலாம். எனவே இந்த நேரத்தில் நீங்கள் அக்கறைகொள்ளும் அனைத்து நண்பர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் மின் அஞ்சல் முகவரியை கேட்டுவாங்கிக்கொள்ளுங்கள். அவர்களுடன் உரையாட நேரம் ஒதுக்குங்கள்.

நீங்கள் தனிமைப்பட்டிருந்தால் உங்களுக்கென சில வேலைகளை பட்டியலிட்டு கொள்ளுங்கள். 

ஒவ்வொருநாளும் வெவ்வேறு பனிகளில் ஈடுபடுங்கள். இதனால் இறுதியில் உங்கள் தனிமையான நாட்களை நீங்கள் சரியாகப் பயன்படுத்தினீர்கள் என்ற நிறைவு ஏற்படும்.

உங்கள் மனம் இயற்கையை அணுகட்டும்

Coronavirus: How to protect your mental healthEMMA RUSSELL

இயற்கையையும் சூரிய ஒளியையும் முடிந்தவரை உங்கள் மனம் அணுகட்டும். நல்ல உணவு உண்ணுங்கள், நிறைய தண்ணீர் குடிங்கள், நல்ல உடற்பயிற்சி செய்யுங்கள்.

  • நீங்கள் சாதாரணமாக செயல்படுவதைப் போல செயல்பட வேண்டாம். சிறிதும் எதிர்வினையாற்றவேண்டாம். அமைதி காக்கவும்.
  • நீங்கள் நினைக்கும் அனைத்தும் சரி தான் என்று நம்பாதீர்கள். அது வெறும் உணர்வோ, யோசனையோ மட்டும் தான்.
  • உங்கள் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் எதிர்வினையாற்றத் தேவையில்லை. 
  • இந்த தருணத்தை பற்றி மட்டும் சிந்தியுங்கள். ஏனென்றால் இந்த தருணம் நன்றாகத்தான் உள்ளது.

https://www.bbc.com/tamil/science-52113854

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொவிட்-19 வைரஸ் பதற்றத்தினை எவ்வாறு எதிர்கொள்வது? உளவியல் சார்ந்த தயார்படுத்தல்……

 

எஸ்.ரகுவரன்
உளவியல் மற்றும் ஆலோசனைத் துறை

தினச் செய்திகளை கேட்கும் போது கொரோனா குறித்த விடயங்கள் முக்கிய இடத்தினை வகிக்கும் நிலையில் இது எமது பிரதேசத்தினை தாக்கினால்? என்ற மனதில் தோன்றிய குறித்த வினாவுக்குப் பதிலாக தற்போது எமது மனங்களில் எழும் கேள்வி என்னவென்றால் இந்த வைரஸ் எம்மை எப்போது தாக்கப்போகின்றது? என்பதேயாகும். அந்தளவிற்கு கொரோனா வைரஸ் மிக வேகமாக உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கின்றது.

தினமும் புதிதாக பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற செய்திகள் இவ் வைரசானது ஓர் சமூகத் தொற்றின் (community spreading) விளைவு என்பதனை எடுத்தியம்புகின்றது.

எனவே இது இலங்கையர்களாகிய எமக்கு எதனை உணர்த்துகின்றது? எவ்வாறான தயார்படுத்தல்களை கோரி நிற்கின்றது?
மருத்துவ துறைக்கு அப்பால் உள ரீதியாகவும் பலமாக இருக்க வேண்டிய அவசியத்தினை இது சுட்டி நிற்கின்றது.

இந்நோய் மட்டுமல்லாமல் எமக்கு ஏற்படும் எந்தவித நோய்களுக்கும் வழங்கப்படும் மருந்துகளினால் விளையும் குணமாதல்கள் விரைவாகவும் வினைத்திறனாகவும் எய்தப்பட மனரீதியான நம்பிக்கைகளும், உறுதிப்பாடுகளும் அவசியம் என்பதனை யாராலும் மறுக்க முடியாது.

ஹாவாட் பல்கலைகழகத்தின் தொற்றுநோயியல் பிரிவின் பேராசிரியர் மார்க் லிப்ஸிட்ச் என்பவர் கொவிட்-19 வைரசானது உலகெங்கும் 40% – 70 %ஆன மக்களை தொற்றக்கூடும் என எதிர்வுகூறியுள்ளார். இது பலரும் மிதமான அளவுக்கேனும் நோய்த் தொற்றுக்குள்ளாவார்கள் என்பதனை அர்த்தம் கொள்கின்றது. அல்லது நோய் அறிகுறிகள் எதனையும் வெளிக்காட்டாமலே பலரும் கடந்து செல்லக்கூடும்.

தற்போது வரைக்குமான நிலைமைகளை ஆராய்ந்து பார்க்கையில் கொவிட்-19 ஆனது உயர்தொற்றுவீதம் உள்ள அதே வேளை இதனால் உண்டான இறப்புகளின் சதவீதம் குறைவாகவே காணப்படுகின்றது. கொவிட்-19 தொற்றுக்களினால் விளைந்த இறப்புவீதம் அண்ணளவாக 3 % மட்டுமே.

இதே வேளை 2002 களில் தாக்கிய சார்ஸ் (SARS) வைரசினால் விளைந்த இறப்புவீதம் 9% – 12 % ஆக இருந்தது. இன்னொரு விதத்தில் கூறப்போவதானால் இது குறித்து தேவையற்ற அளவிற்கு நாம் அச்சம் கொள்ளதேவையில்லை. மாறாக எம் மத்தியிலுள்ள ஏனைய நோய்களைப்போன்று இதுவும் ஆராயப்படவேண்டிய ஒன்றே.

இன்றைய மருத்துவ கண்டுபிடிப்புகளின் பிரகாரம் இவ் வைரசின் தாக்கத்தினால் உருவாகும் நோய் அறிகுறிகள் 2-14 நாட்களில் வெளிப்படுகின்றது. இது பிரதானமாக சுவாசத்தொகுதியின் ஊடாகவே தொற்றலடைகின்றது. காய்ச்சல், இருமல், சுவாசிப்பதில் சிரமங்கள் போன்றவை நோய் அறிகுறிகளாக இனங்காணப்பட்டுள்ளன. மற்றைய நோய்களைப் போன்றே வயதானவர்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இந்நோய்க்கும் இலகுவில் இலக்காக முடியும்.

இவ் வைரசு தொற்றின் மீதான உளவியலின் பிரயோகங்கள்

நீங்கள் கொவிட்-19 பற்றி உங்கள் நண்பர்களுடன் உரையாடினால் அவர்களிடமிருந்து பல தரப்பட்ட பதில்களையும் பெறமுடியும். சிலர் முகக்கவசங்களை வாங்கி தயாராக வைத்துள்ளதாகவும் வேறு சிலர் தங்கள் பயணங்களை தவிர்த்து கொண்டுள்ளதாகவும் இன்னும் சிலர் இது குறித்து நாங்கள் எதுவும் தயார்படுத்தவில்லை எனவும் கூறுவார்கள்.

நாம் கேள்விப்படும் தகவல்களுக்கு அப்பால் மனிதர்களில் இதன் தாக்கத்தினை உண்மையாக மதிப்பிடுவதில் பிரச்சினைகள் உள்ளது. ஏனெனில் கேள்விப்படும் அந்த தகவல்களே பலருக்கும் இவ் வைரசின் தாக்கத்தினை தீர்மானிக்கும் ஓர் அளவுகோலாய் காணப்படுகின்றது. மக்கள் தங்கள் உணர்வுகளையேயன்றி தர்க்க ரீதியான விளைவுகளையும் பின்புலங்களையும் மதிப்பாய்வு செய்வதில்லை.

இவ்வாறான நோய் குறித்த சிந்தனைகள் அதன் தொற்றுதலின் உண்மையான நிலையினை விட அதிகரித்த விளைவினையும்,பேரழிவையம் சுட்டிநிற்பதாக சித்தரிக்கும் என அமெரிக்காவின் அனுமதி பெற்ற உளவியலாளர் ஜூலி கொல்ஸெட் (Dr. Juli Kolzet Ph.D) கூறுகின்றார்.

நோய் குறித்த தகவல் ஒன்றினைப் பெறும் போது அது எந்த நம்பகத்தன்மையான இடத்திலிருந்து வந்தது? அதன் உண்மைத்தன்மை என்ன? போன்ற விடயங்களை ஆராயும் போது வீணான பதற்ற நிலையினை குறைத்துக்கொள்ள முடியும். அத்துடன் உண்மையில்லாத பயனற்ற ஒரு தகவலை நம்பிக்கொண்டிருப்பதனால் என்ன இலாபம்? என உங்களுக்குள்ளே வினவிக்கொள்ளுங்கள்.

எவ்வாறு பாதிப்புகளை குறைத்துக்கொள்ள முடியும்?

  1. கைகளை நன்கு கழுவிக்கொள்ளல்.
    சவர்க்காரம் கொண்டு குறைந்தது இருபது செக்கன்கள் அல்லது உயர்செறிவுள்ள (60%) மதுசார கலவைகளால் தொற்று நீக்கிக்கொள்ளல், கழுவிக்கொள்ளல்.
    கழிப்பறைகளுக்கு சென்ற பின்னர் , சாப்பிட முன்னர், இருமல், தும்மல் போன்ற செயற்பாடுகளுக்கு பின்னர் கண்டிப்பாக கைகளை மேற்சொன்ன வகையில் கழுவிக்கொள்ளுதல் வேண்டும்.
  2. இருமும் போது அல்லது தும்மும் போது நன்றாக மூடிக்கொள்ளுங்கள். இந்நிலையில் கண்கள், வாய், மூக்கு போன்ற பாகங்களை தொடுவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள். பாவித்த ரிசு கடதாசிகளை முறையாக அகற்றிவிடுங்கள்.
  3. உடல் நலகுறைவாக உணர்ந்தால் வீட்டில் தரித்திருங்கள். உங்களுக்கு வைரசு தொற்றியிருக்கக்கூடும் என நீங்கள் சந்தேகப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்.
  4. உங்கள் வீட்டுச்சூழலை சுத்தமாக பேணுங்கள்.
    தொற்றுநீக்கி திரவங்கள் அல்லது மதுசாரத்தினை பாவித்து பலராலும் தொடுகை அடையக் கூடிய பொருட்களான மின்சார ஆளிகள், கதவு கைபிடிகள், தொலைபேசி, ரிமோட் போன்ற பொருட்களை அடிக்கடி துடைத்து விடுங்கள்.
  5. நோயாளிகளிடமிருந்து விலகி இருங்கள்.
    இவ் வைரசானது உயர்தொற்றுகை வீதம் உள்ளதனால் இவ்வாறு விலகியிருத்தல் எம்மை தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும்.
  6. முகக்கவசமொன்றினை உடனடியாக வாங்கி அணிய வேண்டிய அவசியமில்லை.
    ஏனெனில் நீங்கள் ஓர் நோயாளி இல்லை என்பதனாலும், சுகாதார துறையை சார்ந்த சேவகர் இல்லை என்பதனாலும் மேலும் ஏற்கனவே தொற்றுக்குள்ளான ஒருவரினை பராமரிக்கும் பொறுப்பில் இல்லை என்பதனாலும் முகக்கவசம் அணிதல் அவசியமில்லை.
    அத்துடன் கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகளை கொண்டிருக்கும் ஒருவர் தன்னிலிருந்து மற்றவர்களுக்கு இவ் வைரசு பரவுவதனை தவிர்ப்பதற்காக கண்டிப்பாக முகக்கவசம் ஒன்றினை அணிதல் வேண்டும்.

இவற்றிற்கு மேலதிகமாக சில பகுதிகளுக்கு அல்லது நாடுகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதனால் அவசியமற்ற, அவசரமற்ற பயணங்களை தவிர்த்துக்கொண்டு பாதுகாப்பான வலயத்தில் தரித்திருத்தல் நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள போதுமாகும்.

மேற்கூறிய விதப்புரைகளை பின்பற்றிக் கொண்டு விழிப்பாக இருந்தால் நோய் குறித்து வீணாண பதற்றத்தினை தவிர்த்துக் கொண்டு உடல் ,உள ரீதியான பலத்துடன் தொற்றுக்களிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள அல்லது வெற்றிகரமாக இதனை எதிர்கொள்ள முடியும் என்பது மட்டும் நிதர்சனம்.

https://newuthayan.com/கொவிட்-19-வைரஸ்-பதற்றத்தின/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.