Sign in to follow this  
nunavilan

ஈரான் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்- ட்ரம்ப் கடும் எச்சரிக்கை.!

Recommended Posts

ஈரான் மிகப்பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்- ட்ரம்ப் கடும் எச்சரிக்கை.!

 

 

   by : Litharsan

Donald-Trump.jpg

ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்நாடு கடுமையான விளைவைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரானின் தாக்குதல் குறித்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியைத் தொடர்ந்து ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், “ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஒருவேளை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தால், ஈரான் அதற்கான மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேரிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈராக்கில் கடந்த மாதம் அமெரிக்க இராணுவமும், ஈரான் ஆதரவு தீவிரவாதிகளும் மோதலில் ஈடுபட்டனர். இம்மாதம் ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இரு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு மறுநாள் ஹிஸ்புல்லா முஜாகிதீன் அமைப்பின் தீவிரவாத முகாம் மீது அமெரிக்க இராணுவமும் தாக்குதல் நடத்தியிருந்தது.

இதேவேளை, கடந்த ஜனவரி ஆரம்பத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலைமையில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சோலைமனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரானால் ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் இலக்குவைக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/ஈரான்-மிகப்பெரிய-விலையைக/

Share this post


Link to post
Share on other sites

கொரோனாவை எதிர்க்காமல் ஈரானுக்கு எச்சரிக்கை: சர்ச்சைக்குள்ளான ட்ரம்ப்

வாஷிங்டன்: உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் சூழலிலும், அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் குறைந்தபாடில்லை.


 

latest tamil news


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2018ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்ததைக் கைவிட்டதுடன் ஈரான் மீது பொருளாதார தடை விதித்தார். தொடர்ந்து அமெரிக்கப் படைகளும் ஈராக்கில் குவிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், பாக்தாத்தில் அமெரிக்கா ட்ரோன் தாக்குதல் நடத்தி, ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானியை கொன்றது. இதனால் இரு நாடுகளிடையான மோதல் உச்சத்தை அடைந்தது.


latest tamil news


இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. கொரோனாவால் அதிக பாதிப்புக்குள்ளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 

Upon information and belief, Iran or its proxies are planning a sneak attack on U.S. troops and/or assets in Iraq. If this happens, Iran will pay a very heavy price, indeed!

 
 
 
டுவிட்டரில், 'ஈரானும், அவர்களுக்கு ஆதரவான படைகளும் ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மற்றும் ஈராக்கின் சொத்துகள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி நடந்தால், ஈரான் அதற்கு மிக அதிகமான விலை கொடுக்க வேண்டியிருக்கும்' எனப் பதிவிட்டார்.

மேலும், செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், ''நாங்கள் ஈரானுடன் விரோதப் போக்கைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை. ஆனால், அவர்கள் விரோதத்துடன் செயல்பட்டால், இதுவரை வருத்தபடாத அளவுக்கு அவர்கள் வருத்தப்பட வேண்டிய சூழல் உருவாகும்' எனக் கடுமையாக எச்சரித்தார்.

latest tamil news


கொரோனா வைரஸ் தாக்குதலில் ஈரானும் தற்போது நிலைகுலைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமலும், பரிசோதனைக் கருவிகள் தட்டுப்பாட்டாலும் பிற நாடுகளிடம் ஈரான் உதவி கோரி வருகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஈரானை எச்சரித்துள்ளது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 'உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனாவை அழித்தொழிக்க முடியும்' என்ற சூழலில், அமெரிக்காவின் விரோதப் போக்கு, கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2513990

Share this post


Link to post
Share on other sites

டிரம்ப் கோமாளியிலும் கோமாளி  

Share this post


Link to post
Share on other sites
59 minutes ago, ரதி said:

டிரம்ப் கோமாளியிலும் கோமாளி  

அவர் தெளிவாகத்தான் இருக்கிறார் பேசுகிறார் 
அமெரிக்க மக்கள்தான் கோமாளிகளாக இருக்கிறார்கள் 
கோமாளிகளுக்கு  தேவையான ஊக்க மாத்திரைகளித்தான் 
அவர் தன பேச்சுக்கள் மூலம் நாளுக்கு நாள் கொடுக்கிறார்.

தாலிபானையே அடிக்க வழியில்லை 
பேச்சுவார்த்தை நடக்குது 

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Maruthankerny said:

அவர் தெளிவாகத்தான் இருக்கிறார் பேசுகிறார் 
அமெரிக்க மக்கள்தான் கோமாளிகளாக இருக்கிறார்கள் 
கோமாளிகளுக்கு  தேவையான ஊக்க மாத்திரைகளித்தான் 
அவர் தன பேச்சுக்கள் மூலம் நாளுக்கு நாள் கொடுக்கிறார்.

தாலிபானையே அடிக்க வழியில்லை 
பேச்சுவார்த்தை நடக்குது 

தான் ஒருத்தரோடையும் அடிபட மாட்டன். பிரச்சனைகளை எல்லாரோடையும் பேசி தீர்ப்பன் எண்டு தானே சொல்லி லெக்சனிலை வெண்டு வந்தவர்..😂

Share this post


Link to post
Share on other sites
1 minute ago, குமாரசாமி said:

தான் ஒருத்தரோடையும் அடிபட மாட்டன். பிரச்சனைகளை எல்லாரோடையும் பேசி தீர்ப்பன் எண்டு தானே சொல்லி லெக்சனிலை வெண்டு வந்தவர்..😂

இல்லை அவ்வாறு அவர் சொல்லவதில்லை 
அவருடைய ஆதரவாளர்களுக்கு அப்படி சொன்னாலும் பிடிக்காது 
அவர்களும் தமிழர்களைப்போலத்தான் .... எதுவும் விளக்கமாக இருந்தால் 
அவர்களுக்கு பிடிக்காது ..குழப்பமாக இருக்கவேண்டும். 

Share this post


Link to post
Share on other sites
10 minutes ago, Maruthankerny said:

இல்லை அவ்வாறு அவர் சொல்லவதில்லை 
அவருடைய ஆதரவாளர்களுக்கு அப்படி சொன்னாலும் பிடிக்காது 
அவர்களும் தமிழர்களைப்போலத்தான் .... எதுவும் விளக்கமாக இருந்தால் 
அவர்களுக்கு பிடிக்காது ..குழப்பமாக இருக்கவேண்டும். 

இப்ப என்ன ட்ரம்பர் அடுத்த முறையும் வருவாரோ இல்லையோ?

Share this post


Link to post
Share on other sites

அடுத்த முறையும் வருவார் என்றுதான் நினைக்கிறன் 
எதிர்க்கடசியில் எந்த மாற்றமும் இல்லை கிளரிக்கு பதிலாக இன்னொரு கிளறியை 
விட்டிருக்கிறார்கள் ....... ஏற்கனவே இவர் மேலே பல குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this