Jump to content

மூடி இல்லாத முகங்கள் கேட்டோம்...


Recommended Posts

மூடி இல்லாத முகங்கள் கேட்டோம்...

 

 

 

 
 

-காரை துர்க்கா

அமர்க்களம், படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்..’ என்ற பாடல், 1999 ஆம் ஆண்டு காலப் பகுதியில், பட்டிதொட்டி எங்கும் ஓங்கி ஒலித்தது.   

இந்தப் பாடல் தனித்துவமானது. ‘அமர்க்களம்’ படத்தையே, சமர்க்களம் ஆக்கியது எனலாம். அதாவது, கதாநாயகன் எவற்றை எல்லாம் விரும்பிக் (நியாயமாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய வேண்டுதல்கள்) கேட்டார் என, ஒவ்வொரு வரிகளும் எடுத்து இயம்புகின்றன. அந்தப் பாடலின் ஒரு வரியே, ‘மூடி இல்லாத முகங்கள் கேட்டேன்’ என்பதாகும்.   

ஈழத்தமிழ் மக்களுக்கும், அந்த பாடல் வரிகள் அப்படியே பொருந்துகின்றன. ஈழத் தமிழ் மக்கள், ஏனைய இனங்களுக்கு, முற்றிலும் தீங்கு பயக்காத, நியாயமான கோரிக்கைகளைக் கேட்டாலும், அவை யாவும் கேளிக்கைகளாகவும் வேடிக்கைகளாகவும் பார்க்கப்பட்டதே, கடந்த 70 ஆண்டு கால, கசப்பான வரலாறு ஆகும்.   

தமிழ் மக்களது கோரிக்கைகளை, 70  ஆண்டு காலமாகக் கேட்டும் பார்த்தும் வந்த, மாறிமாறி ஆட்சி செய்த, இலங்கை அரசாங்கங்களின் நோக்கிலும் போக்கிலும் மாற்றங்கள் ஏற்படவில்லை. இதனால், தமிழ் மக்கள் விரும்பி, விரும்பத்தக்க மாற்றங்களை அனுபவிக்கவில்லை.   

இந்த அரசாங்கங்கள், முக மூடிகளை அணிந்து கொண்டே, இனப் பிணக்கைக் கேட்டும் பார்த்தும் வந்துள்ளார்கள்; அதற்கே பழக்கப்பட்டும் விட்டார்கள். முரண்பாடுகள் நிறைந்த,  இலங்கையின் இனப் பிணக்கை, சமநிலை குழம்பாமல், அறிவையும் ஆற்றலையும் கொண்டு, தீர்க்க முயலவில்லை; தீர்க்க முடியவில்லை.   

சிங்கள மக்களுக்குத் தமிழ் மக்கள், கற்பனை எதிரிகள் ஆக்கப்பட்டார்கள். ‘நீ என்ன நினைக்கிறாயோ, ஈற்றில் அதுவாகவே ஆகின்றாய்’ என்பது போல, இன்று நிஜ எதிரிகள் போல ஆக்கப்பட்டு விட்டார்கள். 

இதனால், தமிழ் மக்களும் சிங்கள மக்களை, முகமூடிகள் கொண்டு பார்க்க வேண்டிய நிலைக்கு, இன்று சென்று விட்டார்கள்.   

இது இவ்வாறு நிற்க, இன்றைக்கு ஓராண்டுக்கு முன்னர் (ஏப்ரல்-21), நம்நாட்டில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, இஸ்லாமிய மக்கள் பெரும் நெருக்கடிகளுக்கு உள்ளானார்கள்.   

 அவர்களைச் சந்தேகக் கண் கொண்டே பெருமளவானோர் பார்த்தனர். இஸ்லாமியப் பெண்கள், முகத்தை மூடி அணிகின்ற அவர்களது பண்பாடே, பல சர்ச்சைகளை உண்டாக்கியது.   

ஆனால் இன்று, அகில உலகமும், நிஜ முகக்கவசங்களை அணிந்து கொண்டே ஜீவிக்கின்றது. அவ்வாறு, முகக் கவசங்களை அணிந்தால்த்தான், எம் உடலில் உயிர் வாழும் நிலை ஏற்பட்டு உள்ளது.   

பக்கத்து வீட்டுக்காரனைக் கூட, எட்டத்தில் வைத்தே உரையாட வேண்டி உள்ளது. வீடு தேடி வருகின்றவர்களைப் படலையில் வைத்தே, பதில் கூறி அனுப்ப வேண்டி உள்ளது.   

கொரோனா வைரஸ் தொற்று நோய்த் தடுப்புப் பாதுகாப்பு நடவடிக்கைகள், வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு, 2009ஆம் ஆண்டுக்கு முன்னரான வாழ்வை, ஒருகணம் கொஞ்சமேனும் மீள நினைவு ஊட்டுகின்றது. 

ஊரடங்குச் சட்டம், பொருள்களுக்குத் தட்டுப்பாடு, வரிசையில் நின்று பொருள்களைப் பெறல் என, இந்தச் சொற்கள், தமிழ் மக்களுடன் பல தசாப்த காலங்கள், விருப்பமின்றி உறவாடிய வார்த்தைகள் ஆகும்.   

கொரோனா வைரஸ், தனிமைப்படுத்தல், 14 நாள்கள், மரணம் போன்றவற்றால், இன்று இலங்கை வாழ் மக்களும் உலக மக்களும் அடுத்து என்ன நடக்குமோ என, வெளியே ஏக்கத்துடன் வாழ்கின்றனர். 

இந்த ஏக்கம் போலவே, போரால் உயிரிழப்புகள், காணாமல் ஆக்கப்படுதல்கள், நில அபகரிப்புகள் எனப் பல்வேறு மன அழுத்தங்களை, நெஞ்சத்துக்குள்ளே சுமந்து கொண்டு, தமிழ் இனம் பல ஆண்டு காலம் வாழ்ந்து வருகின்றது.   

இன்றுள்ள கொரோனா வைரஸ் முற்றுகையை விடப் பல மடங்கு, ஆபத்துகள் நிறைந்த முற்றுகை வாழ்வைத் தமிழ் இனம் கடந்த காலங்களில் அனுபவித்து வந்துள்ளது. 

இன்று, முழு உலகமும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடி வருகின்றது. ஆனால், அன்று முழு உலகமும் ஒன்று சேர்ந்து, தம்மைக் காப்பாற்றத் தவறி கைவிட்டு விட்டார்களே என, தமிழ் மக்கள் கவலையுடன் நினைவு கூருகின்றனர்.   

இன்றைய நிலையில், கொரேனா வைரஸ் பரவுகையைத் தடுத்து நிறுத்தி, எம்முடைய வாழ்வைப் பாதுகாக்கும் பொறிமுறை, எம்முடைய கையில், ஓரளவு உள்ளது. ஆனால், தமிழ் மக்கள் மீது, தொடர்ச்சியாகப் பல்லாண்டு காலமாகத் திட்டமிட்டுக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரம், போர் என்பவை, பல அப்பாவித் தமிழ் மக்களைத் துவம்சம் செய்து விட்டன.  

இதற்கிடையே, கொரோனா வைரஸின்  கொடுமைக்குள், உலகம் முழுமையாக உறைந்திருக்க, யாழ்ப்பாணம், மிருசுவில் படுகொலையில் குற்றவாளியாக இனம் கானப்பட்டு, மரணதண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட சுனில் ரத்நாயக்க என்ற படைவீரர், ஜனாதிபதியால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார்.   

முழுத் தேசமாக ஒன்றினைந்து, கொரோனாவை விரட்டி அடிப்போம் என, கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. ஆனால், மறுவளமாக இத்தகைய இடர்பாடுகளுக்கு மத்தியிலும், அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகள், ஒரு தேசமாக ஒன்றினைய, தமிழ் மக்களது இதயங்கள் இடம் கொடுக்குமா?   

இன்று, கொரோனா அச்சத்துக்குள் மூழ்கி, மிச்சம் இல்லாது போய் விடுவோமோ எனத் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் உலக மக்களும் திகில் நிறைந்த வாழ்வுக்குள் உள்ளனர், குறிப்பாக, ஊரடங்குச் சட்டம், பொருள் தட்டுப்பாடு காரணமாக, பட்டினிச் சாவைச் சந்தித்து விடுவோமோ போன்ற, ஒருபோதும் உணராத புதிய பயப்பீதிக்குள் மூழ்கிப் போய் துடிக்கிறார்கள்.   

‘ஆரியக் கூத்தாடினாலும், காரியத்தில் கண்ணாக இருக்க வேண்டும்’ என்பார்கள். அதுபோல, இவ்வாறான அனர்த்த நிலையிலும், பேரினவாத அரசாங்கங்களின் இவ்வாறான நடவடிக்கைகளை, சிங்களப் பெரும்பான்மையின மக்கள், நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்; அறிந்து கொள்ள வேண்டும்.   

கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மூன்றாவதாக (தற்போதைய நிலைவரங்களின் பிரகாரம்) நாடாக,  அமெரிக்க உள்ளது. ஐரோப்பாவில் வளம் பொருந்திய நாடான இத்தாலி, சராசரியாக் தினசரி 700 பேரைக் கொரோனா வைரஸுக்குப் பலி கொடுத்து வருகின்றது. உலகின் இரண்டாவது அதிக சனத்தொகையைக் கொண்ட, தெற்காசியாவின் வல்லரசான இந்தியாவில் கூட, கொரோனா வைரஸ் தாக்கத்தாலான மரணங்கள், சம்பவித்து வருகின்றது.  

பெரும் இராணுவப் படை பலம், பொருளாதாரப் பலம், ஆளணி பலம் என அனைத்துப் பலம்களும் கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் கிருமிக்கு முன்பாக, மண்டியிட்டு நிற்கின்றன. அணு ஆயுதத்தைக் கண்டு பிடித்தும் பிரயோகித்தும் பார்த்த நாடுகள், கொரோனா வைரஸைப் பார்த்துப் பயந்து போய் நிற்கின்றன; திணறுகின்றன.   

கொரோனா கொடூரம், உலகின் இயல்பு நிலையை, முற்றிலும் மாற்றி அமைத்து உள்ளது. சுருங்கக் கூறின், அனைத்து நாடுகளும், ஆட்டம் கண்டுள்ளன. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இப்போது இந்தப் பூமி, பாரிய உயிரிழப்புகளைக் கண்டு வருகின்றது.   

ஆகவே, அன்று வெளியே தெரியாத முக மூடிகளை அணிந்து கொண்டு, சிங்களப் பேரினவாதத்துக்குள்ளும் பௌத்த மதவாதத்துக்குள்ளும் ஒழிந்து கொண்டு, தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இன்று, முக மூடிகளை அணிந்து கொண்டு, அன்றைய வேலைத்திட்டங்களின் மீதிகள், சீர் செய்யப்படுகின்றன.   

எது எவ்வாறு இருப்பினும், எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் தொற்று ஒழிக்கப்பட்டு, மிக விரைவில் உலகம் வழமைக்குத் திரும்பும்; திரும்ப வேண்டும் என, எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகின்றோம்.   

அதன் பின்னரும், ஒற்றையாட்சி, ஒரு மதத்துக்கு மட்டும் முன்னுரிமை, அதிகாரப் பரவலாக்கம் அர்த்தாமற்றது, இனப்பிணக்கு இங்கில்லை, பொருளாதாரப் பிரச்சினையே உள்ளது, தமிழ் மக்கள் ஒருபோதும் அரசியல் தீர்வைக் கேட்கவில்லை என்றே, கதைத்துக் கொண்டு இருக்கப் போகின்றார்களா? அல்லது, ஒரு தேசமாக, உண்மையாக எழச்சியுடன் எழுந்து, இந்நாட்டையும் மக்களையும் பாதுகாக்கப் போகின்றார்களா?   

ஆரம்பத்தில் கூறப்பட்ட, ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடலில், ‘வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்’ என்ற ஒரு வரியும் வருகின்றது. ஆகவே, நாம் அனைவரும், இலங்கை என்ற அன்னையின் மடியில் சந்தோசமாக வாழலாம். இவை யாவும், பெரும்பான்மைச் சிங்கள மக்களின் கைகளிலேயே முற்றிலும் தங்கி உள்ளன.  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/மூடி-இல்லாத-முகங்கள்-கேட்டோம்/91-247741

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.