Jump to content

கொரோனாவின் மோசமான ஆளுகைக்குள் ஐரோப்பிய நாடுகள்!


Recommended Posts

கொரோனாவின் மோசமான ஆளுகைக்குள் ஐரோப்பிய நாடுகள்!

 

 

     by : Litharsan

Coronavirus-Europe-Countries.jpg

உலக நாடுகள் முழுவதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைப் புரட்டியெடுத்து வருகிறது.

இந்த வைரஸ் தாக்கத்தால் மருத்துவ வசதிகள் நிறைந்த நாடுகளும் அதனைக் கட்டுப்படுத்தத் திணறிவரும் நிலையில் நாளுக்கு நாள் பல ஆயிரங்களில் மனித உயிர்களைப் பலியெடுத்து வருகிறது கொரோனா. இந்த வைரஸ் ஐரோப்பாவில் மட்டும் 30 ஆயிரத்தும் மேற்பட்டோரைக் காவுகொண்டுள்ளது.

இதன்படி ஐரோப்பிய நாடான இத்தாலி கடும் பாதிப்பை எதிர்கொண்டு 13 ஆயிரத்து 155 பேரை இதுவரை இழந்துள்ளது. மேலும், நேற்று ஒரேநாளில் மாத்திரம் 727 பேரை பலியெடுத்துள்ள வைரஸால் அங்கு மொத்தமாக ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 574 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இத்தாலியில் 4 ஆயிரத்து 35 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளதுடன் மொத்தமாக அங்கு 16 ஆயிரத்து 847 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதனைவிட ஸ்பெயினிலும் தீவிரம் காட்டிவரும் கொரோனா வைரஸ் பரவல் 923 பேரின் உயிரை ஒரேநாளில் பறித்துள்ளது. இத்தாலிக்கு அடுத்து உயிரிழப்பு அதிகமாகப் பதிவாகியுள்ள ஸ்பெயினில் மொத்தம் 9 ஆயிரத்து 387 பேர் மரணித்துள்ளனர்.

மேலும், பிரான்ஸிலும் பெரும் பாதிப்பை இப்போது கொரோனா வைரஸ் ஏற்படுத்திவரும் நிலையில் ஒவ்வொருநாளும் உயிரிழப்போர் எண்ணிக்கை கடுமையான அதிகரிப்பிலேயே செல்கிறது.

அங்கு நேற்று ஒரேநாளில் மட்டும் 509 பேர் உயிரிழந்ததுடன் மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 32 ஆக அதிகரித்துள்ளது. 4 ஆயிரத்து 861 பேர் நேற்று புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அங்கு 56 ஆயிரத்து 989 பேர் மொத்த நோயாளர்களாக உள்ளனர்.

இதனைவிட ஜேர்மனியும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதுடன் அங்கு நேற்று மட்டும் 156 பேர் மரணித்ததுடன் மொத்த உயிரிழப்பு 931 ஆகப் பதிவாகியுள்ளது.

மேலும், 6 ஆயிரரத்து 173 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக அங்கு 77 ஆயிரத்து 981 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 408 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுவீடனிலும் நேற்று மட்டும் 59 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 239 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிய நோயாளர்கள் 512 பேர் நேற்று பதிவாகி மொத்த பாதிப்பு 4 ஆயிரத்து 947 ஆகக் காணப்படுகிறது.

இதனைவிட நோர்வேயில் நேற்று 5 உயிரிழப்புக்கள் பதிவாகி மொத்த உயிரிழப்பு 44 ஆக அதிகரித்துள்ள நிலையில் அங்கு நேற்று மட்டும் 213 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு 4 ஆயிரத்து 877ஆக மொத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

http://athavannews.com/கொரோனாவின்-மோசமான-ஆளுகைக/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.