Jump to content

அச்சுவேலியைச் சேர்ந்தவர் கொரோனாவால் பிரான்ஸில் பலி


Recommended Posts

அச்சுவேலியைப் பிறப்பிட மாகவும் பிரான்ஸில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட நாகமுத்து உதயபாஸ்கரன் என்பவர் கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இவரது மகன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

https://valampurii.lk/news/local-news/2020/அச்சுவேலியைச்-சேர்ந்தவர/

Link to comment
Share on other sites

கொரோனவின் கொடூரம் பிரான்சில் மேலும் ஒரு தமிழர் மரணம்

 

20200402_110314.jpg

யாழ்ப்பாணம் நயினாதீவை பிறப்பிடமாகவும் புலம்பெயர் தேசத்தில் பிரான்சில் ஸ்ராஸ்பூர்க்  எனும் இடத்தை
தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட குகதாசன் விஜயானந் வயது 47 எனும் நபர் தற்போது பரவிவரும் கொறோனா எனும் வைரஸ்  கொடிய நோயினால் நேற்றையதினம் (01-04-2020 )அன்று ஸ்ராஸ்பூர்க்  மருத்துவமனையில்  மரணித்துள்ளார்,இவர் ஸ்ராஸ்பூர்க் இன் முன்னால் ஜரோப்பிய தமிழர் ஒன்றிய  தலைவராக கடமையாற்றியவர்,இவரின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திப்போம்,

பிரான்ஸ் செய்தியாளர்
ஆனந்,

https://www.tamilarul.net/2020/04/Coronavirus.France_2.html

Link to comment
Share on other sites

லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் கொரோனாவால் உயிரிழப்பு

லண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம், மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் ஒருவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, லண்டனில் வசித்துவந்த இலங்கையரான மஹரகம பகுதியைச் சேர்ந்த 55 வயதான லக்‌ஷான் விஜேரத்ன என்பவர் லண்டனின் ஃபெல்தம் பகுதியில் உயிரிழந்தார்.

இதனை அடுத்து இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற 70 வயதுடைய ஹென்றி ஜயவர்தன என்ற ஓய்வுபெற்ற வைத்தியர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்திருந்தார்.

இங்கிலாந்தில் 3 மரணங்களும் சுவிற்சர்லாந்தில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியிலிருந்து சுவிற்சர்லாந்திற்கு குடிபெயர்ந்த 59 வயதான நபரே இவ்வாறு கொரோனா வைரஸ் காரணமாக சுவிற்சர்லாந்தில் உயிரிழந்த முதலாவது இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vanakkamlondon.com/corona-death-05-04-2020/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடையட்டும் ....நேற்று லண்டனில் இறந்தவரை விட  இன்னுமொரு 21 வயசு தமிழ்ப்  பெண்ணும் இறந்துள்ளதாக அறிய முடிகிறது...எங்கே போய் முடிய போகுதோ 😟

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல கடவுளை வேண்டுகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் மட்டும் துரத்துகிறது எம்மவர்களை ஆழ்ந்த இரங்கல்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D.jpg

அவுஸ்ரேலியாவில் இலங்கையர் கொரோனாவால் உயிரிழப்பு!

அவுஸ்ரேலிய குடியுரிமைகொண்ட இலங்கையர் ஒருவர் காெராேனா வைரஸுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசித்து வந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, லண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியிருந்தது.

யாழ்ப்பாணம், மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் ஒருவரே நேற்றிரவு உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அவுஸ்ரேலியாவில்-இலங்கைய/

Link to comment
Share on other sites

😢😢கொறோணா என்ற கொடியவனின் பசிக்கு இரையாகி இன்று எம்மை எல்லாம் துயரத்தில் ஆழ்த்திவிட்டு எங்கடா சென்றாய் நண்பா???பழகுவதற்கு இனியவனே பண்பாளனே அந்த இரண்டு குஞ்சுகளும் ஏங்குகின்றன அப்பா எப்போது வருவார் விளையாடலாம்என்று
😥😥😥 மணந்தவளோ நிற்கதியாய் நிற்க ஏனடா உனக்கு மட்டும் அவசரம் பூத்துக் குலுங்கும் வயதல்லவா இது.நெஞ்சம் பொறுக்கிதில்லையே உன் திருமுகத்தை எப்போது காண்போம் எனி???.(லண்டனில் Dartford என்னும் இடத்தில் மளிகை கடை உரிமையாளரான சியாமளன் அவர்கள் (ஈழத்தமிழர் மீசாலையை பூர்வீகமாக கொண்டவர்)ஆதீத காச்சல் காரணமாக இன்று அதிகாலை 5 மணி அளவில் இறைபதம் அடைந்தார் )

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், செல்ஃபி மற்றும் குளோஸ் அப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசு வேணும் தான் அதற்காக காசே தான் எல்லாம் என்று இருக்க கூடாது ...மற்றவர்கள் எல்லாம் கடையை மூடும் போது தமிழர்கள் மட்டும் கடையை துறந்து வைத்து கொண்டு இருக்கினம் ...டக்சி ஓடுதல் இந்த இக் கட்டான கால கட்டத்தில் தேவையா? கஞ்சியை,  கூழை குடித்துக் கொண்டு வீட்டை இருக்கலாம்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

காசு வேணும் தான் அதற்காக காசே தான் எல்லாம் என்று இருக்க கூடாது ...மற்றவர்கள் எல்லாம் கடையை மூடும் போது தமிழர்கள் மட்டும் கடையை துறந்து வைத்து கொண்டு இருக்கினம் ...டக்சி ஓடுதல் இந்த இக் கட்டான கால கட்டத்தில் தேவையா? கஞ்சியை,  கூழை குடித்துக் கொண்டு வீட்டை இருக்கலாம்
 

பிழையாக விளங்கி இருக்கினம் பலர்  லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் எக்ஸ்பிரஸ் அனைத்தும் இன்றுவரை திறந்து பூட்டுகினம் நம்ம கடைக்காரர் சமூக இடைவெளி இல்லாமல் ஒரே நேரத்தில் சிறிய இடத்தில் 30க்கு மேட்பட்டவர்களை  அனுமதிக்கினம் இதை பலமுறை உள்ளூர் கவுன்சில் எடுத்து சொல்லியும் கேட்க வில்லை விளைவு மூடுவிழா இன்றும் இல்போர்ட் ல் உள்ள ஒரு பெரிய தமிழ்க்கடை திறந்துதான் உள்ளது அவர்கள் கடுமையாக சமூக இடைவெளியை கடைபிடிப்பதால் அங்கு வேலை செப்பவர்களுக்கும் எந்த பிரச்சனையும்  இல்லை வாடிக்கையாளர்களுக்கும் புரிந்து நடக்கிறார்கள் சில கடைகளின் வாடிக்கையாளர் மொரட்டு கூட்டம்  சொல்லியும் கட்டுப்படுத்த முடியவில்லை .

 

Link to comment
Share on other sites

லண்டனில் #Covid19 தாக்கத்திற்குப் பலியான இலங்கைத் தமிழர் அமரர் குகபிரசாத் அவர்களின் மகளின் பதிவின் தமிழாக்கம் இது...

"நாங்கள் கவனமாக இருப்பதாகவே நினைத்துக்கொண்டிருந்தோம்... எங்கிருந்து அவருக்குத் தொற்றியது என்று தெரியவில்லை.

உலகில் கொரொனாவிக்குப் பலியானோர் எண்ணிக்கையில் அவரும் சேர்க்கப்படுகிறார். " STAY AT HOME" என்று சொல்லப்படுவதில் அர்த்தம் இருக்கின்றது.

நாங்கள் அனுபவிக்கும் வலியை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. அவர் சிகிச்சை பெறும் போது கூட எங்களால் அவரைச் சென்று பார்க்க முடியவில்லை. இப்போது இறந்த பின்னர் அவர் உடலையும் கூட பார்க்க அனுமதியில்லை. அவர் மருத்துவமனையில் மூச்சுத்திணறலுடன் தனிமையிலேயே போராடினார்..

#Covid19 மிகக் கொடியது.. இந்த துர்பாக்கியமான நிலைமை எவருக்கும் வரக்கூடாது.. "

உறவுகளை உண்மையாய் நேசிப்போராயின் வீடுகளில் இருப்போம்... வருமுன் காப்போம் 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உரை🙏🙏

Link to comment
Share on other sites

பிரான்ஸ் கிரித்தை பகுதியில் வசித்து வந்த தமிழ் பெண் ஒருவர் இன்று கொரோனாவின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார்,
Capture%2Bd%25E2%2580%2599e%25CC%2581cran%2B2020-04-08%2Ba%25CC%2580%2B16.31.02.png


யாழ்ப்பாணம்  நீராவடியை சேர்ந்த உமாசுதன்  சாம்பவி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்,  இவரின் ஆத்மா சாந்தியடைய  இறைவனை பிரார்த்திப்போம்.
அத்துடன் பிரான்சில் பல தமிழர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்,
கொரோனா தொற்றினால்  பிரான்சில் இதுவரை 11  தமிழ் மக்களின் பலியாகியுள்ளனர்.

https://www.srilanka20.com/2020/04/blog-post_23.html?m=1

Link to comment
Share on other sites

கொரோனாவின் தாக்கத்தால் மரணமான புலத்தில் வாழ்ந்த ஈழத் தமிழர்கள். அனைவரது ஆத்மாக்களும் சாந்தி அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்....கண்ணீர் அஞ்சலி.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 16 பேர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை ...வகை ,தொகையின்றி இளம் வயதினர் அதுவும் தமிழர்கள் இறப்பது மிகவும் மன வருத்தத்திற்குரிய செய்தி...அனைவரது ஆத்மா சாந்தியடையட்டும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அத்தனை பேருக்கும்  ஆழ்ந்த இரங்கல்கள்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் இன்னுமொரு ஈழத்தமிழர் உயிரை பறித்தது கொரோனா

france-1.jpg

 

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தற்போது பிரான்ஸின் புறநகர் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

கடந்த 14 தினங்களாக சிகிச்சை பெற்றநிலையில் நேற்று இவர் உயிரிழந்துள்ளார்

http://thinakkural.lk/article/38410

 

அனைவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் உயிரிழப்புக்களால் துவண்டுபோயுள்ள பிரான்ஸ் தமிழ்ச் சமூகம்

977-8.jpg

 

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு பெரும் உயிர்ப்பலிகளைக் கொடுத்து வரும் பிரான்சில், தமிழர்களின் தொடர் உயிரிழப்புக்கள் பிரான்ஸ் தமிழர்களை கவலைகொள்ள வைத்துவருகின்றது. நாளொன்றுக்கு ஒருவர் வீதம் இதுவரை 20க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதோடு, நூற்றுக்கணக்கானவர்களுக்கு வைரஸ் தொற்றும் ஏற்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்களை வீடுகளில் தனிமைப்படுத்தபடுத்தியுள்ள சுகாதாரத்துறை, உடல்வெப்பம், அறிகுறிகள் நிலை என ஒவ்வொரு நாளும் அவர்ளை கண்காணித்து வருகின்றது. பலர் வீடுகளிலேயே குணமடைந்து வருகின்றனர். மூச்சுதிணறல் நிலை ஏற்படுத்தும் போதே, அவர்களை அவசர சுகாதார வாகனம் வந்து அழைத்துச் செல்கின்றது. இதுவும் அடுத்த மணிப்பொழுதுகளில் நடத்துவிடுபவை அல்ல. பல மணிநேரம் கழித்தே அவசரவாகனம் வரும் அளவுக்கு நிலைமைகள் இங்கு காணப்படுகின்ற

தமிழர்கள் செறிந்து வாழுகின்ற இல்-டு-பிரான்ஸ் பிராந்தியம் பிரான்சில் வைரஸ் தொற்றுக்கு பாதிப்பு அதிகமான மாகாணமாக இருப்பதோடு, தமிழர்கள் நெருக்கமாக வாழுகின்ற சென்-சென்-டெனி என்ற மாவட்டத்திலேயே பெருமளவான பாதிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. பிரான்சிலேயே வறுமையான மாவட்டம் என்ற முதன்மை இடத்தில் உள்ள இப்பகுதியில் வேலையில்லாதிண்டாட்டம், சமூக, பொருளாதார, சுகாதார நெருக்கடி மட்டுமல்ல, வெளிநாட்டவர்கள் அதிகம் வாழுகின்ற பரிசின் புறநகர் பகுதியாக இது இருக்கின்றது.

979-6.jpg

 

வட ஆபிரிக்க அரபுக்கள், ஆபிரிக்கர்கள் முதன்மையாக வாழுகின்ற இம்மாவட்டத்தில் தமிழர்களும் முக்கியமான இடத்தினை சமீபத்திய ஆண்டுகளில் பிடித்துள்ளனர். இதற்கு பிரதான காரணமாக ஒப்பீட்டளவில் பிற மாட்டங்களை விட, இங்கு சொந்த வீடுகள் வாங்குவது மலிவு என்பதோடு, வீட்டு வாடகையும் குறைவானதாகவே காணப்படுகின்றது. இந்நிலையிலேயே பெருமளவான தமிழர்கள் சொந்த வீடுகளை வாங்கியுள்ளனர். உதாரணத்துக்கு ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 22 தமிழர் குடும்பங்கள் இருக்கும் அளவுக்கு நிலைமை உள்ளது. தமிழர்களின் குடியிருப்புகள் பெருக்பெருக தமிழர் வர்த்தக நிலையங்களும் இப்பகுதிகளில் அதிகரித்துக் காணப்படுகின்றது.

இவ்வாறானதொரு புறச்சூழலியே கொரோனா, இப்பகுதியில் தமிழர்களையும் சேர்த்து பலியெடுத்து வருவது பிரான்ஸ் தமிழர்களை கவலைகொள்ள வைத்திருப்பது மட்டுமல்லாது அச்சங்கொள்ளவும் வைத்துள்ளது.

981-17.jpgகொரோனா வைரஸ் தொற்று பெரும் பிரச்சனையாக மாறுவதற்கு முன்னராக, ஓய்வூதியம் மறுசீரமைப்புக்கு எதிராக பிரான்சில் பல்வேறு வேலைநிறுத்தப் போராட்டங்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. குறிப்பாக பொதுப்போக்குவரத்து வேலைநிறுத்தம் என்பது தலைநகர் பாரிஸையும், அதனைச் சுற்றிய மாவட்டங்களிலும் பெரும் நெருக்கடியாக காணப்பட்டிருந்தது. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பொதுப்போக்குவரத்து சேவைகள் மீளஇயங்க தொடங்கிய நிலையில், மக்கள் கூட்டம் கூட்டமாக தொடருந்துகளுக்குள்ளும், பேருந்துகளுக்குள்ளும் நெருக்கமாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது இதுவே வைரஸ் தொற்று பரவுவதற்கு பிரதான காணமாக தமிழர்கள் செறிந்து வாழுகின்ற இல்-டு-பிரான்ஸ் மாகாணத்துக்கு அமைந்தததாக கூறப்படுகின்றது.

வைரஸ் தொற்று பரபரப்பினை ஏற்படுத்த தொடங்கிய வேளையில், தமிழர்களின் உணவுப் பழக்கம் நோயை எதிர்க்கும் சக்திகொண்டது என்ற உரையாடல் சமூகவலைத்தளங்களில் மட்டுமல்ல, பொதுஉரையாடல்களிலும் காணப்பட்டிருந்தது. இது ஒருவிதமான அசட்டுத் துணிச்சலையும் ஏற்படுத்தியிருந்தது எனலாம். ஆனால் நாளாந்தம் தமிழர்களின் உயிரிழப்புகள் தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களில், உயிரிழந்தவர்களின் ஒளிப்படங்களுடன் வெளிவரவெளிவர, பிரான்ஸ் தமிழர்களிடத்தில் அச்சம்குடிகொள்ளத் தொடங்கியுள்ளது.

இதுவரை பிரான்சில் உயிரிழந்த தமிழர்களில் மூன்று பெண்களைத்தவிர, மற்றவர்கள் அனைவரும் ஆண்களாவே உள்ளனர். இது தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பிரான்சிலும் கடந்த மார்ச் 1 முதல் 31ம் திகதிக்குள் உயிரிழந்தவர்களில் 59.1 வீதமானவர்கள் ஆண்களாகவே உள்ளனர் என புள்ளிவிபரங்கள் வெளிவந்துள்ளன. பெண்களுக்கு உடற்கூற்றில் இயல்பாகவே இருக்கின்ற நோய் எதிர்பு சக்தி கொரோனாவை எதிர்கொள்வதாக மருத்துவ ஆய்வுகள் கூறியுள்ளன. ஆண்களிடம் உள்ள மது,புகைப்பிடித்தல் பழக்கம் உடலில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு, நீரிழிவு நோய் உட்பட இருதயநோய் ஆகியன ஆண்களின் பெருமளவான உயிரிழப்புக்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.

மார்ச் 1 – 31ம் திகதிக்கு நடுவில் உயிரிழந்த 1931 பேர்களிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 62,3 வீதமானவர்கள் 80.5 வயதுக்கு மேற்பட்டவர்கள், 15 இருந்து 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 16 பேர், 45 இருந்து 64 வயதுக்கு உட்பட்டவர்கள் 151 பேர், 65-74 வயதுக்கு இடைப்பட்டவர்கள் 320 பேர் என புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. இந்த ஆய்வுபுள்ளிகளுக்குள்ளேயே தமிழர்களும் உள்ளடங்குவர்.

உயிரிழந்த தமிழர்களில் 28 வயதில் இருந்து 70 வயதினை தாண்டியவர்கள் வரை காணப்படுகின்றனர். தொற்று ஏற்பட்டதில் இருந்து மருத்துவரை முறையாக அணுகாது, தமக்குள்ளேயே அதனை மூடிமறைத்து கடைசியில் மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்தமை உட்பட பல காரணிகள் இந்த உயிரிழப்புகளுக்கு பின்னால் காணப்படுகின்றது. குறிப்பாக சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த இளம்பெண் ஒருவர், மருத்துமனையில் அவரது சுவாசசீர்படுத்தலுக்கு கொளுவப்பட்டிருந்த சுவாசவழங்கியை தானாகவே கழட்டி மரணத்தை தழுவிக் கொண்டார் என்ற சோகமும் இதற்குள் அடங்கும்.

இவ்வாறு ஒவ்வொரு உயிரிழப்புகளும் அவர்களது குடும்பத்துக்கு பேரிழப்பாக அமைவதோடு, பிரான்ஸ் தமிழ்சமூகத்தினை பேரதிர்ச்சிக்கும் உள்ளாக்கி வருகின்றது. புலம்பெயர் நாடுகளிலேயே அதிகமான உயிரிழப்புக்களை தமிழர்கள் சந்தித்த நாடாக பிரான்ஸ் மாறிவரும் நிலையில், 97 வயது மூதாட்டி ஒருவர் கொரோனாவுடன் போராடி வென்றுள்ள சம்பவமும் பிரான்சில் இடம்பெற்றுள்ளது.

மூதாளர் இல்லங்களில் ஏற்பட்டுள்ள பெருந்தொற்றுக் காரணமாக 4ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூதாளர்கள் உயிரிழந்துள்ளதோடு, பலரும் உயிருக்கு போராடிவரும் நிலையில், நெல்லி என்ற 97 வயது மூதாட்டி, கொரோனாவுக்கு சவால்விட்டு உயிர்தப்பியுள்ளமை வாழத்தலுக்கான புதிய நம்பிக்கையினையும் கொரோனாவுக்கு எதிரான மனத்தைரியத்தினையும் பிரென்சு தேசத்துக்கு கொடுத்துள்ளது.

http://thinakkural.lk/article/38762

 

 

 

Link to comment
Share on other sites

5 hours ago, உடையார் said:

தமிழர்கள் செறிந்து வாழுகின்ற இல்-டு-பிரான்ஸ் பிராந்தியம் பிரான்சில் வைரஸ் தொற்றுக்கு பாதிப்பு அதிகமான மாகாணமாக இருப்பதோடு, தமிழர்கள் நெருக்கமாக வாழுகின்ற சென்-சென்-டெனி என்ற மாவட்டத்திலேயே பெருமளவான பாதிப்புக்கள் நிகழ்ந்துள்ளன. பிரான்சிலேயே வறுமையான மாவட்டம் என்ற முதன்மை இடத்தில் உள்ள இப்பகுதியில் வேலையில்லாதிண்டாட்டம், சமூக, பொருளாதார, சுகாதார நெருக்கடி மட்டுமல்ல, வெளிநாட்டவர்கள் அதிகம் வாழுகின்ற பரிசின் புறநகர் பகுதியாக இது இருக்கின்றது.

பிரான்ஸ் ஒப்பீட்டளவில் இனவெறி கொண்ட நாடு. புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்னேறாமல் இருக்க, அதாவது ஒரு புலம்பெயர் மக்கள் குடியிருப்புகளிலேயே வாழும் நிலை. 

அதிகம் புலம்பெயர்ந்து எம்மவர்கள் வாழும் கனடாவில். ஒப்பீட்டளவில் எமது மக்களை கனேடிய மக்கள் ஏற்று, பொருளாதார சிறப்புடன் வாழ வழிசமைத்து விட்டுள்ளார்கள். இதனால் பலரும் சொந்த வீடுகளில் பாதுகாப்பாக இருக்க முடிகின்றது. 

மறுத்து சேவைகள் என்று வரும்பொழுதும், எல்லா இடங்களிலும் கொஞ்சம் பாகுபாடு இருக்கலாம். ஆனால், அவற்றை முறையிடவும் விசாரிக்கவும் கனடாவில் வழிமுறைகள் உள்ளன.    

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.