Jump to content

அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில் “தமிழன்” என்று சொல்லலாமா?


Recommended Posts

கொரோனா உக்கிர தாண்டவம் ஆடிக்கொண்டு லட்சக் கணக்கில் உயிர்ப்பலிகள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும், 2020ம் ஆண்டுக்கான அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்கின்றன.

ஒவ்வொரு வீட்டு முகவரிக்கும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய குறியீட்டு எண்ணுடன் கடிதம் அனுப்பட்டுள்ளது. அதை நினைவூட்டும் வகையில் இரண்டாவது கடிதமும் தபாலில் எல்லா வீட்டு முகவரியிலும் வந்து சேர்ந்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதியை சென்சஸ் டே(Census Day) என்று குறிப்பிட்டு அன்றைய தேதியில் அமெரிக்காவில் வசிப்பவர்களை, பெயர், வயது, முகவரி மற்றும் இனம் போன்ற விவரங்களுடன் கணக்கிடுகிறார்கள். ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கும் ஏப்ரல் 1ம் தேதி கடைசி நாளாகும்.

இந்த கணக்கெடுப்பில் தமிழர் என்று அடையாளப்படுத்துமாறு, 6 மாதத்திற்கு மேல் அமெரிக்காவில் தங்கி இருக்கும் தமிழர்கள் பங்கேற்குமாறு வட அமெரிக்கத் தமிழ் சங்க பேரவை சமூகத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்கள். உடன் ஒரு யூடியூப் வீடியோ இணைப்பும் அனுப்பட்டு இருந்தது. அதில் ஹெச்1, மாணவர் விசாவில் அபார்ட்மெண்டில், மாணவர் விடுதியில் தங்கியிருப்பவர்களும் இந்த கணக்கெடுப்பில் ஏன் பங்கெடுக்க வேண்டும் என்ற விளக்கத்துடன், Other Asian என்று தேர்வு செய்து அருகே உள்ள பெட்டிக்குள் Tamil என்று அடையாளப்படுத்துங்கள் என்று கூறப்பட்டிருந்தது. தமிழர் என்று அடையாளப்படுத்திக் கொள்வதால் என்னென்ன நன்மை என்று பட்டியலிட்டு இருந்தார்கள்.

இன்னொரு பக்கம், இப்படி தமிழர் என்று அடையாளப் படுத்தக்கூடாது. இந்தியாவிலிருந்து வந்திருப்பவர்கள் ஏசியன் இந்தியன் என்று தான் அடையாளப்படுத்த முடியும். பெற்றோர்கள் வேறு வேறு ஆசிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் என்றால் தான் Other Asian என்று பதிவிட முடியும். இந்தியாவிலிருந்து வந்தவர்கள் Other Asian என்று பதிவிட்டால் அது குற்றமாகும். மேலும், இனவாரியான கணக்கெடுப்பு அடிப்படையில் மத்திய நிதித் தொகுப்பிலிருந்து வழங்கப்படும் 675 பில்லியன் டாலர்கள், சமுதாயத்தில் பின் தங்கியிருப்பவர்களுக்கான செயல்திட்டங்களுக்கானது. இந்த தொகையில் பங்கு கேட்டால் தமிழர்கள் பேராசைக்காரர்கள் என்று கறுப்பின மற்றும் லத்தீன் இன மக்கள் கருதுவார்கள் என்றெல்லாம் குறிப்பிட்டு வாட்ஸ் அப்பில் ஆங்கிலத்தில் ஒரு பதிவும் சுற்றி வந்தது.

இது தொடர்பாக சென்சஸ் அலுவலர்களிடமே கேட்டு விடலாமே என்று,சென்சஸ் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த 1-844-330-2020 என்ற எண்ணில் அழைத்துக் கேட்டபோது, இனம் (Race) என்பது, நீங்கள் உங்களை எப்படி அடையாளப் படுத்திக் கொள்கிறீர்கள் என்ற விருப்பத்தின் அடிப்படையிலானது. ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளிலும் நீங்கள் அடையாளப் படுத்திக் கொள்ளலாம் என்று மறுமுனையில் பேசிய அலுவலர் குறிப்பிட்டார். மேலும், நான் கருப்பின அமெரிக்கன் மற்றும் ஹிஸ்பானிக். எனவே இரண்டையும் குறிப்பிடுவேன். ஒன்றுக்கு மேற்பட்ட இனத்தை குறிப்பிடவும் படிவத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

 

Census-Race-Questions.jpg

சென்செஸ் அலுவலர்கள் கிழக்கு நேரம் இரவு 2 மணி வரையிலும் 1-844-330-2020 என்ற தொலைபேசி எண்ணில், கேள்விகளுக்குப் பதிலளிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்தார் அந்த அலுவலர். இன்று ஏப்ரல் 1ம் தேதி ஆன்லைனில் பதிவு செய்ய கடைசி நாள். அமெரிக்காவில் வசிப்பவர்கள் கட்டாயம் இந்த கணக்கெடுப்பில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை ஆன்லைனில் பதிவு செய்யத் தவறினால், விடுபட்ட வீடுகளுக்கு விரைவில் நேரடியாக சென்செஸ் அலுவலர்கள் வர உள்ளனர். எல்லா சந்தேகங்களுக்கும் நேரிலேயே விளக்கம் கேட்டு, அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்கலாம்.

https://a1tamilnews.com/april-1-2020-us-census-day/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் நான் தமிழன் என்றுதான் போட்டு வருகிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஸ்ரீலங்கன் தமிழர் என்று போட்டோம். இரண்டாவது மகன் கனடாவில் பிறந்ததால் கனேடியன் தமிழ் என்று போட்டோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nilmini said:

நாங்கள் ஸ்ரீலங்கன் தமிழர் என்று போட்டோம். இரண்டாவது மகன் கனடாவில் பிறந்ததால் கனேடியன் தமிழ் என்று போட்டோம் 

இனம் ஒருபோதுமே மாறாது, வேற்றினக் கலப்பு இல்லாமல்.

UK இல் அல்லது EU இல் எந்த form இலும் diversity monitoring ஐ நிரப்பும் போது, ஈழத்தமிழர் (Eezham Tamil) என்றே இனத்தை எப்போதும் குறிப்பிடுவேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.