தமிழ் சிறி

ஏப்ரல் 5 அன்று ,9 நிமிடம் விளக்குகளை அணையுங்கள் .. பிரதமர் மோடி கோரிக்கை.

Recommended Posts

Coronavirus: Turn off your lights in home on this sunday says PM Modi

கொரோனா விழிப்புணர்வு.. ஏப்ரல் 5 அன்று, 9 நிமிடம் விளக்குகளை அணையுங்கள் .. பிரதமர் மோடி கோரிக்கை

கொரோனாவிற்கு எதிராக இந்தியா போராடி வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிராக வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்கவும், என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. மொத்தம் 2545 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தமிழகத்தில் 209 ஆக உயர்ந்துள்ளது.

இதையடுத்து பிரதமர் மோடி இன்னும் தொலைக்காட்சியில் தோன்றி மக்கள் முன்னிலையில் பேசினார்,

அதில் , இன்று லாக்டவுனின் 10-வது நாள்- பொதுமக்கள் இணைந்து கொரோனாவுக்கு எதிரான போராட வேண்டும். ஊரடங்கை கடைபிடிப்பதில் நாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

மக்கள் அனைவரும் இணைந்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு யுத்தம் நடத்தியதற்கு நன்றி.

கொரோனாவுக்கு எதிராக வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்கவும், வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அனைத்து செல்போன், டார்ச்லைட்டில் வெளிச்சம் ஏற்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/coronavirus-turn-off-your-lights-in-home-on-this-sunday-says-pm-modi-381617.html

Share this post


Link to post
Share on other sites

அடுப்பு பற்றவைக்கவே வசதியில்லாத மக்கள் விளக்கேற்ற முடியுமா? - மாஸ்டர் பட பிரபலம் டுவிட்

அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை பிரதமர் விளக்கை ஏற்ற சொல்வது சற்று பயமாக இருப்பதாக மாஸ்டர் பட பிரபலம் டுவிட் செய்துள்ளார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது, ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு , அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

ரத்னகுமார்..

இந்த நிலையில் ’மேயாத மான்’ ’ஆடை’ ஆகிய படங்களை இயக்கியவரும், விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் பணிபுரிந்தவருமான இயக்குனர் ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது: "வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார். ரத்னகுமாரின் இந்த டுவிட்டுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/03132658/1383979/Director-ratnakumar-comment-about-modis-request.vpf

 

Share this post


Link to post
Share on other sites

மோடியின்ரை போக்கே தனிதான்...
டம்ப்......ஜோன்சன்.........மோடி.....😎

Share this post


Link to post
Share on other sites

 

9 hours ago, தமிழ் சிறி said:

கொரோனாவுக்கு எதிராக வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்கவும், வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அனைத்து செல்போன், டார்ச்லைட்டில் வெளிச்சம் ஏற்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

மோடியின் கெட்டித்தனம் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆடுற மாட்டை ஆடிக்கறக்கவேண்டும் 
பாடுற மாட்டை பாடிக்கறக்கவேண்டும் 

Share this post


Link to post
Share on other sites

அன்னிக்கு 9 மணிக்கி தான் கொரனாக்கு சாந்திமுகூர்த்தம்.
லைட் அடிச்சா வெக்கப்பட்டு ஓடிடும்..

  • Like 1
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
9 hours ago, ampanai said:

மோடியின் கெட்டித்தனம் என்றுதான் சொல்லவேண்டும்.

ஆடுற மாட்டை ஆடிக்கறக்கவேண்டும் 
பாடுற மாட்டை பாடிக்கறக்கவேண்டும்

 

உண்மை தான். கொரோனாவுக்கு எதிராகப் போராடுபவர்கள் எல்லோரும் இறைவன் மாதிரி என்று ஒரு போடு போட்டாரே

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites
On 4/3/2020 at 9:28 AM, தமிழ் சிறி said:

கொரோனாவுக்கு எதிராக வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு அனைத்து விளக்குகளையும் அணைத்து வைக்கவும், வரும் 5-ந் தேதி இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அனைத்து செல்போன், டார்ச்லைட்டில் வெளிச்சம் ஏற்படுத்துங்கள் என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்துள்ளார்.

நரேந்திர மோடியும் டொனால்ட் டிரம்ப் வழியில் தனது வெகுளித்தனத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

Share this post


Link to post
Share on other sites

இங்கு  சுவிற்சர்லாந்தில்  ஒவ்வொரு  நாளும் அரசாங்கம் பத்திரிகையாளர் மகாநாடு நடத்தி பாதிகப்பட்ட மக்களுக்கான உதவி திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் . மக்களின் கேள்விகளுக்கு விலாவாரியான விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் இந்தியாவில்  மக்களை  திசை திருப்ப விளக்கை அணைப்பது போன்ற பைத்தியக்காரத்தனத்தை  இந்திய  மோடி அறிவித்துள்ளர். இந்தியாவில் தேவையான  அளவுக்கு அதிகமான  மூடர்கள் இருப்பது  மோடிக்கு தெரியும். வட இந்திய மூட பஜனைக் கோஷ்டிகள் என்னவாவது செய்யட்டும் கல்வியறிவுள்ள தென்மாநிலங்களாவது இந்த மோடியின் பித்தலாட்டதை விடுத்து  மக்களுக்கான நிவாரண  உதவித் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.  

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
2 hours ago, tulpen said:

இங்கு  சுவிற்சர்லாந்தில்  ஒவ்வொரு  நாளும் அரசாங்கம் பத்திரிகையாளர் மகாநாடு நடத்தி பாதிகப்பட்ட மக்களுக்கான உதவி திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள் . மக்களின் கேள்விகளுக்கு விலாவாரியான விளக்கங்களைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் இந்தியாவில்  மக்களை  திசை திருப்ப விளக்கை அணைப்பது போன்ற பைத்தியக்காரத்தனத்தை  இந்திய  மோடி அறிவித்துள்ளர். இந்தியாவில் தேவையான  அளவுக்கு அதிகமான  மூடர்கள் இருப்பது  மோடிக்கு தெரியும். வட இந்திய மூட பஜனைக் கோஷ்டிகள் என்னவாவது செய்யட்டும் கல்வியறிவுள்ள தென்மாநிலங்களாவது இந்த மோடியின் பித்தலாட்டதை விடுத்து  மக்களுக்கான நிவாரண  உதவித் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.  

இப்படி ஒரு பைத்தியம் இந்தியாவை நாடளுவதே நமக்கு நல்லது .

இன்றைய தேதியில் நமக்கு நடந்தது பத்து வருடங்களுக்கு முன்பு மறக்க  முடியாது . விழுந்த எமது  மக்களின் இறந்த உடல்களை கூட அடக்கம் செய்ய முடியாமல் ஒரு நெடும் போரை எதிர்கொண்டோம் .

இவ்வளவு கொடுமையும் இறுதி உதவி திட்டம் என்ற போர்வையில் திருகோணமலை  காபரில்  இருந்து சிறிது தூரத்தில் தங்கள் கப்பலில் இருந்து பார்த்து ரசித்து கொண்டு இருந்தார்கள் கனிபஸ்ட்க்கள் .

 

Edited by பெருமாள்
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

Share this post


Link to post
Share on other sites

எரியும் விளக்கை அனைத்திடவா
இருள்சூழ்ந்த வீட்டைத் தவிர்த்தடா

அகல்விளக்கை கணம் ஏற்றிடவா
அரைஇருளில் தினம் தவித்திடவா

மூடன் ஒருவன் கதைசொல்ல
முட்டாள்கள் சூழ்ந்து கைதட்டுகிறான் 

காடாளவும் தகுதியே இல்லாதவன்
நாடாளுகிறான் நணமே இல்லாமல் 

விளக்கை யனைத்தால் நோய்  விலகுமென்றால்
மருத்துவன் எதற்கடா மருத்துவமனையில்

தொற்று நோயாய் மூடநம்பிக்கை பரவியதால்
கற்றவனும் கடவுள் உண்டு என்கிறான்

முற்றும் பகுத்தறிவு அற்றுப்போனதால்
மூடநம்பிக்கையை தொழு தெழுகிறானே 

பற்றும் பக்தியும்  ஒழிந்து அழிந்து 
அற்றுப் போகும்  நாள் எந்நாளோ

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)

அகல் விளக்குகளை  ஏற்றச் சொன்ன பிரதமர்.. பட்டாசு வெடித்துக் கொண்டாடி விட்ட மக்கள்.!!

crack-1586102989.jpg

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இன்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்கு அல்லது செல்போன் டார்ச்சுகளை ஒளிரவிட பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் விளக்குகளை அணைத்த கையோடு பொதுமக்கள் பட்டாசுகளையும் வெடித்தனர்.கொரோனாவை முன்னிட்டு நாடு முழுவதும் லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி இன்று இரவு 9 மணிக்கு பொதுமக்கள் மின்விளக்குகளை 9 நிமிடங்கள் நிறுத்த வேண்டும்;

அப்போது அகல்விளக்குகள், மெழுகுவர்த்திகள், டார்ச் லைட், செல்போன் லைட் ஆகியவற்றை ஒளிர விடவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.இதனை ஏற்று இன்று நாடு முழுவதும் 9 மணிக்கு மின்விளக்குகள் அணைக்கப்பட்டன.

light67867-1586103394.jpg

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தீபங்கள் ஏற்றப்பட்டு, செல்போன் லைட்டுகள் ஒளிரவிடப்பட்டன.அத்துடன் நாட்டின் பல பகுதிகளிலும் இடைவிடாமல் பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. பிரதமர் மோடி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்குத்தான் இந்த விளக்கேற்றுதலை கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் பொதுமக்களோ தீபாவளியைப் போல இடைவிடாமல் பட்டாசு வெடித்தனர். தற்போதைய லாக்டவுனால் காற்றின் மாசு குறைந்திருந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் இன்று இரவு ஒரே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதும் சர்ச்சையாகி உள்ளது.

பட்டாசுகளுடன் அமர்க்களம்.

crak76-1586103385.jpg

லாக்டவுனால் 10 நாட்களாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர் பொதுமக்கள். எந்த ஒரு கொண்டாட்டமும் எதுவும் இல்லை.வீட்டின் நான்கு சுவர்களையும் மோட்டு வலையும்தான் பார்த்து கொண்டிருந்தனர் பொதுமக்கள்.

இப்போது பிரதமர் மோடி விடுத்த அழைப்பை பயன்படுத்தி பட்டாசுகளையும் வெடித்து கொண்டாடி தீர்த்துவிட்டனர் நம்ம மகா ஜனங்கள்.

https://tamil.oneindia.com/news/chennai/people-celebrates-pm-modi-s-invite-with-firecrackers-381820.html

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Share this post


Link to post
Share on other sites

இந்த நிர்வாணச் சாமிகளை நாடுமுழுவதும் அனுப்பியிருந்தால் மக்களுக்கு மின்சாரச் செலவு மிச்சமாய் இருந்திருக்கும். 🤣

kumbh-mela-1998.jpg

Share this post


Link to post
Share on other sites

பிரதமர் கூறியபடி மெழுகுவர்த்தி ஏற்றினால் வெப்பத்தில் கொரோனா செத்துவிடும் - பா. ஜனதா எம்.எல்.ஏ விளக்கம்

பிரதமர் கூறியபடி மெழுகுவர்த்தி ஏற்றினால் வெப்பத்தில் கொரோனா செத்துவிடும் என பா.ஜனதா எம்.எல்.ஏ அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார்.

பிரதமர் கூறியபடி மெழுகுவர்த்தி ஏற்றினால் வெப்பத்தில் கொரோனா செத்துவிடும் - பா. ஜனதா எம்.எல்.ஏ விளக்கம்
கோப்புபடம்
 
மைசூரு:

இந்தியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு மெழுகுவர்த்தி அல்லது மொபைல்டார்ச் மூலம் விளக்குகளை ஒளிரச் செய்ய வேண்டும் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
 


பிரதமரின் அறிவிப்பில் எந்த அறிவியல் காரணங்களும் இல்லை. மக்களின் ஒற்றுமையை விளக்குவதற்கு இந்த வேண்டுகோள் என்று மத்திய அரசு விளக்கமளித்திருந்தது. இருப்பினும், பிரதமரின் அறிவிப்புக்கு பின்னணியில் சிலர் அறிவியல் காரணங்களை உருவாக்கிவருகின்றனர்.

இந்தநிலையில், கர்நாடாக மாநிலம் மைசூரு தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ ராம்தாஸ பேசும் போது

மோடியின் வேண்டுகோளின்படி மக்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றவேண்டும். மெழுகுவர்த்தி உருவாக்கும் வெப்பத்தின் மூலம் கொரோனா வைரஸ் செத்துவிடும். என்னுடைய கணிப்பு அறிவியல்பூர்வமானது’என்று தெரிவித்துள்ளார்.

 

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/04/06001932/1394281/Ramdas-claims-lighting-candles-will-kill-virus.vpf

 

😃😃

Share this post


Link to post
Share on other sites

தமிழ்நாட்டில் ஒத்துழைப்பு இல்லை: பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று விளக்கை அணைக்க ஆர்வமில்லை

TamilNews_Apr_2020__287578761577607.jpg

 

சென்னை: தமிழ்நாட்டில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று விளக்கை அணைக்க ஆர்வமில்லை. பெரும்பாலான வீடுகளில் விளக்குகளை பொதுமக்கள் அணைக்கவில்லை. சென்னையில் ஒருசில இடங்களில் மட்டுமே விளக்குகள் அணைக்கப்பட்டன. 9 நிமிடம் விளக்குகளை அணைத்து டார்ச்சை ஒளிரவிட பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். கொரோனாவை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மக்களிடம் நேற்று கேட்டுக்கொண்டார்.

 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=576964

Share this post


Link to post
Share on other sites
  • He asked ctizens to light candles in show of solidarity against Covid-19

Share this post


Link to post
Share on other sites

ஏப்பிரல்  5 அன்று.... பா.ஜ. க. ஆரம்பித்து, 40 வருடங்கள் ஆகின்றதாம்.
அதற்குத்தான்... இந்த விளக்கேற்றும் விளையாட்டு என்று... இணையத்தில் சொல்கிறார்கள். 

Share this post


Link to post
Share on other sites

India-lights-lamps-to-find-strength-hope-in-dark-times.jpg

நாடு முழுவதும் வீடுகளில் மின் விளக்குகள் அணைந்தன: மெழுகுவர்த்தி ஏந்தி ஒன்றுபட்ட மக்கள்!

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தனர்.

நாடு முழுவதும் இன்று இரவு 9 மணிக்கு இந்த நிகழ்வினை மக்கள் தங்களது வீடுகளில் நிறைவேற்றி கொரோனா வைரஸில் இருந்து மீண்டுவருவதற்கான நம்பிக்கையை பலப்படுத்திக் கொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாதம் 25ஆம் திகதியில் இருந்து நாடு  முழுவதும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 3 ஆம் திகதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் ஒரு செய்தியை வெளியிட்டார்.

அப்போது, ஏப்ரல் 5ஆம் திகதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டேரர்ச் லைட் அல்லது தொலைபேசி வெளிச்சம் ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்படி, இன்றிரவு சரியாக 9 மணிக்கு இந்நிகழ்வு இந்தியா முழுவதும் இடம்பெற்றுள்ளது.

India-lights-lamps-to-find-strength-hope-in-dark-times-2.jpg

India-lights-lamps-to-find-strength-hope-in-dark-times-3.jpg

http://athavannews.com/நாடு-முழுவதும்-வீடுகளில்/

Share this post


Link to post
Share on other sites

முட்டாள் கூட்டங்கள்.

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
33 minutes ago, குமாரசாமி said:

முட்டாள் கூட்டங்கள்.

go கொரோன, go கொரோன, go கொரோன go எண்டு சொல்லி பாருங்கோ... 

மகத்துவம் தெரியும். 😄

Go Corona Go...
 

Edited by Nathamuni

Share this post


Link to post
Share on other sites
15 minutes ago, Nathamuni said:

go கொரோன, go கொரோன, go கொரோன go எண்டு சொல்லி பாருங்கோ... 

மகத்துவம் தெரியும். 😄

Go Corona Go...
 

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.