பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்னாகும்
-
Tell a friend
-
Similar Content
-
By selfywalking
1974 நவம்பர் 13 நியூயோர்கின் லாங் ஐலண்டில் அமிட்டிவில் என்ற நகரத்தில் அதிகாலை திடீர் என துப்பாக்கிவேட்டுச்சத்தங்கள் கேட்டன,ஒரு வீட்டில் இருந்த இளைஞன் திடீரென அதிகாலை எழுந்துவீட்டில் உள்ளவர்களை எல்லாம் துப்பாக்கி எடுத்து கொரூரமாக சுட்டு கொலை செய்துவிட்டான். அதன் பின் அவன் போலீஸாரால் உடனடியாக கைது செய்யப்பட்டான். 6 கொலைகள் நடைபெற்றுமுடிந்தன தன் தாய் தந்தை சகோதரக்ள் சகோதரிகள் என அனைவரையும் அவன் சுட்டுக்கொன்றிருந்தான்,இந்த சம்பவங்களால் அந்த வீட்டை யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை இருந்தும் மிக குறைவான விலைக்கு விற்கப்பட்ட அந்த வீட்டிற்கு அடுத்து குடி வந்தவர் தவறுதலாக எடுத்த ஒரு புகைப்படம் தான் இது ,பல ஆண்டுகளாக வைரலாக இணையத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தின் பின்னால் இருக்கும் கதை என்ன? இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பேயா? வாருங்கள் முழுமையாக காணலாம்.
அமிட்டிவில்
ஹாலிவுட்டில் பல்வேறு பேய் மற்றும் அமானுஷ்யம் நிறைந்த பேய்ப்படங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அப்படியாகக் கடந்த 2005ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அமிட்டி வில் ஹாரர். இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. உண்மையிலேயே அந்த வீட்டில் என்ன நடந்ததோ அது அந்த திரைப்படத்தில் வரும் காட்சிகளை விடக் கொடூரமானதாகவும் திகில் நிறைந்ததாகவும் இருந்தது. இதற்கு முன்னர் இப்படி ஒரு சம்பவத்தையே கேள்விப்படாத பலருக்கு இந்த சம்பவம் தெரிந்ததும் ஒரு வித பயத்தை ஏற்படுத்தியமைதான் இதைத் திரைப்படமாகவும் எடுக்கக் காரணமாக அமைந்ததது. இந்த காணொளியில் நாம் அமிட்டிவில் பேய் வீடு குறித்தும் அங்கு நடந்தவற்றையும் தற்போது அந்த வீட்டில் நடப்பவைகளையும் பார்க்கலாம் வாருங்கள்.
அழகான வீடு
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் அமிட்டிவில் இங்குள்ள ஒரு வீட்டில் தான் இந்த விஷயம் நடந்தது. இந்த வீடு வழக்கம் போல மற்ற வீடுகளைப் போலத் தான் இருந்தது. இதை வீடு என்பதை விடப் பங்களா என்றே சொல்லலாம். இந்த வீட்டில் சன்ரூம், பேக் பேட்டியோ, டெக், போட்ஹவுஸ் என்ற சகல வசதிகளும் இருந்தன. பொதுவாக அமெரிக்காவில் இந்த வசதிகள் பெரும்பாலான வீடுகளில் இருக்கும்.
1970 களில் இந்த வீட்டில் டிஃபோ என்பவரின் குடும்பம் வசித்து வந்தது. அவர் வீட்டில் அவர், அவர் மனைவி மற்றும் அவரின் 5 குழந்தைகளும் வசித்து வந்தனர். இந்நிலையில் நவம்பர் மாதம் ஒருநாள் அதிகாலை 3.15 மணிக்கு இந்த வீட்டில் ஒரு சம்பவம் நடக்கிறது
டிஃபோவின் 23 வயது மகன் ரொனால்டு டிஃபோ என்பவர் அதிகாலை 3.15 மணிக்கு எழுந்து வீட்டிலிருந்த 0.35மிமீ துப்பாக்கியை எடுத்து வீட்டில் உள்ள மற்றவர்கள் தங்கியிருக்கும் அறைகளுக்குச் சென்று அங்குத் தூங்கிக் கொண்டிருந்தவர்களை எல்லாம் வரிசையாகச் சுட்டுக் கொலை செய்தார். அவர் தனது தாய், தந்தை மற்றும் உடன் பிறந்தவர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேரைக் கொரூரமாக கொலை செய்கிறான் இவன்
கைது
இந்த தகவல் அதிகாலை போலீசாருக்கு தெரிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்கிருந்த ரொனால்டை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்த போது அவன் கூறியபதில் அவ்ர்களை திக்குமுக்காடவைத்தது தன்னை ஏதோ ஒரு குரல் அப்படிச்செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும். அது தன்னை மூளைச் சலவை செய்து அப்படிச் செய்ய வைத்துவிட்டதாகவும் வாக்கு மூலம் அளித்தான் அவன். ஆனால் போலீசார் ஆரம்பத்தில் இவன் தண்டனையிலிருந்து தப்பிக்க ஏதோ பொய் கூறுகிறான் என்றுதான் நினைத்தார்கள்
பாழடைந்த வீடு
6 பேர் கொலைசெய்யப்பட்ட வீடு என்பதால் அந்த பகுதியில்உள்ள மக்கள் அந்த வீட்டை ஒரு பயங்கரமான வீடாகவே பார்த்தனர். வீட்டில் இருந்த அனைவரும் இறந்துவிட்டனர். ரொனால்டும் சிறைக்குச் சென்று விட்டார். அந்த வீட்டில் யாருமே வசிக்க வில்லை. வீடும் பராமரிப்பின்றி பாழடைந்து காணப்பட்டது.
கோட்டில் ரொனால்டு மீது நடந்த வழக்கில் அவருக்கு 6 ஆயுள் தண்டனை கிடைத்தது. இவர் தற்போது நியூயார்க்கில் உள்ள ஒரு சிறையில் இன்றும் கைதியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் இவர் சிறைக்குச் சென்றதும் வீடு அந்த வீடு விற்பனைக்கு வந்தது. ஆனால் யாரும் இந்த வீட்டை வாங்க முன்வரவில்லை அந்த வீட்டில் அமானுஷ்யமான சக்திலக்ள் இருப்பதாக பலர் நம்பியமையே இதற்கு காரணம்,மிகக்குறை1975ம் ஆண்டு ஜார்ஜ் லட்ஸ் என்பவர் இந்த வீட்டை விலைக்கு வாங்கினார்.
அதனால் இந்த வீட்டின் மதிப்பு மிகவும் குறைந்துகொண்டே சென்றது கிட்டத்தட்ட இவ்வளவு பெரிய பங்களாவை வெறும் 80 ஆயிரம் அமெரிக்க டாலருக்கு ஜார்ஜ் லட்ஸ் என்பவர் வாங்கினார். அவர் தனது மனைவி கேத்தி, மற்றும் மகன்கள் டேனியல் மற்றும் கிறிஸ்டோபர் ஆகியோருடன் அந்த வீட்டிற்குக் குடி புகுந்தார். குறைந்த விலையில் வீடு வாங்கிவிட்டு செட்டில் ஆகிவிட்டதாக நினைத்து லட்ஸ் ஆரம்பத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்தார்.
ஆனால் அந்த சந்தோஷம் வெகு நாட்களுக்கு நிலைக்கவில்லை. வீட்டிற்குள் அவர்கள் குடிவந்ததும் ஏதோ ஒரு வித அமானுஷ்யத்தை உணர துவங்கினர். அவர்களை யாரோ கண்காணிப்பது போலவும், அவர்களைச் சுற்றி யாரோ ஒருவர் இருப்பது போலவும் அவர்கள் உணர்ந்தனர். இது மட்டுமல்ல தினம் தினம் ஏதோ ஒரு விடயம் வித்தியாசமாக நடக்கத் துவங்கியுள்ளது.
samayam tamil
லட்ஸ் அவர் வீட்டின் சுவர்களிலிருந்து பிசுபிசுப்பான ஏதோ ஒரு விஷயம் வெளியேறுவதைக் கவனித்துள்ளார். அது என்னவென்று அவருக்குப் புரியவில்லை. அதன்பின் அவர் வீட்டின் அருகே உள்ள பன்று யாரும் இல்லாத வீட்டை உற்றுப் பார்த்து மிரண்டு பார்த்துக்கொண்டிருந்தது. அதன் கண்களில் சிவப்பு நிறங்களில் ஏதோ தெரிந்துள்ளது. ஆனால் இவர் பார்க்கும் போது வீட்டிற்குள் எதுவுமில்லை.அமெரிக்காவை உலுக்கிய திகில் சம்பவம்
இதை விட உச்சகட்டமாக லட்ஸ் இரவு தூங்கும் போது ஒருமுறை அதிகாலை நேரத்தில் விழித்து எழுந்துள்ளார். அப்பொழுது அருகில் படுத்திருந்த அவரது மனைவி படுத்துத் தூங்கிக்கொண்டிருந்த நிலையிலேயே அந்தரத்தில் மிதந்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் இவர் பதறி எழுந்துள்ளார். உடனே மனைவி கட்டிலில் விழுந்துவிட்டார் விடயம் இதோடு முடிந்துவிடவில்லை
-
By இ.பு.ஞானப்பிரகாசன்
ஒரு படத்தில் வடிவேலுவிடம் “ஆளுக்கு ஐயாயிரம் ரூபாய் எடுத்து வை! இல்லன்னா எங்களை செவ்வாய் கிரகத்துக்குக் கூட்டிட்டுப் போ!” என்று போதைப்பொருளுக்குப் பணம் கேட்டு மிரட்டுவார் மயில்சாமி.
வெறும் போதை மயக்கத்தின் மூலம் செவ்வாய்க் கோளுக்குப் போகவே ஐயாயிரம் ரூபாய் ஆகும் என்றால், அது கூட இல்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே உங்களை... இல்லை இல்லை... உங்கள் பெயரைச் செவ்வாய்க்கோளுக்கு அழைத்துப் போக இன்று முன்வந்திருக்கிறது நாசா.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய்க் கோள் பற்றிப் பல ஆண்டுகளாகவே தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. உலாவிகளை (Rovers) அந்தக் கோளில் தரையிறக்கி நேரிடையாகவே பல சோதனைகளையும் நடத்தி வருகிறது. இவையெல்லாம் நாம் அறிந்தவையே. இதன் அடுத்த பகுதியாக வரும் ஆண்டில் ‘மார்சு 2020 (MARS 2020)’ எனும் செயல்திட்டத்தின் கீழ் மீண்டும் இன்னோர் உலாவியைச் செவ்வாயில் இறக்கத் திட்டமிட்டுள்ள நாசா இதில் மக்களும் கலந்து கொள்ளும் வகையில் ஒரு சிறிய முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. இதன் மூலம் நாமும் பெயரளவில் செவ்வாய்க்குப் போக முடியும். எப்படி எனக் கேட்கிறீர்களா?
நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; நாசாவின் இந்த இணையத்தளப் பக்கத்துக்குச் சென்று அங்கு காணப்படும் சிறிய படிவத்தில் நம் பெயர், முகவரி, மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை நிரப்பி அனுப்ப வேண்டும். உலகெங்குமிருந்து இவ்வாறு திரட்டப்படும் பெயர்கள் அனைத்தும் (நெறிமுறைகளுக்கு உட்படாத வகையிலான பெயர்கள் தவிர) ஒரு நுண்சில்லில் (microchip) பதிவு செய்யப்பட்டு, உலாவியில் (Rover) இணைத்துச் செவ்வாய்க்கு அனுப்பப்படும்.
அதாவது ஒரு காசு செலவில்லாமல், எந்த விதக் கடினமான பயிற்சியும் மேற்கொள்ளாமல் யார் வேண்டுமானாலும் விண்வெளிப் பயணம் செய்யலாம், செவ்வாய்க்குப் போகலாம்.
“அட, செவ்வாய்க்குப் போகும் கருவியில் ஓர் ஓரமாக நம் பெயரை ஒட்டி அனுப்பப் போகிறார்கள், அவ்வளவுதானே?” எனக் கேட்கலாம். ஆனால் இதற்காக வழங்கப்படும் பயணச்சீட்டைப் பார்த்தால் அப்படித் தோன்றாது. இதோ கீழே உள்ள படத்தைப் பாருங்கள்!
நம் பெயர் முதலான விவரங்களைக் கொடுத்த உடனே மேற்கண்டவாறு ஒரு பயணச்சீட்டு நமக்கு வழங்கப்படுகிறது. அதில் பாருங்களேன், செவ்வாய்க்கு அனுப்பப்பட உள்ள ஏவூர்தி (Rocket), அது புறப்படும் இடம், செவ்வாயில் அது தரையிறங்கும் இடம் என அத்தனை விவரங்களுடன் கூடவே பெரிய எழுத்துக்களில் நம் பெயரும் பொறிக்கப்பட்டு ஏறக்குறைய உண்மையான பயணச்சீட்டுப் போலவே இருக்கிறது!
இந்தத் திட்டம் கேட்கச் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும் இப்படி ஒரு பயணச்சீட்டை நம் பெயரில் பெறும்பொழுது புதுவிதமான உணர்வு ஒன்று ஏற்படத்தான் செய்கிறது. இந்தச் சீட்டை நாம் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம்; தரவிறக்கிக் (Download) கொள்ளலாம்; அச்செடுத்துக் கொள்ளலாம்; இதற்கென அளிக்கப்படும் ஒட்டுநிரலியின் (Embed Code) மூலம் நமது வலைப்பூவில் / இணையத்தளத்தில் இப்படிக் காட்சிக்கும் வைக்கலாம்.
அதுவும் இத்திட்டத்துக்காக நாம் பெயர் தாக்கல் (submit) செய்வது இந்த ஒரு தடவையோடு முடிவது இல்லை. அடுத்தடுத்த செவ்வாய்க்கோள் ஆராய்ச்சிகளின்பொழுதும் இதே போல் நம் பெயரை மீண்டும் மீண்டும் அனுப்பலாம்; ஏற்கெனவே கலந்து கொண்டவர்கள் எனும் பெருமையோடு. இதற்கு முன்பு 2014, 2015, 2017 ஆகிய ஆண்டுகளிலும் இதே போன்ற வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அப்பொழுது அனுப்பியவர்கள் இப்பொழுது மீண்டும் தங்கள் பெயரை அனுப்ப அதே இணையப் பக்கத்தில் மறுபயணர் (Frequent Flyer) எனும் சிறப்புப் பிரிவும் வழங்கப்பட்டுள்ளது.
திட்டம் துவங்கிய நாள் முதல் இதோ கட்டுரையின் இந்த வரியைத் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இந்நொடி வரை 88,60,325 பேர் தங்கள் பெயரை இத்திட்டத்தின் கீழ் தாக்கல் (submit) செய்திருக்கிறார்கள்! இன்னும் பல கோடிப் பேர் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகப் பெரும் புகழும் தலைசிறந்த சாதனை வரலாறும் கொண்ட நாசாவின் செயல்திட்டம் (project) ஒன்றில் நமது பெயரும் ஏதோ ஒரு வகையில் இடம்பெறுவது நமக்குப் பெருமைதானே! வரலாற்றில் நம் பெயரும் பதிவாக இது ஒரு வாய்ப்புத்தானே என நினைப்பவர்கள் இப்பொழுதே தங்கள் பெயரை அனுப்பி வைக்கலாம்.
அதே நேரம், விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவுக்குத் திடீரென அரசியல்வாதிகளைப் போல இப்படி மக்களை மகிழ்விக்கும் எண்ணம் வந்தது ஏன் என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்!
நாசாவின் செவ்வாய்க் கோள் ஆராய்ச்சிகள் அனைத்துக்கும் முக்கிய நோக்கமே அங்கு மனிதர்கள் வாழ முடியுமா என்பதைக் கண்டறிவதுதான். ஏற்கெனவே உலகப் பெருமுதலாளிகளின் பணவெறியும் அதற்காகவே அரசு நடத்தும் அமெரிக்கா போன்ற நாடுகளின் வலச்சாரி அரசியலும் இணைந்து இந்தப் பூமியை உயிர்கள் வாழத் தகுதியில்லாத சுடுகாடாக மாற்றத் தொடங்கி விட்டன. ஓசோனில் ஓட்டை, துருவப் பகுதிகளில் பனிமலைகள் உருக்கம், இந்தியா போன்ற பல நாடுகளில் ஏற்படும் வரலாறு காணாத வெள்ளம் என்று உலக அழிவுக்குப் பல எச்சரிக்கைகளை இயற்கை காட்டி விட்டது. ஆனாலும் இந்த வளர்ந்து கொழுத்த நாடுகள் சுற்றுச்சூழலுக்கு எதிரான தங்கள் எந்த நடவடிக்கையையும் அணுவளவும் மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இல்லை. மாறாக, வேறு புது உலகையே வேண்டுமானாலும் படைத்துக் கொள்ளலாமே ஒழிய இந்தப் பூமியில் மிச்சமிருக்கும் இயற்கை வளங்களையும் சக்கையாகப் பிழிந்தெடுக்காமல் விடுவதில்லை என்கிற முடிவில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அப்படி ஒரு புது உலகைப் படைப்பதற்கான முயற்சிதான் நாசாவின் செவ்வாய்க் கோள் ஆராய்ச்சிகள்.
ஆனால் இந்த முயற்சி பலன் தர வேண்டுமானால் பெருமுதலாளிகள் கொண்டு வந்து கொட்டும் பண மூட்டைகள் மட்டும் போதாது; மக்களின் ஆதரவும் கொஞ்சமாவது வேண்டும். ஏனெனில் வருங்காலத்தில் மனிதர்களைச் செவ்வாய்க்குப் புலம்பெயரச் செய்வதாக இருந்தால் உலகப் பெரும் பண முதலைகள் மட்டும்தாம் அதில் இடம் பிடிப்பார்கள் என்றாலும் அவர்களுக்கு அடிமை ஊழியம் பார்ப்பதற்காகவாவது நம்மைப் போன்ற எளிய மனிதர்களும் சில கோடிப் பேர் தேவை.
எனவே எல்லாவற்றுக்கும் முன்னதாக மக்கள் உள்ளத்தில் விண்வெளிப் பயணம், செவ்வாய்ப் பயணம் போன்றவற்றின் மீது அடிப்படை ஆவலைத் தூண்டியாக வேண்டும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அந்த மிகப் பெரிய மாற்றத்துக்கு மனிதர்களை உள்ளத்தளவில் கொஞ்சமாவது ஆயத்தப்படுத்தியாக வேண்டும். அதற்கான உலகளாவிய ஒரு முயற்சிதான் இந்தப் பெயர் திரட்டும் வேலை என்பது என் தனிப்பட்ட கருத்து.
ஆம்! உலகம் விட்டு உலகம் பறக்கும் அந்த உச்சப் பொருட்செலவுப் பயணத்தின் நுழைவுச்சீட்டை வாங்க வசதியற்ற நமக்கு வழங்கப்படும் ஒரு சிறு ஆறுதல் பரிசுதான் இந்த இலவச நுழைவுச்சீட்டு. அதாவது கட்டுரையின் துவக்கத்தில் சொன்ன நகைச்சுவைக் காட்சியைப் போல், என்றைய பொருளாதாரத்திலும் செவ்வாய்க்குப் போக முடியாத நம்மைப் போன்ற எளிய மயில்சாமிகளுக்கு வழங்கப்படும் ஒரு சிறு போதை இது!
இப்படி எல்லாவற்றையும் ஆழமாக, தீவிரமாகச் சிந்தித்து வாழ்க்கையில் கிடைக்கும் சில சின்னஞ்சிறு இன்பங்களை இழக்க வேண்டுமா எனக் கேட்பவரா நீங்கள்? கைதூக்குங்கள், நீங்களும் என் கட்சியே! தட்டி விடுங்கள் உங்கள் பெயரையும் உங்கள் அன்புக்குரியவர்களின் பெயர்களையும் நாசாவுக்கு. கடைசி நாள் செப்டம்பர் 30.
இது பற்றி மேலும் விவரங்கள் அறியவும் ஐயம் ஏதும் இருந்தால் தெளிவுபடுத்திக் கொள்ளவும் மேலே கூறிய இணையப்பக்கத்தின் அடியில் காணப்படும் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ) எனும் இணைப்பைச் சொடுக்குங்கள்!
❀ ❀ ❀ ❀ ❀ (நான் தினச்செய்தி நாளிதழில் ௩௦-௦௮-௨௦௧௬ அன்று எழுதியது).
படங்கள்: நன்றி மார்சு 2020 செயல்திட்டம் - தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி மேலாண்மை மையம் (NASA) தொடர்புடைய பதிவுகள்:
✎ இணையத்தமிழ் ஊடகம்! – நான்காம் தமிழின் வளர்ச்சியில் அடுத்த கட்ட முயற்சி!
✎ முகநூல் 'விருப்பம்' பொத்தான் - புதிய சிக்கலும் தீர்வும்!
-
-
Topics
-
Posts
-
ஜெனிவாவில் இரட்டை நன்மை : நா.உறுப்பினர் சுமந்திரன் வீரகேசரி வார வெளியீட்டுக்குப் பிரத்தியேக செவ்வி .. ! 'புதிய பிரேரணையை இலங்கை நிராகரித்தால் அதன் சர்வதேச உறவில் முறிவுகள் ஏற்படும்' வடமாகாண சபையின் ஐ.நா.வுக்கான தீர்மானம் இனப்படுகொலையை வலியுறுத்தவில்லை' சர்வஜன வாக்கெடுப்பைக் கோருவதானது முரண்பாடான விடயமாகவே இருக்கும். குறைந்தபட்ச சாத்தியப்பாடுகளுடனனேயே குற்றவியல் நீதிமன்றுக்கான முயற்சி. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த மார்ச் மாதக் கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மீள எடுப்பதால் அதனை உயரிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புக் கிடைப்பதோடு, பேரவையினுள் இலங்கை பற்றிய புதிய தீர்மானமும் தடையின்றி நிறைவேற்றப்பட்டு சர்வதேச மேற்பார்வை தொடர்ந்தும் நீடித்திருக்கும் நிலை ஏற்படுகின்றது. இது எமக்கு இரட்டை நன்மையை அளிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் , யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போது குறிப்பிட்டார் . அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு: கேள்வி : - தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள மூன்று கூட்டுக்கள் ஒன்றிணைந்து ஜெனிவா மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் பின்னடித்த விடயங்கள் சிலவற்றை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றதே ? பதில் : - கூட்டமைப்பு பின்னடித்த விடயங்கள் என்று எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்? கேள்வி : - இனப்படுகொலை நடைபெற்றமை மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களைத்தான் கூறுகின்றேன் ? பதில் : - அவ்வாறில்லை. ‘நான் 2013 ஆண்டில் முதன்முதலாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்றது ஒரு ' இனப்படுகொலை’ என்று குறிப்பிட்டு இலங்கைப் பாராளுமன்றத்திலே உரையாற்றியிருந்தேன் . அது பகிரங்கமாக கூறப்பட்டதொன்றுதானே. கேள்வி : - நீங்கள் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருந்தாலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் அல்லது தீர்மானங்களில் இனப்படுகொலை என்பதை வலியுறுத்தவில்லையல்லவா ? பதில் : - முதன் முதலாக 2011 ஆண்டு மார்ச் 31 ஆம் திகதி ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஆணையின் பிரகாரம் இலங்கை பற்றிய மூன்று நிபுணர்கள் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டது . செயலாளர் நாயகம் அந்த அறிக்கையை செப்டெம்பரில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைத்திருந்தார் . அந்த அறிக்கையில் 'இனப்படுகொலை' என்ற சொற்பதம் பயன்படுத்தப்படவில்லை. ‘துன்புறுத்தல்கள்' என்ற சொற்பதமே உள்ளது . அதில் ‘இனப்படுகொலை' என்ற சொற்பதத்தினை பயன்படுத்தாமை தொடர்பில் நாம் நீண்ட நேரம் அவர்களுடன் விவாதித்தோம். அச்சமயத்தில் , ‘இனப்படுகொலை' என்பதற்கான 'நோக்கு' மற்றும் '’குற்றவியல்” ரீதியான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் இல்லாமை, அத்துடன் ' கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை' என்பது நீண்டகாலமாக நடைபெறுவதால் அதனைக் குறிப்பிட்டு கூறி உள்ளீர்க்க முடியாமை தொடர்பில் எமக்கு தெளிவு படுத்தினார்கள். 2012 ஆம் ஆண்டில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையானது , ' பிரகடனத் தீர்மானத்தினையே ' செய்தது . அதன் பின்னர் 2012 , 2013 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துமாறே குறிப்பிட்டிருந்தன. அரசாங்கம் அதனை முன்னெடுக்காததன் காரணத்தினாலேயே 2014 இல் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அலுவலகம் மூலமாக சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்வதற்கு பரிந்துரைக்கப்பட்டது . அந்த தீர்மானத்திற்கு அமைவாகவே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கை பற்றி ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடைய அவலுவலகத்தினால் விசாரணை அறிக்கை 2015 செப்டெம்பர் 16 ஆம் திகதி ஜெனிவாவில் வெளியிடப்பட்டது . இதிலும் ' இனப்படுகொலை' என்ற சொற்பதம் பயன்படுத்தப்படவில்லை. குறித்த அறிக்கை வெளியிடப்பட்டபோது, பத்திரிகையாளர் ஒருவர் இனப்படுகொலை என்ற சொற்பதம் இடம்பெறாமை குறித்துக் கேள்வி எழுப்பிய சமயம் உயர்ஸ்தானிகர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹசைன் , "போதுமான ஆதரங்கள் இல்லாமையாலேயே அச்சொற்பதத்தினை பயன்படுத்தவில்லை" என்று குறிப்பிட்டார் . நாம் சமூகவியல் சார்ந்து இனப்படுகொலை என்று குறிப்பிட்டாலும் குற்றவியல் அடிப்படையில் அதற்கான சான்றுகள் அப்போது போதுமானதாக இருக்கவில்லை. கேள்வி : - 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்திலும் அவ்விடயம் இருக்கவில்லையே ? பதில் : - 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் இலங்கை அரசாங்கத்தினது இணை அனுசரணையைப் பெற்றுக்கொண்டதாகும் . ஏற்கனவே 'இனப்படுகொலை' என்ற சொற்பதத்தினை பயன்படுத்துவதில் உள்ள நிலைமைகளை நாம் புரிந்து கொண்டிருந்தோம். முன்னதாக வெளியான ஐ.நா.வின் இரண்டு அறிக்கைகளில் அச்சொற்பதம் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. அவ்வாறான நிலையில் அச்சொற்பதத்தினைப் பயன்படுத்திவிட்டு பின்னர் அதனை நிரூபிக்க முடியாது போனால் அது எமக்குப் பலத்த பின்னடைவுகளையே ஏற்படுத்தும். அதன் காரணத்தினால்தான், நாம் இனப்படுகொலை , மனிதாபிமானச் சட்ட மீறல்கள், துன்புறுத்தல்கள், போர்க்குற்றங்கள், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள் என்று தனித்தனியாக வகைப்படுத்தாது பொதுவாக 'சர்வதேசச் சட்ட மீறல்கள்' என்ற சொற்பதத்தினை ஒரு 'உத்தியாக' பயன்படுத்தி இருந்தோம் . கேள்வி : - சட்ட நுட்பங்கள் அறிந்தவரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்து வடக்கு மாகாண சபையில் 2015 பெப்ரவரி 10 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இனப்படுகொலைச் சொற்பதம் பயன்படுத்தப்பட்டுள்ளதே ? பதில் : - அந்தத் தீர்மானத்தினை அனைவரும் இனப்படுகொலைத் தீர்மானம் என்றே கூறுகின்றார்கள் . அந்த தீர்மானத்தின் இறுதிப்பகுதியை மிகக் கவனமாக அவதானித்தால் , அதில் 'கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை' என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, 'கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை’ என்பது 'சர்வதேச குற்றங்களில் ஒன்றாக இன்னமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை', ஆகவே அது வருங்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றே அத்தீர்மானம் நிறைவடைகிறது . அந்த தீர்மானம் இலங்கையில் நடந்தது 'சர்வதேச குற்றங்கள் இல்லை' என்ற செய்தியையே ஐ.நா.வுக்கு வழங்கியுள்ளது . அவ்விதமான எமது பலவீனங்களை எடுத்துக் காட்டும் வகையிலும் மக்களுக்கு நன்மை கிடைக்காத முறையிலும் நாம் செயற்படவில்லை. கேள்வி : - நீண்டகாலமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்று கூறிவந்த நீங்கள் பொது ஆவணத்தில் அவ்விடயம் உள்வாங்கப்படுவதற்கு எவ்வாறு இணக்கம் தெரிவித்தீர்கள் ? பதில் : - கடந்த 10 வருடங்களாக மனித உரிமைகள் பேரவை ஊடான முயற்சியில் பொறுப்புக்கூறல் செய்யப்படவில்லை . கடந்த ஐந்து வருடங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் ஐ.நா.தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி வாக்குறுதிகளை அளித்தாலும் உள்நாட்டில் எந்தவிதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை . பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்கள் நாடுகளை கட்டுப்படுத்தாது . சம்பந்தப்பட்ட நாடு இணங்கினால் மட்டுமே பொறுப்புக்கூறல் தொடர்பாக நிறைவேற்றப்படும் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தலாம் . அதுவே மனித உரிமைகள் பேரவையின் அமைப்பு முறைமையாகும் . அந்த அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் கடந்த செப்டம்பர் கூட்டத்தொடரில் ஐ.நா.தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அறிவித்து விட்டது . அதன் பின்னர் , பொறுப்புக்கூறல் விடயத்தினை மனித உரிமைகள் பேரவையில் வைத்திருப்பதால் பயனில்லை . ஆகவே தான் அதனை அங்கிருந்து மீளெடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நோக்கி கொண்டு செல்ல வேண்டியுள்ளது . கேள்வி : - இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முடியும் என்ற நம்பிக்கை உங்களிடத்தில் உள்ளதா ? பதில் : - சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மூன்று வழிகளே உள்ளன . முதலாவது , ' ரோம் ' சாசனத்தில் சம்பந்தப்பட்ட நாடு கைச்சாத்திட்டிருக்க வேண்டும் . ஆனால் இலங்கை அதில் கையொப்பமிடவில்லை . இரண்டாவது , சம்பந்தப்பட்ட நாடு இணங்கி குற்றவியல் நீதிமன்றப் பொறிமுறைக்கு முகங்கொடுக்க வேண்டும் . இலங்கை அவ்விதமான இணக்கத்தை ஒருபோதும் தெரிவிக்கப்போவதில்லை . மூன்றாவது ஐ.நா.பாதுகாப்புச் சபையின் ஊடாக பரிந்துரைக்கப்பட வேண்டும் . இதுவொன்றே எமக்குள்ள ஒரேவழியாகும் . ஆனால் இதில் வீட்டோ அதிகாரத்தினைக் கொண்டுள்ள ரஷ்யா , சீனா இலங்கையை காப்பாற்றும் என்பதே எனது தர்க்கமாகும் . ஆனால் பல சந்தர்ப்பங்களில் இவ்விதமான விடயங்களில் சீனா வீட்டோவை பயன்படுத்தாது இருந்துள்ளதாக பொது ஆவணத் தயாரிப்பு கலந்துரையாடல்களின் போது எனது நிலைப்பாட்டுக்கு எதிரான தர்க்கங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன . ஆகவே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சாத்தியமில்லை என்று எதிர்மறையாக சிந்திப்பதை விடவும் ஒரு சதவீதமேனும் உள்ள சாத்திய வழியில் முயற்சித்துப்பார்ப்போம் என்ற நிலைப்பாடு உடையவர்களின் முயற்சிக்கும் கருத்துக்கும் குறுக்கே நிற்பதற்கு நான் விரும்பவில்லை . அதனாலேயே சம்மதம் தெரிவித்தேன் . அவ்விதமான முயற்சி வெற்றி பெற்றால் அதனை மனதார வரவேற்கும் முதல் நபரும் நானே . கேள்வி : - மனித உரிமைகள் பேரவையில் இருந்து பொறுப்புக்கூறல் விடயம் மீள எடுக்கப்படும் பட்சத்தில் அடுத்த கட்டச் செயற்பாடுகள் என்ன ? பதில் : - பொறுப்புக்கூறல் மீளவும் எடுக்கப்பட்டு அதனை மீண்டும் ஐ.நா.செயலாளர் நாயகத்திடம் அனுப்புமாறு ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரைக் கோரியுள்ளோம் . ஏனென்றால் அவரே இலங்கை விடயத்தினை மனித உரிமைகள் பேரவைக்கு 2011 இல் அனுப்பி வைத்தவர். அவர் அனுப்பி வைத்த விடயம் பத்து ஆண்டுகளாக எந்த முன்னேற்றத்தினையும் எட்டவில்லை என்ற செய்தியையும் அவருக்கே மீள அனுப்பி வைப்பதன் ஊடாக தெரிவிக்க முடியும் . மேலும் மனித உரிமைகள் பேரவையாலோ அல்லது உயர்ஸ்தானிகராலோ இந்த விடயத்தினை நேரடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த முடியாது . ஆகவே செயலாளர் நாயகத்திடம் அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் பொதுச்சபையில் இந்த விடயத்தினை விவாதித்துத் தீர்மானம் எடுத்தே அவரால் சாத்தியமான பொறிமுறைகளில் ஒன்றைப் பரிந்துரைக்கலாம். உதாரணமாக, கூறுவதென்றால் பாதுகாப்புச் சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் அவரால் அனுப்பபடலாம். அல்லது , சிரியா விடயத்திற்காகப் பொதுச்சபையால் உருவாக்கப்பட்ட சாட்சியங்களை சேகரிக்கும் பொறிமுறையைப் போன்றதொரு கட்டமைப்பை உருவாக்கலாம் . நாம் அனுப்பி வைத்துள்ள ஆவணத்தில் சிரியாவை ஒத்தபொறிமுறையை உதாரணமாகக் கூறியுள்ளமைக்கு காரணம் என்னவென்றால், பொறுப்புக்கூறல் விடயத்தினை நீதிமன்றப் படிமுறைக்குள் கொண்டு செல்வதற்காகவே. அவ்விதம் பரிந்துரைக்கும் கட்டமைப்பு செயற்படுவதற்காக ஒருவருட கால அவகாசம் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளோம் . கேள்வி : - இதில் மியன்மார் பொறிமுறைகள் ஒரு உதாரணமாக உள்ளீர்க்காமைக்கான காரணம் என்ன ? பதில் : - மியன்மார் விடயத்தில் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையே அந்தப் பொறிமுறையை உருவாக்கியுள்ளது . நாங்கள் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை மனித உரிமைகள் பேரவையிலிருந்து மீள எடுப்பதற்கான கோரிக்கையை முதலில் விடுத்துவிட்டு பின்னர் அதே ஆவணத்தில் மனித உரிமை பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறிமுறையை கோருவதானது முன்னுக்குப்பின் முரண்பாடாக இருக்கும் என்பதால் தான் அப்பொறிமுறையை உள்வாங்கவில்லை . கேள்வி : - இலங்கை அரசாங்கம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க முடியாதென கூறியுள்ளதே ? பதில் : - ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் இணை அனுசரணை நாடுகள் இறுதி தருணத்திலும் இலங்கை அரசாங்கத்தினை மார்ச் மாதம் நிறைவேற்றவுள்ள தீர்மானத்திற்கு அனுசரணை அளிக்குமாறு கோரியிருந்தன . எனினும் இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது . அது உண்மையிலேயே எமக்கு சாதகமான விடயம்தான் . ஏனென்றால் இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்குவதாக இணை அனுசரணை நாடுகளிடத்தில் சம்மதம் தெரிவித்திருந்தால் அரசாங்கம் விரும்புகின்ற வகையிலேயே நிறைவேற்றப்படும் தீர்மானம் அமைந்திருப்பதற்கே அதிக சாத்தியங்கள் இருந்தன . அத்தோடு இம்முறை பாதிக்கப்பட்ட எமது தரப்புக்கு சாதகமான நிலைமைகள் ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் இல்லை. பொறுப்புக்கூறல் பரிந்துரைகளுடன் இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றுவதே மிகச் சவாலான விடயமாகவே உள்ளது . குறிப்பாக பொறுப்புக்கூறலுடன் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறும் தருணத்தில் அதற்கு ஆதரவாக உறுப்பு நாடுகளின் வாக்குகளை பெற்றுக்கொள்வது மிகவும் கடினமான விடயமாக இருக்கின்றது . ஆனால் , இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தினை நாம் பேரவையிலிருந்து மீள எடுக்கும் கோரிக்கையை முன்வைத்திருப்பதன் மூலம் , இலங்கை தொடர்பான பிரேரணையை நிறைவேற்றும் நாடுகளுக்கும் நன்மையே ஏற்பட்டுள்ளது . அதாவது பொறுப்புக்கூறல் விடயங்கள் இல்லாத தீர்மானமொன்றை நிறைவேற்றுவதற்காக உறுப்பு நாடுகளின் ஆதரவினைப் பெறுவதில் கடினமான நிலைமைகள் இருக்கப்போவதில்லை. அவை தயக்கங்களையும் தெரிவிக்காது . ஆகவே ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் எமக்கு இம்முறை இரட்டை நன்மையே ஏற்படப்போகின்றது . முதலாவது பொறுப்புக்கூறல் விடயத்தினை ஐ.நா. மனித உரிமைப் பேரவையிலிருந்து மீள எடுத்து உயரிய இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புக் கிடைக்கிறது . இரண்டாவது , இலங்கை பற்றிய தீர்மானமும் தடையின்றி மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டு சர்வதேச மேற்பார்வையுடன் தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருக்கவுள்ளது . கேள்வி : - இலங்கை அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐ.நா.வில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தினையும் நிராகரித்தால் என்னவாகும் ? பதில் : - இலங்கை அரசாங்கம் அவ்வாறு கூறினாலும் கடந்த ஐ.நா.தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட நிலைமாறுகால நீதிக்கான சில கட்டமைப்புக்களை இன்மும் வைத்திருக்கின்றன. அவற்றை வினைத்திறனாகச் செயற்பட இடமளிக்காது விட்டாலும் ஐ.நா.விற்கு காண்பிப்பதற்காக அவ்வாறே வைத்துள்ளன. மேலும் இம்முறை இலங்கைக்கான பொறுப்புக்கூறல் விடயம் இல்லாத தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பதற்கு எந்தவிதமான நியாயங்களும் இல்லை. அவ்வாறு நிராகரிக்கின்றபோது , ஒரே நேரத்தில் மேற்குலநாடுகள் உள்ளிட்ட முக்கியமான நாடுகளைப் பகைத்துக்கொள்ள அல்லது இருதரப்பு உறவுகளை முறித்துக்கொள்ள வேண்டிய நிலைமையே ஏற்படும் . அவ்விதமான நிலைப்பாடொன்றை இந்த அரசாங்கம் எடுப்பதற்கு விரும்பாது . கேள்வி : - வடக்கு, கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்புக் கோரிக்கையை ஐ.நா.வுக்கான பொது ஆவணத்தில் நீங்கள் உள்ளீர்க்க விரும்பாமைக்கான காரணம் என்ன ? பதில் : - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி , ஐ.நா.வுக்கான பொது ஆவணத்தில் கையொப்பமிட்ட ஏனைய கூட்டுக் கட்சிகளாக இருந்தாலும் சரி, ஐக்கிய இலங்கைக்குள்ளேயே இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றன . அதேநேரம் , அதிகாரங்கள் அதியுச்சமாக பகிரப்பட வேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. சர்வஜன வாக்கெடுப்பு என்பது பிரிந்து செல்லுதலை மையப்படுத்தியதாகும் . அதிகாரப்பகிர்வினைக் கோரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சிங்களத் தரப்புக்கள் நாட்டை பிரிக்கப்போகின்றோம் என்றே பிரசாரம் செய்கின்றன . அவ்வாறான நிலையில் சர்வஜன வாக்கெடுப்பையும் கோரினால் அவர்கள் செய்யும் பிரசாரம் உண்மையாகிவிடும். மேலும் நாமும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு என்று பல சந்தர்ப்பங்களில் தெரிவித்தமையும் பொய்யாகிவிடும். எனவே அவ்விடயம் உள்ளீர்க்கப்படவில்லை. கேள்வி : - இறுதியாக , ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியால் பிறிதொரு குழு நியமிக்கப்பட்டுள்ளமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள் ? பதில் : - ஜெனிவா கூட்டத்தொடர் நெருங்கி வரும் நிலையில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சம் காரணமாகவே தற்போது இவ்விதமான குழுவை நியமித்து சர்வதேசத்திற்கு போலியானதொரு தோற்றப்பட்டை வெளிப்படுத்த முனைகின்றது . அந்தக் குழுவை நாம் எள்ளளவும் நம்பவில்லை . அதுவெறுமனே கண்துடைப்புச் செயற்பாடாகும் . இதனை சர்வதேச நாடுகளும் நன்கு அறியும் . - வீரகேசரி பத்திரிகை -
-
“உன்னைத்திருத்து, உலகம் தானே திருந்தும்”… https://www.facebook.com/pragash001/videos/10157638989486056
-
தானும் சனிதான் என்று வெறுட்டல் விடும் சந்திரன் . https://www.theeyota.com/2021/01/photographer-takes-once-in-lifetime.html?fbclid=IwAR02VDHLs-18XhYSZt6zKsbDqac0Wx4QAKdS2FUpxkvlT9cO7ua5p3FWuwI
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.