Jump to content

வீரவணக்க நாள் ,04.04.2020


Recommended Posts

"முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த 700 மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் ,04.04.2020"

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 8 பேர்

முல்லை மாவட்டம் ஆனந்தபுரம் பகுதியில் வல்லாதிக்க அரசுகளின் உதவியுடன் சிங்கள படைகள் வீசிய இரசாயன நச்சுக்குண்டுத் தாக்குதலில் 04.04.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகள் பிரிகேடியர் தீபன், பிரிகேடியர் மணிவண்ணன், பிரிகேடியர் ஆதவன், பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா, கேணல் நாகேஸ், கேணல் தமிழ்ச்செல்வி, கேணல் அமுதா உட்பட ஆனந்தபுரத்தில் உயிர்நீத்த 700 மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் ,04.04.2020

🕯தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத, சந்தித்திராத சவால்களோடும், சாதனைகளோடும், இழப்புக்களோடும் நடந்தது ~ ஆனந்தபுர பெரும் சமர். அனைத்து உலக நாடுகளின் உதவியுடனும்,பாரிய படைக்கலன்களுடனும், எம் இனத்தை அழித்துக் கொண்டிருந்த சிங்கள இனவெறியர்களை முழுப் பலத்தையும் பிரயோகித்து புதுக்குடியிருப்பு ஆனந்தபுரப்பகுதியில் இடை மறித்தார்கள் தமிழீழ விடுதலைப்புலிகள்.

ஆக்கிரமிப்பாளர்களின் அரக்கத்தனமான கொடும் யுத்தத்தை மனோபலத்துடன் எதிர் கொண்டார்கள் விடுதலைப்புலிகள். யுத்தகளங்களில் பயன்படுத்த, தடை செய்யப்பட்ட பல விதமான ஆயுதங்களாலும், போர் விமானங்களாலும், ஆட்லெறிகளாலும் பரவலாகத் துடைத்தெறிந்து முன்னேறியது சிங்கள இராணுவம்.

விடுதலை அல்லது வீரச்சாவு என்ற தாரக மந்திரத்தை உச்சரித்தபடி ஒவ்வொரு போராளிகளும்,பொறுப்பாளர்களும், தளபதிகளும் அக்களத்தில் சாதனை படைத்தனர். பல நூற்றுக்கணக்கான இராணுவத்தைக் கொன்று குவித்தனர். உண்ண உணவு இல்லை, குடிக்க தண்ணீர் கூட இல்லை அனைத்து உதவிகளும் தடை செய்யப்பட்ட நிலையில் தமக்கேற்பட்ட சோர்வைக் கூட மறந்த நிலையில் தம்மிடம் இருந்த வளங்களை வைத்து சாவின் உச்சகட்டத்தில் கூட தர்மயுத்தம் நடத்தினார்கள். அக்களத்தில் போரிட்ட ஒவ்வொரு வீரர்களுடைய அழிக்க முடியாத வரலாறுகளும் அவர்களுடைய செங்குருதிகளால் அந்த மண்ணில் பதியப்பட்டது .

முப்பதாண்டு கால ஆயுத விடுதலைப் போராட்டத்தின் அசைவியக்கத்தை உலுப்பிவிட்ட நிகழ்வாக – 2009 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் – முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆனந்தபுரம் கிராமத்தில் நிகழ்ந்த சமர் கணிக்கப்படுகின்றது.

🔴

 

Link to comment
Share on other sites

தாய்மையை மறந்து
தாய் நிலத்தை சிந்தையில் கொண்டு தன்னுடைய இரண்டு வயது பெண் குழந்தையை
அருகிலிருந்தவர்களிடம்
ஒப்படைத்து விட்டு
தன் தளபதி பிரிகேடியர் விதுஷா
அக்காவிற்கு துணையாக
ஆனந்தபுர முற்றுகைக்குள் களம் புகுந்தவள் தான் எம் தமிழ்ச்செல்விஅக்கா...!!!

இதே போல் ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் தியாக வரலாறு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத
அளவிற்கு கண்ணீராலும் செந்நீராலும்
எழுதப்பட்டும்,
பலரின் தியாகங்கள் வெளிஉலகிற்கு
தெரியாமலேயே புதைந்தது இறுதியில்!

மறந்தும் மறவாதே தமிழினமே
எமக்காய் மாண்டவர்களையும்
போராடியவர்களையும்!!!!!

 
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்+

01.03.2009 தொடக்கம் 05.04.2009 வரை
ஆனந்தபுரத்திலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும்
வீரச்சாவைத் தழுவிக்கொண்ட இந்த மாவீரர்களுக்கும் இதில் பெயர் குறிப்பிடத் தவறிய ஏனைய அனைத்து மாவீரர்களுக்கும் இன்றைய நாளில் எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  1. பிரிகேடியர் தீபன்
  2. பிரிகேடியர் ஆதவன் (கடாபி)
  3. பிரிகேடியர் விதுசா
  4. பிரிகேடியர் துர்க்கா
  5. பிரிகேடியர் மணிவண்ணன்
  6. கேணல் தமிழேந்தி அப்பா
  7. கேணல் நாகேஸ்
  8. கேணல் தமிழ்ச்செல்வி
  9. கேணல் அமுதா
  10. கேணல் சேரலாதன்
  11. கேணல் அன்ரன்
  12. கேணல் அகிலேஸ்
  13. கேணல் கோபால்
  14. கேணல் ஐயனார்
  15. கேணல் இளங்கீரன்
  16. லெப். கேணல் நளன்
  17. லெப். கேணல் பாரதி
  18. லெப். கேணல் அகநிலா
  19. லெப். கேணல் அறிவரசி
  20. லெப். கேணல் குயில்வேந்தன்
  21. லெப். கேணல் நசீர்
  22. லெப். கேணல் வாகீசன்
  23. மேஜர் சித்தா
  24. மேஜர் ஒளிவாணன்
  25. பூங்குயிலன் புலனாய்வுத்துறை (நிலை தெரியாது)
  26. லெப். கேணல் குமரச்செல்வன் (சிறி)
  27. மேஜர் கெங்கா (சங்கீதன்)
  28. லெப். கேணல் அமிர்தாப்
  29. லெப். கேணல் மொழி
  30. லெப். கேணல் சசி
  31. மேஜர் செங்கையாழினி
  32. மேஜர் கலைமகள்
  33. மேஜர் செஞ்சுரபி
  34. லெப்டினன்ட் அகல்மதி
  35. 2ம் லெப்டினன்ட் அலையரசி
  36. கில்லியரசன்
    (ராதா படையணி) நிலை தெரியாது
  37. லெப். கேணல் புரட்சிநிலா
  38. மேஜர் எழில்வேந்தினி
  39. மேஜர் யாழிசை
  40. கப்டன் அருளரசி
  41. கப்டன் யாழரசி
  42. கப்டன் நந்தா
  43. 2ம் லெப்டினன்ட்
    முகிளினி
  44. கப்டன் தமிழருவி
  45. கப்டன் மகிழன்
  46. மேஜர் குரலமுதன்
  47. லெப். கேணல் மாயவன்
  48. லெப். கேணல் மகேந்திரம்
  49. குமணன் (நிதித்துறை) நிலை தெரியாது
  50. அமுதினி (நிதித்துறை) நிலை தெரியாது
  51. லெப். கேணல் மெய்யறிவு
  52. லெப். கேணல் நிலான்
  53. லெப். கேணல் பிரபு
  54. நீலவாசன் (வடபோர்முனை கட்டளைப்பணியகம்) நிலை தெரியாது
  55. லெப். கேணல் வீஸ்மன்
  56. லெப். கேணல் இளமாறன்
  57. மேஜர் அழகு
  58. மேஜர் தமிழேந்தி
  59. மேஜர் தவம்
  60. மேஜர் எழிச்சி
  61. மேஜர் பாரதி
  62. மேஜர் செங்குமரன்
  63. மேஜர் செம்முகிலன்
  64. மேஜர் தமிழ்பிரியன்
  65. மேஜர் கவியாளன்
  66. கப்டன் மெய்யாளன்
  67. கப்டன் கொடைவெற்றி
  68. கப்டன் இனியவன்
  69. கப்டன் வீரக்கொடி
  70. கப்டன் இகழ்
  71. கப்டன் தூயவன்
  72. லெப்ரினன்ட் இசைமலை
  73. லெப். கேணல் அருந்தா
  74. லெப். கேணல் புனிதா
  75. மேஜர் சுரேந்திரா
    /அன்புமதி
  76. மேஜர் இந்துமதி
  77. லெப். கேணல் கிந்துஸ்தானி
  78. லெப். கேணல் அன்பு
  79. லெப். கேணல் ஆனந்தன்

ஆனந்தபுர முற்றுகைச் சமர்
[களத்தில் நேரடியாக நின்ற போராளியின் பதிவு]
{லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணி}

ஆனந்தபுர முற்றுகைச் சமரில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்த சகல படையணிகளும் பங்குபற்றியிருந்தன. அதைப்போன்று லெப்.கேணல் ராதா வான்காப்புப் படையணியில் பின்கள பணியிலிருந்த எமது அணி போராளிகள் 40 பேர் ஆனந்தபுர முற்றுகை முறியடிப்புக்காக கணினிபிரிவின் 100ற்கு மேற்பட்ட பெண்போராளிகளை உள்ளடங்கிய தாக்குதல் அணியாக சென்றோம். எமது அணியை தாக்குதல் திட்டத்தின்படி மூன்று அணியாக பிரிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஒரு அணி தடையை உடைக்க மற்ற இரு அணிகளும் உள்நுழைவதே திட்டமாக இருந்தது. மார்ச்சு மாதம் 31 ம்திகதி எங்களது இரு அணிகள் ஆனந்தபுரத்தினுள் சென்றது ஒரு அணி ஆனந்தபுரத்திற்கு வெளியே பச்சைபுல்வெளியில் நிலை எடுத்தது. ஆனந்தபுர முற்றுகையிற்குள் எமது அணியினை சேர்ந்த 25ற்கு மேற்பட்ட நண்பர்களும் அதைபோன்று முற்றுகையை உடைப்பதற்கான முயற்சியில் 5ற்கு மேற்பட்ட நண்பர்களும் வீரச்சாவடைந்திருந்தனர். அதைப்போன்று எமது அணியுடன் வந்த பெண்போராளிகளில் பெரும்பாலானோர் வீரச்சாவடைந்தும் விழுப்புண் அடைந்திருந்தனர். இந்த ஆனந்தபுர முற்றுகைச் சமரில் வீரச்சாவடைந்த எமது அணியினர் விபரங்கள்,
1.லெப்.கேணல் அனுஷன்
2.லெப்.கேணல் கபிலன்
3.லெப்.கேணல் அந்தியாஸ்
4.லெப்.கேணல் இளவரசன்

  1. லெப்.கேணல் ஆற்றலோன்
  2. லெப்.கேணல் பெருங்கீரன்
  3. லெப்.கேணல் ஏழிசை
  4. லெப்.கேணல் மதிவர்மன்
  5. லெப்.கேணல் வல்லவன்
  6. லெப்.கேணல் குலம்
  7. லெப்.கேணல் கண்ணன்
  8. லெப்.கேணல் நிறஞ்சன்
  9. லெப்.கேணல் தயாபரன்
  10. லெப்.கேணல் மைந்தன்
  11. லெப்.கேணல் வண்ணம்
  12. மேஜர் வாணவன்
  13. மேஜர் சோலையப்பன்
  14. கப்டன் சுடரவன்

--> Keetru(http://irruppu.com/2021/04/04/விடுதலைப்-போராட்ட-வரலாற்/)

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.