Jump to content

'லாக் டவுணில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு!' -தேசிய மகளிர்ஆணையம் `ஷாக்'


Recommended Posts

கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க இந்தியா `லாக் டவுணி'ல் இருக்கும் இந்த நேரத்தில் கிடைத்திருக்கும் ஒரு தரவு, அதிர்ச்சியளிக்கிறது. ஊரடங்கு அமலில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் உள்ள நிலையில், வீட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் அதிகளவில் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, ``நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வன்முறைகளும் இந்த ஊரடங்குத் தடைக்காலத்தில் அதிகளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பொதுவாக நாங்கள் பெண்களிடமிருந்து மின்னஞ்சல்கள் மூலமாகத்தான் புகார்களைப் பெறுகிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் அதிகளவிலான புகார்களை நாங்கள் பெற்று வருகிறோம். மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் நாடு முழுவதிலுமிருந்து 116 புகார்களைப் பெற்றிருக்கிறோம்.

ஊரடங்கின் முதல் 10 நாள்களில் மொத்தம் 257 புகார்கள் வந்துள்ளன. மார்ச் மாதத்தில் மட்டும் ஆணையத்துக்கு 69 குடும்ப வன்முறைகள் தொடர்பான புகார்கள் வந்துள்ளன. நாள் ஒன்றுக்கு குறைந்தது 2 புகார்கள் வருகின்றன. பெரும்பாலான புகார்கள், வேலைக்குச் செல்லாமல் வீட்டுக்குள் இருக்கும் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடித்துத் துன்புறுத்துவதாகவே இருக்கின்றன.

பொதுவாகப் பெண்கள், கணவர் வீட்டில் கணவரால் தனக்குப் பிரச்னை என்றால் தங்கள் பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால், தற்போதுள்ள சூழலில் அவர்களால் அதுவும் முடியாது. பெரும்பாலான பெண்கள் இதுபோன்ற புகார்களைக் காவல் நிலையத்தில் கொடுக்க பயப்படுகின்றனர். அதனால் எங்களிடம் புகார் அளிக்கின்றனர். அப்படி புகார் அளிப்பவர்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து வருகிறோம். எங்களிடம் பெண்கள் நேரடியாகவோ, மின்னஞ்சல் வாயிலாகவோ தங்கள் புகார்களைப் பதிவு செய்யலாம். இந்த இக்கட்டான நேரத்திலும்கூட பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்த்தப்படுவது வேதனை அளிக்கிறது' என்று கூறியிருக்கிறார்.

மேலும், தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, `இந்தியாவில் இந்த ஊரடங்கு காலத்தில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 90 புகார்கள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்தபடியாக டெல்லியில் 30 புகார்களும் மஹாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களில் 18 புகார்களும் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 11 புகார்களும் பதிவாகியுள்ளன.

பதிவாகியுள்ள மொத்த புகார்களில் பெண்கள் உரிமை சம்பந்தப்பட்ட புகார்கள் 77, குடும்பப் பிரச்னைகள் குறித்த புகார்கள் 69, பெண்களை வீட்டில் துன்புறுத்துதல் குறித்த புகார்கள் 15 மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து 13 புகார்களும் பதிவாகியுள்ளன.


https://www.vikatan.com/lifestyle/relationship/violence-against-womens-increases-during-these-lock-down-days

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Made in India  கலாச்சாரம்.  😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கை மனுஷன் படுகிற பாடு காணாது என்று இவளுகள் வேறை .

இவருக்கு  புகார் பார்சல் ஒன்டு.ஒவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, சுவைப்பிரியன் said:

இவருக்கு  புகார் பார்சல் ஒன்டு.ஒவர்.

ஆண்களிடமிருந்து  புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஓவர்..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

ஆண்களிடமிருந்து  புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஓவர்..! :)

அது தெரிந்த விடையம் தானே.நான் சொன்னது இவருக்கு எதிராக புகார்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

இங்கை மனுஷன் படுகிற பாடு காணாது என்று இவளுகள் வேறை .

8 hours ago, தமிழ் சிறி said:

Made in India  கலாச்சாரம்.  😎

 

6 hours ago, ராசவன்னியன் said:

ஆண்களிடமிருந்து  புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஓவர்..! :)

6 hours ago, சுவைப்பிரியன் said:

அது தெரிந்த விடையம் தானே.நான் சொன்னது இவருக்கு எதிராக புகார்.😁

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Bild

ஆண்டிஸ் கேங்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ராசவன்னியன் said:

ஆண்களிடமிருந்து  புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஓவர்..! :)

அப்பன் மவனே சிங்கன்டா

அண்கள் புகார்களே தரமாட்டார்கள் ஓவர்

Link to comment
Share on other sites

மேலை நாடுகளிலும் இதே சிக்கல் தான், இந்தியாவில் மட்டுமல்ல. அண்டர் 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

image_99d3dd9669.jpg

குடும்ப வாழ்க்கையை 'பாலன்ஸ்' செய்யத்தெரியாத சில தத்தி கணவன்களாலும், கிழடுகளாலும் தான் இந்த வீட்டு வன்முறைகள்.. :)

சட்டங்கள் கடுமையாக்கப் படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/4/2020 at 11:54 AM, பெருமாள் said:

இங்கை மனுஷன் படுகிற பாடு காணாது என்று இவளுகள் வேறை .

😃😀 இப்பவே இப்படியென்றால், லாக் டவுண் இன்னும் எவ்வளவு காலமோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள்! - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி.

திருமண உறவில், பெண்ணின் மீது வார்த்தைகளாகவும், செயல்களாகவும் வன்முறை நிகழ்த்தப்படும்போது, அவர் சட்டத்தை நாட வேண்டியது அவசியம். கணவன் மனைவி என்றில்லை; குடும்ப அமைப்பில் வாழும் ஆண் பெண் யாராக இருந்தாலும் பெற்றோர், உடன்பிறந்தவர்கள் எனத் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களால் துன்பத்துக்கு உள்ளாக்கப்படுவதும் குடும்ப வன்முறையே. இதைத் தடுக்க உருவாக்கப்பட்டதுதான் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம். என்றாலும், இது அதிகமாகத் தேவைப்படுவது திருமண உறவில் கணவர் மற்றும் புகுந்த  வீட்டினரால் வன்முறைக்கு உள்ளாக்கப்படும் பெண்களுக்கே.

நான்கு சுவர்களுக்குள் நடக்கும் குடும்ப விஷயங்களில், எவற்றையெல்லாம் வன்முறை எனச் சட்டம் அடையாளம் காட்டுகிறது? அதைத் தெரிந்துகொள்வதன் மூலமே, பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதி பெற முடியும்.

குடும்ப அமைப்பில் எவையெல்லாம் வன்முறை?

ஒரு குடும்பத்துக்கு மருமகளாக வந்த பெண்ணை பையனின் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், இன்னபிற குடும்ப உறவுகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்துவது வன்முறை. மனரீதியாக என்று சொல்லும்போது, சம்பந்தப்பட்ட பெண்ணைப் பற்றி புறம்பேசுவது, உள்நோக்கத்துடன் அவர் மனதைக் காயப்படுத்தும்படி பேசுவது, வார்த்தைகளால் மன உளைச்சல் தருவது... இவையெல்லாமே வன்முறைதான். உடல்ரீதியாக என்று சொல்லும்போது, முடியைப் பிடித்து இழுப்பது, அடிப்பது, சூடு வைப்பது எனச் சம்பந்தப்பட்ட பெண்ணைத் துன்புறுத்தும் அனைத்துச் செயல்களும் தண்டனைக்குரிய வன்முறையே.

இதுபோன்ற விதவிதமான குடும்ப வன்முறைகளைப் பெண்கள் பலர் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர். ஆண்கள், தங்கள் இயலாமையை மனைவியிடம் கோபமாக, ரணப்படுத்தும் சொற்களாக, வன்முறையுடன் வெளிப்படுத்தி அவர்களை மனம்நோகச் செய்கின்றனர். மதுப் பழக்கத்துக்கு ஆளான ஆண்கள் மனைவியை அடிப்பதற்கும் உதைப்பதற்கும் காரணமே தேவைப்படுவதில்லை. அவர்களின் அந்த நேர ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள ஒரு ஜீவன் தேவைப்படுகிறது... அவ்வளவுதான்.

புகார் கொடுக்க...

இந்தியாவில் குடும்ப உறவுகளால் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதால், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகக் குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005 செப்டம்பர் மாதம் கொண்டுவரப்பட்டு, 2006 அக்டோபர் 26 அன்று நடைமுறைக்கு வந்தது. குடும்ப வன்முறை வழக்குகளை விசாரிப்பதற்காகவே தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் சமூகநலத் துறை அலுவலகத்தில்  இந்தப் பாதுகாப்பு அலுவலர்கள் (Protection Officers) உள்ளனர். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அலுவலகத்தைத் தொடர்புகொண்டு புகார் கொடுக்கலாம். புகாரின் அடிப்படையில் ஆலோசனை வழங்குவார்கள். பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ உதவி அளிப்பார்கள். அரசு பாதுகாப்பு அலுவலகத்தில் தங்கிக்கொள்ள உதவுவார்கள். பாதுகாப்பு அலுவலர்கள் பெண்களாக இருப்பதால் பாதிக்கப்பட்ட பெண் அவரின் அந்தரங்க விஷயங்களையும் தயக்கம் இல்லாமல் பகிர்ந்துகொள்ளலாம். தேவை ஏற்படும்போது வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் இவர்களால் முடியும். தவிர, குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணும், உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம்.

தயக்கம் வேண்டாம்... அச்சமும் வேண்டாம்...

குடும்ப வன்முறை என்பது எந்த நேரத்திலும் நடக்கலாம். இரவு நேரம் கணவன் அடித்துத் துன்புறுத்தினால், ‘இந்நேரத்தில் எங்கு போய் புகார் கொடுப்பது? தற்காப்புக்காகப் பாதுகாப்பு அலுவலரைத் தொடர்புகொள்ளலாமா? அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு இந்த நேரத்தில் போகலாமா?’ என்பதுபோன்ற தயக்கமும் குழப்பமும் தங்களுக்கான அரணை அடைவதிலிருந்து பெண்களைப் பின்னிழுக்கிறது. விளைவு, அந்நேர மன நெருக்கடியின் காரணமாகச் சிலர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குத் தள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற பாதுகாப்பற்ற சூழலில் பெண்களுக்கு முதலில் உதவக்கூடியது, அவர்களின் தைரியமே. அதன் துணையோடு, உடனடியாக அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தை அணுகலாம். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கச் செயல்படும் 1091 என்கிற இலவச எண்ணில் தொடர்புகொண்டும் புகார் அளிக்கலாம்.

சிறப்பம்சங்கள்

* மணமாகாமல் லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில்  ஓர் ஆணுடன் வசிக்கும் பெண்ணுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும்.

* அடிப்பது, உதைப்பது, கிள்ளுவது, தலையைச் சுவரில் மோதுவது, ஆபாச வார்த்தைகளில் திட்டுவது, மன உளைச்சலை உண்டாக்கும் விதமாகப் பாலியல் துன்புறுத்தல்கள் கொடுப்பது, வற்புறுத்துவது, நடத்தையைச் சந்தேகித்து இழிவுப்படுத்துவது, வரதட்சணை வாங்கிவரக் கட்டாயப்படுத்துவது, பொருள்களை எறிந்து காயப்படுத்துவது, குழந்தைகளை அடிப்பது... இவையெல்லாம் வன்முறையே.

* பதிவு செய்யப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் புகார்களைப் பெற்றுப் பாதுகாப்பு அலுவலருக்கு அனுப்பி வைக்கலாம்.

* வசதி இல்லாதவர்களுக்கு இலவச சட்ட உதவி செய்து தரப்படும்.

* குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் கணவர்மீது (அல்லது அப்பா, சகோதரர் என்று வன்முறைக்கு ஆளாக்கியவர் எவர் மீதும்) புகார் கொடுக்கும் பெண், அவர் வீட்டிலேயே தங்கிக்கொள்ளும் உரிமையைச் சட்டம் பெண்ணுக்குக் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தனக்குப் பாதிப்பு ஏற்படுத்தியவரிடமிருந்து மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டாலோ, மாதாமாதம் பராமரிப்புச் செலவுக்கோ உண்டான தொகையைக் கொடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிடலாம்.

* திருமணமாகி ஏழு வருடங்களுக்குள் மட்டுமே வரதட்சணைப் புகார் கொடுக்க முடியும். குடும்ப வன்முறை புகார்களுக்கு இதுபோன்ற காலவரம்புகள் இல்லை.

* குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் சிறை தண்டனை அல்லது ரூபாய் இருபதாயிரம் அபராதம் அல்லது இவை இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும். இது தவிர, குற்றத்தின் தன்மையைப் பொறுத்து இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவு 498A மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961-ன் கீழும், குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அதற்கேற்பவும் தண்டனைகள் தீவிரமாகும்.

* துணையை மிரட்டுவதற்காக இந்தச் சட்டத்தின் கீழ் புகார் கொடுப்பது தவறு.

ஆகவே பெண்களே... குடும்ப வன்முறை என்பது பொறுத்துக்கொள்ளவோ, சகித்துக் கொள்ளவோ வேண்டியதல்ல; தடுக்கப்பட வேண்டியது, தண்டனைக்குரியது.

இந்தச் சட்டம் அனைவருக்குமானது!

* குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் ‘பெண்’ என்று குறிப்பிடப்படுவது, மனைவி மட்டுமல்லாது, எல்லா உறவுமுறை பெண்களுக்கும் பொருந்தும். மகன் அம்மாவை அடித்தாலும் அதுவும் வன்முறையே.

ஒரு வீட்டில் சொந்த அப்பா மற்றும் உறவுகளால் துன்பத்துக்குள்ளாகும் 18 வயதுக்குட்பட்ட பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும்.

குடும்ப வன்முறையால் ஆண் பாதிக்கப்படும்போதும், வன்முறை ஏற்படுத்திய பெண்மீது இந்தச் சட்டம் பாயும்.

கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆண் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியபோது, குடும்ப வன்முறைச் சட்டத்தின் பிரிவு 2(Q)-ல் 18 வயதுக்கு மேலான ஆண்களுக்கு இச்சட்டம் பொருந்தாது என்கிற பகுதியை நீக்கியது.

ஒரு வழக்கு!

கணவனிடமிருந்து குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் பராமரிப்புத் தொகை கேட்டு, ஒடிசா மாநிலக் கீழமை நீதிமன்றத்தில் மமிதா ராணி சுதார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதை ஏற்க மறுத்து அவரின் கணவர் கிரிதரிநாத், ஒடிசா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘என் மனைவி குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்தது செல்லாது. ஏனென்றால், அவர் புகார் அளித்தபோது நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வசிக்கவில்லை; பிரிந்துவிட்டோம்’ என்பது அவரது வாதம். நீதிமன்றமோ, குடும்ப வன்முறை சட்டப்பிரிவு 2(F)-ன்படி புகார் கொடுக்கும்போது ஒரே வீட்டில் வசிக்காவிட்டாலும் அதற்கு முன்பு வசித்திருந்தால் இந்தச் சட்டம் பொருந்தும் என்று தீர்ப்பளித்தது.

அவள் விகடன்

Link to comment
Share on other sites

On 4/4/2020 at 5:28 AM, ampanai said:

மேலும், தேசிய மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, `இந்தியாவில் இந்த ஊரடங்கு காலத்தில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 90 புகார்கள் பதிவாகியுள்ளன. அதற்கடுத்தபடியாக டெல்லியில் 30 புகார்களும் மஹாராஷ்டிரா மற்றும் பீகார் மாநிலங்களில் 18 புகார்களும் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 11 புகார்களும் பதிவாகியுள்ளன.

தமிழநாட்டிலிருந்து எந்தப் புகாரும் வரவில்லை. 🤔

பெண்ணையும் தன்னில் பாதியாகக் கொண்டவனை வணங்கி வாழும் தமிழன்டா. :100_pray:🙌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

😃😀 இப்பவே இப்படியென்றால், லாக் டவுண் இன்னும் எவ்வளவு காலமோ 

இனி கொஞ்சம் வெயில் வந்துவிடும் கார்டன்  பக்கமும் கராச்  பக்கமும் வேலைகளை  கொண்டு போய்  விடுவதால் ஒரு மாதிரி தப்பலாம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.