Jump to content

அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க விமானம் தாங்கி கப்பலில் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ்
 
வாஷிங்டன்:

அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான தியோடர் ரூஸ்வெல்டில் பணியாற்றும் 114 மாலுமிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இந்த தகவலை அமெரிக்க கடற்படை தலைவர் (பொறுப்பு) தாமஸ் மோட்லி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

இன்னும் நிறைய மாலுமிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம். நூற்றுக்கணக்கானோருக்கு கொரோனா தாக்கி இருக்கக்கூடும்.

இருப்பினும், யாரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கக்கூடிய அளவுக்கு இல்லை. எல்லோரும் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடனோ, அது கூட இல்லாமலோதான் இருக்கின்றனர். சிலர் குணமடைந்து விட்டனர். பகிரங்கமாக உதவி கேட்டு, பீதி ஏற்படுத்தியதற்காக, இந்த கப்பலின் தலைமை அதிகாரியை பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளோம்.

https://www.maalaimalar.com/news/world/2020/04/04121021/1394100/Corona-effect-for-118-sailors.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

பகிரங்கமாக உதவி கேட்டு, பீதி ஏற்படுத்தியதற்காக, இந்த கப்பலின் தலைமை அதிகாரியை பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளோம்.

வழமை போல் உண்மையை அப்படியே மூடிமறைக்க முடிவு செய்திருக்கிறார்கள். கப்பல் தலைமை அதிகாரியின் பகிரங்க உதவிகோரல் ஊடகங்களை தொட்டதால்.. கடைசியில் சில உண்மைகளையாவது ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று.

சீனா மீது உண்மைகளை மறைப்பதாக சீறிப்பாயும் அமெரிக்கா.. ஒன்றும் அரிச்சந்திரன் வீட்டு பிள்ளை கிடையாது. 

Link to comment
Share on other sites

5 hours ago, உடையார் said:

இருப்பினும், யாரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கக்கூடிய அளவுக்கு இல்லை. எல்லோரும் லேசான காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடனோ, அது கூட இல்லாமலோதான் இருக்கின்றனர். சிலர் குணமடைந்து விட்டனர். பகிரங்கமாக உதவி கேட்டு, பீதி ஏற்படுத்தியதற்காக, இந்த கப்பலின் தலைமை அதிகாரியை பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளோம்.

இராணுவ வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் பதவி நீக்கப்பட்டுள்ளார் என்பது அரச செய்தி.

ஆனால், கடற்படை வீரர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டவரை பாராட்டுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆள் கப்பலின் அந்த நவீன விமானத்தாங்கி கப்பலுக்கு கப்டனாக இருக்க தகுதி இல்லாதவர் எங்கேயோ பயணிகள் கப்பலின் ஆளை இந்தகப்பலுக்கு இடம்மாற்றி விட்டார்களாக்கும் .இவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தும் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஒன்றை அரசியல்வாதி போல் பேப்பருக்கு செய்தி குடுத்திருக்கிறார் .

எந்த வளமும் இல்லாமல் வன்னிக்காட்டில் இருந்து சண்டை போட்ட  எமது தளபதிகள் கண்முன்னே வந்து போகினம்  இப்ப உலகமே வெண்டிலேற்றர் என்று ஓடுகினம் அங்கெல்லாம் வெண்டிலேற்றர்  இல்லாமல்தான் மருத்துவமே நடந்தது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.