Jump to content

தலைமுறைகள் விடைகாண்பர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தலைமுறைகள் விடைகாண்பர்!
----------------------------------------------------------------------

விடுதலைக்கு உரமான வீரத் தளபதிகாள்
கலையாது நினைவுகளில் வாழும் வீரர்களே
விழிநீரால் நினைந்துருகும் நிலையாகப் போனவரே
கலையாத கனவொருநாள் மெய்ப்படும் வேளைவரும்
உறங்காத உணர்வுடனே உயிர்பெறும் பொழுதினிலே
விடிவுபெறும் தேசத்தில் விழிதிறப்பீர் வீரர்களே!

விழிதிறக்கும் வழிகாணும் தலைமுறைகள் எழும்போது
விலங்குடைத்து நிமிர்கின்ற வழிதேடி விடைகாண்பர் 
புலமெங்கும் வளம்பெற்று நிமிர்கின்ற இளையோரும்
தாய் நிலமெங்கும் தமிழோடு வாழ்கின்ற இளையோரும்
அறிவோடு இணைந்தே அறப்போரைத் தொடுத்தாலே
நிலத்துயரை நீக்கிவிடும் நிலைகாண வழிபிறக்கும்!

சாவுகளை எதிர்கொண்டு சரித்திரமாய் வாழ்பவரே
உயி ரீகங்கள் ஒருநாளும் இலக்கின்றி தூங்காது
காலங்கள் கடந்தாலும் கண்மலர்கள் விழித்தெழுந்தே
யாகத்தின் பயனடையும் வேதத்தைப் படைத்திடுவார்
யாதும் ஊரேயென யாக்கைபோகும் வழி போகாது
ஆற்றல் அறிவுகொண்டே தாயகத்தை மீட்டெழுவர்!

ஆனந்தபுர நாயகரே வீரவணக்கம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்தோருக்கும் வாசித்துப் பச்சைப் புள்ளிகளை  வழங்கிய ஊக்குவித்த நிலமாதி மற்றும் தமிழ்சிறி ஆகியோருக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனந்தபுர நாயகரே வீர வணக்கம்.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, suvy said:

ஆனந்தபுர நாயகரே வீர வணக்கம்.....!

வாசித்துப் பச்சைப் புள்ளிகளை வழங்கிய சுவி, அம்பனை மற்றும் எப்போதும் தமிழன் ஆகியோருக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொர்னோவுக்கு  பிறகு வரும் புதிய உலக ஒழுங்கு மாவீரர்களின் தியாகங்கள் வீண் போகாது பார்த்து கொள்ளும் என்ற நம்பிக்கை துளிர் விடுது . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு பலமாக இருந்தாலும் சில பிரச்சனை என்று வந்தால் தப்பவே முடியாது என்பதற்கு

கொரோனாவால் வல்லரசு நாடுகள் படும்பாடு ஒரு பெரிய உதாரணம்.
நொச்சி கவிதை அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

கொர்னோவுக்கு  பிறகு வரும் புதிய உலக ஒழுங்கு மாவீரர்களின் தியாகங்கள் வீண் போகாது பார்த்து கொள்ளும் என்ற நம்பிக்கை துளிர் விடுது . 

முதலில் படித்துக் கருத்தைப் பதிவுசெய்து பாராட்டியமைக்கு நன்றி.

மாறிவரும் உலக ஒழுங்கையும் இந்திய வல்லாதிக்கத்தையும் கையாளக்கூடிய  ஒரு தலைமை வேண்டாம் . ஒரு அறிவாற்றல்கொண்ட குழு ஒன்றிருந்து சரியாகக் கையாண்டு  அரசியல் ராசதந்திரத் தளத்தில் செயற்படுமாயின் சாத்தியமே. ஏன் யூகோசிலாவியா இன்று பல தேசங்களாகாவும் தனித் தேசியமாகவும் உலகில் நிமிர்ந்துள்ளது.  சரியான நகர்வுகளும் உலகோடு ஊடாடி கையாண்ட  அரசியல் நகர்வுகள் மற்றும் காலத்தே பயிர்செய்தமை என்று பல.  

எமதினவிடுதலைக்கும் பொருந்துவன. 

7 hours ago, ஈழப்பிரியன் said:

எவ்வளவு பலமாக இருந்தாலும் சில பிரச்சனை என்று வந்தால் தப்பவே முடியாது என்பதற்கு

கொரோனாவால் வல்லரசு நாடுகள் படும்பாடு ஒரு பெரிய உதாரணம்.
நொச்சி கவிதை அருமை.

படித்துக் கருத்தைப் பதிவுசெய்து பாராட்டியமைக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்துப் பச்சைப் புள்ளிகளை வழங்கிய பெருமாள், நந்தன், தமிழினி,  குமாரசாமி ஐயா, காவலூர்கண்மணி மற்றும் நந்தன்  ஆகியோருக்கு நன்றி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான‌ வ‌ரிக‌ள்
நொச்சி ஜ‌யா /
வித்தாகி போன‌ த‌ள‌ப‌திக‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் /

மீண்டு எழுவோம் என்ற‌ ந‌ம்பிக்கை ப‌ல‌ர் ம‌ன‌தில் இருக்கு /

பொறுத்தார் பூமி ஆள்வார் , 

Link to comment
Share on other sites

On 4/4/2020 at 21:30, nochchi said:

விழிதிறக்கும் வழிகாணும் தலைமுறைகள் எழும்போது
விலங்குடைத்து நிமிர்கின்ற வழிதேடி விடைகாண்பர் 

அவலம் கண்டும் கலங்காது பயம் நெருங்காது விடுதலைநோக்கி தமிழன் வாழ்வதை உறுதிசெய்யும் வரிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

அருமையான‌ வ‌ரிக‌ள்
நொச்சி ஜ‌யா /
வித்தாகி போன‌ த‌ள‌ப‌திக‌ளுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் /

மீண்டு எழுவோம் என்ற‌ ந‌ம்பிக்கை ப‌ல‌ர் ம‌ன‌தில் இருக்கு /

பொறுத்தார் பூமி ஆள்வார் , 

படித்தக் கருத்திட்டமைக்கும் ஊக்கப்படுத்தியமைக்கும் நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

அவலம் கண்டும் கலங்காது பயம் நெருங்காது விடுதலைநோக்கி தமிழன் வாழ்வதை உறுதிசெய்யும் வரிகள்.

 

படித்துக் கருத்திட்டு உற்சாகமூட்டியமைக்கும் நன்றி.

 

உலகத் தமிழினம் செய்யக்கூடிய அதிகபட்ச மான முயற்சி எமது கதைகளை(?) எமது பிள்ளைகளிடம் கடத்துவதும், தமிழ் உணர்வை ஊட்டுவதும் செய்தாலேபோதும் தேடுவார்கள்; அடைவார்கள் என்பது நம்பிக்கை.  தலைமுறைகளிற்கு நாடு தேவை என்பதை இங்கு, அதாவது யேர்மனியிலே மேலெளுந்துவரும்  AfD (Alternative für Deutschland)கட்சியின் எழுச்சி சுட்டுகிறது. சற்றேறக்குறையக் கிட்லர் கால எழுகைபோல  இல்லாவிடினும் ஒரு எழுச்சி தெரிகிறது. ஆகவே தமிழினம் சிந்திக்க வேண்டியது அவசியமானது. எப்போது என்ன மாற்றம் வரும் என்பதை ஊகிக்க முடியாது. கோவிட்-19போல் கோவிட்- 20 வந்து அழிவுகள் பன்மடங்கானால் தம்மை சீர்தூக்குவதா? ஏனைய இனங்களையா என்றால் என்ன விடை?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பச்சைப் புள்ளிகளை வழங்கிய ஈழப்பிரியன் பாஞ் மற்றும் பையன்ஆகியோருக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பதினொரு வருசம் பறந்தோடிப்போனது..

கனவுபோல கலைந்தோடிப்போனது கண்ணீரும் செந்நீரும் கொண்டெழுதிய காவியம்..

முப்பது வருட தியாகம் முடிவின்றி முடிந்தேபோனது..

தொண்டைக்குள் கிடந்துறுளும் சோகம்..

நினைத்தால் நெஞ்சடைக்கும் துயரம்..

 

நன்றி நொச்சி கவிதை நினைவூட்டலுக்கு..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பதினொரு வருசம் பறந்தோடிப்போனது..

கனவுபோல கலைந்தோடிப்போனது கண்ணீரும் செந்நீரும் கொண்டெழுதிய காவியம்..

முப்பது வருட தியாகம் முடிவின்றி முடிந்தேபோனது..

தொண்டைக்குள் கிடந்துறுளும் சோகம்..

நினைத்தால் நெஞ்சடைக்கும் துயரம்..

 

நன்றி நொச்சி கவிதை நினைவூட்டலுக்கு..

 

பாலபத்ர ஓணாண்டி அவர்களே படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.  ஈகங்கள் வீண்போகதென்று நம்புவோம் . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.