Jump to content

ஒரே நாளில் ஆயிரம் பேர் பலி - 33 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று - திகைத்து நிற்கும் அமெரிக்கா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 33 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

ஒரே நாளில் ஆயிரம் பேர் பலி - 33 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று - திகைத்து நிற்கும் அமெரிக்கா
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முகமூடி அணிந்து செல்லும் பெண்
 
நியூயார்க்:
 
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 
 
உலகம் முழுவதும் 12 லட்சத்து 319 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 64 ஆயிரத்து 667 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வைரஸ் பரவிய 2 லட்சத்து 46 ஆயிரத்து 174 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 
 
கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்யும் காட்சி
 
அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 72 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 233 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இதனால் அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 444 ஆக அதிகரித்துள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, உடையார் said:

அமெரிக்காவில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், அந்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 33 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.

ஒரே நாளில் ஆயிரம் பேர் பலி - 33 ஆயிரம் பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று - திகைத்து நிற்கும் அமெரிக்கா
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முகமூடி அணிந்து செல்லும் பெண்
 
நியூயார்க்:
 
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலகம் முழுவதும் 204 நாடுகளுக்கு பரவியுள்ள வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 
 
உலகம் முழுவதும் 12 லட்சத்து 319 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 64 ஆயிரத்து 667 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 478 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வைரஸ் பரவிய 2 லட்சத்து 46 ஆயிரத்து 174 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 
 
கொரோனாவால் உயிரிழந்தவரை அடக்கம் செய்யும் காட்சி
 
அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 72 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 233 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இதனால் அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 444 ஆக அதிகரித்துள்ளது.
 

சும்மாவா பின்ன... சீனா காரன் ஸ்பெஷல் எடிஷன் கொரோனா அனுப்பி இருக்கிறான் டம்பருக்கு. சும்மா நெடுக சொறிஞசா.... ஒரு விளையாட்டு காட்டி இருக்குது..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

TamilNews_Apr_2020__190517604351044.jpg

 

வாஷிங்டன்: உலகில் இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் கொரோனா வைரசால் ஒரேநாளில் 1,480 பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நியூயார்க்கில் 2 நிமிடங்களுக்கு ஒருவர் இறக்கின்றனர். அமெரிக்காவில் கடந்த ஒரு வாரமாக கொரானோ வைரஸ் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் உச்சகட்டமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,480 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் தொடங்கியதில் இருந்து இதுவரை எந்த நாட்டிலும் ஒரே நாளில் இவ்வளவு பலி ஏற்பட்டதில்லை. அதே போல், ஒரே நாளில் புதிதாக 32,000 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், அமெரிக்கா முழுவதுமே மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி 2 லட்சத்து 78,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,159 பேர் இறந்துள்ளனர். இன்னும் சுமார் 6,000 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதில் அதிகம் பாதிக்கப்பட்டது நியூயார்க் மாகாணம்தான். அங்கு மட்டுமே ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக 595 பேர் இறந்துள்ளனர். இந்த மாகாணத்தில் 2 நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நியூயார்க் மேயர் ஆன்ட்ரு கியுமோ, ‘‘இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள எங்களுக்கு உதவிகள் வேண்டும். கடந்த 3 நாளில் பலி எண்ணிக்கை 2 மடங்காகி உள்ளது. மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான முகக் கவசம், உடல் முழுவதையும் மூடும் ஆடைகள் பற்றாக்குறை உள்ளது. வென்டிலேட்டரும் அதிகளவில் தேவைப்படுகிறது. என்னால் முடிந்த அனைத்தையும் செய்து விட்டேன். ஆனாலும், மக்கள் மடிவதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன்,’’ என்றார்.

இதற்காக, தனது மாகாணத்திற்குள் வென்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தேவைப்படாத மருத்துவமனை மற்றும் நிறுவனங்களிடமிருந்து அவற்றை அரசு வாங்கிக் கொள்ளும் நிர்வாக உத்தரவில் கியுமோ கையெழுத்திட்டுள்ளார். இதற்கிடையே, கொரோனா தடுப்பு பணியில் ராணுவத்தை இன்னும் அதிகளவில் ஈடுபடுத்த இருப்பதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு மலேரியாவுக்கு தரப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து நல்ல பலன் அளிப்பதாகவும், அது தொடர்பான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.

மாஸ்க் அணிய மாட்டேன்: அடம்பிடிக்கிறார் டிரம்ப்
கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்கள், வைரஸ் தொற்று இருப்பவர்களை கவனித்துக் கொள்பவர்கள் மட்டுமே முகக் கவசம் அணிந்தால் போதும் என உலக சுகாதார நிறுவனம் கூறியிருந்தது. தற்போது, உலகம் முழுவதும் வைரஸ் தீவிரம் அடைந்துள்ளதால், கவனக்குறைவால் ஏற்படும் வைரஸ் பரவலை தடுக்க வெளியில் வரும் அனைவருமே முகக் கவசம் அல்லது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டுமென ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அமெரிக்காவிலும் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டுமென அந்நாட்டின் கொரோனா வைரஸ் தடுப்பு மையமும் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிபர் டிரம்ப்பும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

ஆனால், அவர் மட்டும் அணிய மறுத்து வருகிறார். ‘என்னை சந்திக்க வருபவர்களை முகக் கவசத்தோடு வரவேற்க என்னால் முடியாது. புதிய மருத்துவ வழிகாட்டுதல்கள் பரிந்துரைத்தாலும், நான் முகக் கவசம் அணிய மாட்டேன்,’ என்று அவர் கூறியுள்ளார்.

இரட்டை கோபுரத்தைமுந்தியது கொரோனா
அமெரிக்க வரலாற்றில் கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி நடந்த நியூயார்க் இரட்டை கோபுர தீவிரவாத தாக்குதலே மிகக் கோரமான சம்பவமாக இருந்தது. அத்தாக்குதலில் 2,977 பேர் பலியாகினர். 25,000 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கையை கொரோனா மிஞ்சி விட்டது. நியூயார்க் நகரை ஒட்டுமொத்தமாக ஆட்கொண்டுள்ள கொரோனா, அம்மாகாணத்தில் மட்டுமே இதுவரை 1 லட்சம் பேரை பாதித்து, 3,218 பேரை பலி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தாலியை முந்தியது ஸ்பெயின்
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டி விட்டது. இதில், 2.78 லட்சம் பேருடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், ஸ்பெயின் 1 லட்சத்து 25 பேருடன் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இத்தாலியை முந்தி 2வது இடத்தை நேற்று பிடித்தது. ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 806 பேர் பலியாயினர். அங்கு மொத்த பலி எண்ணிக்கை 11,744 ஆக உள்ளது. பலி எண்ணிக்கை இத்தாலி 14,681 பேருடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தற்போது இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவுடன் பிரான்சிலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் ஒரே நாளில் பிரான்சில் 1,120 பேர் பலியாகினர். அங்கு மொத்த பலி 6,507 ஆக அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் பலி 3,605 ஆக அதிகரித்துள்ளது.

திட்டமிட்டபடி நவம்பரில் அதிபர் தேர்தல்
அமெரிக்காவில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் வரும் நவம்பரில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவுவதால், இம்முறை தேர்தலில் தபாலில் ஓட்டு போதும் வசதி கொண்டு வரப்படுமா என அங்கு விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘தபாலில் ஓட்டு போடுவது பல முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். வாக்காளர் அடையாள அட்டையுடன் வாக்களித்தால் மட்டுமே நேர்மையான தேர்தலை நடத்த முடியும்,’’ என்றார். மேலும், திட்டமிட்டப்படி நவம்பர் 3ம் தேதி பொதுத்தேர்தல் நிச்சயம் நடக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=576813

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

tn_us-flag.gif
 United States 

Coronavirus Cases:

311,357 

Deaths:

8,452

Recovered:

14,825
USA
State
Total
Cases
New
Cases
Total
Deaths
New
Deaths
Active
Cases
Source
New York  114,775    3,565    100,732 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏராளமான உயிரிழப்பு இருக்கும்; அடுத்த இருவாரம் மோசமாக இருக்கும்: அதிபர் ட்ரம்ப் மக்களுக்கு எச்சரிக்கை

us-to-witness-toughest-next-two-weeks-due-to-rising-coronavirus-cases-trump

 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் : கோப்புப்படம்
 

வாஷிங்டன்

அமெரிக்காவில் அடுத்த இரு வாரங்கள் மிகவும் மோசமாக இருக்கும், கரோனா வைரஸால் ஏராளமான உயிரிழப்புகளைச் சந்திக்க நேரிடும், இருப்பினும் நாம் வெற்றிகரமாகத் தடுப்போம் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மக்களுக்கு அறிவிப்பு விடுத்தார்

கரோனா ைவரஸின் தாக்கம் அமெரக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும் அங்கு இதுவரை கரோனா வைரஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தையும் தாண்டியுள்ளது.

மக்கள் அனைவரும் மிகவும் அதிகமாக சமூக விலக்கலைக் கடைபிடிக்கவேண்டும், அதீதமான சுகாதார நடவடிக்கைகளை கடைபடிக்க வேண்டும் என்று மக்களுக்கு அமெரிக்க அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று வெள்ளைமாளிகையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

1586060053756.jpg

அமெரிக்க மக்களுக்கு அடுத்த இரு வாரங்கள் மிக, மிக மோசமானதாக இருக்கப் போகிறது. கரோனா வைரஸால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடலாம். இதுநாள் வரை அதுபோன்ற சூழலை நாடு பார்த்திராததாக இருக்கும்.

துரதிர்ஷ்டமாக அந்த சூழலை எதிர்கொண்டு வருகிறோம், பல உயிர்களை இழந்திருக்கிறோம். ஆனால், வரும் வாரங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு மாற்றுவோம். அடுத்த இரு மாதங்களில் அமெரிக்காவில் கரோனா வைரஸால் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை மக்கள் உயிரிழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த உயிரிழப்புகள் எண்ணிக்கையை நாங்கள் குறைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். ஆனால் துரதிர்ஷ்டமாக அது போன்ற சூழலுக்குள் நாம் நுழைந்துவிட்டோம், மோசமான உயிரிழப்புகள் இருக்கப்போகிறது, அந்த சூழல் நல்லதாக அமையாது. இதுபோன்ற உயிரிழப்புகளை நான் இதற்கு முன் நான் பார்த்தது இல்லை என்று உண்மையாக நம்புகிறேன். முதலாம் உலகப்போர், 2-ம் உலகப்போர் ஆகியவற்றில் இதுபோன்ற உயிரிழப்புகள் இருந்திருக்கலாம். ஆனால், இது நாம் அனைவருக்குமான போர்க்காலமாக இருப்பது மோசமானதாகும்” எனத் தெரிவித்தார்

துணை அதிபர் பென்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், “ அமெரிக்காவில் தொடர்ந்து மருத்துவப் பரிசோதகளைச் செய்து வருகிறோம், அதிகரித்து வருகிறோம். ஆனால் அடுத்துவரும் வாரங்கள் மக்களுக்கு மோசமானதாக இருக்கப்போகிறது. அமெரிக்கா முழுவதும் மருத்துவப்பரிசோதனைகள் செய்யும் போதுதான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இந்த சூழலைத் தவிர்க்க மக்கள் தீவிரமாக சமூக விலக்கலைக் கடைபிடிக்க வேண்டும், வீட்டுக்குள்ளயே இருக்க வேண்டியது அவசியம். இப்போதுள்ள கணக்கெடுப்பின்படி 33 கோடி அமெரிக்க மக்களில் 90 சதவீதம் அமெரிக்கர்கள் வீ்ட்டுக்குள் இருக்கிறார்கள்.

அடுத்துவரும் நாட்களில் நியூயார்க் நகரம் மிகப்பெரிய உயிரிழப்புகளைசந்தக்கும் என கணித்துள்ளோம், அதன்பின் குறையத்தொடங்கும்” எனத் தெரிவித்தார்

வெள்ளைமாளிகையி்ன் கரோனா வைரஸ் எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் டெபோரா பிர்க்ஸ் நிருபர்களிடம் கூறுகையில், “ அமெரி்க்காவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்துக்கு மேல் அதிகரித்து வி்ட்டது. இந்த சூழலில் மக்கள் பலசரக்கு கடைக்குச் செல்வது, மருந்தகங்களுக்குச் செல்வதைத் தவிர்தது குடும்பத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் 6 அடி இடைவெளியில் நின்று பேசுங்கள்

நியூயார்க், நியூஜெர்ஸியில் அடுத்த இரு வாரங்கள் மோசமான உயிரிழப்புகள் இருக்கும். நியூயார்க்கில் அடுத்த வாரத்தில் அதிகபட்சமாக 855 பேர் வரை உயிரிழக்கவாய்ப்புள்ளது. 60 ஆயிரம் பேர்வரை சிகிச்சையளிக்க படுக்கை வசதி இருக்கிறது.

நியூயார்க், நியூஜெர்ஸியில் 35 சதவீத மக்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, லூசியானாவில் 26 சதவீதம், மிச்சிகன், கனெக்ட்கட், இண்டியானா, ஜியோர்ஜியா, இல்லிநாய்ஸ் ஆகியவற்றில் 15 சதவீதம், கொலராடோ, வாஷிங்டன் டிசி, ரோட் ஐலாந்து, மசாசூசெட்ஸ் 13 சதவீதம் , டெட்ராய்ட், பென்சில்வேனியா ஆகியவற்றிலும் மோசமாக இருக்கிறது.” எனத் தெரிவித்தார்

 

https://www.hindutamil.in/news/world/547995-us-to-witness-toughest-next-two-weeks-due-to-rising-coronavirus-cases-trump-3.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.