Jump to content

அமெரிக்காவுக்கு உதவும் சீனா: கனடாவை புறக்கணிக்கும் டிரம்ப்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வாஷிங்டன்: கொரோனா தொற்றால் அமெரிக்காவில், 3,11,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
நியூயார்க்கில் மட்டும் நேற்று ஒரே நாளில், 630 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை, 3,565 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news


 

 

 

 

 

 

We finally got some good news today.

The Chinese government helped facilitate a donation of 1,000 ventilators that will arrive in JFK today.

I thank the Chinese government, Jack Ma, Joe Tsai, the Jack Ma Foundation, the Tsai Foundation and Consul General Huang.

 
 
 
 

 


 


latest tamil news


 

 

நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரு கோமோ தெரிவித்துள்ளதாவது:
வரும் இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போதே நியூயார்க்கில் வென்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பாதிப்பு அதிகரித்தால் நிலைமை மோசமாகிவிடும்.
இப்படியான சூழலில் அமெரிக்காவுக்குச் சீனா 1,000 வென்டிலேட்டர்களை அனுப்பி உதவியுள்ளது. அமெரிக்கா - சீனா இடையே பல்வேறு முரண்பாடுகள் நிலவும் நிலையிலும், அமெரிக்காவிற்கு சீனா உதவியுள்ளது. இதற்காக, சீனாவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 


latest tamil news


 

 

 

 

முகக்கவச ஏற்றுமதிக்கு தடை


இந்நிலையில், அமெரிக்காவின் '3எம்' நிறுவனம் தயாரிக்கும், 'என்95' ரக முகக் கவசங்களைக் கனடா மற்றும் லத்தீன், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
'இக்கட்டான சூழலில், அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கை ஏற்க முடியாதது. இது அமெரிக்க செய்யும் 'பெரும் தவறு' என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

 


 

latest tamil news


 


'உலக நாடுகள் அனைத்தும் பகையை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே, கொரோனாவை அழித்தொழிக்க முடியும் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதற்கு இணங்க, சீனா செயல்படுவது பாராட்டத்தக்கது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் அனைத்து நாடுகள் மீதும் பகையுணர்வுடன் செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது' என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2515670

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிதம் தெரியாத டொனால்ட் ரம்ப்....கிட்லரை விட மோசமான மனிதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் வேடிக்கையான விளையாட்டு அமெரிக்கா  விழுந்தால் சைனாவும் குப்புற விழணும் us  திறைசேரியின் பண்ட்  பத்திரங்களில்  அதிக முதலீடு சைனா தான் வேறை வழியே கிடையாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இதில் வேடிக்கையான விளையாட்டு அமெரிக்கா  விழுந்தால் சைனாவும் குப்புற விழணும் us  திறைசேரியின் பண்ட்  பத்திரங்களில்  அதிக முதலீடு சைனா தான் வேறை வழியே கிடையாது .

இந்த உலகில் ஒருத்தரை ஒருத்தர் நம்பித்தான் வாழ்கின்றார்கள். இதற்குள் நான் பெரிது நீ சிறிது என்ற தம்பட்டம் வேறு. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

இதில் வேடிக்கையான விளையாட்டு அமெரிக்கா  விழுந்தால் சைனாவும் குப்புற விழணும் us  திறைசேரியின் பண்ட்  பத்திரங்களில்  அதிக முதலீடு சைனா தான் வேறை வழியே கிடையாது

இப்பொது இது நிலைமையல்ல.

சீனா,  சமப்படுத்தி   உள்ளது. 

decoupling என்று மேற்கு சைனாவை வைக்குமிடத்தில் தள்ளப்போனால், பார்த்துக்கொண்டு இருக்குமா சீனா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kadancha said:

இப்பொது இது நிலைமையல்ல.

சீனா,  சமப்படுத்தி   உள்ளது. 

decoupling என்று மேற்கு சைனாவை வைக்குமிடத்தில் தள்ளப்போனால், பார்த்துக்கொண்டு இருக்குமா சீனா?

ஏற்கனவே அவர்களின் chinese debt trap(கடன் கொடுத்து தமது பொறிக்குள் வீழ்த்துவது ) தந்திரம் முற்று முழுதாக பயனில்லை அல்லது பயன் கொடுக்கவில்லை  என்கிறார்கள் .

உலகு இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மீளும் போது decouplingதான் எல்லா பொருளுக்கும் அவர்களை நம்பி இருப்பை தவிர்க்க முயட்சி எடுப்பார்கள் .

Link to comment
Share on other sites

அனைத்து விதமான மருத்துவ உபகரணங்ளையும் இனி கனடாவே தயாரிக்கும் என்றும் அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களுக்கு இன்னொரு நாட்டில் இனித் தங்கியிருக்க போவதில்லை என்றும் ருடோ அறிவித்துள்ளார். ஒன்ராரியோ முதலமைச்சரும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பணமும் சலுகையும் அறிவித்துள்ளார்.

மிதமிஞ்சிய இயற்கை மற்றும் காடுகளின் வளமும்  நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சனத்தொகையும் கொண்ட நாம் / கனடா நிச்சயம் அமெரிக்காவின் இந்த துரோகத்தில் இருந்து மீண்டும் சுய சார்பு கொண்ட நாடாக மிளிர்வோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.