Sign in to follow this  
உடையார்

அமெரிக்காவுக்கு உதவும் சீனா: கனடாவை புறக்கணிக்கும் டிரம்ப்!

Recommended Posts

வாஷிங்டன்: கொரோனா தொற்றால் அமெரிக்காவில், 3,11,544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
நியூயார்க்கில் மட்டும் நேற்று ஒரே நாளில், 630 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை, 3,565 ஆக உயர்ந்துள்ளது.


latest tamil news


 

 

 

 

 

 

We finally got some good news today.

The Chinese government helped facilitate a donation of 1,000 ventilators that will arrive in JFK today.

I thank the Chinese government, Jack Ma, Joe Tsai, the Jack Ma Foundation, the Tsai Foundation and Consul General Huang.

 
 
 
 

 


 


latest tamil news


 

 

நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரு கோமோ தெரிவித்துள்ளதாவது:
வரும் இரண்டு வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தற்போதே நியூயார்க்கில் வென்டிலேட்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. பாதிப்பு அதிகரித்தால் நிலைமை மோசமாகிவிடும்.
இப்படியான சூழலில் அமெரிக்காவுக்குச் சீனா 1,000 வென்டிலேட்டர்களை அனுப்பி உதவியுள்ளது. அமெரிக்கா - சீனா இடையே பல்வேறு முரண்பாடுகள் நிலவும் நிலையிலும், அமெரிக்காவிற்கு சீனா உதவியுள்ளது. இதற்காக, சீனாவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 


latest tamil news


 

 

 

 

முகக்கவச ஏற்றுமதிக்கு தடை


இந்நிலையில், அமெரிக்காவின் '3எம்' நிறுவனம் தயாரிக்கும், 'என்95' ரக முகக் கவசங்களைக் கனடா மற்றும் லத்தீன், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கும்படி அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
'இக்கட்டான சூழலில், அமெரிக்க அதிபரின் இந்த நடவடிக்கை ஏற்க முடியாதது. இது அமெரிக்க செய்யும் 'பெரும் தவறு' என, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

 


 

latest tamil news


 


'உலக நாடுகள் அனைத்தும் பகையை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே, கொரோனாவை அழித்தொழிக்க முடியும் என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளதற்கு இணங்க, சீனா செயல்படுவது பாராட்டத்தக்கது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் அனைத்து நாடுகள் மீதும் பகையுணர்வுடன் செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது' என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2515670

Share this post


Link to post
Share on other sites

இங்கிதம் தெரியாத டொனால்ட் ரம்ப்....கிட்லரை விட மோசமான மனிதன்.

Share this post


Link to post
Share on other sites

இதில் வேடிக்கையான விளையாட்டு அமெரிக்கா  விழுந்தால் சைனாவும் குப்புற விழணும் us  திறைசேரியின் பண்ட்  பத்திரங்களில்  அதிக முதலீடு சைனா தான் வேறை வழியே கிடையாது .

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, பெருமாள் said:

இதில் வேடிக்கையான விளையாட்டு அமெரிக்கா  விழுந்தால் சைனாவும் குப்புற விழணும் us  திறைசேரியின் பண்ட்  பத்திரங்களில்  அதிக முதலீடு சைனா தான் வேறை வழியே கிடையாது .

இந்த உலகில் ஒருத்தரை ஒருத்தர் நம்பித்தான் வாழ்கின்றார்கள். இதற்குள் நான் பெரிது நீ சிறிது என்ற தம்பட்டம் வேறு. 😂

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, பெருமாள் said:

இதில் வேடிக்கையான விளையாட்டு அமெரிக்கா  விழுந்தால் சைனாவும் குப்புற விழணும் us  திறைசேரியின் பண்ட்  பத்திரங்களில்  அதிக முதலீடு சைனா தான் வேறை வழியே கிடையாது

இப்பொது இது நிலைமையல்ல.

சீனா,  சமப்படுத்தி   உள்ளது. 

decoupling என்று மேற்கு சைனாவை வைக்குமிடத்தில் தள்ளப்போனால், பார்த்துக்கொண்டு இருக்குமா சீனா?

Share this post


Link to post
Share on other sites
5 minutes ago, Kadancha said:

இப்பொது இது நிலைமையல்ல.

சீனா,  சமப்படுத்தி   உள்ளது. 

decoupling என்று மேற்கு சைனாவை வைக்குமிடத்தில் தள்ளப்போனால், பார்த்துக்கொண்டு இருக்குமா சீனா?

ஏற்கனவே அவர்களின் chinese debt trap(கடன் கொடுத்து தமது பொறிக்குள் வீழ்த்துவது ) தந்திரம் முற்று முழுதாக பயனில்லை அல்லது பயன் கொடுக்கவில்லை  என்கிறார்கள் .

உலகு இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து மீளும் போது decouplingதான் எல்லா பொருளுக்கும் அவர்களை நம்பி இருப்பை தவிர்க்க முயட்சி எடுப்பார்கள் .

Share this post


Link to post
Share on other sites

அனைத்து விதமான மருத்துவ உபகரணங்ளையும் இனி கனடாவே தயாரிக்கும் என்றும் அத்தியாவசியமான மருத்துவ உபகரணங்களுக்கு இன்னொரு நாட்டில் இனித் தங்கியிருக்க போவதில்லை என்றும் ருடோ அறிவித்துள்ளார். ஒன்ராரியோ முதலமைச்சரும் மருத்துவ உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பணமும் சலுகையும் அறிவித்துள்ளார்.

மிதமிஞ்சிய இயற்கை மற்றும் காடுகளின் வளமும்  நிலப்பரப்புடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சனத்தொகையும் கொண்ட நாம் / கனடா நிச்சயம் அமெரிக்காவின் இந்த துரோகத்தில் இருந்து மீண்டும் சுய சார்பு கொண்ட நாடாக மிளிர்வோம்.

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • ஒரு நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவிய அழகு ராணி தட்டம்மை வெடிப்பிற்கு எதிரான பசிபிக் தீவின் போராட்டத்திற்கு உதவிய அழகு ராணி கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவினார். பதிவு: மே 26,  2020 16:39 PM சமோவா உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் வரை கொரோனா நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஆனால்  சமோவா என்ற குட்டி நாடு கொரோனாவே இல்லாத நாடாக உள்ளது. இதற்கு காரணம் ஒரு அழகி தான் என கூறப்படுகிறது. அந்த அழகியின் பெயர் ஃபோனோ (ஃபோனோய்பாஃபோ மெக்ஃபார்லேண்ட்-சீமானு)  மிஸ். சமோவா அழகி போட்டியில் பட்டம் வென்று உள்ளார். ஃபோனோ  அழகிப்பட்டம் பெற்ற நேரத்தில், அவரது நாட்டின் மொத்த மக்கள் தொகையான 200,000 பேரில் 6,000 பேருக்கு மணல்வாரி அல்லது மண்ணன் என்று அழைக்கப்படும் அம்மை நோய் தொற்றியிருந்தது.இந்த நோய்க்கு 83 பேர் பலியாகி இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள்! சமோவா நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, ஒரு மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பொது சுகாதார செவிலியரான ஃபோனோ ஒரு தன்னார்வலராக நாட்டு மக்களுக்கு சேவை செய்ய களமிறங்கினார்.< வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட மருத்துவ குழுக்களுடன் தானும் இணைந்துகொண்டார். அவர் சந்தித்த ஒவ்வொரு குடும்பமும், தங்கள் வீட்டு வாசலில் தனது நாட்டு நிற்பதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டார்கள்.  தான் அப்போது தன்னை மிஸ். சமோவாக எண்ணவில்லை, தடுப்பூசி போடும் குழுவில் ஒருவராகத்தான் தன்னை எண்ணிக்கொண்டேன் என்கிறார் ஃபோனோ. துரதிர்ஷ்டவசமாக அவர் சந்தித்த சில குடும்பங்கள் அப்போதுதான் தங்கள் குழந்தை ஒன்றை சாகக்கொடுத்திருந்தன. குழந்தைகளைப் பறிகொடுத்த சிலர், இதைத்தான் அந்த மிஸ். சமோவா பெண் சொல்லிக்கொண்டிருந்தார்,அப்போது நம்மில் பலர் அதற்கு செவிகொடுக்கவில்லை என்று கூறிக்கொண்டார்கள்.வேறு வகையில் சொல்லப்போனால், இக்கட்டான நிலையிலிருந்த தன் நாட்டு மக்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார் ஃபோனோ. மணல் வாரி அம்மையில் பட்ட அடியில் விழித்துக்கொண்ட சமோவா நாடு, உலகில் கொரோனா பரவுவதை கண்டதும் உஷாராகிவிட்டது.பிப்ரவரி மாதமே சீனா அல்லது ஹாங்காங்கிலிருந்து வருவோர், அவர்கள் ஏற்கனவே இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலன்றி நாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.சிலர் திருப்பி அனுப்பப்பட்டார்கள். மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டது... பின்னர், சர்வதேச பயணம் வரை அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இன்று கொரோனா இல்லாத நாடாக சமோவா திகழும் நிலையில், ஃபோனோ கொரோனா குறித்த விழிப்புணர்வையும், தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு ஏற்படுத்திவருகிறார். உண்மையாகவே பாராட்டப்படவேண்டிய அழகிதான் இவர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/26163916/How-Samoa-has-recorded-NO-Covid19-cases-with-the-help.vpf
    • இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் ஆபத்து எச்சரிக்கை இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம்அவர்கள் உயிருக்கு ஆபத்து என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரித்து உள்ளது. பதிவு: மே 26,  2020 17:00 PM டோக்கியோ இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம் அணியக்கூடாது, ஏனெனில் அது அவர்கள் சுவாசிப்பதை கடினமாக்கலாம் மற்றும் மூச்சுத் திணறல் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஜப்பான் குழந்தைகள் சங்கம் எச்சரித்துள்ளது. முக கவசம் சுவாசத்தை கடினமாக்குகின்றன, ஏனெனில் குழந்தைகளுக்கு குறுகிய காற்றுப் பாதைகள் உள்ளன, இது அவர்களின் இதயங்களில் சுமையை அதிகரிக்கிறது, முக கவசம் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகமூடிகள் பயன்படுத்துவதை நிறுத்துவோம்" என்று சங்கம் தனது இணையதள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.குழந்தைகளிடையே மிகக் குறைவான கொரோனா வைரஸ் வழக்குகள் இருந்தன என்றும், பெரும்பாலான குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜப்பான் குழந்தை சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகளிலோ அல்லது பகல்நேர பராமரிப்பு வசதிகளிலோ கொரோனா பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/26170013/Children-under-the-age-of-two.vpf
    • இவர் தெழிலதிபர் அல்ல, இவர் என் நண்பர் தீபக். இதிலிருக்கும் ந‌டிகையை (பூஜா) இவர் என்கேஜ் செய்திருந்தார் பின் சில காரணங்களால் இருவரும் விலகிவிட்டனர்.      யசிகா இதை பார்த்தால் இந்த சிறுவன் இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்கபோகின்றான்
    • Iசின்ன வயதில் தமிழ் மொழிப் பாடப் புத்தகத்தில் நான் படித்த கதையொன்றை, செந்தமிழன் சீமான் இன்று ஞாபகப்படுத்திவிட்டார்: ஒருவன் வெகுதூரம் பயணித்து, ஆற்றைக் கடந்து  தனது மாமியாரின் வீட்டை அடைகிறான். அன்போடு வரவேற்கும் மாமி, ஓர் உணவுப் பண்டத்தை அவனுக்கு அளிக்கிறார். நல்ல பசியோடு இருக்கும் இவன் அந்தப் பண்டத்தைப் பிட்டுப் பார்த்தால் உள்ளே சுவையான இனிப்புக் கலவையுள்ளது. இவன் தனது வாழ்நாள்நாளில் அப்படியான பண்டத்தைப் பார்த்ததேயில்லை. அந்தப் பண்டத்தின் பெயர் என்னவென்ற இவன் கேட்க, மாமி 'கொழுக்கட்டை' என்கிறார். வீட்டுக்குப் போனதும் மனைவியிடம் அந்தப் பண்டத்தைச் செய்து தரச் சொல்லிக் கேட்க வேண்டும் என முடிவெடுத்துக்கொண்டவன், அந்தப் பண்டத்தின் பெயரை மறந்துவிடக் கூடாது என்ற கவனத்தோடு 'கொழுக்கட்டை... கொழுக்கட்டை' என உச்சரித்தவாறே வீடு திரும்புகிறான். ஆனால் ஆற்றைக் கடக்கும் போது 'ஆத்துக்கட்டை... ஆத்துக் கட்டை' என நாக்கும் ஞாபகமும் புரண்டு போகின்றன. வீடு திரும்பியதும் மனைவியிடம் 'ஆத்துக்கட்டை' செய்து தரச் சொல்லிக் கேட்கிறான். மனைவியோ 'ஆத்துக்கட்டை' என்றொரு பண்டமே கிடையாது என்கிறாள். கோபமுற்ற இவன் மனைவியை அடித்துவிடுகிறான். அடி வாங்கிய மனைவியின் உடலில் வீக்கங்கள் ஏற்பட்டுகின்றன. அவள்  அழும்போது 'அய்யோ என்னுடைய உடலில் கொழுக்கட்டை மாதிரி வீக்கம் வந்துவிட்டதே' எனப் புலம்புகிறாள். 'அதுதான் கண்ணே அதுதான் கண்ணே' என இந்த மனிதன் உற்சாகமாகக் கூவுகிறான். இலங்கைக்கே உரிய, தமிழகத்தினருக்குத் தெரியவே தெரியாத 'மாலுபாண்' என்ற உணவைச் சீமான் சாப்பிட்டிருக்கலாம். அதுவும் இட்லி சைஸ் தானே. உள்ளே மீன் கலவையிருக்கும். கடல் கடக்கும்போது பெயர் மறந்துபோய் 'கறி இட்லி' என ஞாபகக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். ஒருவேளை 'மாலுபாண்' என்ற சிங்களச் சொல்லுக்கு 'கறி இட்லி' என்றுகூட அவராகவே தூய தமிழ்ப் பெயரைச் சூட்டியிருக்கலாம். உண்மையிலேயே அது மிகப் பொருத்தமான பெயர்தான்.  சும்மா சும்மா ஒருவரைக் கேலி செய்வது யாவருக்கும் எளிதான காரியமே, மாறாக நாம் அவரைப் புரிந்துகொள்ளவும் முயல வேண்டும்.