Sign in to follow this  
உடையார்

சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கவுன்சிலர்

Recommended Posts

சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய கவுன்சிலர்

 

councilor-help-sri-lankan-tamils-who-were-left-without-food-near-sivaganga

 

சிவகங்கை அருகே உணவின்றி தவித்த இலங்கை தமிழர்களுக்கு அப்பகுதி ஒன்றியக் கவுன்சிலர் மகேஸ்வரி கண்ணன் உதவிகரம் நீட்டினார்.

சிவகங்கை அருகே ஒக்கூர் இலங்கை தமிழர் முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அவர்கள் கூலித் தொழில் செய்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கால் இலங்கை தமிழர்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே முடங்கினர். மேலும் வேலைக்குச் செல்லாததால் உணவுப் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்து வந்தனர்.

இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த ஒன்றியக் கவுன்சிலர் மகேஸ்வரி கண்ணன் இலங்கை தமிழர்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறார். அவர் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை உணவுப் பொருட்கள் வழங்க உள்ளார். மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிப்பதற்கான கருவியும் இலவசமாக வழங்கினார். அவரது செயலை இலங்கை தமிழர்கள் மனதார பாராட்டினர்.

https://www.hindutamil.in/news/tamilnadu/548053-councilor-help-sri-lankan-tamils-who-were-left-without-food-near-sivaganga.html

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இவ்வாறான முகாம்களில் தொற்று பரவினால், தாக்கம் அதிகமாக இருக்கும். 

உதவும் உள்ளங்களுக்கு நன்றிகள். 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

Sign in to follow this  

  • Topics

  • Posts

    • இந்த‌ ப‌திவுக்கு க‌ண‌க்க‌ எழுத‌ தேவை இல்ல‌ இந்த‌ ப‌ட‌ம் ஒன்று போதும் 😉
    • ஒரு நாட்டில் கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவிய அழகு ராணி தட்டம்மை வெடிப்பிற்கு எதிரான பசிபிக் தீவின் போராட்டத்திற்கு உதவிய அழகு ராணி கொரோனா பாதிப்புகள் பரவாமல் தடுக்க உதவினார். பதிவு: மே 26,  2020 16:39 PM சமோவா உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகள் வரை கொரோனா நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. ஆனால்  சமோவா என்ற குட்டி நாடு கொரோனாவே இல்லாத நாடாக உள்ளது. இதற்கு காரணம் ஒரு அழகி தான் என கூறப்படுகிறது. அந்த அழகியின் பெயர் ஃபோனோ (ஃபோனோய்பாஃபோ மெக்ஃபார்லேண்ட்-சீமானு)  மிஸ். சமோவா அழகி போட்டியில் பட்டம் வென்று உள்ளார். ஃபோனோ  அழகிப்பட்டம் பெற்ற நேரத்தில், அவரது நாட்டின் மொத்த மக்கள் தொகையான 200,000 பேரில் 6,000 பேருக்கு மணல்வாரி அல்லது மண்ணன் என்று அழைக்கப்படும் அம்மை நோய் தொற்றியிருந்தது.இந்த நோய்க்கு 83 பேர் பலியாகி இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள்! சமோவா நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, ஒரு மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பொது சுகாதார செவிலியரான ஃபோனோ ஒரு தன்னார்வலராக நாட்டு மக்களுக்கு சேவை செய்ய களமிறங்கினார்.< வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்ட மருத்துவ குழுக்களுடன் தானும் இணைந்துகொண்டார். அவர் சந்தித்த ஒவ்வொரு குடும்பமும், தங்கள் வீட்டு வாசலில் தனது நாட்டு நிற்பதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டார்கள்.  தான் அப்போது தன்னை மிஸ். சமோவாக எண்ணவில்லை, தடுப்பூசி போடும் குழுவில் ஒருவராகத்தான் தன்னை எண்ணிக்கொண்டேன் என்கிறார் ஃபோனோ. துரதிர்ஷ்டவசமாக அவர் சந்தித்த சில குடும்பங்கள் அப்போதுதான் தங்கள் குழந்தை ஒன்றை சாகக்கொடுத்திருந்தன. குழந்தைகளைப் பறிகொடுத்த சிலர், இதைத்தான் அந்த மிஸ். சமோவா பெண் சொல்லிக்கொண்டிருந்தார்,அப்போது நம்மில் பலர் அதற்கு செவிகொடுக்கவில்லை என்று கூறிக்கொண்டார்கள்.வேறு வகையில் சொல்லப்போனால், இக்கட்டான நிலையிலிருந்த தன் நாட்டு மக்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தார் ஃபோனோ. மணல் வாரி அம்மையில் பட்ட அடியில் விழித்துக்கொண்ட சமோவா நாடு, உலகில் கொரோனா பரவுவதை கண்டதும் உஷாராகிவிட்டது.பிப்ரவரி மாதமே சீனா அல்லது ஹாங்காங்கிலிருந்து வருவோர், அவர்கள் ஏற்கனவே இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலன்றி நாட்டுக்குள் அனுமதிக்கப்படவில்லை.சிலர் திருப்பி அனுப்பப்பட்டார்கள். மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, ஐந்து பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டது... பின்னர், சர்வதேச பயணம் வரை அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இன்று கொரோனா இல்லாத நாடாக சமோவா திகழும் நிலையில், ஃபோனோ கொரோனா குறித்த விழிப்புணர்வையும், தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்கு ஏற்படுத்திவருகிறார். உண்மையாகவே பாராட்டப்படவேண்டிய அழகிதான் இவர். https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/26163916/How-Samoa-has-recorded-NO-Covid19-cases-with-the-help.vpf
    • இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முக கவசம் ஆபத்து எச்சரிக்கை இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம்அவர்கள் உயிருக்கு ஆபத்து என ஜப்பான் குழந்தைகள் சங்கம் தெரித்து உள்ளது. பதிவு: மே 26,  2020 17:00 PM டோக்கியோ இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் முக கவசம் அணியக்கூடாது, ஏனெனில் அது அவர்கள் சுவாசிப்பதை கடினமாக்கலாம் மற்றும் மூச்சுத் திணறல் அபாயத்தை அதிகரிக்கலாம் என்று ஜப்பான் குழந்தைகள் சங்கம் எச்சரித்துள்ளது. முக கவசம் சுவாசத்தை கடினமாக்குகின்றன, ஏனெனில் குழந்தைகளுக்கு குறுகிய காற்றுப் பாதைகள் உள்ளன, இது அவர்களின் இதயங்களில் சுமையை அதிகரிக்கிறது, முக கவசம் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கின்றன. 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முகமூடிகள் பயன்படுத்துவதை நிறுத்துவோம்" என்று சங்கம் தனது இணையதள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.குழந்தைகளிடையே மிகக் குறைவான கொரோனா வைரஸ் வழக்குகள் இருந்தன என்றும், பெரும்பாலான குழந்தைகள் குடும்ப உறுப்பினர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜப்பான் குழந்தை சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பள்ளிகளிலோ அல்லது பகல்நேர பராமரிப்பு வசதிகளிலோ கொரோனா பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/26170013/Children-under-the-age-of-two.vpf
    • இவர் தெழிலதிபர் அல்ல, இவர் என் நண்பர் தீபக். இதிலிருக்கும் ந‌டிகையை (பூஜா) இவர் என்கேஜ் செய்திருந்தார் பின் சில காரணங்களால் இருவரும் விலகிவிட்டனர்.      யசிகா இதை பார்த்தால் இந்த சிறுவன் இருட்டு அறையில் முரட்டு குத்து வாங்கபோகின்றான்