Jump to content

கொரோனாவுக்கு 7 தடுப்பூசி கண்டுபிடிக்க பில் கேட்ஸ் நிதியுதவி


Recommended Posts

கொரோனோவுக்கு ஏழு விதமான தடுப்பூசிகளை கண்டுபிடிக்க கோடிக்கணக்கான டாலர் நிதி அளிக்க உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமது பெயரிலும் மனைவி மெலிண்டா பெயரிலும் உள்ள அறக்கட்டளைகள் இந்த கோடிக்கணக்கான டாலரை அளிக்கும் என்றார் அவர். ஒன்று முதல் ஒன்றரை வருட காலத்தில் 7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றில் சிறந்த 2 தடுப்பூசிகள் உலக பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என்ற அவர் எஞ்சிய 5 தடுப்பூசிகள் தொடர்ந்து ஆய்வக பரிசோதனையில் தொடர நிதி வழங்கப்படும் என்றார்.

கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய பில்கேட்ஸ், தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என அதிபர் டிரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/105981/கொரோனாவுக்கு-7-தடுப்பூசிகண்டுபிடிக்க-பில்-கேட்ஸ்நிதியுதவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bill-Gates.jpg

கொரோனாவை அழிக்க 7 தடுப்பூசிகள்: பில்கேட்ஸ் கோடிக்கணக்கான டொலர் உதவி!

உலக நாடுகளில் பெரும் மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் பல்வேறு நாடுகள் தடுப்பூசி மற்றும் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனோவுக்கு ஏழு விதமான தடுப்பூசிகளைக் கண்டுபிடிக்க கோடிக்கணக்கான டொலர் நிதியை வழங்கவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தமது பெயரிலும் மனைவி மெலிண்டா பெயரிலும் உள்ள அறக்கட்டளைகள் இந்த கோடிக்கணக்கான டொலரை வழங்கும் எனத்தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஒன்று முதல் ஒன்றரை வருட காலத்தில் 7 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றில் சிறந்த 2 தடுப்பூசிகள் உலக பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என்றுகூறிய அவர் எஞ்சிய 5 தடுப்பூசிகள் தொடர்ந்து ஆய்வக பரிசோதனையில் தொடர்வதற்கு நிதி வழங்கப்படும் என்றார்.

மேலும், கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டிய பில்கேட்ஸ், தடுப்பு நடவடிக்கையாக அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்பிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

http://athavannews.com/கொரோனாவை-அழிக்க-7-தடுப்பூ/

Link to comment
Share on other sites

வரவும் நாடுகளிலேயே அதிக உயிர் இழப்பு ஏற்படும் - பில் கேட்ஸ் , மற்றும் உலக பொருளாதார இழப்பும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் தடுப்பூசி செப்டம்பருக்குள் தயாராகி விடும்- ஆக்ஸ்போர்டு விஞ்ஞானி தகவல்

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், இதற்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று ஆக்ஸ்போர்டு விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.
பதிவு: ஏப்ரல் 13,  2020 14:39 PM
லண்டன்

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயான கொரோனா வைரஸிற்கு இதுவரை 108,330 பேர் உயிரிழந்துள்ளனர். 1,771,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் தீவிரம்  இன்று வரை குறைந்த பாடில்லை. இதன் காரணமாக நாட்டில் அடுத்த மூன்று முதல் ஆறு வாரங்கள் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 


இங்கிலாந்தில்  கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை 10,612 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 737-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நோய் எளிதாக பரவுவதால், இதற்கான தடுப்பூசியை உலகின் பல்வேறு நாடுகள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன. அதற்கான வேலைகளும் பல்வேறு நாடுகளில் நடை பெற்று வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று அதன் கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக முன்னணி ஆராய்ச்சி குழுவில் இருக்கும் விஞ்ஞானி  சாரா கில்பர்ட் கூறியுள்ளார்.அவர் தொடர்ந்து கூறுகையில், எங்களின் குழு கண்டுபிடிக்கும் தடுப்பூசி வெற்றிகரமாக அமையும், அதில் தனக்கு 80 சதவீதம் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும் என்று நம்புகிறேன். அதே நேரத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் இந்த தடுப்பூசிக்கான சோதனைகள் மனிதர்கள் மீது நடத்தவுள்ளோம்.

இந்த வகை தடுப்பூசி நாங்கள் செய்த பிற ஆராய்ச்சிகளை  அடிப்படையாகக் கொண்டு இது செயல்படுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவரிடம் நிச்சயமாக செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகிவிடுமா என்று கேட்டதற்கு, ஆம், ஆனால் அதற்கு நாங்கள் இன்னும் சில தூரம் செல்ல வேண்டும், எல்லாவற்றையும் சரியாக செய்தால் நிச்சயமாக இது சாத்தியமாகும், இது என்னுடைய தனிப்பட்ட பார்வை என்று கூறியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/13143914/A-coronavirus-vaccine-could-be-ready-by-September.vpf

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.