nunavilan

பிரித்தானியாவில் வைரஸ் தொற்றுக்காக 5G கோபுரங்கள் எரிக்கப்பட்டன!

Recommended Posts

பிரித்தானியாவில் வைரஸ் தொற்றுக்காக 5G கோபுரங்கள் எரிக்கப்பட்டன!

கொறோனாவைரஸ் தொற்றுக்குக் காரணமெனெ வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் மூன்று 5G தொலைபேசிக் கோபுரங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

5G கோபுரங்களிலிருந்து பரிவர்த்தனையாகும் உயர் அதிர்வெண் அலைகள் வைரஸ் தொற்றைத் தீவிரமாக்குகின்றன என்ற செய்தியை யாரோ பரவவிட்டதைத் தொடர்ந்து இச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

“இது முற்று முழுதும் பொய்யான தகவல். அத்தோடு, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, இக் காலகட்டத்தில், எமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு கருவி அது. இது மிகவும் கோழ்த்தனமான ஒரு நடவ்டிக்கை” எனத் தேசிய சுகாதார சேவைகள் வாரியத் தலைவர் ஸ்டீபன் போவிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

சீனாவின் வூஹான் நகரில் 5G கோபுரங்களை நிறுவிய பின்னரே SARS-CoV-2 வைரஸ் சீனாவிலும், இதர நாடுகளிலும் பரவத் தொடங்கியது என்ற பொய்யான தகவல் சமீப காலங்களில் வலைத்தளங்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால் யப்பான், ஈரான் போன்ற நாடுகளில் இன்னும் 5G கோபுரங்கள் எதுவும் நிறுவப்படவில்லையாயினும் அங்கும் வைரஸ் பரவி வருகிறது என்பதைச் இச் செய்தியைப் பரப்புபவர்கள் உணரவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

 

பேமிங்க்ஹாம், மேர்சிசைட் ஆகிய நகரங்களில் 5G கோபுரங்கள் தீப்பற்றி எரியும் காணொளிகள் பரவலாகி வருகிறது. 5G அலைகளினால் உடல் நலத்திற்குக் கேடு விளையாது என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் பிரித்தானிய பத்திரிகை ஒன்று 5G அலைக்கற்றைகளினால் உடலுக்குத் தீங்கு விளையலாம் எனச் செய்தி வெளியிட்டிருந்தது. சர்வதேச வரைமுறைகளுக்கு அமையவே இத் தொழில்நுட்பம் பாவிக்கப்படுகிரது என இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இப் பொய்த் தகவல், முகநூல், யூ-டியூப், இன்ஸ்டாகிராம் தளங்களினூடாகப் பல லட்சம் பாவனையாளரைச் சென்றடைந்திருக்கிறது. சில நம்பகத்தன்மையுள்ள கணக்காளர்களும் இச் செய்தியைப் பகிர்ந்து வருகிறார்கள். ஜனவரி பிற்பகுதியிலிருந்து இப்படியான செய்திகள் வலம் வருகின்றன.

இச் செய்திகளில் ஒன்று, 5G அலைகள் மனிதரின் நிர்ப்பீடன ஆற்றலை (immune system) பாதிப்பதால் வைரஸ் தொற்றிக்கொள்ள ஏதுவாகிறது என்கிறது.

இன்னுமொரு செய்தி, 5G அலைகள் வைரஸ்களைக் காவிச் செல்கின்றன என்கிறது.

இந்த இரண்டுமே உண்மைகளற்ற குப்பைகள் எனச் சாடுகிறார் றெடிங்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, கல உயிரியல் பேராசிரியர் டாக்டர் சைமன் கிளார்க்.

கோவிட்-19 தொற்றுக்கு, உலகம் முழுவதும் இதுவரை 1.2 மில்லியன் மக்கள் ஆளாகியிருக்கிறார்கள். அதில் 312,000 பேர் அமெரிக்காவிலும், 130,759 பேர் ஸ்பெயினிலும், 124,632 பேர் இத்தாலியிலும், 96,000 பேர் ஜேர்மனியிலும் உள்ளனர்.

https://marumoli.com/பிரித்தானியாவில்-வைரஸ்-த/?fbclid=IwAR1HFxsOzCkczqaAbBkgNVg6cav-GiKLJRtDxT-gSISL6FU8XVU3VMrbo4g

Share this post


Link to post
Share on other sites

இதையே எங்கட தமிழர் செய்தால் 🤯
 

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
59 minutes ago, ரதி said:

இதையே எங்கட தமிழர் செய்தால் 🤯
 

ஏன் உங்கட தமிழர் செய்வினம்?

களவெடுக்க எண்டு வந்து தங்கின வைக்கிங்களும், அட்டூழியம் செய்து நாட்டைப் பிடித்த பிரான்ஸ் நோர்மன்டிப் பகுதியில் இருந்து வந்த நோர்மர்களும் செய்ய மாட்டார்கள் எண்டு நம்பிறியளோ?

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, ரதி said:

இதையே எங்கட தமிழர் செய்தால் 🤯
 

உண்மை தான் ரதி... இப்போது 15 வரிசையில் வந்து எழுதி இருப்பார்கள் எங்களின்  மூட நம்பிக்கை, முட்டாள் தனம், சைவ சமயம்  இப்படி பல வடிவங்களில்...

Share this post


Link to post
Share on other sites
9 minutes ago, Sasi_varnam said:

உண்மை தான் ரதி... இப்போது 15 வரிசையில் வந்து எழுதி இருப்பார்கள் எங்களின்  மூட நம்பிக்கை, முட்டாள் தனம், சைவ சமயம்  இப்படி பல வடிவங்களில்...

எதை எதனுடன் ஒப்பிடுவது என்று கொஞ்சமும் யோசனை இல்லாமல் எழுதுவதா ? 

மூட நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்றும் முட்டாள்தனத்தை முட்டாள்தனம் என்று கூறுவது பிழையோ ? 

5G யை எரித்ததற்கும் சமயத்திற்கும் என்ன தொடர்பு ? (மேலே தரப்பட்ட செய்தியின் அடிப்படையில் ) 

☹️

Share this post


Link to post
Share on other sites

மண்டை பிழைச்சுதுகள் எல்லா நாட்டிலும் இருக்குதுகள்தானே! 5G கொரோனா வைரஸை பரப்புகின்றது என்று சிலர் Twitter போன்ற சமூகவலைத் தளங்களில் கீச்சிட அதை நம்பி சில மண்டை பிழைச்சுதுகள் mobile mast களை உடைச்சது உண்மைதான்.

மேற்கு நாடுகளில் conspiracy theory, pseudoscience என்று இணையத்தில் கொடிகட்டிப் பறக்கின்றது. அதையே இந்தியாவில் சமயத்தில் முன்னமே சொல்லியிருக்கு. இவர்கள் இப்ப கண்டுபிடிக்கிறைதை எல்லாம் நாங்கள் அப்பவே கண்டுபிடித்தோம் என்று கொடிநாட்டுவார்கள். 😂🤣

  • Like 1
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

ஆக மொத்தத்தில் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்... நாங்கள் எங்கள் மட்டைகளை தூக்கிப்பிடிப்போம். 😃

Share this post


Link to post
Share on other sites
2 hours ago, Nathamuni said:

ஏன் உங்கட தமிழர் செய்வினம்?

களவெடுக்க எண்டு வந்து தங்கின வைக்கிங்களும், அட்டூழியம் செய்து நாட்டைப் பிடித்த பிரான்ஸ் நோர்மன்டிப் பகுதியில் இருந்து வந்த நோர்மர்களும் செய்ய மாட்டார்கள் எண்டு நம்பிறியளோ?

இங்கே கண பேரின்ட நினைப்பு அப்படித் தான் இருக்கு 
 

2 hours ago, Sasi_varnam said:

உண்மை தான் ரதி... இப்போது 15 வரிசையில் வந்து எழுதி இருப்பார்கள் எங்களின்  மூட நம்பிக்கை, முட்டாள் தனம், சைவ சமயம்  இப்படி பல வடிவங்களில்...

அதே தான் ...இந்த நாட்டுக்காரர் செய்த படியால் இதை வாசித்து போட்டு பேசாமல் கடந்து போயினம் 

Share this post


Link to post
Share on other sites

இது 5ஜீ அலைக்கற்றை வாறதை எதிர்ப்பவர்கள் கொரோணோ புரளிய பயன்படுத்தி செய்தது.. வாய்ப்பு இப்போது கிடைத்தது காட்டி விட்டிருக்காங்க.

Share this post


Link to post
Share on other sites

மோடிஜீ  பரவாயில்லை 😆

Share this post


Link to post
Share on other sites
Posted (edited)
1 hour ago, ரதி said:

இங்கே கண பேரின்ட நினைப்பு அப்படித் தான் இருக்கு 

🤨

உங்களது கருத்துக்கள், சிலவேளைகளில் அருமையாக இருக்கும். சிலவேளைகளில் மிகவும் குழப்பமாக இருக்கும். 

இது இரண்டாவது வகை.

 

Edited by Nathamuni
  • Haha 1

Share this post


Link to post
Share on other sites

 

 

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, Sasi_varnam said:

ஆக மொத்தத்தில் எல்லாமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்... நாங்கள் எங்கள் மட்டைகளை தூக்கிப்பிடிப்போம். 😃

நிச்சயமாக  நாம் தான் எமது தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் சசிவர்னம். எம்மிடையே  மட்டுமல்ல உலகம் முழுவதும் மூட நம்பிக்கைகள் இருந்தன. சுவிற்சரலாந்தில் அவர்களது முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்ட பல மூட நம்பிக்கைகள்  பற்றி சுவிஸ் மக்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். தமது முன்னோரின் மூடப்பழங்கங்களைப் பற்றி எனக்கு சொல்வதில்  அவர்கள் ஈகோ பார்ககவில்லை. இங்கு பாடசாலைகளிலேயே அவற்றை பிள்ளைகளுக்கு தெளிவாக எவை எல்லாம்  புனையப்பட்ட புராணங்கள் எவையெல்லாம் வரலாறுகள் என்று  படிப்பிற்கிறார்கள். தமது முன்னோர்களால்  கடைப்பிடிக்கப்பட்டவை என்பதற்காக அவற்றிற்கு வக்காலத்து வாங்க சகட்டு மேனிக்கு அறிவியல்  விளக்கம் கொடுக்க அவர்கள் முனையவில்லை. அவை அக்காலத்து நம்பிக்கைகள் மட்டுமே என்பதில் தெளிவாக உள்ளனர். அதற்காக அவர்கள் முன்னோர்களை அவமதிப்பதக அர்ததம் இல்லை. இங்கு மட்டுமல்ல அனேகமாக வளர்ச்சி  அடைந்த எல்லா நாடுகளிலும் இதே நிலை தான் உள்ளது. 

தற்போது பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட 5 ஜி தொடர்பிலும் பெரும்பான்மை பிரித்தானியர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையே பார்கக முடிகிறது. அப்படி இதற்கு வக்காலத்து   வாங்கினால்  அவன் கிறுக்கனாக இருப்பான். ஒரு தமிழனாக பிரித்தானியரின் வலைத்தளங்களுக்கு சென்று இவற்றை கண்டிக்க உங்களால் முடியும். பிரித்தானிய மக்கள் உங்களை நீ யார் எமது பழக்கங்களை கண்டிக்க  என்று கேட்கப்பவதில்லை. 

ஆகவே எம்மிடையே எமது முன்னோர களால் கைக்கொள்ளப்பட்ட முட நம்பிக்கைகளை நாம் தான் களைய வேண்டும்.  எமது காலத்தில் அப்படி நம்பிவிட்டோம். இப்போதைய காலத்திற்கு அவை பொருத்தமானவை அல்ல . அதை விட்டு விடுங்கள் என்று முன்னோர் இனி வந்து எமக்குச் சொல்ல முடியாது. எமது அறிவை உபயோகித்து நாம் தான் அதைச் செய்ய வேண்டும். எனவே அவ்வாறு நீங்கள் கூறிய எமது ஊறிய பழைய மட்டைகளைப்பற்றி நாம் தான் பேச வேண்டும். ஒவ்வொருவர் வீடும் அவரவருனாலேயே சுத்தம் செய்யப்படல் வேண்டும். அதுவே எமக்கு பெருமை. 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
10 hours ago, Kapithan said:

மூட நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்றும் முட்டாள்தனத்தை முட்டாள்தனம் என்று கூறுவது பிழையோ ? 

பிழையல்ல மெத்தச்சரி தலைவரே!

தமிழ்ப் போராளிகளையும், தமிழ் மக்களையும் பயங்கரவாதிகள் என்று அறிவிக்க, அதனை உலகம் மூடத்தனமாக நம்பியதால்தான், முட்டாள்தனமாக அவர்களை அழிக்க உதவியது. 

இதற்கும் 5G கோபுர அழிப்பிற்கும் என்ன தொடர்பு…? இரண்டும் ஒரே நேர்கோட்டில் உள்ளன ஐயா!

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, nunavilan said:

 

 


 

கொரோனா வைரஸுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா? - முட்டாள்தனம் என்று கூறும் ஆய்வாளர்கள்

கொரோனாவுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா? - "முட்டாள்தனம் இது" :ஆய்வாளர்கள்Getty Images

கொரோனாவுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா? 

கொரோனா வைரஸ் பரவுவதற்கும் 5ஜி இணையத்துக்கும் தொடர்பு உள்ளது என வேகமாகப் பரவும் தகவல்களை 'முட்டாள்தனமானது' என்கிறார்கள் ஆய்வாளர்கள். 5ஜி இணையத்துக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு இருக்கிறது. இதனால்தான் வைரஸ் உருவானது. இதனால்தான் பரவுகிறது எனப் பலர் ஃபேஸ்புக், ட்விட்டர், யு-ட்யூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். 

கொரோனாவுக்கும் 5 ஜி இணையத்துக்கும் தொடர்பா? - "முட்டாள்தனம் இது" :ஆய்வாளர்கள்Getty Images

இப்படியான தகவல்களை உண்மையென நம்பி பிரிட்டனில் செல்ஃபபோன் டவர்களை தாக்கி, தீயிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல், தொலைத்தொடர்புத் துறை ஊழியர்களையும் தாக்கி உள்ளனர். இதனை அடுத்து களத்தில் இறங்கிய பிரிட்டன் அரசு, இவ்வாறான தகவல்கள் பொய்யானவை என்றும், இப்படியான தகவல்கள் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் தங்கள் தளத்தில் உள்ள இவ்வாறான தகவல்களை நீக்கத் தொடங்கி உள்ளன.

 

https://www.bbc.com/tamil/global-52178571

 

 

Share this post


Link to post
Share on other sites

Thomas Cowan இன் conspiracy theory ஐ உலகில் முக்கியமான ஊடகங்கள் எதுவும் முக்கியம்கொடுக்கவில்லை. ஆனால் யூரியூப்பிலும் வாட்ஸப்பிலும் அமோகமாக ஓடுது.  இதைப் பரப்புவர்கள் பலர் 5G capable smartphone களை ஓடி ஓடி வாங்குவார்கள்! 

 

Coronavirus: Scientists brand 5G claims 'complete rubbish'

By Rachel Schraer & Eleanor Lawrie Reality Check
Woman using mobile phoneGetty Images

Conspiracy theories claiming 5G technology helps transmit coronavirus have been condemned by the scientific community.

Videos have been shared on social media showing mobile phone masts on fire in Birmingham and Merseyside - along with the claims.

The posts have been shared on Facebook, YouTube and Instagram - including by verified accounts with hundreds of thousands of followers.

But scientists say the idea of a connection between Covid-19 and 5G is "complete rubbish" and biologically impossible.

The conspiracy theories have been branded "the worst kind of fake news" by NHS England Medical Director Stephen Powis.

Conspiracy theory

Many of those sharing the post are pushing a conspiracy theory falsely claiming that 5G - which is used in mobile phone networks and relies on signals carried by radio waves - is somehow responsible for coronavirus.

These theories appear to have first emerged via Facebook posts in late January, around the same time the first cases were recorded in the US.

They appear to fall broadly in to two camps:

  • One claims 5G can suppress the immune system, thus making people more susceptible to catching the virus. 
  • The other suggests the virus can somehow be transmitted through the use of 5G technology.

Both these notions are "complete rubbish," says Dr Simon Clarke, associate professor in cellular microbiology at the University of Reading.

mobile networkGetty Images Masts caught fire in Birmingham and Merseyside, prompting investigations

"The idea that 5G lowers your immune system doesn't stand up to scrutiny," Dr Clarke says.

"Your immune system can be dipped by all sorts of thing - by being tired one day, or not having a good diet. Those fluctuations aren't huge but can make you more susceptible to catching viruses."

While very strong radio waves can cause heating, 5G is nowhere near strong enough to heat people up enough to have any meaningful effect.

"Radio waves can disrupt your physiology as they heat you up, meaning your immune system can't function. But [the energy levels from] 5G radio waves are tiny and they are nowhere near strong enough to affect the immune system. There have been lots of studies on this."

Graphic shows 5G's frequencies on the electromagnetic spectrum - within the non-ionising band at the lower end of the scale.

The radio waves involved in 5G and other mobile phone technology sit on the low frequency end of the electromagnetic spectrum. Less powerful than visible light, they are not strong enough to damage cells - unlike radiation at the higher frequency end of the spectrum which includes the sun's rays and medical x-rays.

It would also be impossible for 5G to transmit the virus, Adam Finn, professor of paediatrics at the University of Bristol, adds.

"The present epidemic is caused by a virus that is passed from one infected person to another. We know this is true. We even have the virus growing in our lab, obtained from a person with the illness. Viruses and electromagnetic waves that make mobile phones and internet connections work are different things. As different as chalk and cheese," he says.

It's also important to note another major flaw with the conspiracy theories - coronavirus is spreading in UK cities where 5G has yet to be deployed, and in countries like Iran that have yet to roll out the technology.

There were plenty of scare stories about 5G circulating before the coronavirus outbreak which Reality Check has already looked into, such as this piece: Does 5G pose health risks?

Earlier this year, a long-running study from the watchdog the International Commission on Non-Ionizing Radiation Protection (ICNIRP) rebutted these claims, saying there was no evidence that mobile networks cause cancer or other illnesses.

 

But if anything, the misinformation seems to have escalated.

Trade body Mobile UK has said false rumours and theories linking 5G and coronavirus were "concerning," while the Department for Digital, Culture, Media and Sport has reiterated there is "absolutely no credible evidence for the link".

Viruses invade human or animal cells and use them to reproduce, which is what causes infection. Viruses cannot live very long outside a living thing, so they have to find a way in - usually via droplets of liquid from coughs or sneezes.

Genome sequencing of this coronavirus suggests it jumped from animals to humans - and then began to pass from human to human.

 

https://www.bbc.co.uk/news/52168096

 

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.