பாலபத்ர ஓணாண்டி

பகுத்தறிவு உள்ளவர்கள் பெரும்பான்மை உள்ள சமூகம் ஆவது எப்படி?

Recommended Posts

Posted (edited)
1 hour ago, ARUNnathan said:

 

தமிழர்கள் என்று அடையாளப் படுத்துகின்ற தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக தமிழ் பண்பாடுகளை போற்றி ஏற்று வாழ்பவனே தமிழர் ஏனையோர் ஆக்கிரமிப்பு சத்திகளே.சைவம் அருளிய தமிழை எமக்கு தந்தவர்களை விட முற்போக்கு சிந்தனையாளர்கள் உலகில் எங்கும் இருக்கமுடியாது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

சைவம் அருளிய தமிழா..🤭? என்னடா இது புது உருட்டா இருக்கு.😷 அப்படிபார்த்தால் சமணர்கள் சொல்லவேணும் சமணம் வளர்த்த தமிழ் என்று.. எத்தனை நூற்றாண்டுகள் தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் சமணப்பள்ளிகள்வைத்து மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் மொழிஅறிவும் ஊட்டி தமிழையும் வளர்த்தவர்கள் சமணர்கள்..

ஏன் தமிழில் உள்ள ஜம்பெரும் காப்பியங்களில் ஒன்றைத்தவிர மீதி எல்லாம் சமணர்களால் எழுதப்பட்டதுதான்..

தொல்காப்பியர்,திருவள்ளுவர்,இளங்கோவடிகள் போன்றோர் சமணம் சார்ந்த படைப்பாளிகள்;அறிவாளிகள்.

தத்துவம்,அறிவியல்,இலக்கியம்,கலை,மருத்துவம் போன்ற துறைகளில் சமண அறிஞர்கள்,கலைஞர்கள்  மதிப்புவாய்ந்த பங்களிப்பை தமிழுக்குச் செய்தவர்கள்

காத்திரமான தத்துவ,இலக்கிய செயற்பாட்டை இன்றளவும் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கிறது சமணம். 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

என்ற குறளின் முதற்பாட்டில் உள்ள ஆதிபகவன் என்பது கடவுள் அல்ல.

சமணத்தின் ஆதி தீர்த்தங்கரரான ஆதிநாதர் குறிக்கக்கூடும் என்ர ஒரு கருத்தும் உள்ளது.இந்த ஆதிநாதர் நிலந்தருதிருவின் பாண்டியனின் முதற்சங்கத்தில் இருந்த மதிப்புமிகு தமிழாசானும் ஆகும்.

Edited by பாலபத்ர ஓணாண்டி

Share this post


Link to post
Share on other sites
44 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

சைவம் அருளிய தமிழா..🤭? என்னடா இது புது உருட்டா இருக்கு.😷 அப்படிபார்த்தால் சமணர்கள் சொல்லவேணும் சமணம் வளர்த்த தமிழ் என்று.. எத்தனை நூற்றாண்டுகள் தமிழ்நாட்டில் ஊருக்கு ஊர் சமணப்பள்ளிகள்வைத்து மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் மொழிஅறிவும் ஊட்டி தமிழையும் வளர்த்தவர்கள் சமணர்கள்..

ஏன் தமிழில் உள்ள ஜம்பெரும் காப்பியங்களில் ஒன்றைத்தவிர மீதி எல்லாம் சமணர்களால் எழுதப்பட்டதுதான்..

தொல்காப்பியர்,திருவள்ளுவர்,இளங்கோவடிகள் போன்றோர் சமணம் சார்ந்த படைப்பாளிகள்;அறிவாளிகள்.

தத்துவம்,அறிவியல்,இலக்கியம்,கலை,மருத்துவம் போன்ற துறைகளில் சமண அறிஞர்கள்,கலைஞர்கள்  மதிப்புவாய்ந்த பங்களிப்பை தமிழுக்குச் செய்தவர்கள்

காத்திரமான தத்துவ,இலக்கிய செயற்பாட்டை இன்றளவும் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கிறது சமணம். 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

என்ற குறளின் முதற்பாட்டில் உள்ள ஆதிபகவன் என்பது கடவுள் அல்ல.

சமணத்தின் ஆதி தீர்த்தங்கரரான ஆதிநாதர் குறிக்கக்கூடும் என்ர ஒரு கருத்தும் உள்ளது.இந்த ஆதிநாதர் நிலந்தருதிருவின் பாண்டியனின் முதற்சங்கத்தில் இருந்த மதிப்புமிகு தமிழாசானும் ஆகும்.

ஓணான்டியர் ஆதியும் பகவனும் வள்ளுவரின் தாயும் தந்தையும்

  • Haha 1

Share this post


Link to post
Share on other sites
13 minutes ago, வாதவூரான் said:

ஓணான்டியர் ஆதியும் பகவனும் வள்ளுவரின் தாயும் தந்தையும்

வாதவூரான் திருவள்ளுவர் பற்றிய சுயவாழ்க்கைதகவல்கள் செவிவழிக்கதைகளாக பல உலாவுகின்றன.அதனால்தான் நான் எழுதும்போது அப்படி ஒரு கருத்தும் நிலவுகிறது என்று எழுதினேன்.

தமிழ் இலக்கியங்கள் சுவடியிலிருந்து 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் அச்சேற்றப்பட்டது. குறளும் வள்ளுவரும் பரவலாக அறியப்படத் தொடங்கிய இக்காலகட்டத்தில், வள்ளுவர் யாரென்பது குறித்துப் புனைவுகளும் கட்டுக்கதைகளும் வள்ளுவரின் வரலாறாக அச்சு நூல்கள் வழியாகவும் மக்களிடையே புகுத்தப்பட்டன.

நான் பண்டிதர் அயோத்திதாசரின் ஆய்வுகளையே தரவாக வைத்து திருவள்ளுவர்  பற்றி என்று எழுதினேன். அதுவும் முடிந்த முடிபாக அல்ல.

சீமானும் பண்டிதர் அயோத்திதாசர்வழியே நடப்பவர். எம்மையும் அவரையே படிக்க தூண்டுபவர் தன் உரைகள் தோறும்.

ஐரோப்பியப் பாதிரிமார்களாலும் மற்ற பிற ஐரோப்பியராலும் பிறமொழிகளில் குறளின் பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறினாலும், திருக்குறள் முதலில் ‘தமிழில்’ தஞ்சையைச் சேர்ந்த ஞானப்பிரகாசர் என்பவரால் 1812 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாக பண்டிதரால் குறிப்புகள் பதிவாகியுள்ளன. ஜார்ஜ் ஆரிங்டனின் பணியாளரான கந்தப்பன் (பண்டிதர் அயோத்திதாசரின் பாட்டனார்) தன்னிடம் இருந்த திருக்குறள் சுவடியை ஆரிங்டன் வழியாக பிரான்சிஸ் வைட் எல்லீஸ் அவர்களிடம் சேர்ப்பித்து, 1831 ஆம் ஆண்டு தாண்டவராய முதலியார் மற்றும் முத்துசாமிப்பிள்ளை ஆகியோரால் திருக்குறள் அச்சேறுகிறது என்ற தகவலைப் பண்டிதர் அயோத்திதாசர் பதிவு செய்திருக்கும் ஒரு குறிப்பின் மூலம் அறிய முடிகிறது.

எல்லீஸ் முயற்சியில் வெளியிடப்பட்ட திருக்குறள் நூலில் திருவள்ளுவர் வரலாறு குறித்த புனைவுகள் எதுவும் தமிழிலோ ஆங்கிலத்திலோ இடம்பெறவில்லை என்றும் அச்சுக்குச் சென்ற திருவள்ளுவமாலை நூலில் சில பாடல்கள் இடைச்செருகலாக நுழையப்பட்டிருப்பதைச் சுவடி தந்து உதவிய கந்தப்பனார் கண்டறிந்து அதை ஜார்ஜ் ஆரிங்டனிடம் முறையிட்டார் என்று பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தி ஒன்று அயோத்திதாசரால் சுட்டிக் காட்டப்படுகிறது.

திருக்குறளின் முதல் அச்சுப்பதிப்பு வெளியான பிறகு, அதைத் தொடர்ந்து பல பதிப்புகள் பலராலும் வெளியிடப்பட்டன. அங்குதான், அப்பொழுதுதான் கற்பனைகள் கட்டவிழ்ந்து ஓடத்துவங்கின. ஆறு கட்டுக்கதைகளை அயோத்திதாசரே தமது தமிழன் இதழில் ஆவணப்படுத்தியுள்ளார்.. அவையாவன.👇

//முதல் புனைவின் உரிமையாளர் திருத்தணிகை விசாகப்பெருமாள் ஐயர். இவர் 1831 இல் தனது திருக்குறள் பதிப்பு நூலின் இறுதியில் ஆதி என்ற பறைச்சிக்கும், பகவன் என்ற பார்ப்பனனுக்கும் இடையில் ஏற்பட்ட முறை தவறிய திருமண (அதாவது சாதிக்கலப்பு திருமணம்) உறவில் பிறந்த 7 பிள்ளைகளில் ஒருவர் வள்ளுவர். அவர் மயிலாப்பூரில் வாழ்ந்த காலத்தில் வைசிய குலப்பெண் ஒருவரை மணந்தார், திருக்குறள் எழுதினார் என்ற பாடலை எழுதி பின்னிணைப்பாகச் சேர்த்தார்.

அடுத்து 1837 இல் திருவள்ளுவமாலை நூலை வெளியிட்ட அவரது தம்பி சரவணப் பெருமாள் ஐயர் அந்த ஏழு குழந்தைகளும் யார் யாரென்றும் எங்குப் பிறந்து எங்கு வளர்ந்தனர் என்றும் கதையை விரிவுபடுத்தி வெளியிட்டார். இவரின் கதை வள்ளுவரின் தாத்தா பாட்டி காலம் வரை பின்னோக்கி நீண்டுவிட்டது.

மூன்றாம் முறையாக வரலாற்றுப் புனைவைப் புகுத்தியவர் வேதகிரி முதலியார். இவர் 1850 இல் தனது கதையைச் சரவணப் பெருமாள் ஐயரிடம் இருந்து எடுத்து தாம் பதிப்பித்த திருக்குறள் பதிப்பில் இணைத்து விட்டதாகத் தெரிகிறது.

வள்ளுவரின் பெற்றோர் ஆதி என்ற பறைச்சி, பகவன் என்ற பார்ப்பான் என்பதுதான் அனைத்து வரலாற்றுப் புனைவுகளிலும் காட்டப்படுகிறது. வள்ளுவரின் ‘ஆதிபகவன் முதற்றே உலகு’ என்பதே 1831-1850 ஆண்டுகளுக்கிடையே உருவான அனைத்துப் புனைவுகளுக்குமான தொடக்கப் புள்ளி. வள்ளுவரின் சொல்லைக் கொண்டே அவரை அடையாளப்படுத்திவிட எடுத்த முயற்சிகளின் விளைவு இது.//(மூலம் திருவள்ளுவர் யார் ?, நூல் ஆசிரியர்: கௌதம சன்னா)

——•—

இனிவள்ளுவர் பெயர் பெற்றோர் போன்றவற்றிற்கு பண்டிதர் அயோத்திதாசர் சான்றாக வைப்ப்பது..👇

//“ மாமதுரைக் கச்சன் (அல்லது வடமதுரைக் கச்சன்) என்று அறியப்படும் ‘கூர்வேல் வழுதி’ என்ற அரசனுக்கும் ‘உபகேசி என்ற அரசிக்கும் பிறந்து நாயனார் என்ற பெயர் சூட்டப்பட்ட இளவரசன்தான் குறள் யாத்த வள்ளுவராக நாம் அறியப்படும் திருவள்ளுவ நாயனார் எனக் கூறும் அயோத்திதாசர் ‘நல்கூர் வெளியார்’ என்பர் எழுதிய ‘திரிகுறள் சாற்றுக்கவி’ பாடலில் செந்நாப் போதரின் பெற்றோர் யாவர் எனக் குறிக்கும் வரிகளை இதற்குச் சான்றாகக் காட்டுகிறார்.

உலக இன்பங்களில் பற்றற்று வளரும் வள்ளுவ நாயனார் பெற்றோர் அனுமதியுடன் துறவறம் பூண்டு பௌத்த சங்கத்தில் சேர்கிறார், அக்காலத்தில்தான் குறள் எழுதினர் என்று கூறும் அயோத்திதாசர் அதற்கு ‘கீரந்தையாரின்’ சாற்றுக்கவி பாடலை சான்றாக முன்வைக்கிறார். சிலாசாசன தியான பஞ்சரத்தினப்பா என்ற வள்ளுவரின் வரலாறு கூறும் பாடல் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் (கல்வெட்டில் பதிப்பிக்கப்பட்டு இன்று காணாமல் மறைந்து போன) கல்வெட்டில் உள்ள பாடல் மற்றொரு சான்றாகப் பண்டிதரால் காட்டப்படுகிறது. இந்த ‘திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில்’ என்பது முன்னர் வீரராகுல விகாரையாக இருந்து, பின்னர் வைணவக் கோயிலாக மாற்றம் பெற்றுள்ளது, அதற்கு அங்குள்ள பெளத்த பரிநிர்வாண சிலை சான்று எனப் பண்டிதரின் கள ஆய்வின் முடிவுகள் குறிப்பிடுகிறது. திருவள்ளூர் தான் வள்ளுவர் திருக்குறளை நிலைபெறச் செய்த இடமாகக் காட்டப்படுகிறது. வள்ளுவர் பிறந்த காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்றும், வள்ளுவர் பிறந்து வாழ்ந்த இடங்களாகப் பாடல்களில் காட்டப்படும் ஊர்கள் இன்றும் திருவள்ளூர் பகுதியில் இருப்பதும், அப்பகுதியில் மேலும் பல பௌத்த பின்னணி பெயர் கொண்ட ஊர்களும் அமைந்திருப்பது தற்செயலானதல்ல, ஒரு காலத்தில் இங்கு பௌத்தம் செழித்திருந்திருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவது என்கிறார்.பாலி மொழியில் திரிபிடக வாக்கியங்களாக அறியப்பட்ட புத்தரின் போதனைகளின் அடியொட்டி வள்ளுவரால் தமிழ் குறள் வெண்பாக்களாக எழுதப்பெற்றவையே ‘திரிக்குறள்’ என்பது அயோத்திதாசர் தந்த விளக்கம்..//-(மூலம் திருவள்ளுவர் யார் ?, நூல் ஆசிரியர்: கௌதம சன்னா)

 

எது எப்படியோ “எப்பொருள் எவர் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற கருத்தைப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்திய வள்ளுவம் வழியில் திருவள்ளுவர் யாரென்று கூறும் அயோத்திதாசர் ஆய்வுகளும் அவரது முடிவுகளுமே மீள்பார்வைக்கு உட்படுத்த வேண்டியிருக்கலாம். அதுதான் பகுத்தறிவு நமக்கு சொல்லித்தருவது.

  • Like 1
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites
5 hours ago, ARUNnathan said:

 

1) தமிழனை அழிக்க துடிக்கின்ற அன்னிய ஆக்கிரமிப்பு மதங்கள் --

2) மரணத்தை வென்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பகைவர் சிலுவையில் மரண தண்டனை வழங்கும்போது  “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறினவருக்கு ஒரு வழிபாடு தேவைதானா?

லெனினை தெய்வமாகவும் லெனினியத்தை வேத நூலாகவும் , காரல் மார்க்சை தெய்வமாகவும் மார்க்சியம் வேத நூலாகவும் ,  கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் தெய்வமாகவும் , சோசலிசம் அல்லது சமவுடைமை வேத நூலாகவும் , மா சே துங்கை தெய்வமாகவும் மார்க்சியத்தை வேத நூலாகவும் கொண்டு வழிபடுபவர்கள் தான் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் போன்று கண் முன்னே தோண்றிய தனிமணித வழிபாட்டுமதங்களுக்கு ஒரு வழிபாடு தேவைதானா? 

"நாத்திக’ மதத்தை சேர்ந்தவர்களே கூறுங்கள் காற்றைக் கண்ணால் கண்டவன் யார்? கனவைக் கையிலே பிடித்தவன் யார்? அறிவாற்றலைப் படம் வரைந்து காட்டியவர் யார்? "நாத்திக’ மதத்தை சேர்ந்தவர்களே கூறுங்கள்அதற்காக அவை இல்லையென்று சொல்லிவிட முடியுமா? எதை எதை எப்படி எப்படி அறிய வேண்டுமோ அதை அதை அப்படித் தான் அறிய வேண்டும்  என்பதனை "நாத்திக’ மத வாதிகளே உணர்ந்து கொள்ளுங்கள்

3) தமிழர்கள் என்று அடையாளப் படுத்துகின்ற தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக தமிழ் பண்பாடுகளை போற்றி ஏற்று வாழ்பவனே தமிழர் ஏனையோர் ஆக்கிரமிப்பு சத்திகளே.சைவம் அருளிய தமிழை எமக்கு தந்தவர்களை விட முற்போக்கு சிந்தனையாளர்கள் உலகில் எங்கும் இருக்கமுடியாது என்பதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

1) தமிழனை அழிக்க துடிக்கின்ற அன்னிய ஆக்கிரமிப்பு மதங்கள்

நீங்கள் சொல்லுவது மெத்தச் சரிதாங். ஆனால் எப்படி அழிக்கத் துடிக்கின்றன என்று கூறுவதுதானே முறை ?😀

2) மரணத்தை வென்ற நூற்றுக்கணக்கான தமிழர்கள் மத்தியில் பகைவர் சிலுவையில் மரண தண்டனை வழங்கும்போது  “ஏலி ஏலி லாமா சபக்தானி” என்று கதறினவருக்கு ஒரு வழிபாடு தேவைதானா?

எப்படி மரணத்தை வென்றார்கள் ? யார் இவர்கள் ?  விளக்கமாகக் கூற முடியுமா ? 🤔

சிலுவையில தொங்கினவருக்கு வழிபாடு தேவைதானா என்கின்ற கேள்வி எனக்கும் இருக்குத்தான். ஆனால் வழிபாடு தேவையா இல்லையா என்பதை அவரை வழிபடுபவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.  நாங்கள் அதற்குரிய ஆட்கள் இல்லையல்லவா ? 🙂

3) தமிழர்கள் என்று அடையாளப் படுத்துகின்ற தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக தமிழ் பண்பாடுகளை போற்றி ஏற்று வாழ்பவனே தமிழர் ஏனையோர் ஆக்கிரமிப்பு சத்திகளே

இதனையும் ஒருக்கா தெளிவா  விளங்கப்படுதிவிட்டுப் போங்கோ புண்ணியமாப் போம்.. அதிலும் யார் யார் எப்படி எப்ப ஆக்கிரமிப்புச் சக்திகளா போனாங்கள் என்பதை குறிப்பா சொல்லிவிட்டுப் போங்கோ. நானும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளுறன். 👏

Share this post


Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.