Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐரோப்பா- அமெரிக்காவை ஆட்டிபடைக்கும் கொரோனாவின் வேகம் இந்தியாவில் பலிக்காதது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவின் வேகம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம் அதற்குரிய காரணங்களை டாக்டர் நாரேந்திர குமார் வர்மா விளக்குகிறார்.
பதிவு: ஏப்ரல் 06,  2020 11:59 AM
புதுடெல்லி
 
இன்று காலை நிலவரப்படி உலகம் முழுவதும் 12 லட்சத்து 73 ஆயிரத்து 709 பேருக்கு வைரஸ் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 69 ஆயிரத்து 456 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவியவர்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 486 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 
அமெரிக்காவில் மட்டும் 3.36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  9,616  பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 131,168 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 12,641 ஆக உள்ளது.  இத்தாலியில்  128,948 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 15,887- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
 
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் இன்றைய நிலவரப்படி 4247 ஆக உள்ளது. சீனாவை விட மக்கள் நெரிசல் மிக்க இந்தியாவில் கொரோனா பரவினால், 30 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள், 20 முதல் 25 லட்சம் பேர் வரை இறப்பார்கள் என்று சில வல்லுனர்கள் அச்சம் தெரிவித்தனர். அமெரிக்கா, சீனா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் கொரோனாவின் வேகம் மிகவும் குறைவு என்றே சொல்லலாம்
 
இதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. இவைகள் தான் இந்தியாவில் இருக்கும் மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாத்து என்று கூறுகிறார் டாக்டர் நாரேந்திர குமார் வர்மா.
 
எய்ம்ஸ் மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்திய  நரேந்திர குமார் வர்மா இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து கூறியதாவது:-
 
இந்திய மக்களுக்கு பொதுவாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அளவுக்கு அதிகமான நுண் கிருமிகள் உடலில் கலந்திருப்பதே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காரணம்.ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகளையில், இந்தியாவில் ஆஸ்துமா, எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்கள் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தின.
 
பலவிதமான வைரஸ், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகளால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கெட்டதிலும் ஒரு நன்மை என்பது போல, அதிக வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியர்களின் உடலில் குறிப்பிட்ட T-செல்கள் உருவாகின்றன.இதை T-உயிரணுக்கள் என்று சொல்லலாம். அந்நிய வைரஸிடமிருந்து, நம் உடலை பாதுகாப்பதில் போர் வீரரனைப் போன்று, T-செல்கள் செயல்படுகின்றன. வெளியில் இருந்து ஏதேனும் புதுவிதமான வைரஸ்களநம் உடலில் நுழைந்தால்,T-செல்கள் தாக்கி அழித்துவிடும்.
 
இதன் காரணமே கொரோனா இந்தியாவில் தீவிரமாக பரவவில்லை. சுத்தம், சுகாதாரத்தோடு வாழும் ஐரோப்பா, அமெரிக்க நாட்டினருக்கு இது போன்ற T-செல்கள் குறைவாக இருப்பது பின்னடைவு தான், வைரஸ் நோய்களில் இருந்து மீள்வதற்கு இந்தியாவில், குளோரோகுயின், ஹைட்ராக்ஸோ குளோரோகுயின் மருந்துகளை அதிகள் அளவில் பயன்படுத்தியுள்ளனர்.
 
இந்த மருந்துகளின் வீரியம், இன்றளவும் இந்தியர்களின் உடலில் உள்ளது. இது இப்போது அவர்களுக்கு எதிர்பாரத பலனை அளித்துள்ளது.
 
இந்தியர்கள் உணவில் பயன்படுத்தும் மசால் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவை தான், மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, திப்பிளி, ஏலக்காய், கிராம்பு, புதினா, ஜாதிக்காய், கருஞ்சீரகம், இப்படி பல இருக்கின்றன.இவை அனைத்திற்கும் தனி தனி மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஆயுர்வேத இந்திய மருத்துவ முறைகளில், நறுமணப் பொருட்களின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது, பயன்படுத்தப்படும் பலவிதமான நறுமணப் பொருட்கள், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.
 
இதை அலோபதி மருத்துவர்கள் கூட மறுக்கமாட்டார்கள், டெங்கு பரவிய போது, நிலவேம்பு குடிநீர் பயன்பட்டது. அதே போன்று இப்போது இந்தியாவில், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு கபசூர குடிநீர் வந்துவிட்டது. பல வித இந்திய நறுமணப் பொருட்களை கொண்டு தயாரானது தான் இந்த கபசூர குடிநீர்.
 
அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டவர்கள் சீனர்களுடன் ஒப்பிடும் போது, அன்றாட உணவில் இந்தியர்கள் சேர்த்து கொள்ளும்,பொருட்கள் கொரோனாவில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
 
உடலுக்குன் நோயேதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மரபணுக்களின் அமைப்புதான் இம்முனி சிஸ்டம் (Immunue Syste) வைரஸ்களை அழித்து நம்மை பாதுகாக்கும் இம்முனி சிஸ்டத்தின் அங்கம் ஹெச்.எல்.எ ஜீன், இந்த மரபணுக்களின் வேலை என்ன என்றால், உடலில் அந்நிய வைரஸ் நுழைந்தால், ஹெச்.எல்.எ மரபணுக்கள் அடையாளம் கண்டதுடன், உடனடியாக இம்முனி சிஸ்டத்தை உஷார் படுத்துவிடுகிறது.
 
அதை தொடர்ந்து T-செல்கள் போர் வீரனாக செயல்புரிந்து, அந்நிய வைரஸ்களை அழிக்கும், இதில் ஹெச்.எல்.இ மரபணுக்களின் பங்கு மிகவும் முக்கியம்.பல வித வைரஸ் கிருமிகளால், பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் உடலில், சில குறிப்பிட்ட வகையான ஹெச்.எல்.எ அணுக்கள், அதிக அளவில் இருக்கின்றன.அது போன்ற ஹெச்.எல்.எ மரபணுக்கள், ஐரோப்பிய, அமெரிக்க, சீன மக்களின் இம்முனி சிஸ்டத்தின்  குறைவு தான், இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என கூறினார்.
 

 

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, உடையார் said:

இந்திய மக்களுக்கு பொதுவாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அளவுக்கு அதிகமான நுண் கிருமிகள் உடலில் கலந்திருப்பதே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக காரணம்.ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகளையில், இந்தியாவில் ஆஸ்துமா, எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்கள் கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தின.

நாடு சுத்தமாக இல்லாமல் இருப்பது நல்லது என்று சொல்கின்றார்! சுகாதாரமாக இருக்கும் வளர்ச்சி அடைந்த நாடுகள் அதிகம் பாதிப்படைந்தன என்றால் சீனாவில் எப்படிப் பரவியது?

 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, உடையார் said:
இந்தியர்கள் உணவில் பயன்படுத்தும் மசால் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவை தான், மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, திப்பிளி, ஏலக்காய், கிராம்பு, புதினா, ஜாதிக்காய், கருஞ்சீரகம், இப்படி பல இருக்கின்றன.இவை அனைத்திற்கும் தனி தனி மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஆயுர்வேத இந்திய மருத்துவ முறைகளில், நறுமணப் பொருட்களின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது, பயன்படுத்தப்படும் பலவிதமான நறுமணப் பொருட்கள், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.
 
இதை அலோபதி மருத்துவர்கள் கூட மறுக்கமாட்டார்கள், டெங்கு பரவிய போது, நிலவேம்பு குடிநீர் பயன்பட்டது. அதே போன்று இப்போது இந்தியாவில், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு கபசூர குடிநீர் வந்துவிட்டது. பல வித இந்திய நறுமணப் பொருட்களை கொண்டு தயாரானது தான் இந்த கபசூர குடிநீர்.

குடிநீர், ரசம் குடிச்சால் உடம்புக்கு நல்லதுதான். ஆனால் இது novel Coronavirus! அதாவது மனிதர்கள் இந்த வைரஸை முன்னர் சந்திக்கவில்லை. அதனால் நோய் எதிர்ப்பு சக்தி முன்னரே எவரிடம் இல்லை. 

கொரோனா வைரஸ் எப்படி நாடுகளிடையே பரவுகின்றது என்பதற்கான விடை மக்கள் எப்படி இடத்துக்கிடம் போகின்றார்கள் என்பதில்தான் உள்ளது. சீனாவில் தொடங்கி இப்போது மேற்குநாடுகளில் மையம்கொண்டுள்ள கொரோனா தொற்றுப்பரவல் அடுத்ததாக எந்தக் கண்டத்தைத் தாக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால் மருத்துவ வசதிகள் குறைந்த வளர்முக நாடுகளைத் தாக்கினால் விளைவு மோசமாக இருக்கும்.

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கொஞ்சநாள் போக தெரியும் இங்கு உள்ள உணவு பழக்க வழக்கம் இங்கு இறைச்சி வகைகள் பாதி  வெந்ததுக்கு க்குத்தான் மரியாதை விரும்பி சாப்பிடுவார்கள் கார்வெஸ்ட்டர் போன்ற பப்புகள்  பிரேக் பாஸ்ட்டே அப்படித்தான் ரெத்தம் தெரியணும் இறைச்சியில் எங்களுக்கோ அருவருக்கும் .எதையெண்டாலும் போட்டு அரைமணிநேரம் அடுப்பில் விடுவது போதாக்குறைக்கு மிளகாய்த்தூள் அப்படி இப்படி உள்ளே போன வைரஸ் எல்லாமே மார்கயா பண்ணித்தான் உணவே ரெடியாகும் .

பார்க்கலாம் முழு உலகும் தராவியை  பார்த்துக்கொண்டு இருக்கு சில நாளில் தெரிந்துவிடும் .

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

எல்லாம் கொஞ்சநாள் போக தெரியும் இங்கு உள்ள உணவு பழக்க வழக்கம் இங்கு இறைச்சி வகைகள் பாதி  வெந்ததுக்கு க்குத்தான் மரியாதை விரும்பி சாப்பிடுவார்கள் கார்வெஸ்ட்டர் போன்ற பப்புகள்  பிரேக் பாஸ்ட்டே அப்படித்தான் ரெத்தம் தெரியணும் இறைச்சியில் எங்களுக்கோ அருவருக்கும் .எதையெண்டாலும் போட்டு அரைமணிநேரம் அடுப்பில் விடுவது போதாக்குறைக்கு மிளகாய்த்தூள் அப்படி இப்படி உள்ளே போன வைரஸ் எல்லாமே மார்கயா பண்ணித்தான் உணவே ரெடியாகும் .

பார்க்கலாம் முழு உலகும் தராவியை  பார்த்துக்கொண்டு இருக்கு சில நாளில் தெரிந்துவிடும் .

உலக வல்லமைமிகு நாடுகளே செய்வதறியாது திகைத்து நிற்க இந்தியாவின் பிற்போக்குத்தனமான கருத்தியலூடாக நடைமுறைகளைப் (விளக்கேற்றுதல் போன்ற பித்தலாட்டத் திசைதிருப்பல்கள்) பலப்படுத்துவதாகவேயுள்ளது.  இறுதியாகப் பாவம் செய்தோரை இறைவன் தண்டித்துவிட்டார் என்று முடித்துவிடுவார்கள்.  இந்தியா முதலில் மூடநம்பிகைகளைக் களையாதிருக்கும்வரை இதுபோன்ற ஆய்வுகளும் பதிவாகும். 

  • Like 1
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

ம் ம் நாங்களே கிருமிகள் எங்களிடமா வாலாட்ட வருகினம் எண்டு ஒரு கெத்து தான் ஆனால் நிறைய நன்மைகள் கோவில் ,ஹொலிடே ,பார்ட்டி ,கல்யாணவீடு ,ஏதுவும் இல்லை சாமிகளே ஊரடங்கு போட்டு ஓன்லைனில கும்பிட்டு அர்ச்சனையும் பண்ண சொல்லியாச்சு கிரெடிட் கார்ட் இல் பேமென்ட் யூரியுப் சமையல் இப்படி நிறைய

Link to post
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இங்கு மக்களின் போராட்டம் பாடசாலை அதிபருக்கும் நிர்வாகத்துக்கும் ஆதரவாகவே இடம்பெற்று இருக்கு? தலைமுடியை சீராக்கி வருமாறு கோரியதற்காக மாணவர் ஒருவர் ஆசிரியரை தாக்கு முற்படுவது தடுக்கப்பட வேண்டிய விடயம் தானே...
    • இப்போது அங்கு இப்படியான போராட்ட்ங்கள் மலிந்துவிட்டது.  இன்னொரு ஊரில் பாடசாலை அதிபர், ஆசிரியர்களை மாணவர்களின் பயிற்சி புத்தகங்களை திருத்துமாறு பணிக்கப்படத்துடன் பொதுப் போட்டிகளை பாரபட்சமின்றி நடத்துமாறும் கூறியதால், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்களைத் தூண்டி ஆர்ப்படடம் செய்தார்கள்.  ஒரு ஆசிரியர் தனது பிள்ளைகளின் போட்டிகளை தானே மத்தியஸ்தம் வகித்ததனால், அதிபர் தனது அதிருப்தியைத் தெரிவித்தது பிடிக்காமல் நடந்தேறிய நாடகம் அதிபரை வெளியேற்றி சாதனை படைத்தனர்.
    • இலங்கை நாடாளுமன்றத்தில் திடீரென உறுப்பினர்கள் அணியும் ஆடை குறித்து சர்ச்சை எழுந்தது ஏன்? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images   இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த 22ஆம் தேதி, ஆடை தொடர்பான சர்ச்சை ஒன்று ஏற்பட்ட நிலையில், தற்போது அது ஒரு பேசு பொருளாக மாறியுள்ளது. தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா நாடாளுமன்றத்திற்கு அணிந்து வந்த ஆடை அன்றைய தினம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. நாடாளுமன்ற விதிகளை மீறி, அதாவுல்லா ஆடை அணிந்திருந்ததாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சபையில் தெரிவித்திருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஏ.எல்.எம்.அதாவுல்லா அணிந்த ஆடைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டார். நாடாளுமன்ற விதிகளை மீறி ஆடை அணிய அனுமதி வழங்கப்படும் பட்சத்தில், நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தான் மேலாடையின்றி வருகைத் தருவதாக சபாநாயகரிடம் எஸ்.எம்.மரிக்கார் கூறியிருந்தார். ஏ.எல்.எம்.அதாவுல்லா, பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு செல்வதை போன்றதொரு ஆடையை அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளதாகவும் எஸ்.எம்.மரிக்கார் அன்று குற்றம் சுமத்தியிருந்தார். பக்கச்சார்பின்றி, நேர்மையாக நாடாளுமன்றத்தில் கடமையாற்றுமாறு சபாநாயகரை பார்த்து, எஸ்.எம்.மரிக்கார் கோரியிருந்தார். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு பிறகு ஏ.எல்.எம்.அதாவுல்லா சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஏ.எல்.எம்.அதாவுல்லா அணிந்திருந்த ஆடை பட மூலாதாரம், NIROSH   படக்குறிப்பு, அதாவுல்லா நாடாளுமன்றத்தில் அணிந்திருந்த ஆடை தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதாவுல்லா வெள்ளை நிற ஆடையொன்றின் மீது கறுப்பு நிறத்திலான மேலாடையொன்றை அணிந்து நாடாளுமன்ற அமர்வுகளுக்கு வருகைத் தந்திருந்தார். நாடாளுமன்ற சபைக்குள் அதிக குளிர் காரணமாகவே தான் இவ்வாறான ஆடையொன்றை அணிந்திருந்ததாக அவர் அன்றைய தினம் சபையில் அறிவித்திருந்தார். பின்னர் அன்றைய தினத்திற்கு மாத்திரம் அவருக்கு சபைக்குள் பிரவேசிக்க சபாநாயகர் அனுமதி வழங்கியிருந்தார். இலங்கை நாடாளுமன்றத்திற்கு அணிய கூடிய ஆடைகள் எவை? இலங்கை நாடாளுமன்ற அமர்வுகளுக்கு எவ்வாறான ஆடைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிய வேண்டும் என்று சில விதிகள் இருப்பதாக நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இட்டவல பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆடை தொடர்பில் இலங்கை அரசியலமைப்பில் கூறப்படாத போதிலும், நாடாளுமன்ற விதிகளாக அது பின்பற்றப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். நாடாளுமன்ற விதிகளுக்கு அப்பாற்பட்டு வேறு ஆடைகளை உறுப்பினர்கள் அணிய வேண்டுமென்றால், விசேட அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியது அத்தியாவசியம் என அவர் குறிப்பிட்டிருந்தார். பட மூலாதாரம், Getty Images   நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் அணியும் ஆடைகள் இலங்கை கலாசாரத்திற்கு அமைய, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிவதற்கான சம்பிரதாய ரீதியிலான ஆடைகள் காணப்படுகின்றன. இதன்படி, புடவை மற்றும் சிங்கள கலாசாரத்திலான ஒசரி (புடவை கட்டும் மற்றுமொரு விதம்) ஆகியவற்றை பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிவது சம்பிரதாயம் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இட்டவல தெரிவிக்கின்றார். பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுகயீனம் ஏற்படும் பட்சத்தில், நாடாளுமன்ற விசேட அனுமதியின் பிரகாரம், கலாசார ரீதியிலான வேறு ஏதேனும் ஒரு ஆடையை அணிய முடியும் என அவர் குறிப்பிடுகின்றார். நாடாளுமன்ற ஆண் உறுப்பினர்கள் அணியும் ஆடைகள் பட மூலாதாரம், Getty Images   ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலத்தேய கலாசார ஆடையை அணிய வேண்டும் என நீல் இட்டவல தெரிவிக்கின்றார். அத்துடன், இலங்கை கலாசாரத்திற்கு அமைவான ஆடைகளை அணிய, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேட்டி மற்றும் முழு கையை கொண்ட சட்டை ஆகியவற்றை அணி முடியும் என அவர் குறிப்பிட்டார். அதைத்தவிர, கால் சட்டை மற்றும் முழு கையை கொண்ட சட்டை அணிந்தும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். இதைத் தவிர, வேறு விதமான ஆடைகளை ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணிய வேண்டும் என்றால், அதற்காக விசேட அனுமதியை நாடாளுமன்றத்தில் பெற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இட்டவல பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.https://www.bbc.com/tamil/sri-lanka-54275980
    • இங்கு சிலருக்கு நான் கூறப்போகும் கருத்து ஆத்திரத்தினையும், வெறுப்பினையும் உருவாக்கலாம். அதற்காக நான் அதுபற்றிப் பேசாமல் இருக்கவும் முடியாது. தமிழர் முன்னாலிருக்கும் தெரிவுகள் என்னவென்று ஆராயத் தொடங்கியபின்னர், எல்லாத்தெரிவுகளும் மேசைக்குக் கொண்டுவரப்படவேண்டும். தனியான நாடொன்றினை சண்டைபிடித்தாவது உருவாக்குவது முதல், முழு இன அடையாளத்தையும் இழந்து சிங்கள பெளத்த இனத்தினுள் சங்கமமாகிப்போவது வரையிலான அனைத்து வழிகளையும் பார்த்துவிடலாம். அந்தவகையில் நான் கூற விரும்புவதும், முன்வைக்க விரும்புவதும் இதனைத்தான். 1. தமிழகத்தில் சீமானின் எழுச்சிக்கு உறுதுணையாக இருப்பதன் மூலம், அவரது வெற்றியினை உறுதிப்படுத்துவது. எமது தாயகத்தில் சேடையிழுக்கும் தமிழ்த் தேசிய அரசியலினை மீண்டும் மீள எழுப்பி, எழுச்சியுறவைத்து, சிங்களப் பேய்களின் அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் முழுத்தமிழினத்தையும் ஒன்றிணைப்பதெனும் இமாலய சிக்கலுடன் ஒப்பிடும்பொழுது, தமிழகத்தில் தமிழ்த் தேசிய சக்திகளின் எழுச்சியும் பலம்பெறுதலும் சாத்தியமானதும், நடைமுறையில் நிகழ்ந்துவருவதுமாகும். 2. தமிழகத்தில் பலமடையும் தமிழ்த் தேசிய சக்திகளின் உதவியோடு மத்தியில் உள்ள அரசினை தமிழர் விடயத்தில் சாதகமான போக்கினைக் கடைப்பிடிக்க அழுத்துவது. இவ்வழுத்தம் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் திட்டமிட்ட ஆக்கிரமிப்பினைத் தடுத்து நிறுத்துவதுமுதல், வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தினை அதிகாரம் மிக்க பிராந்தியமாக உருவாக்குவதை வரை அமைவது. 3. அரசியல் ராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களுக்கு இலங்கை மசியாதவிடத்து, தமிழகத்தினைத் தளமாக வைத்து ஆயுதப் போராட்டம் ஒன்றினை இயக்குவது. உடனே எல்லோரும் வந்து எனது பிள்ளைகளைப் போராட அனுப்பு என்று கேட்கமுதல், இவ்வாறானதொரு முடிவுநோக்கித் தமிழினம் எதிர்காலத்தில் தள்ளப்படுமா இல்லையா என்பதைச் சிந்தியுங்கள்.
    • அட, இப்பத்தான் கவனிச்சன், நிழலியரும் இதுக்குள நிக்கிறார்....   பனிமலர்! 😁
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.