Jump to content

கிருமியும்,கிராமத்தின் கவலையும்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிருமியும்,கிராமத்தின் கவலையும்..!

 

வண்டில் மாடும்,ஏரால்

தீட்டும் வர்ணமும்

பனையும்,தென்னையும்

வாய்க்கால்,வரம்பும்

 

கோயில்,குளமும்

ஆடும்,மாடும்

மூலிகைச்செடிகளும்

தோட்டமும்,துரவும்.

முன்னோர் வாழ்வின்

முதுசங்கள் இவைகள்

 

என்மேல் அவர்களின் 

இருப்பும்,பாசமும்

உங்களுக்கேனோ

இல்லாமல் போனது.

 

பட்டணம்,நகரமென

படையெடுத்து போயிருந்து

பழயவள் எனச்சொல்லி

பழித்தீர்கள் என்னையும்.

 

கிராமத்தான் என்று

கேலிபண்ணுவார்களென

நகரத்து பெயர்களையே

நாகூசாமல் சொன்னீர்கள்

 

 

பக்கத்து வீட்டானின்

பகட்டு வாழ்வைநம்பி

காரும்,வீடும் கடன் பட்டே

வாங்கினீர்கள்.

 

கோவணம் கட்ட

துணியில்லையென்றாலும்

கோடீஸ்வரனாக 

காட்ட முனைந்தீர்கள்.

 

விஞ்ஞானம் உயர்ந்து

விண்ணை முட்டி 

விட்டதென்று..

பழய சோறும்

பழம்கஞ்சியும்

பனாட்டும்,ஒடியலும்

கூழும்,குரக்கனும்

ஏழை உணவென..

 

உண்ணப்பிடிக்காமல்

உலகத்தான் உணவுகளை

தின்னப் பழகி..

திடம் கெட்டுப் போனீர்கள்.

 

செத்து மணத்தாலும்

செய்தி.. 

சொன்னால்த்தான்

பக்கத்து வீட்டானும்

பார்க்க வரும் நகரத்துள்

சொர்கத்தில் வாழ்வதாக..

சொல்லித்திரிந்தீர்கள்.

 

எனை விட்டுப் பிரிந்தாலும்

உலகில்..

எங்கெங்கு வாழ்ந்தாலும்

மகிழ்விருந்தால்

உன்வாழ்வில்.. 

மகிழ்ச்சியே எந்தனுக்கும்.

 

விதை போட்டான்செய்ததுவோ

விஞ்ஞானம் செய்ததுவோ

உயிருக்குள் நுண் கிருமி

கொரோனா

உள் நுளைந்து அறுக்கிறதே!

 

தொற்றுகின்றவைரஸ்சோ

தோல் நிறம் பார்க்கவில்லை

இனம் மதம் கேட்கவில்லை

எவன் ஜாதி தெரியவில்லை.

 

படுத்தெழும்ப நேரமில்லா

பரபரப்பு நகரமெல்லாம்

ஆடைத்துணியின்றி-இப்போ

அம்மணமாய்க் கிடக்கிறதே!

 

என்னைவிட்டு வந்த பலன்

இப்போது தெரிகிறதா?

 

அருமருந்து உணவில்லை

அனைவருக்கும் நீர் இல்லை

அசுத்தமில்லாக் காற்றில்லை 

அகம் நிறைந்த அன்பில்லை

 

மனிதம் உங்களிடம்

மரணித்துப் போகாமல்

மனதால் ஒன்றுபட்டு

மரணத்தை வெல்லுங்கள்

 

என்னை மறக்காமல்.

எனைத்தேடி வாருங்கள்

நோய்நொடி இல்லாமல்

முன்னோர்போல்….

நூறாண்டு வாழ்வீர்கள்.

 

அன்புடன்-பசுவூர்க்கோபி-

ஐயாக்குட்டி கோவிந்தநாதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தான கவிதை பசுவூர்க்கோப்பி, தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் வரவு நல்வரவாகுக.......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

கருத்தான கவிதை பசுவூர்க்கோப்பி, தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் வரவு நல்வரவாகுக.......!  🌹

உங்களின் ஆதரவுக்கு அன்புடன் நன்றிகள்

Link to comment
Share on other sites

வாழ்க்கையில் போலித்தனங்களுக்கு அடிமையானவர்களுக்கு உறைக்கும் விதமாக எழுதியிருக்கின்றீர்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

வாழ்க்கையில் போலித்தனங்களுக்கு அடிமையானவர்களுக்கு உறைக்கும் விதமாக எழுதியிருக்கின்றீர்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.

உங்கள் ஆதரவு மென்மேலும் எனக்கு எழுத உற்சாகமூட்டுகிறது. நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான காலத்திற்கேற்ப கவிதைநடையில்
தந்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கேற்ற கவிதை பாராட்டுக்கள்  மேலும் தொடருங்கள்

இடை வெளிகளைக்  கொஞ்சம் குறைக்க பாருங்கள் நீளம்  என  கவனிக்காமல் போக கூ டும்

 

தொற்றுகின்ற“வைரஸ்சோ”தோல் நிறம் பார்க்கவில்லை

இனம் மதம் கேட்கவில்லை எவன் ஜாதி தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை, ஊர் தேடி வர ஆசைதான், இனி ஊர் போயும் எம்மால் ஒத்து வாழ முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 19:32, ஈழப்பிரியன் said:

அருமையான காலத்திற்கேற்ப கவிதைநடையில்
தந்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

நெஞ்சார்ந்த நன்றிகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2020 at 10:56, பசுவூர்க்கோபி said:

நோய்நொடி இல்லாமல்

முன்னோர்போல்….

நூறாண்டு வாழ்வீர்கள்.

 

கவிதை நன்று. ஆனால் முன்னோர் எல்லோரும் நூறாண்டு வாழவில்லை.  அப்படி வாழ்ந்தவர்கள் திடகாத்திரமாக இருந்தவர்கள் மட்டும்தான்.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/4/2020 at 21:27, கிருபன் said:

 

கவிதை நன்று. ஆனால் முன்னோர் எல்லோரும் நூறாண்டு வாழவில்லை.  அப்படி வாழ்ந்தவர்கள் திடகாத்திரமாக இருந்தவர்கள் மட்டும்தான்.

உங்களின்ஆரோக்கியமான  கருத்துக்கு நன்றிகள் 

On 6/4/2020 at 19:32, ஈழப்பிரியன் said:

அருமையான காலத்திற்கேற்ப கவிதைநடையில்
தந்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.

உங்களின் பாராட்டுக்கு உளமார்ந்த நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.