Jump to content

கொழும்பில் இருக்கும் வெளிமாவட்டத்தவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பம்!


Recommended Posts

கொழும்பில் இருக்கும் வெளிமாவட்டத்தவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பம்!

 

 

     by : Litharsan

Manoganeshan.jpg

கொழும்பிலிருந்து வெளிமாவட்டத்துக் காரர்கள் பேருந்து, ரயில் மூலம் தமது ஊர்களுக்கு அனுப்பப்படும் நடைமுறையை இவ்வாரம் முதல் ஆரம்பிக்க கொழும்பு மாவட்ட ஒருகிணைப்பு குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற கொரோனா நிலைமை தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கொழும்பில் வாழும் வெளிமாவட்ட மக்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இவர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டு, பஸ் மற்றும் ரயில் மூலமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கே அவ்வந்த மாவட்ட, பிரதேச பொது சுகாதார அதிகாரிகள், இவர்களை பொறுப்பேற்று, தத்தமது வீடுகளில் இவர்கள் தனிமை நிலைமையில் இருப்பதை கண்காணிப்பார்கள்.

இவர்களை இவர்களது வீடுகளில் தனிமை நிலையில் வைக்க முடியாவிட்டால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இப்படி கொழும்பில் இருந்து வருகின்ற நபர்களுக்கான “கொரோனா தனிமை நிலையங்கள்” அமைக்கப்பட்டு அங்கே இவர்கள் தங்க வைக்கப்பட்டு, மருத்துவ அனுமதியின் பின் வீடு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என நான் இக்கூட்டத்தில் ஆலோசனை கூறினேன்.

வெளிமாவட்ட மக்கள் கொழும்பிலிருந்து வெளியேறுவது, கொழும்பில் சமூக இடைவெளிக்கு இடையூறாக இருக்கின்ற நெருக்கடியையும் தணிக்க உதவும். இது கொழும்பில் நிரந்தரமாக வசிக்கும் மக்களுக்கு நன்மை தரும் எனவும் நான் இக்கூட்டத்தில் கூறினேன்.

இந்த நபர்களை அடையாளம் கண்டு அனுப்பி வைக்கும் நடைமுறை இவ்வாரம் ஆரம்பமாகும். இதுபற்றி இன்று நடக்கும் அத்தியாவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் பிரஸ்தாபித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன உறுதியளித்தார். எக்காரணம் கொண்டும் இந்நடவடிக்கை தாமதாமாகும் பட்சத்தில் இந்த பிரிவினருக்கு கொழும்பிலே வாழ்வதற்கான வாழ்வாதார உதவிகள் அரசால் வழங்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளேன்.

கொழும்பு மாவட்ட முன்னாள் எம்பீக்களும், மாவட்ட செயலாளர் தலைமையில் அனைத்து பிரதேச செயலாளர்களும், அதிகாரிகளும் கலந்துகொண்ட இந்த ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் போது, இது தொடர்பான முன்னேற்ற அறிக்கையை மாவட்ட செயலாளர் சமர்பிப்பார்.

http://athavannews.com/கொழும்பில்-இருக்கும்-வெள/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோணா வைரசு தொற்று ஆபத்துள்ள அடுத்து வரும் நாட்களில் பெருந்திரளான மக்களை நெரிசலான பயண முறைகளை பயன்படுத்தி இடம்மாற்றுவது உகந்ததல்ல.பெரிய மனித அவலத்தை எதிகொள்ளவேண்டிய நிலமை ஏற்படலம்.

Link to comment
Share on other sites

தெருவோரங்களிலும் கடை முகப்புகளிலும் தங்கி கஷ்டப்படும் இந்த இளைஞர்களுக்கு இதுவரை ஒரு தீர்வு கிடைக்கலை!
வெளிநாட்டுல இருந்து வாற ஆட்களுக்கு பஸ்களை ஒழுங்குபடுத்திய அரசு இவங்களை கைவிட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.