Jump to content

யாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன? விளக்கமளிக்கும் போதகர்

Recommended Posts

சீனாவில் தொடங்கிய கொரோன வைரஸ் உலகையை ஸ்தம்பிதமடையச் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கி உலகளவில் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 13 லட்சத்து 12 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை உலகளவில் 72 ஆயிரத்து 636 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவரும் நிலையில் அமெரிக்கா ஸ்பெயின் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை ஸ்ரீலங்காவிலும் இந்த கொரோனா தொற்று தற்போது தனது வீரியத்தை காட்ட தொடங்கியுள்ளது.

அதிலும் குறிப்பாக யாழில் இந்த தொற்று ஏற்பட்டமைக்கு சுவிஸில் இருந்து வந்த மத போதகரே காரணம் என பல தரப்பினராலும் கூறப்பட்டுவருகின்றது.

இந்நிலையில்,

யாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன? போதகர் மீது திட்டமிட்டு குற்றஞ்சாட்டப்படுகிறதா?

தெளிவாக விளக்கமளிக்கும் பாஸ்டர்...

https://www.ibctamil.com/world/80/140699

Link to comment
Share on other sites

கேக்கிறவன் மடையன் என்றால், எருமை மாடும் ஏரோப்பிளேன் விடுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி பத்தி எரியும் இல்லை தீயணைப்பு வீரர்கள் வந்து அனைத்து பூட்டு  போடுவினம் .

sk ராஜன் கேள்விகளை போட்டு வாங்கிறார் முக்கியமான கேள்வி உதயனில் வந்த விளம்பரம் பத்தி ஏன் கேட்க்க வில்லை ?

நான் இவ்வளவு நாளும் நினைத்தன்  அரியாலையில்தான் இந்த விசர் கூட்டம் விசர் ஆடியிருக்கெண்டு பிரான்சிலும் இந்த சாந்தன் பாஸ்ட்ட்டார் மூலம் தமிழ் சனம்  அவதிக்குள்ளாகி இருக்கு இதைவிட அந்த சாந்தன் என்ற கோமாளியே  கொரனோ  வைரஸ் தாக்கி இருக்கு முதலே சொல்லி இருந்தால் லண்டன் பக்கம் உள்ள வைத்தியசாலைகளில் ஆளை அட்மிட் பண்ணியிருக்கலாம் நேரே சொர்க்கம் தான் .😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதி சிறந்தவர் வருவார் பாருங்க அதத்தான் புனை பெயரா வைத்து  இருக்கார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வந்ததும் வந்துது பாருங்கோ! எல்லோரையும் தனிமையாய் இருந்து புலம்ப வைச்சிட்டுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

கொரோனா வந்ததும் வந்துது பாருங்கோ! எல்லோரையும் தனிமையாய் இருந்து புலம்ப வைச்சிட்டுது.

தனியா இருந்து புலம்பினாலும் பரவாயில்லை கீழே உள்ளது போல் விளம்பரம் போட்டு மக்களை கொலை பண்ணாதீங்க .

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

இவ்வாறான பித்தலாட்டங்களை நம்பும் அளவுக்கு எமது மக்கள் பலவீனர்களாக இருப்பது வேதனையான விடயம்.  மக்களுக்கு அறிவூட்டுவதே இப்படியான மத ஏமாற்ற கும்பல்களிடம் இருந்து காப்பாற்ற ஓரே வழி. மதங்கள் என்றால் என்ன  எப்படியெல்லாம் அவை மக்களை ஏமாற்றுகின்றன என்ற தெளிவு மக்களிடம் இருந்தால். இப்படியாக மோசடிக்கும்பல்களால் ஏமாற்றபட மாட்டார்கள்.  கண்மூடித்தனமான  கடவுள் பக்தி உள்ளவர்கள்  பெரும்பாலும் இப்படி மதம் மாறுபவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

நாம் எப்போது எமது நாகரீகத்தைவிட இன்னொரு நாகரீகம் சிறந்தது என்று கருதுகிறோமோ, எமது நிறத்தைவிட இன்னொரு நிறம் அழகானது என எண்ணுகிறோமோ, எனது மொழியைவிட இன்னொரு மொழி சிறந்தது எனக் கருதுகிறோமோ, எப்போது எமது மதத்தைவிட இன்னொரு மதம் எனது பிரச்சனையைத் தீர்க்கும் என நினைக்கிறோமோ அந்தக் கணமே நாம் / நான் எனது அடையாளத்தை இழக்கத் தொடங்குகிறோம். தனியே சமயங்களின் ஒரு பிரிவினரின் பிரச்சாரங்களை மட்டும் எதிர்ப்பதால் சைவ சமயம் காப்பாற்றப்பட்டுவிடுமா ? அல்லது சைவ சமயம் மட்டுமே தமிழரின் அடையாளமா ? இல்லையே. 

பண்பாட்டுப் படையெடுப்பு எனும்போது தனியே கிறீத்துவ மதக் குழுக்களை மட்டும் எதிர்ப்பது சரியானதா ? 

2009 க்குப் பின்னர் எத்தனை சமயப் பிரிவுகள் இந்தியாவிலிருந்து எம் மக்களிடையே ஊடுருவியுள்ளன ? 
கிறீத்துவ சபைகளின் ஊடுருவல் தொடர்பில் அதிருப்தியுறுவோர் ஏன் இவற்றை கவனத்திற் கொள்வதில்லை ? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

பண்பாட்டுப் படையெடுப்பு எனும்போது தனியே கிறீத்துவ மதக் குழுக்களை மட்டும் எதிர்ப்பது சரியானதா ? 

இங்கு நான் ஆதாரத்தை இணைத்து கிறிஸ்தவ மத குழு செய்த பித்தலாட்டத்தை சொல்லியுள்ளேன் .

உங்களால் முடிந்தால் இலங்கையின் வடகிழக்கில் மற்றவர்கள் செய்த ஒன்றை தகுந்த ஆதாரத்துடன் இணைக்கவும் இல்லாவிடில் அல்லோயாவுக்கு இங்கு யாழில் பாட்டு பாடுவதை நிப்பாட்டுவீர்கள் என்று நம்புறன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.1300968688_Screenshot2020-04-07at22_23_38.png.a7953481ef0f9ee3fac64ff60061e065.png

இப்ப மகிந்தவே பெரும் கடுப்பில் இருக்கிறார்'

இவர் திருப்பி போனால். ஸ்பெஷல் வெள்ளை வான் தான் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

இங்கு நான் ஆதாரத்தை இணைத்து கிறிஸ்தவ மத குழு செய்த பித்தலாட்டத்தை சொல்லியுள்ளேன் .

உங்களால் முடிந்தால் இலங்கையின் வடகிழக்கில் மற்றவர்கள் செய்த ஒன்றை தகுந்த ஆதாரத்துடன் இணைக்கவும் இல்லாவிடில் அல்லோயாவுக்கு இங்கு யாழில் பாட்டு பாடுவதை நிப்பாட்டுவீர்கள் என்று நம்புறன் .

இவ்வளவு காலமும் இங்கு இருந்ததும் வந்ததும் பித்தலாட்ட்திலும் விட பெரிய பித்தலாட்டம் 
என்பதுக்கு நீங்கள் இணைத்ததுதான் ஆதாரம் ...இதைவிட என்ன இணைக்க வேண்டும்?

இந்த அல்லேலூயா போன்ற அற்பத்தை பார்த்தே எதோ கடவுளை கண்டதுபோல ஆடுகிறார்கள் 
அப்போ இவளவு காலமும் இவர்கள் இருந்த இடம் எவ்வளவு பெரிய பித்தலாட்ட தளம் என்பதை 
உணர்ந்துகொள்ள முடிகிறது. 

இருளை இன்னொரு இருளால் காட்ட முடியாது 
நீங்கள் இணைக்கும் ஆதாரத்தை வைத்துதான் பார்க்க முடிகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பெருமாள் said:

இங்கு நான் ஆதாரத்தை இணைத்து கிறிஸ்தவ மத குழு செய்த பித்தலாட்டத்தை சொல்லியுள்ளேன் .

உங்களால் முடிந்தால் இலங்கையின் வடகிழக்கில் மற்றவர்கள் செய்த ஒன்றை தகுந்த ஆதாரத்துடன் இணைக்கவும் இல்லாவிடில் அல்லோயாவுக்கு இங்கு யாழில் பாட்டு பாடுவதை நிப்பாட்டுவீர்கள் என்று நம்புறன் .

பெருமாள், 

ஆத்திரக் காறனுக்கு புத்தி மட்டு என்பதன் அர்த்தம் அவன் அவசரப்பட்டு எதையும் புரிந்து கொள்ளாமல், அவசரத்தில்  எடுக்கும் முடிவுகள் குறைபாடாகவும் தெளிவில்லாமலும்  இருக்கும் என்பதனாலாகும்.

தயவுசெய்து எனது எழுத்தை ஆறுதலாக வாசியுங்கள். எழுதியதன் அர்த்தம் புரியும். அதன் பின் பதிலெழுதுங்கள். 🙂 ஆறுதலாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தமிழர்கள் கண்ணால் காணாத எதையும் தெய்வமாக வழிபட்டவர்கள் அல்ல.இப்பொழுது நாம் வழிபடும் இந்துமதமும் இந்துமத சாமிகளும் தமிழர்களுக்கு எந்த சம்பந்தமும் அற்றவை. காலத்துக்கு காலம் தமிழர் நிலத்தின் மீது நிகழ்த்தப்பட்ட படையெடுப்புகளின் மூலம் மதம்மாற்றப்பட்டு கடைசியில் இப்பொழுது இரவல் இந்துமதத்திலும் கிறிஸ்த்தவத்திலும் தொங்கிக்கொண்டு இருந்து கொண்டு மதச்சண்டை பிடிக்கிறோம்.??

உண்மையில் ஒரு ஜநூறு அறுநூறு ஆண்டுகளுக்கு முன் எம் முப்பாட்டான் பூரா புத்தமதத்தில்தான் இருந்திருப்பார்கள்.

கீழடியில் தமிழர்கள் மதவழிபாட்டுக்கான எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை. 

எங்கள் மூதாதையர்கள் சாமிகளாக கொண்டாடியவர்கள் எல்லாம் தம்முடன் வாழ்ந்து தமக்காக ஊருக்காக மடிந்தவர்களையே வணங்கினார்கள். அப்படி பார்க்கபோனால் அவர்களின் பேரன்கள் எம் தெய்வங்கள் மாவீரர்களாகத்தான் இருக்கமுடியும்.

ஒவ்வொரு கிராமத்தின் வாசலில் நின்று வரவேற்கவும்,நம்மை வழியனுப்பவும் வாழவைப்பதுமாக இருக்கும் கிராம தேவதைகள் என்று அழைக்கப்படும் கிராமங்களின் காப்புத் தெய்வங்களின் மூலம் என்ன?
அவை எப்படி தெய்வங்கள் ஆகின?
அவை எப்போது தெய்வங்கள் ஆக்கப்பட்டன..?

அவை கற்பனையான சாமிகள் அல்ல, கொஞ்ச காலத்திற்கு முன்னால் நம்மிடையே வாழ்ந்தவர்கள்தான் என்பதும், நம்முடைய மூதாதையரான அவர்கள், மரணத்தின் மூலமாக தெய்வமாக ஆக்கப்பட்டவர்கள் என்பதும் அவர்கள் பற்றிய பாட்டிமாரின் செவிவழிக்கதைகளையும் வரலாறையும் கூத்து வடிவங்களையும் ஆராய்ந்தால் புலனாகிறது..

இந்தச் சாமிகள் எல்லோருமே மனிதர்கள், ஊரார் கொடுமையால், வீட்டார் கொடுமையால், அல்லது நாட்டை ஆண்ட அரசனின் கொடுமையால் கொல்லப்பட்டவர்கள்; அல்லது கொடுமையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டு விட்டவர்கள்;ஊருக்காக உயிரை தியாகம் செய்த மாவீரர்கள்.

நம்மைப் போல கை-கால் உள்ள மனிதர்கள்- கொல்லப்பட்டதால்- இரக்கத்தின் பேரிலும், பயம் அல்லது பக்தியின் காரணமாகவும் கும்பிடப் பட்டவர்கள் என்பது இவர்களைப் பற்றிய கதைகளின் மூலமாக நமக்குத் தெரியவருகிறது.

கிராமத்து வழிபாட்டு வடிவங்கள் கூத்தும் பாட்டும் ஆடலுமாய் இலக்கியத்தோடும் கலைகளோடும் இணைந்திருக்கின்றன. வரலாற்று நிலவியலை மீட்டுருவாக்கம் செய்யும் இவ்வழிபாட்டு முறைகளில் பெண் தெய்வத்தின் ஆதிக்கம் அதீதமாகவே காணப்படுவதுடன், சமுதாய நோக்கில் பார்க்குமிடத்து கூட்டு வழிபாடாகவே அமைந்து இயற்கையில் ஏற்படும் பெருங்கேடுகளை தடுக்கும் அடிமன நம்பிக்கையை ஊட்டுகிறது. ஊர்திரண்ட உணர்வை வெளிப்படுத்தும் இவ்வழிபாடு வருடா வருடம் வந்து சேர்வதுடன், உழைக்குந் தொழிலாளர்களுக்கு ஓய்வையும் தருகிறது. ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடாக அமையும் இவ்வழிபாடு வாழ்வியலோடு ஒட்டியதொரு நிகழ்ச்சிபோக்கு மாத்திரமின்றி பண்பாட்டுக் கூறின் பக்குவமாகவும் பிரகாசிக்கின்றது. 

அண்ணமார்,நாச்சிமார்,நாச்சியார்,மாரியம்மா,வைரவர்,கருப்பர்,முருகன்,மாயோன் என்று எத்தனை. இவர்களெல்லாம் யார்.? கோவிலில் உண்டியல் காசுக்கும் சோற்றுக்கும் மணிஅடிக்கும் ஜயர் சொல்லும் எந்த வேதங்கள் இவர்களைப்பற்றி சொல்கின்றன.?

ஆனால் என் பாட்டியும் பூட்டியும் கும்பிட்ட தெய்வங்கள் மனிதராய் பிறந்து தம் செயல்களால் தெய்வமாய் மடிந்த எம் கிராம சாமிகள்தான்.

ஆண்டு முழுவதும் வெட்டவெளியில் மண்குவியலாகக் கிடந்து ஆண்டுக்கு ஒருமுறை உயிர்கொண்டு எழும் கிராம தெய்வங்களை ஆரியர்கூட்டம் இந்து மதம் என்னும் போர்வையில் அழித்தது; சுரண்டல் நிருவனங்களான கோவில்களை மக்கள் வழிபாட்டு தளம் என பொய்க்கூறி வணிக கோவில்களை மக்கள் மனதில் வழிபாட்டு தளங்கள் என வளர்த்துவிட்டது; கூடவே வர்ணாச்சிரமம் எனும் சாதிப்பிளவை அதனோடு சேர்த்து. எங்கள் தெய்வங்கள் சிறு தெய்வம் என அழைக்கப்பட்டு அழிக்கப்பட்டது..

சீமான் சொல்வதும் இதைத்தான்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கொஞ்சம் கிறீத்துவ போலிகளையும் இழுத்து விட்டிருந்தீர்களானால் எழுத்து சமப்பட்டிருக்கு (balance). 

தவறியபடியால் நீங்களும் இப்போ அல்லேலூயாக் கூட்டத்தின் ஓராளாகவும் சைவ சமயத்தின் எதிரியாகவும் அடையாளம் காணப்படும் அபாயத்திலிருக்கிறீர்கள். 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

கண்மூடித்தனமான  கடவுள் பக்தி உள்ளவர்கள்  பெரும்பாலும் இப்படி மதம் மாறுபவர்கள். 

💯

நான் நேரில் கண்ட உண்மை இது முன்பு கோவிலே கதி என்று திரிந்த எனக்கு தெரிந்த இருவர் இப்போது மதம் மாறியதுடன் யேசுபிரானிடம் வாருங்கள் என்று மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

💯

நான் நேரில் கண்ட உண்மை இது முன்பு கோவிலே கதி என்று திரிந்த எனக்கு தெரிந்த இருவர் இப்போது மதம் மாறியதுடன் யேசுபிரானிடம் வாருங்கள் என்று மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

இதிலை என்ரை சொந்தங்களும் அடக்கம்.ஊரிலை இருக்கேக்கை உள்ள கோயில் குளமெல்லாம் உருண்டு பிரண்டு காவடி எடுத்ததுகள் எல்லாம் இஞ்சை வந்து கோட்டையும் சூட்டையும் போட்டுக்கொண்டு தாங்கள் கும்பிட்ட கடவுளையே சாத்தான் எண்டு சொல்லிக்கொண்டு திரியுதுகள்.
நான் இப்ப உதுகளின்ரை நல்லதுக்கும் இல்லை கெட்டதுக்கும் போறதில்லை.
உதுகளின்ரை சீர்கெட்ட வாழ்க்கையையும் எழுதோணும் போலை கிடக்கு. எழுதினால் எனக்கும் மரியாதை இல்லை எண்டுட்டு இதோடை விடுறன்.😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

பெருமாள், 

ஆத்திரக் காறனுக்கு புத்தி மட்டு என்பதன் அர்த்தம் அவன் அவசரப்பட்டு எதையும் புரிந்து கொள்ளாமல், அவசரத்தில்  எடுக்கும் முடிவுகள் குறைபாடாகவும் தெளிவில்லாமலும்  இருக்கும் என்பதனாலாகும்.

தயவுசெய்து எனது எழுத்தை ஆறுதலாக வாசியுங்கள். எழுதியதன் அர்த்தம் புரியும். அதன் பின் பதிலெழுதுங்கள். 🙂 ஆறுதலாக.

கோபமும் இல்லை டென்ஷனும் இல்லை இதே இந்து செய்து இருந்தாலும் என் நிலை அதுதான் . ஆனால் ஆரம்பம் முதலே பொய் சொல்லி மக்களை உள்வாங்குவது தெரிந்தும் அமைதியாக இருந்தம்  ஏனென்றால் வடக்கில் இருந்து வந்த எத்தனையோ முஸ்லீம் மன்னர்கள் பின் வழி வந்த ஒல்லாந்தர் தொடக்கம் ஆங்கிலேயர் வரை  சைவத்தை  அழிக்க  முடியவில்லை தமிழ்நாட்டில் அதே போல்தான் ஈழத்தின் வடகிழக்கிலும் .ஆனால் உங்கடை  ஆட்க்கள்  தமிழரின் உயிருடன் விளையாடுவதை எப்படி அனுமதிப்பது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

இதிலை என்ரை சொந்தங்களும் அடக்கம்.ஊரிலை இருக்கேக்கை உள்ள கோயில் குளமெல்லாம் உருண்டு பிரண்டு காவடி எடுத்ததுகள் எல்லாம் இஞ்சை வந்து கோட்டையும் சூட்டையும் போட்டுக்கொண்டு தாங்கள் கும்பிட்ட கடவுளையே சாத்தான் எண்டு சொல்லிக்கொண்டு திரியுதுகள்.
நான் இப்ப உதுகளின்ரை நல்லதுக்கும் இல்லை கெட்டதுக்கும் போறதில்லை.
உதுகளின்ரை சீர்கெட்ட வாழ்க்கையையும் எழுதோணும் போலை கிடக்கு. எழுதினால் எனக்கும் மரியாதை இல்லை எண்டுட்டு இதோடை விடுறன்.😡

அவர்களின் பிதாக்கள் உங்களை அவர்களிடம் இருந்து பிரிக்கத்தான் 
கூடியனவரை முயற்சி செய்வார்கள் ... நீங்களாக ஒதுங்குவது அவ்வளவு நல்லதல்ல 
அவர்களிடம் ஒரு பலவீனம் இருக்கிறது அதை காலத்துக்கு ஏற்ப சிலர் பாவித்து கொள்கிறார்கள் 
என்ற உண்மை உங்களுக்கு தெரியும்போது ... அவர்கள் மேல் கோவம் கொள்வதில் தவறு.
எங்களிடமும் நிறைய தவறு இருக்கிறது ..அதுதான் அவர்களை பலவீனமாக ஆக்கி இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, பெருமாள் said:

கோபமும் இல்லை டென்ஷனும் இல்லை இதே இந்து செய்து இருந்தாலும் என் நிலை அதுதான் . ஆனால் ஆரம்பம் முதலே பொய் சொல்லி மக்களை உள்வாங்குவது தெரிந்தும் அமைதியாக இருந்தம்  ஏனென்றால் வடக்கில் இருந்து வந்த எத்தனையோ முஸ்லீம் மன்னர்கள் பின் வழி வந்த ஒல்லாந்தர் தொடக்கம் ஆங்கிலேயர் வரை  சைவத்தை  அழிக்க  முடியவில்லை தமிழ்நாட்டில் அதே போல்தான் ஈழத்தின் வடகிழக்கிலும் .ஆனால் உங்கடை  ஆட்க்கள்  தமிழரின் உயிருடன் விளையாடுவதை எப்படி அனுமதிப்பது ?

நம்புங்கள் பெருமாள்,

சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதெல்லாம் சைவக் கோவில்களுக்குச் சென்று (ஆட்களற்ற பொழுதுகளில்) அதன் நடுவிலமர்ந்து அதன் ஆழ்ந்த அமைதியில் திழைப்பவன் நான். ஊரிலும் அப்படித்தான் இங்கும் அப்படித்தான்.  எனது நண்பர்களில் 99% ஆனவர்கள் சைவ சமயத்தவரே. 

பிறப்பில் நான் கிறீத்துவன். ஆனால் எனக்கு சடங்குகளிலோ குறியீடுகளிலோ  நம்பிக்கையில்லை. அதன் அர்த்தம் சமயங்களை நான் வெறுப்பவன் என்றல்ல. 

ஆனால் சமயத்தைச்  சாட்டாக வைத்தோ சாதியை சாட்டாக வைத்தோ மனிதரை இழிவுபடுத்துவதை நான் முற்றாக வெறுக்கிறேன். 

எம்மினத்தின் வீழ்ச்சிக்கும் அழிவுக்கும் காரணம் எம் இனத்தினுள் உள்ள பிளவுகளே. 

அந்தப் பிளவுக்கான அடிப்படைக் காரணங்கள் சாதி, சமயம், பிரதேசவாதம்.

இவை மூன்றும் அநீதியானவை. தீங்கானவை. 

அந்த அடிப்படையிலேயே சக மனிதரை, அதுவும் எம் இனத்திலுள்ளேயே எழும் இழிவுபடுத்துதலை மிகத் தீவிரமாக எதிர்க்க முற்படுகிறேன். 🙂

குறிப்பு; உங்கட ஆட்கள் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அது தவறு. நான் எப்போதுமே சுய அடையாளத்தை மெச்சுபவன் . பண்பாட்டு ஊடுருவல் எந்த வடிவிலிருந்தாலும் அதனை வரவேற்பவனல்ல. மற்றும் எனக்கு எந்த கிறீத்துவ சபைகளுடனும் தொடர்புகளில்லை.

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/4/2020 at 22:26, Nathamuni said:

large.1300968688_Screenshot2020-04-07at22_23_38.png.a7953481ef0f9ee3fac64ff60061e065.png

இப்ப மகிந்தவே பெரும் கடுப்பில் இருக்கிறார்'

இவர் திருப்பி போனால். ஸ்பெஷல் வெள்ளை வான் தான் வரும்.

வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்!

கர்த்தரின் கிருபையாலும், ஊழியக்காரர்களினதும் விசுவாசிகளினதும் ஜெபத்தினாலும் மீண்டும் உயிர்த்து ஒன்லைனில் தோன்றி பாவப்பட்டவர்களை இரட்சிக்க வந்திருக்கின்றார்.

தங்கள் உயிரையும் மதியாது உயிர்காக்க எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்காக இவரது உயிரைக் காப்பாற்றிய சுவிஸ் மருத்துவர்களுக்கும் நவீன மருத்துவத்திற்கும் ஒரு சிறு நன்றிகூட இவரிடமிருந்து வராது என்று தெரியும். அப்படிச் சொன்னால் பிழைப்பு நாறிவிடும் அல்லவா!

யாழ்ப்பாணத்தில் இந்தப் போதகரது ஆராதனையில் கலந்துகொண்டதால்தான் கொரோனா தொற்று அங்கு பரவியது என்பது நிரூபணமாகியுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு அறியாமலேயே காரணமாக இருந்தாலும் ஒரு சிறு மன்னிப்பாவது கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கமாட்டார்😡

இந்தப் புலுடாப் போதகரின் பிரசங்கத்தைக் கேட்கும் ஊழியக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் அவரைக் கேள்விக்குட்படுத்தும் அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை இல்லாமல் மூளை சலவை செய்யப்பட்டிருக்கும் அல்லது மழுங்கியிருக்கும்🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

ஆசுப்பத்திரியில் கிடக்கேக்க விடியோ எடுத்திருக்கணும்

அவர்களின் அறிவு அவ்வளவு தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை சனம் நல்ல கடுப்பில இருக்கினம் இவரில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்!

கர்த்தரின் கிருபையாலும், ஊழியக்காரர்களினதும் விசுவாசிகளினதும் ஜெபத்தினாலும் மீண்டும் உயிர்த்து ஒன்லைனில் தோன்றி பாவப்பட்டவர்களை இரட்சிக்க வந்திருக்கின்றார்.

தங்கள் உயிரையும் மதியாது உயிர்காக்க எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்காக இவரது உயிரைக் காப்பாற்றிய சுவிஸ் மருத்துவர்களுக்கும் நவீன மருத்துவத்திற்கும் ஒரு சிறு நன்றிகூட இவரிடமிருந்து வராது என்று தெரியும். அப்படிச் சொன்னால் பிழைப்பு நாறிவிடும் அல்லவா!

யாழ்ப்பாணத்தில் இந்தப் போதகரது ஆராதனையில் கலந்துகொண்டதால்தான் கொரோனா தொற்று அங்கு பரவியது என்பது நிரூபணமாகியுள்ளது. கொரோனாத் தொற்றுக்கு அறியாமலேயே காரணமாக இருந்தாலும் ஒரு சிறு மன்னிப்பாவது கேட்டிருக்கலாம். ஆனால் கேட்கமாட்டார்😡

இந்தப் புலுடாப் போதகரின் பிரசங்கத்தைக் கேட்கும் ஊழியக்காரர்களுக்கும், விசுவாசிகளுக்கும் அவரைக் கேள்விக்குட்படுத்தும் அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை இல்லாமல் மூளை சலவை செய்யப்பட்டிருக்கும் அல்லது மழுங்கியிருக்கும்🙁

நன்றி, மன்னிப்பு, அறிவார்ந்த சிந்தனை இவைகள் எம் இனத்திற்கு மிகவு அரிதான விடயங்கள்.🤥

இல்லாத ஒன்றை நீங்கள் தேடினால் அது யாரின் பிழை ? 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.