Jump to content

யாழ் கொரோனா தொற்றுக்கு காரணம் என்ன? விளக்கமளிக்கும் போதகர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

நன்றி, மன்னிப்பு, அறிவார்ந்த சிந்தனை இவைகள் எம் இனத்திற்கு மிகவு அரிதான விடயங்கள்.🤥

இல்லாத ஒன்றை நீங்கள் தேடினால் அது யாரின் பிழை ? 😀

எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகலாம்தானே! மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் பின்னுக்கு வருபவருக்காக கதவுகளைத் திறந்து பிடித்துக்கொண்டு நிற்கவும், வரிசையில் நிற்கவும், வணக்கம், நன்றி சொல்லவும் பழகினார்கள்தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகலாம்தானே! மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தவர்கள் பின்னுக்கு வருபவருக்காக கதவுகளைத் திறந்து பிடித்துக்கொண்டு நிற்கவும், வரிசையில் நிற்கவும், வணக்கம், நன்றி சொல்லவும் பழகினார்கள்தானே!

நாங்கள் வேற்று இனத்தவருக்கு , குறிப்பாக வெள்ளை இனத்தவருக்கு தவறாமல் ஹாய் சொல்லவும் தாங்ஸ் சொல்லவும் தவறியதில்லை. ஆனால் தோலில் (வெள்ளை) நிறத்தின் அளவு குறையக் குறைய எமது நன்றி சொல்லும் அளவும் ஹாய் சொல்லும் அளவும் குறைந்து கொண்டே செல்லும். ☹️

இதை இன்னொரு விதமாகவும் கூறலாம். வட அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து (குளிர் / துருவ கால நிலை) மத்திய கோட்டு வெப்ப வலயத்திற்கு கீழிறங்கும்போது, குறிப்பாக இலங்கையை அண்டிய மத்திய கோட்டிற்கு வரும்போது நன்றி, ஹாய் சொல்லுதலின் அளவும் குறைந்து ஏறக் குறைய  பூச்சியம் என்கின்ற அளவிற்குச் செல்லும். 😂

ஹாய்க்கும்  நன்றிக்கும்  கால நிலையுடன் தொடர்பு ஏதும் இருக்குதோ தெரியாது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெல்கம் சற்குணராஜா வெல்கம் 😛

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் தான் சுவிஸ் போதகர் வந்திருக்கிறன்..!! நீ ஆண்டவரின் வலது கரம் இல்லையா ... வெளிய வா அற்புதம் ... சர்ச்சுக்கு நேரமாச்சு..

நோ..வரமாட்டேன்.. மறுபடியும் என்னால முள்ளுப்பத்தேக்க ஒளிச்சிருக்க முடியாது..

spacer.png

 

Link to comment
Share on other sites

விமான நிலையத்தில் பொய் கூறி ஸ்ரீலங்காவிற்குள் நுழைந்த சுவிஸ் போதகர்! யாழ் மாவட்டத்திற்கு ஏற்பட்டுள்ள நிலை

காய்ச்சல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் இருந்தும் சுவிஸ் போதகா் விமான நிலையத்தில் பொறுப்பில்லாமல் கூறிய பொய்யினால் 7 போ் தொற்றுக்குள்ளானதுடன், யாழ்.மாவட்டம் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட காரணமாகவும் அமைந்திருக்கின்றது. இனிமேலும் யாழ்.மாவட்டம் பாதுகாப்பாக இருக்க அனைவருக்கும் பொறுப்புணா்வு வேண்டும்.

மேற்கண்டவாறு யாழ்.மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருக்கும் சமுதாய மருத்துவா் முரளி வல்லிபுரநாதன் கூறியுள்ளாா்.

யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் தொடா்பாக ஊடகங்களை சந்தித்து கருத்துகூறும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், யாழ்.மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை. சுவிஸ் போதகருடன் தொடா்பில் இருந்த அனைவருக்கும் 1ம் கட்ட பாிசோதனைகள் நிறைவடைந்திருக்கின்றது. எனினும் 1ம் கட்ட பாிசோதனையில் 80 தொடக்கம் 90 வீதமானதே அடையாளம் காணப்படும்.

ஆகவே 2ம், 3ம் கட்ட பாிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் மூலம் தொற்றுள்ளவா்கள் பூரணமாக அடையாளம் காணப்படுவதுடன், தொடா்ந்து ஊரடங்கு சட்டத்தின் ஊடாக சமூக இடைவெளி பேணப்படுவதன் ஊடாக யாழ்.மாவட்டத்திலிருந்து கொரோனா தொற்றை முற்றாக நீக்க முடியும்.

இது இலங்கையின் பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக அமையும். மேலும் மாவட்டத்தில் தொற்று இல்லாமையினை தொடா்ந்து பேணுவதற்காக சில கட்டுப்பாட்டு முறைகளை நடைமுறைப்படுத்தவேண்டும். குறிப்பாக யாழ்.மாவட்டத்திற்குள் வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளியிடங்களில் இருந்தும் உள் நுழைவதற்கு 2 தரைவழி பாதைகளே உண்டு.

அந்த பாதைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், காய்ச்சல் மற்றும் தொற்று தொடா்பான ஆரம்ப பாிசோதனைகளை மேற்கொள்வதற்கான வதசிகளை செய்வதன் ஊடாக நிரந்தரமாக நோய் தொற்றை கட்டுப்படுத்தலாம். அதற்கு முன்னா் யாழ்ப்பாணத்திற்குள் நுழைபவா்கள் நோ்மையாக தங்களுக்கு தொற்றிருந்தால் அதனை வெளிப்படுத்தவேண்டும்.

குறிப்பாக சுவிஸ் போதகா் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தும் விமான நிலையத்தில் உண்மையை மறைத்து ஒரு பொய்யை கூறியதால் 7 போ் நோய்வாய்ப்பட்டதுடன், யாழ்.மாவட்டத்தில் இன்று இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. மக்களும் பாதுகாப்பாக இருந்து தொற்றிலிருந்து விடுபட உதவவேண்டும் என்றாா்.

https://www.ibctamil.com/srilanka/80/140965?ref=rightsidebar

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.